சூனியத்தை நம்பியவன் சுவனம் செல்லமாட்டான் “(பெற்றோரை) நோவினை செய்பவன், சூனியத்தை நம்பிக்கைக் கொண்டவன், தொடர்ந்து மது அருந்துபவன், விதியை மறுப்பவன் ஆகியோர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்கள் என இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள். அறிவித்தவர்: அபூ தர்தா(ரலி), அஹ்மத் 26212 சூனியத்தை நம்பியவன் சொர்க்கம் செல்ல முடியாது என்று இச்செய்தி கூறுகிறது. எனவே, சூனியத்தால் பாதிப்பு ஏற்படும் என்ற நம்பிக்கை தவறானது என்று இந்த ஹதீஸை வைத்து கூறுகிறார்கள். இந்த ஹதீஸில் சூனியத்தால் பாதிப்பு ஏற்படும் என நம்பக் கூடாது என்று […]
இறையடிமை வறுமையில் வாடுகின்ற மனிதன் கடைசியில் பிச்சையெடுத்து வாழ முற்படுகின்றான். பிச்சையெடுத்தல் கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலும் காணப்படுகின்றது. அதைத் தடுக்க பல நாடுகளில் சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. இருந்தபோதிலும் பிச்சையெடுத்தலை முழுமையாக ஒழிக்க முடியவில்லை. பல்வேறு முறைகளில் பிச்சையெடுக்கப்படுகிறது. வழிபாட்டுத் தலங்கள், கடைவீதிகள், பொதுமக்கள் கூடுமிடங்களில் பிச்சையெடுத்தல் அதிகமாகக் காணப்படுகிறது. மத ரீதியாக ஆராய்ந்தால் ஒரு சில மதங்கள் பிச்சையெடுத்தலை ஆதரிக்கின்றன. “குருகுலக் கல்வி” முறை இருந்த காலத்தில் மாணவர்கள் தாங்கள் பயிலுகின்ற ஊரில் வீடுவீடாகச் சென்று அரிசி மற்றும் […]
இஸ்லாமிய மார்க்கம் முழுக்க முழுக்க அல்லாஹ்வின் மார்க்கம். அல்லாஹ்வுக்கே சொந்தமான மார்க்கம். அல்லாஹ்வின் அதிகாரத்திலுள்ள மார்க்கம். அதில் மனித தலையீட்டிற்கு அறவே அனுமதி இல்லை. (அல்குர்ஆன் 39:3, 5:3, 3:19, 3:85, 42:21, 49:16, 9:31, 7:3, 33:66-68, 30:32, 6:159, 22:78, 4:33, 18:102-106) இன்னும் இவை போன்ற எண்ணற்ற திருக்குர்ஆன் வசனங்கள் இதை உண்மைப்படுத்தும். ஆயிரம் விளக்கங்கள் கூறினாலும் அதை மனித அறிவு ஏற்றுக்கொண்டாலும் அதைக்கொண்டு அல்லாஹ்வின் ஒரேயொரு கட்டளையைப் புறக்கணித்தாலும் உதாசீனப்படுத்தினாலும் அது […]
பொய் பேசுவது மார்க்கத்திற்கு புறம்பானது. அல்லாஹ் (ஸுப்) தடை செய்தது. நாம் உண்மைக்கு மாற்றமான விஷயங்களைக் கூறி அதாவது பொய் பேசி அதனால் இந்த உலக ஆதாயங்களை அடைய ஆசைப்படுகின்றோம். சில விஷயங்களில் உண்மையைப் பேசினால் அதனால் நமக்கு தொந்தரவுகள் மற்றும் கஷ்டங்கள் வரும் என நினைத்து பொய் பேசி அதிலிருந்து தப்பிக்க முயல்கின்றோம். வேறு சில சமயங்களில் உண்மையைப் பேசினால் நமது கௌரவம் பாதிக்கப்படும் நம்மைத் தாழ்வாக நினைப்பார்கள் என்றெல்லாம் நினைத்துக்கொண்டு சரளமாக எந்த ஒரு […]
வீண் விரயம் செய்வதை அல்லாஹ் வன்மையாக கண்டிக்கிறான். செல்வத்தை அளவு கடந்து வீண் செலவு செய்ய வேண்டாம்; ஏனென்றால் மிதமிஞ்சி செலவு செய்வோர் ஷைத்தானுடைய சகோதரர்களாக இருக்கின்றனர். ஷைத்தானோ தான் இறைவனுக்கு நன்றி செலுத்தாது மாறு செய்தவன். (அல்குர்ஆன் 17:26,27) உம்முடைய பொருள்களில் ஒன்றையுமே செலவு செய்யாது உம்முடைய கையை கழுத்தில் மாட்டிக் கொள்ளாதீர்; அன்றி உம்மிடம் இருப்பதை எல்லாம் கொடுத்து உம்முடைய கையை முற்றிலும் விரித்தும் விடாதீர்; அதனால் நீர் நிந்திக்கப்பட்டவராகவும், முடைப்பட்டவராகவும் […]
கி பி 571 ம் ஆண்டு ஏபரல் 20 ம் தேதி மக்காவில் அநாதையாக பிறந்த முஹம்மது (ஸல்) அவர்கள் பரந்த உலகில் விரிந்து கிடக்கிற மனித வரலாற்றில் ஏற்படுத்திய தாக்கம் கற்பனைக்கு அப்பாற்பட்டது. இந்த உலகில் மனிதராகப் பிறந்த பிறக்கப் போகிற வேறு எந்த சக்தியும் எட்டிப் பிடிக்க முடியாதது. சமயம், , சமூகம், அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம், வரலாறு, அறிவியல், மொழி, தத்துவம், இலக்கணம், இலக்கியம், வாழ்வியல், உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அவருக்கு தீர்க்கமான […]
இஸ்லாம் மார்க்கத்தை வியாபாரமாக்கிய, அதனை மதமாக்கிய முல்லாக்கள் பிடியில் முஸ்லிம் சமுதாயம் கட்டுண்டுக் கிடக்கிறது. முஸ்லிம்கள், அற்பமான இவ்வுலக வாழ்க்கையில் தன்னம்பிக்கையுடன் செயல்படுகிறார்கள். தன் கையே தனக்குதவி என்று பாடு படுகிறார்கள். பட்டம், பதவி, சொத்து, சுகங்களை அடைகிறார்கள். பல தலைமுறைகளுக்குத் தேவையானதை இவர்களே சேர்த்து வைக்கிறார்கள். அது மட்டுமல்ல! இவர்கள் நம்பிக்கை வைத்துள்ள முல்லாக்களுக்கும் அள்ளித் தருகிறார்கள். இங்கு இவர்களது கை மேலேயும் (கொடுப்பதாகவும்) முல்லாக்களின் கை கீழேயும் (வாங்குவதாகவும்) இருப்பதைக் கவனிக்கத் தவறி விடுகிறார்கள். […]
அல்லாஹ்வின் விதிவிலக்குகளை வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் பின்பற்ற வேண்டும் என்று முதலில் எனக்கும், பின்பு உங்களுக்கும் உபதேசம் செய்கிறேன். ஒவ்வோர் ஆத்மாவும், தான் செய்த நன்மைகளும்; இன்னும், தான் செய்த தீமைகளும் அந்த(த் தீர்ப்பு) நாளில் தன்முன்கொண்டு வரப்பட்டதும், அது தான் செய்த தீமைக்கும் தனக்கும் இடையே வெகு தூரம் இருக்க வேண்டுமே என்று விரும்பும்;. அல்லஹ் தன்னைப்பற்றி நினைவு கூறுமாறு உங்களை எச்சரிக்கின்றான்;. இன்னும் அல்லஹ் தன் அடியார்கள் மீது கருணை உடையோனாக இருக்கின்றான். அல்குர்ஆன் […]
கடன் என்பது பாரதூரமான விஷயம் தமது உள்ளத்தில் எழும் சகல இச்சைளையும் பின்பற்றும் இன்றைய உலகில், நமது வாழ்க்கையின் அடிப்படை நோக்கத்தை மறந்து, இஸ்லாம் தடுக்கும் சில விஷயங்களில் நாமும் செயல் பட்டுக் கொண்டிருக்கிறோம். கடன் வாங்குவது இப்படிப்பட்ட ஒரு பாரதூரமான விஷயமாகும். இங்கு குறிப்பிடப்படுவது, வட்டிக்கு எடுக்கும் கடனைப் பற்றி அல்ல. அது ஹராம் என்று எல்லோருக்கும் தெரியும். ஆகையால் இங்கு குறிப்பிடப்படுவது வட்டியில்லாது கைமாற்றலுக்கு எடுக்கும் கடனை பற்றியே. இந்தக் கடனில் வட்டி சம்பந்தப்படவில்லை. இப்படிப் […]
اتَّبِعُواْ مَا أُنزِلَ إِلَيْكُم مِّن رَّبِّكُمْ وَلاَ تَتَّبِعُواْ مِن دُونِهِ أَوْلِيَاء قَلِيلاً مَّا تَذَكَّرُونَ (மனிதர்களே!) உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள்; அவனையன்றி (வேறெவரையும்) பாதுகாவலர் (களாக்கிக் கொண்டு அவர்)களை பின்பற்றாதீர்கள்; நீங்கள் சொற்பமாகவே நல்லுணர்வு பெருகிறீர்கள். (7:3) அல்லாஹ் இவ்வசனத்தின் கருத்தின்படி நாம் அல்லாஹ்வால் இறக்கப்பட்ட குர்ஆனையும் அவனால் அனுப்பப்பட்ட நபிصلى الله عليه وسلم அவர்களை மாத்திரமே பின்பற்ற வேண்டும். இதற்கு மாறாக மற்றவர்களைப் பாதுகாவலர்களாக நம்பி பின்பற்றுவோமேயானால் நிச்சயமாக […]