
— எஸ். ஹலரத் அலி,
(+91 99653 61068.)
முன்னுரை:
குர்ஆனின் 54:7 வது அத்தியாயமான அல்-கமர் (அல்கமர்), மறுமை நாளின் நிகழ்வுகளை விவரிக்கும்போது,
மனிதர்கள் தங்கள் புதைகுழிகளிலிருந்து வெளியேறும் நிலையை, “பரவிக்கிடக்கும் வெட்டுக்கிளிகளைப் போல” என்று உவமைப்படுத்துகிறது.
” குஷ்ஷ’அன் அBப்ஸாருஹும் யக்ருஜூன மினல் அஜ்தாதி க அன்னஹும் ஜராதும் முன்தஷிர்!”
(அந்நாளில்) இவர்கள் கீழ் நோக்கிய பார்வையுடன் சமாதிகளிலிருந்து வெளிப்பட்டுப் பரவிக் கிடக்கும் வெட்டுக் கிளியைப்போல்,
— அல்குர்ஆன் : 54:7.
இது வெறும் இலக்கிய உவமையா அல்லது அதன் பின்னணியில் ஏதேனும் உயிரியல் ரகசியங்கள் ஒளிந்துள்ளனவா என்ற கேள்வி எழுகிறது. இந்த ஆய்வு, குர்ஆன் பயன்படுத்தும் இந்த உவமையையும், நவீன உயிரியல் நிகழ்வுகளான ‘Mass Emergence’ (பெரும் வெளியேற்றம்) ஆகியவற்றிற்கு இடையேயான ஆச்சரியமான ஒத்திசைவை ஆராய்கிறது.
- இலக்கிய நயமும், காட்சிப்படுத்தலும்!.
குர்ஆன் 54:7 வசனம்,
“அவர்கள் தாழ்ந்த பார்வைகளுடன், சிதறிப் பரவிய வெட்டுக்கிளிகளைப் போலத் தங்கள் புதைகுழிகளிலிருந்து வெளியேறுவார்கள்”
எனக் குறிப்பிடுகிறது. இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள ‘ஜராத்’ (வெட்டுக்கிளி) என்ற சொல், எண்ணிக்கையில் அடங்காத, திசையறியாது அலையும் ஒரு பெருந்திரளைக் காட்சிப்படுத்துகிறது. மறுமை நாளில் மனிதர்கள் கொள்ளும் திகைப்பு, அடக்கம் மற்றும் பயத்தை, நிலத்திலிருந்து வெளிப்படும் வெட்டுக்கிளிகளின் நடத்தைக்கு ஈடாகக் குர்ஆன் ஒப்பிடுகிறது.
- உயிரியல் பார்வை: வெட்டுக்கிளிகளும், சிகடாக்களின் (Cicadas) சுழற்சியும்
நாம் ஆய்வு செய்யும் போது, இரண்டு முக்கிய இயற்கை நிகழ்வுகள் இங்கே கவனிக்கத்தக்கவை.
வெட்டுக்கிளிகளின் பெருவெளியேற்றம் (Locust Swarming): இவை கூட்டம் கூட்டமாக மண்ணிலிருந்து வெளிப்படும்போது, ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கி நகர்வதும், அவற்றின் கண்கள் கீழ்நோக்கிய நிலையில் நிலத்தைப் பார்த்தவாறு இருப்பதும், பணிவையும் ஒருவிதமான இலக்கற்ற அச்சத்தையும் உணர்த்தும் குறியீடுகளாக உள்ளன.
- வெட்டுக்கிளி போன்ற வேறொரு இனமான..
சிகடாக்களின் வாழ்க்கைச் சுழற்சி (13 & 17 Years Periodical Cicadas):* சிகடாக்கள் 13 அல்லது 17 ஆண்டுகள் மண்ணுக்குள் உறக்க நிலையில் (Dormancy) இருந்து, திடீரென ஒரு குறிப்பிட்ட காலநிலையில் கோடிக்கணக்கான எண்ணிக்கையில் பூமியைத் துளைத்து வெளியே வருகின்றன. இது “மரணத்திற்குப் பின் உயிர்த்தெழுதல்” என்ற கருத்தாக்கத்திற்கு, இயற்கையில் உள்ள ஒரு மிகச்சிறந்த உயிரியல் மாதிரியாகும்.
3.
சூர் ஊதப்படுதலும் இயற்கை சமிக்ஞைகளும் (The Trigger Mechanism).
மண்ணுக்குள் இருக்கும் பூச்சிகள் எப்படித் தங்களுக்குள் தகவல் தொடர்பைப் பேணிக்கொண்டு, ஒரே நேரத்தில் வெளியேறுகின்றன?
- உயிரியல் கடிகாரம்: பூச்சிகளின் உடலில் உள்ள மரபணு கடிகாரம், நீண்ட காலம் மண்ணுக்குள் இருந்தாலும் நேரத்தைத் துல்லியமாகக் கணக்கிடுகிறது.
- சுற்றுச்சூழல் தூண்டுதல்:
அவன்தான் மேகத்திலிருந்து மழையைத் தனது திட்டப்படி இறக்கி வைக்கிறான். (இவ்வாறு செய்கின்ற அல்லாஹ்வாகிய) நாம்தான்,
பின்னர் (மழையை பொழியச் செய்து) அதைக்கொண்டு வறண்டுபோன பூமியை உயிர்ப்பிக்கிறோம். இவ்வாறே நீங்களும் (இறந்த பின்னர் சமாதிகளிலிருந்து உயிர் கொடுத்து) வெளியேற்றப்படுவீர்கள்.
— அல்குர்ஆன் : 43:11.
மழை பொழிதல் மூலம்
மண் வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் ஒரு குறிப்பிட்ட நிலையை அடையும்போது, அவை ‘வெளியேறுவதற்கான’ சிக்னலை பெறுகின்றன.
மறுமை நாளில் ‘சூர்’ ஊதப்படுவது என்பது, இந்த அகிலத்தின் அனைத்து இயக்கங்களையும் கட்டுப்படுத்தும் ‘இறைக்கட்டளை’ ஆகும். பூச்சிகளுக்குக் கிடைக்கும் தட்பவெப்ப சிக்னலைப் போல, மறுமையில் மனிதர்கள் உயிர்த்தெழுவதற்கு இறைவன் வழங்கும் கட்டளையே அந்தத் தூண்டுதல் (Trigger) என்பதை, இந்த இயற்கை நிகழ்வு நமக்கு எளிமையாகப் புரிய வைக்கிறது.
வெட்டுக்கிளிகளின் வெளியேற்றத்தை விரிவாக பார்ப்போம்!
*ஒரு கேள்வியுடன் தொடங்குவோம்!
ஆதம் (அலை) முதல் கடைசி மனிதன் வரை சுமார் 1170 கோடி பேர். எல்லாரும் இறந்து மண்ணோடு மண்ணாகிவிட்டார்கள். எலும்பு கூட இல்லை. ஒரு சத்தம். ஒரு நொடி. எல்லோரும் எப்படி எழுவார்கள்?
1400 வருடங்களுக்கு முன் குர்ஆன் ஒரு பதில் சொன்னது. ஒரே ஒரு வரியில். ஒரே ஒரு உவமையில்.
“பரவிக்கிடக்கும் வெட்டுக்கிளிகளைப் போல் அவர்கள் மண்ணறைகளிலிருந்து வெளியேறுவார்கள்” [54:7]
இது வெறும் கவிதை இல்லை. 2026-ன் நவீன அறிவியல் “ஆம்! அப்படித்தான் நடக்கும்” என்று நிரூபிக்கிறது. எப்படி?
- குர்ஆன் தரும் மூன்று குறியீடுகள் – வெட்டுக்கிளி தரும் மூன்று பதில்கள்!
குறியீடு 1: “மண்ணறையிலிருந்து வெளியேறுதல்” – “மின் அஜ்தாஸ்!”
வெட்டுக்கிளி அறிவியல்:
பாலைவன வெட்டுக்கிளி Schistocerca gregaria முட்டைகள் மண்ணுக்குள் 2-5 செமீ ஆழத்தில் Diapause என்ற உறக்க (Hybernation) நிலையில் இருக்கும்.Periodic Cicada எனும் வெட்டுக்கிளிகள் சுமார்13 முதல் 17 வருடம் வரை மண்ணறையில் புதைந்து கிடக்கும்.
மழை பெய்து மண் ஈரமானதும், ஒரு இரவில் கோடிக்கணக்கில் மண்ணை கிழித்துக்கொண்டு வெளியேறும்.
கியாமத் நாள்:
மனிதன் மண்ணில் மக்கி “அஜ்புத் தனப்” என்ற முதுகெலும்பின் கடைசி துகள் மட்டும் அழியாமல் இருக்கும் என்கிறது ஹதீஸ்.
இறப்புக்குப் பிறகு மனித உடலில் மக்காமல் எஞ்சியிருக்கும் இடுப்பு வால் எலும்பு *Coccyx எனப்படுகிறது. இது முதுகெலும்புத் தொடரின் மிகக் கீழே அமைந்துள்ள சிறிய முக்கோண வடிவப் பகுதியாகும். இஸ்லாமிய மற்றும் சில ஆன்மீக நம்பிக்கைகளின்படி, இந்த Coccyx எலும்பானது பூமிக்குள் மக்காமல் அப்படியே அழியாமல் இருக்கும்…. உலக முடிவில் (மறுமை) மீண்டும் உயிர்ப்பிக்கப்படும் போது இந்த எலும்பில் இருந்தே மனிதன் உருவாக்கப்படுவான் என்றும்…ஹதீஸ் கூறுகிறது.
ஸூர் ஊதியதும் அதிலிருந்து முழு உடல் முளைத்து வெளியேறும்.
பொருத்தம்:
மண்ணுக்குள் “இறந்தது போல” இருந்து “ஒரு கட்டளையில்” உயிர்பெற்று வெளியேறுதல் – இரண்டும் ஒன்று.
குறியீடு 2: “வெட்டுக்கிளிகள் போல்” – “கஅன்னஹும் ஜராதுன்”
வெட்டுக்கிளி!
அறிவியல் சொல்வதென்ன?:
2020-ல் கிழக்கு ஆப்பிரிக்காவில் ஒரு கூட்டத்தில் மட்டும் 2400 கோடி வெட்டுக்கிளி ஒரே வாரத்தில் வெளியேறியது. ஒரு சதுர கிமீ-ல் 8 கோடி. சூரியனை மறைக்கும் அடர்த்தி.
கியாமத் நாள்: மஹ்ஷர் மைதானத்தில் ஆதம் முதல் கடைசி மனிதன் வரை. நபி (ஸல்) சொன்னார்கள்: “கால் வைக்க இடம் இருக்காது”.
பொருத்தம்: “எண்ண முடியாத கூட்டம்” என்ற கருத்து. குர்ஆன் சொன்ன “ஜராத் – வெட்டுக்கிளி” என்ற சொல் தான் பூமியில் அதிக எண்ணிக்கையில் ஒரே நேரம் வெளியேறும் உயிரினம்.
குறியீடு 3: “பரவிக்கிடக்கும்” – முன்தஷிர்
“கீழ்நோக்கிய பார்வை” – குஷ்ஷஅன் அப்ஸாருஹும்
வெட்டுக்கிளி அறிவியல்:
மண்ணிலிருந்து வெளியேறியதும் வெட்டுக்கிளி “Gregarious Marching Phase” க்கு மாறும். தலை குனிந்து, திசை தெரியாமல், கோடிக்கணக்கில் ஒரே திசையில் காற்று அடிக்கும் பக்கம் ஓடும். இதற்கு பெயர் March of Death.
கியாமத் நாள்: குர்ஆன் 70:43
“அந்நாளில் அவர்கள் மண்ணறைகளிலிருந்து வேகமாக கீழ் நோக்கிய பார்வையுடன், பயம்,திகைப்பு, அவமானத்துடன் வெளியேறுவார்கள்,
பொருத்தம்:
தலை குனிந்த கூட்டம், திசை தெரியாமல் ஓட்டம் – வெட்டுக்கிளிக்கும் மனிதனுக்கும் ஒரே நடத்தை.
- “*Gregarious Transformation” – குர்ஆன் சொல்லாமல் சொன்ன அதிசயம்!
வெட்டுக்கிளிக்கு இரண்டு வாழ்க்கை உண்டு. இதை 1921-ல் தான் விஞ்ஞானி போரிஸ் உவரோவ் (Boris Uvarov) கண்டுபிடித்தார்.
முதல் நிலைக்குப்பெயர்.Solitary phase.– தனிமை நிலை.
மனிதர்களும் மண்ணறையில் தனிமையில் இருக்கும் Solitary Phase.
அடுத்து மண்ணறையை விட்டு உயிர்தெழுந்து வெளியேறும் இரண்டாம் நிலை Gregarious phase.
வெட்டுக்கிளிகள் சாதாரண Solitary நிலையில் அவைகள் பச்சை நிறத்தில் அமைதியாக இருக்கும்.
இது போன்றே கபனிடப்பட்ட மையத் பிரேதங்களும் Solitary எனும் பர்ஷாக் கப்ர் வாழ்க்கையில் அமைதியாக உறங்கும்.
வெளிக்கிளம்பும் நேரம் வந்தவுடன் வெட்டுக்கிளிகள் Gregarious Phase எனும் இரண்டாம் நிலைக்கு வந்தவுடன்..அவைகளின் உடல் நிறம்
மஞ்சள் + கருப்பு என பழுப்பு நிறத்தில் மாறி விடும்.2 மணி நேரத்தில் Serotonin ஹார்மோன் அவைகளை மாற்றும்.
கப்ரில் அமைதி. ஸூர் ஊதியதும் உடல், உள்ளம் முழுக்க மாற்றம்.
பிறந்த கோலத்தில் மஹ்ஷரில் கோடி பேருடன் உயிர்தெழுவார்கள்.ஒரே உணர்வு, பயம்.
குர்ஆன் 54:7 கூறும்.. “வெட்டுக்கிளிகள் போல்” என்று சொன்னது இந்த “Gregarious Phase”-ஐ தான்.
மண்ணுக்குள் தனிமையில் இருந்தவன், ஒரு கட்டளையில் நிறம், குணம், கூட்டம் எல்லாம் மாறி வெளியேறுவான். 1400 வருடம் முன் இந்த ,Hormone Science யாருக்கு தெரியும்?
- 3 நவீன கேள்விகள் – குர்ஆன் தரும் மூன்று பதில்கள்
கேள்வி 1: மக்கிய எலும்பு எப்படி உயிர் பெறும்?
வெட்டுக்கிளி ( Cicada) பதில்:
13-17 வருடம் மண்ணுக்குள் DNA அழியாமல் இருக்கும் முட்டை, 1 மழையில் உயிர் பெறுகிறது.
குர்ஆன் பதில் 30:19:
“இறந்த பூமியை அவன் மழை நீர் கொண்டு உயிர்ப்பிப்பது போல், உங்களையும் வெளியேற்றுவான்”.
கேள்வி 2: கோடி பேர் ஒரே நேரத்தில் எப்படி எழுவார்கள்?
வெட்டுக்கிளி பதில்:
2400 கோடி வெட்டுக்கிளி ஒரு வாரத்தில் “Synchronized Emergence”. சிக்னல்: மழை + வெப்பம் + ஈரப்பதம்.
குர்ஆன் பதில் 36:51:
“ஸூர் ஊதப்பட்டதும் மண்ணறைகளிலிருந்து தங்கள் இறைவனை நோக்கி விரைவார்கள்”. சிக்னல்: ஒரே ஒரு சத்தம்.
கேள்வி 3: ஏன் “வெட்டுக்கிளி”? வேறு உயிரினம் இல்லையா?
வெட்டுக்கிளி பதில்:
1.பூமியில் வேறு எந்த உயிரினமும் மண்ணுக்குள் 13,17 வருடம் பிரேதமாக புதைந்து கிடப்பதில்லை. அது Periodic Cicada வெட்டுக்கிளி இனம் மட்டுமே!
வேறு எந்த ஜீவராசியும் கோடிக்கணக்கில்
ஒரே நேரத்தில்
தலை குனிந்து வெளியேறாது.
குர்ஆன் ஞானம்:
உலகிலுள்ள 87 லட்சம் உயிரினத்தில் வெட்டுக்கிளி என்ற இதை மட்டும் Select செய்தது யார்? படைத்தவன் தான்.
இது தற்செயலா? திட்டமிடலா?
- 1921: ஆம் ஆண்டு வெட்டுக்கிளி (Gregaries Phase) மாற்றம் கண்டுபிடிப்பு.
- 2009: ஆம் ஆண்டு Serotonin நிறம் மாற்றுகிறது என கண்டுபிடிப்பு.
- 2020:ஆம் ஆண்டு, Satellite மூலம் 2400 கோடி ஒரே நேரம் வெளியேறியதை பார்த்தோம்.
ஆனால் கி.பி.610-ம் ஆண்டு:
படிக்க எழுத தெரியாத ஒருவர், முஹம்மது (ஸல்) என்னும் பெயருடையவர்…
பாலைவனத்தில் நின்று, “மண்ணறை + வெட்டுக்கிளி + பரவுதல்” என்று மூன்று சொல்லில் இந்த மூன்று அறிவியலையும் சொல்லிவிட்டார்.
கேள்வி: இது மனித வார்த்தையா? அல்லது “அவனே மரணிக்கச் செய்கிறான், அவனே உயிர்ப்பிக்கிறான்” 53:44 என்று சொன்ன படைப்பாளனின் வார்த்தையா?
“சிந்திக்கும் சமூகத்திற்கு இதில் சான்றுகள் உள்ளன” 16:69.
. ஆய்வின் முடிவு!
குர்ஆனின் இந்த வசனம், அன்றைய காலத்து மக்களுக்குப் புரியக்கூடிய ஒரு எளிய உதாரணத்தைப் பயன்படுத்தி, மறுமையின் மிகப்பெரிய நிகழ்வை விளக்கியுள்ளது. அறிவியல் ரீதியாகப் பார்க்கும்போது, “மண்ணுக்குள் மறைந்திருந்து, குறிப்பிட்ட நேரத்தில், பெரும் கூட்டமாக வெளிப்படுதல்” என்பது இயற்கையில் சிகடாக்கள் மற்றும் வெட்டுக்கிளிகளால் நிரூபிக்கப்பட்ட ஒரு அறிவியல் உண்மை!
.
இந்த ஒப்பீடு, குர்ஆனின் இலக்கியத் தரம் மற்றும் அதன் ஆழமான அவதானிப்புத் திறனை (Observation) மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்துகிறது. மறுமை என்பது ஏதோ கற்பனை அல்ல; அது இயற்கையின் விதிகளுக்கு அப்பாற்பட்ட, ஆனால் இயற்கையின் படைப்புகளால் முன்னுதாரணம் காட்டப்பட்ட ஒரு பேருண்மை என்பதை இந்த ஆய்வு வெளிப்படுத்துகிறது.
ஆய்வுக் குறிப்பு:
இந்த உவமை, மறுமை நாளின் பிரம்மாண்டத்தை மனிதர்களின் அறிவு எல்லைக்கு உட்பட்டு விளக்குவதற்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு உயிரியல் குறியீடாகவே (Biological Symbolism) பார்க்கப்பட வேண்டும்.
அல்லாஹ் அறிந்தவன்!