” புன்யானுன்மர்ஸூஸ் ” : குர்ஆன் 61:4 –” ஈயக் கோட்டையில் இறை ஞானம்!”

— எஸ். ஹலரத் அலி (+91 99653 61068)

வசனம்:

“நிச்சயமாக அல்லாஹ் தன் பாதையில் போரிடுவோரை நேசிக்கிறான். அவர்கள் புன்யானுன் மர்ஸூஸ் – ஈயத்தால் வார்க்கப்பட்ட உறுதியான கட்டிடம் போல அணிவகுத்து நிற்பவர்கள்.”

சூரா ஸஃப் 61:4

1. “ரஸாஸ்” – ஈயம் என்றால் என்ன?

அரபி: ரஸாஸ் رصاص = Lead – ஈயம்.
மர்ஸூஸ் مرصوص = ஈயம் வார்த்து இறுக்கி அடைக்கப்பட்டது, இடைவெளி இல்லாதது.

கேள்வி:

இரும்பு 57:25 வசனத்தில் கடும் பலம்”_ என்று அல்லாஹ் கூறுகிறான். ஸ்டீல் அதைவிட உறுதி. ஆனால் அல்லாஹ் ஏன் இங்கு ஈயத்தை உதாரணம் காட்டினான்?

*பதில்:

*ஏனெனில் *வலிமை மட்டும் போதாது. ஒற்றுமை தான் முக்கியம்!*

2. ஏழாம் நூற்றாண்டு கட்டிடக்கலை:

ஈயத்தின் உண்மை பணி!

இன்று கட்டிட உறுதிக்கு நாம் Steel + Concrete. பயன்படுத்துகிறோம். ஆனால் 1400 வருடம் முன்னால்….. ரோமானிய, அரபு கட்டிடக்கலை எப்படி? இருந்தது என்றால்..

கட்டும் இரு கற்களுக்கு இடையில் ஈயத்தை உருக்கி ஒட்டி விடுவார்கள்.

ரோமானிய கொலோசியம்!
பெரிய கல் Block-களுக்கு நடுவில் உருக்கிய ஈயம் ஊற்றி Lock செய்வார்கள். பூகம்பம் வந்தாலும் கல் அசையும், ஆனா விரிசல் வராது. உடையாது.

மக்கா கஃபா
இப்ராஹீம்(அலை) காலத்தில் கல்லுக்கு நடுவில் ஈயம் வார்க்கப்பட்டது.

அஸ்ரகி – அக்பாரு மக்கா கல்லோடு கல் ஒட்டாது. ஈயம் தான் ஒட்டும்.

யேமன் மஆரிப் அணை!

கல் Joint-ல் ஈயம் + தாமிரம் Waterproof + Earthquake Proof.

இரும்பு = Strong. ஆனால் இரும்பு இரும்போடு ஒட்டாது.மேலும் துருப்பிடிக்கக்கூடும். இடைவெளி – ஃபுர்ஜா – இருக்கும்.

ஈயம் = Glue + Shock Absorber + Sealant. இடைவெளியை அடைக்கும். அசைவு வந்தாலும் கட்டிடம் உடையாது.

அல்லாஹ் சொல்வது:

முஃமின்களே! நீங்கள் தனித்தனி இரும்பு செங்கல் இல்லை. ஈயம் போல இடைவெளி இல்லாமல் ஒட்டிக்கொள்ளுங்கள்.

3. “புன்யானுன் மர்ஸூஸ்” –நான்கு ஆழமான அர்த்தங்கள்!

,”இப்னு கஸீர், குர்துபி, சஅதி” தப்ஸீரில் சொல்வது!

1. புன்யான் கட்டிடம் உம்மத் ஒரே கட்டிடம். ஒரு செங்கல் விழுந்தால் எல்லாம் விழும். “முஃமின் முஃமினுக்கு கட்டிடம் போல” புகாரி 481

2. மர்ஸூஸ் ஈயம் வார்த்து இறுக்கப்பட்டது.

தோளோடு தோள், பாதத்தோடு பாதம்

இடைவெளி இல்லாமல் நில்லுங்கள். ஷைத்தான் நுழைய முடியாது.

*3. ரஸாஸ் பண்பு.

கனமானது, உருகி ஒட்டும்.
சோதனை – ஃபித்னா – என்ற நெருப்பு வந்தால், முஃமின்கள் உருகி இன்னும் ஒட்டிக்கொள்வார்கள். பிரிய மாட்டார்கள்!

4. துருப்பிடிக்காது!
ஈயம் 2000 வருஷம் ஆனாலும் கெடாது.

காலப்போக்கில் பிரிவினை – துரு – வரக்கூடாது. கலிமா ஈயம் காலம் கடந்தும் ஒட்ட வைக்கும்.

நபி(ஸல்) செயல் விளக்கம்!:

“முஃமின்கள் ஒருவருக்கொருவர் உதவுவது கட்டிடம் போல” என்று சொல்லி தன் விரல்களை கோர்த்து காட்டினார்கள். –முஸ்லிம் 2585.

அந்த கோர்த்த விரல்கள்தான் ஈயம் வார்க்கப்பட்ட ஒட்டுப்பிணைப்பு!

4. ஏன் இரும்பு இல்லை? … மூன்று ஹிக்மத்!

  1. இரும்பு = வலிமை மட்டும். ஈயம் = வலிமை + ஒற்றுமை. 1000 இரும்பு துண்டு தனித்தனியாக இருந்தால் Useless.! ஈயம் வார்த்து ஒட்டினால் கோட்டை.அ அல்லாஹ்வுக்கு கூட்டு பலம் தான் வேண்டும்.
  2. இரும்பு துருப்பிடிக்கும், உடையும். ஈயம் வளையும் ஆனா உடையாது.
    முஃமின் பண்பு: “காஃபிர்கள் மீது கடினம், தமக்குள் இரக்கமானவர்கள்!” — அல் குர் ஆன்.48:29. ” வெளியில் கோட்டை போல உறுதி, உள்ளே ஈயம் போல பணிவு.”
  3. ஈயம் = கதிர்வீச்சு கவசம். (Radio Active) இது தான் 21-ம் நூற்றாண்டு முஃஜிஸா. நவீன அறிவியல்:

அதிக அணு எண் (Z=82) மற்றும் அதிக அடர்த்தி (density) கொண்டிருப்பதால் ஈயம் (Lead) கதிர்வீச்சைத் தடுக்கிறது.

எக்ஸ்-கதிர்கள் (X-rays) மற்றும் காமா கதிர்கள் (Gamma rays) போன்ற ஆபத்தான கதிர்வீச்சுகளைத் தடுத்து, உடலைப் பாதுகாக்க மருத்துவ மற்றும் அறிவியல் துறைகளில் ஈயத் தகடுகள் பயன்படுகின்றன.

ஈயம் கதிர்வீச்சைத் தடுக்கும் விதம் கீழே விளக்கப்பட்டுள்ளது:

அதிக அடர்த்தி (High Density):

ஈயத்தின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருப்பதால், அதன் அணுக்கள் மிகவும் நெருக்கமாக அமைந்திருக்கும். இதனால் கதிர்வீச்சு அணுக்களின் வழியே ஊடுருவிச் செல்ல முடிவதில்லை.

அணு எண் மற்றும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை:

ஈயத்தில் உள்ள அதிக எண்ணிக்கையிலான எலக்ட்ரான்கள், கதிர்வீச்சின் ஆற்றலை ஈர்த்து சிதறடிக்க உதவுகின்றன.

பிரெம்ஸ்ட்ராலுங் (Bremsstrahlung) கதிர்வீச்சைத் தடுத்தல்:

இலகுவான பொருட்களை விட, எக்ஸ்-கதிர்களைத் தடுக்கும்போது ஏற்படும் இரண்டாம் நிலை கதிர்வீச்சை ஈயம் மிகவும் திறம்படக் கட்டுப்படுத்துகிறது.

பயன்பாடுகள்:

கதிரியக்க சிகிச்சைக் கூடங்கள், எக்ஸ்-ரே அறைகள் மற்றும் அணுக்கரு உலைகளில் கதிர்வீச்சில் இருந்து பாதுகாத்துக் கொள்ள ஈய ஆடைகளும், ஈயச் சுவர்களும் (Lead Radiation shields) பயன்படுகின்றன.

1 MeV Gamma கதிரை தடுக்க 1 cm கனமுள்ள ஈயம் 90% Block பண்ணும்.

1 cm கனமுள்ள இரும்பு தகடு 44% மட்டும் தான் கதிர் வீச்சு ஊடுருவலை தடுக்கும்.
அதனால் தான்: X-Ray Room, Nuclear Reactor, Chernobyl எல்லாத்திலும் ஈயம் Lining.

இமாம் ராஸி 800 வருடம் முன்னாள் சொன்னது:

“ரஸாஸ் ஊடுருவ முடியாத கனமான பொருள்” என்று எழுதினார். Radiation தெரியாமலேயே.

ஆன்மீக அர்த்தம்:

தஜ்ஜாலின் ஃபித்னா, மீடியா பொய், ஷைத்தானின் வஸ்வாஸ் = Gamma கதிர்வீச்சு. மூளையை, ஈமானை துளைக்கும்.
“புன்யானுன் மர்ஸூஸ்” ஜமாஅத் = ஈய கவசம். ஃபித்னா ஊடுருவாது.

“ஜமாஅத்தோடு இருங்கள். ஓநாய் தனி ஆட்டை அடிக்கும்” அபூதாவூத் 547

*5. இன்றைய நிலை:

செங்கல் ஏராளம் இருக்கிறது, ஆனால் ஈயம் என்ற ஒற்றுமை இல்லை!

2 பில்லியன் முஸ்லிம்கள் = செங்கல் நிறைய இருக்கிறது..
ஆனா ஈயம் இல்லை,!

ஷியா-சுன்னி, இயக்கம், நாடு, மொழி, ஜாதி என ஃபுர்ஜா – இடைவெளி – அதிகம்.

ஷைத்தான் அந்த இடைவெளியில் தான் புகுந்து விளையாடுறான்.

அல்லாஹ் கேட்பது:

தனித்தனி இரும்பு வீரர்கள் 10 பேர் வேண்டாம்.
ஈயம் போல ஒட்டிய பலவீனமான 100 பேர் போதும். அதுதான் கோட்டை.

முடிவுரை:

ஒரு வார்த்தையில் மூன்று யுகம்!

“மர்ஸூஸ்” என்ற ஒரு வார்த்தையில் அல்லாஹ் முக்காலத்திற்கும் பதில் வைத்துள்ளான்:

  1. ஏழாம் நூற்றாண்டு:

ஈயம் = கட்டிடம் Joint அடைக்கும்.

பாடம்: அணிவகுப்பில் ஒற்றுமை.

  1. 21-ம் நூற்றாண்டு:

ஈயம் = Nuclear கதிர்வீச்சு தடுக்கும்.

பாடம்: ஃபித்னாவில் ஜமாஅத் கவசம்.

  1. கியாமத் வரை: ஈயம் = துருப்பிடிக்காது, உடையாது. பாடம்: கலிமா கயிறு 3:103 பிரியாது.

இரும்பு உடையும். ஸ்டீல் வளையும். ஈயம் ஒட்டும்.
அல்லாஹ் நம்மை உடையாத, ஈயம் போல ஒட்டிக்கொள்ளும் உம்மத்தாக ஆக்குவானாக. ஆமீன்!.

” வ அல்லாஹு அஃலம்! “– அல்லாஹ்வே மிக அறிந்தவன்!.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *