1971 ல் எகிப்திய டாக்டர் ஒருவர் ஐரோப்பிய ஆங்கில பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் ஜம் ஜம் தண்ணீர் குடிப்பதற்கு உகந்ததல்ல என்றும் ஜம் ஜம் கிணறு அது ஒரு பள்ளத்தாக்கில் இருப்பதால் மக்கா நகரில் உள்ள கழிவு நீர்கள் பள்ளத்தாக்கில் தேங்கி பூமிக்குள் சென்று ஜம் ஜம் கிணற்று நீரோடு கலந்து விடுகிறது என்று அக்கட்டுரையில் கூறப்பட்டிருந்தது.
இதை நான் படித்தவுடனே தெரிந்துகொண்டேன், இது இஸ்லாத்திற்கு எதிரான பொய்ப் பிரச்சாரம் என்று. ஏனென்றால் அது ஒரு பள்ளத்தாக்கில் இருக்கும் அமைப்பை வைத்து ஒரு யூகமாய் கூறப்பட்டதே அல்லாமல் விஞ்ஞானப் பூர்வமாய் அல்ல. இதை அறிந்த அப்போதைய சவூதி மன்னர் ஃபைசல் அவர்கள் கோபமடைந்து எகிப்திய டாக்டரின் யூகத்தை தவறு என்று நிரூபிக்க முடிவெடுத்தார்.
மன்னர் ஃபைசல் அவர்கள் (Ministry of Agriculture and Water Resources ) அமைச்சகத்துக்கு ஜம் ஜம் தண்ணீரை ஆய்வு செய்வதற்கு ஐரோப்பாவிலுள்ள (European laboratories)ஆய்வு நிலையத்திற்கும் ஜித்தாவிலுள்ள (Jeddah Power and Desalination Plants கடல் தண்ணீரை குடி நீராக மாற்றும் சுத்தகரிப்பு நிலையம்)ஆய்வு நிலையத்திற்கும் அனுப்பி வைத்தது. அப்போது நான் கடல் தண்ணீரை குடி நீராக மாற்றும் சுத்தகரிப்பு நிலையத்தில் இன்ஜீனியராக பணி புரிந்து கொண்டிருந்தேன். ஜம் ஜம் தண்ணீரை ஆய்வு செய்யும் பணியை எங்கள் நிலையத்துக்கு ஓப்படைக்கப்பட்டது.
அதன்படி நான் கஃபாவில் உள்ள அதிகாரிகளிடம் விளக்கினேன். அவர்கள் ஆய்வுக்கு ஜம் ஜம் தண்ணீரை எடுக்க ஒரு ஆளை நியமித்து அனுப்பினர். நான் ஜம் ஜம் கிணற்றை பார்க்க நேரிட்டபோது அது 18×14 அடிதான் இருந்தது. பல ஆயிரக்கணக்கான ஹாஜிகளுக்கு பல ஆயிரம் மில்லியன் கணக்கான கேலன் தண்ணீரை நபி இபுராஹீம் அலைஹிஸ்ஸலாம் காலத்திலிருந்து பல நூறு நூற்றாண்டுகளாக அல்லாஹ் கொடுத்துக் கொண்டிருக்கிறான்.
நான் எனது ஆய்வை தொடங்கினேன். எனக்கு துணையாக அனுப்பப்பட்ட ஆளிடம் கிணற்றின் ஆழத்தை காட்ட சொன்னேன். அவர் குளித்து விட்டு கிணற்றில் இறங்கிய பொழுது அவரது தோள்பட்டைக்கு சிறிது மேலாகத்தான் கிணற்றின் நீர் மட்டம் இருந்தது, அதாவது சுமார் ஐந்தடி எட்டு அங்குலம். மேலும் அவர் அங்கு வேறு குழாய்கள் இல்லை என்பதையும் கூறினார். தண்ணீரை ஆய்வு செய்வதற்காக வேண்டி மேலாக உள்ள தண்ணீரை குழாய் மூலம் வேறொரு இடத்திற்கு மாற்றினோம். பிறகு அவரை ஒரே இடத்தில் நிற்கும்படி கூறினேன்.
சிறிது இடைவெளிக்குப்பிறகு இரு கைகளையும் உயர்தியபடி ‘அல்ஹம்துலில்லாஹ்’ என்று கூறினார். ஊற்று நீர் சுரப்பதை காலில் உணரப்பட்டது. கிணற்றின் ஒவ்வொரு மூலையிலும் ஒரே அளவாக நீர் சுரந்தது. தண்ணீரிலிருந்து சிறிது மாதிரி எடுத்துக்கொண்டோம். காஃபா அதிகாரிகளிடம் காஃபா அருகில் உள்ள மற்ற கிணறுகளையும் பார்வையிட கோரினேன். அவைகள் எல்லாம் வற்றிய நிலையில் இருந்தன. எங்கள் ஆய்வின் படியும், ஐரோப்பிய ஆய்வின் முடிவின் படியும் ஜம் ஜம் தண்ணீர் குடிப்பதற்கு உகந்தது. ஜம் ஜம் தண்ணீருக்கும் மற்றைய தண்ணீருக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் கால்சியமும், மாக்னீசியமும் அளவில் சற்று அதிகம். கால்சியம் சத்து அதிகமிருப்பதால் ஹாஜிகளுக்கு களைப்பை நீக்கி விரைவில் புத்துணர்ச்சி ஏற்பட செய்கிறது. மேக்னீசியம் அதிகமிருப்பதால் தண்ணீரில் கிருமிகள் சேராமல் தடுக்கிறது.
மேலும் ஐரோப்பிய ஆய்வின் படியும் ஜம் ஜம் தண்ணீர் குடிப்பதற்கு உகந்தது என்று தெரிய வருவதால் எகிப்திய டாக்டரின் கூற்று ஆதாரமற்றது என்பது தெளிவாகிறது. எங்கள் ஆய்வும் ஐரோப்பிய கூடத்தின் ஆய்வும் ஒன்றாக இருப்பதை அறிந்து மன்னர் ஃபைசல் மகிழ்ச்சியடைந்தார். ஜம் ஜம் தண்ணீர் எவ்வளவு சுத்தமானது என்று அறிய இந்த நிகழ்ச்சி மூலம் நாம் தெரிந்து கொண்டோம். இவையெல்லாம் அல்லாஹுத்தாஆலாவின் நாட்டப்படியே நடக்கிறது.
by Tariq Hussain தமிழில்: மாஜிதா, சிங்கப்பூர்
source: http://www.themodernreligion.com/science/zamzam.html
Comments on this entry are closed.