பாலைவனப் புழுதியால் வளம்பெறும் அமேஸான் காடுகள்

Post image for பாலைவனப் புழுதியால் வளம்பெறும் அமேஸான் காடுகள்

in அறிவியல்

Desert Dust Feeds Amazon Forests
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

எஸ்.ஹலரத் அலி,திருச்சி-7.

இப்பூவுலகத்தின் மொத்த நிலப்பரப்பில் ஐந்தில் ஒன்று 20% நிலப்பகுதி பாலைவனமாக உள்ளது. இங்கு மழை பொழிவு மிகக்குறைவாக உள்ளதால் வறட்சியும், அதிக வெப்பமும் ஆண்டு முழுவதும் இருக்கும். கண்ணுக்கெட்டிய தூரம் வரை மணல்..மணல்…மணலைத்தவிர ஒன்றுமில்லை. அதிக வெப்பத்தின் காரணமாக காற்று சூடாகி புழுதிப்புயல் (Desert Storm) அடிக்கடி ஏற்படும். இந்த பாலைவன மணல் குவியலால் பயனேதும் உண்டா என்ற கேள்விக்கு நமது அனைவரதும் பதிலும் இல்லை என்பதே.

அல்லாஹ்வின் அருள்மறை குர்ஆனில் பல இடங்களில் இந்த உலகத்தில் எதையும் வீணுக்காக படைக்கவில்லை என்று கூறுகிறான். காரண காரியங்கலோடுதான் ஒவ்வொரு பொருளும் படைக்கப்பட்டிருக்கிறது.ஆனாலும் சிற்றறிவு கொடுக்கப்பட்ட மனிதனால் அதன் எல்லா உண்மைகளையும் அறிய முடிவதில்லை.அல்லாஹ் நாடும்போது அவ்வப்போது ஒரு சில உண்மைகளை அறிவியல் ஆய்வுகள் மூலம் அறிந்து கொள்கிறான்.

திருக்குர் ஆனின் 51 அத்தியாயமான ஸூரத்துல் தாரியாத் (புழுதியைக் கிளப்பும் காற்றுகள்) த்தின் ஆரம்ப சில வசனங்கள் அல்லாஹ்வின் அறிவியலைப் பேசுகின்றன.

(புழுதியை எழுப்பி) நன்கு பரத்தும் காற்றுகள் மீது சத்தியமாக!

(மணல் புழுதிச்) சுமையைச் சுமந்து செல்பவற்றின் மீதும்..,

பின்னர் கடலில் (இலேசாகச்) செல்பவற்றின் மீதும்..

(பூமியிலுள்ளோருக்கு விதியானவற்றை அல்லாஹ்வின்) கட்டளைப்படி பங்கிடுவோர் மீதும் சத்தியமாக.. .

நிச்சயமாக நீங்கள் வாக்களிக்கப்படுவதெல்லாம் உண்மையேயாகும்.- அல் குர்ஆன்.51:1-5.

மேற்கண்ட வசனத்தில் மணல் புழுதியை சுமந்து செல்லும் காற்றுகளைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடுகிறான். காற்றானது இப்புழுதி மணலை எங்கே கொண்டு செல்கிறது? இதன் பயன் என்ன என்ற கேள்விக்கு இன்றைய அறிவியல் உலகம் விடை கண்டுபிடித்து உள்ளது. உதாரணமாக, உலகத்தில் மிகப்பெரிதான பரப்பளவைக் கொண்ட பாலைவனம் ஆப்பிரிக்காவில் உள்ள சஹாரா பாலைவனமாகும்.

இங்கு கடும் கோடைகாலத்தில் உருவாகும் புழுதிப் புயலானது, பல பில்லியன் டன் புழுதி மணலை உயரே எழுப்பி, ​( The current estimate for the annual quantity of desert dust that makes regional or global airborne migrations is 0.5 to 5.0 billion tons).வான் வெளியில் மணல் குன்றுகளாக பறந்து செல்கின்றன..செல்லும் தூரம் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. They are intimately connected by a 10,000 mile long intermittent atmospheric river of dust.

கடும் வெப்பமுள்ள பாலை மணலில் என்ன சத்து உள்ளது என்று ஆய்வு செய்தபோது, பல முக்கிய நுண்ணுட்ட மினரல் சத்துக்கள் இருப்பது தெரிய வந்தது.பொதுவாக புழுதி மணல் சத்து நிரம்பியதால் நமது விவசாயிகள், .  “சித்திரை மாத புழுதி பத்தரை மாற்றுத்தங்கம், சித்திரையில் மழை பெய்தால் பொன் ஏர் கட்டலாம்”  போன்ற வேளாண் பழமொழிகளை கூறி வந்தனர். பாலை புழுதியிலேயும் பயனுள்ளது என்று இன்று தான் அறிவியல் உலகம் அறிந்தது.

பாலைவனப் புழுதியில் இரும்புச் சத்தும், பயிர் வளர்ச்சிக்குத் தேவையான, பாஸ்பரஸ் மற்றும் நைட்ரஜன் அதிகமாக உள்ளது. இந்த மணல் சத்துக்களை தேவையுடையோருக்குத் தகுந்தாற்போல் அல்லாஹ் பிரித்துக் கொடுக்குகின்றான் என்பதை இவ்வசனம் தெளிவாக்குகிறது.

(பூமியிலுள்ளோருக்கு விதியானவற்றை அல்லாஹ்வின்) கட்டளைப்படி பங்கிடுவோர் மீதும் சத்தியமாக.. ஆள் குர்ஆன்.51:4.)

நமது பூமியில் நிலப்பகுதியில் மட்டும் உயிரினங்கள், தாவரங்கள் வசிக்கவில்லை, மூன்று பங்கு நீர் சூழ்ந்த  கடலிலும் மீனினங்கள், தாவரங்கள் வசிக்கின்றன. குறிப்பாக கடலில் சூரிய ஒளி செல்லும் மேல்மட்ட பகுதியில் ஒளிச்சேர்க்கை மூலம் உயிர் வாழும் phytoplankton எனும் நுண்ணுயிர் கூட்டத்திற்கு இரும்புச் சத்து (Iron Nutrient) அவசியம் தேவை. கடல் உயிரினங்கள் உண்ணும் (Food web chain) உணவுச் சங்கிலியில் phytoplankton முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆப்ரிக்காவிலிருந்து தென் அமெரிக்க அமேசான் காடுகளை நோக்கிச் காற்றால் பரத்திச் செல்லப்படும் பாலை மணல் புழுதி, அட்லாண்டிக் கடலை கடந்து செல்லுகின்றன. அப்படிச் செல்லும்போது மெதுவாக கிழிறங்கி கடல் மட்டத்தில் மணல் புழுதியை பரப்பி விட்டே செல்கின்றன. இதிலுள்ள இரும்புச் சத்தானது கடல் மட்டத்தில் வாழும் பைடோபிளங்க்டன் எனும் நுண்ணுயிர் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. இது ஒளிச் சேர்க்கையின் மூலம் வளிமண்டலத்தில் உள்ள கரியமிலவாயு வாயுவை உறிஞ்சி புவி வெப்பமடைவதை தடுக்கிறது.

(Iron from Sahara dust helps fertilize Atlantic Ocean.Scientists have known for some time that iron from the Sahara desert can make its way to the North Atlantic Ocean by hitching a ride on tiny dust particles that get blown around during dust storms, but they’ve never quite figured out just how much iron gets deposited there. Now, new research published in the journal Nature on July 2, 2014 suggests that the amount of Saharan-derived iron in the Atlantic can be quite high. This iron helps fertilize ocean phytoplankton, which in turn suck up carbon dioxide from the atmosphere.)

உலகிலேயே மிகப்பெரிய மழைக்காடு தென்னமெரிக்க கண்டத்தில் உள்ள அமேசான் காடுகள். அதேபோல் உலகிலேயே மிகப்பெரிய பாலைவனம் ஆப்பரிக்க கண்டத்திலுள்ள சஹாரா பாலைவனம். இது நம் அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் இருபத்தியோறாம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மாபெரும் உண்மை நம்மை வாய் பிளக்கவைக்கிறது. ஆம் அந்த சஹாரா பாலைவனம் தான் அமேசான் காடுகள் அவ்வளவு செழுமையாக இருப்பதற்கு காரணம்.

Desert

சஹாரா பாலைவனத்தில் உள்ள பாலைவன மணல் துகள்கள் மிகுந்த தாதுப்பொருட்கள் நிறைந்தவை. அவை அந்த பாலைவனத்தில் வீசும் புயல் காற்றுக்களால் புழுதி புயலாக மாறி மேற்கு நோக்கி நகர்கின்றன. ஆயிரத்தி அறுநூறு மைல்கள் அப்பால் இருக்கும் அமேசான் காடுகளில் சென்று படியும் இந்த சஹாரா பாலைவன மணல் துகள்களால்தான் அந்த காடு அவ்வளவு செழுமையாக இருக்கிறதாம். என்ன ஒரு ஆச்சரியம் ?

தண்ணீரே இல்லாத, வறண்ட உயிர்கள் வாழ முடியாத ஒரு பாலைவனம் தான் உலகின் மிகப்பெரிய ஆறான அமேசான் நதி ஓடும், உயிர்கள் செழித்து வாழும், உலகின் நுரையீரல் என கூறப்படும் அமேசான் மழைக்காடுகள் தழைத்திருக்க காரணமாம். இந்த உலகில் எல்லாமே ஒன்றிக்கொன்று தொடர்புடையவைதான். நாம் அதனை கண்டுபிடிக்க இத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கிறது. ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளாக இதை இயற்கை செய்துகொண்டே இருக்கிறது. இந்த அளப்பரிய உண்மையை அல்லாஹ் அன்றே அல்குர்ஆனில் அறிவித்து விட்டான். நமது அறிவியல் உலகம் இன்றுதான் புரிந்து கொண்டது.

அமேசான் காடுகள் ஏழு மில்லியன் ச.கி.மீ இதில் நாலரை மில்லியன் பசுமைக்காடுகள். உலகில் உள்ள மொத்த உயிரினங்களில் பாதி பங்கு இங்குள்ளது. தினமும் சஹாரா பாலைவனத்திளிருந்து ஒரு கி.மீ கனம் உள்ள தூசுப் படலம் மேலெழும்பி அட்லாண்டிக் கடலைக் கடந்து தென்னமெரிக்க அமேசான் காடுகளில் மழையாகப் பொழிகிறது.இது சுமார் 54000   டன் பாலைவன புழுதி மண்.இப்படி வருடத்திற்கு  சுமார் நாற்பது  மில்லியன் டன் மணலானது காற்றில் ஆகாய வீதியில் நதியாக ஓடி வருகிறது. இதுபோன்ற ஒரு இயற்கை அமைப்பை அல்லாஹ் எற்படுத்தவில்லை என்றால் இன்றுள்ள காடுகளை நாம் பார்க்கமுடியாது.

அமேசான் காடுகளில் பொழியும் தொடர் மழையால் மண்ணுக்குத் தேவையான முக்கிய சத்தான பாஸ்பரஸ் மழை நீரால் அடித்துச் செல்லப்படுகிறது. இப்படி இழக்கப்படும் பாஸ்பரத்தை, சஹாரா பாலைவனத்திலிருந்து கொண்டு வரப்படும்

பாஸ்பரத்தால் ஈடு செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் சுமார் 54000 டன் பாலைவனப் புழுதி அமேசான் காடுகளில் படிவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதில் ஒரு வருடத்திற்கு சுமார் 22,000 டன் பாஸ்பரஸ்   (Phosphorous) சத்து அமேசான் காடுகளுக்கு கிடைப்பதாக அமெரிக்கா விண்வெளி ஆய்வு நிறுவனம் கூறுகிறது.

An estimated 22,000 tons of phosphorous reach the Amazon each year from the Saharan dust, according to Hongbin Yu, an atmospheric scientist at the University of Maryland who works at NASA’s Goddard Space Flight Center. Yu says that this is equivalent to the amount of phosphorous lost due to rainfall runoff in the Amazon

Why does the Saharan dust contain so much phosphorous? It comes from lake beds of northern Africa’s past, particularly the Bodélé Depression in Chad which is rich in the nutrient, NASA says.

சஹாரா பாலை வனத்தில் மட்டும் இந்த நிகழ்வு நடக்கவில்லை.உலகில் உள்ள அத்துணை பாலைவனங்களில் உருவாகும் புழுதிக்காற்று அங்குள்ள சத்து மண்ணை உயரே இழுத்துச் சென்று அல்லாஹ் நாடும் இடங்களில் பரத்துகிறது. இந்தியாவில் உள்ள தார் பாலைவனம், சீனாவின் கோபி பாலைவனத்தில் உருவாகும் புழுதிபுயல் (Asian Dust),கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் வரை சென்று படிவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

சூறாவளி புயல் காற்று பரத்திவிடும் மண்  புழுதியில், அனைத்து உயிரினங்களின் வாழ்வாதார நன்மைகள் உள்ளது என இன்றைய அறிவியல் உலகம் கூறுவதை, அன்றே அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் அறிந்ததால் அதன் நன்மைகளை வேண்டி அல்லாஹ்விடம் துவா செய்துள்ளார்கள். அத்துடன் சூறாவளி புயல் காற்றினால் ஏற்ப்படும் தீங்கிலிருந்தும் பாதுகாப்பு வேண்டி துவா செய்துள்ளார்கள்.

சூறாவளிக் காற்று வீசும்போது நபி (ஸல்) அவர்கள், “ இறைவா! இந்தக் காற்றின் நன்மையையும் அதனுள்ளே மறைந்திருக்கும் நன்மையையும், அது எதனுடன் அனுப்பப்பெற்றுள்ளதோ அதன் நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இந்தக்காற்றின் தீங்கிலிருந்தும், அதனுள்ளே மறைந்திருக்கும் தீங்கிலிருந்தும், அது எதனுடன் அனுப்பப்பெற்றுள்ள்ளதோ அதன் தீங்கிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்” என்று கூறுவார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: முஸ்லிம், 1640.

சூறாவளி புயலினால் மக்களுக்கு தீமை மட்டுமே நேரிடும் என்று பொதுவாக நாம் நம்பிக் கொண்டுள்ளோம். அதில் நன்மையையும் உள்ளது என்று அல்லாஹ்வும்,அல்லாஹ்வின் தூதரும் அன்று சொன்னதை இன்று அறிவியல் உலகம் உன்மைப்படுத்தியுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்! வளரும் தாவரம் மற்றும் பயிர்களுக்கு புழுதி மண் சிறந்தது என்று வள்ளுவரும் தன் குறளில் கூறுகிறார்.

“தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்

வேண்டாது சாலப் படும்”

 உழவன், ஒரு பலம் புழுதி கால் பலமாகும் படி தன் நிலத்தை உழுது காய விட்டால், ஒரு பிடி எருவும் இடாமலேயே அந்நிலத்தில் பயிர் செழித்து வளரும். இக்குறளின் மூலம் புழுதியின்  அவசியத்தை புரிந்து கொள்கின்றோம். உயிரினங்களுக்கு உணவளிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட அல்லாஹ், பாலைவனப் புழுதியை நீர், நிலம் போன்ற பல்வேறு இடங்களுக்கு காற்றுகளின் மூலம் பரப்பி அருள்மழை பொழிகின்றான்.

(புழுதியை எழுப்பி) நன்கு பரத்தும் காற்றுகள் மீது சத்தியமாக… (மணல் புழுதியை) சுமந்து செல்பவற்றின் மீது சத்தியமாக..பின்னர் லேசாக செல்பவற்றின் மீதும், அல்லாஹ்வின் கட்டளைப்படி பங்கிடுவோர் மீதும் சத்தியமாக. நீங்கள் வாக்களிக்கப்படுவதெல்லாம் உண்மையேயாகும்.-அல் குர்ஆன்.51:1-5.

இந்த வேதம், வல்லமை மிக்கோனும் நுண்ணறிவாளனுமாகிய அல்லாஹ்வினால் இறக்கி அருளப்பட்டதாகும்.-  -அல் குர்ஆன்.46:2.

{ 2 comments… read them below or add one }

A.ABDULRAJAK August 29, 2015 at 4:46 pm

dear brothers

i suspect thiruvalluvar was a one of a prophet (NABI ) and/ or messanger (rasool) of ALLAH and philosoper for earlier 2000 years back tamil speaking people. Aging was equal or just earlier to ESA ( jesus) period. IF thirukural was a veda muslims must trust and no need to follow thirukural and any other vedas because they given to a particular community not for world . all earlier vedas part of full veda due to human inability . 1400 years back human became ability . Quran is a full veda for world .

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

கலைஞர் உரை:
அகர எழுத்துகளுக்கு முதன்மை, ஆதிபகவன், உலகில் வாழும்
உயிர்களுக்கு முதன்மை.

மு.வ உரை:
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.

சாலமன் பாப்பையா உரை:
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.

பரிமேலழகர் உரை:
அஃதாவது, கவி தான் வழிபடு கடவுளையாதல் எடுத்துக் கொண்ட பொருட்கு ஏற்புடைக் கடவுளையாதல் வாழ்த்துதல். அவற்றுள் இவ்வாழ்த்து ஏற்புடைக் கடவுளை என அறிக; என்னை? சத்துவம் முதலிய குணங்களான் மூன்று ஆகிய உறுதிப்பொருட்கு அவற்றான் மூவராகிய முதற் கடவுளோடு இயைபு உண்டு ஆகலான். அம்மூன்று பொருளையும் கூறுதலுற்றார்க்கு அம்மூவரையும் வாழ்த்துதல் முறைமை ஆகலின் , இவ்வாழ்த்து அம்மூவர்க்கும் பொதுப்படக் கூறினார் என உணர்க.
விளக்கம்: எழுத்து எல்லாம் அகரம் முதல – எழுத்துக்கள் எல்லாம் அகரம் ஆகிய முதலை உடையன; உலகு ஆதிபகவன் முதற்று – அது போல உலகம் ஆதிபகவன் ஆகிய முதலை உடைத்து. (இது தலைமை பற்றி வந்த எடுத்துக்காட்டு உவமை. அகரத்திற்குத் தலைமை விகாரத்தான் அன்றி நாதமாத்திரை ஆகிய இயல்பாற் பிறத்தலானும், ஆதிபகவற்குத் தலைமை செயற்கை உணர்வான் அன்றி இயற்கை உணர்வான் முற்றும் உணர்தலானும் கொள்க.தமிழ் எழுத்திற்கே அன்றி வட எழுத்திற்கும் முதலாதல் நோக்கி, ‘எழுத்து’ எல்லாம் என்றார். ஆதிபகவன் என்னும் இரு பெயரொட்டுப் பண்புத்தொகை வடநூல் முடிபு. ‘உலகு’ என்றது ஈண்டு உயிர்கள் மேல் நின்றது. காணப்பட்ட உலகத்தால் காணப்படாத கடவுட்கு உண்மை கூற வேண்டுதலின், ‘ஆதிபகவன் முதற்றே’ என உலகின் மேல் வைத்துக் கூறினார்; கூறினாரேனும், உலகிற்கு முதல் ஆதிபகவன் என்பது கருத்தாகக் கொள்க. ஏகாரம் – தேற்றத்தின்கண் வந்தது. இப்பாட்டான் முதற்கடவுளது உண்மை கூறப்பட்டது.)

see below first 5 quran verses broughtdown to mohamed (pbuh) from ALLAH . Almost 99% percent equal to thirukural first slogan.

96:1. படைத்த உம்முடைய ரக்ச்சகன் திரு நாமத்தைக் கொண்டு ஓதுவீராக.

96:2. “அலக்” என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.

96:3. ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி.

96:4. அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.

96:5. மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.

Reply

A.ABDULRAJAK August 29, 2015 at 6:01 pm

100:1. மூச்சுத்திணற விரைந்து ஓடுபவற்றின் மீது சத்தியமாக- (stars)

100:2. பின்னர் அடித்து நெருப்புப் பறக்கச் செய்பவற்றின் மீதும்,

100:3. பின்னர் அதிகாலையில் விரைந்து பாய்ந்து செல்பவற்றின் மீதும்-

100:4. மேலும், அதனால் புழுதியைக் கிளப்புகின்றவற்றின் மீதும்,

100:5. அப்பால் மத்தியில் கூட்டமாக நுழைந்து செல்பவற்றின் மீதும் சத்தியமாக-

The above quran verses are giving many meanings. Among one of the meaning is how sand storm created from the desert. That is by NEUTRINO particles or some other particles.

Reply

Leave a Comment

Previous post:

Next post: