டைனோசரில் இருந்து மனிதன் வரை…..”,அல்லாஹ்வின் பேரழிவு யுகங்களின் அத்தாட்சி!

எஸ்.ஹலரத் அலி
(+91 99653 61068)

(– From Dinosaurs to Humans:….
Signs of Allah in the Ages of Mass Extinctions!)

1. The Divine Command: “Travel Through the Earth and See!”
Quran 29:20 – فَانظُرُوا كَيْفَ بَدَأَ الْخَلْقَ

அல்லாஹ் நம்மை அழைக்கிறான்!:

“அல்லாஹ் எவ்வாறு முதலில் படைப்பைத் துவங்கிப் பிறகு (அதனை எவ்வாறு) தன்பால் மீட்டுகிறான்

என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு மிகவும் சுலபம்.!

–அல்குர்ஆன் : 29:19

“பூமியில் நீங்கள் பிரயாணம் செய்து, அல்லாஹ் எவ்வாறு (முந்திய) படைப்பைத் துவங்கிப் பின்னர் பிந்திய படைப்பை எவ்வாறு உண்டு பண்ணுகிறான் என்பதைப் பாருங்கள்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுள்ளவன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.!

–அல்குர்ஆன் : 29:20

1400 வருடங்களுக்கு முன் இறங்கிய இந்த வசனங்கள், இன்று புவியியல் அறிவியல் கண்டுபிடித்த உண்மையுடன் நேரடியாக ஒத்துப்போகின்றன.

2. நமக்கு தெரியாத ஐந்து பேரழிவுகள்! (Mass Extinction):— அல்லாஹ்வின் மறக்கப்பட்ட அத்தாட்சிகள்!

பெரும்பாலானவர்களுக்கு இவ்வுலகம் சந்தித்த ஐந்து பெரும் பேரழிவுகள்! குறித்து எதுவுமே தெரியாது.
பள்ளியில் படித்திருந்தாலும் “அது அறிவியல், இஸ்லாத்துக்கு சம்பந்தம் இல்லை” என்று ஒதுக்கி விடுகிறோம்.

ஆனால் அல்லாஹ் சொல்கிறான்: “அழிக்கப்பட்ட இடங்களை, அழிந்த இனங்களின் எச்சங்களை சென்று பாருங்கள்!”.

ஏனெனில் முந்திய படைப்பை அழித்து மீட்டுருவாக்கிய எச்சங்கள் இன்றும் நம்மிடையே உள்ளன!.

இன்றும் நம்முடன் வாழும் “Living Fossils” – தொல்லுயிர் எச்சங்கள்!:

  1. முதலை Crocodile: – டைனாசர் காலத்திலிருந்தே மாறாமல் இருக்கும் உயிரினம். 20 கோடி வருட பழமை.
  2. கொமடோ டிராகன் Komodo Dragon:

டைனாசர்களின் நெருங்கிய உறவினன். பூமியின் கடைசி “சிறிய டைனாசர்.”

  1. கொலகாந்த் மீன் Coelacanth:

40 கோடி வருட பழமை. “உயிருடன் இருக்கும் பாஸில்”. 1938-ல் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது.

  1. நத்தை, சிப்பிகள் Nautilus, Horseshoe Crab

ஆர்டோவிசியன் காலத்திலிருந்தே இருக்கின்றன.

இவை அனைத்தும் “يُبْدِئُ ثُمَّ يُعِيدُهُ” – அல்லாஹ் ஆரம்பித்து, அழித்து, சிலவற்றை மட்டும் மீதி வைத்ததற்கான நேரடி சாட்சிகள்.

3. The 5 Great Extinctions: Allah’s Cycle of Creation and Recreation!:

From Ordovician to Cretaceous – 440 Million Years of History!

அல்லாஹ்வின் சுன்னத்:

படைத்தல் – அழித்தல் – மீட்டுருவாக்கம்!.

அறிவியல் இதை “Mass Extinction” என்கிறது.

1. Ordovician – 44 கோடி ஆண்டுகளுக்கு முன்!
பெருங்கடலில் மட்டுமே உயிரினங்கள். Trilobites, Brachiopods அழிந்தன.

ஞானம்!: கடல் வாழ்கையின் முதல் சோதனை!.

2. Devonian – 36 கோடி ஆண்டுகளுக்கு முன்…!

“மீன்களின் காலம்”. முதல் நிலவாழ் உயிரினங்களும், பெரிய காடுகளும் தோன்றின.

ஞானம்!!:

நிலத்திற்கு வந்த உயிரினங்களுக்கான பரிசோதனை!.

3. Permian – 25 கோடி ஆண்டுகளுக்கு முன் | “The Great Dying”
பூமியின் மிகப்பெரிய அழிவு. 96% உயிரினங்கள் அழிந்தன.
Synapsids முடிவுக்கு வந்தன.

ஞானம்: يُبْدِئُ… ثُمَّ يُعِيدُهُ. இந்த அழிவிற்கு பிறகு தான் டைனாசர்களின் யுகம் ஆரம்பித்தது.

4. Triassic – 20 கோடி ஆண்டுகளுக்கு முன்!

டைனாசர்களின் யுகத்தின் தொடக்கம். முதலைகளின் முன்னோர்கள் வாழ்ந்தனர்.

ஞானம்: அல்லாஹ் ஒரு புதிய “கலீஃபா” வகையை பூமியில் நிறுத்தினான்.

5. Cretaceous – 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன்
மெக்சிகோ வளைகுடாவில் ராட்சத எரிகல் மோதியது.

டைனாசர்கள் முழுமையாக அழிந்தன.

ஞானம்:

ஒரு ஆட்சி முடிந்தது. பாலூட்டிகளுக்கும், இறுதியாக மனிதனுக்கும் வழி பிறந்தது.

ஒவ்வொரு முறையும் அல்லாஹ் பழையதை அழித்து புதியதை “يُنْشِئُ النَّشْأَةَ” – உருவாக்கினான்.

4. The Meteorite that Ended an Era!
65 Million Years Ago and the Birth of Mammals!

கிரெட்டேசியஸ் அழிவு வெறும் விபத்து அல்ல. அது ஒரு திட்டம்.
ஒரு இனத்தின் காலம் முடிந்ததும் அல்லாஹ் அதை முடித்து விடுகிறான்.
டைனாசர்கள் அழிந்த 10 கோடி வருடங்களுக்கு பிறகு தான் மனிதன் பூமிக்கு வந்தான்.

இது நமக்கு சொல்லும் செய்தி!: எந்த இனமும் நிரந்தரம் இல்லை. நிரந்தரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே!.

5. From Dinosaurs to Humans: The Final Khalifah
Understanding Our Responsibility on Earth!

இன்று நாம் பூமியின் “கலீஃபா”.
நமக்கு முன் ஐந்து முறை உலகம் “Reset” ஆகியுள்ளது.
நாம் 6-வது முறை அதை கொண்டு வருகிறோமா?

“மனிதர்களின் கைகள் சம்பாதித்த காரணத்தால், நிலத்திலும்,கடலிலும் குழப்பம் வெளிப்பட்டு விட்டது.”

— அல் குர் ஆன்.30:41.

6. The Sixth Extinction? A Warning for Mankind

அறிவியலாளர்கள் இன்று சொல்கிறார்கள்: நாம் “6-வது Mass Extinction” ல் வாழ்கிறோம்.
முந்தைய 5 அழிவுகளும் இயற்கை காரணங்களால் வந்தன.
ஆனால் இந்த 6-வது அழிவு மனிதனின் கைகளால்! நடக்கிறது – காடு அழிப்பு, மாசு, பருவநிலை மாற்றம்.

இஸ்லாத்திற்கும் இவற்றுக்கும் சம்பந்தமில்லை என்று நினைப்பது தவறு.
இந்த எலும்புகள், இந்த உயிருள்ள பாஸில்கள் (Fossils) தான் மறுமைக்கான மிகப்பெரிய ஆதாரம்.

7. Conclusion: “Indeed, Allah is over all things competent”
Quran 29:20 – إِنَّ اللَّهَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

فَانظُرُوا – “பாருங்கள்* என்று* அல்லாஹ் சொல்கிறான்.
பாஸில் (Fossil) மியூசியத்தில் உள்ள ஒவ்வொரு டைனாசர் எலும்பும் அல்லாஹ்வின் செய்தி தான்:

  1. அல்லாஹ்வுக்கு மீட்டுவது சுலபம்! – முதல் படைப்பு செய்தவனுக்கு மறுமை சுலபம்!

_அல் குர் ஆன்.29:19*

  1. அறிவியல் “எப்படி” என்று காட்டுகிறது. குர்ஆன் “யார்?, ஏன்?” என்று காட்டுகிறது.
  2. சிந்திப்போம்! – அறிவியலை படித்து ஈமானை இழப்பதற்கு பதில், அறிவியலை படித்து ஈமானை அதிகப்படுத்த வேண்டும்.

சிந்திக்கும் சமூகத்திற்கு இதில் அத்தாட்சிகள் இருக்கின்றன!”

அல்ஹம்துலில்லாஹ் ரப்பில் ஆலமீன்!
வல்லாஹு அஃலம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *