மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் அவர் சாதரண மனிதனாக இருந்தாலும் அல்லது அவர் அவுலியாவாக இருந்தாலும் இறப்பை தழுவிதான் ஆக வேண்டும். ஆனால் மக்களில் சிலர் அவ்லியாக்கள் வெளி உலகத்துக்குத்தான் இறந்தவர்கள். உண்மையில் அவர்கள் கப்ருக்குள் உயிருடன் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறி சமாதி வழிபாடு செய்கிறார்கள்.
நபிமார்களோ, அல்லது அவ்லியாக்களோ மரணித்து விட்டார்கள் என்று கூறப்பட்டால் அவர்கள் மரணித்து விட்டார்கள் என்று தான் பொருள். அவர்கள் மரணித்த பிறகு உயிருடன் இருக்கிறார்கள் என்று சொன்னால் அவர்களைக் கப்ரில் அடக்கம் செய்தவர்கள் அனைவரும் உயிருடன் இருந்த ஒருவரை பூமிக்குள் புதைத்து கொலை செய்து விட்டார்கள் என்ற குற்றத்தை ஏற்கவேண்டிய நிலை ஏற்படும்.
அப்படி இவர்கள் மரணிக்கவில்லையென்றால் இவர்களின் சொத்துகளுக்கு யாரும் பங்குதாரராக முடியாது. இவர்களின் மனைவிகள் இத்தா இருக்க வேண்டிய அவசியமும் இல்லை என்று இஸ்லாம் தெளிவு படுத்தியிருக்கும். وَلاَ تَقُولُواْ لِمَنْ يُقْتَلُ فِي سَبيلِ اللّهِ أَمْوَاتٌ بَلْ أَحْيَاء وَلَكِن لاَّ تَشْعُرُونَ அல்லாஹ்வுடைய பாதையில் கொல்லப்பட்டோரை இறந்து விட்டவர்கள் என்று கூறாதீர்கள். அப்படியல்ல! அவர்கள் உயிருள்ளவர்கள்; எனினும் நீங்கள் (இதை) உணர்ந்துகொள்ள மாட்டீர்கள்’. (2:154) என்று ஷஹீதுகளைக் குறித்து மட்டும் குறிப்பாகக் கூறப்பட்டிருக்கிறது.
ஆகவே, மனித இனத்தில் மாபெரும் பதவிகளுடைய நபிமார்கள், ஷஹீத்மார்கள், அவ்லியாக்கள் ஆகியோர் மரணித்து விட்டால், அவர்கள் மரணித்து விட்டார்கள் என்று வைத்துதான் அவர்களை கழுவி குளிப்பாட்டி கபன் இட்டு ஜனாஸா தொழவைத்து அடக்கம் செய்தாக வேண்டும் என்பதை முஸ்லிம்கள் மீது இஸ்லாம் கடமையாக்கியுள்ளது.
நிச்சயமாக ஷுஹதாக்கள் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களின் உயிர் பறவைகளின் உடல் கூட்டில் விடப்பட்டு, சுவர்க்கத்தில் தமது விருப்பத்திற்கேற்ப உலவிக் கொண்டிருக்கின்றன என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.) அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) நூல்: முஸ்லிம்)
உங்கள் சகோதரர்கள் உஹதுப் போரில் கொல்லப்பட்டபோது அல்லாஹ் அவர்களின் உயிர்களை பச்சைப் பறவையின் உடல் கூட்டில் அமைத்து விட்டான். அவை சுவர்க்கத்துடைய ஆறுகளில் தண்ணீர் அருந்திக் கொண்டும், சுவர்க்கத்தின் (மரங்களின்) பழங்களை புசித்துக் கொண்டுமிருக்கின்றன. (இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: அஹ்மத்)
அல்லாஹ்வின் பாதையில் மரணமடைந்த சஹீத்களைப் பற்றி குர்ஆனின் வசனம் அவர்களை (நல்லடியார்களை) மரணித்து விட்டார்கள் என்று நீங்கள் கூறாதீர்கள் என்று கூறிவிட்டு எனினும் அவர்கள் உயிரோடு இருக்கிறார்கள். எனினும் நீங்கள் உணர்ந்துகொள்ள மாட்டீர்கள் என்றும் அல்லாஹ் கூறுகிறான். ஆகவே நாம் கற்பனை செய்வதுபோல் அவர்கள் தமது கப்ருகளில் உயிராக இருந்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தவறாகும். ஏனெனில் அவர்களின் நிலைப்பற்றி நபி(ஸல்) அவர்களின் ஹதீஸின் வாயிலாக நல்லடியார்கள் சுவர்க்கத்தில் பறவை அமைப்பில் உலாவிக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறியிருப்பதால் இதுவே உண்மை என்பது தெளிவாகிறது.
{ 17 comments }
வஹ்ஹாபிகளே இப்படித்தானா மார்க்கம் புரிவது நீங்கள் ஹதீஸ்களை மேலோட்டமாக பார்பதால்தான் இந்த முரட்டு புத்தி 1) ஒரு முறை கண்மணி நாயகம் அவர்கள் பத்ரு யுத்தம் முடிந்த பிறகு சொன்னார்கள் சிறிய யுத்தம் முடித்துவிட்டு பெரிய யுத்தம் செய்வதற்காக உள்ளோம் என்றார்கள். இதை கேட்ட சஹாபாக்கள் நாயகமே இது சிறிய யுத்தம் என்றால் பெரிய யுத்தம் எது? என்று கேட்டார்கள் அதற்கு நாயகம் சொன்னார்கள் ஒருவன் தன்னுடைய நப்சுடன் போராடுவதுதான் பெரிய யுத்தம்…..என்றார்கள் இந்த ஹதீதை மறந்துவிட்டீர்களா?? மறைத்து விட்டீர்களா?? அப்படி வேல்லுபவரும் ஷஹீதுதான் 2) கண்மணி நாயகம் அவர்கள் புனித மிஹ்ராஜ் செல்லும் பொது ஹழ்ரத் மூஸா அலை அவர்கள் அவர்களுடைய கபுரிலே தொழுது கொண்டு நிற்பதை கண்டார்களே…………வஹ்ஹாபிகளே இதை மறந்தீர்களா??? மறைத்தீர்களா??? 3) கண்மணி நாயகம் அவர்கள் புனித மிஹ்ராஜ் செல்லும் பொது ஒவ்வொரு வானிலும் ஒவ்வொரு நபிமார்களை கண்டார்களே………..வஹ்ஹாபிகளே இதை மறந்தீர்களா??? மறைத்தீர்களா?? எதற்காக நீங்கள் குழம்பியதும் இல்லாமல் மக்களையும் குழப்புகின்றீர்கள்?? வணக்கத்துக்கும் மரியாதைக்கும் வித்தியாசம் புரியாத மகான்களே இதுவா நீங்கள் பேசும் தௌஹீத்????
ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் புனித ரவ்லா ஷரீஃப் சென்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களையும், அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களையும் பர்தா அணியாமலேயே ஸியாரத் செய்பவர்களாக இருந்தார்கள். பின்னர் உமர் ரலியல்லாஹு அன்ஹு அதில் அடக்கம் செய்யப்பட்டபோது பர்தா அணிந்து ஸியாரத்து செய்பவர்களாக இருந்தார்கள்.
மிஷ்காத் – 154
Assalamu Alaikum,
“Mohamed Zahran Avargal” nalla paditha Alim matheri theriuthu anaa enna pirayoznam ? Nafsudan Poraduwatharqum, Vanathil Nabimargal Tholuthathargal enbatharkum pirahu Sahul Hamid Andavar, Ajmeer khaja evergalukellam kurusu kondataam mouluthu pattu pattasu eyen etharku islathukku throgam pannuhindreergal ?
Neega sonna 3 vishayangalai ? Moahmed Rasulullah PBUH AVARGAL ungal valipadugal pole seithargala (or ) Avargalathu kudumbathargal seithargala, or Khulafa Rashideengal seithargala ?
Nalla ukanthu hadhisugalaium Tafseergalium Quran udan inayithu paiyungal nandraha purium, Neengallam summa warattu gavuramthan, Sonnathai appadiye vida kudathenbatherkaha. Siler Polappu Ottanum enpatharkaha than valipadugal seihindrargal engiren.
Allah Almighty will guide in to straight path like you guys Insha Allah.
Azeezullah, Jeddah.KSA.
அஸ்ஸலாமு அலைக்கும், சகோதரர் azeezullaah அவர்களே…உங்களது அறிவுறைக்கு நன்றி…….இங்கு நல்லடியார்கள் என்னும் தலைப்பில் பதிவிடப்பட்டிருப்பவை அத்தனையும் விஷமக்கருத்துக்கள் காரணம் இவர்கள் கூறியது போன்று எடுத்தால் கண்மணி நபிகள் நாயகம் சொன்னது பொய்யா??? மூசா (அலை) அவர்களை கபுரிலே தொழுது கொண்டிருக்கும் நிலையில் கண்டேன். என்று கூறியிருக்கும் போது….இதில் என்ன சந்தேகம் கொண்டு நல்லடியார்கள் மரணித்தால் மரணித்தவர்கள்தான் என்று கூறும் இவர்களுக்கு யார் கொடுத்தது இந்த அதிகாரத்தை?
1)உங்களில் மரணித்தோருக்கு யாஸீன் (சூராவை) ஓதுங்கள்.
மஃகில் இப்னு யஸார் ரலியல்லாஹு அன்ஹு
அபூதாவுத் 2717, இப்னு மாஜா 1438, அஹ்மத் 19842, இப்னு அபீஷைபா 10473
2) யார் அல்லாஹ்வின் திருமுகத்தை நாடி யாஸீன் ஓதுகிறாரோ அவரின் முன்சென்ற பாவங்கள் மன்னிக்கப்படுகிறது. ஆகவே அதை உங்களில் இறந்தவர்களின் சமூகத்தில் ஓதுங்கள்.
மஃகில் ரலியல்லாஹு அன்ஹு
முஸ்னத் அஹ்மத், பைஹகி 2458, மிஷ்காத் 2178
கண்மணி நாயகம் அவர்கள் இறந்தவர்களுக்கு யாசீன் ஓத சொல்லயுல்லார்கள் எனவே ஓதுகின்றோம். இதில் என்ன சந்தேகம் உங்களுக்கு??? நபியவர்கள் சொன்னதை எடுத்து நடப்பதா? இல்லை நபி வழி என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்லிக்கொண்டு நாய் வழி வாழ்பவர்களை ஏற்பதா??? இறந்தவர்களுக்காக நாங்கள் புனித குரானைத்தானே ஓதுகின்றோம் தவ்ராதயோ,இன்ஜீலையோ ஓதவில்லையே குரானை ஓத சொன்னவர்கள் கண்மணி நாயகம் அவர்கள் ஓதினால் ஷிர்க் என்பவர்கள் இந்த latest islam பேசும் முல்லாக்கள்….குரானை ஓதும் சபையில் அதை செவிமடுத்திருப்பவர்களுக்கே அதன் பலனை அளிப்பதாக கூறும் மார்க்கம் நமது இஸ்லாம்…இப்படியிருக்க ஷிர்க் என்று கூச்சலிடும் காடையர் கூட்டம் அல்லாஹ் போதுமானவன்.
மரியாதைக்குரிய அண்ணன் Mohamed Zahran அவர்கள்,
السلام عليكم ورحمة الله وبركاته
இபாததுக்களில் எந்த ஒரு புதிய செயல்களாக இருந்தாலும் நமது இஸ்லாத்தில் அது ஏற்று கொள்ளமுடியாது என்பதை கீழே உள்ள குரான் ஆயத், ஹதீஸில் மிக அருமையாக தெளிவுபடுதுது.
“وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين ”
“من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد “
வணக்கங்களை இப்படித்தான் வணங்க வேண்டும் என்று அழகான முறையில் முஹம்மது ரசூலுல்லாஹ் சொன்னதற்கு பிறகும், வழிபாடுகள், தேவை இல்லாத கொண்டாட்டங்கள், வீண் விரையங்கள், நேரங்கள் அனைத்தையம் வீண் அடித்து கபுர்களில் சென்று வணக்கங்களை புரிவது எப்படி நல்லதாக தெரியுது ? கீழே ஹதிஸை படிக்கவும்
“ حق الله على العباد أن يعبدوه ولا يشركوا به شيئا “
நமது அருமை நாயகம் முஹம்மது ரசூலுல்லாஹ் தனது அம்மா ஆமினா அவர்களக்கு மன்னிப்பு தரும்படி கேட்டார்கள் அனால் ஜியாரத் மட்டும் போகும்படி அல்லாஹ் அனுமதிதான் அதன் பிறகு முஹம்மது ரசூலுல்லாஹ் இப்பொழுது மக்கள் செய்வது போலே செய்தார்களா ? அல்லது அவர்களது குடும்பத்தார்கள் அல்லது நமது அருமை செல்வங்கள் சஹாபாக்கள் செய்தார்களா ?
கீழே ஹதிஸை படிக்கவும்..
“ استأذنت ربي بأن أستغفر لها فلم يأذن لي، واستأذنته في أن أزور قبرها فأذن لي، فزوروا القبور فإنها تذكر الموت “
பெண்கள் போகவே கூடாது அப்படியே போனால் அதற்குரிய முறைப்படி போகவேண்டும், அனால் அப்பவும் ஹதீஸில் மிக கடுமயாக அதிகம் ஜியாரத் செய்யும் பெண்களை கண்டிக்கிறது.
“ لعن الله زائرات القبور”
வழிகேடுகளை செய்யும் கபுர் வழிபாட்டு காரர்களுக்கு கீழே உள்ள ஹதிஸ் எவ்வளு அருமையாக தெளிவு படுத்துகின்றது பாருங்கள்
وفي صحيح مسلم عن جابر بن عبد الله الأنصاري رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم أنه كان يقول في خطبته يوم الجمعة: ((أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار))
ஆபீசில் எனது வேலை முடிக்காமல் உங்களுக்காக மற்றவர்களுக்கும் பிரயோசனம் ஆகும் என்ற காரணதிரகாகவும் இந்த பதிலை தமிழில் கஷ்டபட்டு அல்லாஹ் ஒருவனுக்காகவும் எழுதுகிறேன். நீங்கள் குறிபிட்டு இருக்கும் எல்லா ஹதீஸ்களும் அல்லது அaயதுகளும் கப்ர் ஜியரதுக்கு தான் போகணும், இதுதான் வாழ்க்கை என்று சொல்லுதா ?
ஐந்து நேர தொழுகைக்கு யாராவது வக்காலத்துக்கு வர்ரீங்களா ? ஏன் இப்படி இதன் மேல் உங்களக்கு இவ்வளு ஆர்வம் தெரியமா ? முஹம்மத் ரசூலுல்லாஹ் கப்ரு வணக்ங்களை மறுத்த ஹதிச்களையும் குரான் ஆயத்தகளையும் நன்றாக திரும்ப திரும்ப படிக்காமல் இருப்பதினால் தான், புரிந்து படித்தால் அருமையாக புரியும். நாகூர், ஏர்வாடி, அஜ்மீர் எல்லாம் திரும்ப சென்று அங்கு நடப்பதை எல்லாம் பார்த்து விட்டு பிறகு முஹம்மத் ரசூலுல்லாஹ் வாழ்ந்த முறை, ஹதிசு குரானுடன் இணைத்து படியுங்கள் நிச்சயமா அல்லாஹ் உங்கள் இதயத்தை உண்மையான தவ்ஹித் வாதியாக பரிபூர்ணமாகுவான் இன்ஷா அல்லாஹ்.
அஜீஜுல்லாஹ், ஜீத்தாஹ்..
இறை நேசர்களை அல்லாஹ்வே உயர்வாக புகழ்ந்து கூறும்போது நாம் புகழ்வதற்கு என்ன தயக்கம்…. 1)அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் நபிமார்களும் அல்ல. இறைவனின் பாதையில் உயிர் நீத்தவர்களும் அல்ல. இவர்களுக்கு அல்லாஹ்விடத்தில் கிடைக்கும் அந்தஸ்த்தைப் பார்த்து நபிமார்களும் தியாகிகளும் பொறாமைப்படுவார்கள் என்று நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். மக்கள் அவர்கள் யார் என எங்களுக்குக் கூறுங்கள் அல்லாஹ்வின் தூதரே என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் தங்களுக்கிடையே இரத்த உறவிற்காகவோ, கொடுத்து வாங்கிக் கொள்ளும் செல்வங்களுக்காகவோ அல்லாமல் அல்லாஹ்விற்காக ஒருவரையொருவர் நேசித்துக் கொண்டவர்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக நிச்சயமாக அவர்களுடைய முகங்கள் ஒளியாக இருக்கும். அவர்கள் ஒளியின் மீது இருப்பார்கள். மக்கள் அஞ்சும் போது அவர்கள் அஞ்சமாட்டார்கள். மக்கள் கவலைப்படும் போது அவர்கள் கவலைப்பட மாட்டார்கள் என்று கூறி விட்டு அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்த பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள் என்ற வசனத்தை படித்துக்காட்டினார்கள்.
உமர் பின் அல் ஹத்தாப் (ரலியல்லாஹு அன்ஹு)
அபூதாவூத் 3060
2)நபிமார்களை ஞாபகம் பண்ணுவது வணக்கமாகும். ஸாலிஹீன்களை ஞாபகம் பண்ணுவது பாவபரிகாரமாகும்.
அல் ஜாமிஉஸ் ஸகீர் 2 – 299
3)மக்களில் சிறந்தவர்கள் என் தலை முறையினர் (சஹாபாக்கள்) அவர்களுக்குப் பிறகு (சிறந்தவர்கள்) அவர்களையடுத்து வருபவர்கள். (தாபிஈன்கள்) அவர்களுக்கும் பிறகு (சிறந்தவர்கள்) அவர்களையடுத்து வருபவர்கள். (தப அத்தாபிஈன்கள்) பின்னர் ஒரு சமுதாயத்தார் வருவார்கள். அவர்களுடைய சாட்சியம் அவர்களுடைய சத்தியத்தை முந்திக் கொள்ளும். அவர்களுடைய சத்தியம் அவர்களுடைய சாட்சியத்தை முந்திக் கொள்ளும்.
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலியல்லாஹு அன்ஹு)
ஸஹீஹுல் புகாரி – 3651
4) அப்தால்கள் என்றால் இறை நேசர்களில் ஒரு பிரிவினராகும். அவர்கள் மூலமே இவ்வுலகை இறைவன் நிலை நிறுத்தாட்டிக் கொண்டிருக்கிறான். அவர்கள் மொத்தம் 70 நபர்களாகும். 40 பேர் சிரியாவிலும், மீதி 30 பேர் ஏனைய பகுதிகளிலும் இருப்பார்கள்.
மிஷ்காத் 10 – 176
நண்பர் azeezullah அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
உங்களது நல்லெண்ணத்துக்கு எனது பாராட்டுக்கள் (மாஷா அல்லாஹ்) வேலைப்பளுவிலும் கூட தங்களது பதிவை தொடர்ந்துள்ளீர்கள் நன்றி…..நீங்கள் சொல்வது வரவேற்கத்தக்கது….
இருந்தாலும் ஒரு சில கேள்விகள்…..
1)சியாரத் செய்வதை ஏற்கும் நீங்கள் அதை ஏன் செய்வதில்லை?
2)(சியாரத் செய்வதை கண்மணி நாயகமே செய்ய சொல்லியிருக்கும் பொது நீங்கள் அதை ஷிர்கென்ரு சொல்லும் காரணமென்ன?
3)(சியாரத் செய்வதை ஏற்றுக்கொள்ளும் நீங்கள்) எப்படி சியாரத் செய்யவேண்டும் என்பதை சொல்லுங்கள்? கபுரை வெற்றுக்கண்ணால் மட்டும் பார்த்து விட்டு வந்தால் சியாரத் செய்தல் என்று அர்த்தமா??
4) ஒரு கபுரின் அருகில் சென்று இன்ஜீலையோ, தவ்ராதயோ? ஓதவில்லையே?? புனித குரானைதானே ஓதுகின்றோம். இதை தடுப்பதன் நோக்கம் என்ன?
5) உங்களின் கருத்துப்படி மரணித்தவர்கள் மண்ணோடு மண்ணாகி விட்டார்கள். அப்படியாயின் மிஹ்ராஜுடைய இரவில் நபிமார்களை கண்டார்களே….அவர்கள் யார்??? அவர்கள் பற்றி உங்கள் கருத்தென்ன?
7)நீங்கள் தான் ஷிர்கை ஒழிக்க வந்தவர்கள் என்று சொல்கின்றீர்களே….அப்படியாயின் 20 வருடத்துக்கு முதல் சியாரத் செயதவர்கள், தரவீஹ் 20 ரகத் தொழுதவர்கள், இறை நேசர்களை நேசித்தவர்கள், மத்கபுகள் பின்பற்றியவர்கள், கூட்டு துஆ கேட்டவர்கள், பீ.ஜே. தர்ஜுமா பார்க்காதவர்கள் பாவிகளா???? அல்லது நவீன, சத்திய மார்க்கம் பீ.ஜே. அவர்களால் தட்போதுதனே கண்டு பிடிக்கப்பட்டது என்று அவர்களுக்கு ஏதும் பொது மன்னிப்பு உண்டா?
8) கபுறை முத்தமிட்டாள் கபுறு வணங்கி என்றால்? குழந்தையை முத்தமிட்டாள் குழந்தை வணங்கியா? அப்படி பார்த்தால் எத்தனை வணங்கிகள் இருப்பார்கள் இந்த உலகத்தில் இது பற்றி உங்கள் கருத்தென்ன?
9) தர்ஹாகளில் ஒரு சில விடயம் தடுக்கவேண்டியவை இவை யாவும் அறிந்தவை அதில் மாற்று கருத்தில்லை. இஸ்லாத்தின் பார்வையில் உணவளித்தல் என்பது வரவேற்கதக்க 1 விடயம். ஆகவே ஒரு இறைநேசரின் நினைவாக குரான் ஓதி தபர்ரூக் கொடுப்பது ஆகுமானதே தவிர நீங்கள் சொல்வது போல் ஷிர்க் கிடையாது…..இதை ஷிர்க் என்று சொல்லும் நீங்கள் ஒரு காபிர் பண்டிகைக்காக சமைத்த உணவை கடவுளுக்கு பூஜை செய்யாதவரை ஆகும் என்று சாபிடுகிண்றீர்களே ….இப்போ எங்கே போனது உங்க தௌஹீத்??? குரான் ஓதி குடுக்கும் உணவு ஷிர்க் என்றால்??? இந்து கடவுளுக்கு என்ற எண்ணத்துடன் தயாரித்த உணவு ஆகுமென்று எங்கே கண்டுபிடித்தீர்கள்???
10) (உன்னையே வணங்குகின்றோம் உன்னிடத்திலே உதவியும் தேடுகின்றோம்) என்று இறைவனிடத்தில் வாக்களித்து விட்டு நாம் பிறர் உதவியின்றி வாழவில்லையே இதுபற்றி விளக்குங்கள்??
azzalamu alaikum varah………
zahran
siyarath enral enne?
siyarath saivathu eppadi enru thelivu patuthavum.
allah ungaluku uthavuvanaha
Azeezullah, Jeddah, KSA. March 30, 2013 at 6:50 pm
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹ், அதாவது எப்படி சொன்னாலும் நான் இப்படித்தான் என்பதை நீங்கள் மிக சிறப்பாக தெளிவு படுத்தி கொண்டு இர்ருகின்றீர்கள்.
அகவே நான் எல்லாம் வல்ல அல்லாஹ் கூறியது போலே சொல்ல விரும்புஹின்றேன்:
“ إِنَّ اللَّهَ لا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّى يُغَيِّرُوا مَا بِأَنفُسِهِمْ
எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை
யாருங்க ஜஹ்ரான் அண்ணா கப்ரு ஜியாரத் செய்யக்கூடாது என்று சொன்னது? நான் உங்களுக்கு அழகாக விளக்கி இருக்கிறேன், எங்களுக்கும் உங்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன என்பதை நாகூரும் ஏற்வாடியும் அழகாக தினமும் காட்டிக்கொண்டு இருக்கிறது. இதிலயும் முதல் அமைச்சர் அம்மா அவர்கள் ( சென்ற வியாழகிழமை ) மூன்று லட்சம் மதிப்புள்ள சந்தனைக்கட்டை நாகூருக்கு கொடுக்க இருக்கின்றார்கள், இந்த காசை ஏழை மக்களுக்கு கொடுத்தால் நல்ல பிரயோஜனமாக இருக்கும்.
ஜியாரத் என்றால், முஹம்மத் ரசூலுல்லாஹ் (ஸல்) நீங்கள் செய்யும் ஜியாரத்தும், விழா, குருசா செய்ய சொன்னார்கள் ? என்ன என்ன ஆட்டம் நடக்குதுப்பா? எப்படி மனதார அதையெல்லாம் ஒத்துகொள்ளுகின்றீர்கள் ! ! !
உங்களது இரண்டாவது கேள்வியே ஒரு ஆச்சரியமானதுவே ஏனெனில் முஹம்மது ரசுல்லுல்லாஹ் அவர்கள் முதலில் தடுத்தார்கள் பிறகு அனுமதி கொடுத்தார்கள் காரணம் மொத்தத்தில் மறுத்து விடக்கூடாது என்பதற்காக, மௌதுவின் நினைவு வரனும் என்பதற்காக ஆனால் என்ன என்ன நடக்குது உங்களக்கு ஏன் அதெல்லாம் புரிய மாட்டிங்குது? நீங்கள் சஹாபாக்கள் வாழ்க்கை வரலாறு அனைத்தையும் படித்து பாருங்கள, உன்மையீலெ நாகூரையும் ஏர்வாடியையும் மறந்து விட்டு சஹாபாக்களுக்கு கப்ரு கட்டி கொண்டாட ஆரன்பிது விடுவீர்கள். என்னா ஜஹ்ரான் அண்ணே ? நான்கு கலிபாக்களை விடவா அவ்லியா ?
மற்றும் முபஷரூன் ஜன்னா என்ற பத்து சொர்கதுக்காக நிச்சியக்கபட்டவர்கள் அவர்களை விடவா ஜியாரத் கொண்டாட்டம் குருசு ? ? ? எல்லாமே மாயம் மற்றும் பிசினஸ் தெரிந்து கொள்ளுங்கள்.
எதற்காக ஜியாரத்தை போட்டு இப்படி அலட்டிகொல்லுஹின்றீர்கள், நீங்கள் எந்த முஸ்லீமான ஒரு கபுரை பார்த்தாலும் இப்படித்தான் துஆ செய்யணும் என்று சொன்னது உங்களுக்கு தெரியாதா ?
السَّلامُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤْمِنِينَ ، وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لاحِقُونَ …..
யாசீனும் குரானும் ஓதினால் அது மையத்துக்கு அந்த நன்மை அடைந்துவிடும் என்று வைத்துகொண்டால் நாம் எல்லாருமே மௌதாவதர்க்கு முன்னால் தவறு செய்துகிட்டேய் இருக்கலாமே, அப்படியா ? இந்த யாசீன் ஓதுதல் என்பது முழுக்க முழுக்க ஒரிஜினல் ஹதீஸ் இல்லை என்பது நீங்கள் மிக தீவரம ஆராய்ந்தால், அது ஹதீஸ் லயீப் என்பதை புரிந்து கொள்ளுவீர்கள்,
நபிமார்களை மிக்ராஜீலே கண்டார்கள், இதெல்லாம் நீங்க செல்கின்ற கப்ருஜியாரத்க்கும் & மிக்ராஜுக்கும் என்ன இருக்கு ? அதனோட தெய்வீக தன்மையே தனி, மொத்தத்தில் பார்த்தால் “தொழுகைக்கும்”, முஹம்மத் ரசூலுல்லாஹ் அவர்களின் “அந்தஸ்தை” அல்லாஹ் உயர்த்தி காட்டிய சம்பவம் அது. நமக்கு சுவர்க்கம் நரகம் பற்றியும் மற்றும் அல்லாஹவுடைய மொத்த கம்பீரதன்மையும் அங்குள்ள அணைத்து ஆட்ற்றல்களை நமக்கு காட்டுவதற்கு தான் மிராஜ்.
பீ ஜே : உங்களுக்கு உடனடியாய்க சொல்லணும் என்றால், பீ ஜே என்ற ஆலிம் என்பவரினால் தான், இன்றைக்கு இத்தனை ஆலிம்களும் மதரசாககளும் உருவாக காரணமாக இருகின்றவர். அவரினால் அதிகம் நல்லவிஷங்கள் நடந்தும் இருகின்றதை யாரும் மறக்க முடியாது. குழப்பங்கள் வரனும் அப்பதான் நாம் தெளிவு பெறுவோம் சரியா.? பீ ஜே என்பவர் ஒரு தனி நபர் அவர் சொன்ன கருத்துக்கள் நல்லவை எடுத்து பிடிகாதவகளை விட்டுவிடுங்கள், மற்றும் எது உண்மை பொய் என்பதை ஆதாரங்களோடு படித்து முடிவுக்கு வாருங்கள் அவவளவுதான். திரும்பும் வாழ்க்கையே பீ ஜே வுக்கு முரண்பாடா நாம் எடுத்து கொள்வது நமக்கு நல்லது இல்லே.
குழந்தை முத்தம் ? கப்ரு முத்தம் ? இது என்ன கேள்வி ? அதாவது ஒருதடவை மஆத இப்னு ஜபல் ரலியல்லாஹ் அவர்கள் வெளியுர்க்கு சென்று விட்டு மதீனாக்கு வந்து முஹம்மது ரசூலுல்லாஹ் அவர்களளின் காலில் விழுந்து சஜ்தா செய்து என்னை ஆசிர்வதியுங்கள் என்றார், உடனே நபிகள் பெருமானார் என்ன இதெல்லாம் என்று கேட்டார்கள் அதற்கு முஆத சொன்னார்கள் யூத தலைவர்களை இப்படித்தன் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெருஹின்றார்கள் என சொன்னார்கள், ஆனால் முஹம்மது ரசூலுல்லாஹ் முழுக்க தவறு அவர்கள் பொய்யானவர்கள் மற்றும் என்னிடம் அப்படி செய்ய வேண்டாம் என சொன்னார்கள். முஹம்மது ரசூலுல்லாஹ் எப்படி முசஆபா செய்றது மற்றும் எதற்கு எப்படி மரியாதை எல்லாம் செய்றது என்பதை அழகாக கூறி உள்ளார்கள்.
ஒன்பதாவது கேள்வியல் நீங்கள் ஒரு பெரிய தவருகுரியாவர் இல்லை தர்காவை மற்றும் அங்கு நடக்கும் சில காரியங்களை தடுக்கனும் என்று அழகாக எங்களை போன்று ஒத்துகொண்டதுக்கு மிக்க மகிழ்ச்சி அல்லாஹ் உங்களக்கு இன்னமும் அதிலே அதிஹமாக கவனத்தை செலுத்தி பிறகு நன்றாக துமையான இஸ்லாத்தை புரியகூடிய பாக்கியத்தை தந்தருல்வாயாக… . குரான் ஓதினால் ஒவ்வரு வார்த்தைக்கும் பத்து நன்மை ஆனால் மற்றவர்களுக்கு ஓதுதல் என்பதிலேதான் கஷ்டமே உள்ளது. ரெம்ப சிம்பிள், சஹாபாக்கள் தப்ருக் கொடுத்த வாழ்க்கை நடத்தினார்கள் ? பின்னாடி உள்ள வாழ்க்கை வரலாறுகளை புரட்டிபாருங்கள், ஏன் இப்ப சொல்லிகொடுக்கும் திய ஆலிம்களை பார்த்து தப்ருக் போன்றவற்றிக்கு முக்கியத்தும் தருஹின்றீர்கள் ?
“பிறர் உதவி” வணக்க வழிபாடுகளை பற்றி பேசுகின்றோம் சரியா? அல்லாஹ் ரசூலை பின்பற்றி வாழ்வதில் தான் உண்மையான வணக்க வழிபாடுகள் மற்றவை அனைத்துமே கேடுகள் தான். உதவி என்று கப்ரிலே அதுதான் கதியே என்று கிடக்கின்றவர்களும் மற்றும் சிலரும் எந்தவித மருதுவம் எடுக்காமலே இறக்கும் நிகழ்வுகள் அனைத்தும் மிகவும் வேதனைகுரியது.
முஹம்மத் ரசூலுல்லாஹ் தனது வாழ்க்கை முடியும் நேரத்தில் எப்படி சொன்னார்கள் படியுங்கள் : “ இறைவா எனது கப்ரை ஒரு வணக்கஸ்தலமாக ஆகிவிடாதே, நபிமார்களின் கப்ருகளை வணக்கஸ்தலமாக ஆக்கி கொண்டவர்களின்மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் “
اللهم لا تجعل قبري وثنا ، لعن الله قوما اتخذوا قبور أنبيائهم مساجد
தொழுகைக்காக முக்கியதும் தாருங்கள் அனிவரையும் தொழுக சொல்லுங்கள், அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள், ஜாஹிளியதான கப்ரு ஜியாரதுகளை மறுக்க வாருங்கள்.
முஸ்லீம்கள் என்றாலே ஆலீம்களாகத்தான் இருப்பார்கள் என்பதில்லை.., 90 க்கும் மேற்பட்ட சதவிகித மக்களாகிய இஸ்லாமியர்கள் பாமரர்களே (மார்க்க விஷயத்தில்) ! இஸ்லாமிய சட்ட நுணுக்கங்களையும், அனைத்து ஹதீஸ்களையும் முற்றிலும் அறிந்தவர்கள் அல்ல..
இப்படியிருக்க, எனது நண்பர்களாகிய அஜீஸுல்லா அவர்களும் ஜஹ்ரான் அவர்களும் நடத்திய அழகிய விவாதத்தை படிக்கக்கூடிய வாய்ப்பை பெற்றேன்..அழகிய விவாதம் என்பதைவிட கருத்து பரிமாற்றம் அருமையாக இருந்தது,
ஏனெனில் விவாதம் என்ற பெயரில் பலரும் கண்ணியமின்றி விவாதிக்கும் சூழ்நிலையில் கண்ணியத்துடன் கருத்துக்களை பரிமாற்றிக் கொண்டீர்கள், கற்றுத் தேர்ந்த ஆலீம்களோ என்ற சந்தேகம் வருகிறது.. உங்கள் இருவரின் கருத்துப் பரிமாற்றத்திலும் ஒரு சாதாரண அறிவுள்ள இஸ்லாமியன் என்ன விளங்கிக்கொள்வான் ..? அவர்களை போல் நான் என்ன விளங்கிக் கொண்டேன் என்பதை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள விரும்புகின்றேன்.. அதுவும் நீங்கள் விரும்பினால்..!
ASSALAMU ALAIKUM,
ALLAH UNGALUKKUM UNGALATHU KUDUMBATHAR ANAIWARUKKUM IWULAKILUM MARULAKILUM NALLA PAKIYATHAI THANDARULWANAHA.
NEEENGAL UNGALATHU KARUTHUKKALAI THARALAMAHA SOLLUNGAL, MOHAMMED RASULLULLAH SONNARHAL (” BALLIGU ANNI WALEW AAYAH”) ATHAWATHU ; ENNAI PATTRIYA CINNA ORU VISHAYAMAHA IRUNTHALUM SOLLUNGAL.
ZAJAKALLAHU KHAIR, WASSALAM,
AZEEZULLHA.JED. KSA.
Enkalutaye mootu mantaiku evalo sonnalum earadu naa KABRUHALATHAN VANANGUWAN antha valikette seiyalathan seiwantu pitiwathama nikkiragale allah awagaluku nerwaly kaatte wentum maarkatha solradu namme katamai
இஸ்லாத்தை அதன் concept ஐ சரியாக விளங்காதவர்கள் தான் ஜியாரத் வசீலாவை சிர்க் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். மரணித்தவர்களிடம் உதவி தேடுவது சிர்க் என்றால் உயிரோடு இருப்பவர்களிடம் உதவி தேடலாமா? அதையும் அல்லாஹ்விடமே கேட்டு விடுவது தானே. நாம் நாடி நரம்பை விட சமீபமாக இருக்கிறோம் என்னிடமே உதவி தேடுங்கள் என்ற ஆயத்தையும் செருப்பு வார் அறுந்தாலும் இறைவனிடமே கேட்கவேண்டும் என்ற ஹதீதையும் வைத்துக்கொண்டு மரணித்தவர்களிடம் உதவி தேடக்கூடாது என்று சொல்பவன் உயிரோடு இருப்பவனிடமும் உதவி தேடாமல் இருக்கவேண்டும்.
இறைநம்பிக்கை கொண்டு அல்லாஹ்வுக்கு முழுமையாக கட்டுப்பட்டு வாழ்கிறானே அவனும் காலமெல்லாம் தன் மனோஇச்சைப்படி வாழ்கிறானே அப்படிப்பட்டவனும் ஒன்றா? அவர்களின் வாழ்வையும் மரணத்தையும் சமமாக்குவோம் என்று குர்ஆன் சொல்லவில்லையா? அப்படி என்றால் ஒரு ஒலியுல்லாஹ் உயிரோடு தான் இருக்கிறார் என்று குர்ஆன் சொல்லிக்காட்டுகிறது. உயிரோடு இருப்பவர்களிடம் உங்கள் கருத்துப்படி உதவி தேடலாம் தானே.
சத்தியத்தின் மீது ஒரு கூட்டம் கியாமத் நாள் வரை தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும் என்பது நபி மொழி. அப்படி என்றால் இடையில் தோன்றிய PJ சொல்வது மார்க்கத்துக்கு முரணானது தானே.ஏனென்றால் அவர் நம் முன்னோர்களான நாதாக்கள் நன்மக்கள் சொன்னதற்கு மாற்றமாக அல்லவா சொல்லிக்கொண்டு இருக்கிறார். தவ்ஹீத் ஜமாஅத் என்ற இயக்கத்தை ஆரம்பித்ததே ஒரு கெட்ட பித் அத் தான். இவர் எங்களை பித் அத் வாதிகள் என்று சொல்வது வேடிக்கை.
சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையை தவிர மற்ற கொள்கையை பின்பற்றியவர்களில் யாராவது வலியுல்லாஹ் தோன்றி இருக்கிறார்களா என்பதே என் கேள்வி? நமது ரசூலுல்லாஹ்வின் பரிசுத்த குடும்பத்தினரான அஹ்லுல் பைத்துகள் எந்த கொள்கையில் இருக்கிறார்கள் என்று பாருங்கள். காபிர்களும் நல்லோர்களான நம் முன்னோர்களும் ஒன்றா? நம் முன்னோர்கள் மறைந்தும் ஹயாத்தோடு இருக்கிறார்கள் நமக்காக துஆ செய்து கொண்டு இருக்கிறார்கள். நம் நலவுகளுக்காக அல்லாஹ்விடம் துஆ செய்த வண்ணம் இருக்கிறார்கள். நம்மை கண்காணிக்கிறார்கள் என்பதே உண்மை.
Assalamu Alaikum Brother Ibrahim
First read this full
Read Aboo Backar statemet insha allah you got clear way…….
மரணத் தருவாயில்…
இறுதி நேரம் நெருங்கவே ஆயிஷா (ரழி) நபி (ஸல்) அவர்களைத் தனது நெஞ்சோடு அணைத்துக் கொண்டார்கள். இதைப் பற்றி ஆயிஷா (ரழி) கூறுவதாவது:
“நபி (ஸல்) என் அறையில் எனக்குரிய தினத்தில் எனது கழுத்துக்கும் நெஞ்சுக்குமிடையில் மரணமானார்கள். அவர்களது மரண நேரத்தில் எனது எச்சிலையும் அவர்களது எச்சிலையும் ஒன்று சேர்த்தேன். எனது சகோதரர் அப்துர் ரஹ்மான் அறைக்குள் வந்தார். அவரது கரத்தில் மிஸ்வாக் இருந்தது. நபி (ஸல்) அவர்களை எனது மடியில் கிடத்தியிருந்தேன். அப்துர் ரஹ்மான் கரத்திலுள்ள மிஸ்வாக்கை நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். அவர்கள் மிஸ்வாக் செய்ய விரும்புகிறார்கள் என புரிந்து கொண்டேன். “நான் உங்களுக்கு அதனை வாங்கித் தரவா?” என்று கேட்டபோது, “ஆம்!” என தலை அசைத்தார்கள். அதனை வாங்கிக் கொடுத்தேன். அது அவர்களுடைய பற்களுக்கு சிரமமாக இருந்தது. “நான் அதனை மிருதுவாக்கி தரட்டுமா?” என்று கேட்டேன். தலை அசைத்து “ஆம்!” என்றார்கள். நான் அதனை மிருதுவாக்கிக் கொடுத்தேன்.”
இன்னொரு அறிவிப்பில் வருவதாவது: “நபி (ஸல்) மிக அழகிய முறையில் அக்குச்சியால் பல் துலக்கினார்கள். அவர்களுக்கருகில் நீர் நிரம்பிய குவளை இருந்தது. அதில் கைகளை விட்டு முகத்தில் தடவிக் கொண்டார்கள். “லாஇலாஹஇல்லல்லாஹ் இன்னலில் மவ்த்தி சகராத்- வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. மரணத்திற்குப் பல மயக்கங்கள் இருக்கின்றன” என்றார்கள். (ஸஹீஹுல் புகாரி)
பல் துலக்கிய பின்பு தங்களது கையை அல்லது விரலை உயர்த்தினார்கள். அவர்களது பார்வை முகட்டை நோக்கியது. அவர்களது உதடுகள் அசைந்தன. அவர்கள் என்ன கூறுகிறார்கள் என ஆயிஷா (ரழி) செவிதாழ்த்திக் கேட்டார்கள்.
நபி (ஸல்) அப்போது “இறைத்தூதர்கள், வாய்மையாளர்கள், இறைப்போர் தியாகிகள், நல்லோர்கள் ஆகிய நீ அருள் செய்தோருடன்…
அல்லாஹ்வே! என்னை மன்னிப்பாயாக! என்மீது கருணை காட்டுவாயாக! உயர்ந்த நண்பனுடன் என்னைச் சேர்த்து வைப்பாயாக! அல்லாஹ்வே! உயர்ந்த நண்பனை… (ஸஹீஹுல் புகாரி)
கடைசி வார்த்தையை மட்டும் மூன்று முறை நபி (ஸல்) கூறினார்கள். உயர்த்திய அவர்களுடைய கை சாய்ந்தது. உயர்ந்தோனிடம் சென்றார்கள். இன்னாலில்லா வ இன்னா இலை ராஜிஊன்.
ஹிஜ்ரி 11, ரபீஉல் அவ்வல் பிறை 12, திங்கட்கிழமை முற்பகல் முடியும் நேரத்தில் அவர்களுக்கு மரணம் ஏற்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு 63 வயது, 4 நாட்கள் ஆகியிருந்தன.
கவலையில் நபித்தோழர்கள்
நபி (ஸல்) அவர்களின் மரணச் செய்தி எங்கும் பரவியது. மதீனா இருண்டுபோனது. இதைப் பற்றி “நபி (ஸல்) எங்களிடம் வந்த தினத்தை விட மிக அழகிய, ஒளிமிகுந்த நாளை நான் கண்டதில்லை. நபி (ஸல்) மரணித்த தினத்தைவிட இருண்ட, வெறுப்பான நாளை நான் கண்டதில்லை” என அனஸ் (ரழி) கூறுகிறார்கள். (முஸ்னத் தாரமி, மிஷ்காத்)
ஃபாத்திமா (ரழி) “எனது தந்தையே! அழைத்த இறைவனுக்கு பதில் அளித்துவிட்டீரே! எனது தந்தையே! ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் தங்களின் தங்குமிடமாயிற்றே! எனது தந்தையே! உங்களின் மரணச் செய்தியை நாங்கள் ஜிப்ரயீலிடம் கூற வேண்டுமே” எனக் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)
உமரின் நிலை
உமர் (ரழி) எழுந்து நின்று “சில நயவஞ்சகர்கள் நபி (ஸல்) இறந்துவிட்டார்கள் என்று நினைக்கின்றனர். நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் மரணிக்கவில்லை மூஸா இப்னு இம்ரான் (அலை) அல்லாஹ்வைச் சந்திக்கச் சென்று நாற்பது நாட்கள் தனது சமூகத்தாரை விட்டு மறைந்து இருந்த போது மக்கள் மூஸா மரணித்து விட்டார் என எண்ணினார்கள். ஆனால், மூஸா (அலை) திரும்பி வந்தார்கள். அவ்வாறே நபியவர்களும் தன் இறைவனைச் சந்திக்கச் சென்றுள்ளார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபி (ஸல்) நிச்சயம் திரும்ப வருவார்கள். தான் மரணித்து விட்டதாகக் கூறியவர்களின் கைகளையும் கால்களையும் வெட்டுவார்கள்?” எனக் கூறினார்கள். (இப்னு ஹிஷாம்)
அபூபக்ரின் நிலை
அபூபக்ர் (ரழி) இந்நேரத்தில் மஸ்ஜிது நபவியிலிருந்து சற்று தொலைவிலுள்ள ‘சுன்ஹ்’ என்ற இடத்திலுள்ள வீட்டில் தங்கியிருந்தார்கள். இந்தத் துக்கமானச் செய்தியைக் கேட்டவுடன் தனது குதிரையில் ஏறி மஸ்ஜிது நபவிக்கு வந்து, யாரிடமும் பேசாமல் நபி (ஸல்) அவர்களைக் காண்பதற்காக ஆயிஷாவின் அறை நோக்கி நடந்தார்கள். நபி (ஸல்) ஹிபரா நாட்டு ஆடையால் போர்த்தப்பட்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் முகத்திலிருந்து போர்வையை அகற்றி முகத்தைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டு அழலானார்கள். “என் தாயும் தந்தையும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். அல்லாஹ் தங்களுக்கு இரண்டு மரணத்தைத் தரமாட்டான். அல்லாஹ் உங்களுக்கு விதித்த முதல் மரணத்தையே நீங்கள் அடைந்து கொண்டீர்கள்” என்றும் கூறினார்கள்.
பின்பு அறையிலிருந்து வெளியேறி அபூபக்ர் (ரழி) மஸ்ஜிது நபவிக்கு வந்தார்கள். அங்கு உமர் (ரழி) மக்களிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரழி) “உமரே! அமருங்கள்” என்றுரைத்தும் உமர் (ரழி) அமர மறுத்து விட்டார்கள். அபூபக்ர் (ரழி) மிம்பரில் ஏறி சப்தமிட்டு தஷஹ்ஹுத் முழங்கினார். மக்கள் உமர் (ரழி) அவர்களை விட்டு நீங்கி அபூபக்ர் (ரழி) அவர்களை நோக்கி விரைந்தனர். அப்போது அபூபக்ர் (ரழி) “உங்களில் யார் முஹம்மதை வணங்கிக் கொண்டிருந்தாரோ! நிச்சயம் முஹம்மது மரணித்தார் என்பதைத் தெரிந்து கொள்ளட்டும்! உங்களில் யார் அல்லாஹ்வை வணங்கினாரோ! நிச்சயமாக அல்லாஹ் என்றென்றும் உயிருடன் இருப்பவன் மரணிக்க மாட்டான். அல்லாஹ் கூறுகிறான்:
முஹம்மது (நபி) ஒரு தூதரேயன்றி (இறக்காமல் இருக்கக் கூடிய இறைவன்) அல்ல. அவருக்கு முன்னரும் (இவ்வாறே) பல தூதர்கள் சென்றிருக்கின்றனர். அவர் இறந்துவிட்டால் அல்லது வெட்டப்பட்டு விட்டால் நீங்கள் புறங்காட்டிச் சென்று விடுவீர்களோ? (அவ்வாறு) எவரேனும் புறங்காட்டிச் சென்று விட்டால் அதனால் அவன் அல்லாஹ்வுக்கு ஒன்றும் நஷ்டம் உண்டாக்கி விடமாட்டான். நன்றி அறிபவர்களுக்கு அல்லாஹ் அதிசீக்கிரத்தில் (நற்)கூலியைத் தருவான். (அல்குர்ஆன் 3:144)
என்று உரையாற்றினார்கள்.
இப்னு அப்பாஸ் (ரழி) கூறுகிறார்கள்: “அபூபக்ர் (ரழி) இந்த வசனத்தை ஓதிக் காட்டும் வரை அல்லாஹ் இதனை இறக்கி வைத்ததை மக்கள் அறியாதது போல் இருந்தனர். அபூபக்ரிடமிருந்து அதை செவியேற்ற மக்கள் அதனையே திரும்பத் திரும்ப ஓதினர்.”
இப்னுல் முஸய்ம்ப் (ரழி) கூறுகிறார்: “அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூபக்ர் (ரழி) அந்த வசனத்தை ஓதியவுடன் அவர்கள் கூறுவதுதான் உண்மை என நான் அறிந்து கொண்டேன். என்னுடைய கால்கள் சோர்ந்து என்னால் நிற்க இயலவில்லை. அப்படியே பூமியில் சாய்ந்து விட்டேன். நபி (ஸல்) இறந்து விட்டார்கள் என்பதையும் அறிந்து கொண்டேன்.” (ஸஹீஹுல் புகாரி)
/// ஒரு முறை கண்மணி நாயகம் அவர்கள் பத்ரு யுத்தம் முடிந்த பிறகு சொன்னார்கள் சிறிய யுத்தம் முடித்துவிட்டு பெரிய யுத்தம் செய்வதற்காக உள்ளோம் என்றார்கள். இதை கேட்ட சஹாபாக்கள் நாயகமே இது சிறிய யுத்தம் என்றால் பெரிய யுத்தம் எது? என்று கேட்டார்கள் அதற்கு நாயகம் சொன்னார்கள் ஒருவன் தன்னுடைய நப்சுடன் போராடுவதுதான் பெரிய யுத்தம்…..என்றார்கள் இந்த ஹதீதை மறந்துவிட்டீர்களா?? மறைத்து விட்டீர்களா?? ///
ஆண்மீகத்தில் அளவு கடந்து வழி தவறிச் சென்ற ஸூபியாக்களால் நபியவர்களின் பெயரால் பரப்பப் பட்ட , இஸ்லாத்தைப் பாதுகாப்பதற்காக செய்யப்படும் மிக உன்னத செயலான ஜிஹாதை கொச்சைப் படுத்தும் விதத்தில் நபிகளாரின் பெயரில் கூறப்பட்டு வரும் மற்றொரு செய்தியை நோக்குவோம்.
செய்தி இதுதான்:
ஜாபிர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: “நபி (ஸல்) அவர்களிடம் (அல்லாஹ்வின் பாதையில்) யுத்தம் புரியும் ஒரு கூட்டம் வந்த போது நபியவர்கள் “நல்வரவு.. நீங்கள் சிறிய ஜிஹாதில் இருந்து பெரிய ஜிஹாதுக்கு வந்திருக்கிறீர்கள்” எனக் கூறினார்கள். அதற்கவர்கள் “பெரிய ஜுஹாது எது?” எனக் கேட்டார்கள் அதற்கு நபியவர்கள் “ஒரு அடியான் தனது மனோ இச்சைக்கு எதிராக போராடுவதாகும்” எனக் கூறினார்கள்.”
இச் செய்தி இமாம் பைஹகி அவர்களது “கிதாபுஸ் ஸுஹ்த்” என்ற நூலிலும் இமாம் அபூ பக்கர் அஷ் ஷாபி இ அவர்களது “அல் பவாஇதுல் முந்தகாத்” என்ற நூலிலும் இமாம் கதீப் அல் பக்தாதி அவர்களது “தாரீகு பக்தாத் என்ர நூலிலும் இடம் பெற்றுள்ளது.
இச் செய்தியை பதிவு செய்த இமாம் பைஹகி அவர்களே இதன் அறிவிப்பாளர் வரிசை பலவீனமானது எனக் கூறியுள்ளார்கள்.
இவ்வறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் லைஸ் இப்னு அபூ சுலைம் என்பவரும் யஹ்யா பின் யஃலா என்பவரும் பலவீனமானவர்களாவர்.
லைஸ் இப்னு அபீ ஸுலைம் என்பவர் தொடர்பாக இமாம் அஹ்மத் அவர்கள் “மிகவும் பலவீனமானமானவர், அதிகம் தவறிழைக்கக் கூடியவர்” எனக் கூற, யஹ்யா அல் கத்தான். இப்னு ம ஈன், இப்னு மஹ்தி ஆகிய இமாம்கள் (இவரது ஹதீஸ்களை எடுக்காமல்) இவரை கைவிட்டுள்ளனர் என இமாம் இப்னு ஹிப்பான் அவர்கள் உறுதி செய்கிறார்கள்.
எனவே ஸூபிய்யாக்கலால் பரப்பப் படும் இந்த செய்தியும் பலவீனமாக உள்ளதால் கண்டிப்பாக இதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
///கண்மணி நாயகம் அவர்கள் புனித மிஹ்ராஜ் செல்லும் பொது ஹழ்ரத் மூஸா அலை அவர்கள் அவர்களுடைய கபுரிலே தொழுது கொண்டு நிற்பதை கண்டார்களே…………வஹ்ஹாபிகளே இதை மறந்தீர்களா??? மறைத்தீர்களா??? ///
உண்மையில் நபிகளாருக்கும் ஏனைய நபிமார்களுக்கும் மிஃராஜில் நடந்த நிகழ்வுகள் இந்த உலகிற்கு வெளியே, அல்லாஹ் அவர்களை வைக்க நாடிய இடத்திலே நடந்தது. மேலும் மிஃராஜ் பயணமே ஒரு அற்புதம் எனும் போது அதில் அற்புதத்தையே அல்லாஹ் காட்டுவான். அல்லாஹ் நபிகளாருக்கு காட்டியவற்றையெல்லாம் மரணித்த நல்லடியார்கள் செய்வார்கள் என்றிருந்தால் அல்லாஹ்வின் ஆற்றலுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் இருக்கமுடியும்? மூஸா நபி வானத்தின் மேலிருந்து உதவி செய்தது போன்று நல்லடியார்கள் உலகில் உதவுவார்கள் என்று நபிகளார் கூறாத போது எப்படி நாமாக ஒன்றை சொல்லமுடியும்? மாறாக மரணித்தவர்கள் உலகிற்கு வரமுடியாது என்றுதானே கூறினார்கள்.
அங்கு நபிகளாருக்கு உதவி செய்த மூஸா நபியால் உஹதுக்கு வந்து உதவ முடியவில்லை?
அதை விடவும் நபிகளாரின் நேசத்திற்குறிய பேரப் பிள்ளை ஹுஸைன் (றழி) அவர்கள் அநியாயமாக கொலை செய்யப்படும் போது ஏன் நபிகளார் உதவிசெய்ய வரவில்லை? இப்படி ஏராலமான உதாரணங்களை கூற முடியும். அப்படி ஒன்றுக்கு வந்திருந்தாலும் அந்த வாதம் சரியாகலாம்.
மேலும் நபிகளார் சுவனவாசிகளையும் நரகவாசிகளையும் பார்த்தார்களே, அப்படியென்றால் இந்த உலகில் வாழ்ந்துகொண்டிருந்தவர்களும் சேர்த்துத் தானே காட்டப்படர்கள் என்றால் உலகில் அந்த நேரத்தில் வாழ்ந்தவர்கள உலகில் இருந்தார்களா? அல்லது சுவனத்தில் அல்லது நரகத்தில் இருந்தார்கள? இதற்கான பதிலை யோசித்தாலே விளங்கும் நபிகளாருக்கு அன்றைய இரவு வானத்தின் மேல் அனைத்தும் எடுத்துக் காட்டப்பட்டது. என்பது.
மேலும் நபிகளார் மஸ்ஜிதுல் அக்ஸாவில் நபிமார்களுக்கு தொழுகை நடத்தினார்கள். அதிலே மூஸா நபி, ஈஸா நபி உற்பட அனைத்து நபிமார்களும் கலந்துகொண்டனர். அதே நபிமார்கள் வானிலும் இருந்தார்கள் என்றால் நபிமார்கள் பல உறுவங்களில் இருக்கின்றார்கள் என்று கூறுவோமா? அல்லது இந்த அற்புத நிகழ்வை அல்லாஹ் நபிகளாருக்கு காட்டுவதற்காக எடுத்துக் காட்டினானா? எனவே இவை அனைத்தும் சேர்ந்தே அற்புதமாக இருக்கின்றது என்றால், சாதாரணமாக எல்லா நல்லடியார்களும் இந்த அடிப்படையில் நடப்பார்கள் என்றால் மிஃராஜ் என்பது அற்புத பயணம் என்பதில் என்ன சிறப்பு இருக்கப்போகின்றது.
மேலும் உயர்த்தப்பட்ட ஈஸா நபியவர்கள் மறுமையின் அடையாளமாக உலகிற்கு இறங்குவார்கள், என்று குர்ஆன் (நிச்சயமாக அவர் (ஈஸா) மறுமை நாளின் அத்தாட்சியாவார் (43:6) கூறும் போது மிஃராஜின் போது இறங்கியது மறுமையின் அடையாளமா? என்றால் இல்லை என்போம். காரணம் அது அல்லாஹ் அற்புதத்திற்காக எடுத்துக் காட்டினான் என்பதே.
இப்னு அப்பாஸ்(றழி) அவர்கள் கூறினார்கள்: (ஒரு நாள்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மிஃராஜ் எனும் விண்ணுலகப் பயணத்தின்போது) எனக்குப் பல சமுதாயத்தார் எடுத்துக் காட்டப்பட்டனர். அப்போது இறைத்தூதர்களில் ஓரிருவருடன் (அவர்களின் சமுதாயத்தாரில் பத்துக்குட்பட்ட) ஒரு சிறு கூட்டமே கடந்து செல்லலாயினர். ஓர் இறைத்தூதர் தம்முடன் ஒருவருமில்லாத நிலையில் கடந்து சென்றார். பின்னர் எனக்கு ஒரு பெரும் கூட்டம் காட்டப்பட்டது. நான், ‘இது எந்தச் சமுதாயம்? இது என் சமுதாயமா?’ என்று கேட்டேன். அப்போது, இது (இறைத் தூதர்) மூஸாவும் அவரின் சமுதாயமும்’ என்று எனக்குச் சொல்லப்பட்டது. அப்போது ‘அடிவானத்தைப் பாருங்கள்’ என்று என்னிடம் கூறப்பட்டது. அங்கு அடி வானத்தையே அடைந்திருந்த ஏராளமான மக்கள் திரளை பார்த்தேன். பிறகு என்னிடம், ‘அடிவானங்களில் இங்கும் இங்கும் பாருங்கள்’ எனச் சொல்லப்பட்டது. அப்போது நான் அடிவானங்களை அடைத்திருந்த ஏராளமான மக்கள் திரளைக் கண்டேன். ‘இது உங்கள் சமுதாயம். விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் எழுபதாயிரம் பேரும் இவர்களில் அடங்குவர்’ என்று எனக்குச் சொல்லப்பட்டது.( விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் அந்த எழுபதாயிரம் பேர் யார் என்பதை) தோழர்களுக்கு விளக்காமலேயே நபி(ஸல்) அவர்கள் (தம் வீட்டுக்குள்) நுழைந்துவிட்டார்கள்.
(அது தொடர்பாக) மக்கள் விவாதிக்கத் தொடங்கினார்கள். ‘நாம் தாம் அவர்கள். (ஏனெனில்,) நாமே அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றினோம்; அல்லது நம் பிள்ளைகள் தாம் அவர்கள். (ஏனெனில்) அவர்கள் இஸ்லாத்தில் பிறந்தவர்கள். நாமோ அறியாமைக் காலத்தில் பிறந்தோம்’ என்று கூறினார்கள். இச்செய்தி நபி(ஸல்) அவர்களுக்கு எட்டியது. எனவே, அவர்கள் புறப்பட்டு வந்து, ‘(விசாரணையின்றி சொர்க்கம் செல்லவுள்ள) அவர்கள் யாரெனில், அவர்கள் ஓதிப்பார்க்கமாட்டார்கள்; பறவைகளை வைத்து சகுனம் பார்க்க மாட்டார்கள்; (நோய்க்காக) சூடிட்டுக் கொள்ளமாட்டார்கள். தம் இறைவனையே சார்ந்திருப்பார்கள்’ என்று கூறினார்கள். அப்போது உக்காஷா இப்னு மிஹ்ஸன்(றழி) எழுந்து, ‘அவர்களில் நானும் ஒருவனா? இறைத்தூதர் அவர்களே!’ என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், ‘ஆம்’ என்று பதிலளித்தார்கள். மற்றொருவர் எழுந்து நின்று, ‘அவர்களில் நானும் ஒருவனா?’ என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள் ‘இவ்விஷயத்தில் உக்காஷா உம்மை முந்திக்கொண்டுவிட்டார்’ என்று கூறினார்கள். (புஹாரி: 5705, முஸ்லிம்)
எனவே நபிகளாருக்கு மிஃராஜ் பயணத்தின் போது நபி மூஸா (அலை) அவர்கள் உதவியது போன்று இவ்வுலகில் மரணித்த நல்லவர்கள் உதவுவார்கள் என்பதற்கு ஓர் ஆதாரத்தை பார்க்கமுடியுமா? என்றால் முடியாது என்பதே பதிலாகும். தாங்கள் செய்யும் ஷிர்க்கான அம்சங்களை சரி படுத்த நபிகளார் கூறாதவைகளையெல்லாம் கூறுவதுதான் வழிகேடர்களின் பழக்கமாக இருந்துள்ளது.
நல்லவர்கள் மரணித்தபின்னறும் உதவி செய்வார்கள் என்று ஷிர்க் வைத்த அனைத்து சமூகத்தவர்களும் கருதி, அவர்களை நெறுங்கி, ஷிர்க்கும் வைத்தனர். அல்லாஹ் அதனையே கண்டித்தான்.
இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் கூறினார்கள்: வத்து, ஸுவா, யகூஸ், யஊக், ஸபா, நஸ்ர், (மக்கத்து காபிர்களால் வணங்கப்பட்ட சிலைகளின் பெயர்கள்) என்ற அனைத்தும் நூஹ் நபியின் கூட்டத்தில் இருந்த நல்லவர்களின் பெயர்கள். அவர்கள் மரணித்த பின் அவர்களிடம் வந்த ஷைத்தான் அந்த நல்லவர்கள் அமர்ந்திருந்த இடத்தில் ஞாபகார்த்த கட்களை நட்டுமாறும், அவர்களது பெயர்களை சூட்டுமாறும் ஏவினான். அவர்களும் அப்படியே செய்தனர். ஆனால் வணங்கப்படவில்லை. அவர்களும் மரணித்தபின் அதபற்றிய அறிவு மறக்கடிக்கப்பட்டு, அவைகள் (அந்த ஞாபகார்த்த கட்கள்) வணங்கப்பட்டன. (புஹாரி)
இப்படி நல்லவர்களை ஞாபகப்படுத்தப்போய் காலப் போக்கில் அவை இணைவைப்பிலே கொண்டு சேர்ர்த்துவிடுகின்றது.
அல்லாஹ் எம்மை இந்த அநியாயச் செயலிலிருந்து காப்பானாக.
-அல்லாஹ் மிக அறிந்தவன் –
மரணத் தருவாயில்…
இறுதி நேரம் நெருங்கவே ஆயிஷா (ரழி) நபி (ஸல்) அவர்களைத் தனது நெஞ்சோடு அணைத்துக் கொண்டார்கள். இதைப் பற்றி ஆயிஷா (ரழி) கூறுவதாவது:
“நபி (ஸல்) என் அறையில் எனக்குரிய தினத்தில் எனது கழுத்துக்கும் நெஞ்சுக்குமிடையில் மரணமானார்கள். அவர்களது மரண நேரத்தில் எனது எச்சிலையும் அவர்களது எச்சிலையும் ஒன்று சேர்த்தேன். எனது சகோதரர் அப்துர் ரஹ்மான் அறைக்குள் வந்தார். அவரது கரத்தில் மிஸ்வாக் இருந்தது. நபி (ஸல்) அவர்களை எனது மடியில் கிடத்தியிருந்தேன். அப்துர் ரஹ்மான் கரத்திலுள்ள மிஸ்வாக்கை நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். அவர்கள் மிஸ்வாக் செய்ய விரும்புகிறார்கள் என புரிந்து கொண்டேன். “நான் உங்களுக்கு அதனை வாங்கித் தரவா?” என்று கேட்டபோது, “ஆம்!” என தலை அசைத்தார்கள். அதனை வாங்கிக் கொடுத்தேன். அது அவர்களுடைய பற்களுக்கு சிரமமாக இருந்தது. “நான் அதனை மிருதுவாக்கி தரட்டுமா?” என்று கேட்டேன். தலை அசைத்து “ஆம்!” என்றார்கள். நான் அதனை மிருதுவாக்கிக் கொடுத்தேன்.”
இன்னொரு அறிவிப்பில் வருவதாவது: “நபி (ஸல்) மிக அழகிய முறையில் அக்குச்சியால் பல் துலக்கினார்கள். அவர்களுக்கருகில் நீர் நிரம்பிய குவளை இருந்தது. அதில் கைகளை விட்டு முகத்தில் தடவிக் கொண்டார்கள். “லாஇலாஹஇல்லல்லாஹ் இன்னலில் மவ்த்தி சகராத்- வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. மரணத்திற்குப் பல மயக்கங்கள் இருக்கின்றன” என்றார்கள். (ஸஹீஹுல் புகாரி)
பல் துலக்கிய பின்பு தங்களது கையை அல்லது விரலை உயர்த்தினார்கள். அவர்களது பார்வை முகட்டை நோக்கியது. அவர்களது உதடுகள் அசைந்தன. அவர்கள் என்ன கூறுகிறார்கள் என ஆயிஷா (ரழி) செவிதாழ்த்திக் கேட்டார்கள்.
நபி (ஸல்) அப்போது “இறைத்தூதர்கள், வாய்மையாளர்கள், இறைப்போர் தியாகிகள், நல்லோர்கள் ஆகிய நீ அருள் செய்தோருடன்…
அல்லாஹ்வே! என்னை மன்னிப்பாயாக! என்மீது கருணை காட்டுவாயாக! உயர்ந்த நண்பனுடன் என்னைச் சேர்த்து வைப்பாயாக! அல்லாஹ்வே! உயர்ந்த நண்பனை… (ஸஹீஹுல் புகாரி)
கடைசி வார்த்தையை மட்டும் மூன்று முறை நபி (ஸல்) கூறினார்கள். உயர்த்திய அவர்களுடைய கை சாய்ந்தது. உயர்ந்தோனிடம் சென்றார்கள். இன்னாலில்லா வ இன்னா இலை ராஜிஊன்.
ஹிஜ்ரி 11, ரபீஉல் அவ்வல் பிறை 12, திங்கட்கிழமை முற்பகல் முடியும் நேரத்தில் அவர்களுக்கு மரணம் ஏற்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு 63 வயது, 4 நாட்கள் ஆகியிருந்தன.
கவலையில் நபித்தோழர்கள்
நபி (ஸல்) அவர்களின் மரணச் செய்தி எங்கும் பரவியது. மதீனா இருண்டுபோனது. இதைப் பற்றி “நபி (ஸல்) எங்களிடம் வந்த தினத்தை விட மிக அழகிய, ஒளிமிகுந்த நாளை நான் கண்டதில்லை. நபி (ஸல்) மரணித்த தினத்தைவிட இருண்ட, வெறுப்பான நாளை நான் கண்டதில்லை” என அனஸ் (ரழி) கூறுகிறார்கள். (முஸ்னத் தாரமி, மிஷ்காத்)
ஃபாத்திமா (ரழி) “எனது தந்தையே! அழைத்த இறைவனுக்கு பதில் அளித்துவிட்டீரே! எனது தந்தையே! ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் தங்களின் தங்குமிடமாயிற்றே! எனது தந்தையே! உங்களின் மரணச் செய்தியை நாங்கள் ஜிப்ரயீலிடம் கூற வேண்டுமே” எனக் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)
உமரின் நிலை
உமர் (ரழி) எழுந்து நின்று “சில நயவஞ்சகர்கள் நபி (ஸல்) இறந்துவிட்டார்கள் என்று நினைக்கின்றனர். நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் மரணிக்கவில்லை மூஸா இப்னு இம்ரான் (அலை) அல்லாஹ்வைச் சந்திக்கச் சென்று நாற்பது நாட்கள் தனது சமூகத்தாரை விட்டு மறைந்து இருந்த போது மக்கள் மூஸா மரணித்து விட்டார் என எண்ணினார்கள். ஆனால், மூஸா (அலை) திரும்பி வந்தார்கள். அவ்வாறே நபியவர்களும் தன் இறைவனைச் சந்திக்கச் சென்றுள்ளார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபி (ஸல்) நிச்சயம் திரும்ப வருவார்கள். தான் மரணித்து விட்டதாகக் கூறியவர்களின் கைகளையும் கால்களையும் வெட்டுவார்கள்?” எனக் கூறினார்கள். (இப்னு ஹிஷாம்)
அபூபக்ரின் நிலை
அபூபக்ர் (ரழி) இந்நேரத்தில் மஸ்ஜிது நபவியிலிருந்து சற்று தொலைவிலுள்ள ‘சுன்ஹ்’ என்ற இடத்திலுள்ள வீட்டில் தங்கியிருந்தார்கள். இந்தத் துக்கமானச் செய்தியைக் கேட்டவுடன் தனது குதிரையில் ஏறி மஸ்ஜிது நபவிக்கு வந்து, யாரிடமும் பேசாமல் நபி (ஸல்) அவர்களைக் காண்பதற்காக ஆயிஷாவின் அறை நோக்கி நடந்தார்கள். நபி (ஸல்) ஹிபரா நாட்டு ஆடையால் போர்த்தப்பட்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் முகத்திலிருந்து போர்வையை அகற்றி முகத்தைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டு அழலானார்கள். “என் தாயும் தந்தையும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். அல்லாஹ் தங்களுக்கு இரண்டு மரணத்தைத் தரமாட்டான். அல்லாஹ் உங்களுக்கு விதித்த முதல் மரணத்தையே நீங்கள் அடைந்து கொண்டீர்கள்” என்றும் கூறினார்கள்.
பின்பு அறையிலிருந்து வெளியேறி அபூபக்ர் (ரழி) மஸ்ஜிது நபவிக்கு வந்தார்கள். அங்கு உமர் (ரழி) மக்களிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரழி) “உமரே! அமருங்கள்” என்றுரைத்தும் உமர் (ரழி) அமர மறுத்து விட்டார்கள். அபூபக்ர் (ரழி) மிம்பரில் ஏறி சப்தமிட்டு தஷஹ்ஹுத் முழங்கினார். மக்கள் உமர் (ரழி) அவர்களை விட்டு நீங்கி அபூபக்ர் (ரழி) அவர்களை நோக்கி விரைந்தனர். அப்போது அபூபக்ர் (ரழி) “உங்களில் யார் முஹம்மதை வணங்கிக் கொண்டிருந்தாரோ! நிச்சயம் முஹம்மது மரணித்தார் என்பதைத் தெரிந்து கொள்ளட்டும்! உங்களில் யார் அல்லாஹ்வை வணங்கினாரோ! நிச்சயமாக அல்லாஹ் என்றென்றும் உயிருடன் இருப்பவன் மரணிக்க மாட்டான். அல்லாஹ் கூறுகிறான்:
முஹம்மது (நபி) ஒரு தூதரேயன்றி (இறக்காமல் இருக்கக் கூடிய இறைவன்) அல்ல. அவருக்கு முன்னரும் (இவ்வாறே) பல தூதர்கள் சென்றிருக்கின்றனர். அவர் இறந்துவிட்டால் அல்லது வெட்டப்பட்டு விட்டால் நீங்கள் புறங்காட்டிச் சென்று விடுவீர்களோ? (அவ்வாறு) எவரேனும் புறங்காட்டிச் சென்று விட்டால் அதனால் அவன் அல்லாஹ்வுக்கு ஒன்றும் நஷ்டம் உண்டாக்கி விடமாட்டான். நன்றி அறிபவர்களுக்கு அல்லாஹ் அதிசீக்கிரத்தில் (நற்)கூலியைத் தருவான். (அல்குர்ஆன் 3:144)
Comments on this entry are closed.