அன்று முதல் இன்று வரை உலகில் எல்லாப் பகுதிகளிலும் கல்வி அறிவு வளர்ச்சி அடைந்து காணப்பட்டாலும் சிலைகளை தெய்வமாக நம்பிக்கை கொண்டுள்ள மக்களிடையில் சோதிடம் சார்ந்த நம்பிக்கையும் பரவலாக காணப்படுகின்றன. இது பல்வேறு தன்மைகளில் காணப்படுகின்றது. இன்று விஞ்ஞான முறைகளை அவதானித்து புவியினதும், உயிரினங்களின் இயற்கை செயற்பாடுகளை அவதானித்து, புவியில் எதிர்காலத்தில் நடைபெற இருப்பதை முன்கூட்டியே கூற முடியும். இதனை யாரும் சோதிடம் என கூறுவதில்லை. இறைவன் தனது எல்லா படைப்புகளையும் ஒரு கணக்கின்படி இயக்குவதால் இது […]
புர்தாவில் நிச்சயமாக இவ்வுலகமும், மறு உலகமும் (நபியே!) உங்களின் நன்கொடைதான் மேலும் லவ்ஹுல் மஹ்பூழில் உள்ள ஞானம் உங்கள் ஞானங்களில் ஒரு சிறுபகுதிதான் என்னும் கவிதை அடியின் முற்பகுதியை குர்ஆன், ஹதீஸின் அடிப்படையில் அலசிப் பார்க்கும் பொழுது முற்றாக அவ்விரண்டிற்கும் அப்பாற்பட்ட நிலையில் அவர் பாடியுள்ளார் என்பதை படம் பிடித்துக் காட்டுகிறது. சுருக்கமாகக் கூறினால் குர்ஆனின் கருத்தையே தலைகீழாகப் புரட்டியிருக்கிறார். குர்ஆன் கூறுகிறது, அவன்தான் உங்களுக்கென்றே பூமியிலுள்ளவை அனைத்தையும் படைத்தான். (அல்குர்ஆன் 2:29) (நபியே!) நாம் உம்மை […]
“மவ்லிது” மறுக்கப்படுவது கவிதை என்பதற்காக அல்ல” என்பதை இதுவரை நாம் கண்டோம். வேறு பல காரணங்களுக்காகவே மவ்லிது மறுக்கப்படுகின்றது. முதல் காரணம் இன்று தமிழக முஸ்லிம்கள் ஓதி வருகின்ற ‘மவ்லிது’ களில் இஸ்லாத்தின் அடிப்படைக்கு முரண்பட்ட பல கருத்துக்கள் அடங்கியுள்ளன. பொய்யான கதைகள் பல அவற்றில் மலிந்துள்ளன. இது மவ்லிது மறுக்கப்படுவதற்கான முதற்காரணம். இதை ஐயத்திற்கு இடமின்றி தெளிவாக நாம் அறிய வேண்டுமானால் இன்றைய மவ்லிதுகளில் உள்ள வரிகளுக்கு நேரடியான அர்த்தத்தை நாம் தெளிவுபடுத்த வேண்டும். பிறகு, […]
கவிதைக்கு அனுமதியும், கவிஞர்களுக்கு அங்கீகாரமும் அல்லாஹ் தன் திருமறையில் கவிஞர்களைக் கண்டித்து விட்டு அதிலிருந்து சிலருக்கு விலக்கமளிக்கிறான். அந்தச் சிலர் கண்டனத்திற்கு உரியவர்கள் அல்லர் என்பதையும் தெளிவுபடுத்துகிறான். நாம் ஏற்கனவே எடுத்துக் காட்டிய வசனத்திற்கு அடுத்த வசனங்களில் பின்வருமாறு கூறுகிறான். “எவர் விசுவாசம் கொண்டு, நற்கருமங்களைச் செய்து, அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூர்ந்து, (பிறர் நிந்தனையால்) பாதிக்கப்பட்ட பின்னர் (தம் கவிதையால்) பழி வாங்கினார்களோ அவர்களைத் தவிர (மற்றவர்கள் மேற்கூறிய கண்டனத்திற்குரியவர்கள்) (அல்குர்ஆன் 26 :227) இந்தத் […]
நமது முன்னோர்கள் “பெரிய, பெரிய மேதைகள் எல்லாம் செய்திருக்கிறார்களே” என்ற பதில் சரியானதன்று என்பதை நாம் தெரிந்து கொண்டோம். குறிப்பாக நம் தமிழகத்தைப் பொறுத்தவரை, முன்னர் வாழ்ந்த அறிஞர்கள் எனப்படுவோரில் பெரும்பாலோர் அறிஞர்களாக, குர்ஆன் ஹதீஸை அறிந்தவர்களாக இருந்திருக்கவில்லை. மாறாக அரபுத்தமிழ் படித்துவிட்டுத் தங்களை அறிஞர்கள் என்று காட்டிக் கொண்டனர். தெளிவான சிந்தனை அவர்களுக்கு இருந்திருக்கவில்லை. அதனால்தான் “ஆங்கிலம் படிப்பது ஹராம்” என்று ‘பத்வா’ வழங்கினார்கள். முழுக்கால்சட்டை (பேண்ட்) அணிவது கூடாது என்று கூறினர். நபி(ஸல்) அவர்கள் […]
இன்றைக்கு மவ்லிது பற்றிய வாதப்பிரதிவாதங்கள் தமிழகத்தில் விறுவிறுப்படைந்தள்ளன. பல்லாண்டுகாலமாக தமிழகம், கேரளம், இலங்கையில் இரண்டாவது கருத்துக்கு இடமினிறி புனிதமான ஒரு வணக்கமாகக் கருதப்பட்டு வந்த “மவ்லிது” இன்று படாத பாடு படுகின்றது. மார்க்க அறிஞர்களில் ஒரு பிரிவினர், “மவ்லிது ஓதலாம்! ஓத வேண்டும்!” என்று ஒரு புறம் கூப்பாடு போடுகின்றனர். மார்க்க அறிஞர்களில் மற்றொரு பிரிவினர், “மவ்லிது ஓதக்கூடாது!” என்று எதிர் முழக்கம் செய்கின்றனர். இருதரப்பினமே தங்களின் கருத்துக்கு ஆதாரங்களை எடுத்துவைத்து, அதனை நியாயப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். […]
என்ன ஆயிற்று உங்களுக்கு..? என் அடக்கத்தலத்தில் எதற்கு இத்தனைக் கூட்டங்கள்? சமாதி வனக்கத்தைக் குழி தோண்டிப் புதைக்கப் போராடிய எனக்கே சமாதி கட்டி பச்சைப் பட்டு விரித்து பூ சாத்தி,பக்தி மணக்க மயிலிறகு மந்திரங்களும் சக்கரைப் பூ நேர்ச்சையும் உண்டியலும் காணிக்கையும்…. நெஞ்சு பொறுக்குதில்லையே ஒரே இறைவன்,குர்ஆனும் நபிவழியும் நம் வழிகாட்டுதல் என்று ஒரிறைக் கொள்கை சொன்ன என் பாடங்களை தர்கா விளக்கு திரியில் போட்டு எரிக்கின்றீர்களே… நான் சொன்னேனா? எனக்கு கந்தூரி வேண்டும்,உரூஸ் வேண்டும்,பூஜை வேண்டும்,நேமிதம் […]
முஹர்ரம் மாதம் பத்தாம் நாள் ஆஷுரா என்று கூறப்படுகின்றது. அந்த நாளை நபி(ஸல்) அவர்கள் சிறப்பித்துக் கூறியுள்ளனர். அதன் சரித்திரப் பின்னனியை நாம் காண்போம். நபி(ஸல்) அவர்கள் மதினாவுக்கு வந்தபோது யூதர்கள் ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்று வந்ததைக் கண்டனர். அது பற்றி நபி(ஸல்) அவர்கள் யூதர்களிடம் வினவிய போது மூஸா(அலை) அவர்களையும், இஸ்ரவேலர்களையும் அவர்களின் எதிரியிடமிருந்து (பிர் அவ்ன்) அல்லாஹ் காப்பாற்றிய சிறந்த நாளாகும் என்று யூதர்கள் காரணம் கூறினர். உங்களைவிட மூஸா(அலை) அவர்களுக்கு நான் […]