“தொண்டைக்குழி முதல் மேல்நோக்கிய பார்வை வரை:,… “மரணத்தின் கடைசி 60 வினாடிகள்!” – குர்ஆனும் ஹதீஸும் சொன்ன ICU ரிப்போர்ட்!”

எஸ்.ஹலரத் அலி
(+91 99653 61068.)

பிஸ்மில்லாஹிர்ரஹ்மாநிர்ரஹீம்!

“கல்லா இதா பலகதித் தராகிய”
“அவ்வாறல்ல! உயிர் தொண்டைக்குழியை அடைந்து விட்டால்…”

-அல்குர்ஆன் 75:26.

“இன்னர் ரூஹ இதா பஹ்லவி தபிஅஹுல் பஸர்”
“உயிர் கைப்பற்றப்பட்டால், பார்வை அதை பின்தொடரும்.”

ஸஹீஹ் முஸ்லிம்-920

ஒரு மனிதன் மரணிக்கும் கடைசி 60 வினாடி.

உலகின் எந்த ICU மானிட்டரும் காட்ட முடியாத அறிக்கையை 1400 வருடம் முன்பே குர்ஆனும் ஹதீஸும் துல்லியமாக பதிவு செய்துள்ளன.
தொண்டைக்குழியில் தொடங்கி, மேல்நோக்கிய விழியில் முடியும் அந்த பயணத்தின் அறிவியல் என்ன?

முதல் காட்சி: தொண்டைக்குழியில் உயிர் – 75:26

“பலகதித் தராகிய” – உயிர் தொண்டைக்குழியை அடைதல்

2026 மருத்துவம்: Agonal Breathing – மரண மூச்சு!

மூளைக்கு ஆக்ஸிஜன் நின்றதும் Cerebral Cortex செயலிழக்கும். ஆனால் Brainstem – Pre-Bötzinger Complex கடைசி முயற்சியாக Gasping Reflex ஐ தூண்டும்.

எப்படி இருக்கும்?

  1. வாய் திறந்து காற்றுக்கு தவிப்பது போல – ஆனால் ஆக்ஸிஜன் நுரையீரல் போகாது.
  2. Gargling, Snoring, Moaning சத்தம் – காற்று தொண்டைக்குழி வரை மட்டும் வந்து நிற்கும்.
  3. நெஞ்சு அசையாது, தோள் மட்டும் தூக்கிப்போடும்.

குர்ஆன் சொன்ன “தராகி – தொண்டைக்குழி” சரியாக இதுதான். காற்று நுரையீரலுக்கு போகாமல் தொண்டையில் சிக்கும் Agonal Gasps. 40% Cardiac Arrest ல் இது வரும். பக்கத்தில் இருப்பவர் “மூச்சு விடுறாரு” என்று ஏமாந்து CPR செய்யாமல் விட்டுவிடுவர்.

CPR- (Coronary pulmonary Resuscitation) என்றால் என்ன?

இதா பலகதித் தராகிய, வ கீல மன் ராக்”

உயிர் தொண்டைக்குழியில் Agonal Breathing வரும் போது “மந்திரிப்பவன் யார்?” = “CPR தெரிந்தவன் யார்?” என்று கேட்பது போல.

அப்போது செய்ய வேண்டியது:

“செயற்கை சுவாசம்” மட்டும் இல்லை.
“நெஞ்சை அழுத்து + மூச்சு கொடு” = CPR செய்.

நபி(ஸல்) காலத்தில் CPR இல்லை. ஆனால் “மன் ராக் – குணமாக்குபவன் யார்?” என்று முதலுதவி செய்பவனை தேட சொன்னது இன்றைய CPR க்கு பொருந்தும்.

அதைத்தான்..
“வ கீல மன் ராக்” (75:27) “மந்திரிப்பவன் யார்?” என்று குர்ஆன் கேட்கிறது.

அறிவியல் உண்மை:

Agonal Breathing உண்மையான சுவாசம் இல்லை. ஆக்ஸிஜன் 0%. மரணத்தின் அறிவிப்பு. நபி (ஸல்) காலத்தில் Stethoscope இல்லை. ஆனால் “உயிர் தொண்டைக்குழி” என்று X-Ray துல்லியத்தில் சொன்னது யார்?

இரண்டாம் காட்சி: பார்வை உயிரை பின்தொடர்தல் – ஹதீஸ்.920

நபி(ஸல்): “உயிர் கைப்பற்றப்பட்டால் பார்வை அதை பின்தொடரும். அதனால் கண்ணை மூடுங்கள்.”

2026 நரம்பியல்: Upward Gaze Deviation – மேல்நோக்கிய விழி

மூளை சாகும் போது 4 நரம்பியல் நிகழ்வு நடக்கும்:

1. Oculomotor Nerve Palsy – 3 வது மண்டை நரம்பு செயலிழப்பு!
கண்ணை கீழே, உள்ளே, பக்கவாட்டில் இழுக்கும் நான்கு தசைகள் செயலிழக்கும்.

மிஞ்சுவது: கண்ணை மேலே இழுக்கும் Superior Rectus. அதனால் விழி தானாக மேலே சொருகும்.

2. Bell’s Phenomenon – கடைசி Reflex
நாம் தூங்கும் போது கண்ணை மூடினால் விழி மேலே உருளும். மரணத்தில் இமை திறந்தே இருக்கும், விழி மட்டும் மேலே உருண்டு நின்றுவிடும்.

3. Tonic Eye Deviation – Brain Death Sign
மூளை சாவு உறுதி செய்ய ICU டாக்டர் Doll’s Eye Test செய்வார். தலையை திருப்பினால் சாதாரண மனிதன் கண் எதிர்திசையில் போகும். மூளை செத்தவனுக்கு கண் அசையாமல் மேலே வெறித்து பார்க்கும்.

4. Fixed Dilated Pupils – கண்மணி விரிவு
ஆக்ஸிஜன் இல்லாமல் கண்மணி விரிந்து, ஒளிக்கு சுருங்காமல் மேலே பார்த்தபடி Freeze ஆகும்.

இதுதான் “பார்வை உயிரை பின்தொடரும்” என்ற ஹதீஸ்.

உயிர் = மூளை செயல்பாடு:

*மூளை மேல்நோக்கி
வானம் நோக்கி – செயலிழக்கும் போது கண்ணும் அதே திசையில் நிலைக்கும்!.

மூன்றாம் காட்சி: கெண்டைக்கால் பின்னல் முதல் விழி சொருகல் வரை – முழு ICU

குர்ஆன். 75:26-29 ஒரு மரண அறிக்கை!:

75:26 “பலகதித் தராகிய” – தொண்டைக்குழி Agonal Breathing. காற்று Trachea வரை.
O2 = 0%

மரணத்திற்கு 2-3 நிமிடம் முன்...

ழன்ன அன்னஹுல் ஃபிராக்” – (75:28)

பிரிவு உறுதி Cerebral Hypoxia. நினைவு போகும். Terminal Restlessness 1 நிமிடம் முன்…

வல்தஃப்ஃபதிஸ் ஸாகு”– – — — -குர்ஆன்.75:29

கெண்டைக்கால் பின்னல்** Rigor Mortis + Decerebrate Posture. ATP தீர்ந்து தசை விறைப்பு மரணம் + 2-6 மணி.

ஹதீஸ்:

தபிஅஹுல் பஸர்” – பார்வை பின்தொடரும்* Upward Gaze Deviation. Oculomotor Palsy. Brainstem Death Sign மரண கணம்.

7-ம் நூற்றாண்டு நாடோடி அரபி கூறுவது! (Bedouin:)

“சாகும்போது தொண்டையில் கொர்… கொர் சப்தம், கால் சேர்ந்துடும், கண்கள் மேல பார்க்கும்!”

21-ம் நூற்றாண்டு Neurologist:

“Terminal agonal gasps, followed by decerebrate rigidity, rigor mortis, and tonic upward gaze due to brainstem herniation!”

இரண்டும் ஒரே ரிப்போர்ட் தான்.

முடிவுரை: மரணம் ஒரு அத்தாட்சி!

“ஸனுரீஹிம் ஆயாதினா ஃபீ அன்ஃபுஸிஹிம்”

குர் ஆன்.41:53.
அவர்களுக்குள்ளேயே நம் அத்தாட்சிகளை காட்டுவோம்!.

1. தொண்டைக்குழி – Agonal Breathing: ECG இல்லாமல் மரணம் நெருங்குவதை கண்டுபிடிக்கும் அறிகுறி.

2. கெண்டைக்கால் – Rigor Mortis: EEG இல்லாமல் மரணம் உறுதியானதை கண்டுபிடிக்கும் அறிகுறி.

3. மேல்நோக்கிய விழி – Brain Death: CT Scan இல்லாமல் மூளை சாவை கண்டுபிடிக்கும் அறிகுறி.

1400 வருடம் முன் இந்த மூன்று Medical Sign ஐ வைத்து தான் நபி (ஸல்) சொன்னார்கள்:

1.உயிர் தொண்டை குழியில்என்றால் தல்கீன் சொல்லுங்கள்.
– Agonal Phase

  1. “கால் பின்னினால்” கஃபன் கட்டுங்கள் – Rigor Mortis Confirmed.
  2. “கண் மேலே பார்த்தால்” கண்ணை மூடுங்கள் – Brain Death Confirmed.

கேள்வி:

ECG, EEG, Brainstem Test இல்லாத அந்த காலத்தில் இந்த 3 Point Clinical Protocol யார் கொடுத்தது?

பதில்: “அல்லாஹு யதவஃப்பல் அன்ஃபுஸ ஹீன மவ்திஹா!”

  • குர் ஆன்.39:42

உயிர்களை மரண நேரத்தில் அல்லாஹ்வே கைப்பற்றுகிறான்!.

அதனால் தான் மரணம் பயம் இல்லை. அது “ஃபுஸ்ஸிலத் ஆயாதுஹு” – தெளிவாக்கப்பட்ட அத்தாட்சி.
“குல்லு நஃப்ஸின் தாயிகத்துல் மவ்த்”

  • அல் குர்ஆன்.3:185.

ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைக்கும்.

நாம் சுவைக்கும் முன், அதை படைத்தவன் 1400 வருடம் முன்பே விளக்கிவிட்டான்!.

வ அல்லாஹு அஃலம் – அல்லாஹ்வே மிக அறிந்தவன்.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *