اللهُـمِّ اغْفِـرْ لِحَيِّـنا وَمَيِّتِـنا وَشـاهِدِنا ، وَغائِبِـنا ، وَصَغيـرِنا وَكَبيـرِنا ، وَذَكَـرِنا وَأُنْثـانا . اللهُـمِّ مَنْ أَحْيَيْـتَهُ مِنّا فَأَحْيِـهِ عَلى الإِسْلام ،وَمَنْ تَوَفَّـيْتَهُ مِنّا فَتَوَفَّـهُ عَلى الإِيـمان ، اللهُـمِّ لا تَحْـرِمْنـا أَجْـرَه ، وَلا تُضِـلَّنا بَعْـدَه .
Allahummagh-fir lihayyina wamayyitina washahidina, wagha-ibina, wasagheerina wakabeerina, wathakarina wa-onthana. Allahumma man ahyaytahu minna fa-ahyihi AAalal-islam, waman tawaffaytahu minna fatawaffahu AAalal-eeman, allahumma la tahrimna ajrah, wala tudillana baAAdah.
நபி(ஸல்) அவர்கள் ஜனாஸாவுக்கு தொழுவிக்கும் போது பின்வருமாறு ஓதுபவர்களாக இருந்தனர்.
அல்லாஹும்மக்ஃபிர் லிஹய்யினா வமய்யிதினா வஷாஹிதினா
வகாயிபினா வஸகிரின, வகபீரினா வதகரினா வவுன்ஸானா
அல்லாஹும்ம மன் அஹ்யைதஹஹு மின்னா ஃபஅஹிஹி
அலல் இஸ்லாம் வமன் தவஃப்ஃபைதவு
மின்னா ஃபதவஃபவு அலல் ஈமான் அல்லாஹும்ம
லாதஹரிம்னா அஜ்ரவு வலாதுளில்லினா பஅதஹு
பொருள்:
யா அல்லாஹ்! எங்களில் உயிரோடிருப்பவர்களையும் மரணத்து விட்டவர்களையும் இங்கே வந்திருப்பவர்களையும், வராமலிப்பவர்களையும், எங்களில் சிறுவர்களையும், பெரியவர்களையும் எங்களில் ஆண்களையும், பெண்களையும் மன்னித்துவிடுவாயாக! இறைவா! எங்களில் உயிரோடு இருப்பவர்களை இஸ்லாமிய அடிப்படையில் வாழச் செய்வாயாக! எங்களில் மரணித்துவிடுபவர்களை ஈமானுடனே மரணிக்க செய்வாயாக! இறைவா! இந்த மய்யித்தின் நற்செயல்களுக்குரிய கூலியை எங்களுக்கு தடுத்துவிடாதே! இவருக்கு பிறகு எங்களை வழிதவறச் செய்து விடாதே! அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: அபூதாவூத், திர்மிதி
மேற்கண்ட துவாக்கள் அல்லாமல் வேறுபல துவாக்களை ஜனாஸாத் தொழுகையில் பிரார்த்திக்க நபி(ஸல்) அவர்கள் கற்றுதந்துள்ளார்கள். சுருங்கக்கருதி இங்கே தொகுக்கப்படவில்லை. ஜனாஸாத் தொழுகையில் நான்கு அல்லது ஐந்து தக்பீர்கள் கூறியவாறு ஸலாம் கூற வேண்டும் என்பது ஹதிஸில் தெளிவாகிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று காரியங்களை செய்து கொண்டிருந்தார்கள். மக்கள் அவற்றை விட்டுவிட்டனர் அவற்றில் உள்ளதுதான் தொழுiயில் ஸலாம் கூறுவது போன்று ஜனாஸாத் தொழுகையில் ஸலாம் கூறுவதாகும். அறிவிப்பவர்: இப்னுமஸ்¥த்(ரலி) நூல்கள்: தப்ரானி, பைஹம்.
மன்னர் நஜ்ஜா» அவர்கள் முஸ்லிம்கள் வாழாப் பகுதியில் இறந்துவிட்டதனால் அவருக்காக நபி(ஸல்) அவர்கள் ஜனாஸாத் தொழுகை நடத்தினார்கள். இதே அடிப்படையில் இறந்துவிட்டால் தொழலாம். மாறாக தொழுதவறுக்காக மீண்டும் காயிப் ஜனாஸா தொழ அனுமதியில்லை மேலும் நபி(ஸல்) அவர்கள் இறந்து அடக்கப்பட்ட பணியாளர் கப்ருக்கருகில் தொழுததை ஆதாரம் காட்டுகிறார்கள் ஏனெனில் நபி(ஸல்) அவர்களுக்கு தெரியாமல் ஸஹாபாக்கள் அடக்கிவிட்டதால் நபி(ஸல்) அவர்கள் மீண்டும் தொழுதார்கள் பிறகு
”நான் உங்கள் மத்தியில் இருக்கும் போது உங்களில் யார் இறந்தாலும் எனக்கு தெரிவிக்காமல் இருக்க கூடாது. நிச்சயமாக எனது தொழுகை இறந்தவனுக்கு அருட்கொடையாகும் ” என்றார்கள். அறிவிப்பவர்: யஸீத் பின் ஸாபித் நூல்கள்: இப்னுமாஜா
நபி(ஸல்) அவர்கள் வாழும் காலத்தில் மரணிக்கும் எந்த நபரும் அவரைப் பற்றி உடன் நபி(ஸல்) அவர்களுக்கு தகவல் தெரிவிக்கவேண்டும் என்று கூறியுளளார்கள் இது நபி(ஸல்) அவர்கள் கப்ருகளில் போய் தொழுததை ஆதாரமாக எடுத்து கொள்ளமுடியாது. மேலும் நபி(ஸல்) அவர்கள் மதினாவில்இருக்கும்போது மக்காவில் இறந்த ஸஹாபிகளுக்கு ஜனாஸா தொழுகை நடத்தியதாக எவ்வித ஆதாரமும் இல்லை.
ஜனாஸா தொழுகையில் ஒவ்வொரு தக்பீரின்போது கைகளை உயர்த்தவேண்டுமா?
நிச்சயமாக உமர்(ரழி) அவர்கள் ஜனாஸா தொழுகையிலும், பெரு நாள் தொழுகையிலும் (கூறப்படும்) ஒவ்வொரு தக்பீரின் போதும் தமது கைகளை உயர்த்திக் கொண்டிருந்தார்கள். (பக்ருபின் ஸவாத்(ரழி) பைஹகீ, அல்அஸ்ரம்) இவ்வறிவிப்பின் தொடரில் இப்னு ”லுஹைஆ” வெனும் நம்பகமற்றவர் இடம் பெற்றுள்ளார். ஆகவே இது பலகீனமானதாகும். எனவே ஜனாஸா தொழுகையிலோ, பெருநாள் தொழுகையிலோ மேலதிகமாகக் கூறப்படும் தக்பீரின் போது, நபி(ஸல்) அவர்கள் தமது கைகளை உயர்த்தியதாகவோ, அல்லது உயர்த்தும் படி கூறியதாகவோ ஒரு ஹதீஸும் இல்லை.
{ 2 comments }
nall payanana vidayam
useful message
Comments on this entry are closed.