யூனுஸ் நபிக்கு நிழல் தந்த சுரைக்கொடி-குர்ஆன் கூறும் அறிவியல் மற்றும் மருத்துவ விளக்கங்கள்!

in அறிவியல்

எஸ்.ஹலரத் அலி, ( +91 9965361068)

குர்ஆனில் யூனுஸ் (அலை) அவர்களின் வரலாற்று சம்பவங்களை சூரா அஸ்ஸாஃபாத் 37:139-148.வசனங்களில் அல்லாஹ் கூறுகிறான்.
அல்லாஹ்விடம் அவர் கோபித்துக்கொண்டு கப்பலேறி பயணம் செய்யும் போது…ஏற்பட்ட புயற்காற்று காரணமாக …அல்லாஹ்வின் கட்டளைப்படி ஒரு பெரிய மீன் அவரை விழுங்கியது.

அவர் பெரிய மீனின் வயிற்றில் இருந்து… அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கேட்டதன் பயனாக, அவரை கடற்கரை மணல் வெளியில் வீசி எறியும்படி அல்லாஹ் மீனுக்கு கட்டளையிடுகின்றான்.

யூனுஸ் நபி அவர்கள் உடல் ரீதியாக பலவீனமான நிலையில் (இரத்தக்குறைபாடு, ஈரப்பத இழப்பு, வெப்பத்தால் ஏற்படும் உடல் சூடு போன்றவை) கடற்கரை மணற்பரப்பில் எறியப்பட்டார்.

இவருக்காக அல்லாஹ் “யக்தீன்” (Yaqteen) என்ற சுரைக்கொடியை (Gourd vine) அவருக்கு மேல் முளைக்கச் செய்து நிழலிடச் செய்தான் என்று
குர் ஆன்-37:146 வசனம் கூறுகிறது.

உலகத்தில் ஏராளமான தாவரங்கள் விளைகின்றன.ஆனால் அல்லாஹ் சுரைக்கொடியை தேர்ந்தெடுக்க காரணம் என்ன? என்பதை ஆய்வு செய்தால் பல உண்மைகளை அறியமுடியும்.

அல் குர் ஆன் 37:146 வசனத்தில் “யக்டீன்” (Yaqteen) எனும் சுரைக்கொடியை குறிப்பிடுகிறான்.இது ஒரு வகை (Creeper) படரும் கொடி குடும்பத் தாவரமாகும்.

பூசணி (pumpkin), சுரைக்காய் (Bottle gourd) அல்லது க்வாஷ் (Squash) போன்ற Cucurbita குடும்பத்தைச் சேர்ந்தது. இந்தச் செடியின் இலைகள் அகலமானவை, விரைவாக வளரும், மற்றும் பல மருத்துவ பண்புகளைக் கொண்டுள்ளது. இதன் அறிவியல் மற்றும் மருத்துவ காரணங்களை விரிவாக ஆய்வு செய்வோம்.

  1. விரைவான வளர்ச்சி மற்றும் நிழல் வழங்கல்*: சுரைச்செடிகள் (Cucurbita spp.) விரைவாக படர்ந்து வளரும் தாவரமாகும். அவை 1-2 வாரங்களுக்குள் 5-10 அடி நீளம் விரிவடையும் திறன் கொண்டவை. யூனுஸ் நபி அவர்கள் மீனின் வயிற்றில் இருந்த வெப்பத்தின் காரணமாகவும் கடற்கரை மணற்பரப்பில் திறந்த வெளியில் சூரிய ஒளி வெப்பத்தாலும் கடும் களைப்பு மற்றும் சோர்வில் இருந்திருப்பார்கள். சுரைக்கொடியானது கடற்கரை மணற்பரப்பில் விரைவாக வளர்ந்து பெரிய இலைகளால் நிழல் அளித்திருக்கலாம். இது உடல் வெப்பத்தை (Hyperthermia) குறைத்து, பலவீனத்தை (Exhaustion) போக்க உதவியிருக்கும். தாவரவியலில், இத்தகைய இலைகள் மூலம் நீர் ஆவியாக்கம் (Transpiration) செய்து சுற்றுப்புற வெப்பத்தை 5-10°C அளவில் குறைக்கும். இலைகளின் அகலம் மற்றும் கீழே குறைந்த வெப்பம்*: சுரைச்செடியின் இலைகள் 20-30 செ.மீ அகலம் கொண்டவை, பச்சை நிறத்தில் உள்ளன. இவை நிழல் வழங்குவதோடு, இலைகளுக்கு கீழே (Stomatal transpiration) ஈரப்பதம் அதிகமாகவும், வெப்பம் குறைவாகவும் (Microclimate effect) இருக்கும். இது யூனுஸ் (அலை) அவர்களின் உடலை குளிரூட்டி,நீரிழப்பை (Dehydration) தடுத்திருக்கலாம் என்று ஆய்வுகள் காட்டுகின்றன:

சுரைக்கொடியின் (Cucurbita) இலைகளின் நிழல் தரும் தன்மையின் காரணமாக (Shade provision) மண்ணின் வெப்ப நிலையை (Soil temperature) 3-5°C அளவு குறைக்கும், இது (Fatigue) களைப்பை போக்க உதவும்.

  1. **மருத்துவ மற்றும் ஊட்டச்சத்து பயன்கள்: பலவீனம் மற்றும் களைப்பை போக்குதல்** சுரைச்செடி பழங்கள் 90-95% நீர் கொண்டவை. யூனுஸ் (அலை) அவர்கள் மீனின் வயிற்றில் இருந்து வெளியேறியபோது, அவர் நீரிழப்பு மற்றும் உப்பு சத்து சம நிலையை இழந்திருக்கலாம்.( Dehydration and Electrolyte Imbalance). இந்தச் செடியின் பழங்கள் அல்லது இலைகளில் உள்ள அதிகப்படியான நீர் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள், (Potassium-rich) உடல் நீரிழப்பை மீட்டெடுக்க உதவும். வெப்பமான சூழலில், இது இயற்கையான குளிரூட்டியாக (Natural coolant)ஆக செயல்படும், சூரிய வெப்பத்தால் உண்டாகும் உடல் சோர்வை (Summer fatigue) குறைக்கும். ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆற்றல் மீட்பு: சுரைச்செடிகள் வைட்டமின் சத்துக்கள் நிறைந்தவை.( Vitamin C -10-20 mg) இது (Immune system,) நோய் எதிர்ப்பு ஆற்றலை வலுப்படுத்தி, மீனின் வயிற்றில் இருந்த போது போதிய ஆக்ஸிஜன் இன்மையால் ஏற்பட்ட சுவாசத் திணரலை (Oxidative stress Fatigue) குறைக்க வைட்டமின் சி உதவுகிறது.(Vitamin C deficiency).
    • Vitamins A, B மற்றும் Minerals:

சுரைக்காயில் உள்ள பிற சத்துக்களான பீட்டா கரோட்டின்,இரும்புச்சத்து, மக்னீசியம்,போன்றவை உடலுக்கு தேவையான சத்துக்களை மேம்படுத்தி உடல் சோர்வை போக்க உதவுகிறது.
(Beta-carotene (vitamin A precursor), B-vitamins (B6, folate), iron, magnesium).

சுரைக்காயனது (lauki) (Energy booster)-உடலுக்கு தேவையான ஆற்றல் சக்திகளை அதிகப்படுத்துகிறது. மேலும் ஊட்டச்சத்து குறைபாட்டை,(Nutrient replenishment)-ஐ நிவர்த்தி செய்யுகிறது.

சுரைக்காய் உடல் சோர்வைப்போக்கும் மருந்தாக உள்ளது என்று – (Anti-fatigue Effects) ஆய்வுகள் காட்டுகிறது.

Cucurbita moschata குடும்பத்தை சேர்ந்த பூசணி சாறானது (pumpkin extract) உடல் சோர்வை( physical fatigue) -ஐ குறைத்து,உடற்பயிற்சிக்கான திறனை (Exercise performance)-ஐ மேம்படுத்தியது. Liver glycogen மற்றும் free fatty acids-ஐ அதிகரித்தது, இது மனித உடலில் ஏற்படும் பலஹீனம் (Weakness recovery) மற்றும் சோர்வை போக்க உதவுகிறது.

  • மருத்துவ பாரம்பரியம்: இஸ்லாமிய மருத்துவத்தில் சுரைக்காயானது செரிமான பிரச்சினை, இரத்த அழுத்தம் மற்றும் நினைவாற்றலுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. (Tibb-e-Nabawi– yaqteen digestion, blood pressure, memory)

ஆயுர்வேத மருத்துவத்தில் சுரைக்காய் சாறானது உடல் களைப்பு மற்றும் சோர்வை போக்குவதற்கும், அதிக உடல் வெப்பத்தை குறைத்து சீராக்கவும் உதவுகிறது.
(Ayurveda-bottle gourd juice fatigue, and heatstroke)

3.
யூனுஸ் நபியவர்கள் மீனின் வயிற்றில் இருந்ததால் ஏற்பட்ட உடல் ரீதியான பாதிப்புகள்.

ஆக்ஸிஜன் பற்றாக்குறை (Hypoxia –oxygen lack), அமிலத்தன்மை அதிகரிப்பால் (Acidosis muscle fatigue) ஏற்படும் தசை சோர்வு, மீன் வயிற்றிலிருந்து வெட்டவெளி மணற்பரப்பில் எறியப்பட்டதால் சூரிய வெப்பம் காரணமாக (Heat exhaustion) வெப்பக்களைப்பு.

சுரைச்செடியின் அகண்ட இலைகள் கொடுத்த நிழலின் காரணமாக (Shade + hydration) வும்…இலைகள் நீரை கடத்தி ஆவியாக்குவதன் மூலம் இலைக்கு கீழ் குறைந்த வெப்பம் கொடுத்ததன் மூலம்…விரைவில் நலமடைய வாய்ப்பை ஏற்படுத்தியது.

(1) இலைகள் அகலமானதால் கீழே வெப்பம் குறைவு (Cool microclimate),

(2) விரைவான வளர்ச்சி நிழல் அளித்தல் –

இவ்விரண்டும் அல்லாஹ்வின் கருணையின் காரணமாக உருவானது.. (Divine mercy)

அறிவியல் ரீதியாக பார்த்தோமானால் .இயற்கையான தாவர மூலிகைகள் உடல் சோர்வு, களைப்பை Modern adaptogens (எ.கா., ginseng.. fatigue)-போக்குவது போல, சுரைக்கொடியானது இயற்கை மூலிகை மருந்தாக (Natural adaptogen) செயல்பட்டிருக்கலாம்.

குர் ஆன் கூறும் இந்த வரலாற்று சம்பவமானது அல்லாஹ்வின் அறிவியல் அற்புதத்தை (Scientific miracle) காட்டுகிறது. வேகமாக வளரும் ஒரு கொடியானது…. (Fast-growing, nutrient-rich plant)
யூனுஸ் நபி அவர்களின் அதிக உடல்வெப்பத்தை குறைத்து, பலவீனம் போக்க உதவியது. இன்று, சுரைக்காய் சாறு ..உடல் சோர்வை நீக்கும் மருந்தாக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.(Bottle gourd juice for fatigue).

இது அல்லாஹ்வின் ரஹ்மத்தை நினைவூட்டுகிறது. ஒரு சிறிய செடி வழியாக பெரிய நிவாரணம்.

ஹதீஸ்களும்.. நபி (ஸல்) அவர்கள் சுரைக்காய் உணவை விரும்பி உண்டதாக அறிவிக்கின்றன.

புஹாரி 5433,5435.

Leave a Comment

Previous post:

Next post: