தவ்ஹீத்வாதிகளும், குரூப்பிஸமும்

Post image for தவ்ஹீத்வாதிகளும், குரூப்பிஸமும்

in அழிவுப் பாதை,பிரிவும் பிளவும்

இஸ்லாம் முஸ்லிம்களை மட்டுமின்றி மற்ற மனிதர்களையும் ஒன்றினைக்கும் வாழ்க்கை நெறி! இறுதி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வாக்காலும், வாழ்வாலும் நடைமுறைச் சாத்தியமாக்கிக் காட்டிச் சென்றுள்ளார்கள். அல்ஹம்துலில்லாஹ்! இந்த செயற்கரிய சாதனை கடந்த 1000 ஆயிடம் வருடங்களாக மறக்கப்பட்டும், மறைக்கப்பட்டும் உலக முஸ்லிம்கள் பிரிவிலும் பிளவிலும் சிக்கித்தவிக்கிறார்கள்.

    முஸ்லிம் நாடுகளிலுள்ள முஸ்லிம்கள் ஒன்றிணையும் சாத்தியக்கூறுகள் மிகுந்திருந்தும் அங்கும் அவர்கள் பிரிந்தே கிடக்கிறார்கள். மார்க்க ரீதியில் மத்ஹபுகள், தரீக்காக்கள் என்றும், இயக்கங்கள், அமைப்புகள் என்றும் அகில உலக அளவில் குழு குழுவாக பிரிந்து கிடக்கிறார்கள்.

    அறிஞர்களிடையே நிலவும் கருத்து வேறுபாடுகளும் அரசியல் காரணங்களும் முஸ்லிம்களைப் பிரிவிலும் பிளவிலும் நிரந்தரமாய் சிக்க வைத்துள்ளன. தங்கள் தங்கள் அணிகளை ஒவ்வொருவரும் வளர்ப்பதால் சர்வதேச அளவில் முஸ்லிம்களை ஒன்றினைக்க யாரும் முனைப்போடு முற்படவில்லை. இதை யாரும் இன்றளவும் உரத்து ஒலிக்கவில்லை. அல்குர்ஆனோடு ஐக்கியமாவதே உண்மை ஒற்றுமை! மாறாக வேண்டும்போது கூடுவதும் வேண்டாதபோது கலைவதும் உண்மை ஒற்றுமையல்ல. இதை குர்ஆன் ஹதீஸ் வழி நிற்போர் மற்றவர்களுக்கு உணர்த்தக் கடமைப்பட்டுள்ளார்கள். ஆனால் இவர்களும் தங்களை தவ்ஹீத்வாதிகள் என்றும் தவ்ஹீத் ஜமாஅத் என்றும் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள்.   

    இஸ்லாம் தவ்ஹீதிற்குத் தரும் விரிந்த பொருளும், விளக்கமும் உயர்ந்த வாழ்க்கை இலட்சியமும் இன்று தவ்ஹீத்வாதிகள் என்று பீற்றிக் கொள்வோர்களால் குறுகிய வரையறைக்குள் தள்ளப்பட்டு விட்டது.

    தவ்ஹீத் குறுகிய பிரிவினைவாதிகள் வரிந்து கொண்ட தூர நோக்கு இல்லாத வெற்று வேதாந்தம் என்று மாயத்தோற்றம் தமிழகத்தில் எப்படியோ தோற்றுவிக்கப்பட்டு விட்டது. அது வேரூன்றவும் இன்றைய விளம்பர தவ்ஹீத் விரும்பிகள் காரணமாகிக் கொண்டிருக்கிறார்கள். தவ்ஹீத் தங்களுக்கு மட்டும் சொந்தம் என்று தனிமைப்படுத்தி வருகிறார்கள். இந்தப் பிரிவினை மனப்பான்மையே தவ்ஹீதை குறுகிய தவறான கண்ணோட்டத்தில் கொண்டு வந்து நிறுத்திவிட்டது. இஸ்லாமிய தவ்ஹீத் நேற்றைய, இன்றைய, நாளைய முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, மனித சமுதாய முழுமைக்கும் எல்லாக் காலங்களிலும் பொதுவுடமையாக்கப்பட வேண்டிய வாழ்க்கை நெறியாகும் என்பதை மிக அழுத்தமாக கோடிட்டு காட்ட விழைகிறோம்.

    தவ்ஹீத் இஸ்லாத்தின் மூலக்கொள்கை அன்றி, ஒரு கொள்கைப் பிரிவாருக்குரிய பிரிவுப்பெயர் அல்ல. தவ்ஹீத் இஸ்லாத்தின் மூலக்கொள்கை அன்றி, ஒரு கொள்கைப் பிரிவாரின் தனியுடமையல்ல. தங்களைத் தனிமைப்படுத்தி பிரித்துக்காட்ட இட்டுக்கொள்ளும் பிரிவுப்பெயருமல்ல. சீரிய சிந்தைனயாளர்கள் கூட தங்களை மற்றவர்களிடமிருந்து தங்களை தவ்ஹீத்வாதிகள் என்றே இனம் பிரித்து காட்டினார்கள்.

    தங்களை அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தார்களிடமிருந்து பிரித்துக்காட்ட தவ்ஹீத ஜமாஅத், தவ்ஹீத் இயக்கம் என்று பெயர் பொறித்துக்கொண்டார்கள். அதில் பெருமை பட்டும் கொண்டார்கள். இருக்கின்ற பிரிவுகள் போதாதென்று இவர்கள் பங்கிற்கு இவர்களும் ஒரு கொள்கைப் பிரிவை தோற்றுவித்து விட்டார்கள்.

   பத்து நூறு, ஆயிரம் என்றோ, பத்தாயிரம் என்றோ அதைவிட கூடுதலாகவோ கூட்டம் கூடியவுடன் குழுக்கள் அல்லது சபைகள், குரூப்கள் அமைத்துக்கொள்ளவோ இயக்கங்கள் காணவோ அமைப்புகள் ஏற்படுத்தவோ தவ்ஹீத் கொள்கை அல்லாஹ்வால் அருளப்பட்டதல்ல. மாறாக ஒரே இறைவனான அல்லாஹ்வை மட்டும் ஒரே இறைவனாக ஏற்பதன் மூலம் மனித சமுதாயம் ஒன்றுபடவும் வேண்டும்; ஒன்றுபடுத்தவும் வேண்டும் என்ற உன்னத உயர் இலட்சியத்திற்காக அல்லாஹ்வால் அருளப்பட்ட அருட்கொடையே ஓரிறைக் கொள்கை.

    பல தெய்வ வழிகேடுகளை வழிபாடாகவும், ஒழுக்க கேடுகள் அனைத்தையும் உயர் நெறிகளாகவும், பிரிந்து வாழ்வதை பிறப்பின் இலட்சியமாகவும், விரோதங்கள், குரோதங்களையும் வாழ்க்கை விதியாக்கிக்கொண்டும் அனைத்து அநாகரிங்களையும் நன்மைகளாகவும் புண்ணியங்களாகவும் விலங்கினும் கீழாய் ஒழுங்கீனங்களில் வீழ்ந்திருந்த மக்கள், ஒன்றுபட்டு உலகை வியக்க வைத்த இலட்சிய வாழ்விற்குச் சொந்தக்காரர்களாய் மாற்றியமைத்தது எது? ஓரிறைக் கொள்கை!

    இவ்வற்புதம் இறுதி வேதம் யாருக்கருளப்பட்டதோ அந்த இறுதி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் காலத்தில் 23 ஆண்டுகளில் அருளப்பட்டு இஸ்லாம் நிறைவு பெறும் நிகழ்வு ஏறத்தாழ கால் நூற்றாண்டில் நிகழ்ந்தேறியது. இந்தப் பேருண்மை இன்றைய பெயர்தாங்கி முஸ்லிம்களுக்கு அதிர்ச்சியூட்டுகிறது. ஆச்சர்யத்தின் விளிம்பிற்கே இட்டுச் செல்கிறது. அதே நேரத்தில் ஜீரணிப்பதும் மிக கஷ்டமாயிருக்கிறது ஏன்?

    பிரிந்து வாழ்வதிலும், பிளவு படுவதிலும் இன்புறும் இன்றைய பெயர்தாங்கி முஸ்லிம்களுக்கு இஸ்லாம் ஓரிறைக் கொள்கையின் அடிப்படையில் முஸ்லிம்களை மட்டுமல்ல, மனித சமுதாயத்தையே ஒன்றிணைக்கும் வாழ்க்கை நெறி என்பதை மனப்பூர்வமாய் ஏற்பதுகூட மலையைப் பெயர்ப்பதைக் காட்டிலும் மலைப்பாயிருக்கிறது.

    தற்காலிகமாய் பல குழுக்கள் ஏதேனும் விபத்துகளால் ஒன்று கூடுவதும், கூடிய நோக்கம் நிறைவுறுமுன் அல்லது நிறைவுற்றதும் பிரிந்துவிடுவதும் ஒற்றுமையாகுமா? இஸ்லாலிய அடிப்படையில் எவரேனும் இந்த குழு அணி மனப்பான்மையை ஒற்றுமை என்று ஏற்கமுடியுமா? ஒருக்காலும் ஏற்க முடியாது.

    பிரிவுகளும் பிளவுபட்ட குரூப்பிஸ போக்குகளும் எப்படி ஒற்றுமையாக முடியும்? ஒருக்காலும் ஒற்றுமாயாகாது. எனவே அன்புச் சகோதர சகோதரிகள் காய்தல் உவத்தலின்றி நடுநிலைக் கண்ணோட்டத்துடன் சிந்தித்து பிரிவினை அணி, குழு மனப்பான்மையிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்வதுடன் மற்றவர்களையும் விடுவிக்கும் முயற்சியில் ஈடுபட்டு ஒன்றுபட்ட இஸ்லாமிய இலட்சிய சமுதாயம் மலர ஒத்துழைக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம். அல்லாஹ் அருள் செய்வானாக ஆமீன் வஸ்ஸலாம்.

A.N.K

{ 44 comments… read them below or add one }

ibrahim April 16, 2012 at 6:48 pm

otrumai , otrumai endru paesubavargal avargaludan (tntj) neradiyaga vivaadham seiyalamae . ean indha mudhugelumbu illa thanam.

Reply

hassan April 16, 2012 at 10:15 pm

otrumaiyai patri pesum pothu muthalil naam sinthikka kadamai patu irukirom naam ellam eppa unmaiyana muslimmaha maaruvomoo appa insha allah elorum orey anyil varalaam, and u can together when u against TNTJ. first think you are doing wright? In Islam.

Reply

Siddique February 13, 2014 at 2:43 pm

TNTJ – is not the jamath for muslims, only for the fans of PJ.
So, the author mistaken brother.

Reply

Ismail April 16, 2012 at 11:49 pm

ஒற்றுமையைப்பற்றி பேசினால் TNTJ ரசிகர்களால் பொருத்துக்கொள்ள முடியவில்லை. எத்தனை பிரிவாக இருந்தாலும் முஸ்லிம்கள் ஒன்றாக ஒரே ஜமாத்தாக தொழுதாலும் இவர்களால் பொருத்துக்கொள்ள முடியவில்லை. சமீபத்தில் இவர்களது இமாம் சூன்யத்தை நம்புவர்கள் பின்னால் தொழக்கூடாது அவர் மக்காவில் உள்ள இமாமாக இருந்தாலும் அவர் பின்னால் தொழக்கூடாது என்று சொல்கிறார். இனிமேல் இவரின் ரசிகர்கள் உலகில் உள்ள எந்த இமாமின் பின்னாலும் தொழ முடியாது காரணம் அவர்கள் அனைவரும் ஹதீஸில் வரும் சூன்யம் சம்பந்தப்பட்ட ஹதீஸை ஏற்றுக்கொண்டவர்கள்.

Reply

ibrahim April 17, 2012 at 4:10 pm

adhu ennappa tntj rasigar, thougeeth endral enna endru theriyamal paesa koodaadhu, laa ilaa haa illa laa hoo enbadhin porulai matravaridam thelivaga sonnal otrumai earpaduma. (sindhithu parungal)

Reply

Mohamed Ismail May 10, 2012 at 10:01 pm

Correct. islamiya amaippukkal ippodu arasiyal katchikalaipol aakivittadu. irandu katchikal ondranal yar thalaivar, yar cheyalalar endra kuzhappam varum enave ondrupadamal irunduviduvade nalladu endru ninaikkum katchikalaippo;a ivarkalum aakivittarkal…

Reply

S.HALEEL April 21, 2012 at 11:26 pm

S.HALEEL—தீங்கிழைப்பதற்காகவும், (ஏக இறைவனை) மறுப்பதற்காகவும், நம்பிக்கை கொண்டோரிடையே பிரிவை ஏற்படுத்திடவும், இதற்கு முன் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராகப் போரிட்டோருக்குப் புகலிடமாகவும் ஒரு பள்ளிவாசலை ஏற்படுத்திக் கொண்டோர் “நாங்கள் நல்லதைத் தவிர வேறெதனையும் நாடவில்லை” என்று சத்தியம் செய்கின்றனர். “அவர்கள் பொய்யர்களே” என்று அல்லாஹ் சாட்சி கூறுகிறான்.

முஹம்மதே!) அதில் நீர் ஒரு போதும் வணங்காதீர்! ஆரம்ப நாள் முதல் இறையச்சத்தின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசலே நீர் வணங்குவதற்குத் தகுதியானது. அதில் தூய்மையை விரும்பும் ஆண்கள் உள்ளனர். அல்லாஹ் தூய்மையானவர்களை விரும்புகிறான். அல்குர்ஆன் (9:107)

Reply

abu arfan April 22, 2012 at 11:06 pm

nabi(sal) sonnarkal enathu ummath 73 pirivaka pirinthu viduvarkal athil oru pirivuthaan sorkam sellum. athu QURAN & SUNNA vazhi nadappavarkal mattumthaan entarkal. neenkal koorum ottrumai matrum tntj rasigarkal idellam vidandavathamthan. Allahvin thoodar sonnaal adu oru munnarivippu sakodarare unkalaal ellaam ottrumai undakkamudiadu. ISLAM pennuku ”mahar” koduthu thirumanam pannacholludu. ottrumai vendum enpavarkal ella jamathukalilum intha varathatchinai ennum nadaimurai illaamal aakkunkal paarpom. piraku mattavarkali rasigarkal entru nakkal panna vaarunkal.muthalil ottumai entha adippadayl undaakka ventrum enpathi QURAN& SUNNAVIL thedunkal.

Reply

S.Thoufeek April 30, 2012 at 12:28 pm

Assalamu Alaikkum,
சகோதரர்களே, உலகம் முழுவதும் ஓர் இறை கொள்கையில் ஒன்றுபட வேண்டும் என்றும் , நம் அனைவரும் சுவர்க்கம் செல்லும் நபி (ஸல் ) அவர்களின் உம்மத்தாக இருக்கக வேண்டும்.
மார்க்க அறிங்கர்களிடியே கருத் வேறுபாடு வரலாம் அனல் நம் மார்க்கத்தில் எதிலும் முரன்பாடும் கிடையாது. கருத்து வேட்ருமைகளை கலைவதற்கு முறையாக கற்றவர்கள் கலந்து ஆலோசிக்கலாம். Quran & hathis is like sea the people have good knowledge on that only can come on the discussion. Like me i just read few things on quran and have no knowledge on Hathis cant come out with commends. but can clearly say no one encourage dowry.
But our religion should be tutored properly and need be followed accordingly.

Reply

vedalai.T.UMAR FAROOQ May 28, 2012 at 4:34 pm

ottrmai entru solpavarkalukku TNTJ matumthan kannukkuth theriyum, yeanenil pirivinaithanai manathil vathukkondu ottrumaithanai peasuvadal Tntj thanai makkalidamirundu piriththu vidalam yeanpadu e varkalin kanakku.

Reply

ummu tariq May 29, 2012 at 5:39 am

dear brothers, you must see muranpattil udanpadu speeker is a.c. akaar mohammed

Reply

sheik fareed June 17, 2012 at 10:47 pm

thimaiyai vittu pirivathu ondrum thavaru illai.
neengal tntj vai vimarsithal athil oru privinai varathan seiyum. neengal athai seithu vittu aduthavari seiya kudathu yedru solluvathu ungal vathathin unmai thanmaiyai kuraikirathu.

Reply

கே.எஸ்.சுக்குருல்லாஹ் June 26, 2012 at 8:35 pm

சகோதரர் இஸ்மாயில் அவர்களுக்கு சலாம்.
சகோதரர் பி.ஜைனுலாப்தீன் சொல்வது சரிதான், சூன்யத்தை நம்பும் இமாம் அது யாரகா இருந்தால் என்ன ? எங்கள் நபிகள் நாயகம் ஸல் அவர்களுக்கு எவனும் சூன்யம் வைக்கவில்லை, நபிகள் நாயகம் ஸல் பாதிக்கபடவுமில்லை என்பதை மார்ட்டி சொல்லவேண்டிய நாம், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை இழந்து, எவ்வாறு உங்களுக்கு சொல்ல முடிகிறது.

அல்லாஹ் தன திருமறையில் சொல்லுகிறான், முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் பாதுகாப்பில் இருகிறார்கள் என்று. அப்படியானால் அல்லாஹ்வின் வார்த்தைகளின் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லை, இமாம் புஹாரி பதிவு செய்த ஹதிஸ் மீது ஆபாரா நம்பிக்கை உள்ளது.

Reply

abdul azeez July 15, 2012 at 7:53 pm

அஸ்ஸலாமு அலைக்கும். சகோதரர் சுக்குருல்லாஹ்

நபி (ஸல்) அவர்களின் ஹதீதை ஸஹிஹ் தரத்தில் சரியான முறையில் ஆவணப்படுத்தப் பட்டுள்ளதை ஒரு தனிப்பட்ட

// சகோதரர் பி.ஜைனுலாப்தீன் சொல்வது சரிதான், //

என்று கூறி சூனியம் சம்பந்தமான ஹதீதை நீங்கள் ஆராயாமல் அப்படியே அவர் கருத்தை முன்மொழிந்து சுய சிந்தனையை முடக்கி வைத்துள்ளீர்கள்

3856. உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்.
நான் அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அவர்களிடம், ‘இணைவைப்பாளர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு இழைத்த துன்பங்களிலேயே மிகக் கடுமையானது எது என்று எனக்கு அறிவியுங்கள்” என்று கேட்டேன். அவர்கள், ‘நபி(ஸல்) அவர்கள் கஅபாவின் ‘ஹிஜ்ர்’ பகுதியில் தொழுது கொண்டிருந்தபோது, உக்பா இப்னு அபீ முஐத் என்பவன் முன்னோக்கி வந்து, தன் துணியை நபி(ஸல்) அவர்களின் கழுத்தில் வைத்து (முறுக்கி), அவர்கள் மூச்சுத் திணறும்படி (அவர்களின் கழுத்தைக்) கடுமையாக நெறித்தான். அப்போது அபூ பக்ர்(ரலி) முன்னால் வந்து அவனுடைய தோளைப் பிடித்து நபி(ஸல்) அவர்களைவிட்டுவிலக்கினார்கள். மேலும், ‘என் இறைவன் அல்லாஹ் தான்’ என்று சொல்கிறார் என்பதற்காகவா ஒரு மனிதரை நீங்கள் கொல்கிறீர்கள்” (திருக்குர்ஆன் 40:28) என்று கேட்டார்கள்.
இதே போன்று இன்னும் சில அறிவிப்புகள் ஆரம்பத்தில் சிறு சிறு மாற்றங்களுடன் வந்துள்ளன.

//அல்லாஹ் தன திருமறையில் சொல்லுகிறான், முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் பாதுகாப்பில் இருகிறார்கள் என்று.//

வல்லாஹு யஹ்சிமுக மினன்னாசி — அல்லாஹ் உம்மை மனிதர்களிடமிருந்து காப்பாற்றுவான். குர் ஆன் ௫:௬௭

மேற்கண்ட வசனத்தில் சகோதரர் பி. ஜே அவர்களின் மொழி பெயர்ப்பில் அந்த குரானின் பின் பக்கமுள்ள விளக்க உரையில்

யாராலும் கொள்ள முடியாத தலைவர் என்று விளக்கம் கொடுத்துள்ளார்கள்.

அதனால் இறைச்சியில் விஷம் வைத்து கொடுத்த உணவில் அல்லாஹ் நபி (ஸல்) அவர்களை காப்பாற்றிய சம்பவத்திலிருந்து நபியின் உயிருக்கு தான் பாதுகாப்பு தவிர தொந்தரவுக்கோ அல்லது நபியை நோவினை செய்வதற்கோ அல்லாஹ்வின் பாதுகாப்பு இல்லை என்பதை புரியலாம்.

உஹது போரில் நபி (ஸல்) அவர்களுக்கு பல் உடைந்து இரத்தம் கொட்டிய சம்பவத்தையும் உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

அதனால் சூனியம் சம்பவமும் உயிருக்கு ஆபத்தில்லாத நிலையில் தொந்தரவாக தான் எடுத்துக் கொள்ளமுடியும்.

நபியவர்களுக்கு சூனியம் வைத்ததினால் எங்கே அவர்கள் தன் சுய நினைவே இழந்து புத்தி பேதலித்து இருந்தார்கள் என்றெல்லாம் கற்பனை தேவை இல்லை காரணம் இதை நபியே நமக்கு விவரித்துள்ளார்கள்.

3268. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது. எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஒரு செயலைச் செய்யாமலிருக்க, அதைச் செய்தது போன்று அவர்களுக்கு பிரமையூட்டப்பட்டது. இறுதியில் ஒரு நாள், அவர்கள் பிரார்த்தனை செய்த வண்ணமிருந்தார்கள். பிறகு சொன்னார்கள்; ‘என் (மீது செய்யப்பட்டுள்ள சூனியத்திற்கான) நிவாரணம் எதில் உள்ளதோ அதை எனக்கு அல்லாஹ் அறிவித்துவிட்டதை நீ அறிவாயாக?

அதனால் நபிக்குண்டான சூனிய பாதிப்பு —- ஒரு பிரமை

5764. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
பேரழிவை உண்டாக்கும் பெரும் பாவங்களைத் தவிர்த்துவிடுங்கள். (இறைவனுக்கு) இணைவைப்பதும் சூனியம் செய்வதும் அவற்றில் அடங்கும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 90

அதனால் நமக்கு யாராவது வைத்தால் எந்த அளவுக்கு பாதிக்கும் என்பது வேறு விஷயம்.சூனியம் என்பது உண்மையே.

மா சலாம்.
அப்துல் அஜீஸ்

Reply

T.Mohamed Ibrahim August 16, 2012 at 1:44 pm

sooniyam unmai entrum koorum nee yellam oru muslimaa ?
sooniyam enbadhu (ungal paarvaiyil) oruvarai thodamal entha aayuthathaiyum payapaduthamal avarukku novinai earpaduvathu endru artham. ippadi seiya iraivanal mattumae mudiyum. neengal kooruvathai parthal
sooniyakkaarargal iraivan pondravargala?
sindhiyungal nanbarae.

Reply

abdul azeez August 20, 2012 at 9:26 pm

சலாம் முஹம்மத் இப்ராஹீம்
// sooniyam unmai entrum koorum nee yellam oru muslimaa ?//
நான் முஸ்லிம் தான். அதை உங்களுக்கு சான்று பகர அவசியமில்லாதது.
என் பார்வையில் உள்ளதை நீங்கள் எப்படி அறிந்துக் கொண்டீர்கள். உங்களுக்கு வஹீ வருகிறதா? சூனியக் கலைக்கு நீங்கள் அர்த்தம் எல்லாம் போட்டுள்ளீர்களே! அந்த அர்த்தத்தை நான் இந்த பதிவில் போடவில்லை. நீங்கலாக ஒன்றை போட்டுக் கொண்டு அந்த கருத்தில் நான் உள்ளதாக கற்பனையில் கதை அளக்காதீர்.

சூனியம் சம்பந்தமான ஹதீதை மறுபடி பாருங்கள் என்னென்ன பொருளை பயன்படுத்தியுள்ளார்கள் என்பது விளங்கும் அந்த ஹதீதின் சுருக்கம் இதுதான்

நிவாரணம் எதில் உள்ளதோ அதை எனக்கு அல்லாஹ் அறிவித்துவிட்டதை நீ அறிவாயாக? என்னிடம் (கனவில்) இரண்டு பேர் (இரண்டு வானவர்களான ஜிப்ரீலும், மீக்காயிலும்) வந்தனர். அவர்களில் ஒருவர் (ஜிப்ரீல்) என் தலைமாட்டில் அமர்ந்தார். மற்றொருவர் (மீக்காயில்) என்னுடைய கால்மாட்டில் அமர்ந்தார். ஒருவர் மற்றொருவரிடம் (மீக்காயில் ஜிப்ரீலிடம்), ‘இந்த மனிதரைப் பீடித்துள்ள நோய் என்ன?’ என்று கேட்டார். மற்றொருவர் (ஜிப்ரீல்), ‘இவருக்கு சூனியம் வைக்கப்பட்டுள்ளது” என்று பதிலளித்தார். அதற்கு அவர், ‘இவருக்கு சூனியம் வைத்தது யார்?’ என்று கேட்க, (ஜிப்ரீல்) அவர்கள், ‘லபீத் இப்னு அஃஸம் (என்னும் யூதன்)” என்று பதிலளித்தார். ‘(அவன் சூனியம் வைத்தது) எதில்?’ என்று அவர் (மீக்காயில்) கேட்க அதற்கு, ‘சீப்பிலும், (இவரின்) முடியிலும், ஆண் (பேரீச்சம்) பாளையின் உறையிலும்” என்று (ஜிப்ரீல்) பதிலளித்தார். அதற்கு அவர், ‘அது எங்கே இருக்கிறது” என்று கேட்க, ‘(பனூ ஸுரைக் குலத்தாரின் தோட்டத்திலுள்ள) ‘தர்வான்’ எனும் கிணற்றில்” என்று பதிலளித்தார்கள். ( புஹாரி 3268. ஆயிஷா(ரலி) அறிவித்தார்)

இந்த ஹதீதை கொண்டு சிற்சில ஆயுதங்கள் பயன்படுத்தப் பட்டுள்ளது என்பது விளங்கும். மேலும் குர்ஆனில் மூசாவிடம் சூனியக் கலை நிபுணர்களான அந்தக் கூட்டம் சின்னக் குச்சியை கீழே போட்டதினால் பாம்புகளாக மாறி வந்ததை வல்ல அல்லாஹ் நமக்கு விவரிக்கின்றான். அதனால் நீங்கலாக சூனியத்திற்கு ஒரு இலக்கணத்தை உருவாக்காதீர்கள்.
மா சலாம்.
அப்துல் அஜீஸ்

Reply

T.Mohamed Ibrahim August 29, 2012 at 3:02 pm

assalaamu alaikkum, abdul ajeez,
neengal kurippittulla hadhees sari dhan aanaal sila hadheesgal quranudan vaerubadum athil idhuvum ondru,
neengal muthalil nandraga purindhu kollungal. oru manidhan pirappil irundhu irappu varai avanathu vidhiyai theermaanippavan iraivan (idhil ungalukku edhum sandhegam irundhal quranai nanraaga padikkavum).
neengal solvadhu pol oruvarukku sooniyam vaikkappattal antha kurippitta naatkalil avarudai vidhiyai sooniyakkaran nirnayam seigiraanaa.(idharkku ungal badhil).appadiyanaal sooniyakkaran allahvai vida aatral udaiyavanaa. indha ulagil oru anuvum allavin naattam indri asaiyadhu. sindhiyungal nanbarae.
neengal kurippitta moosa nabi kaalathil sooniyakkarargal seithadhu oru maayaai dhan
allah anaithu porutgalin meedhum aatral udaiyavan.

Reply

HAYATH AHMED April 7, 2016 at 8:01 pm

md ibrahim nee pirandu koncham varusham daan aayirukkum.athukkulle nee yalla islamai patriyo therinduvittaya.anraya kalam sahabakal[ra]kettu therinju parthu purinju yezudiya thellam nee ippa vandu 1% kuda muslim iladavan nee adu thappu yanru solriya.mudalle islammai muzusa therinju athula nadundu sel.appa kuda nee avanga kaal doosi kuda aga mudithu.hadisathappu solravan yallam yappadi muslimaga irukka mudiyum.

Reply

Ibn Ismail August 29, 2012 at 7:44 pm

சகோதரர் இப்ராஹீம் அவர்களுக்கு
சில ஹதீஸ் குர்ஆனோடு முரன்படும் என்று கூறுகிறீர்கள். சூனியம் உண்டு என குர்ஆன் நெடுகிலும் நீங்கள் படித்தால் சூனியம் ஒன்று உள்ளது என்று புரிந்து கொள்வீர்கள். ஹதீதுகளிலும் இதே நிலைதான். ஏழு பெரும் பாவங்களில் சூனியமும் ஒன்று என நபித்தோழர் அபூஹுரைரா (ரலி) அறிவிக்கும் ஹதீதும் நபி ஸல் அவர்களுக்கு சூன்யம் வைக்கப்பட்டது என அன்னை ஆயிஷா ரலி அவர்களும் அறிவிக்கிறார்கள். குர்ஆனும் ஹதீதும் கூறும் ஒரு விஷயத்தை ஒரு அறிவிலி கூறுவதை ஏற்றுக்கொள்கிறீர்கள்.

சூன்யத்தை இதற்கு முன்பு எந்த அறிஞராவது 10 ஆண்டுகளுக்கு முன் 100 ஆண்டுகளுக்கு முன் 1000 ஆண்டுகளுக்கு முன் அல்லது தாபீயீன்கள் அல்லது நபித்தோளர்கள் ஏன் நபி ஸல் அவர்களாவது சூன்யத்தை மறுத்து இருக்கிறார்களா?

சூன்யத்தை நம்பின இமாம்கள் ஹதீஸ்கலை வல்லுனர்கள் நபித்தோளர்கள் நபி ஸல் அவர்கள் அனைவரையும் உங்களது பார்வையில் முஸ்லிம்கள் இல்லையா? ஒரு வழிகேடனின் பேச்சை நம்பி வழிகெட்டு செல்கிறீர்கள்.

தஜ்ஜால் கூட இறந்த மனிதரை உயிர்பிப்பானென்று ஹதீஸ்கள் கூறுகின்றன. இந்த ஹதீஸ்களை ஏற்றுக்கொள்பவர்கள் அல்லாஹ்வுக்கு இணை வைத்து விட்டார்கள் என்று கூறுவீர்களா?
சூனியத்தை அல்லாஹ் குர்ஆனில் கூறியபடி ஒருவன் நம்பினால் எப்படி அவன் முஷ்ரிக்காக ஆக முடியும். யார் அல்லாஹ் கூறியபடி நபி ஸல் அவர்கள் கூறியபடி நம்பவில்லையோ அவர்கள் தான் குப்ரில் இருக்கிறார்கள் என்பதற்கு அவர்களே சாட்சியாக இருக்கிறார்கள்.

Reply

T.Mohamed Ibrahim August 30, 2012 at 5:35 pm

ismail avargalae assalaamu alaikkum,
sooniyam unmai (adhavadhu iraivanin seyalai manaidhanal seiyamudiyum (asthaufirullah) ) endru endha muminum earka mattan. quranil endha idathilum sooniyam unmai endru koorappadavillai . nabi margalai maruthavargal than nabimargalai sooniyakkarargal endru koorinargal . naamum avargalai pol aaga vaendam.
assalam.

Reply

tharik September 2, 2012 at 8:50 pm

113:4. இன்னும், முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கை விட்டும்,
113:5 وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ113:5. பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போதுண்டாகும் தீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்).

Reply

Safiyullah September 3, 2012 at 1:04 am

Ya Allah when this ummath willbe unite?

Reply

ShahulHameed -Norge October 9, 2012 at 4:59 pm

assalamu alaikum,
avarkal otrumayil than ullarkal….If you see some other unbeleivers comments in some other wesites,they normally use very bad words…..
But these muslims they are not using that….this is one of the Islamic unity.
And from this discussion i came to know good informations….
Itharku allahthan theerpalikka vandum…….either immaiyil or marumail.

-Shahul

Reply

abdul azeez September 10, 2012 at 7:15 pm

வ அலைக்கும் சலாம் முஹம்மத் இப்ராஹீம் அவர்களே!
ஒரு விஷயத்தை இப்படி தான் இருக்கவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டு விவாதித்தால் தெளிவு கிடைக்காது நீங்கள் ஆரம்பத்தில் எழுதினீர்கள் கையில் எந்த ஆயுதமும் இல்லாமல் பிறிதொருவருக்கு தீங்கு செய்வது சூனியம் என்றீர்கள். ஆனால் அது இல்லை என்று ஹதீத் மூலம் மற்றும் குர்ஆனை மேற்கோள் காட்டினேன்.இப்பொழுது வேறு ஒன்றுக்கு மாறுகிறீர்கள் அதாவது சூனியம் ஒருவருக்கு செய்தால் செய்யப் பட்ட அந்த நபர் இறந்து விடுவார் என்பது போல் ஏகமனதாக முடிவு செய்து கொண்டு விவாதிக்கிறீர்கள்.

மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை விதி தீர்மானிக்கிறது உண்மை அதை யாராலும் மாற்ற முடியாது. ஏன் சூனியக்காரர்களுக்கு மட்டும் இந்த விதிமுறைகளை போடுகிறீர்கள். மற்றவர்களுக்கு பொருந்தாதா? ஒருவன் தூங்கும் போது யார் நினைத்தாலும் அவன் கதையை முடித்து விடலாமே! எந்த ஒரு காரணமும் இல்லாமல் சுலபத்தில் செய்து விடலாம், பேருந்து வாகனம் பயணம் செய்யும் போது படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணிப்போர் ஏராளம் அப்பொழுது நினைத்தால் ஒருவர் உள்ளிருந்து தொங்கிக் கொண்டு பயனிப்பவரை ஒரு உதையில் அவன் விதியை முடித்துவிடலாம். இந்த இடத்தில் தூங்குபவனை கொள்பவரோ, பயனிப்பவரை கொள்பவரோ அல்லாஹ்வின் ஆற்றலை விட உயர்ந்தவரா?

ஏன் இப்பொழுது நடைமுறையில் பார்க்கலாம் ஒரு எதிராளியின் கும்பலை ஒழித்துக் கட்ட நேடோ படைகள்
ஏவுகணைகளை செலுத்தும் போது தவறுதலாக பொது மக்கள் சிலரின் உயிர்களை வாங்கிவிடுகிறது இதில்
எந்த திட்டமும்,முயற்சியும் அவர்கள் எடுக்காத பட்சத்தில் இப்படி நடந்துவிடுகிறது இதற்க்கு நேடோ கமாண்டர்கள் அல்லாஹ்வின் அந்தஸ்துக்கு மேல் உயர்ந்தவர்களா? உங்கள் எழுத்து பிரகாரம் பார்த்தல் நேடோ படைகள் அல்லாஹ்வின் ஆற்றலுக்கு மேல் உயர்ந்தவர்களாக தான் படுகிறது. அவர்கள் தவறுதலாக கொன்றாலும் வேண்டும் என்றே கொன்றாலும் விதியை முடிப்பவர்கள் ஆகிறார்களே! அதனால் நீங்கள் மறுபரிசீலனை செய்யுங்கள்

// neengal kurippitta moosa nabi kaalathil sooniyakkarargal seithadhu oru maayaai dhan allah //
ஆபரணங்களை உருக்கி காலைக் கன்று செய்த சாமிரி அதற்க்கு ஒரு சப்தம் வரவைத்தான் அந்த வசனத்தை பாருங்கள். அவன் செய்தது என்ன வேலை மந்திரித்து ஊதும் பெண்களின் தீங்கிலிருந்து பாதுகாப்பு தேடுவீராக என்று சொல்லும் அவசியம் தான் என்ன? ஒரு விஷமே! இல்லை என்றால் அப்புறம் எதற்கு பாதுகாப்பு கோர வேண்டும் அந்த வசனத்தை நீங்கள் எப்படி புரிந்துள்ளீர்கள். விளக்கவும்.
மா சலாம்.
அப்துல் அஜீஸ்

Reply

T.Mohamed Ibrahim September 11, 2012 at 7:29 pm

அப்துல் அஜீஸ் avargalae assalamu alaikkum,
(enna nanbarae sooniyathirku ivvalavu vakkalathu vangugireegal)
Naan munnukku pin murunaaga paesavillai. neengal than sariyaga purindhu kollavillai
Sooniyakkaran oruvan matravanukku sooniyam eppadi seivan endru than koorinen, adhavadhu oruvanudaiya mudi ,kaladi man, pondravatrai kondu avanukku theengu erpaduthuven endru kooruvan
idhu mudiyuma? ivan oru idathil iruppan avan oru idathil iruppan eppadi theengu seiyamudiyum. idhai nampuvadhu allavirkku inai karpikkakoodiya kariyam illaiya. alla oruvanukku nanmaiyo, theemaiyo seiya nadinal avan angirundhe kattalai pirappipan adhu nadakkum. indha seyalai sooniyakkaran seivan endru neengal koorugireegal , ivvaru paesalam

Melum
ஒருவன் தூங்கும் போது யார் நினைத்தாலும் அவன் கதையை முடித்து விடலாமே! எந்த ஒரு காரணமும் இல்லாமல் சுலபத்தில் செய்து விடலாம், பேருந்து வாகனம் பயணம் செய்யும் போது படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணிப்போர் ஏராளம் அப்பொழுது நினைத்தால் ஒருவர் உள்ளிருந்து தொங்கிக் கொண்டு பயனிப்பவரை ஒரு உதையில் அவன் விதியை முடித்துவிடலாம். இந்த இடத்தில் தூங்குபவனை கொள்பவரோ, பயனிப்பவரை கொள்பவரோ( ean sunami, puyal pondra iyargai seetrangalalum 1000 kanakkananor irakkirargal appadiyanal kadal neerum, katrum ) அல்லாஹ்வின் ஆற்றலை விட உயர்ந்தவரா? endru kaetgireegal
Naan endha soolnilaiyilum ivvaru koora matten.
ivvaru nadappadhum allavin naattam endru nambuvathu than oru muminukku uriyadhu,

ஆபரணங்களை உருக்கி காலைக் கன்று செய்த சாமிரி அதற்க்கு ஒரு சப்தம் வரவைத்தான் அந்த வசனத்தை பாருங்கள் paarthen avan (samiri) adhanai kadavul endru koorinan moosa avargal adhanai
theeyil ittu erithu sampalakki adhanai kadalil thoovi idhu kadavul illai endru nirubithargal (al-quran 20:89 20:97)
avan seidhadhu oru thandhiram
thandhirathai ippolukooda naam parkalam.( maedaiyil oru yanai maraiya vaippargal)

மந்திரித்து ஊதும் பெண்களின் தீங்கிலிருந்து பாதுகாப்பு தேடுவீராக என்று சொல்லும் அவசியம் தான் என்ன? endru kaetgireergal indha vasanathil allah saithanani patri than koorugiran mudichi enpadhu kaitril podu mudichi endru ninaikkadheergal , moosa nabi avargal thamadhu naavil ulla kuraipaattai neekkumaru allavidam kaettapodhu mudichi endru than kaettargal (al-quran 20:66,67)
melu oodhudhal endra sollum hadheesgalil saithanudan thodarbu paduthi koorappattulladhu (abudhaavooth 651)
melum theeya sakthigalai kurikka penpalai kuruppiduvathu arabiyil ulla valakkam,

vassalaam.

Reply

Ibn Ismail September 11, 2012 at 11:06 pm

சகோதரர் இப்ராஹீம்
அல்லாஹ் குர்ஆனில்
وَمَا يُعَلِّمَانِ مِنْ أَحَدٍ حَتَّىٰ يَقُولَا إِنَّمَا نَحْنُ فِتْنَةٌ فَلَا تَكْفُرْ ۖ فَيَتَعَلَّمُونَ مِنْهُمَا مَا يُفَرِّقُونَ بِهِ بَيْنَ الْمَرْءِ وَزَوْجِهِ ۚ وَمَا هُم بِضَارِّينَ بِهِ مِنْ أَحَدٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ ۚ وَيَتَعَلَّمُونَ مَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ ۚ وَلَقَدْ عَلِمُوا لَمَنِ اشْتَرَاهُ مَا لَهُ فِي الْآخِرَةِ مِنْ خَلَاقٍ ۚ وَلَبِئْسَ مَا شَرَوْا بِهِ أَنفُسَهُمْ ۚ لَوْ كَانُوا يَعْلَمُونَ
ஆனால் அவர்கள் (மலக்குகள்) இருவரும் – நிச்சயமாக நாங்கள் (உனக்கு) ஒரு சோதனையே! எனவே (இதனை) நீ கற்று இறை நிராகரிப்பாளனாக ஆகிவிடாதே!,, என்று கூறிய பின்னரே எவருக்கும் கற்றுக் கொடுத்தார்கள். அப்படியிருந்தும் – கணவனுக்கும் மனைவிக்கும் பிரிவை ஏற்படுத்தும் சூனியத்தை அவ்விருவரிடமிருந்தும் அவர்கள் கற்று வந்தனர். எனினும் அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்கள் இதன் மூலம் எவருக்கும் எத்தீங்கும் இழைக்கக்கூடியவர்கள் அல்லர். உண்மையில், அவர்களுக்குப் பயனளிக்காத (மாறாக) தீங்கு அளிக்கக்கூடிதையே அவர்கள் கற்றுக்கொண்டார்கள். அதனைக் (கற்று) விலைக்கு வாங்கிக் கொண்டவனுக்கு மறுவுலகத்தில் யாதொரு பங்கும் கிடையாது என்பதை அவர்கள் நன்கு அறிந்தே இருந்தனர். தங்களின் உயிரை (அதாவது உழைப்பையும் சக்தியையும்) விற்று அவர்கள் வாங்கிக் கொண்ட பொருள் எத்துணை கெட்டது! இதனை அவர்கள் அறிந்திருக்கக் கூடாதா?” அல்குர்ஆன் (2: 102)
இங்கு அல்லாஹ் சூனியத்தை மறுத்ததாக இருக்கின்றதா அல்லது அப்படி ஒன்று இருக்கிறது என்று சொல்கிறதா?

சூனியத்தினால் ஒருவன் பாதிப்பை அடந்தால் அதுவும் அல்லாஹ்வின் விதிக்குள் அடங்கிய விஷயம்தான் என்பதை அல்லாஹ்வின் வசனமே உறுதி செய்கிறது. (எனினும் அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்கள் இதன் மூலம் எவருக்கும் எத்தீங்கும் இழைக்கக்கூடியவர்கள் அல்லர்)
ஆகையால் தனிமனித கருத்தை தூக்கி எரியுங்கள். அல்லாஹ் கூறுவதை நன்கு சிந்தியுங்கள்.

Reply

abdul azeez September 14, 2012 at 8:00 pm

வ அலைக்கும் சலாம் முஹம்மது இப்ராஹீம்

// ( ean sunami, puyal pondra iyargai seetrangalalum 1000 kanakkananor irakkirargal appadiyanal kadal neerum, katrum ) அல்லாஹ்வின் ஆற்றலை விட உயர்ந்தவரா? endru kaetgireegal
Naan endha soolnilaiyilum ivvaru koora matten.
ivvaru nadappadhum allavin naattam endru nambuvathu than oru muminukku uriyadhu,//

இது போல தான் இந்த சூனியம் செய்யும் மனிதர்களின் காரியமும் அல்லாஹ்வின் நாட்டப் படியே நடக்கிறது என்று நாம் நம்புகிறோம். அவர்கள் செய்யும் கலைத்திறன்

நாம் அறியாததால் அதனை சரியாக விளக்க முடியவில்லை அதை அறிய அவசியமும் இல்லை என்பது தான் நமக்கு கூடுதல் விளக்கம் கொடுக்க முடியாத காரணம்.

// சூனியத்தினால் ஒருவன் பாதிப்பை அடந்தால் அதுவும் அல்லாஹ்வின் விதிக்குள் அடங்கிய விஷயம்தான் என்பதை அல்லாஹ்வின் வசனமே உறுதி செய்கிறது. //

என்று சகோதரர் இப்னு இஸ்மாயில் கொடுத்த தகவலை பாருங்கள். தீய செயல்களை குறிப்பிட பெண்களை குறிப்பிடுவதாக சொல்கிறீர்கள். இருக்கட்டும் முடிச்சுகளுக்கு வேற ஒரு வசனத்தில் உள்ள முடிச்சுக்கு உள்ள அர்த்தத்தை போடுகிறீர்கள் அதாவது மூஸா (அலை) அவர்களை பிரார்த்திக்கும் போது நாவில் உள்ள திக்கு வாயை மேற்கோள் காட்டும் போது அந்த விளக்கத்தை இதில் எதுக்க முடியாது “ திக்குவாய் ” உதாரணம் இதுக்கு பொருந்தாது சரி விடுங்கள் “மந்திரித்து உண்டான பதில் என்ன ?

// theemaiyo seiya nadinal avan angirundhe kattalai pirappipan adhu nadakkum. indha seyalai sooniyakkaran seivan endru neengal koorugireegal , ivvaru பேசலாம்//

இப்படி நாங்கள் எங்கேயும் சொல்லியுல்லோமா? நீங்கலாக இப்படி நினைத்துக் கொண்டு பேசலாம் என்றால் அர்த்தம் இல்லை சகோதரர். சும்மா தாம் விவாதம் வரும்

ஒருவருடைய காரியத்தில் விஷயம் இருக்கின்றது. அதை தெரியாமல் ஏன்? உளரனும் ஹதீதிலும் சில உதாரணம் சீப்பு, முடி, இன்னும் கொடுத்திருந்தேன் ஆனால் நீங்கள் கவனிக்கவில்லை. அதனால் ஆரோக்கியமான ஆதாரம் தேவை.

மா சலாம்.

அப்துல் அஜீஸ்

Reply

T.Mohamed Ibrahim September 17, 2012 at 7:15 pm

assalamu alaikkum அப்துல் அஜீஸ் avargalae,
mudichu endra sollai nan thavaraga payanpaduthiyullen endru koorugindreergal
3269. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் உறங்கிக் கொண்டிருக்கும்போது உங்கள் தலையின் பின்பக்கத்தில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப் போட்டு விடுகிறான். ஒவ்வொரு முடிச்சிலும், ‘இன்னும் உனக்கு நீண்ட இரவு (ஓய்வெடுப்பதற்காக எஞ்சி) இருக்கிறது. எனவே, நீ தூங்கிக் கொண்டேயிரு’ என்ற போதித்து (அவனை விழிக்க விடாமல் உறங்க வைத்து) விடுகிறான். அவர் (அவனுடைய போதனையைக் கேட்காமல் அதிகாலையில்) கண் விழித்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் ஒரு முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. அவர் உளூச் செய்தால் மற்றொரு முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. அவர் (தஹஜ்ஜுத் அல்லது ஃபஜ்ர்) தொழுதுவிட்டால் முடிச்சுகள் முழுவதுமாக அவிழ்ந்து விடுகிறது. அவர் சுறுசுறுப்புடனும் உற்சாகமான மனநிலையுடனும் காலைப் பொழுதை அடைவார். இல்லையென்றால் மந்தமான மனநிலையுடனும் சோம்பலுடனும் காலைப் பொழுதை அடைவார்.
indha hadheesil mudichu endra sol evvarru payanpaduthapattulladhu ?
(saithan mudichu poduvan endru koorappattulladhu)
melum “மந்திரித்து endra sol tamil mozhi peyarpil serkkappatta varthaithan.

melum ismail avargal kattiya vasanathai nandraga sindhiyungal.
2:102. அவர்கள் ஸுலைமானின் ஆட்சிக்கு எதிராக ஷைத்தான்கள் ஓதியவற்றையே பின்பற்றினார்கள்; ஆனால் ஸுலைமான் ஒருபோதும் நிராகரித்தவர் அல்லர்; ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்கள்; அவர்கள்தாம் மனிதர்களுக்குச் சூனியத்தைக் கற்றுக்கொடுத்தார்கள்; இன்னும், பாபில் (பாபிலோன் என்னும் ஊரில்) ஹாரூத், மாரூத் என்ற இரண்டு மலக்குகளுக்கு இறக்கப்பட்டதையும் (தவறான வழியில் பிரயோகிக்கக் கற்றுக்கொடுத்தார்கள்). ஆனால் அவர்கள் (மலக்குகள்) இருவரும் “நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம் (இதைக் கற்று) நீங்கள் நிராகரிக்கும் காஃபிர்கள் ஆகிவிடாதீர்கள்” என்று சொல்லி எச்சரிக்காத வரையில், எவருக்கும் இ(ந்த சூனியத்)தைக் கற்றுக் கொடுக்கவில்லை; அப்படியிருந்தும் கணவன் – மனைவியிடையே பிரிவை உண்டாக்கும் செயலை அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டார்கள். எனினும் அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது; தங்களுக்குத் தீங்கிழைப்பதையும், எந்த வித நன்மையும் தராததையுமே – கற்றுக் கொண்டார்கள். (சூனியத்தை) விலை கொடுத்து வாங்கிக் கொண்டவர்களுக்கு, மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை என்பதை அவர்கள் நன்கறிந்துள்ளார்கள். அவர்கள் தங்கள் ஆத்மாக்களை விற்றுப்பெற்றுக்கொண்டது கெட்டதாகும். இதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?

ivvasanthil sooniyam enbadhu oru saithanin seyal endru theliva koorappattulladhu.
indha saithanin seyalukku ean neengal ivvalavu vadham seigindreergal.

melum indha sooniyathal edhuvum nadakkadhu enbadhum ivvasanathil koorappattulladhu
melum ivvasanathil malakkugal sooniyam katru koduthargal endru mozhi peiyarthu ullargal
idhuvum earkapadha visayam.(malakkugal oru podhum iraivanukku inai karpikkum seyalai seiyamattargal)

melum ivvasanathil (இதைக் கற்று) நீங்கள் நிராகரிக்கும் காஃபிர்கள் ஆகிவிடாதீர்கள்” endrum koorappattulladhu, sindhikka vaendama

melum sooniyathal endha theengum seiyamudiyadhu endrum koorugindradhu.

kanavan manaivi idaiye pirivinaiyai avargalal earpadutha mudiyum endru koorugiradhu
idhanai vaithu sooniyam seiyamudiyum endru nambakoodadhu.

(kanavan manaivi idaiye naam kooda illadahadahiyum polladhadhaiyum solli avargalidaiyae pirivinai earpaduthalam.)
அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது; தங்களுக்குத் தீங்கிழைப்பதையும், எந்த வித நன்மையும் தராததையுமே – கற்றுக் கொண்டார்கள். (சூனியத்தை) விலை கொடுத்து வாங்கிக் கொண்டவர்களுக்கு, மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை என்பதை அவர்கள் நன்கறிந்துள்ளார்கள். அவர்கள் தங்கள் ஆத்மாக்களை விற்றுப்பெற்றுக்கொண்டது கெட்டதாகும். இதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?

enavae nanbarae sooniyathai nambuvadhum avanidam selvadhum allahvirku inaivaikkakoodiya kariyam
naam adhanai thavithu kollalamae !!! ( neengal sooniyakkargalidam selgindreegal endru naan kooravillai).

nam anaivarukkum allah arul purivanaga,

மா சலாம்.

Reply

Saheemuslim September 20, 2012 at 8:56 am

Allahu akbar…allahdan paduhaakanum…
Karuthu werupaaduhalai angee haripom…adanaal ummath pilawu adaivadai,sandai iduwadai vittum thawirpom…indaiku ullangal than karuthu mattume seri yenru adam pidipadaal matha karuthukal sollum podu manam jeeranikka mudiyawillai…
Awarhaluku maatramaana karuthu vandaal
Adatku reply panni avarai suthamaka muyatsikinranr.allah paaduhaakanum..yenda muslima paarthum musrik yendu solla anumadi kidayaadu…plz onru paduwom…islathuku ediraha ennanamo nadakudupa.aduku allahta dua seiwom…
By-ceylon muslim ummah.

Reply

ibnu abdulla October 8, 2012 at 8:35 pm

sooniyam pattri arivikkapadum hadeesil moondru muran patta vadivil sooniyam seiyappatta porul yedukkappattataka ulladu , allahu koorukindran nabi[sal] avargalukku suniyam seyyappattadu aniyaakkaara valikeedar kalin kootru yenru melum sooniyattirku parigaaramaga koorapadum quran vassanam mecca vil arulapattu nabi [sal] dinam moondru murai iravu oodi padukkapu tedikolvaargal nabi sal avargaluku sooniyam seiyapatadaga koorapaduvadu madeenavil

Reply

abdul azeez October 19, 2012 at 7:41 pm

va alaikkum salaam
T.Mohamed Ibrahim avargalukku neenda idaivelikku pin thodarkiren adharkku varuttham therivikkiren

// melum ivvasanathil malakkugal sooniyam katru koduthargal endru mozhi peiyarthu ullargal
idhuvum earkapadha visayam//

malakkugal inai karpitthadhaaga kur aanil sollap padavillai naangal sodhanaiyaaga irukkirom endru thaan makkalukku padhil alitthaargal. irundhum makkal adhai therindhu kondu thavaraana muraiyil pirayogitthaargal. idhu thaan VISHAYAM

// ஆனால் அவர்கள் (மலக்குகள்) இருவரும் “நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம் (இதைக் கற்று) நீங்கள் நிராகரிக்கும் காஃபிர்கள் ஆகிவிடாதீர்கள்” //

ivargal malakkugal thaan sodhanaikkullaakkap pattullaargal

saitthaanaaga irundhaal nichayamaaga UBADHESIKKA MAATTAAN adhuvum neengal niraagarikkum kaafirgal aagavendaam endru saitthaanaal solla mudiyumaa? adhu thane avanukk thevai allahvidan avakaasam kettadhum adhukku thaane.

KURAANIL nandraaga paarungal ” VAMAA UNZILA ALAL MALAKAINI ”

iru malakkugal endru thaan moola padham ulladhu veru viyaakkiyaanam edharkku

// அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது; //

allaahvin kattalaiyindri endru pottulladhai en paarkka villai neengal ippadi podalaamaa? kezhe paarungal

// melum indha sooniyathal edhuvum nadakkadhu enbadhum ivvasanathil koorappattulladhu/

===========

ibnu abdulla avargalukku salaam

// sooniyam pattri arivikkapadum hadeesil moondru muran patta vadivil sooniyam seiyappatta porul yedukkappattataka ulladu , //

idhai hadheedh aadhaarangalodu vivarikkavum

maa salaam.
abdul azeez

Reply

அப்துர் ராசிக் December 31, 2012 at 5:00 pm

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்…
அஸ்ஸாலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு..

அன்பான இஸ்லாமிய சகோதரர்களுக்கு,

சமீபத்தில் சூனியம் குறித்த ஒரு கேள்வி பதில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டேன். அதில் சூனியம் குறித்த சில கருத்துக்கள் குர்’ஆன் ஹதீஸ்களின் பார்வையில் பேசப்பட்டது.

1. சூனியம் என்றால் என்ன?
2. சூனியத்தை நம்பலாமா?
3. சூனியத்தை நம்புவது இணைவைப்பா?
4. சூனியத்தை நம்புபவர்களின் பின்னால் நின்று தொழலாமா?

போன்ற தலைப்புகளின் வரிசையில் நிகழ்ச்சி அமையப்பெற்றது.

இதில், சூனியம் என்பது தெளிவான இணைவைப்பு, அதை நம்புபவர்களின் பின்னல் நின்று தொழக்கூடாது, என்று கூறிவிட்டு இறுதியில் சூனியத்தை பற்றி குர்’ஆன் வசனம் (2.102) ஒன்றை மற்றும் நாங்கள் ஏற்றுக்கொள்வோம். ஆயினும், இந்த சூனியம் வேறு. குர்’ஆனில் கூறப்பட்டுள்ள சூனியத்தை நாங்கள் நம்பும் வகையில் தான் நம்ப வேண்டும். இதற்கு அப்பால் வேறு பொருள் கொண்டால் அது இணைவைப்பாகும் என்பதோடு முடித்துக்கொண்டார்.

[திருக் குர்’ஆன் 2:102]
“அவர்கள் ஸுலைமானின் ஆட்சிக்கு எதிராக ஷைத்தான்கள் ஓதியவற்றையே பின்பற்றினார்கள்; ஆனால் ஸுலைமான் ஒருபோதும் நிராகரித்தவர் அல்லர்; ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்கள்; அவர்கள்தாம் மனிதர்களுக்குச் சூனியத்தைக் கற்றுக்கொடுத்தார்கள்; இன்னும், பாபில் (பாபிலோன் என்னும் ஊரில்) ஹாரூத், மாரூத் என்ற இரண்டு மலக்குகளுக்கு இறக்கப்பட்டதையும் (தவறான வழியில் பிரயோகிக்கக் கற்றுக்கொடுத்தார்கள்). ஆனால் அவர்கள் (மலக்குகள்) இருவரும் “நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம் (இதைக் கற்று) நீங்கள் நிராகரிக்கும் காஃபிர்கள் ஆகிவிடாதீர்கள்” என்று சொல்லி எச்சரிக்காத வரையில், எவருக்கும் இ(ந்த சூனியத்)தைக் கற்றுக் கொடுக்கவில்லை; அப்படியிருந்தும் கணவன் – மனைவியிடையே பிரிவை உண்டாக்கும் செயலை அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டார்கள். எனினும் அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது; தங்களுக்குத் தீங்கிழைப்பதையும், எந்த வித நன்மையும் தராததையுமே – கற்றுக் கொண்டார்கள். (சூனியத்தை) விலை கொடுத்து வாங்கிக் கொண்டவர்களுக்கு, மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை என்பதை அவர்கள் நன்கறிந்துள்ளார்கள். அவர்கள் தங்கள் ஆத்மாக்களை விற்றுப்பெற்றுக்கொண்டது கெட்டதாகும். இதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா? ”

மேலே சுட்டிக்காட்டப்பட்டுள்ள வற்றில் “கணவன் – மனைவியிடையே பிரிவை உண்டாக்கும் செயலை அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டார்கள்.” என்பது மட்டுமே சூனியத்தால் முடியும். அதுவும், யாரவது ஒரு கணவன் மனைவிக் கிடையே பிரிவை ஏற்படுத்தும் வகையில் கவர்ச்சியாக (சூனியமாக) பேசுவதையே இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் கண்கட்டி வித்தை எதுவும் இல்லை என்றும் விளக்கமளித்தார். இதையே நாம் சூனியத்தால் செய்ய முடிந்த செயல் என்று அர்த்தம் கொள்ளவேண்டும்.
“இதற்கு மாற்றமாக நாம் எதையும் கற்பனை செய்தால் நாம் இணைவைத்து விட்டோம். அப்படி மாற்றி அர்த்தம் கொள்பவர்கள் பின்னல் நின்று தொழக்கூடாது என்ற ஒரு ஃபத்வாவையும் கொடுத்தார்.

இது பற்றிய மாற்றுக் கருத்தோ அல்லது சிறந்த விளக்கமோ இருந்தால் பதிவிடுங்கள்.

1. சூனியம் என்றால் என்ன?
2. சூனியத்தை நம்பலாமா?
3. சூனியத்தை நம்புவது இணைவைப்பா?
4. சூனியத்தை நம்புபவர்களின் பின்னால் நின்று தொழலாமா?

இணைவைப்பின் அடிச்சுவடுகளிலிருந்தும் அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக…!

அன்புடன்,
அப்துர் ராசிக்.
18/02/1434, திங்கற்கிழமை.

Reply

Imran Khan February 19, 2014 at 2:36 pm

Please listen to following audio/video link, Insha Allah, you will get to know the valuable information for your questions.

http://www.islamkalvi.com/portal/?p=42532

http://www.islamkalvi.com/portal/?p=41525

Please provide your updates after listened to speech.

Reply

abdul azeez January 4, 2013 at 1:56 am

வ அலைக்கும் சலாம் அப்துர் ராசிக். அவர்களுக்கு

// இதில், சூனியம் என்பது தெளிவான இணைவைப்பு, அதை நம்புபவர்களின் பின்னல் நின்று தொழக்கூடாது, என்று கூறிவிட்டு //

என்பதை பார்த்தால் முன்பு ஒரு காலத்தில் சுன்னத் ஜமாத் கொடுக்கும் ஃபத்வாவை ஒட்டி நீங்கள் குறிப்பிட்ட அமைப்பாளரும் வீரியமில்லாமல் கொடுக்கின்றனர்.

// இது பற்றிய மாற்றுக் கருத்தோ அல்லது சிறந்த விளக்கமோ இருந்தால் பதிவிடுங்கள்.//

மாற்று இருக்கின்றது. ஒரு புறம் இருந்தாலும் இன்னதை இவர்கள் நம்புகிறார்கள் இதனால் இவர்கள் பின்னால் நின்று தொழ கூடாது என்பதற்கு அதே குர்ஆன், மற்றும் ஹதீதைக் கொண்டு நிரூபிக்க வேண்டும். தவறினால் ஃபத்வாவை குப்பையில் வீசவேண்டும்.இது தான் உண்மை நிலை.

// கவர்ச்சியாக (சூனியமாக) பேசுவதையே இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் கண்கட்டி வித்தை எதுவும் இல்லை என்றும் விளக்கமளித்தார்.//

கவர்ச்சியாக பேசுவதை சூனியத்திற்கு ஆதாரமாக எங்கிருந்து எடுத்தார்கள். “சுய கருத்துதினிப்பா ?” கவர்ச்சியாக பேசும் ஆற்றல் சில மனிதர்களுக்கும் இருக்கவே செய்கின்றன. இந்த வகையில் பார்த்தால் கவர்ச்சி பேசும் மனிதர்கள் அனைவரும் சூனியக் காரர்களா? அவர்கள்.
சுவர்க்கம் செல்ல முடியாதா ?

// “இதற்கு மாற்றமாக நாம் எதையும் கற்பனை செய்தால் நாம் இணைவைத்து விட்டோம்.//

இந்த அளவுக்கு உத்திர வாதமா சொல்கிறார்கள் என்றால். ஒன்று இவர்கள். அந்த மலக்குகளிடம் கற்று அறிந்திருக்கவேண்டும். அல்லது. நபியின் ஹதீதிலிருந்து. அவர்களுக்கு ஆதாரம் இருந்திருக்க வேண்டும். ஆனால் அதை சமர்பித்தார்களா? முதலில் இந்த பாய்ண்டில் நில்லுங்கள்.

சூனியக் காரர்கள் குச்சியை கீழே போட்டவுடன் பாம்புகளாக தெரிந்தது அதனால் மூஸா பயந்து ஓட நினைத்தார் என்று அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடுகிறான்.

இது பேச்சாற்றலா? அல்லது. வேறு வகையும் சூனியத்திற்கு இருக்கிறதா ? என்று அனைவரும். சிந்தியுங்கள்.

// 2. சூனியத்தை நம்பலாமா? //

சூனியம் என்ற ஒன்று அறவே இல்லையென்றால்!!

ஆகவே சூனியக்காரன் எங்கு சென்றாலும் வெற்றி பெற மாட்டான்” 20:69

என்ற வாக்கியத்தை அல்லாஹ் ஏன் ? நமக்கு சொல்லவேண்டும்.

வெறும் “காரன் ” எங்கு சென்றாலும் வெற்றி பெற மாட்டான்” என்றல்லவா சொல்லியிருக்கவேண்டும்.

எனவேஅல்லாஹ் சூனியக்காரர்களை பற்றி சொல்லும் போது நம்பலாம் என்ற மாற்று கருத்தில் இருக்கின்றோம்.

மா சலாம்.
அப்துல் அஜீஸ்

Reply

Abubakkarsithik February 7, 2014 at 7:47 pm

Assalamu alaikum, Abdul Aziz avarhalukku,
Masha allah, Masha allah, vilakkam niriya koduthirhal, allah nammai vilanga vaikka vendum, melum allah ungalin ilmai abiviruthi seivannaha, anaal oru sinna visayam ungalidam pahir hirean eppodu paatthiram thalai gilaga vaitthu ethayum nirappa mudiyadhu, athupole dhaan indru nammavargalin nilai, solvadhu namadhu kadamai, sollungal aanaal konjam kavanamagavum irungal, ean endral ivargalidam unmai sonnal hadeeth matrum quraan metkoll katti sonnal, ungal veetil ullavargal mel saani matrum, kettavarthaigalal thittikevalappaduthuvargal. melum intha “READISLAM” WEB avargalin kail poi avargalin istampol aghividum, melum facebook pondra ella idangalilum ungalin peyarai naara vaithuviduvargal.
allah nammai kappatra vendum.
assalamu alaikum
Abubakkarsithik

Reply

ABDUL AZEEZ February 9, 2014 at 5:59 pm

வ அலைக்கும் சலாம் Abubakkarsithik அவர்களுக்கு
unmaiyai sollumbodhu. idhu pol theengu neruvadhu pudhidhu alla appadi vandhaal thaan naam iravan purathilirundhu adhigapadiyana nanmaigal peralaam. adharkku
“SAANI” oru kaaranamaga irundhaal paravayillai kazhuviduvom.
மா சலாம்.
அப்துல் அஜீஸ்

Reply

Imran Khan February 10, 2014 at 2:43 pm

Assalamu Alaikum,

Nabi(sal) koorinargal, (Vetrikonda) oru koottam thodarththu nervalil irrukkum, ippo naam sooniyam illai yendru maruthal nammudai ye muthaiya samuthayam yar?

Sooriyam illai yendru solliya munthaiya Imam kal (Quran & Authendic Hadith followers) yar ? mattrum avargalin thodarchi yenge ?

Allathu, Sooniyam nerakarippu eppolothu than thonri yatha…..

Please think… we will seek forgiveness from almighty.

Reply

ABDUL AZEEZ February 12, 2014 at 4:50 pm

அஸ்ஸாலாமு அலைக்கும்.
சகோதரர் Imran Khan அவர்களுக்கு

sooniyam undu enbadharkku KUR’AN sandrugal eralam. indha inayathil varum karuthugalilum neengal paarkkalaam.
sooniyam illai endru solbavargal thagundha KUR’AN HADEEDH aadharangal kondu marukkanum.

// Sooriyam illai yendru solliya munthaiya Imam kal (Quran & Authendic Hadith followers) yar ? mattrum avargalin thodarchi yenge ?//

idhu namakku thevai illadha ondru. munthaiya imamgal kur’an & hadheedh padi vaazhndhargala ? illaiyaa enbadhu veen aaraichi?
mundhaiya imamgal kur’an hadeedh padi vaazhamal irindhurundhaal indraikku eppadi nam kaiyil
SAHEEH BUKHARI, SAHEEH MUSLIM, NASAYI, pondra ennatra hadheedh kirandhangal vandhadhu. ???
//Allathu, Sooniyam nerakarippu eppolothu than thonri yatha//
niragarippavargalai kettup parungal. yar niragarikkirar yar etrukkolgirar enbadhu kooda theriyamal

//Please think… we will seek forgiveness from almighty.//

artham illai.

மா சலாம்.
அப்துல் அஜீஸ்

Reply

Imran Khan February 19, 2014 at 2:12 pm

Assalamu Alaikum,

//Allathu, Sooniyam nerakarippu eppolothu than thonri yatha//,

Ithai naan nirakaripvar kalidam than kettullen, (sorry for the confusion).

// Sooriyam illai yendru solliya munthaiya Imam kal (Quran & Authendic Hadith followers) yar ? mattrum avargalin thodarchi yenge ?//

Sooniyam nirakarippu oru thelivana valikedu ennbathai sollave, ithai naan koorinen. ean yendral intha kollkai ippolu than samutha yeithil parrap badukirathu.

Allah namudai ya ullangalai islathin pakkam nilai peseivanaga.

Reply

ABDUL AZEEZ February 24, 2014 at 4:56 pm

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ இம்ரான் கான் அவரளுக்கு. புரிதலுக்கு நன்றியுடன் நானும் வருத்தம் தெரிவித்துக் கொல்கிரேன்.நாம் நேர் வழியில் நிற்பது குர் ஆன் கூறும் கருத்திலும் நம் நபியின் கருத்திலும் இணைந்திருந்தால் வெற்றி நிச்சயம்.
மா சலாம்.
அப்துல் அஜீஸ்

Reply

Mahibal M. Fassy February 13, 2014 at 11:06 pm

As brother A.N.K. explained, the suitable name for the so called Thawheed Jamaath is ‘Seperatist’. They think they know everything in Islam. The Holy Qur’an’s all 6666 sentences was blessed to guidance mankind. How many of them known the meaning and the reason for revealed for at least 10 sentences among them by heart?

30:32 مِنَ الَّذِينَ فَرَّقُوا دِينَهُمْ وَكَانُوا شِيَعًا ۖ كُلُّ حِزْبٍ بِمَا لَدَيْهِمْ فَرِحُونَ
30:32. (தவிர) எவர்கள் தங்கள் மார்க்கத்திற்குள் பிரிவினையை உண்டு பண்ணி, பல பிரிவுகளாகப் பிரித்து, அவர்கள் ஒவ்வொரு வகுப்பாரும் தங்களிடமுள்ள (தவறான)வைகளைக் கொண்டு சந்தோஷப்படுகின்றனரோ (அவர்களுடன் சேர்ந்து விடாதீர்கள்.)

Reply

இர்பான் February 24, 2014 at 9:55 pm

அஸ்ஸலாமு அலைக்கும்…முகநூல் சகோஸ்களே!ஒற்றுமையாய் இருக்கஓர் அழகிய அழைப்புவாருங்கள்,ஒற்றுமை என்னும்குர்ஆனை பற்றிபிடிப்போம் செயல்படுத்துவோம்,பொட்டை தனமாகவரதட்சனை வாங்காமல்பெண்ணுக்கு மஹர்கொடுத்துகல்யாணம் முடிப்போம்ஒற்றுமையாக வாருங்கள்…உயிருடன் இருப்பவனைவணங்குவோம்,நம் தேவைகளைஅவனிடத்தில் மட்டும்கேட்போம்செத்த பிணத்திடம்கேட்க்க வேண்டாம்என்று தர்ஹா தர்ஹாவாகபிரச்சாரம் செய்வோம்வாருங்கள் ஒற்றுமையாக,தொப்பி போடாதவன்நம் பள்ளிக்கு வர வேண்டாம்,என்று கூறும் பள்ளிகளில்,தாடி வைக்காமலும்பள்ளிக்கு வர வேண்டாம்என்று சொல்ல வைப்போம்ஒற்றுமையாக சென்று,சுன்னத் ஜமாஅத்தைசேர்ந்த ரஹ்மத்பதிப்பகம் மொழி பெயர்த்தஹதீஸ்களை படித்துநடைமுறை படுத்தலாம்ஒரே விதமான நபிவழிதொழுகை மட்டும் தொழ வையுங்கள் என்றுபள்ளி இமாம்களைவற்புறுத்துவோம்,சீக்கிரம் வாருங்கள் ,ஹனபி,ஷாபி,ஹம்பல், மாலிக்என எந்த மத்ஹப்பும்வேண்டாம் குர்ஆன் ஹதீஸ்மட்டும் போதும் மறுமைவாழ்க்கைக்கு என்று மக்களிடம்பிரச்சாரம் பண்ணுவோம் வாருங்கள்உடனே தாமதம் வேண்டாம்,எந்த அரசியல் கட்சியிலும்சேர வேண்டாம்,இருக்கும் இஸ்லாமிய அனைத்துசிறிய, பெரிய, இயக்க, அமைப்பு, கட்சிகளை கூட்டனியாக்கி ஒன்றாக ஒற்றுமையாக தொகுதிகளை பிரித்து போட்டி இயிடுவோம் வாருங்கள்அருமையானவர்களே……வாருங்கள் ஒன்றினைவோம்வெற்றி பெறுவோம்.அத வுட்டு சமுதாய தொரோகிமார்க்க விரோதினுஅழுது பொழம்பி ஒப்பாரிவைப்பதை நிறுத்தவும்,

Reply

ABDUL AZEEZ February 25, 2014 at 4:49 pm

சகோ இர்பான் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.
உங்களின் ஒற்றுமை அழைப்பு அருமையானது. அதே நேரம் இஸ்லாத்தின் அங்கத்தில் ஒரு சிரிதலவு கூட சிதைவு ஏர்படாத வண்ணம் நம் கருத்துக்கள் அமைந்திருக்கனும்.

//தாடி வைக்காமலும்பள்ளிக்கு வர வேண்டாம்என்று சொல்ல வைப்போம்//

தாடி வைப்பது சுன்னத் அதை இல்லாமல் பள்ளிக்கு வருபவரை தடுப்பதர்க்கு நமக்கு அதிகாரம் இருக்கா ? என்பது நாம் சிந்திக்கவேண்டும்.

இது மாதிரி வீரியமில்லாத கொடுக்கும் பத்வாக்களால் தான் பல அமைப்புகளும், இயக்கங்களும், உருவாக காரணமாயின.

// ஒரே விதமான நபிவழிதொழுகை மட்டும் தொழ வையுங்கள் என்றுபள்ளி இமாம்களைவற்புறுத்துவோம், //

முஹம்மது (ஸல்) அவர்களின் தொழுகைகள் பன்முகமாக அமைந்துள்ள பட்சத்தில் நாம் சிலதை விடுவதர்க்கோ அல்லது ஒரு குரிப்பிட்ட ஹதீதை மட்டும் தெரிவு செய்து. அமுல்படுத்துவதர்க்கோ நமக்கு அதிகாரம் இல்லை என்பதையும் புரிந்திருக்கவேண்டும்.

மற்ற உங்கள் வாக்கியம் இஸ்லாம் நபி மொழிக்கு எதிராக இல்லை என்பதை அரிகிரேன்

மா சலாம்.
அப்துல் அஜீஸ்

Reply

rajmohamed March 9, 2014 at 1:11 pm

பணத்துக்காக மக்களின் மரியாதையை விற்பவன் . உண்மை முஸ்லிம் நயவஞ்சகம், ஏமாற்றுதல், வஞ்சப் புகழ்ச்சி போன்ற தன்மைகளை விட்டும் விலகியிருப்பார். அவரது மார்க்க போதனை இத்தகைய ஆபத்திலிருந்து அவரைப் பாதுகாக்கும். அதிகமான மக்கள் வஞ்சப் புகழ்ச்சியில் சிக்கிக் கொண்டு தங்களை அறியாமலேயே நயவஞ்சகம் என்ற அழிவில் வீழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.அமைப்புகள் என்றும் அகில உலக அளவில் குழு குழுவாக பிரிந்து கிடக்கிறார்கள் கருத்து வேறுபாடுகளும் அரசியல் காரணங்களும் முஸ்லிம்களைப் பிரிவிலும் பிளவிலும் நிரந்தரமாய் சிக்க வைத்துள்ளன.இன்று தவ்ஹீத்வாதிகள் என்று பீற்றிக் கொள்வோர்களால் குறுகிய வரையறைக்குள் தள்ளப்பட்டு விட்டது.

Reply

Leave a Comment

Previous post:

Next post: