*குர் ஆன்:-மாறாத அற்புதம்!: –ஒட்டக கூடாரம் முதல் குவாண்டம் கருந்துளைகள் வரை!

எஸ்.ஹலரத் அலி
(+91 99653 61068.


அறிந்துணரும் மக்களுக்காக வசனங்கள் தெளிவாக்கப்பட்ட அரபி குர்ஆன் இது.”

முன்னுரை

ஏழாம் நூற்றாண்டு, மக்காவின் பாலைவனம். எழுதப் படிக்கத் தெரியாத ஒரு நாடோடி பதுவுக்கு (Bedouin) “பூமி உருண்டையா தட்டையா?” என்று தெரியாது. ஆனால் குர்ஆன் இறங்கியதும் அவன்,
“ஆமன்னா வ ஸத்தக்னா – நம்பினோம், உண்மைப்படுத்தினோம்!” என்றான்.

21-ம் நூற்றாண்டு, NASA லேப். குவாண்டம், கருந்துளை, வார்ம் ஹோல், குவாஸர், பற்றி பேசும் விஞ்ஞானி அதே குர்ஆனைப் படித்து

“This cannot be from a 7th-century man!”

(இது ஏழாம் நூற்றாண்டின் ஒரு மனிதரால் கூறப்பட்டிருக்க முடியாது) என்று திகைக்கிறான்.
1400 வருட கால இடைவெளி. கல்வி, மொழி, அறிவியல் எல்லாம் மாறிவிட்டது. ஆனால் ஒரு நூல் மட்டும் இரண்டு காலத்து மனிதனுக்கும் ‘தெளிவாக’ இருப்பது எப்படி?

முதல் அத்தாட்சி: மாறாத பழங்கால மொழி

உலகில் 2000 வருடப் பழமையான மொழிகள் ஆறு உள்ளன. ஆனால் அசல் உச்சரிப்பு, பொருள் இரண்டும் மாறாமல் இருப்பது குர்ஆன் அரபி மட்டுமே. சங்கத் தமிழ் படிக்க உரை வேண்டும். சமஸ்கிருதம் பேச்சு வழக்கில் இல்லை. ஆனால் அபூஜஹ்ல் புரிந்த அதே அரபியை, இன்று 5 வயது குழந்தை கூட “குல் ஹுவல்லாஹு அஹத்” என்று ஓதிப் புரிந்து கொள்கிறது.

1. தஜ்வீத் – Phonetic Firewall

“வ ரத்திலில் குர்ஆன தர்தீலா” (73:4). உச்சரிப்புக்கான தஜ்வீத் விதிகள் 1400 வருடங்களாக குர்ஆனின் உச்சரிப்பைப் பாதுகாத்து வருகின்றன. “ض” (ளாத்) நாக்கு ஓரத்தில் இருந்தும், “ظ” (ழா) நாக்கு நுனியில் இருந்தும் உச்சரிக்கப்பட வேண்டும். ஒரு மில்லிமீட்டர் மாறினாலும் பொருள் மாறிவிடும். இதனால் உச்சரிப்பு மாறாமல் அப்படியே உள்ளது.

2. இஸ்னாத் – 1 லட்சம் Node Blockchain

நபி(ஸல்) – ஜிப்ரீல் – ஸஹாபா முதல் இன்று வரை குர்ஆனை மனனம் செய்த ஹஃபிழ்கள் மூலமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஒருவர் தவறாக ஓதினால், பக்கத்து 3 வயதுப் பையன் திருத்திவிடுவான். உலகில் வேறு எந்த நூலுக்கும் இப்படிப்பட்ட 24/7 Live Error Checking வசதி இல்லை. இதனால் குர்ஆன் Version 1.0 தான். Version 2.0 வரவே இல்லை.

3. வேர் முறை

77,439 சொற்கள் 1,827 வேர்களில் இருந்து உருவானவை. உதாரணமாக “ك-ت-ب” (க-த-ப) என்ற வேரிலிருந்து காதிப், மக்தூப், கிதாப், மக்தப் போன்றவை உருவாகின. இதனால் 7 வயதுப் பையன் “ரஹ்மான், ரஹீம், அர்ஹாம்” போன்றவை ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை என்று புரிந்துகொள்வான். தமிழ் “அன்பு, காதல், நேசம், பாசம்” போன்றவை வேறு வேறு வேர்களில் இருந்து வந்தவை, அதனால் 2000 வருடங்களில் பொருள் மாறலாம்.
இதனால்தான் UNESCO, “Arabic is the only language unchanged for 14 centuries due to Quran!”

(குர்ஆனால் அரபி மொழி 14 நூற்றாண்டுகளாக மாறாமல் உள்ள ஒரே மொழியாகும்) என்று அறிவித்துள்ளது.

*இரண்டாம் அத்தாட்சி: ஒரு வசனம், இரு விதமான புரிதல்:

“லிகவ்மின் யஃலமூன்” – “அறியும் ஒவ்வொரு கூட்டத்துக்கும்.” குர்ஆன் தனி Layer-ஐத் திறக்கும்.

வசனம் 7-ம் நூற்றாண்டு நாடோடியின் புரிதலுக்கும், 21-ம் நூற்றாண்டு விஞ்ஞானியின் புரிதலுக்கும்.முரண்பாடு இருக்காது.

“வல் அர்ழ தஹாஹா”* (79:30) | தஹாஹா = விரித்தான்.

கூடாரம் போட தரை விரிப்பது போல. வாழத் தகுதியான இடம். என்று அன்றைய நாடோடி அரபிக்கு புரிந்தது.

இன்று அதே வசனம்
“தஹ்வு” = நெருப்புக்கோழி முட்டை.* பூமி Oblate Spheroid. துருவங்களில் தட்டை, மத்திய பகுதியில் உப்பிய Egg Shape. என்று நமக்குப்புரிகிறது இன்று.

“வல் ஜிபால அவ்தாதா”* (78:7)

*மலை = கூடார முளை._ பாலை வனக்கூடாரம் காற்றில் பறக்காமல் இருக்க முளைக்குச்சி அடிப்பது போல….என்று அன்று பொருள் விளங்கினார்கள்.

இன்று நவீன அறிவியல் கூறுகிறது. பூமி ஆடாமல் இருக்க மலைகள் முளைகளாக (Peg) பூமியில் ஆழமாக வேர் ஊன்றியுள்ளது.
Isostasy: மலைக்கு பூமிக்குள் 15 மடங்கு வேர். Tectonic Plate-ஐப் Peg போல Fix செய்யும்.

“மரஜல் பஹ்ரைனி”* (55:19)

இரண்டு கடல்கள் சேரும் ஆனால் தண்ணீர் கலக்காது. அன்று மீனவன் கண்ணால் பார்த்தது.

இன்று இரு நீர் நிலைகளின் வெப்பம்,அடர்த்தி,உப்புத்தன்மை வேறுபாடு காரணமாக ஒட்டாமல் விலகி நிற்கிறது. Halocline: Atlantic + Mediterranean உப்பு, வெப்பம், அடர்த்தி வேறு. 1 மீட்டர் Barrier. ஜாக் கூஸ்டியூ 1962-ல் கண்டுபிடித்தார்.

நாடோடி அரபிக்கு கண்ணால் பார்த்த உதாரணம். PhD படித்த விஞ்ஞானிக்கு ஆய்வு தத்துவம். இரண்டு பேரும் “ஸதகல்லாஹுல் அழீம்!” என்றார்கள். இதுதான் தெளிவாக்கப்பட்ட குர்ஆனின் அற்புதம்.

*மூன்றாம் அத்தாட்சி:

ஏழாம் நூற்றாண்டில் 21-ம் நூற்றாண்டு அறிவியல்!

நபி (ஸல்) காலத்தில் தொலைநோக்கி இல்லை, CERN இல்லை. ஆனால் குர்ஆன் பேசியது:

*1. கருந்துளை (Black Hole) – 81:15-16.

மறைந்து ஓடி ஒளியும் நட்சத்திரங்கள் மீது சத்தியம்.” இன்று, கருந்துளை ஒளியைக் கூட விழுங்கும். “ஜவாரி” = வேகமாக ஓடுவது, “குன்னஸ்” = ஒளிவது.

*2. பல்சார் (Pulsar) – 86:1-3:

தட்டும் நட்சத்திரம் மீது சத்தியம்… ஓட்டையிடும் பிரகாச நட்சத்திரம்.”

1967-ல் கண்டுபிடிக்கப்பட்ட Neutron Star, நொடிக்கு 716 தடவை “தக் தக்” என்று Radio தட்டு அடிக்கும்.

3. விரிவடையும் பிரபஞ்சம் (Expanding Universe) – 51:47:

“வானத்தை சக்தியால் படைத்தோம். நிச்சயமாக நாம் விரிவுபடுத்திக் கொண்டே இருக்கிறோம்.” 1929-ல் Hubble, Galaxy எல்லாம் Red Shift ஆகிறது, பிரபஞ்சம் விரிகிறது என்று கண்டுபிடித்தார். குர்ஆன் “லமூஸிஊன்” (Present Continuous) 1400 வருடம் முன் சொன்னது.

4. வார்ம் ஹோல் (Worm Hole) – 70:3-4:

  • “மலக்குகள் 50,000 வருடப் பயணத்தை 1 நாளில் கடப்பார்கள்.” Einstein, Worm Hole மூலம் Space-Time Shortcut, 50,000 ஒளி ஆண்டு தூரத்தை 1 நாளில் கடக்க முடியும் என்று கூறினார். குர்ஆன் “மஅரிஜ்” (ஏறும் படிகள்) என்று Dimension-க்கு மேல் Dimension சொன்னது. 5. குவாண்டம் உருவாக்கம் (Quantum Creation) – 36:82:
  • “ஆகு என்றால் உடனே ஆகிவிடும்.” Big Bang-ல் Time, Space, Law எதுவும் இல்லை. Cause இல்லாத Effect. விஞ்ஞானம் “தெரியாது” என்று சொல்லும் இடத்தில் குர்ஆன் “அம்ருஹு – அவன் கட்டளை!” என்று பதில் வைத்தது.

இதை 7-ம் நூற்றாண்டு மனிதர் துல்லியமாகச் சொல்லும் Probability 1/10^50, அதாவது Impossible.

நான்காம் அத்தாட்சி: நரகத்தின் தெர்மோடைனமிக்ஸ்: –(Thermodynamics)

70,000°C-க்கான பொறியியல்!

நபி(ஸல்) கூறினார்கள்:

“உங்கள் நெருப்பு நரகத்தின் 70-ல் 1 பாகம்!” (புகாரி 3265).

பூமியில் நெருப்பு 1000°C x 70 = நரகம் 70,000°C. இது சூரியனின் மேற்பரப்பை விட 12 மடங்கு அதிகம்.

கேள்வி: 5 அடி மனிதன் 70,000°C-ல் நொடியில் ஆவியாகிவிடுவான். பிறகு எப்படி “லா துப்கீ வ லா ததர்” (74:28) – அழிக்காது, விடாது?
பதில்:
“வகூதுஹன் நாஸு வல்ஹிஜாரது” (2:24)

மனிதர்களும் கற்களும் எரிபொருள்:

1. மனிதன் = 70,000 டன் கார்பன் எரிபொருள்.

ஹதீஸ்: காஃபிரின் கடவாய் பல் உஹது மலை, தோல் தடிமன் 3 நாள் பயண தூரம்.
(முஸ்லிம் 2851).

பூமியில் ஐந்தடி உயரமுள்ள மனிதன் நரகத்தின் 70,000 டிகிரி வெப்பத்தை தாங்கி வேதனையை தொடர்ந்து அனுபவிக்க ஒரு பெரும் மலை போன்ற ராட்சத உருவத்தில் மாற்றப்படுவான்.

Square-Cube Law-படி, உயரம் 100 மடங்கு என்றால் எடை 10 லட்சம் மடங்கு. 5 அடி மனிதன் 70 கிலோ என்றால் மலை மனிதன் 70,000 டன். எரியும் நேரம் 2 மணி நேரத்தில் இருந்து 23 வருடங்கள்.

  • தோலை மாற்றுவோம்” (4:56) எரிபொருள் Refill ஆகிறது.

2. கல் = கந்தகம் Catalyst
ஹர்ரா எரிமலை கல் – கந்தகம் 445°C-ல் நீல நெருப்பு, மெக்னீசியம் 3100°C வெள்ளை நெருப்பு. மனித கார்பனை 70,000°C-க்குக் கொண்டு போகும் தீப்பெட்டி.

3. மலக்கு = Control Rod

“அலைஹாவ் மலாயிகத்துன் கிலாழுன் ஷிதாத்” (66:6).

70,000°C-ஐ மனிதன் கையாள முடியாது.

உணர்ச்சியற்ற மலக்குகள் தான் Reactor Operator.
ஆக நரகம் அல்லாஹ்வின் Nuclear Reactor. 5 அடி மனிதனைப் போட்டால் Off ஆகிவிடும். மலை மனிதன் தான் Perfect Fuel.

முடிவுரை:

“ஸனுரீஹிம் ஆயாதினா” – அத்தாட்சிகளை காட்டுவோம்!

“ஃபில் ஆஃபாக்கி வ ஃபீ அன்ஃபுஸிஹிம் ஹத்தா யதபய்யன லஹும் அன்னஹுல் ஹக்கு!” (41:53)

– “அண்டத்திலும், அவர்களுக்குள்ளும் நம் அத்தாட்சிகளை காட்டுவோம் – இது சத்தியம் என்று தெளிவாகும் வரை!”

*ஆஃபாக் – அண்டம்:

கருந்துளை, குவேசார், பிக் பாங் போன்றவை தொலைநோக்கியால் (ஆயத்) அண்டத்தில் காணப்படும் அத்தாட்சிகள்.

*அன்ஃபுஸ் – நமக்குள்:”

DNA, கைரேகை போன்றவை நுண்ணோக்கியால் (ஆயத்) நமக்குள் காணப்படும் அத்தாட்சிகள்.

*நார் – நரகம்:

70,000°C, மலை மனிதன், கந்தக கல் போன்றவை தெர்மோடைனமிக்ஸ் அத்தாட்சிகள்.

7-ம் நூற்றாண்டு நாடோடிப் பாகன், “ஒட்டகம் எப்படி படைக்கப்பட்டது!”
(88:17) என்று யோசித்தான்.

21-ம் நூற்றாண்டு விஞ்ஞானி “DNA எப்படி Code ஆனது!” என்று யோசிக்கிறான். இருவருக்கும் குர்ஆன் பதில்:

“அல்லாஹு காலிகு குல்லி ஷைஇன்” (39:62).

எந்த நூற்றாண்டில் எந்த “அறியும் கூட்டம்” வந்தாலும், அவர்கள் மொழியில் குர்ஆன் பேசும்!

குவாண்டம் படித்தவனுக்கு “குன் ஃபயகூன்“, நாடோடிக்கும் “குல் ஹுவல்லாஹு அஹத்”. முடிவு ஒன்று தான்!

“லா இலாஹ இல்லல்லாஹ்”.
“இன்னா நஹ்னு நஸ்ஸல்னத் திக்ர வ இன்னா லஹு லஹாஃபிழூன்” (15:9) – “நாமே இறக்கினோம், நாமே பாதுகாப்போம்!”

Tool 1: ஜிப்ரீல். Tool 2: அரபி மொழி. Tool 3: நெஞ்சில் உள்ள ஹிஃப்ழு.

குர் ஆன் ஒன்றைத்தவிர வேறு எந்த நூலுக்கும் இந்த மூன்று பூட்டுகள் கிடையாது!.
“வ அல்லாஹு அஃலம்” – அல்லாஹ்வே மிக அறிந்தவன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *