சுழலும் சூரியன்

in அறிவியல்

 

பூமி இந்த பேரண்டத்தின் நடுவில் மைய இடத்தில் சூரியன் உட்பட மற்ற கோள்கள் அனைத்தும் பூமியை மையமாகக் கொண்டே சுற்றி சுழன்று வருகின்றன என்றே நீண்ட நெடுங்காலமாக மேல்நாட்டு தத்துவ அறிஞர்களும் அறிவியலாளர்களும் நம்பி வந்தனர்.    மேல் நாட்டில் கி.மு இரண்டாம் (B.C 200) நூற்றாண்டில் வாழ்ந்த Ptolemy என்ற அறிஞரின் காலந்தொட்டு பூமியை மையமாகக் கொண்டே அனைத்து கோள்களும் சுற்றிச் சுழல்கின்றன என்ற புவி மையக் கோட்பாடே (Geocentric Theory) புழக்கத்தில் இருந்தது.

    கி.பி 1512ல் Nicolas Copernicus என்னும் அறிவியலாளர் ஒரு புதிய கோட்பாட்டை கொண்டு வந்தார். அதன்படி கோள்கள் அனைத்தும் சூரியனை மையமாகக் கொண்டே சுற்றி வருகின்றன. ஆனால், நமது சூரிய குடும்பத்தின் (Solar System) மத்தியில் திகழும் சூரியன் நகர்ந்து செல்லும் ஆற்றல் இல்லாதவை என்ற கருத்தை வெளிப்படுத்தினார். இந்த கோட்பாட்டை The Heliocentric theory of Planetary Motion) என்று அழைத்தனர்.

    ஜெர்மன் விஞ்ஞானி Johannes kepler கோள்கள் முட்டை வடிவ (Elliptical Shapes) பாதையில் சூரியனை சுற்றி வருவதாகவும் சூரியன் தன் அச்சின் மீது ஒழுங்கற்ற வேகத்தில் சுற்றி வருவதாகவும் கி.பி.1609ல் எழுதிய நூலில் தெரிவித்திருந்தார். Keppler வெளியிட்ட இந்த கருத்தே இரவு பகல் மாறிவரும் தொடர் நிகழ்ச்சி சூரிய குடும்பத்தின் செயல்பாடுகள் குறித்தும் சரியான விளக்கம் அளித்திட அறிவியலாளர்களுக்கு ஒரு வாய்ப்பினை வழங்கியது.

    இந்தக் கண்டுபிடிப்புகளுக்குப் பிறகும்கூட சூரியன் ஒரே இடத்தில் நிலையாக நின்று கொண்டுள்ளது; அது பூமியைப் போன்று தன்னை தானே சுற்றிக்கொள்வதில்லை என்ற சிந்தனை நிலைத்து நின்றது. எனது பள்ளிப் பருவத்தின் போது  புவியியல் பாடத்தில் இந்த தவறான அறிவியல் கருத்தைப் படித்துள்ளதை இன்று நினைவுபடுத்திப் பார்க்கிறேன். பின்வரும் திருக்குர்ஆன் வசனத்தை சிந்தித்து பாருங்கள்.

وَهُوَ الَّذِي خَلَقَ اللَّيْلَ وَالنَّهَارَ وَالشَّمْسَ وَالْقَمَرَ كُلٌّ فِي فَلَكٍ يَسْبَحُونَ

    இன்னும் அவனே இரவையும், பகலையும்; சூரியனையும், சந்திரனையும் படைத்தான்; (வானில் தமக்குரிய) வட்டவரைக்குள் ஒவ்வொன்றும் நீந்துகின்றன.  21:سورة الأنبياء  33

    இதில் ‘யஸ்பஹூன்’ எனும் சொல் ‘சபஹ’ எனும் மூல வினைச் சொல்லிருந்து பிறந்துள்ளது. இச்சொல் ஒரு கோளப் பொருளின் இயக்கத்திலிருந்து பெறப்படும் இயக்கவினை கருத்தினையும் சுமந்து செல்கிறது. நிலத்தின் மீது ஒரு மனிதனுக்கு இச்சொல் பயன்படுத்தினால் ‘அவன் சுழன்று கொண்டுள்ளான்’ அவன் ‘ஓடுகிறான்’ ‘நடமாடுகிறான்’ என்றும் இதற்கு பொருள் கொள்ளலாம். நீரில் உள்ள மனிதனுக்கு பயன்படுத்தினால் ‘அவன் மிதந்து கொண்டுள்ளான்’, ‘நீந்திக் கொண்டுள்ளான்’ என்று பொருள் கொள்ளவும் வாய்ப்புண்டு.

    அவ்வாறே சூரியனைப் போன்ற ஒரு விண்கோளுக்கு ‘யஸ்பஹ’ எனும் சொல்லை நாம் பயன்படுத்தினால் அக்கோள் வாண்வெளியில் பறந்து செல்கிறது, தன்னைத்தானே சுற்றிக் கொள்கிறது என்றும் பொருள் கொள்ளலாம்.

    சூரியனில் சில புள்ளிகள் (Sun-Spots) இருப்பதும் அப்புள்ளிகள் 25 நாட்களுக்கு ஒருமுறை வட்டப்பாதையில் சுழன்று வருவதும், தன் அச்சின் மீது தானே சுழன்று கொள்வதற்கு சுமார் 25 நாட்கள் ஆகின்றன என்றும் கண்டறியப்பட்டுள்ளது. உண்மையில் ஒரு வினாடிக்கு 150 மைல்கள் வேகத்தில் பயணித்துக் கொண்டுள்ளது. நாம் வசிக்கும் இந்த Galazy (கோள்கள் நட்சத்திரங்கள்) (Milky Way) பால்வீதி மண்டலம் என அழைக்கப்படுகிறது. இதன் மைய கேந்திரத்தை சுற்றி வர நமது சூரியன் 20 கோடி வருடங்களை எடுத்துக் கொள்கிறது.

   لَا الشَّمْسُ يَنبَغِي لَهَا أَن تُدْرِكَ الْقَمَرَ وَلَا اللَّيْلُ سَابِقُ النَّهَارِ وَكُلٌّ فِي فَلَكٍ يَسْبَحُونَ

    சூரியன் சந்திரனை (நெருங்கிப்) பிடிக்க முடியாது; இரவு பகலை முந்த முடியாது. இவ்வாறே எல்லாம் (தம்) வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன. 36:40 سورة يس

            இந்த இறை வசனம் Modern Astronomy கண்டுபிடித்துக் கூறியிருக்கும் ஓர் அடிப்படை உண்மையை கூறுகிறது. சூரியனுக்கும் சந்திரனுக்கும் தனித்தனியே கோளப் பாதைகள் உள்ளன. அப்பாதைகளில் தம்மைத் தாமே சுற்றிக் கொண்டு விண்வெளியில் நகர்ந்தும் செல்கின்றன.

    சூரியன் தன் கோள குடும்பத்துடன் ஓர் இடத்தை நோக்கி (Fixed Place)  செல்கிறது. அவ்விடத்திற்கு நவீன விஞ்ஞானம்  Solar Apex என்ற பெயரையும் சூட்டியுள்ளது. அந்த இடம் Constellation of Hercules என்ற விண்மீன் கூட்டத்தில் அமைந்துள்ளது. இவ்விண்மீன் கூட்டத்திற்கு Alpha Lyrae என்ற பெயரும் உண்டு.

    சந்திரனும் தன் அச்சில் தன்னைத்தானே சுற்றிக்கொள்ள எடுத்துக்கொள்ளும் கால அவகாசம் 29.5 நாட்கள் பிடிக்கின்றன. திருக்குர்ஆன் எடுத்துரைக்கும் இவ்வுண்மைய கண்டு ஆச்சரியத்தால் மலைத்து நிற்காமல் இருக்க முடியவில்லை. 

 

Dr. Zakir Naik. தமிழாக்கம்: இப்னு ஹுஸைன்

Comments on this entry are closed.

Previous post:

Next post: