அல்குர்ஆனின் வழியில் அறிவியல்…..
இஸ்லாம் அறிவியல் உண்மைகளை அரவணைத்துச் செல்லும் மார்க்கம். இயற்கையோடு இணைந்து செல்லும் இணையற்ற மார்க்கம். இயற்கை மார்க்கத்தின் இறுதி நெறிநூல் அல்குர்ஆனோ, அறிவியல் கருத்துக்களை உள்ள டக்கிய ஆய்வுப் பெட்டகமாக விளங்குகிறது. இன்றைய நவீன அறிவியல் கருத்துக்கள் அடங்கிய வசனங்கள் குர்ஆனில் ஏராளமாக உள்ளன. அவ்வசனங்களில் ஒன்றுதான்,
“அன்றியும், மலைகளைப் போல் உயரமாகச் செல்லும் கப்பல்கள் அவனுக்கே உரியன” அல்குர்ஆன் 55:24
“இன்னும் மலைகளைப் போல் கடலில் செல்பவையும் (கப்பல் மற்றும் பனிப் பாறை (Ice berg)
அவனுடைய அத்தாட்சிகளில் உள்ள வையாகும்.” அல்குர்ஆன் 42:32
இவ்விரு வசனங்களிலும், கடலில் செல்லும் கப்பல்களை நிலத்தில் உள்ள மலைகளோடு அல்லாஹ் ஒப்பிட்டுக் கூறுகிறான். சாதாரணமாக இவ்வசனங்களைப் பொருள் கொள்ளும் போது, கடலில் கப்பல் செல்வது பெரும் மலைகள் செல்வது போன்ற தோற்றத்தை பார்ப்பவர்களுக்கு ஏற்படுத்துகிறது என்றுதான் அனைவரும் அறிகிறோம். ஆனால் சற்று ஆழமாக, அறிவியல் கண் கொண்டு இவ்வசனங்களை ஆய்வு செய்யும்போது, நவீன அறிவியல் உண்மைகள் இவ்வசனங்களில் ஒளிந்திருப்பதைக் கண்டு ஆச்சரியப்படுகிறோம். அல்லாஹ் உண் மையல்லாத ஒன்றை உதாரணமாகக் கூட கூறுவதில்லை என்பதை அறிந்து வியக்கிறோம். சுபுஹானல்லாஹ்!-இறைவன் தூய்மையானவன்.
பூமியின் ஈர்ப்புவிசை-மிதத்தல் விசை (Buoyancy Force)
கடலில் மிதக்கும் கப்பல், மற்றும் பனிப் பாறை(Ice berg)களும் நிலத்தில் நிற்கும் மலைகளும் ஒரே அறிவியல் விதியின் கீழ் செயல்படும் உண்மையை அல்லாஹ் 1400 ஆண்டுகளுக்கு முன்பே வெளிப்படுத்திவிட்டான். வானத்தை நோக்கி எப்பொருளை எறிந்தாலும் அது மீண்டும் பூமியில் வந்து விழும். இதற்குக் காரணம் பூமியின் ஈர்ப்பு விசை (Gravitational force) இது போல் மிதக்கும் எப்பொருளையும் நீரில் ஆழ்த்தினால், நீரானது அப்பொருளை மேல் நோக்கித் தள்ளும். உதாரணமாக ஒரு பந்தை நீரில் அமுக்கினால் அது மீண்டும் மேல் நோக்கி மிதக்கும். இதற்குக் காரணம் பூமியின் ஈர்ப்பு விசை (Buoyancy Force)
ஒரு பொருள் நீரில் மிதப்பதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. 1.அப்பொருளின் அடர்த்தி (Density) நீரின் அடர்த்தியை விடக் குறைவாக இருக்க வேண்டும்.
2. அப்பொருளின் எடையால் (Mass volume) விலக்கப்படும் நீரின் எடை அதிகமாக இருக்க வேண்டும்.
ஆர்ட்டிக், அண்டார்டிக் கடலில் மிதக்கும் பனிப்பாறை(Ice berg)யின் அடர்த்தி 0.9 கிராம்/ சி.சி. ஆனால் கடல் நீரின் அடர்த்தி 1.0 கிராம்/ சி.சி. எனவே அடர்த்தி குறைந்த (ஐஸ்பெர்க்) பனிப்பாறைகள் 1 பங்கு நீருக்கு மேலும் 9 பங்கு நீருக்குள் மூழ்கியும் மிதக்கிறது.
கடலில் மிதக்கும் கப்பலின் எடையானது (Mass volume) விலக்கும் நீரின் எடையை விடக் குறைவாக இருப்பதால் கப்பல் மிதக்கின்றது.
கடலில் மிதக்கும் கப்பல் மற்றும் பனிப்பாறை (Ice berg)யைப் போலவே நிலத்தில் உள்ள மலைகளும் இதே அறிவியல் விதியின் கீழ் (Archimedes Principle) மிதப்பதாக நவீன அறிவியல் கூறுகிறது.
உருகிய பாகுக்(Viscous fluid)குழம்பில் மிதக்கும் மலைகள்:
“நிச்சயமாக வானங்களும் பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதனையும் இவற்றை நாமே பிரித்தமைத்தோம் என்பதையும் நிராகரிப்பவர்கள் பார்க்கவில்லையா? (அல்குர்ஆன் 21:30)
ஒன்று சேர்ந்திருந்த வானம் பூமி அனைத்தையும் 13-20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பெரு வெடிப்பின் (Big bang) மூலம் அல்லாஹ் பிரித்தான். இப்படி பிரிந்து வந்த நட்சத்திரங்கள், சூரியன், பூமி மற்றும் பிற கோள்கள் அனைத்தும் கடும் வெப்பநிலையில் சுழன்றன. பல மில்லியன் ஆண்டுகள் கடந்து அவை மெதுவாக குளிர்ந்தன.
பூமியின் மேல் அடுக்கு (Continental Crust)
குளிர்ந்து கடினமாக மாறியது. இதற்கு கீழே உள்ள மாண்டில் எனும் இடை அடுக்கு உருகிய பாகு (Viscous fluid) நிலையில் உள்ளது. நடு உறை எனப்படும் core முற்றும் உருகிய இரும்பு திரவ நிலையில் இன்றும் உள்ளது. இதுவே magma எனும் எரிமலை குழம்பாக வெளியேறுகிறது. மாண்டில் (Mantle) எனும் நடு உறை பாகு நிலையில் கடல் போல் சூழ்ந்துள்ளது. கடலில் கப்பல், பனிப்பாறை மிதப்பது போன்ற உருகிய பாகு குழம்பில் பூமியின் மேல் ஓட்டில் உள்ள மலைகள் (Continental mountain crust) மூழ்கி மிதக்கின்றன. ஏனெனில் பூமியின் மேற்பரப்பில் உள்ள (Continental Mountain Crust) மூழ்கி மிதக்கின்றன. ஏனெனில் பூமியின் மேற்பரப்பில் உள்ள (Continental Crust) அடர்த்தி 2.8 கிராம் /சி.சி. ஆனால் பாகு நிலையில் உள்ள மாண்டிலின் அடர்த்தி 3.3 கிராம்/சி.சி. எனவே அடர்த்தி குறைவான மலைகள் அடர்த்தி அதிகமுள்ள மாண்டில் பாகு (Viscous fluid) கடலில் மிதக்கின்றன.
அடர்த்தி குறைவான பனிக்கட்டி அடர்த்தி அதிகமுள்ள கடலில் மிதப்பது போன்று அடர்த்தி குறைவான மலைகள் அடர்த்தி அதிகமுள்ள பாகு கடலில் மிதக்கின்றன. இதைத் தான் அல்லாஹ், “மலைகளைப் போல் கடலில் செல்பவையும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். அல்குர்ஆன் 42:32ல் கூறுகிறான்.
நிலத்தில் உள்ள மலைகள், கடலில் மிதக்கும் கப்பல்கள், பனிப்பாறைகள் (Ice berg) அனைத்தும் ஒரே அறிவியல் விதியில் (Archimedes Principle) செயல்படும் விந்தையை அல்லாஹ் 1400 ஆண்டு களுக்கு முன்பே வெளிப்படுத்தி விட்டான்.
மலையின் வேர்கள் (Mountain Buoyancy Roots)
“இன்னும் மலைகளை முளைகளாக ஆக்க வில்லையா?” அல்குர்ஆன் 78:7
பூமியில் உள்ள பெரும் மலைத் தொடர்கள் முளைகளைப் போல் பூமியில் ஊன்றப்பட்டுள்ளதாக அல்லாஹ் கூறுகிறான். இதை நவீன அறிவியலில் Buoyant Roots என்று அழைக்கிறார்கள். மரத்தின் வேர்கள் பூமியில் ஆழப் பாய்ந்து மரத்தை நிலைநிறுத்துவது போல், மலையின் வேர்கள் பூமியின் மேல் ஓட்டிலிருந்து கீழிறங்கி மாண்டில் பாகு பகுதியில் நிலை நிற்கின்றன. கப்பல் போல், பனிப்பாறை போல் மிதக்கின்றன.
கடலில் மிதக்கும் கப்பல்கள் அலைகளின் காரணமாக அசைவது போன்று நிலத்தில் மிதக்கும் மலைகளும் அசைந்து செல்கின்றன. இது செல்லும் வேகத்தை நம்மால் உணர முடியாது. உதாரணமாக நமது கைவிரல்களில் வளரும் நகம் எந்த வேகத்தில் வளர்கிறதோ இதே வேகத்திலேதான் பூமித்தட்டின் மேற்புறமும் பாகு கடலில் நகர்கிறது.
மலையின் உயரத்தை விட 5, 6 மடங்கு அதிக ஆழத்தில் Buoyant Root பூமியில் ஊடுருவி இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. கடலில் மிதக்கும் கப்பல் அல்லது பனிப்பாறையில் நாம் எடைகளை ஏற்றினால் கப்பல் அல்லது பனிப் பாறை சற்று நீரில் மூழ்கும். எடையை எடுத்து விட்டால் மீண்டும் பழைய நிலைக்கு மேல் வந்து மிதக்கும். இதற்கு Buoyancy Force என்று முன்பே கூறினோம். இந்த விதியின் கீழ் நிலத்தில் மிதக்கும் மலைகளும் செயல்படுகின்றன.
பூமியில் நிகழும், காற்று, மழை, பனிப் பொழிவு, வெப்பம், ஆறு காரணமாக மலைகள், பாறைகள் தொடர்ந்து அரிக்கப்பட்டு தேய்மானம் (Erosion) அடைகிறது. வருடத்திற்கு 0.02 மி.மி. அரிப்பு ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதாவது 100 வருடத்தில் 2மி.மீட்டர் உயரம் அரிக்கப்பட்டு விடும். உதாரணமாக 4கி.மி. உயரமுள்ள ஒரு மலையானது வருடத்திற்கு 0.02 மி.மீ அளவுக்கு அரிக்கப்பட்டால் சுமார் 2 மில்லியன் வருடங்களில் 4 கி.மி. உயரமுள்ள மலை முற்றிலும் அரிக்கப்பட்டு விடும்.
ஆனால் இன்று நாம் காணும் உலகில் உள்ள பெரும் பெரும் மலைகள் பல மில்லியன் ஆண்டுகள் கடந்தும் இன்றும் உயர்ந்து நிற்கின்றன. இதற்குக் காரணம் Buoyancy root விதியே. எடை ஏற்றப்பட்ட சரக்குக் கப்பலிலிருந்து எடையை எடுக்க எடுக்க கப்பல் மீண்டும் மேல் நோக்கி மிதக்கும். இதைப் போலவே ஒரு கண்ணாடி பாத்திரத்தில் குளிர்ந்த நீரை நிரப்பி அதில் ஒரு துண்டு ஐஸ் கட்டியை போட்டால், 1 பங்கு நீருக்கு மேலும் 9 பங்கு நீருக்கு கீழ் மூழ்கி மிதக்கும். நீருக்கு மேலிருக்கும் ஐஸ் கரையக் கரைய Buoyancy root விதிப்படி கீழிருக்கும் ஐஸ் ஆனது மேல் நோக்கி நீரால் தள்ளிப்போட்டு தொடர்ந்து அதன் 1 பங்கு உயரத்தை எப்போதும் மாறாமல் வைத்திருக்கும். ஐஸ் முற்றிலும் கரை யும் வரை இந்நிலை நீடிக்கும்.
நிலத்தில் மிதக்கும் மலைகள் புறச் சூழலினால் மேல் புறம் அரிக்கப்பட்டாலும், அரிக்கப்பட்ட அளவிற்கு Buoyancy root மலையை மேல் நோக்கி தள்ளி பழைய அளவிலேயே சமநிலைப்படுத்தும். மிகச் சமீபத்திய இமயமலை ஆய்வு முடிவுகள் மூலம் இமயமலையின் வேர்கள் (Buoyancy root) சுமார் 250-300 மைல் ஆழம் வரை ஊடுருவி உள்ளதாக தெரிவிக்கின்றன.
18-ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட இவ்வறிவியல் உண்மையை சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு சிறிய வசனத்தில் வெளிப் படுத்திய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!
“மலைகளைப்போல் கடலில் செல்பவையும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். அல்குர்ஆன் 42:32
S. ஹலரத் அலி, ஜித்தா
{ 1 comment… read it below or add one }
Wow! Amazing Quran lines!Allah is Great!