கடவுள் பற்றிய மதங்களின் அடிப்படை மற்றும் நடுநிலை கொண்ட மனிதர்களின் நியாயமான புரிதல்கள்:
இயற்பியல் விதிப்படி (Thermodynamics First Law) இந்த உலகில் யாரும் எந்த ஒரு சக்தியையும் ஆக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது அப்படியெனில் இவ்வளவு பெரிய ஆற்றலை ஆக்கியது ஒரு ஆற்றல் மிகுந்த சக்தி என்பதை யாராலும் மறுக்க முடியாது. இயற்கை என்ற பெயர் வைத்தாலும் சரி, கடவுள் என்ற பெயர் வைத்தாலும் சரி இப்பிரபஞ்சத்தை உருவாக்கி இயக்கி வருவது ஒரு மாபெரும் சக்தி என்பதை மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர். அதற்கு அவர்கள் வைத்த பெயர், அது அவர்களுடைய நம்பிக்கை.
இந்த பிரபஞ்சம் (Universe) இயங்கிகொண்டு இருக்கிறது என்பது மட்டுமே நாம் அறிந்தவை. இது எங்கிருந்து வந்தது, எந்த சக்தியை கொண்டு இயங்குகின்றது என்பன நாம் அறியப்படாத உண்மைகள். ஆற்றல் எங்கிருந்தாவது நமக்கு கிடைத்தால் மட்டும் தானே நம்மால் இயங்க முடியும்.
பெருவெடி கொள்கை (Big Bang theory) என்பது அனைத்து அறிவியலர்களாலும் ஏற்றுகொள்ளகூடிய ஒரு கொள்கையாக உள்ளது. அறிவியலாளர்கள் இப்பிரபஞ்சம் உருவானதை பற்றி பெரு வெடி கொள்கை அடிப்படையில் கூறும் பொழுது இப்பிரபஞ்சம் எப்பொழுதும் இருந்தது அல்ல மாறாக அதற்கு ஆரம்பம் என்பது இருக்கிறது என்றும் ஒரு அணு வெடித்து அதன் மூலமே இந்த ஆற்றலும் ஒளியும் உருவானதாக குறிப்பிடுகின்றனர். எது இந்த பிரபஞ்சத்தை அதன் இயக்கத்தை ஆரம்பிக்க தூண்டியது (Stimulate) என்பது பற்றிய ஒரு தெளிவான விளக்கம் இல்லை.
இந்த பிரபஞ்சம் ஒரு ஒழுங்கு முறையை கடைபிடித்தும் வரைமுறை விதிகளுக்கு கட்டுப்பட்டும் இயங்குவது அறிவியலாளர்களிடையே ஒரு பெரிய வியப்பையே ஏற்படுத்துகிறது. ஒழுங்கு முறையை கடைபிடித்து நடக்கவேண்டிய தேவை என்ன என்பதை விளக்க தவறியவர்களாகவே அறிவியலாளர்கள் உள்ளனர். அறிவியலாளர்களின் விளக்கங்களையும் எடுத்து கொண்டு தங்களுக்கு தேவையான மசாலாக்களையும் கலந்து ஒரு புதுமையான முறையில் விளக்கம் தருவதே நாத்திக கொள்கை. முழுமை இல்லாத அதனை கருத்தில் கொள்ளும் பொழுது பழங்காலங்களிருந்து சொல்ல பட்ட கடவுள் கொள்கைகள் எல்லாம் கற்பனை என்று சாதாரணமாக விட்டு செல்வது அறிவுடைமையாக இருக்காது. அனைத்தையும் மனதில் கொண்டு ஆராய்ந்தால் மட்டுமே கடவுள் கொள்கையில் உள்ள உண்மையை அறிய முடியும்.
ஆதிகாலம் முதல் மக்கள் கடவுளை வணங்கியே வந்திருக்கின்றனர். பழங்காலங்களில் மனிதர்கள் நெருப்பை வணங்குபவர்களாகவும், சூரிய சந்திரனை வணங்குபவர்களாகவும் இருந்துள்ளனர் என்பது பல குறிப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது. அதேபோல ஆதிகாலம் முதல் இன்று வரை ஒரு கடவுள் (One GOD) கொள்கை என்பது இருந்து வந்திருக்கின்றது என்பது குறுப்பிட தக்க விஷயம்.
சூரியன் சந்திரன் பாம்பு பல்லி என அனைத்தையும் கடவுளாக நினைத்த மனிதன் எல்லாவற்றிற்கும் பெரிய கடவுளாக ஒரு கடவுளை வைத்து அதற்கு உருவம் சொல்லாமலும் வணங்கி வந்திருக்கிறான், உயர்ந்த இடத்தில் மனிதன் வைத்த கடவுளுக்கு உருவம் கற்பிக்காததிலுருந்தே அவர் மனிதன் கற்பனைக்கும் நினைவுக்கும் அப்பால் உள்ள உருவத்திலயே மனிதனின் எண்ணத்தில் இருந்திருப்பார் என்று அறிய முடிகிறது.
ஒவ்வொரு மதங்களும் கடவுளை பற்றிய வெவ்வேறு கருத்துக்களை கொண்டிருந்தாலும் உலகின் பெரிய மதங்களின் கடவுள் நம்பிக்கையை பார்த்தல் அவர்கள் பல்வேறு உருவங்களை கடவுளாக சித்தரித்தாலும் பெரிய கடவுளாக வைத்திருப்பது உருவம் இல்லாத ஒரு கடவுளை தான் கடவுள் என்பவர் மனிதனின் உருவம் பற்றிய சிந்தனைக்கும் எண்ணத்திற்கும் அப்பாற்பட்டவராகவும் மனிதர்களிடம் இருக்கின்றார்.
இவ்வுலகில் உள்ள மக்கள் வெவ்வேறு பெயர்களில் கடவுளை வணங்கினாலும் அனைவரும் தன்னையும் அறியாமல் அந்த ஒரு புத்திசாலித்தனமான அந்த சக்தியை தான் மையமாக வைத்து வணங்குகின்றனர்.
கடவுளை மனித உருவத்திலோ அல்லது மற்ற ஏதேனும் தெரிந்த உருவத்திலோ வைத்திருக்கும் நிலையே நாத்திக வாதிகளின் கடவுள் மறுப்பு கொள்கைக்கு அடித்தளமாக அமைந்து விடுகிறது, கடவுளை பூமியில் வைத்து பார்ப்பதாலயே மனிதர் உருவத்தில் கடவுள் இருந்திருப்பர் என்ற எண்ணம் வரும். பூமியை விட்டு வெளியில் போனால் மனித உருவமே இல்லை என்ற நிலையில் கடவுளை மனிதன் உருவத்தில் பார்ப்பது என்பது அறியாமையின் வெளிச்சம் மற்றும் நீளம் அகலம உயரம் போன்ற அளவுகளுக்கும் கண் காது மூக்கு போன்ற புலன்களுக்கு அப்பாற்பட்டே அவர் இருக்க வேண்டும். இந்த வரைமுறையை சரியான முறையில் பொருத்தி பார்த்தல், மனிதன் உருவாக்கிய பல கடவுள்கள் இறந்து போய் விடுவர்.
கடவுள் தான் அனைத்தையும் உருவாக்கினார் என்று கூறும்போது அந்த கடவுள் எங்கிருந்து வந்திருப்பர், கடவுளுக்கு முதலில் யார் வந்தது என்பது போன்ற கேள்விகள் நாத்திக வாதிகளால் எழுப்பபடுகின்றன.
முதல் கடைசி என்ற நிலை எப்பொழுது வரும், காலம் நேரம் என்ற சில அளவுகோல்கள் இருக்கும் போது தான் முதல் கடைசி என்ற வாதம் வரும். சற்று விசாலமான பார்வையில் பார்த்தல், மனிதர்களின் அளவு கோள்தான் காலம் நேரம் எல்லாம், இந்த அளவுகோலை தாண்டி இருப்பவர் தான் கடவுள், ஆக கடவுளுக்கு முதல் என்பதும் கிடையாது கடைசி என்பதும் கிடையாது என்பதை உணரலாம். இப்பிரபஞ்சத்தையே உருவாக்கியவர் கடவுள் எனும் போது இந்த அளவுகோளையும் உருவாக்கியவர் அவர் தான். அதை அவருக்கே பொருத்தி பார்ப்பது என்பது எப்படி சரியாகும். கடவுள் என்பவர் உருவானவர் இல்லை, எப்பொழுதும் இருப்பவர் என்பதே சரியான வாதமாக இருக்கும். ஆதி முடிவு என்ற நிலை கொண்டவர் நிச்சயம் கடவுளாக இருக்க வாய்ப்பே இல்லை.
அனைத்து அமைப்பின் கன கச்சிதமான ஒழுங்கு முறையை பார்க்கும் போது அவை ஒரு சக்திக்கு மட்டுமே கட்டுபடுகின்றன என்பதை அறிய முடிகிறது. பல கடவுள் என்ற வாதத்தை வைத்தல் அவர்களுக்குள் போட்டி ஏற்பட்டு அமைப்பு சிதைந்து போவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதையும் விளங்க முடியும்.
கடவுள் எப்படி இருப்பார் என்று அனைவருக்கும் ஒரு கேள்வி எழும். எப்படி இருப்பார் என்பது நம்மால் புரிந்து கொள்ளமுடியவில்லை என்றாலும் எப்படி இருக்க மாட்டார் என்று அறிய முடியும். மனித கற்பனை உருவத்தில் நிச்சயம் கடவுள் இருக்க வாய்ப்பு இல்லை. காலத்திற்கும் நேரத்திற்கும் அப்பாற்பட்டவர் எனும் போது (மனித கற்பனை இதற்குள் தான் இருக்கும்) அவரின் உருவமும் அப்பாற்பட்டதாக தான் இருக்கும்.
பழங்கால மனிதர்கள் அறிந்தது சூரியன், சந்திரன், பூமி, நட்சத்திரம் அவ்வளவுதான். ஆனால் அறிவியலில் முன்னேறிய தற்கால மனிதன் கடவுளின் முழு ஆற்றலையும் அமைப்பின் (System in physics) முழுமையையும் பார்ப்பவனாகவே உள்ளான் என்பது கடவுள் நம்பிக்கையில் ஒரு தெளிவை கொடுக்கிறது.
பெரியவர் சொல்லி கொடுத்தது போல் கடவுள் என்ற வார்த்தையை உங்கள் அகராதியில் தவறாக இட்டு வைத்திருப்பின் ஒரு மாபெரும் புத்திசாலி தனமாக சக்தி என்று மாற்றி கொள்ளுங்கள், நம் அனைவரின் எண்ணங்களும் செயல்களும் அவரின் பார்வையில் இருப்பதை உணருங்கள்.
கார்பன் கூட்டாளி
Comments on this entry are closed.