பரிகசிக்கப்படும் தாடி!

Post image for பரிகசிக்கப்படும் தாடி!

in இஸ்லாம்

முஸ்லிம்களில் மிகப் பெரும்பாலோர் தாடியை மிகவும் கேவலமான ஒன்றாக கருதிக் கொண்டு (பெண்களைப் போல்) முகத்தை வைத்து கொள்ள விரும்புகின்றனர். இஸ்லாமியர்கள் இந்த நடைமுறையை கைவிட்டு விட்டதால், நீதி மன்றங்களும் கூட தாடி வைக்கத் தடை விதிப்பதை நாம் காண்கிறோம். ஆண்களுக்கு மட்டுமே அல்லாஹ் வழங்கியுள்ள தாடியைச் சிரைத்து கொள்வது இன்று நாகரீகமாகக் கருதப்படுகின்றது.

மாடர்ன் முஸ்லிம்கள்(?) சிலர் “தாடி என்பது அரபியர்களின் வழக்கம், அந்த அடிப்படையை ஒட்டியே நபியவர்கள் தாடி வைத்திருந்தனர்” அதை நாம் பின்பற்ற வேண்டியதில்லை என்று கூறத் துவங்கியுள்ளனர். தாடி என்பது அரபியர்களின் வழக்கம் என்பதும் உண்மையே! அபூ ஜஹ்ல் உட்பட பல அரபியர்கள் தாடி வைத்திருந்தனர்.

“மக்கத்துக் காபிர்களின் தலைவன் அபூஜஹ்ல், பத்ரு போர்க் களத்தில் வெட்டப்பட்டுக் கிடக்கும் போது, இப்னு மஸ்ஊது(ரழி) அவர்கள், அபூஜஹ்லின் தாடியைப் பிடித்துக் கொண்டு “நீதான் அபூஜஹ்லா” என்று கேட்டனர். அறிவிப்பவர்: அனஸ்(ரழி), நூல் : முஸ்லிம்

இதை சிலர் “தாடி அரபிகளின் வழக்கம்” என்று கூறி முழுக்கச் சிரைத்து விடுகின்றனர். “நாட்டு வழக்கம்” என்ற அடிப்படையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒன்றைச் செய்தால் அதை நாமும் செய்ய வேண்டிய அவசியமில்லை. நபியவர்கள் கோதுமை உணவு உண்டார்கள் என்பதற்காக, நாமும் கோதுமை உண்வு தான் உண்ண வேண்டுமா? என்று அவர்கள் கேட்கின்றனர்.

“நாட்டு வழக்கங்களைப் பின்பற்ற வேண்டியதில்லை” என்பது உண்மைதான் என்றாலும், ஒரு வழக்கத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வலியுறுத்திக் கட்டளை இட்டு விட்டால் அது மார்க்கத்தின் சட்டமாக ஆகி விடும். அதை நாம் பின்பற்றியே ஆக வேண்டும்.

கோதுமை உணவைப் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “நீங்களும் கோதுமை உண்ணுங்கள்!” என்று நமக்குத் கட்டளையிடவில்லை. ஆனால் தாடியை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள். அது பற்றிய ஹதீஸ்களை முதலில் நாம் பார்ப்போம்.

“மீசையைக் கத்தரியுங்கள்! தாடியை விடுங்கள்!” (நபிமொழி) அறிவிப்பவர் : இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு நூல் : புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ, திர்மிதீ

“இணை வைப்பவர்களுக்கு மாறு செய்யுங்கள்! தாடியை விடுங்கள்!” (முஸ்லிம்)

“நெருப்பை வணங்குவோருக்கு மாறு செய்யுங்கள்! தாடியை விடுங்கள்!” (முஸ்லிம்)

“அல்லாஹ்வின் தூதரே! தாடியை யூதர்கள் சிரைக்கின்றனர்’ மீசையை(ப் பெரிதாக) வளர்க்கின்றனர்” என்று நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டபோது, “நீங்கள் மீசையைக் கத்தரியுங்கள்! தாடியை விட்டு விடுங்கள்! யூதர்களுக்கு மாறு செய்யுங்கள்! என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ உமாமா ரழியல்லாஹு அன்ஹு நூல் : அஹ்மத்

தாடியை வலியுறுத்தி, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உத்தரவு மிகவும் தெளிவாக உள்ளது. இதில் மாற்றுக் கருத்துக் கொள்ள அறவே இடமில்லை.

மேற்கூறிய நபிமொமிகளை அடிப்படையாகக் கொண்டு, அறிஞர்களில் சிலர் “தாடியை சிறிதளவும் குறைக்கக் கூடாது” என்று கருதுகின்றனர். இன்னும் சில அறிஞர்கள் குறைத்துக் கொள்ளலாம் என்று கருதுகின்றனர். இரண்டாவது தரப்பினரின் கருத்தே சரியானது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. அவற்றைப் பார்ப்போம்.

“இப்னு உமர்(ரழி) அவர்கள் ஹஜ், உம்ராச் செய்யும் போது, தங்கள் தாடியிலிருந்தும், மீசையிலிருந்தும் (சிறிது) குறைத்துக் கொள்வார்கள்” அறிவிப்பவர் : நாபிவு(ரழி) நூல்கள் : புகாரி, முஅத்தா

“இப்னு உமர் (ரழி) அவர்கள் தன் தாடியில் ஒரு பிடிக்கு மேல் உள்ளதை நீக்கக் கண்டேன்” என்று மர்வான்(ரழி) அறிவிக்கின்றார்கள். (நூல் : அபூதாவூது)

இப்னு உமர் (ரழி) அவர்களின் இந்தச் செயல், தாடியைக் குறைக்கலாம் என்பதற்குத் தெளிவான ஆதாரமாகும். இப்னு உமர்(ரழி) அவர்கள், ஸஹாபாக்களின் வித்தியாசமானவர்கள். நபி(ஸல்) அவர்களின் எல்லாச் செயல்களையும் அப்படியே பின்பற்றக் கூடியவர்கள். நபி(ஸல்) அவர்களின் தற்செயலான காரியங்களையும் கூட அவர்கள் பின்பற்றக் கூடியவர்கள். நபி(ஸல்) அவர்கள் எந்த இடத்திலாவது தன் ஒட்டகத்தை சிறிது நேரம் நிறுத்தினால் – அந்த இடத்திற்கு அவர்கள் செல்ல நேர்ந்தால் – அந்த இடத்தில் தனது ஒட்டகத்தை நிறுத்துவார்கள். இது போன்ற காரியங்களில் எல்லாம் நாம் அப்படியே செய்ய வேண்டியதில்லை. எனினும், இப்னு உமர்(ரழி) அவர்கள் இது போன்ற செயல்களையும் அப்படியே பின் பற்றியவர்கள்.

அவர்கள் தங்களின் தாடியைக் குறைத்திருந்தால், நபி (ஸல்) அவர்களின் முன் மாதிரி இன்றி நிச்சயம் செய்திருக்க மாட்டார்கள் என்று நம்பலாம். ‘தாடியை விட்டு விடுங்கள் என்ற ஹதீஸ் இப்னு உமர்(ரழி) அவர்களுக்கு தெரியாமலிருக்கலாம் என்றும் கருத முடியாது, அந்த ஹதீஸை அறிவிப்பதே இப்னு உமர்(ரழி) அவர்கள் தான். ஹதீஸை அறிவிக்கக் கூடிய இப்னு உமர்(ரழி) அவர்களே தன் தாடியைக் குறைத்துள்ளார்கள் என்றால், குறைக்கலாம் என்பதற்கு சரியான ஆதாரமாகும்’.

“தாடியை விட்டு விடுங்கள்! என்ற இன்னொரு ஹதீஸை அபூ ஹுரைரா(ரழி) அவர்களும் அறிவிக்கிறார்கள். அந்த ஹதீஸை அறிவிக்கின்ற அபூஹுரைரா(ரழி) அவர்களே தன் தாடியைக் குறைத்துள்ளனர் என்று இமாம் நவபீ(ரஹ்) அவர்கள் ‘ஷரஹுல்’ முஹத்தப் என்ற நூலில் குறிப்பிடுகிறார்கள்.

“நபி(ஸல்) அவர்கள் தனது தாடியை நீளத்திலும், அகலத்திலும் குறைப்பார்கள்” என்று திர்மிதீயில் ஒரு ஹதீஸ் உள்ளது. அதன் அறிவிப்பாளர்களில் இடம் பெறுகின்ற உமர் இப்னு ஹாரூன் என்பவர் பலவீனமானவர் என்று பல ஹதீஸ்கலை வல்லுனர்கள் கருதுவதால். அது ஆதாரமாகாது, எனினும் உமர் இப்னு ஹாரூன் இன்றி ‘உஸாமா’ என்பவர் மூலமும் இந்த ஹதீஸ் அறிவிக்கப்படுகின்றது என்று ஹாபிழ் தஹபீ அவர்கள் ‘மீஸானில்’ குறிப்பிடுகிறார்கள். அந்த அடிப்படையில், நபி(ஸல்) அவர்கள் தாடியைக் குறைத்திருக்கிறார்கள் என்று அறிய முடிகின்றது. அதைப் பார்த்தே இப்னு உமர்(ரழி) அவர்களும் தம் தாடியைக் குறைத்திருப்பார்கள் என்று அனுமானிக்கலாம்.

ஸாலிம் இப்னு அப்துல்லா(ரழி) அவர்கள், இஹ்ராம் கட்டுவதற்கு முன், தனது தாடியில் சிறிது குறைத்துள்ளார்கள் என்ற செய்தியை இமாம் மாலிக்(ரஹ்) அவர்கள் தனது முஅத்தாவில் பதிவு செய்துள்ளனர்.

மேற்கூறிய ஆதாரங்களிலிருந்து, “தாடியை விட்டு விடுங்கள்!” என்ற நபிமொழியின் கருத்து “சிரைக்கக் கூடாது” என்பது தான் என்று தெளிவாக உணரலாம்.

கன்னத்தைக் சிரைத்துக் விட்டுத் தாழ்வாயில் மட்டும் முடிகளை விட்டுவிட்டு, அதைத் தாடி என்று சிலர் கருதுகின்றனர். “கன்னம், தாழ்வாய்” இரண்டும் சேர்ந்தே தாடி எனப்படும். இதில் ஒரு பகுதியைச் சிரைத்தாலும், தாடியைச் சிரைத்ததாகவே கருதப்படும். ஆண்களுக்கு மட்டுமே அல்லாஹ் வழங்கிய தாடியை வைத்து, நபி வழியில் நடப்போமாக – ஆமீன் .

அபூ முஸ்லிம்

{ 18 comments… read them below or add one }

sabeer November 24, 2013 at 1:38 am

dhadiyai vaikka maruppavargal pengalukku oppanavargal

Reply

a.abdulrajak January 15, 2014 at 5:23 pm

yes you are right,

4:119 وَلَأُضِلَّنَّهُمْ وَلَأُمَنِّيَنَّهُمْ وَلَآمُرَنَّهُمْ فَلَيُبَتِّكُنَّ آذَانَ الْأَنْعَامِ وَلَآمُرَنَّهُمْ فَلَيُغَيِّرُنَّ خَلْقَ اللَّهِ ۚ وَمَن يَتَّخِذِ الشَّيْطَانَ وَلِيًّا مِّن دُونِ اللَّهِ فَقَدْ خَسِرَ خُسْرَانًا مُّبِينًا

4:119. “இன்னும் நிச்சயமாக நான் அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களிடம் வீணான எண்ணங்களையும் உண்டாக்குவேன்; கால்நடைகளின் காதுகளை அறுத்து விடும்படியும் அவர்களை ஏவுவேன். இன்னும் அல்லாஹ்வின் படைப்புகளையுடைய கோலங்களை மாற்றும்படியும் ஏவுவேன்” என்றும் ஷைத்தான் கூறினான்; எனவே எவன் அல்லாஹ்வை விட்டு ஷைத்தானை உற்ற நண்பனாக ஆக்கிக் கொள்கிறானோ, அவன் நிச்சயமாக பகிரங்கமான பெரு நஷ்டத்தை அடைந்தவன் ஆவான்.

Reply

sharab ali January 10, 2014 at 12:03 am

very very usefull details for this side every people will be like this tips who is follow this no need go for doctor

Reply

a.abdulrajak January 19, 2014 at 5:40 pm

dear brothers,
Addtional and supportive information from the quran that the size of minimum requirement of the beard (தாடி) length is the width of a five fingers and little bit above. Not too length OR short.

20:94 قَالَ يَا ابْنَ أُمَّ لَا تَأْخُذْ بِلِحْيَتِي وَلَا بِرَأْسِي ۖ إِنِّي خَشِيتُ أَن تَقُولَ فَرَّقْتَ بَيْنَ بَنِي إِسْرَائِيلَ وَلَمْ تَرْقُبْ قَوْلِي

20:94. (இதற்கு ஹாரூன்:) “என் தாயின் மகனே! என் தாடியையோ என் தலை (முடி)யையோ பிடி(த்திழு)க்காதீர்கள்; “பனீ இஸ்ராயீலிடையே நீங்கள் பிரிவினையை உண்டாக்கி விட்டீர்கள்; என் வார்த்தைக்காக நீங்கள் காத்திருக்கவில்லை!” என்று நீர் கூறுவீரோ என நிச்சயமாக நான் அஞ்சினேன்” என்று கூறினார்.

od Lord ,increase me in knowledge ( both secular and wisdom.)

Reply

abdul karim February 6, 2014 at 7:55 pm

தாடி (ஆங்கிலம்:Beard) என்பது மனிதர்களின் முகத்தில் கன்னம், நாடி, கழுத்து ஆகிய பகுதிகளில் வளரக்கூடிய முடி. ஆண்களின் துணை பாலியல்புகளில் ஒன்றாக முகத்தில் மீசை, தாடி வளர்தல் கொள்ளப்படுகிறது. ஆண்களுக்கு கம்பீரமான தோற்றத்தைக் கொடுக்கும் ஒரு அடையாளமாகக் கருதப்படுகிறது.

Reply

Abubakkarsithik March 11, 2014 at 6:11 pm

Masha allah,
Nalla Pathivu, Allah ungal mel than rahmathai polivaanaaha, Aameen!, unmai sonir thoza
masah allah

Reply

shajahan May 2, 2014 at 12:10 pm

Suicide about. In islalm shariya?

Reply

ABDUL AZEEZ May 12, 2014 at 5:03 pm

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் ஷாஜஹான் அவர்களுக்கு தற்கொலை செய்தவர் நிரந்தர நரகில் இருப்பார். காஃபிர்களுக்கு சமமாக. கீழ் கானும் ஹதீத் போதுமானது

2898. ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ் ஸாஇதீ(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களும் இணைவைப்போரும் (கைபர் போர்களத்தில்) சந்தித்துப் போரிட்டனர். நபியவர்கள் தம் படையினர் பக்கம் சென்று விட மற்றவர்களும் தம் படையின் பக்கம் சென்றுவிட்டனர். அப்போது நபி(ஸல்) அவர்களின் தோழர்களுக்கிடையே ஒருவர் இருந்தார். அவர் (எதிரிகளில்) போரில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி நிற்பவர், படையிலிருந்து விலகிப் போய் தனியே சென்றவர் (அதாவது எதிர்த்து நிற்பவர், பணிந்து செல்பவர் என்று) எவரையும் நபித் தோழர்களுக்குவிட்டு வைக்காமல் அனைவரையும் தம் வாளால் வெட்டியபடி துரத்திச் சென்று (மூர்க்கமாகப் போரிட்டுக்) கொண்டிருந்தார். (அவரின் துணிச்சலான போரைக் கண்ட) நபித்தோழர்கள், ‘இந்த மனிதர் போரிட்டதைப் போல் இன்று நம்மில் வேறெவரும் தேவை தீரப் போரிடவில்லை” என்று (வியந்து) கூறினார்கள். இதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள், ‘அவரோ நரகவாசியாவார்” என்று கூறினார்கள். அப்போது கூட்டத்திலிருந்து ஒருவர், ‘நான் அவருடன் இருக்கிறேன் (அவர் என்ன சொல்லிவிட்டு அந்த மனிதருடன் புறப்பட்டார். அவர் நின்ற போதெல்லாம் இவரும் நின்றார். அவர் விரைந்தால் இவரும் விரைந்தார். (ஒரு கட்டத்தில்) அவர் கடுமையாக காயப்படுத்தப்பட்டார். அதனால் சீக்கிரமாக மரணித்து விட விரும்பி, தன் வாளின் (கைப்பிடியுள்ள) முனையை பூமியில் ஊன்றி, அதன் கூரான முனையைத் தன் இரண்டு மார்புகளுக்கு இடையே வைத்து, அந்த வாளின் மீது தன் உடலை அழுத்திக் கொண்டு தற்கொலை செய்தார். (இதை உடனிருந்து கண்காணித்துவிட்டு) அந்த மனிதர் அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, ‘தாங்கள் இறைத்தூதர் தாம் என்பதற்கு நான் சாட்சியம் அளிக்கிறேன்” என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘என்ன விஷயம்?’ என்று கேட்டார்கள். அவர், ‘சற்று முன்பு தாங்கள் ஒருவரைப் பற்றி ‘அவர் நரகவாசி’ என்று கூறிறீர்கள் அல்லவா? அதைக் கண்டு மக்கள் வியப்படைந்தனர். நான் (மக்களிடம்), ‘உங்களுக்காக (அவரின் நிலைகளை அறிந்து வர) நான் அவருடன் போய் வருகிறேன்” என்று கூறிவிட்டு, அவரைத் தேடிப் புறப்பட்டேன். அவர் கடுமையாக காயப்படுத்தப்பட்டார். உடனே, அவர் சீக்கிரமாக மரணமடைய விரும்பி, வாளின் பிடிமுனையை பூமியில் நட்டு, அதன் கூர்முனையைத் தன் இரண்டு மார்புகளுக்கிடையே வைத்து, அதன் மீது தன்னை அழுத்திக் கொண்டு தற்கொலை செய்தார்” என்று கூறினார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘மக்களின் வெளிப் பார்வைக்கு ஒருவர் சொர்க்கத்திற்குரிய (நற்) செயலைச் செய்து வருவார். ஆனால், அவர் (உண்மையில்) நரகவாசியாக இருப்பார். மக்களின் வெளிப்பார்வைக்கு ஒருவர் நரகத்திற்குரிய செயலைச் செய்து வருவார். ஆனால், (உண்மையில்) அவர் சொர்க்கவாசியாக இருப்பார்” என்றார்கள்.

மா ஸலாம்.
அப்துல் அஜீஸ்

Reply

Muthukumar June 17, 2014 at 9:17 pm

Enakku sila kelvikalukku vilakkam kidaikka virumbugiren..

1)Thirunangaikal patri islam eathum kooriyullatha..?

2)Tharga valibadu sariya thavara..?

3)Quran ean anaithu mozhikalilum irangavillai..?

4)Indian muslims belongs to which category shiya or sunny..?

Reply

Abu Inshirah June 18, 2014 at 8:45 am

Answer for your first question took from Onlinesengiskhan.com

உலகில் இரண்டு பாலினம் மாத்திரமே உள்ளது என்பதை குர்ஆன் தெளிவாக அறிவிக்கிறது.

يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً ۚ وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ ۚ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்!அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும் பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான் எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான்(4:1)

மேற்கண்ட வசனத்தில் ஆதம்(அலை)மூலம் அவரின் துணையை படைத்து அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும் பெண்களையும் படைத்தான்.என்று குறிப்பிடுவதிலிருந்து உலகில் ஆண் பெண் ஆகிய இரு பாலினத்தைத் தவிற வேறு பாலினம் இல்லை என்பது உள்ளங் கையில் நெல்லிக் கணி போல் தெளிவான விஷயம்.

ஆனால் இன்று இந்த இறைநியதிக்கு எதிராக மூன்றாம் பாலினம் என்பதை முட்டாள்தனமாக பேசிப்பேசி இன்றைக்கு அதை உச்ச நீதிமன்றம் அங்கீகாரம் அளிக்கும் நிலை வந்துள்ளது! இதை சில இஸ்லாமியர்களும் வரவேற்கின்றனர்என்பது வேதனை ! இது ஒழுக்கக் கேடுகளுக்கே வழிவகுக்கும் !

இவர்களால் இந்த சமுகத்திற்கு எந்த நன்மையையும் இல்லை! ஒவ்வொரு ஊரிலும் ஓரினச்சேர்க்கையை இளைஞர்களிடத்தில் ஊட்டி வளர்ப்பதும், பாலியல் தொழிலாளிகளாக பெண் வேடமிட்டு ஏமாற்றி பிழைப்பதும், கைதட்டி காசு கேட்டு பிச்சை எடுத்து பிழைப்பதும், தட்டிக் கேட்டால் ஆபாசமாகப் பேசி வன்முறையில் ஈடுபடுவதும், எய்ட்சை பரப்பியதையும், தவிர வேறு சமூகத்துக்கு இவர்களால் எந்த நன்மை இல்லை !

இவர்கள் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் இல்லை ! மனரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் பெண்களோடு பழக அல்லது அல்லது பெண்களோடு அதிகம் பழகியதால் ஏற்பட்ட பாதிப்பு ! இப்படி ஒரு இனத்தை இறைவன் படைத்து இருந்தால் ஏன் பெண்களில் இருந்து இப்படிப்பட்டவர்கள் இல்லை ?

(நபிகளாரின் துணைவியார்) உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்
என்னிடம் (ஆணுமல்லாத பெண்ணுமல்லாத) ‘அலி’ ஒருவர் அமர்ந்திருந்தபோது நபி(ஸல்)
அவர்கள் என்னிடம் வந்தார்கள். அந்த ‘அலி’, (என் சகோதரர்) அப்துல்லாஹ் இப்னு
அபீ உமய்யாவிடம், ‘அப்துல்லாஹ்வே! நாளை தாயிஃப் நகர் மீது உங்களுக்கு அல்லாஹ்
வெற்றியளித்தால் நீ ஃகய்லானின் மகளை மணந்துகொள். ஏனென்றால், அவள் முன்பக்கம்
நாலு (சதை மடிப்புகளு)டனும், பின்பக்கம் எட்டு (சதை மடிப்புகளு)டனும் வருவாள்”
என்று சொல்வதை செவியுற்றேன். (இதைக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள், ‘இந்த அலிகள்
(பெண்களாகிய) உங்களிடம் ஒருபோதும் வர (அனுமதிக்க)க் கூடாது” என்று
கூறினார்கள். இப்னு உயைனா(ரஹ்), இப்னு ஜுரைஜ்(ரஹ்) ஆகியோரின் அறிவிப்பில் அந்த
அலியின் பெயர் ‘ஹீத்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
… மற்றோர் அறிவிப்பில், ‘அப்போது நபி(ஸல்) அவர்கள் தாயிஃபை
முற்றுகையிட்டுக் கொண்டிருந்தார்கள்” என்று அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.
பாகம் 5, அத்தியாயம் 67, எண் 5235

இவர்கள் ஆண்களாகத்தான் கருதப்பட வேண்டும் இவர்களிடம் ஹிஜாப் பேணப்பட வேண்டும் எனும் இஸ்லாமிய நிலைப்பாடு உண்மை என்பதை இவர்களுக்கு திருமணம் செய்து வைத்தால் தெரிந்து விடும் ! உடனடியாக குழந்தைக்கு தந்தையாகும் தகுதியை நிரூபிப்பார்கள் என்பதை அறியலாம்! இதனால் தான் நபி ஸல் அவர்கள் இவர்களை வீடுகளை விட்டும் பெண்களை விட்டும் அப்புறப்படுத்த சொன்னார்கள் !

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் பெண்களைப் போன்று ஒப்பனை செய்துகொள்ளும் ஆண்களையும்,
ஆண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் பெண்களையும் சபித்தார்கள். மேலும்,
‘அவர்க(ளில் அலிக)ளை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றுங்கள்’ என்றார்கள்.
அவ்வாறே நபி(ஸல்) அவர்கள் இன்னாரை வெளியேற்றினார்கள். உமர்(ரலி) அவர்கள்
இன்னாரை வெளியேற்றினார்கள்.
பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5887.

ஆகையால் இறை நியதிக்கு மாற்றமாக மூன்றாம் பாலினம் என இந்த ஒழுக்க கேட்டை அங்கீகரிப்பது நாகரிக சமூகத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் !

Reply

A.ABDULRAJAK May 17, 2015 at 10:03 pm

(நபிகளாரின் துணைவியார்) உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்
என்னிடம் (ஆணுமல்லாத பெண்ணுமல்லாத) ‘அலி’ ஒருவர் அமர்ந்திருந்தபோது நபி(ஸல்)
அவர்கள் என்னிடம் வந்தார்கள். அந்த ‘அலி’, (என் சகோதரர்) அப்துல்லாஹ் இப்னு
அபீ உமய்யாவிடம், ‘அப்துல்லாஹ்வே! நாளை தாயிஃப் நகர் மீது உங்களுக்கு அல்லாஹ்
வெற்றியளித்தால் நீ ஃகய்லானின் மகளை மணந்துகொள். ஏனென்றால், அவள் முன்பக்கம்
நாலு (சதை மடிப்புகளு)டனும், பின்பக்கம் எட்டு (சதை மடிப்புகளு)டனும் வருவாள்”
என்று சொல்வதை செவியுற்றேன். (இதைக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள், ‘இந்த அலிகள்
(பெண்களாகிய) உங்களிடம் ஒருபோதும் வர (அனுமதிக்க)க் கூடாது” என்று
கூறினார்கள். இப்னு உயைனா(ரஹ்), இப்னு ஜுரைஜ்(ரஹ்) ஆகியோரின் அறிவிப்பில் அந்த
அலியின் பெயர் ‘ஹீத்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
… மற்றோர் அறிவிப்பில், ‘அப்போது நபி(ஸல்) அவர்கள் தாயிஃபை
முற்றுகையிட்டுக் கொண்டிருந்தார்கள்” என்று அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.
பாகம் 5, அத்தியாயம் 67, எண் 5235

above hadees speak about transgender not a cross dresser. god created the third gender occasionaly. bodily affected by birth.

but below hadees talked about cross dresser. this cross dresser is bodily right but mentally affected.
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் பெண்களைப் போன்று ஒப்பனை செய்துகொள்ளும் ஆண்களையும்,
ஆண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் பெண்களையும் சபித்தார்கள். மேலும்,
‘அவர்க(ளில் அலிக)ளை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றுங்கள்’ என்றார்கள்.
அவ்வாறே நபி(ஸல்) அவர்கள் இன்னாரை வெளியேற்றினார்கள். உமர்(ரலி) அவர்கள்
இன்னாரை வெளியேற்றினார்கள்.
பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5887.

Reply

ABDUL AZEEZ June 22, 2014 at 2:19 am

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் முத்துகுமார் அவர்களுக்கு.

உங்களின் திரு நங்கை விஷயமான கேள்விக்கு விரைவில் பதில் கொடுக்கப்படும்.

2.கேள்வி தர்கா வழிப் பாடு என்பது தவரானது காரணம் இஸ்லாம் ஓர் இறை கொள்கை கொண்டது.

3.வது கேள்வி குர் ஆன் ஏன் அனைத்து மொழிகளிலும் அருளப் படவில்லை. அதாவது உலகம் படைக்கப் பட்ட நாள் முதல் இறைவன் சமூக மக்களுக்கு தேவைக் ஏற்ப்ப வேதங்களை கொடுத்துல்லான் அது அந்த சமூகம் எந்த மொழியில் பேசினார்களோ அந்த மொழியிலேயே அவர்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்டது.
அந்த வரிசையில் இருதியாக வந்த வேதமானது குர் ஆன். அது அரபு மொழி பேசும் மக்கள் மீது அருளப்பட்டது. அதோடு நின்றுவிடாமல் அதை உலக மக்கள் முழுதும் வேதம் பெற்று விட்டதாக பிரகடனம் செய்கிறது. இதற்க்கு முந்தைய வேதங்களை அந்த அந்த சமூக மட்டுமே அல்லாமல் பிர சமூகத்தை கட்டுப்படுத்தாது.
மொழிகள் காலதிற்கு தகுந்தார் போல் புதிது புதிதாக பிறக்கின்றன மற்றும் மரையவும் செய்கின்றன.
மனிதர்களுக்கு தேவை போதனைகள், மற்றும் கட்டலைகள் தான் அது பிர மொழியிலிருந்து மொழி பெயர்த்தும் இருக்கலாம் இன்னும் தாய் மொழியாகவும் இருக்கலாம். அந்த வகையில் குர் ஆன் உலகலாவிய மொழிகலில் எல்லாம் மொழிபெயர்த்துள்ளார்கள்.இறைவன் மனிதர்களுக்கு அதிகாரம் செலுத்தலாம் ஆனால் மனிதர்கள் இறைவனுக்கு கட்டலை பிரப்பிக்க முடியாது.

4.வது கேள்வி பிரிவுகள் ஷியா, ஷுன்னீ இன்னும் ஏராளம் உல்லன. பிரிவுகள் இஸ்லாதிற்க்கு எதிரானது. இன்னும் அடிப்படை அற்றது. இந்தியன் முஸ்லிம்கள் அதிகமானோர் ஷுன்னீ பிரிவையே சார்ந்தோர்.

மா சலாம்.
அப்துல் அஜீஸ்

Reply

A.ABDULRAJAK May 18, 2015 at 10:07 pm

3)Quran ean anaithu mozhikalilum irangavillai..?

dear brother

during 1400 years back there were 3000 languages spoken by people . in india alone 800 languages right now. if god sent 3000 languages of quran means god have to send 3000 messangers at the same time.that makes toomuch contravery to people. even now government pass the laws in one language only. see US, JAPAN, etc. other languager shall translate that laws for their uses.

Reply

A.ABDULRAJAK May 18, 2015 at 10:31 pm

for more clarity

As of islamic faith quran is a last veda and mohamed (pbuh) is a last messanger of GOD.
GOD sent quran through mohamed (pbuh) and demonstrate the laws. if 3000 different language quran comes should brought by 3000 messangers . so we canot find out the last messanger.

Reply

அஷ்ஃபாக் ரிஷார்ட் May 15, 2015 at 8:44 am

நீங்கள் ஆரம்பத்தில் அலகாக் கட்டுரையை குர்ஆன் ஹதீஸை கொன்டு தாடியை பற்றி தெலிவு படுத்தினீர்கள். ஆனால் அதற்கு பிரகு உங்கள் தலைவர்கள் காட்டிய கொள்கைகளை தக்லீத் செய்ததை பார்கலாம் தாடியை வெட்டலாம் என்று வரலாருகளை ஆதாரமாக கொண்டு ஹதீஸை மருத்ததன் மூலம். அல்லாஹ்வின் தூதர் தாடியை விட்டு விடுங்கள் என்று கட்டலை இட்டதன் பிரகு நீங்கள் எப்படி தாடியை வெட்டுவீர்கள். மேலும் நபி (ஸல்) அவர்கள் தாடியை வெட்டினார்கல் என்ற செய்தி ஸஹீஹ் என்பீர்களானால் தெளிவாக நிருபியுங்கள்.

Reply

இப்னு இஸ்மாயில் May 17, 2015 at 8:16 pm

ஒட்டு மொத்த அறிவிப்பை வைத்து தாடியின் அளவை குறைத்துக் கொள்வதற்கு அனுமதி உள்ளது அதனை ஒட்டியே நபித்தோழர்களும் தாடியை வெட்டியதாக ஹதீஸ்களில் காண முடிகிறது. வெட்டக்கூடாது என்பதற்கு தடையில்லை என்றே விளங்க முடிகிறது.

Reply

A.ABDULRAJAK May 18, 2015 at 9:56 pm

dear brother
beard is a symbol of men. in some country beard not grow well for men . one or two hair or some hairs only. beside some other country men grow more than 6 feet beard. so we can grow beard in medium size based on men capacity of faith and health.

Reply

MANOHAR SOLOMON DANIEL(A) MOHAMMED THOUFEEQ September 19, 2016 at 7:58 pm

MASHA ALLAH. ITS GOOD FOR ME. ALHAMDULILLAH

Reply

Leave a Comment

Previous post:

Next post: