
எஸ்.ஹலரத் அலி (+91 99653 61068.)
- அன்று ஒரு சிறிய சம்பவம் –இன்று நமக்கு பெரிய பாடம்!
நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு கோவேறு கழுதை பரிசாக வந்தது. அதில் ஏறி சவாரி போனார்கள். அலீ (ரலி) அதைப்பார்த்துவிட்டு சொன்னார்கள்,
“யா ரஸூலல்லாஹ்! நாமும் கழுதையையும் குதிரையையும் இனக்கலப்பு சேர்த்தால் இப்படி கோவேறு கழுதை கிடைக்குமே!”
நபி (ஸல்) அவர்கள் சொன்ன பதில்….
“இன்னமா யஃப்அலு தாலிகல் லதீன லா யஃலமூன்”
“அதை அறியாதவர்கள் தான் செய்வார்கள்!.” (அல்லாஹ்வின் ஹிக்மத் ஞானத்தை அறியாதவர்களே இப்படி செய்வார்கள்.)
— சுனன் நஸாயீ 3580 – ஸஹீஹ்.
ஏன் அப்படி சொன்னார்கள்? கோவேறு கழுதையை இனப்பெருக்கத்தில் உருவாக்குவது தவறா?
நபியவர்களே அதில் ஏறி சவாரி செய்தார்களே?
இதற்கு பதில் தெரிந்தால்…. இன்றைக்கு நாம் பேசுகிற GMO, Cloning, Designer Baby வரைக்கும் பதில் கிடைக்கும்.
- முதலில் மார்க்கம் என்ன சொல்கிறது?
கேள்வி 1: கோவேறு கழுதை உருவாக்குவது ஹராமா?
பதில்: இல்லை. ஆனால் “வெறுக்கத்தக்கது” – மக்ரூஹ்.
ஏன் ஹராம் இல்லை?
- நபி (ஸல்) அதில் சவாரி செய்தார்கள்.ஹராம் என்றால் பயன்படுத்த மாட்டார்கள்.
- குர்ஆன் 16:8: “குதிரை, கோவேறு கழுதை, கழுதையை சவாரிக்கு படைத்தோம்” என்று அல்லாஹ்வே சொல்கிறான்.
அப்போ..
“,அறியாதவர்கள்” என்றால் யார்?
இமாம் நவவி சொல்கிறார்கள்:
மூன்று அர்த்தம் இதில் உள்ளது.
- அல்லாஹ்வின் படைப்பு ரகசியம் தெரியாதவர்கள்:
அல்லாஹ் குதிரையை வேகத்துக்கு, போருக்கு படைத்தான். கழுதையை பொறுமைக்கு, சுமைக்கு படைத்தான். இரண்டையும் சேர்த்து “மலட்டு” உயிர் உருவாக்குவது அல்லாஹ்வுடைய நியதியை மீறுவதாகும்.
- விளைவு தெரியாதவர்கள்: கோவேறு கழுதை குட்டி போடாது. எல்லா குதிரையையும் கழுதையோட சேர்த்தால் குதிரை இனமே அழிந்துவிடும். அன்றைக்கு குதிரை = டேங்க், ஃபைட்டர் ஜெட் மாதிரியான ராணுவ பலம் போய்விடும்.
- தேவை இல்லாம செய்கிறவர்கள். விளையாட்டுக்கு, பெருமைக்கு செய்வது அறிவீனம். உண்மையான தேவை இருந்தால் கூடும்.
சுருக்கம்: பயன்படுத்தலாம். ஆனால் தேவையில்லாமல் உருவாக்க கூடாது.
- இப்போது அறிவியல் என்ன சொல்கிறது?
1400 வருடம் கழித்து கண்டுபிடிச்ச உண்மை!
3.1 கோவேறு கழுதை ஏன் மலடு?
உங்கள் உடம்பில் 23 ஜோடி 46 குரோமோசோம் இருக்கிறது. அது தான் நமது உயிரின் “ஹார்ட் டிஸ்க்”.
மிருகங்களின்
குரோமோசோம்.
கழுதை =62
குதிரை =64
கோவேறு கழுதை 62 + 64 = 126 ÷ 2 = 63
பிரட்சினை: குட்டி போட வேண்டும் என்றால் விந்தணு, சினைமுட்டை உருவாக வேண்டும். அப்போது குரோமோசோம் ஜோடி ஜோடியா பிரிய வேண்டும். 63 ஐ 2 ஆல் வகுக்க முடியாது.
ஒரு குரோமோசோம் தனியாக நிற்கும். அதனால் விந்தணுவே உருவாகாது. Game Over.
முடிவு: 99.9% கோவேறு கழுதை மலடு.
1000த்துல 1 க்கு கூட குட்டி போடாது. 1527 ல் இருந்து இன்றைக்கு வரை 60 தடவை தான் குட்டி போட்டிருக்கிறது. இதுவும் அதிசயம்.
3.2 “ஜோடி ஜோடியாக படைத்தோம்”
– குர்ஆன் 51:49.
அல்லாஹ் சொல்கிறான்:
எல்லாவற்றையும் ஜோடி…ஜோடியாக படைத்தேன்.
குதிரைக்கு குதிரை ஜோடி.
கழுதைக்கு கழுதை ஜோடி.
கோவேறு கழுதைக்கு ஜோடி இல்ல. அது “இனம்” இல்ல. “Hybrid” – கலப்பு.
இயற்கை சொல்கிறது:
“நான் அனுமதிக்காத கலப்பு. அதனால இனப்பெருக்கம் பண்ண விட மாட்டேன்.” இதற்கு பெயர் “Evolutionary Dead End”. – முட்டுச்சந்து.
- இன்றைக்கு நமக்கு என்ன பாடம்?
நபி (ஸல்) கோவேறு கழுதையை பற்றி மட்டும் பேசவில்லை.. ஒரு விதியை சொல்லிக்கொடுத்தார்கள்.
“அல்லாஹ்வோட படைப்பு நியதியை – ஃபித்ரத்தை – தேவை இல்லாமல் மாற்றாதீர்கள்.”
கேள்வி:
குதிரை + கழுதை சேர்க்கலாமா?
*கேள்வி:*
மனுஷ DNA + பன்றி DNA சேர்க்கலாமா?
GMO உணவு சாப்பிடலாமா?
Designer Baby உருவாக்கலாமா?
ஆபத்து: குதிரை இனம் அழியும்.
*ஆபத்து:* இயற்கை சமநிலை கெடும். 50 வருஷம் கழித்து என்ன ஆகும் என்று எவருக்கும் தெரியாது.
நபி (ஸல்) தீர்ப்பு:
“லா யஃலமூன்” –எதிர்கால விளைவு தெரியாதவர்களே இதை செய்வார்கள்.
*இஸ்லாமிய தீர்ப்பு:* 1. உண்மையான தேவை இருக்கிறதா?
- பலன் அதிகமா?
- தீங்கு இருக்கா? தீங்கு அதிகம் என்றால் கூடாது.
உதாரணம்:
ஆகும்:
GMO மூலம் Insulin தயாரிக்கிறது – சர்க்கரை நோயாளி உயிர் காக்க.
கூடாது: நீல நிறக் கண்கள், 6 அடி உயரம் என்று குழந்தையை (Baby Design) பண்றது – விளையாட்டு. இது தான் “அறிவீனம்”.
- முடிவுரை: மூன்று விஷயம் மறக்காதீர்கள்.
- கோவேறு கழுதை பயன்படுத்தலாம், ஆனால் தேவையில்லாமல் உருவாக்க கூடாது. இது தான் மார்க்கம்.
- 63 குரோமோசோம் = மலடு – இதை DNA கண்டுபிடிக்காத காலத்திலேயே நபி (ஸல்) “அறியாதவர்கள் செய்வது” என்று ஒரே வரியில் சொல்லிட்டார்கள்.
- இன்றைக்கு டெக்னாலஜி இருக்கின்றதுஎன்பதற்காக எல்லாம் செய்ய கூடாது. “Can we do it?” னு கேட்கிறதுக்கு முன்னால்….”Should we do it?” என்று கேட்க வேண்டும். “அல்லாஹ்வின் படைப்பில் மாற்றம் செய்யாதீர்கள். அதுவே நேரான மார்க்கம்.”
— அல் குர் ஆன். 30:30
உங்கள் கையில் கத்தி இருக்கிறது. அதைக்கொண்டு ஆப்பிளும் வெட்டலாம், கையையும் வெட்டலாம். அறிவியலும் அப்படி தான். அறிவோட பயன்படுத்துகிறவன் ஆலிம். அறிவீனமாக பயன்படுத்துகிறவன் “லா யஃலமூன்”.
அல்லாஹ் மிக அறிந்தவன்!.