கடமையான தொழுகைக்குப்பின்

in தொழுகை,நபிமொழி

கடமையான தொழுகைக்குப்பின்


அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு தேடுகிறேன்(3 முறை) யா அல்லாஹ்! நீயே சாந்தி அளிப்பவன். உன்னிடமிருந்தே சாந்தி ஏற்படும். மகத்துவமும், கண்ணியமும் உடையவனே நீ பாக்கியமானவன். நூல்: முஸ்லிம் 931வணக்கத்திற்குரிய அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன் இல்லை. அவனுக்கே அதிகாரம். புகழும் அவனுக்கே. அவன் அனைத்து பொருட்களின் மீதும் ஆற்றல் உடையவன். யா அல்லாஹ்! நீ கொடுத்ததைத் தடுப்பவன் இல்லை. நீ தடுத்ததை கொடுப்பவன் இல்லை. செல்வமுடைய எவரது செல்வமும் உன்னிடம் பயனளிக்காது. நூல்: புகாரி 844, 6330


யா அல்லாஹ்! கோழத்தனத்தை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன். தள்ளாத வயதுவரை நான் வாழ்வதை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன். இவ்வுலகின் சோதனையிலிருந்து உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன். மண்ணறையின் வேதனையிலிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நூல்: புகாரி 2822


யா அல்லாஹ்! உன்னி நினைப்பதற்கும் உனக்கு நன்றி செலுத்துவதற்கும் உன்னை அழகான முறையில் வணங்குவதற்கும் எனக்கு உதவுவாயாக! நூல்: அபூதாவூத்

சுப்ஹானல்லாஹ் 33 தடவையும், அல்ஹம்துலில்லாஹ் 33 தடவையும், அல்லாஹ் அக்பர் 33 (மற்றொரு அறிவிப்பில் அல்லாஹ் அக்பர் 34 தடவை என்றும் உள்ளது) தடவையும். ஆக மொத்தம் 99 தடவைக்குப்பின் 100 வதாக


எனக் கூறுகிறாரோ அவரது பாவங்கள் கடல் நுரையளவு இருந்தாலும் மன்னிக்கப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். நூல்: முஸ்லிம்


வணக்கத்திற்குரிய அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன் இல்லை. அவனுக்கே அதிகாரம். புகழும் அவனுக்கே.

Comments on this entry are closed.

Previous post:

Next post: