எஸ்.ஹலரத் அலி, திருச்சி-7
Why Don’t Monkeys Talk Like Us?
கடந்த வார (9-Dec.-2016) அறிவியல் ஆங்கில இதழ்கள் மற்றும் இணையதளங்களில் “குரங்கு ஏன் நம்மைப்போல் பேசுவதில்லை” என்ற தலைப்பில் ஒரு ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது. பரிணாமக் கொள்கைப்படி குரங்கிலிருந்து வந்த மனிதனால் பேசமுடிகிறது. ஆனால் குரங்கால் பேச முடியவில்லை. இதன் முக்கிய காரணம் என்ன? என்பதே அந்த ஆய்வு. http://advances.sciencemag.org/content/2/12/e1600723.full
டார்வினின் கருத்துப்படி அனைத்து உயிரினங்களும் ஒரு செல்லிலிருந்து பிரிந்து விரிந்து, பரிணாம வளர்ச்சி பெற்றதாக கருதப்படுகிறது. அந்த வகையில் முதலில் குரங்கு இனம் தோன்றி அது படிப்படியாக பரிணாம வளர்ச்சி பெற்று இன்றைய நாகரீக மனிதன் வந்ததாக சொல்லப்பட்டு, நம்ப வைக்கப்பட்டு வருகிறது.காரணம், மனித உடலமைப்பும்,குரங்கின் உடலமைப்பு மற்றும் டிஎன்ஏ ஜீன் மரபியலும் ( Anatomical and DNA-Genes) சுமார் 98% ஒன்றையொன்று ஒத்ததாகவே இருக்கிறது. ஆனால் மனிதனுக்கு பேசக்கூடிய ஆற்றல் இருக்கிறது. மனிதனைப்போல் உள்ள குரங்கால் ஏன் பேசமுடியவில்லை? என்ற கேள்வி ஆய்வாளர்கள் மத்தியில் நீண்ட காலம் நீடித்து வந்தது. மனிதனைப் போல் பேசக்கூடிய குரல் நாண் (Vocal Tract) மற்றும் தாடை அமைப்புக்கள் இல்லாததால் பேச முடியாமல் இருக்கலாம் என்று கருதினர். மனிதனைப் போல் பிற விலங்கினங்கள் பேசியதற்கான, சான்றுகள் குர் ஆன் மற்றும் ஹதீதுகளில் காணக்கிடைக்கின்றன. இப்பேசும் செய்திகள் அனைத்தும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்த அற்புதங்களாகவே பார்க்கப்படுகின்றன. ஏனெனில் மனிதர்களைப்போல் பேசுவது மிருகங்களின் இயல்பு அல்ல. உதாரணமாக,
இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ஸுப்ஹுத் தொழுகை தொழுதார்கள்.பிறகு மக்களை நோக்கி, “(பனு இஸ்ராயீல் சமுதாயத்தில்) ஒருவர் ஒரு பசு மாட்டை ஓட்டிச் சென்றுகொண்டிருக்கையில் அதில் ஏறி சவாரி செய்து அதை அடித்தார்.அப்போது அந்த பசுமாடு, “நாங்கள் இதற்க்காக (மனிதர்களை சுமந்து செல்வதற்காகப்) படைக்கப்படவில்லை. நாங்கள் படைக்கப்பட்ட்டது (நிலத்தில்) உழுவதற்க்குத்தான்” என்று கூறியது. எனக் கூறினார்கள்.
இதைகேட்ட மக்கள் “சுப்ஹானல்லாஹ்! மாடு பேசுமா? என்று வியந்து கூறினார்கள். இதைகேட்ட நபி (ஸல்) அவர்கள், “நானும்,அபூ பக்கரும், உமரும் இதை நம்புகின்றோம்.” என்று கூறினார்கள். அப்போது அங்கே அபூ பக்கரும், உமரும் இருக்கவில்லை.தொடர்ந்து நபி (ஸல்) அவர்கள்,
“ஒருவர் தன் ஆடுகளுக்கிடையே அவற்றை மேய்த்துக்கொண்டிருந்த போது ஒரு ஓநாய், ஆட்டு மந்தைக்குள் புகுந்து ஒரு ஆட்டை கவ்விக்கொண்டு சென்றது.அவர் அந்த ஆட்டை ஓநாயிடமிருந்து காப்பாற்றி விட்டார். அந்த ஓநாய் அவரைப் பார்த்து,”இவனே! இன்று நீ காப்பாற்றி விட்டாய்.ஆனால், கொடிய விலங்குகள் ஆதிக்கம் செலுத்தும் (உலக முடிவு) நாளில் இதற்கு (பாதுகாவலர்) யார் இருக்கிறார்கள்?” அந்நாளில் என்னைத் தவிர பாதுகாவலர் யாரும் இல்லையே” என்று கூறியது.” எனக் கூறினார்கள். இதைகேட்ட மக்கள், ‘சுப்ஹானல்லாஹ்! ஓநாய் பேசுமா?’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள்,”நானும்,அபூ பக்கரும், உமரும் இதை நம்புகின்றோம்” என்று கூறினார்கள். அபூ பக்கர் (ரலி) அவர்களும்,உமர் (ரலி) அவர்களும் அங்கே அப்போது இருக்கவில்லை. அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: புஹாரி.3471.
உலக முடிவு நாள் நெருங்கும் சமயத்தில் அல்லாஹ் பூமியிலிருந்து “தாப்பத்தில் அர்ளு” என்னும் விலங்கை வெளியாக்குவான்.அம்மிருகம் மனிதர்களிடம் பேசும் என்று அல் குர்ஆன் கூறுகிறது.
“ மேலும், அவர்கள் மீது நம்முடைய ஆணை நிறைவேறும் நேரம் வந்துவிட்டால் நாம் அவர்களுக்கு பூமியிலிருந்து ஒரு மிருகத்தை வெளிப்படுத்துவோம். மக்கள் நம்முடைய வசனங்கள் மீது உறுதியான நம்பிக்கை கொள்ளாமலிருந்தார்கள் என்று அது அவர்களிடம் எடுத்துக் கூறும்.” – அல் குர்ஆன்.27:82.
மேற்கண்ட செய்திகளிலிருந்து,மனிதர்களைப்போல் பேசும் ஆற்றலை அல்லாஹ் மிருகங்களுக்கு இயல்பாக கொடுக்கவில்லை. சில நேரங்களில் இவைகள் அற்புதமாக காட்டப்படும். அல்லாஹ்வின் அற்புதங்களை நம்பக்கூடிய மக்களுக்கு இவைகள் எல்லாம் ஏற்றுக்கொள்ளக் கூடியவையே! ஆனால் இறைவனை நம்பாத அறிவியல் அறிஞர் பெரு மக்கள் அனைவரும் ஆய்வு செய்தே ஏற்பார்கள்.இதன் அடிப்படையில்,குரங்கு ஏன் பேசவில்லை என்பதை தீவிரமாக ஆராய்ந்தார்கள். ஆஸ்திரியா பிரின்ஸ்டன் பல்கலைகழக நரம்பியல் நிபுணர் ஆஸிப் கஷன்பர் (Asif Ghazanfar at Princeton University) குழுவினர் விரிவாக ஆய்வு செய்து சொல்லும் செய்தி, “மனிதர்களைப்போல் பேசக்கூடிய உடலமைப்புகள் மற்றும் குரல் நாண்கள், எல்லா குரங்கு இனத்திலும் உள்ளது. ஆனால் பேச முடியாததற்கு காரணம், பேசுவதை முறைப்படுத்தும் அமைப்பு மூளையில் இல்லாததே!”
“No one can say now that there’s a vocal anatomy problem with monkey speech,” says Asif Ghazanfar at Princeton University, and co-leader of the study team. “They have a speech-ready vocal anatomy, but not a speech-ready brain. Now we need to find out why the human but not the monkey brain can produce language.” https://www.newscientist.com/article/2115693-monkeys-should- be-able- to-talk- just-like- us-so- why-dont- they/ 9 December 2016 . http://www.sciencealert.com/monkeys-brains- not-their- vocal-cords- stop-them- from- speaking-like- us
குரங்கிலிருந்து பரிணாம மாற்றப்படி வந்த மனிதன்சு பேசும்போது ,,.அதே அமைப்புகளை கொண்ட குரங்கும் அறிவியல்படி, பரிணாமப்படி பேச வேண்டும். ஆனால் பேச முடியவில்லை. காரணம் மிக எளிது, படைத்த இறைவன் தன் படைப்பினங்களுக்கு முழுமையாக உடலமைப்பை கொடுத்தாலும், அவன் நாடிய படைப்புக்கே அந்த பேசும் ஆற்றலை கொடுக்கிறான்.
“பின்பு (ஆதமைப் படைத்து) ஆதமுக்கு எல்லா (பொருள்களின்) பெயர்களையும் (அவற்றின் தன்மைகளையும்) கற்றுக்கொடுத்து…. – அல் குர்ஆன்.2:31 “பின்னர் ஆதம் சில வாக்கியங்களைத் தம் இறைவனிடமிருந்து கற்றுக்கொண்டார்” – அல் குர்ஆன். 2;37
“அவனே மனிதனுக்கு பேச்சு விளக்கத்தையும் கற்றுக்கொடுத்தான்.” – அல் குர்ஆன்.55:4
டார்வின் கூறும் பரிணாமம் என்னும் பொய்க் கருத்தால் எவரையும் பேசவைக்க முடியாது. பேசுவதற்கு தேவையான அவயங்கள் இருந்தாலும் பேச்சைக் கொடுப்பவன் படைத்த அல்லாஹ் ஒருவன் மட்டுமே! பேசுவதற்கு தேவையான அவயங்களே இல்லாவிட்டாலும் அல்லாஹ் நாடினால் எதையும் பேச வைப்பான்..
அந்நாளில் மனிதர்களின் நாவு பேசாது.அவனது அவயங்களே அவனுக்கு எதிராக பேசும். “அச்சமயம் (பாவம் செய்த) அவர்களுக்கு விரோதமாக அவர்களுடைய செவிகளும்,அவர்களுடைய கண்களும்,அவர்களுடைய தோல்களும் அவைகள் செய்தவைகளைப் பற்றி சாட்சி கூறும். – அல்குர்ஆன்.41:20.
“அவர்கள் தம் தோல்களை நோக்கி, “ எங்களுக்கு எதிராக நீங்கள் ஏன் சாட்சி கூறினீர்கள்?” என்று கேட்பார்கள்; அதற்கு அவை: “எல்லாப் பொருட்களையும் பேசும்படிச் செய்யும் அல்லாஹ்வே, எங்களைப் பேசும்படிச் செய்தான்….” –அல் குர்ஆன்.41:21
மனிதனுக்கு எப்படி பேச்சு வந்தது என்பதை சார்லஸ் டார்வின் கூறும் விளக்கம், பாடும் பறவைகள் பரிணாம வளர்ச்சியில் குரங்காக மாறி பாடியது. பின்பு குரங்கு பரிணாம வளர்ச்சியில் மனிதனாக மாறியதும், பாடும் குரங்கு பேசும் மனிதனாக மாறி விட்டானாம்.
“British naturalist Charles Darwin, who theorized that our ancestors initially evolved to become "singing apes," or kind of a cross between gibbons and songbirds and being able to learn new songs. This musical ability, Darwin suspected, emerged first, and then later was put to use in speech.” http://www.livescience.com/57165-why- monkeys-dont- talk-like- humans.html
டார்வினின் பரிணாம; குரங்கு-மனித கோட்பாடு நவீன அறிவியல் ஆய்வு முடிவுகள் மூலம் அஸ்தமனமாகிக் கொண்டு வருகிறது என்பதற்கு சான்றாகவே “ஏன் குரங்கு பேசுவதில்லை” என்ற ஆய்வு விளங்குகிறது. இதன் மூலம் டார்வினின் பரிணாமக் கொள்கை என்னும் சவப்பெட்டியில் மற்றொரு ஆணி அடிக்கப்பட்டுவிட்டது. அல்லாஹ் “ஒன்றிலிருந்து” தான் எல்லா உயிர்களையும் படைத்தான் என்பதை குர் ஆன் மறுக்கவில்லை. அந்த ஒன்று என்பது “நீர்”, நீரிலிருந்தே ஒவ்வொரு உயிர்களையும் தனித்தனியாக படைத்ததுமட்டுமில்லாமல் அவைகளை ஜோடி ஜோடியாகவும் படைத்தான் என்பதே அறிவியல்பூர்வமானது.
“… உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் இந்நிராகரிப்பவர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்)அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லையா?” அல் குர்ஆன்.21:30.
நீங்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறுவதற்காக ஒவ்வொரு பொருளையும் ஜோடி ஜோடியாகவே நாம் படைத்தோம்! — அல் குர்ஆன்.51:49.
{ 2 comments… read them below or add one }
“பூமியிலிருந்து ஒரு மிருகத்தை வெளிப்படுத்துவோம்” endruthaan quranil vilakkapattullathu; aanaal neengal “தாப்பத்தில் அர்ளு” என்னும் விலங்கை ena pathinthulleerkal. Ithu sariya? vilakkungal.
Siraj Mohamed
அரபியில் எழுதப்பட்டுள்ளதாப்பத் என்றால் மிருகம்,விலங்கு,பிராணி என்றும் அர்ள் என்றால் பூமி.ஆங்கிலத்தில் The beast of earth.