ஜின் (ஷைத்தா)னை துரத்தும் நட்சத்திரத்தின் தீப்பந்தம் (Plasma Cannon Ball Shooting Star)

Post image for ஜின் (ஷைத்தா)னை துரத்தும் நட்சத்திரத்தின் தீப்பந்தம் (Plasma Cannon Ball Shooting Star)

in அறிவியல்

அல்லாஹ் படைத்த படைபினங்களுக்குள் சிறப்புக்குரிய படைப்பாக மனு,ஜின், மலக்குகள் உள்ளனர். மனிதனை களி மண்ணிலும், ஜின்களை கொழுந்து விட்டெரியும் தீச்சுவாலையிலும் மலக்குகளை ஒளியாலும் அல்லாஹ் படைத்தான். மனிதர்களைப் படைப்பதற்குப் முன்பே மலக்குமார்களையும், ஜின்களையும் அல்லாஹ் படைத்து விட்டான்.

காய்ந்த களி மண்ணிலிருந்து, (அதாவது) பிசுபிசுப்பான கறுப்புக் களிமண்(ணாக இருந்து காய்ந்து விட்ட மண்)ணிலிருந்து நிச்சயமாக நாம் (ஆதி) மனிதரைப் படைத்தோம்.

  அதற்கு முன் நாம் (ஆதி) ஜின்னைத் தகிக்கும் நெருப்பிலிருந்து படைத்தோம்.  அல் குர்ஆன்.15:26,27.

இதில் “காய்ந்த களிமண்” என்பதைக் குறிக்க மூலத்தில் “ஸல்ஸால்” எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இதற்கு “காய்ந்த மண்’ என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் பொருள் கூறினார்கள். இதற்கு எடுத்துக்காட்டாக, “மண்பாண்டம் போன்று, (சுட்ட) காய்ந்த களிமண்ணால் (ஸல்ஸால்) மனிதனை அவன் படைத்தான்” எனும் (55:14) வசனம் அமைந்துள்ளது.

அடுத்து “பிசுபிசுப்பான கறுப்புக் களிமண்ணிலிருந்து” என  அல்லாஹ்  குறிப்பிடுகின்றான். இங்கு ‘கறுப்புக் களிமண்” என்பதைக் குறிக்க “ஹமஉ” எனும் சொல் மூலத்தில் இடம்பெற்றுள்ளது. இதற்கு களி மண்ணாக இருந்து காய்ந்தது எனப்பொருளாகும்.

“பிசு பிசுப்பானது என்பதைக் குறிக்க “மஸ்நூன்” எனும் சொல் இடம் பெற்றுள்ளது. இதற்கு வழுவழுப்பானது என்று பொருளாகும். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “ஹமஇன்  மஸ்நூன்” என்பதற்கு ஈரமான மண் என்று பொருள் கூறினார்கள்.

அடுத்த வசனத்தில் “அதற்குமுன் – அதாவது மனிதர்களைப் படைப்பதற்கு முன் ஜின்னை “தகிக்கும் நெருப்பிலிருந்து படைத்தோம்” என்று அல்லாஹ் கூறுகின்றான்.. இதில் “தகிக்கும் நெருப்பு” (நாருஸ் ஸமூம்) என்பதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ”கொல்லும் அனல்” என்று பொருள் கூறினார்கள்.     தப்ஸீர் இப்னு கஸீர்-4. பக்கம்.1026.

  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்,வானவர்கள் ஒளியால் படைக்கப்பட்டனர். ”ஜின்”கள் தீப்பிழம்பால் படைக்கப்பட்டனர். (ஆதி மனிதர்) ஆதம், உங்களுக்கு குர் ஆனில் கூறப்பட்டுள்ளதைப் போன்று (களி மண்ணால்) படைக்கப்பட்டார்.     அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்: முஸ்லிம்-5722.

 Related imageமுப்படைப்புகளின் அடிப்படையைப் பார்த்தோம். இதில் மனிதன் முப்பரிமாணம் உள்ள (3 Dimensions-நீளம்,அகலம்,உயரம்) களிமண்ணால் படைக்கப்பட்டிருப்பதால்தான், கண் பார்வைக்கு அவன் தெரிகின்றான். முப்பரிமாணம் அல்லாத இயற்கை சக்தியான தீயால் (Plasma) “ஜின்”களும், ஒளியால் (Light) வானவர்களும் படைக்கப்பட்டிருப்பதால்தான் சாதாரணமாக நம் கண்களுக்கு அவர்கள் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மனிதனில் அவனின் மூலக்கூறான மண்ணின் தன்மையும், (Clay-Carbon), ஜின்னில் அதன் மூலக்கூறான நெருப்பின் (Fire-Plasma) குணமும் உண்டு.

சுயமாக சிந்திக்கக்கூடிய ஆற்றலை, அல்லாஹ் முன்பே படைக்கப்பட்ட ஜின்களுக்கு கொடுத்துள்ளான். இந்த சுயசிந்தனை தடம் புரண்டு போனதன் காரணமாகவே இப்லீஸ், அல்லாஹ்வின் கட்டளைக்கு  மாறு செய்து ஷைத்தானாக மாற நேரிட்டது. மனிதர்களுக்கு முன்பே பகுத்தறிவு கொடுக்கப்பட்ட ஜின்களுக்கு சில விசேஷச ஆற்றல்களையும், மனிதன் மற்றும் விலங்கு போன்று உருமாறும் தன்மையையும் அல்லாஹ் கொடுத்துள்ளான். உதாரணமாக,

சுலைமான் (அலை) அவர்கள் அவையில் இருந்த “இப்ரீத்”  என்ற ஜின் கனமான சிம்மாசனத்தை “உட்கார்ந்து எழுந்திருக்கும் நேரத்திற்குள்” கொண்டு  வரும் ஆற்றல் பெற்றது என்பதை அல்குர்ஆன் கூறுகிறது.

“ஜின்களில் (பலம் பொருந்திய ஓர்) இப்ரீத் கூறிற்று; நீங்கள் உங்கள் இடத்திலிருந்து எழுந்திருப்பதற்கு முன் அதை  நான் உங்களிடம் கொண்டு வந்து விடுவேன்; நிச்சயமாக நான்  அதற்கு சக்தியுள்ளவனாகவும், நம்பிக்கைக்கு உரியவனாகவும் இருக்கிறேன்.”       அல் குர்ஆன்.27:39.

 சுமார் இரண்டாயிரம் கி.மீ.தொலைவில் (ஏமன்-பைத்துல் முகத்திஸ்) உள்ள சிம்மாசனத்தை உடனடியாக தூக்கி வரும் ஆற்றல் ஜின்களுக்கு உள்ளது என்பதிலிருந்து அவர்களின் திறமையை அறியலாம். தொலை தூரத்தை எளிதாக கடக்கும் ஆற்றல் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதால் தாழ்வான வானத்திலிருந்து பூமி வரை விரைந்து செல்லும் சக்தி பெற்றிருக்கிறார்கள்.

பிளாஸ்மா தீச்சுவாலையால் படைக்கப்பட்ட ஜின்களில் பல வகைகள் உள்ளன. முதலாம் வானம் வரை, அதாவது பூமிக்கு சமீபமாக  நட்சத்திரங்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ள தாழ்வான வானம் வரை சென்று வரும் சக்தி சில ஜின்களுக்கு உண்டு.

நிச்சயமாக,நாமே (பூமிக்கு) சமீபமாக  இருக்கும் வானத்தை நட்சத்திரங்களின்  அழகைக் கொண்டு அழகுபடுத்தியிருக்கிறோம்.  (அதை மாரீத் எனும்) தீய ஷைத்தான்கள் அனைவருக்கும் தடையாகவும்  ஆக்கினோம்.

  அதனால் அவர்கள் மேலான கூட்டத்தார் (பேச்சை ஒளிந்து) கேட்கமுடியாது; இன்னும் அவர்கள் ஒவ்வொரு திசையிலிருந்தும் வீசி எறியப்படுகிறார்கள்.

  (ஏதேனும் செய்தியை) இறாஞ்சிச் செல்ல முற்பட்டால் அப்போது அவனைப் பிரகாச தீச்சுவாலை தீப்பந்தம் பின்  தொடரும்.     அல் குர்ஆன்.37:6-10.

  ஆகையால்  எந்த  ஒரு ஷைத்தானும் அங்கு செல்ல முடியாது. ஒட்டுக்கேட்பதை தவிர!  (அப்படி அவன் ஒட்டுக் கேட்க  முயன்றால்) பிரகாசமான  தீச்சுவாலை அவனை பின்  சென்று விரட்டும்.  அல் குர் ஆன்.15:18.

முதல் வானத்தை (நட்சத்திர) விளக்குகளால் அலங்க்கரித்தோம். அதை ஷைத்தான்கள் மீது எறியப்படும் (தீச்சுவாலை) பொருட்களாய் ஆக்கினோம்.அவர்களுக்கு நரகத்தின் வேதனையை தயாரித்துள்ளோம்.   அல்குர்ஆன். 67:5.

முதலாம் வானத்தை அல்லாஹ் நட்சத்திரங்களைக்கொண்டு அலங்கரித்துள்ளான். அல்லாஹ் இவ்வசனத்திற்கு “மஸாபீஹ்” என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளான். இதன் கருத்து விளக்குகள் என்பதாகும். விளக்குகள் போன்று நட்சத்திரங்கள் ஒளி கொடுப்பதால்….

இறைவசனம் 67:5 க்கு விளக்கமளித்த கதாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்..

இந்த இறைவசனத்திலிருந்து அல்லாஹ், நட்சத்திரங்களை மூன்று விசயங்களுக்காக படைத்திருக்கின்றான் என்பதை அறியமுடிகிறது.

1.அவைகளை வானத்திற்கு அலங்காரமாக்கியுள்ளான்.

2.ஷைத்தான்களை எறிந்து விரட்டுவதற்கான கருவியாக ஆக்கியுள்ளான்.(Star Firing Plasma  Artillery)

3.அவற்றின் வாயிலாக வழியறிந்து கொள்வதற்கான அடையாளங்களாக அவற்றை ஆக்கியுள்ளான்.

எவர் இதுவல்லாத பிறபொருள்களை இவ்வசனத்திற்கு கற்பிக்கின்றாரோ அவர் தவறிழைத்து விட்டார்; தன் முயற்சியை வீணாக்கி விட்டார்; தான் அறியாத விசயத்தில் ஈடுபட்டு தன்னைத்தானே சிரமத்திற்கு ஆளாக்கிக்கொண்டார்.   ஸஹீஹ் புஹாரி.பாடம்:3 நட்சத்திரங்கள்.

Image result for m87 nucleusவிண்மீன் நட்சத்திரங்களின் பணிகளில் ஒன்று, இறைவனிடமிருந்து வரும் செய்திகளை ஒட்டுக்கேட்கும் ஷைத்தான் ஜின்களை தீச்சுவாலையால் எறிந்து விரட்டும் கருவியாக (Cannonball shooting star) செயல் படுதல். உண்மையில் நட்சத்திரங்களில் ஏதாவது இப்படி எறிகணை ஏவும் (Plasma cannon ball  shooting) கருவியாக செயல்படுகிறதா?  என்று விண்வெளி ஆய்வுகளைப் பார்த்தால்… அல்ஹம்துலில்லாஹ்! ஏராளமான சான்றுகள் கிடைக்கின்றன.

அமெரிக்கா நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கியானது, வி.ஹைட்ரா M.87  (V.Hydrae) என்ற நட்சத்திரம், விண்வெளியில் பிளாஸ்மா தீச்சுவாலை எரிகணைகள் (Plasma cannon balls)  ஏவுவதை கண்டறிந்தது.

The space agency recently revealed that the Hubble Telescope had detected massive blobs of super-hot gas, each more than twice the size of Mars, traveling at exceptional speeds away from a dying star. This deep space cannon fire, located more than 1,200 light years away, lies in the vicinity of a red giant named V Hydrae. The fireballs present a puzzle to astronomers, because the ejected material could not have been shot out by the host star, called V Hydrae. The current best explanation suggests the plasma balls were launched by an unseen companion star.                                                                          https://www.jpl.nasa.gov/news/news.php?feature=6639

இந்த நட்சத்திரம் விண்வெளியில்  எறியும் தீச்சுவாலையின் வேகம். மணிக்கு ஐந்து லட்சம் மைல்கள் பூமியிலிருந்து சந்திரனை நோக்கி இத் தீச்சுவாலை (Plasma cannon  fire) அரை  மணி  நேரத்தில் சென்று விடக்கூடிய அதிவேகம். இந்த நட்சத்திரம் ஏன் இப்படி தீப்பந்தத்தை விண்வெளியில் எறிகிறது? என்பதற்கான விளக்கம் ஆய்வாளர்களிடம் இல்லை. ஆனால் அல்குர்ஆன் இவ்விளக்கத்தை தருகிறது. ஒட்டுக்கேட்கும் ஜின்களை எரி கொள்ளியால்  (Plasma Fire) அடித்து விரட்ட, அல்லாஹ் அமைத்த ஏற்பாடு. இத் தீச்சுவாலையின் வெப்பம் எவ்வளவு  தெரியுமா? சூரியனின் மேற்பரப்பில் உள்ள  வெப்பத்தைப்போல் இருமடங்கு.சுமார் 12,000 டிகிரி சென்டிகிரேட்.

பிரபல அறிவியல் இதழான “நியூ சயின்டிஸ்ட்”கடந்த வாரம் ( 22-May.2017.) வெளியான ஒரு கட்டுரையில் இது குறித்து விளக்கமாக எழுதியுள்ளார்கள்.

Trick of the lightWe’ve known about the jet of plasma shooting from the core of M87 since 1918, when astronomer Heber Curtis saw a ray of light connected to the galaxy. To be visible from so far away, it had to be huge – about 6000 light years long.

As modern astronomers now know, pretty much all galaxies have a central black hole that periodically draws in stars and gas clouds. When gas begins to swirl down the drain, it heats up and magnetic fields focus some of it into jets of hot plasma. These jets shoot out at velocities near to – but not faster than – the speed of light.

https://www.newscientist.com/article/2131889-weird-energy-beam-seems-to-travel-five-times-the-speed-of-light/

ஒளியின் வேகத்தில் விரைந்து சென்று தாக்கும் தீப்பந்தங்களிலிருந்து ஒட்டுக்கேட்கும் ஷைத்தானிய ஜின்கள் தப்புவது கடினம். ஆனாலும் கொடும் தீச்சுவாலையால் படைக்கப்பட்ட ஜின்களுக்கும் விரைந்து செல்லும் ஆற்றலை அல்லாஹ்  கொடுத்துள்ளான். ஆகவேதான் சில சமயம் விரட்டும் தீச்சுவாலை எரிகணை வீச்சிலிருந்தும் தப்பி, தன் ஜோதிடத் தோழனின் காதுகளில் செய்தியை போட்டுவிடுகிறான். அதில் அவன் நூறு பொய்யைக் கலந்து மக்களை நம்பச் செய்கிறான்.     ஹதீஸ் சுருக்கம்.புஹாரி.4701.

சூரியன் மற்றும் நட்சத்திரத்தில் வசிக்கும் ஜின்கள்:

நட்சத்திரங்கள் அருகில் செல்ல ஜின்களுக்கு ஆற்றல் உண்டா? என்ற கேள்விக்கு கீழ்கண்ட வசனம் பதிலளிக்கிறது.

“ (முன்னர் வானில் பேசப்படுவதைச்) செவிமடுப்பதற்க்காக (அதற்குள்ள சில) இடங்களில் நாங்கள் அமர்ந்திருப்போம்; ஆனால் இப்போதோ எவன்  அவ்வாறு செவிமடுக்க முயல்கிறானோ, அவன் தனக்காக காத்திருக்கும் தீப்பந்தத்தையே காண்பான்.  அல்குர்ஆன்.72:9.

கொழுந்து விட்டெரியும் நமது சூரியனும் ஒரு நட்சத்திரம்தான் என்று நமக்குத் தெரியும் .இந்தக்கொடும் நெருப்பில் ஜின்கள் உயிரோடு வாழ முடியுமா? என்ற கேள்விக்கு முடியும் என்று அல்குர்ஆன் கூறுகிறது. அறிவியல் சொல்வதென்ன?

Scientists Theorize Sun Could Support Fire-Based Life

WASHINGTON—In an announcement that could forever change the way scientists study the hydrogen-based star, NASA researchers published a comprehensive study today theorizing that the sun may be capable of supporting fire-based lifeforms. “After extensive research, we have reason to believe that the sun may be habitable for fire-based life, including primitive single-flame microbes and more complex ember-like organisms capable of thriving under all manner of burning conditions,” lead investigator Dr. Steven T. Aukerman wrote, noting that the sun’s helium-rich surface of highly charged particles provides the perfect food source for fire-based lifeforms. “With a surface temperature of 10,000 degrees Fahrenheit and frequent eruptions of ionized gases flowing along strong magnetic fields, the sun is the first star we’ve seen with the right conditions to support fire organisms, and we believe there is evidence to support the theory that fire-bacteria, fire-insects, and even tiny fire-fish were once perhaps populous on the sun’s surface.” Scientists cautioned that despite the exciting possibilities of fire-life on the star, there are numerous logistical, moral, and ethical questions to resolve before scientists could even begin to entertain the possibility of putting fire-people on the sun.

நமது சூரிய, நட்சத்திரத்திலும் உயிர்கள் வாழ சாத்தியக்கூறுகள் உண்டு என்பதே விண்வெளி ஆய்வாளர்களின் கருத்து.நமது பூமியில் இருக்கும் ஹைட்ரஜன்,ஹிலீயம் போன்ற மூலகங்கள் மூலம் கரிம-வேதியல் (Carbon based life) உயிர்கள் உருவானது போல்,நட்சத்திரங்களில் உள்ள ஹைட்ரஜன்- ஹிலீயம் சேர்ந்த பிளாஸ்மா உயிர்கள்  (Plasma based  life) அங்கு இருப்பதற்கான அறிகுறிகள் தெரிவதாக கூறுகிறார்கள்.

http://www.irfi.org/articles/articles_1_50/jinn_a_scientific_analysis.htm

The sun is the first star we’ve seen with the right conditions to support fire organisms, and we believe there is evidence to support the theory that fire-bacteria, fire-insects, fire birds and even fire-fish were once perhaps populous on the sun’s surface.”

Sun is the great hydrogen based star and is capable of supporting fire based life including primitive single-flame degrees F, 6200 and 3700 degrees C).The life can exist in the sun’s photosphere it supports the fire based life forms and it acts as a habitat because it’s the coldest region in the sun. Life in the sun is different from life in earth.

International Journal of Life Sciences Research      ISSN 2348-3148 (online) Vol. 3, Issue 3, pp: (47-48), Month: July – September 2015, Available at: www.researchpublish.com

REFERENCES [1] Dr. Steven T. Aukerman Scientists theorize sun could support fire-based life VOL 49 ISSUE 46 Science & Technology Space- Nasa  Nov 14,2013.

சூரியனின் மேற்பரப்பு கடும் வெப்பமாக இருந்தாலும் அதன் உள்பகுதியான போட்டோஸ்பியர் ( Photosphere) குறைந்த வெப்ப நிலையே கொண்டுள்ளது. ஆகவே வெப்ப வாழ் உயிரினங்கள் இங்கு வசிக்க வாய்ப்புள்ளது என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். ஆயினும் பூமியில் வாழும் உயிரினங்கள் போன்று சூரிய உயிர்களின் அமைப்பு இருக்காது… அவை வேறுமாதிரி இருக்கலாம் என்று கூறுகிறார்கள். ஆக அல்லாஹ் நெருப்பினால் படைக்கப்பட்ட ( ஜின் ) உயிரினத்தை நவீன அறிவியல் உலகம் அங்கீகரிக்கிறது.

அல்லாஹ் கூறுகிறான்.

வானங்களில் உள்ளவையும், பூமியிலுள்ளவையும்- ஜீவராசிகளும், மலக்குகளும்,அல்லாஹ்வுக்கே சிரம்பணிந்து வணங்குகின்றன. அவர்கள் ஆணவம் கொண்டு பெருமையடிப்பதில்லை.     – அல் குர்ஆன். 16;49.

பூமியில் உள்ளது போல் வானங்களிலும் உயிரினங்கள் உள்ளன என்று அல்லாஹ்  கூறுகின்றான். பல வருடங்களாக மக்களால் பரபரப்பாக பேசப்படும் பறக்கும் தட்டு, மற்றும் வேற்று கிரகவாசிகள், வேறு எவரும் அல்ல. எல்லாம் நம் உம்மத்தில் உள்ள ஜின்களே! மனிதர்களுக்கு முன்பே பகுத்தறிவுடன் இவர்கள் படைக்கப்பட்டதால் இவர்கள் பயன்படுத்தும் டெக்னாலஜி மிகவும் அட்வான்ஸ் ஆக இருக்க வாய்ப்பு உள்ளதால் இவர்கள் வானம், பூமி எங்கும் போய்வரும் வல்லமை உள்ளவர்கள்.

ஜின்களுக்கும் வாகனம் உண்டு என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பதன் மூலம்  UFO ( Un Identified Flying Object ) என்னும் பறக்கும் தட்டு, கதை கற்பனை அல்ல என்பதை விளங்கிக் கொள்ளலாம். சில நாஸ்திகவாதிகள் ஜின்,பறக்கும்தட்டு, வேற்றுகிரகவாசிகள்.போன்ற செய்திகளை நம்ப மறுக்கலாம். ஆனால் உலகிலுள்ள எல்லா அறிவார்ந்த சமூகமும் வேற்றுகிரகவாசிகள் இருப்பதை நம்புகிறார்கள்.

ஆகவேதான், அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா நாடுகள் சேர்ந்து SETI எனும் ஒரு அமைப்பை உருவாக்கி (Search for Extra –Terrestrial Intelligence) வேற்றுகிரகவாசிகள் குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். கோடிக்கணக்கான டாலர்களை இதற்காக செலவிட்டு நவீன தொலைநோக்கி மூலம் விண்வெளியை அலசுகிறார்கள். வேற்றுகிரகவாசிகளிடமிருந்து ஏதேனும் செய்திகள் வருகிறதா என்று உன்னிப்பாக கவனிக்கிறார்கள்.

வேற்று கிரக வாசிகளை தேடும் ஆய்வுக்கழகத்தின் SETI-(Search for Extra-Terrestrial Institute) கூட்டம் அமெரிக்காவில் கடந்த 18 ஜூனில் நடந்தது. அந்த கூட்டத்தில் மூத்த விண்வெளி ஆய்வாளர் சேத் ஷோச்டாக் (Seth  shostag)  சொன்ன செய்தி, “கடந்த இருபது வருடமாக, பூமியைபோன்ற கிரகங்கள் வேறு எங்கினும் உள்ளதா என்ற தேடுதல்  வேட்டையில…. கடந்த 18-ஜூனில்,நாஸா அறிவித்தபடி, இதுவரை மொத்தம் 4034 கோள்கள் சூரியனை (planets orbiting stars other than our sun), சுற்றி வருவது  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 இந்த கோள்களில் சுமார் 70-80%  நமது பூமியைப்போல் உயிர் வாழத்தகுந்த சூழல் நிறைந்தது. நமது பால்வீதி மண்டல பிரபஞ்சத்தில்  (Milky Way galaxy) மட்டும் சுமார்,100 பில்லியன் நட்சத்திரங்கள் உள்ளன. இந்த நட்சத்திரங்களை சுற்றி சுழலும் சுமார் 1 டிரில்லியன் கோள்கள் உள்ளன. இதில் ஐந்தில் ஒன்று நமது பூமியைப் போன்றது.  நமது பார்வையில் தென்படும் பிரபஞ்சங்கள் (Galaxies) மட்டும் சுமார் ( 2 trillion galaxies in the observable universe ) 2,டிரில்லியன் இருக்கின்றனவாம்.

  இப்படி கோடிக்கணக்கான கோள்களில், பூமியில்  மட்டும்தான் உயிரினம் உள்ளது என்று சொல்வதற்கில்லை. பிற கோள்களில் பிற உயிரினங்கள் வாழ வாய்ப்புள்ளது. அவர்கள் நம்மை விட நவீன வளர்ச்சி பெற்றவர்களாக இருக்கவும்,  நவீன கருவிகளின் உதவியால் ஆகாயத்திலும்,நீரிலும் தங்கு தடையின்றி விரைவாக செல்லும் ஆற்றல் பெற்றவர்களாகவும் இருப்பார்கள்.’ என்றும் அவர் கூறினார்.

https://www.livescience.com/59547-future-con-rethinking-aliens.

ஜின்களின் ஆற்றல், வல்லமை பற்றி அல்லாஹ் கூறும் ஒரு செய்தியை இவ்விடத்தில் நினைவுக்கு கொண்டு வரவேண்டும்.

 “ஸுலைமான் (அலை) விரும்பிய, மிஹ்ராபுகளையும், சிற்பங்களையும், தடாகங்கள் போன்ற பெரும் கொப்பரைகளையும், நகர்த்த முடியா பெரும் பாத்திரங்களையும் செய்திகொண்டிருந்தன.  அல் குர்ஆன்.34:13.

 “மேலும் ஷைத்தான்களிலுள்ள கட்டடம் கட்டுவோர்,முத்துக் குளிப்போர்,ஆகிய  யாவரையும்…”       அல் குர்ஆன்.38:37.

 இன்று வேற்று கிரகவாசிகளை தேடும் அறிவியல் உலகம் நமக்கு முன்பு படைக்கப்பட்டு,பகுத்தறிவு கொடுக்கப்பட்டு, நவீன அறிவியலை  கைக்கொண்ட ஜின்  களைத்தான் தேடி வருகிறார்கள்.

கனடா நாட்டின் முன்னாள் பாதுகாப்பு துறை மந்திரி பால் ஹெல்யர் (வயது 91) 1963 ஆம் ஆண்டு முதல் 1967 ஆம் ஆண்டு வரை கனடாவின் பாதுகாப்பு துறை மந்திரியாக இருந்தார்.

குறைந்தது 4 வகையான  வேற்று கிரக வாசிகள் மற்றும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத பறக்கும் பொருள் பூமிக்கு வந்து இருக்கலாம் இது குறித்த தகவல்களை  ஒப்புகொள்ள வேண்டும் என உலக தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து உள்ளார். இதற்கு முன் ஹெல்யர் கூறும் போது “உண்மையில் அவர்கள் நம்முடனேயே  பூமியில் வாழ்ந்து கொண்டு இருக்கலாம் நம்மைபோலவும் இருக்கலாம், அவர்கள் நம்முடன் தெருவில் சேர்ந்து நடக்கலாம்  உங்களை கடந்து அவர்கள் சென்று இருக்கலாம் உங்களுக்கு அது தெரியாது என” கூறியதாக ரஷ்யா டுடே கூறி உள்ளது.

 மனிதக் கண்களுக்கு தெரியாமல் நம்மிடையே மறைந்து வாழ்வார்கள் ஜின்கள்…என்று இஸ்லாம் கூறுவதை பால் ஹெல்யர் உண்மைப்படுத்துகிறார். 2025-ஆம் ஆண்டுக்குள் ஏலியன்கள் சார்ந்த அறிகுறிகளை நாசா நிச்சயமாக கண்டறியும் என்று நாசாவின் உயர்நிலை விஞ்ஞானியான எல்லன் ஸ்டோஃபன் உறுதியாக தெரிவித்துள்ளார்..!

நாசா குழு, அண்டத்தில் வாழும் உயிரினங்கள் பற்றி மிகவும் பலமான ஆதாரங்களை திரட்ட இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்..!

எங்கே ஏலியன்களை தேட வேண்டும், எப்படி தேட வேண்டும் என்று எங்களுக்கு நன்றாக தெரியும் என்றும் சூட்சமமாக தெரிவித்துள்ளார், எல்லன்..!

பெரும்பாலான ஏலியன் சார்ந்த தேடல்களுக்கு எங்களிடம் அதிநவீன தொழில்நுட்பம் உள்ளது மேலும் அதை கொண்டு நாங்கள் தீவிரமான தேடல் பணியில் இறங்க இருக்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

2025-ஆம் ஆண்டுக்குள் ஏலியன்கள் சார்ந்த அறிகுறிகளை நாசா நிச்சயமாக கண்டறியும் என்று நாசாவின் உயர்நிலை விஞ்ஞானியான எல்லன் ஸ்டோஃபன் உறுதியாக தெரிவித்துள்ளார்..! பெரும்பாலான ஏலியன் சார்ந்த தேடல்களுக்கு எங்களிடம் அதிநவீன தொழில்நுட்பம் உள்ளது மேலும் அதை கொண்டு நாங்கள் தீவிரமான தேடல் பணியில் இறங்க இருப்பதாக அவர் தெரிவித்தார்.

2020-ஆம் ஆண்டில் விண்ணில் ஏவப்பட உள்ள நாசாவின் அடுத்த’ மார்ஸ் ரோவர்” முழுக்க முழுக்க வேற்றுகிரகவாசிகள் பற்றிய ஆய்வை அண்டவெளியில் நிகழ்த்த உள்ளதாம்..

கடந்த காலங்களில் மொழி பெயர்க்கப்பட்ட குர்ஆன் தர்ஜுமாக்களில் “தாழ்வான வானத்தில் நட்சத்திரத்தைப் படைத்துள்ளேன்” (அல் குர்ஆன்.67:5) என்ற வசனத்திற்கு, சூரிய மண்டலத்தில் சுழன்று வட்டமடிக்கும் குறுங்கோள், மற்றும் “ஆஸ்ட்ராய்டு பெல்ட்”வட்டத்தில் சுற்றி வரும் விண்கற்களையே குறிப்பதாகவும், இப்பாறைகள் சுழலும்  வேகத்தில் பிறழ்ந்து பூமியின் வட்டப்பாதையில் நுழைந்து, காற்று மண்டலத்தில் எரிந்து, எரி நட்சத்திரமாக  வீழ்வதையே….

ஒட்டுக்கேட்கும் ஜின்னை விரட்டும் தீப்பந்தம் (Meteor) என்று மொழி பெயர்க்கும் நிலையிலேயே அன்று அறிவியல் இருந்தது. ஆனால் உண்மை அதுவல்ல. காற்று மண்டல உராய்வு காரணமாக எரியும் கற்களை (Meteoroid) அல்லாஹ் கூறவில்லை. உண்மையான நட்சத்திரத்திலிருந்து அதி வேகத்தில் எறியப்படும் (Shooting star)தீப்பந்த பிளாஸ்மா தீச்சுவாலையையே அல்லாஹ் கூறுகிறான். இன்றைய நவீன அறிவியல், நாஸா (NASA)ஆய்வு  செய்து குர்ஆனின் கூற்றை மெய்ப்பிக்கிறது.

வானங்களையும்,பூமியையும் படைத்திருப்பதும், அவையிரண்டிலும் கால்நடைகள் (முதலிய ஜீவராசிகளை) பரப்பி வைத்திருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். ஆகவே அவன் விரும்பியபோது அவற்றை ஒன்று சேர்க்க பேராற்றளுடையவனாவன்.      அல் குர்ஆன்.42:29.

 

{ 3 comments… read them below or add one }

A.Abdulrajak June 25, 2017 at 2:05 pm

சூரியனின் மேற்பரப்பு கடும் வெப்பமாக இருந்தாலும் அதன் உள்பகுதியான போட்டோஸ்பியர் ( Photosphere) குறைந்த வெப்ப நிலையே கொண்டுள்ளது. ஆகவே வெப்ப வாழ் உயிரினங்கள் இங்கு வசிக்க வாய்ப்புள்ளது என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். /////////நட்சத்திரங்கள் விளக்கு போன்றது என அல்லாஹ் கூறுகின்றான் . அப்போ நட்சத்திரங்கள் உட் பகுதி எரிய கூடிய திரவ நிலை எரி பொருள் இருக்கும் .ஆனால் அங்கே அதிக வெப்பம் இருக்காது .வெளியில் தான் நெருப்பாக எரிந்து அதிக வெப்பத்தையும் , வெளிச்சத்தையும் வெளி இடும் . சூரியனில் மட்டுமல்லாமல் அணைத்து நட்சத்திரகங்ளிலும் உயிர்கள் வாழ சாதிய கூறு உள்ளது .அதே போல் எல்லா நச்சத்திரங்களும் எரிய வேண்டும் என்பது அவசியமில்லை . தானாக ஒளிர கூடியதாக இருக்கும் .அங்கே மரங்களும் இருக்கலாம் .

24:35. அல்லாஹ் வானங்கள் பூமிக்கு ஒளி (ஏற்படுத்துபவன்) அவன் (ஏற்படுத்தும்) ஒளிக்கு உவமை விளக்கு வைக்கப்பட்டுள்ள மாடம் போன்றதாகும். அவ்விளக்கு ஒரு கண்ணாடி(க் குவி)யில் இருக்கிறது; அக் கண்ணாடி ஒளிவீசும் நட்சத்திரத்தைப் போன்றதாகும். அது பாக்கியம் பெற்ற ஜைத்தூன் மரத்தினால் எறிக்கப் படுகிறது. அது கீழ்த்திசையை சேர்ந்ததுமன்று; மேல்திசையை சேர்ந்ததுமன்று. அதனை நெருப்புத் தீண்டாவிடினும், அதன் எண்ணெய் ஒளி வீச முற்படும், (இவை எல்லாம் சேர்ந்து) ஒளி மேல் ஒளியாகும். அல்லாஹ் தான் நாடியவரை தன்னுடைய ஒளி (என்னும் சத்தியப்பாதை)யின் பால் நடத்திச் செல்கிறான். மனிதர்களுக்கு இத்தகைய உவமைகளை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிபவன்.

Reply

jabir June 28, 2017 at 8:05 pm

test

Reply

jabir June 28, 2017 at 9:47 pm

அஸ்ஸலாமு அலைக்கும்

The sun is the first star we’ve seen with the right conditions to support fire organisms, and we believe there is evidence to support the theory that fire-bacteria, fire-insects, fire birds and even fire-fish were once perhaps populous on the sun’s surface.”

இங்கு சூரியனில் அதாவது நெருப்பில், நெருப்பின் மூலங்கள்லான உயிரினங்கள் வாழ்வதாக கூறப்பட்டுள்ளது.

சூரிய நெருப்பை விட பல மடங்கு கொடூரமான நரக நெருப்பிலும் உயிரினங்கள் உண்டு

“நிச்சயமாக ‘புக்த்’ என்ற பெரிய ஒட்டகத்தின் அளவு பாம்புகள் இருக்கும். அவற்றில் ஒன்று தீண்டினால் அதனுடைய வேதனை நாற்பது ஆண்டுகள் வரை இருக்கும்.மேலும் நகரத்தில்,கோவேறு கழுதையளவுள்ள தேள்கள் இருக்கும். அவற்றுள் ஒன்று கொட்டினால் நாற்பது ஆண்டுகள் வரை அதன் வேதனை இருக்கும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்:அப்துல்லாஹ் இப்னு ஹாரிஸ்(ரலி). நூல்:அஹ்மத்.

“நிச்சயமாக அது நரகத்தின் அடித்தளத்திலிருந்து வளரும் மரமாகும்.அதன் பாளைகள் ஷைத்தானின் தலைகளை போன்றிருக்கும்.நிச்சயமாக, அவர்கள் அதிலிருந்தே புசிப்பார்கள்.அதைக்கொண்டே தங்களுடைய வயிறுகளை நிரப்பிக்கொள்வார்கள்.”
(அல் குர்ஆன் 37:64-66)

“ஜக்கூம் என்னும் மரத்திலிருந்தே நீங்கள் புசிப்பீர்கள்.அதைக்கொண்டே வயிறுகளை நிரப்புவீர்கள்.”(அல் குர்ஆன் 56:52,53)
மேலும் (அல் குர்ஆன் 44;43-46, 88:6,7)

எனவே இவை நெருப்பில்,நெருப்பின் மூலங்களாலான தாவர,விலங்கு,ஊர்வன போன்ற உயிரினங்கள் உண்டு என்பதற்கு ஆதாரமாகும்.

வெறும் அலங்காரத்துக்காக மனித கற்பனைக்கு எட்டாத பிரமாண்டத்தில், கற்பனைக்கு எட்டாத எண்ணிக்கையில் நட்சத்திரங்களை “குன்” ஆகுக என்ற சொல்லால் படைத்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும். அல்ஹம்துலில்லாஹ்.

jazakallah.

Reply

Leave a Comment

Previous post:

Next post: