
எஸ். ஹலரத் அலி, திருச்சி-7 (Mob.9965361068)
நபி (ஸல்) பழுத்த பேரீச்சம்பழங்களுடன் (ருத்ப்) கனியாத பேரீச்சங்காய்களை (புஸ்ர்) கலந்து ஊற வைப்பதைத் நபி ( ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.
முஸ்லிம்.4028.
நபி (ஸல்) தடை செய்ததற்கு அறிவியல் அடிப்படையில் நியாயமான காரணங்கள் உள்ளன. இஸ்லாம் மதுவை மட்டும் தடை செய்யவல்லை. மது உற்பத்திக்கான அடிப்படை தயாரிப்பையே தடை செய்கிறது.
முக்கியமாக பேரீச்சம் கனிகளும்,காய்களும் கலந்து ஊற வைக்கப்படும் போது.. அதில் மது உருவாவாதற்கான நொதித்தல் காரணிகள் உள்ளன. (Fermentation Process).
அறிவியல் காரணம்.
நொதித்தல் செயல்முறை. (Fermentation).
பழுத்த பேரீச்சம்பழங்களில் சர்க்கரை (Fructose மற்றும் (Glucose) அளவு அதிகமாக இருக்கும். இவை காற்றில் உள்ள இயற்கையான ஈஸ்ட் (Yeast) மூலம் எளிதாக புளிக்கவைக்கப்படலாம் (Fermentation). கனியாத பேரீச்சங்காய்களின் மேற்புற தோலில் இருக்கும் நுண்ணுயிர் ஈஸ்ட் மூலமும் நொதித்தல் நடக்கலாம். பேரீச்சங்காயில் சிறிதளவு சர்க்கரை மற்றும் ஈரப்பதம் இருப்பதால், இவை கலந்து ஊற வைக்கப்படும்போது, சர்க்கரை மற்றும் ஈரப்பதத்தின் கலவை ஈஸ்ட்டின் செயல்பாட்டை துரிதப்படுத்தி, எத்தனால் (மது) உற்பத்தியை ஏற்படுத்தும். இந்த செயல்முறை குறிப்பாக வெப்பமான அரேபிய காலநிலையில் மிக விரைவாக நடைபெறும், இதனால் மது உருவாகும் அபாயம் அதிகம்.
மாசுபடுத்தல் மற்றும் நச்சுத்தன்மை:
பழுத்த மற்றும் கனியாத பழங்களை ஒன்றாக ஊறவைக்கும்போது, கனியாத பழங்களில் உள்ள அமிலங்கள் (Acids) மற்றும் பிற இயற்கை கூறுகள், பழுத்த பழங்களின் சர்க்கரையுடன் வினைபுரிந்து, எதிர்பாராத ரசாயன மாற்றங்களை ஏற்படுத்தலாம். இது உணவு மாசுபடுத்தல் அல்லது நச்சு பொருட்கள் ( Food poison) உருவாகும் வாய்ப்பை அதிகரிக்கும்.
கனியாத பழங்களில் சில நுண்ணுயிரிகள் (Bacteria) இருக்கலாம், இவை பழுத்த பழங்களுடன் கலந்து பாதுகாப்பற்ற நிலையை உருவாக்கலாம்.
இஸ்லாமிய தடைக்கான மற்றும் அறிவியல் விளக்கம்.
ஹதீஸ்களில், நபி (ஸல்) “நபீத்” (பழச்சாறு ஊறவைப்பது) தொடர்பாக குறிப்பிட்ட வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார்கள். பழுத்த மற்றும் கனியாத பழங்களை கலந்து ஊறவைப்பது மது உருவாக வழிவகுக்கும் என்பதால், இதைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டது.
இது போன்றே பேரீச்சம் பழங்களயும், உலர்ந்த திராட்சைகளையும் ஒன்று சேர்த்து ஊற வைக்க தடை செய்தார்கள்.
இதற்கான
அறிவியல் ரீதியாக காரணம் என்ன வென்றால்.. திராட்சையின் மேற்தோலில் ஒட்டிக்கொண்டிருக்கும் நுண்ணுயிர் பாக்டீரியாவானது… பேரீச்சங்கனியில் உள்ள சர்க்கரையுடன் (Glucose) சேர்ந்து வெப்பமான சூழலில் நொதித்தல் (Fermentation) ஏற்பட்டு மது வாக மாறிவிடும்.
இந்த தடை மூலம் மது உருவாகுவதைத் தடுப்பதற்கும், உணவு பாதுகாப்பை ( Food poison) உறுதி செய்வதற்கும் ஒரு முன்னெச்சரிக்கையாக அமைகிறது.
அறிவியல் சொல்வது என்ன?
நொதித்து புளித்தலின் (Fermentation )அடிப்படை:
நுண்ணுயிரிகளின் (Microorganisms) நொதித்துப்புளித்தல் செயல்முறையில் (Fermentation) முக்கியப் பங்கு வகிக்கின்றன. அவை சர்க்கரைகளை (குளுக்கோஸ், புரக்டோஸ் போன்றவை) உடைத்து ஆற்றல் உற்பத்தி செய்யும் போது, எத்தனால், கார்பன் டை ஆக்சைடு, போன்ற பொருட்களை உருவாக்குகின்றன.
இதில் முக்கிய நுண்ணுயிரிகளாக ஈஸ்ட் (Saccharomyces) மற்றும் பாக்டீரியாக்கள் (Bacteria) செயல்படுகின்றன.
மதுபான புளிப்பு (Alcoholic fermentation) செயல்முறையில், சர்க்கரைகளை (குளுக்கோஸ்) எத்தனால் (மது) மற்றும் கார்பன் டை ஆக்சைடு (CO₂) ஆக மாற்றுகிறது.
வேதியியல் சமன்பாடு:
சர்க்கரை + ஈஸ்ட் → எத்தனால் ( Alcohol மது) + கார்பன் டை ஆக்சைடு.
இந்த செயல்முறை ஆக்ஸிஜன் இல்லாத சூழலில் (Anaerobic) நடைபெறுகிறது.
பழுத்த பழங்களில் உள்ள அதிக சர்க்கரை மற்றும் கனியாத பழங்களில் உள்ள ஈரப்பதம் இந்த செயல் முறைக்கு உகந்த சூழலை உருவாக்குகிறது.
நவீன ஆய்வுகள்:
பழச்சாறுகளை கலந்து ஊறவைக்கும்போது, சில நுண்ணுயிரிகளின் (ஈஸ்ட், பாக்டீரியா) செயல்பாடு சாராயம் (Ethanol) உற்பத்தியை துரிதப்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இது இஸ்லாமிய தடையின் நோக்கத்தை அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்துகிறது.
நபி (ஸல்) இந்த கலவையைத் தடை செய்ததற்கு முக்கிய காரணம், மது ( Alhocol) உருவாகும் அபாயத்தைத் தவிர்ப்பது மற்றும் உணவு பாதுகாப்பை உறுதி செய்வதாகும். அறிவியல் ரீதியாக, இது “நொதித்துப்புளித்தல்” (Fermentation process) செயல்முறையின் இயல்பு மற்றும் அதனால் ஏற்படும் எத்தனால் எனும் ஆல்கஹால் சாராய உற்பத்தியைத் தடுப்பதற்கு ஒத்திசைகிறது. இந்த வழிகாட்டுதல், அந்தக் காலத்தில் மக்களின் ஆரோக்கியத்தையும், இஸ்லாமிய மதுவிலக்கு கொள்கையையும் பாதுகாக்க …இறுதி நாள் வரை உதவுகிறது.