தொழுகையின் சிறப்பும் அதனை விட்டவரின் நிலையும்

Post image for தொழுகையின் சிறப்பும் அதனை விட்டவரின் நிலையும்

in தொழுகை

ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்றுவிட்டனர். அவர்கள் எத்தகையோர் என்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். மேலும் அவர்கள் தம் தொழுகைகளை (குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள்.அல்குர்ஆன் 23:1,2,9

குழந்தைகளுக்கு தொழுகை
உங்கள் குழந்தைகள் ஏழுவயதை எய்திவிட்டால் அவர்களைத் தொழும்படி ஏவுங்கள்; பத்து வயதை அடைந்(தும் தொழாமலிருந்தால்)தால் அதற்காக அவர்களை அடியுங்கள் என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அம்ரு இப்னு ஷுஜபு நூல்:அஹ்மத், அபூதாவூத்

யார் தொழுகையைப் பேணிக் கொள்கிறாரோ அவருக்கு அத்தொழுகை பிரகாசமாகவும் அத்தாட்சியாகவும், மறுமை நாளில் ஈடேற்றமாகவும் ஆகிவிடும். மேலும் எவன் அதை பேணிக் கொள்ள வில்லையோ அவனுக்கு  அத்தொழுகை பிரகாசமாகவோ,  ஈடேற்றமாகவோ  இருக்காது.  (மாறாக) அவன் மறுமை  நாளில் காரூன், ஃபிர்அவ்ன்,  ஹாமான்,  உபைபின் கஃப்  ஆகியோருடன்  இருப்பான்  என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள்.அறிவிப்பாளர்:அப்துல்லாஹ் இப்னு அம்ருஇப்னுஆஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:அஹ்மத்

(மறுமை நாளில்) சுவர்க்க வாசிகள் சுவர்க்கத்தில் இருந்துக்கொண்டு நரகவாசிகளைப் பார்த்து “உங்களை நரகத்தில் புகுத்தியது எது?” என்று கேட்ப்பார்கள். அதற்கவர்கள் “நாங்கள் தொழாதவர்களாகவே இருந்தோம்.”என்று பதில் கூறுவார்கள். அல்குர்ஆன் 74:42

சிறந்த அமல்:
அமல்களில் சிறந்தது எது என்று நபி صلى الله عليه وسلم அவர்களிடம் கேட்டபோது தொழுகையை அதன் ஆரம்ப நேரத்தில் தொழுவது என்றார்கள். அறிவிப்பவர்: உம்முஃபர்வா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:திர்மிதி, ஹாகிம், அபூதாவூத்

பஜ்ரு, அஸர் தொழுகையின் சிறப்புக்கள்:
“(பஜ்ரு தொழுகையை) சூரியன் உதிப்பதற்கு முன்பும் (அஸர் தொழுகையை) சூரியன் மறைவதற்கு முன்பும் தொழுதவர் நிச்சயம் நரகில் நுழையமாட்டார்.” என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உமாரா இப்னு ருவைபா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:முஸ்லிம் நஸயீ

கூட்டுத் தொழுகையின் சிறப்பு:
ஒரு மனிதர் தனித்துத் தொழுவதை விட கூட்டாகத் தொழுவது 27 மடங்கு சிறந்ததாகும். என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்.அறி:இப்னு உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:புகாரி,முஸ்லிம்,திர்மிதி

தொழுகையை விட்டவனின் நிலை:
நமக்கும் அவர்களுக்குமிடையே (நிராகரிப்பவர்களுக்குமிடையே) இறைவன் ஏற்படுத்திய வித்தியாசம் தொழுகையேயாகும்.யார் அதனை விட்டுவிட்டாரோ அவர் காபிராகிவிட்டார். என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: புரைதா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:திர்மிதி, அஹ்மது

பாங்கோசை கேட்டு பள்ளிக்கு வராதவனின் நிலை:
என் இளைஞர்களிடம் விறகுகளைச் சேகரிக்குமாறு கூறிவிட்டு தொழுகைக்கு இகாமத் சொல்லச் செய்து தொழுகை ஆரம்பமான பின் தொழுகைக்கு வராதவர்களைத் தீயிட்டுப் பொசுக்க நான் எண்ணுகிறேன் என்று நபிصلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:திர்மிதி

நிச்சயமாக ஃபஜ்ர் தொழுகையானது சாட்சி கூறுவதாக இருக்கிறது. அல்குர்ஆன்17:78

இரண்டு தொழுகைகள் முனாபிக்கீன்கள் மீது பாரமாக இருக்கிறது. ஃபஜ்ருடைய ஜமாஅத்தும், இஷாவுடைய ஜமாத்தும் இந்த இரண்டிலும் உள்ள நன்மைகளை அவர்கள் அறிவார்களேயானால், பள்ளிக்கு தவழ்ந்து வந்தாயினும் தொழுகையில் கலந்து விடுவர் என நபிصلى الله عليه وسلم அவர்கள் நவின்றனர். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ புகாரி, முஸ்லிம்

அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறுகிறார்கள் “ஒருவர் படுக்கைக்குச் சென்று தூங்கிய பின், ஷைத்தான் அவர் தலைமாட்டில் 3 முடிச்சுகள் போட்டு, ஒவ்வொரு முடிச்சிலும் ‘நீர் உம்மிடத்தில் தூங்கிக் கொண்டிரும்  உமக்கு இன்னும் இரவு இருக்கிறது, நன்றாகத் தூங்கும்’ என உளருகிறான். அந்த அடியார் தூக்கத்திலிருந்து  எழுந்து  அல்லாஹ்வை  நினைவு  கூர்ந்தால்,  முதல் முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. பிறகு  படுக்கையிலிருந்து  எழுந்து உளு செய்தபின்,  இரண்டாவது  முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. தொழுது விடுவாரேயானால், மூன்றாவது முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. எனவே அவர் அதிகாலையில் நல்ல மனத்துடன் சுறுசுறுப்போடு இருக்கிறார். இல்லை என்றால் கெட்ட எண்ணங்களோடு சோம்பல் கொண்டவராக இருக்கிறார். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ  நூல்:புகாரி,  முஸ்லிம், முஅத்தா,  நஸயீ,  அபூதாவூத்

{ 1 comment… read it below or add one }

A.ABDULRAJAK July 28, 2015 at 2:13 pm

2:277. யார் ஈமான் கொண்டு, நற் கருமங்களைச் செய்து, தொழுகையை நியமமாகக் கடைப் பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருகிறார்களோ, நிச்சயமாக அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது; அவர்களுக்கு அச்சமுமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.

4:103. நீங்கள் தொழுகையை முடித்துக் கொண்டால், நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும், விலாப்புறங்களின் மீது (படுத்திருக்கும்) நிலையிலும் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள்; பின்னர் நீங்கள் (ஆபத்தினின்று விடுபட்டு) அமைதியான நிலைக்கு வந்ததும், முறைப்படி தொழுது கொள்ளுங்கள் – ஏனெனில், நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது முஃமின்களுக்கு விதியாக்கப் பெற்றுள்ளது.

5:58. இன்னும் நீங்கள் தொழுகைக்கு அழைத்தால், – அதனை அவர்கள் பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கிறார்கள்; இதற்கு காரணம் அவர்கள் அறிவில்லாத மக்களாக இருப்பதேயாம்.

14:37. “எங்கள் இறைவனே! நிச்சயமாக நான் என் சந்ததியாரிலிருந்தும், சங்கையான உன் வீட்டின் (கஃபாவின்) அருகே, விவசாயமில்லாத (இப்)பள்ளத்தாக்கில், எங்கள் இறைவனே! – தொழுகையை அவர்கள் நிலை நிறுத்தாட்டுவதற்காகக் குடியேற்றியிருகின்றேன்; எனவே மக்களில் ஒரு தொகையினரின் இதயங்களை அவர்கள்பால் சாய்ந்திடச் செய்வாயாக! இன்னும் அவர்கள் நன்றி செலுத்தும் பொருட்டு கனிவர்க்கங்களிலிருந்து அவர்களுக்கு நீ ஆகாரமும் அளிப்பாயாக!”

19:59. ஆனால், இவர்களுக்குப் பின் சந்ததியினர் இவர்களுடைய இடத்திற்கு வந்தார்கள்; அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள்; இச்சைகளைப் பின்பற்றினார்கள்; அவர்கள் கேட்டைச் சந்திப்பார்கள்.

29:45. இவ்வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்பட்டதை நீர் எடுத்தோதுவீராக; இன்னும் தொழுகையை நிலை நிறுத்துவீராக; நிச்சயமாக தொழுகை மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும். நிச்சயமாக, அல்லாஹ்வின் திக்ரு மிகவும் பெரிதாகும்; அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிகிறான்.

dear brothers
(நிச்சயமாக தொழுகை மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும்.)
prayer is giving alarm about sin. who are not perform 5 times daily prayer that people easily fall down immorality and wrongdoing . Be care about us and our family members. who are not perform prayer they are not understanding people means no knowledge.

Reply

Leave a Comment

Previous post:

Next post: