கடவுள் எங்கே இருக்கிறார்?

Post image for கடவுள் எங்கே இருக்கிறார்?

in பகுத்தறிவுவாதம்

நாத்திகவாதியான ஒரு தத்துவப் பேராசிரியர் கடவுளி‎‎ன் இருப்பைப் பற்றி வகுப்பறையில் விளக்கிக் கொண்டிருந்தார். கடவுளை அறிவியல் ஆணித்தரமாக மறுப்பதைப் பற்றிப் பேசிய அவர், ஒரு மாணவரை எழுப்பி கேள்வி கேட்கலானார்.

“நீ கடவுளை நம்புவதாகச் சொல்கிறாய். இல்லையா?”

“நிச்சயமாக ஐயா..”

“கடவுள் நல்லவரா?”

“ஆம் ஐயா.”

“கடவுள் அளப்பரிய சக்தி படைத்தவரா?”

“ஆம்.”

“எ‎ன்னுடைய சகோதரர் புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டார். த‎ன்னைக் காப்பாற்ற கடவுளிட‎ம் அவர் மனமுருகிப் பிரார்த்தனை செய்தபோதும் கடவுள் கைவிட்டு விட்டார். நாம் எல்லோருமே நோய்வாய்ப்பட்டோர்களுக்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்கிறோம். ஆனால் கடவுள் அவர்களைக் காப்பாற்றுவதில்லை. பி‎ன் எப்படிச் சொல்கிறாய் கடவுள் நல்லவர் எ‎ன்று?”

(மாணவர் அமைதியாய் இருக்கிறார்)

“உ‎ன்னால் பதில் சொல்ல முடியவில்லை. இல்லையா? சரி.. நாம் மீண்டும் ஆரம்பிப்போம். கடவுள் நல்லவரா?”

“ஆம் ஐயா..”

“சாத்தா‎ன் நல்லவரா?”

“‏இல்லை.”

“எல்லாமே கடவுள் படைப்புத்தா‎ன் என்றால் சாத்தா‎ன் எங்கிருந்து வந்தார்?”

“கடவுளிடமிருந்துதா‎ன்.”

“சரி. இந்த உலகத்தில் கெட்டவை ‏இருக்கின்றனவா?”

“ஆம்.”

“அப்படியெ‎ன்றால் அவற்றை உருவாக்கியது யார்?”

(மா‎ணவர் பதில் சொல்லவில்லை)

“இவ்வுலகத்தில் பசி இருக்கிறது, பஞ்சம்‏ இருக்கிறது, மூட‎ நம்பிக்கைகள் இருக்கி‎ன்றன. ‏ ‏ இவையெல்லாம் எங்கேயிருந்து வந்தன?”

……

“அறிவியல் சொல்கிறது, விஷயங்களைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கு நமக்கு ஐம்புல‎ன்கள் இருக்கி‎‎ன்றனவென. இப்போது சொல். கடவுளைக் கண்ணால் கண்டிருக்கிறாயா? அவர் பேசுவதைக் காதால் கேட்டிருக்கிறாயா? அல்லது வேறு எப்படித்தா‎ன் அவரது இருப்பை உணர்ந்திருக்கிறாய்?”

…….

“ஆனாலும் நீ கடவுளை நம்புகிறாய்?”

“ஆம் ஐயா..”

“நம் நடைமுறை வாழ்க்கையிலும் சரி, பரிசோதிக்கத்தக்க வகைகளிலும் சரி, ஆதாரங்களுட‎ன் விளக்கக்கூடிய வழிமுறைகளிலும் சரி, எல்லாவற்றிலுமே அறிவியல் சொல்கிறது ‘கடவுள் ‏ இல்லை’ என்று. ‏ இதற்கு நீ எ‎ன்ன பதில் சொல்லப் போகிறாய்?”

“ஒ‎ன்றுமேயில்லை. எனக்கு நம்பிக்கை மட்டுமே உள்ளது.”

“ஹ்ம்ம்.. நம்பிக்கை.. அதுதா‎ன் இப்போது பிரச்சினையே..” ஆசிரியர் பெருமூச்செறிகிறார்.

(‏இப்போது மாணவர் த‎ன் வாதத்தை ஆரம்பிக்கிறார்)

“ஐயா.. வெப்பம் அல்லது சூடு எ‎ன்ற ஒ‎ன்று உள்ளதா?”

“நிச்சயமாக உள்ளது.”

“அதேபோல் குளிர்‎ என்ற ஒ‎ன்றும் உள்ளதா?”

“நிச்சயமாக.”

“இல்லை ஐயா. நிச்சயமாக குளிர் எ‎ன்ற ஒ‎ன்று இல்லை.”

(வகுப்பறை நிசப்தத்தில் ஆழ்கிறது.)

“ஐயா.. வெப்பத்தில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு நிலை வெப்பத்திற்கும் ஒவ்வொரு பெயர் உள்ளது. மனித உடல் தாங்குவதற்கு ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையும், தண்ணீர் ஆவியாவதற்கு ஒரு வெப்பநிலையும், இரும்பு குழம்பாவதற்கு ஒரு வெப்பநிலையும் ‏ இருக்கின்றன. ஆனால் இதுபோல் குளிரை அளக்க முடியுமா? வெப்பம் எ‎ன்பது ஓர் ஆற்றல். குளிர் எ‎ன்பது வெப்பத்தி‎ற்கு எதிர்பதம் அல்ல. வெப்பம் ‏எனும் ஆற்றலி‎ன் இல்லாமையே குளிர் எ‎ன்பது. (Absence of heat is the cold). “வெப்பம் ‏இல்லை” என்பதைத்தான்‎ குளிர் எ‎ன்று சொல்கிறோம். பூஜ்யம் டிகிரியும் குளிர்தா‎‎‎ன். பூஜ்யத்திற்குக் கீழே -240 டிகிரியும் குளிர்தா‎ன். இரண்டிற்கும் வித்தியாசம் கிடையாது.”

(குண்டூசி விழும் சப்தம் கூட கேட்குமளவிற்கு அமைதியாயிருக்கிறது வகுப்பறை)

“சரி.. ‏ இருட்டென்றால் எ‎ன்னவெ‎ன்று சொல்லுங்கள் ஐயா. அப்படி ஒ‎ன்று உண்மையிலேயே ‏இருக்கிறதா?”

“ஆமாம் தம்பி. இரவில் இருட்டாகத்தானே இருக்கிறது.”

“நீங்கள் மறுபடியும் தவறாகக் கூறுகிறீர்கள் ஐயா. ‏இருட்டு என்பதே ஏதோ ஒரு இருப்பி‎ன்‏ இல்லாமைதான். நீங்கள் வெளிச்சத்தை அளக்க முடியும். குறைந்த ஒளி, நிறைந்த ஒளி, கண்ணைக் கூசச் செய்யும் ஒளி எனப் பற்பல வகைகளில் வெளிச்சத்தைப் பிரிக்கமுடியும்; அளக்கவும் முடியும். ஆனால் ஒளி எ‎ன்பதே இல்லாவிட்டால் அதற்குப் பெயர்தா‎ன் இருட்டு. அதை அளக்க முடியாது. ‏இல்லையா?”

“சரி தம்பி.. நீ எ‎ன்னதான் கூற வருகிறாய்?”

“ஐயா.. நா‎ன் கூறுகிறே‎‎ன், கடவுளைப் பற்றிய உங்கள் கருத்து பிழையானது.”

“பிழை?? விளக்கிக் கூற முடியுமா?”

“ஐயா, நீங்கள் எதிலுமே இரட்டை நிலைப்பாடு கொண்டிருக்கிறீர்கள். ஒ‎ன்று ‏இருந்தால் அதற்கு எதிரிடையான ஒ‎ன்றும் ‏இருக்கிறது எ‎ன்பது உங்கள் வாதம். உதாரணத்திற்கு நல்ல கடவுள், கெட்ட கடவுள். இருட்டு, வெளிச்சம். வெப்பம், குளிர். நீங்கள் கடவுள் என்பவருக்கு ஒரு முடிவு, அல்லது எல்லை எ‎‎ன்ற ஒ‎ன்று உண்டு எ‎ன்பதாகக் கருதுகிறீர்கள். அதை நம்மால் அளக்க முடியவேண்டும் எனவும் வாதிடுகிறீர்கள்.

அறிவியல் மூலம் எண்ணங்கள் எ‎ப்படி உருவாகின்றன என்பதை உங்களால் விளக்கமுடியாது. எ‎ண்ணங்கள் உருவாவதே உடலினுள் கலக்கும் மி‎ன் மற்றும் காந்தத்தூண்டல்களினால்தா‎‎‎ன். மின்சாரத்தை அளக்கமுடிந்த உங்களால், காந்தத்த‎ன்மையை விவரிக்க முடிந்த உங்களால் எண்ணங்களி‎ன் தோற்றத்தை அளக்க முடியவில்லை.

இறப்பு எ‎ன்பதை வாழ்வதி‎ன் எதிர்ப்பதமாகக் கருதுகிறீர்கள். உண்மையில் “வாழ்வு இனி இல்லை” என்ற த‎ன்மையே இறப்பு எ‎ன்பதை அறிகிறீர்கள் இல்லை. ‏ ‏

“சரி இப்பொழுது சொல்லுங்கள் ஐயா.. குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான் என்கிறீர்களா?”

“”இயற்கையான பரிணாம வளர்ச்சியைப் பற்றி நாம் பேசுவோமானால்.. ஆம்.. அது உண்மை. குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான்.” பேராசிரியர் பதிலுரைத்தார்.

“உங்கள் கண்களால் மனிதப் பரிமாண வளர்ச்சியைக் கண்டிருக்கிறீர்களா?”

(பேராசிரியர் த‎ன் தலையை ‘இல்லை’ என அசைத்தவாறே, பு‎ன்முறுவல் பூக்கலானார், விவாதம் செல்லும் போக்கை அறிந்தவராய்.)

“அப்படியெ‎ன்றால், யாருமே மனிதப் பரிமாண வளர்ச்சியை தத்தமது கண்களால் கண்டதில்லை. எல்லாமே ‘ஒருவகையா‎ன’ அனுமானம்தான். ‏ இன்னும் சரியாகச் சொல்லப்போனால் அது உங்கள் கருத்து, குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான் என்பது. அதை நிரூபிப்பதற்கு நீங்கள் கொடுக்கும் ஆதாரங்கள் எவையுமே, எவரும் கண்டதில்லை, அனுபவம் செய்ததில்லை எ‎ன்பதே உண்மை. உங்களுக்குச் சரியெனப் படும் ஒ‎‎ன்றை எங்களுக்கு போதிக்கிறீர்கள், ‏ இல்லையா?. எனவே, நீங்கள் ஒரு விஞ்ஞானியா அல்லது போதகரா?”

(மாணவர்கள் சீட்டி‎ன் நுனிக்கே வந்து விடுகிறார்கள்)

“இங்கே யாராவது நம் பேராசிரியரின் மூளையைப் பார்த்திருக்கிறீர்களா?”

(வகுப்பறை ‘கொல்’லெனச் சிரிப்பொலியால் அதிர்ந்தது)

“யாராவது பேராசிரியரி‎ன் மூளையைத் தொட்டுப் பார்த்திருக்கிறீர்களா? அது ‏இருக்கிறதென உணர்ந்திருக்கிறீர்களா‏? அத‎ன் வாசனையை நுகர்ந்திருக்கிறீர்களா? உங்கள் ஐம்புலன்களும் எ‎ன்ன சொல்கின்றன?”

“அப்படியெ‎ன்றால் நம் நடைமுறை வாழ்க்கையிலும் சரி, பரிசோதிக்கத்தக்க வகைகளிலும் சரி, ஆதாரங்களுட‎ன் விளக்கக்கூடிய வழிமுறைகளிலும் சரி, எல்லாவற்றிலுமே அறிவியல் சொல்கிறது, உங்களுக்கு மூளை இல்லை எ‎ன்று.”

“மூளையே இல்லாத ‎நீங்கள் நடத்தும் பாடங்களை நாங்கள் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ஐயா?”

(மாணவரி‎ன் சரமாரிக் கேள்விகளால், வகுப்பறையில் அமைதி நிலவுகிறது. ஆசிரியரி‎ன் முகமோ வெளிறிப்போனது!)

“நீ எனக்கு மூளை இருக்கிறதெ‎ன நம்பித்தான் ஆகவேண்டும் தம்பி!”

“அது தா‎ன் ஐயா.. இவ்வளவு நேரம் நா‎ன் சொல்ல வந்தது. மனிதனையும் கடவுளையும் இணைக்கும் ஊடகத்தி‎ன் பெயர்தான் நம்பிக்கை என்பது. ‏ இது தான் உலகத்தில் சகலமானவற்றையும் இயக்கிக் கொண்டிருப்பது. நம்பிக்கை இல்லையேல் வாழ்க்கை இல்லை.”

இவ்வாறாக, விவாதம் நிறைவுற்றது.
 

Basheer Ahamed  

{ 53 comments }

mansoor March 5, 2011 at 8:08 pm

masha allah

mani July 14, 2012 at 10:04 pm

MASHA ALLAH …here “ma” is water and “sha” is fire “allah” is the protector of this universe. We need both the energies so “maatha” “maariaatha” and “eechan” both are inter-related and the powerful here is the fire because of it the water is existing. both the energies are powerful so this same concept of ma and appa is dominating all the religious beliefs but they are hidden. Charuchalam is again charu the sun and chalam the water. i dont know why no one accept the fact but their silence if it heals the minds of people in many ways then let the faith continue. “allah” has been formed from the word “paalan” ..”ku” paalan” the protector of water the omnipotent SUN (eechan, Sha).

abdul azeez July 16, 2012 at 4:38 pm

அன்பு சகோதரர் மணி அவர்களுக்கு சலாம். உங்களை போல் ஆங்கிலத்தில் அவ்வளவாக புலமை இல்லை எனக்கு அதனால் உங்களின் கருத்தை தமிழில் பதிந்தீர்கள் என்றால் நன்றாக இருக்கும் இன்னும் ஆங்கிலம் தெரியாத அனைவருக்கும் புரியும்.

// MASHA ALLAH …here “ma” is water and “sha” is fire //

இந்த மாஷா அல்லாஹ் என்பதற்கு அர்த்தம் அல்லாஹ் நாடியது என்று பொருள் ஒரு மொழியில் உள்ள வாக்கியத்தில் இரண்டு எழுத்தை பிரித்து வேற மொழியில் உள்ள வாக்கியத்தோடு ஒப்பிட்டு பார்த்தால் ஒரு பொருள் வரும் அல்லது வராமலும் இருக்கலாம் அதனால் நீங்கள் எழுதிய நீரும், நெருப்பும் தான் அந்த மாஷா அர்த்தம் என்று எடுக்க முடியாது. இன்ஷா அல்லாஹ் என்றால் அல்லாஹ் நாடினால் என்று பொருள் வருகிறது ஆக இலக்கண ரீதியில் தான் ” நாட்டம்” என்ற பதம் மாஷாவாகவோ அல்லது இன்ஷாவாக இன்னும் பல கோணங்களிலோ மாறுபடுமே தவிர நீங்கள் ஊகிப்பது போல் அல்ல.

நீர் —– மாய
நெருப்பு —– நார்

என்று அரபியில் தனி தனி வார்த்தை உள்ளது

மா சலாம்.
அபுல் அஜீஸ்

mani April 9, 2013 at 1:49 pm

if you dont want the truths to come out then remove the above matter also written by me…thanks. sorry to come to our site and reveal. i have seen only false people so far.

abdul azeez May 8, 2013 at 5:52 am

what are the truths u have no need to remove the matter, before u submit the thoughts you must think many times..

மா சலாம்.
அபுல் அஜீஸ்

hafna March 7, 2011 at 4:08 pm

nice debate.hav 2 think abt it deeply

INDIAN March 10, 2011 at 3:08 pm

that student name is APJ.ABDUL KALAAM , EX President of India

sudhir October 11, 2012 at 3:11 am

அப்துல் கலாம் அவர்கள் நாத்திகர் என்று கேள்விபட்டிருக்கேன். இது உண்மையா?

Abdul Gani March 14, 2011 at 4:19 pm

Nice subject!!! not god believers has to read it…. so after read this please forward this to all.

sahulhameed March 26, 2011 at 7:28 pm

very good explanation

jaliyath April 14, 2011 at 10:02 pm

tamil nadu chif mnister he must read artcle

Nijamudeen May 4, 2011 at 11:59 pm

Nalla vivatham antha manavanuku allah subahanathala nal vali katuvanaga

Bhaskaran October 16, 2011 at 5:06 pm

நல்ல அருமையான விவாதம். நன்றி

rahul October 27, 2011 at 3:32 pm

super article

Mohamed ali (saudi arabia) November 9, 2011 at 1:54 am

Read more in Quran, and live our life lead our life in the way thought by our messenger Muhammad (peace be upon him). This site is nice masha allah.

ajmal November 9, 2011 at 6:27 pm

very good argument

Anuleo November 27, 2011 at 4:29 am

Allahu manah !
very nice explenation for {GOD} !

KRISH December 5, 2011 at 8:02 pm

the god always wth insite of heart. its really nice story.

sundaram December 13, 2011 at 9:54 pm

nice debate,
god is every where, every one should understand the divinity,

Rejith Kumar December 23, 2011 at 1:46 pm

Excellent explanation to the proof of the God

sirajkcinayath January 13, 2012 at 1:29 pm

all.people.like.the.simple.example.about.the.god.continue.congratulation

b m faiyz February 10, 2012 at 2:41 pm

this expressions from hon zakir nayak. alhamdulillah

bhuvi April 13, 2012 at 3:28 pm

nice debate……changed my mindset tooooo!!!!!!!!!

V.RAGHUPATHI May 5, 2012 at 8:49 pm

nice,ivar kadavulal namakku kidaitha parisu

Raamarasu May 9, 2012 at 8:39 pm

கண்டிப்பாக “நம்பிக்கை இல்லையென்றால் வாழ்க்கை இல்லைதான்”. அது அந்த பேராசரியாருக்கும் தெரியும். அவரை மடக்குவதாக, கிண்டல் செய்வதாக நினத்தால் அது அறியாமை என்றுதான் சொல்லவேண்டும். பேராசரியாருக்கு மூளை இருப்பதை தொட்டு உணர்ந்துதான் பார்க்கவேண்டும் என்பதில்லை. அது வெறும் விதாண்டாவாதத்திற்கு கேட்கும் கேள்விதான். தலைக்குள் இருப்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் கடவுள் இருக்கிறார் என்பதற்க்கு கதை சொல்லி, கற்பனை கதைகளை சொல்லித்தான் நம்ப வைக்கவேண்டியுள்ளது. இயற்கையில் உருவானதை கடவுள் என்பதாக உருவம் கொடுத்து அவர்தான் உருவாக்கினார, நம்மை அவர்தான் பாதுக்காக்கிறார் என்பதாக பொய்யான, தேவையில்லாத குழப்பமான நம்பிக்கை தேவையில்லை என்பதுதான் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களின் கருத்தே தவிர, கடவுள் நம்பிக்கையை குறை சொல்வதற்க்கு அல்ல. அப்படியே கடவுள் உண்டு என்று நம்புவார்கள் எதற்காக வேறு வேறு கடவுளை வைத்துள்ளார்கள். ஒரு மதத்தினர் வணங்கும் கடவுள் மீது பிற மதத்தினருக்கு நம்பிக்கை இல்லை. என்கிறபோது பொதுவான கடவுள் நம்பிக்கை இல்லை என்பதைத்தானே காட்டுகிறது. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் அனைத்து மதக் கடவுளை இல்லை என்கிறார்கள். ஆக கடவுள் நம்பிக்கை என்பது நோய் பயத்தினாலும், உயிர் பயத்தினாலும் உருவாக்கப்பட்ட ஒரு நம்பிக்கையே தவிர ஐம்புலங்களாலோ அல்லது மனதாலோ உணர்ந்த ஒன்றல்ல என்பதுதான் உண்மை.

ReadIslam.net May 9, 2012 at 9:51 pm

சகோதரர் Raamarasu பகுத்தறிவைப்பற்றி எழுதுகிறார். பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவு என்ன என்பதை பல தலைப்புகளில் உள்ளன. படிப்பதற்கு அதன் லிங்க் http://www.readislam.net/portal/archives/category/%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d

raamarasu May 10, 2012 at 12:33 am

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை பகுத்தறிவுவாதிகள் என்பதாக விளக்கம் கொடுக்கப்பட்ட இணைப்பை தந்து அதைப் படிக்க வாய்ப்பு கொடுத்தமைக்கு நன்றி.

mani July 14, 2012 at 10:32 pm

well said! the fact that no one accept the existance of god if they continue debating about the existance of different kinds of gods. Why dont they accept the fact that something still is operating the whole earth invisible indeed but it can connect if we keep our heart full of love and sympathy. Love is faith. Anbe Chivam. Where there is light god would like to dwell because he is brightness if we fill our heart with hatred without reasons then there would be only darkness and this is the place the satan would like to dwell. I believe we humans have crossed so many births and we dont know where we are now? what kind of previous life we had? what kind of deeds? Because the soul is immortal it would again try to occupy the world if its previous life was full of good deeds. Its great subject to be dealt with. I am just now living in a foolish world with different kinds of faith. No need for a religious book if our heart is full of love. Eventhough i give importance to science but still i believe there are holy angels flying above watching all to pass the messages so divine. You can meet them near the ocean, river, lake they can even watch you in the form of rainbow, the blessing in disguise. I believe firmly there are dead souls wandering because recently i had seen one of them in the form of black air, it vanished away very quickly, i was speechless for sometime searching it it was dense, dark, i suppose no one watched it but me, i believe it made me meet and wanted me to believe they are living it did not harm me it did not harass me ..i could not believe my own eyes it was real for the first time in my life i saw it …before that i could only listen to the sound even voice but not so clear. There was a crowd of people talking with each other, the conversation i could listen their voices but could not understand. I had also recently experience kind of colourful but electric sense of waves moving near my left eye it lasted for almost 10 minutes that kind of experience happened twice with me. i wanted to divert my attention but the beaming light like scattered stars white coloured it was stagnant for sometime at that time i was taken to a subconcious mood like some one was dragging me i could not move but i was trying hard to move away from that sudden but surprise filled with shock i wanted to share that experience with all i could not show it to anyone. Mystical experience lasted for sometime with me, awaiting to get that again, who makes after all?

abdul azeez May 10, 2012 at 2:32 pm

சகோதரர் ராமரசு அவர்கள் ஐம்புலன்கள் பற்றி எழுதுகிறார்.

// ஐம்புலங்களாலோ அல்லது மனதாலோ உணர்ந்த ஒன்றல்ல என்பதுதான் உண்மை.//

தன் பிறப்பு பற்றி உள்ள செய்தி அதாவது இவர் தான் தந்தை இவர் தான் தாய் என்ற விஷயத்தில் வெறும் குருட்டு நம்பிக்கையை மட்டும் மூலதனமாக்கி நம்பியிருக்கிறார் உலகமும் அப்படி தான் நம்பிக்கொண்டிருக்கிறது. அதில் ஐம்புலன்களை வைத்தோ மனதால் உணர்ந்தோ நம்பினேன் என்பது காதில் பூ சுற்றும் வேலை தான். தத்தெடுத்து வளர்க்கவும் சாத்தியம் இருக்கிறது. அல்லது தாய் கணவனை ஏமாற்றி முறை தவறி பெற்றிருந்தாலும் பிறக்கும் குழந்தைக்கு தெரிய வாய்ப்பில்லை அதனால் எப்படி இவர் தான் தந்தை அல்லது இவர் தான் தாய் என்று தீர்மானிப்பதற்கு சீட்டு குலுக்கி போட்டு பார்க்க சொல்லுவார் போலருக்கு அது தான் பகுத்தறிவுக்கு சரியான உரை கல்லு.
மா சலாம்.
அப்துல் அஜீஸ்

raamarasu May 13, 2012 at 4:17 pm

நண்பர் அப்துல் அஜீஸ் அவர்களே என் கருத்து மீதான உங்களது கருத்துக்கு நன்றி.

கடவுளை ஐம்புலன்களாலும், மனதாலும் உணர்ந்து நம்புவது காதில் பூ சுற்றுவதாகவே வைத்துக்கொள்ளலாம். வேறு எந்த வகையில் நீங்கள் உணர்ந்தீர்கள். இவைகள் தவிர வேறு என்ன இருக்கிறது கடவுளை உணர…! அப்படி இருந்தால் கடவுள் இருக்கிறார் என்று நம்புவதில் எந்தவொரு தயக்கமும் இல்லை நண்பரே.

இவர்தான் தந்தை என்பதை தாய் சொல்வதை “குருட்டு நம்பிக்கை” என்று சொல்லி “வாழும்”, மகத்தான உறவாண, தாயை நம்பாமல், அவரைக் கொச்சைப்படுத்தி, கற்பனையான கடவுளை எந்த ஒரு உணர்தலும் இல்லாமல் (காதில் பூ சுற்றும் உணர்வுகளான ஐம்புலங்கள் மற்றும் மனதால்) நம்பவேண்டும் என்பது எப்படி சரியானதாக இருக்க முடியும்…!

abdul azeez May 14, 2012 at 7:26 pm

அன்பு நண்பர் ராமரசு அவர்களுக்கு சலாம். எதையும் அலசிப்பார்க்கும் மனோபக்குவத்திர்க்கு அதில் தீர்க்க ஆராய்ந்து தெளிவு காண்பது தான் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது. சந்தேகம் என்ற ஒரு உணர்வுக்கு இவ்வளவு முக்கியத்துவம். இந்த உலகத்தில் எந்த ஒரு பொருளுமே ! இந்த சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக இல்லை. இதில் பெற்றோர்களான தாய் தந்தைக்கு மட்டும் பிரத்தியேகமாக விதிவிலக்கு வேண்டும் என்பது சிறந்த பகுத்தறிவாளருக்கு அழகல்ல.

// இவர்தான் தந்தை என்பதை தாய் சொல்வதை //
இதில் கண்மூடி நம்பவைக்கும் உங்கள் முயற்சி பகுத்தறிவுக்கு முன்னாள் ஒன்றும் இல்லை. ஆக இந்த சந்தேகம் என்ற ஒரு உணர்வை நாம் கண்கொண்டு பார்த்தது இல்லை, செவியால் அதன் ஓசையை கேட்டதுமில்லை, அதனை சுவைத்ததுமில்லை இது போல் அணைத்து விதமான உணர்வுகளுக்கும் ஆதாரம் ஐம்புலன்களைக் கொண்டு தேடினால் தோல்வியே மிஞ்சும். சிந்தனை என்ற அறிவை வைத்து மட்டும் தான் ஊர்ஜிதம் செய்ய முடியும். இந்த பின்னூட்டத்தை நீங்கள் படித்த பின் இது தானாக இந்த இணையத்தில் ஒட்டிக்கொண்டது என்று நீங்கள் தீர்மானிக்கவில்லை . எங்கிருந்தோ யாரோ ஒரு ஆள் என் கருத்துக்கு மறுப்பு கொடுத்துள்ளார் என்று அறிந்து கொண்டு தான் மறு பின்னூட்டம் கொடுத்துள்ளீர்கள். இதற்க்கு பெயர் தான் பகுத்தறிவு அதாவது ஒரு பொருளை பார்த்தால் அதன் பின்னணியில் காரண கர்த்தா ஒருவர் இருப்பார் என்று நம்புதல். அதல்லாமல் இதை எழுதியவரை நான் பார்த்ததில்லை அவரிடம் பேசியதில்லை அவரை தொட்டதில்லை அதனால் உங்கள் கணினியில் தெரியும் எழுத்து இயற்க்கை என்று சொல்லி பூசி மொழுகுவீர்களா? (அதாவது தானாக வந்ததென்று) இல்லை இதை உருவாக்கியது நான். இது போலவே இந்த உலகத்தில் மழை, வானம், வானத்திற்கும் பூமிக்கும் இடையில் மேகம், மலை சூரியன், சந்திரன் அது கணக்கின் படி செல்கின்றன என்று குர்ஆன் திட்டவட்டமாக பறை சாற்றுகிறது.

இந்த வேதம் எழுத படிக்க தெரியாத ஒரு மனிதர் அதுவும் ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன் சொன்னார் அது இன்று சாத்தியமாகிறது. இன்னும் ஏராளமான் விஞ்ஞான நுணுக்கங்கள் எல்லாம் குர்ஆன் மூலம் சொல்லியுள்ளார் அதில் ஒன்று கூட தோல்வி இல்லை. அதன் வயிற்றிலிருந்து பல வித நிறமுடைய பானம் வெளிப்படுகிறது என்று தேனைப் பார்த்து சொல்லுகிறது அந்த காலத்தில் இன்றைக்கு உள்ள நவீனம் போல் எந்த ஒரு கண்டுபிடிப்பும் கிடையாது வெறும் எழுத படிக்க தெரியாத மனிதரால் எப்படி இவ்வளவு பெரிய உண்மையை சொல்ல முடியும் அவர் நான் சொல்லவில்லை எனக்கு இறைவன் புறத்திலிருந்து செய்தி கிடைக்கிறது என்று சொல்லியுள்ளார்கள் இந்த மாதிரி ஆராய்ச்சியின் மூலம் தான் நாங்கள் கடவுள் என்ற ஒருவர் இருக்கின்றார் என்ற முடிவுக்கு திட்டவட்டமாக வந்தோம்.நான் பயிலும் காலம் வரை தேன் அதன் ஈக்கள் தன் வாயால் மலர்களிலிருந்து சேமிக்கின்றது என்று தான் படித்துள்ளேன் அது பொய் இப்பொழுது விஞ்ஞானம் படம் பிடித்து வீடியோ மூலம் டெலி காஸ்ட் செய்துவிட்டது வயிற்றிலிருந்து வெளிப்படுகிறது என்று. நிறைய சொல்லலாம் மேலும் என் லிங்கையும் பாருங்கள்.

http://azeezspin.blogspot.com/2009/02/blog-post_19.html

மா சலாம்.
அப்துல் அஜீஸ்

raamarasu June 9, 2012 at 5:41 pm

திரு அப்துல் அஜீஸ் அவர்களே வணக்கம். //“எதையும் அலசிப்பார்க்கும் மனோபக்குவத்திர்க்கு அதில் தீர்க்க ஆராய்ந்து தெளிவு காண்பது தான் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது. சந்தேகம் என்ற ஒரு உணர்வுக்கு இவ்வளவு முக்கியத்துவம். இந்த உலகத்தில் எந்த ஒரு பொருளுமே ! இந்த சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக இல்லை. இதில் பெற்றோர்களான தாய் தந்தைக்கு மட்டும் பிரத்தியேகமாக விதிவிலக்கு வேண்டும் என்பது சிறந்த பகுத்தறிவாளருக்கு அழகல்ல.”//

நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை. எதையும் அலசிப்பார்த்து தெளிவு காண்பது என்பது மிகச்சரியானது. உலகில் உள்ள, தாய் தந்தை உட்பட, அனைத்து பொருட்களும் சந்தேகத்திற்கு உட்பட்டது என்று சொல்லி, கடவுள் என்பதை மட்டும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது என்று சொல்லாமல் சொல்லி உள்ளீர்கள். இல்லையா நண்பரே..? தாய் தந்தையும் பொருட்களாக்கியுள்ளது உங்களுக்கு உங்களது கடவுள் மீதான பற்று என்பதை விட வெறி உள்ளதையே காட்டுகிறது. எதற்கும் காரணகர்த்தா என்பதை எனக்கு புரிய வைக்க நமது இணயதள கருத்துப்பதிவை உதாரணமாகக் காட்டியுள்ளீர்கள். உங்களது அறிவைப் பாராட்டுகிறேன். கடவுள் என்பது இவ்வளவுதானா நண்பரே…? நீங்களும் நானும் விருப்பப்பட்டால், சந்திப்பது என்பது சாத்தியபடக் கூடியது என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அனைத்திற்க்கும் ஆதாரமாக நீங்கள் காட்டும் கடவுளை……. சாத்தியப்படுத்த முடியுமா நண்பரே..!

ஒருவர் இவர்தான் கடவுள் என்று சொல்லிவிட்டார், அதை நீங்கள் நம்புகிறீர்கள்; மற்றவர்களும், எந்த கேள்வியும் கேட்காமல், கண்ணை மூடிக்கொண்டு அப்படியே, நம்பவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்…? நல்ல ஒரு எதிர்பார்ப்பு.
அப்படி நம்பவில்லையென்றால் நாத்திகர், பகுத்தறிவு என்று கிண்டல் கேலி. கடவுள் இருக்கிறார் என்பதை நேரடியாக பதில் சொல்லிக் காட்டாமல், உதாரணங்கள் சொல்லி அதன்மூலம் மட்டுமே இருப்பதாக நம்பியாக வேண்டுமென்றால்…எப்படி நண்பரே…?

இயற்க்கை ஒரு அதிசயம், அற்புதம். மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் “கடவுள்” என்று, ஒவ்வொரு நாட்டவரும், ஒருவரை காட்டுவதும், அதை வைத்து மனிதர்களுக்குள் பல இனப் பிரிவுகளை வைத்து வேற்றுமை பாராட்டுவதும், அதை வணங்குவதையே வேலையாக வைத்து இருப்பதும்… என்ன சொல்ல…!

இயற்க்கை ஒரு சுயம்பு. ஆதி அந்தம் இல்லாதது. அதை கொஞ்சம் யோசித்தாலே விளங்கும். அதை தாங்கள் நம்பும் கடவுள் என்ற ஒண்டிற்குள் சுருக்குவது, இந்த பிரபஞ்சத்தை உள்ளங்கையில் சுருக்க நினைப்பதை என்ன சொல்லி பாராட்ட…!

கருத்தை பதிவு செய்ய தளம் கொடுத்த, இஸ்லாம் இணையத்திற்கு நன்றி.

abdul azeez June 9, 2012 at 9:01 pm

அன்பு நண்பர் ராமராசு அவர்களுக்கு சலாம் உண்டாகட்டும்.
// கடவுள் என்பதை மட்டும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது என்று சொல்லாமல் சொல்லி உள்ளீர்கள். இல்லையா நண்பரே..? //

இல்லை உங்களுடைய்ய ஊகம் தவறானது.

25:73. இன்னும் அவர்கள், தங்கள் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு நினைவூட்டப்பட்டால், செவிடர்களையும், குருடர்களையும் போல் அவற்றின் மீது விழமாட்டார்கள். (சிந்தனையுடன் செவி சாய்ப்பார்கள்.)

இது நாங்கள் வேதம் என்று நம்பும் குர்ஆன் வசனமாகும். இந்த வேதத்தில் இப்படி தான் உலக மக்களுக்கும் மற்றும் இதை நம்பக்கூடிய முஸ்லிம்களுக்கும் கட்டளை பிறப்பிக்கிறது.ஒவ்வொன்றாக பிரித்து சந்தேகப் பட்டு எல்லாவற்றையும் துருவி ஆராய்ந்து பார்த்து தான் நம்பிக் கொண்டிருக்கின்றோம்.நம்பவேண்டும் வெறுமனே முஹம்மது (ஸல்) அவர்கள் சொல்லிவிட்டார்கள் என்பதனால் கண்மூடி செம்மறி ஆட்டுக் கூட்டம் போல் நாங்கள் நம்புவதில்லை. இது மாதிரியே இறைவன் விஷயத்திலையும்.நாங்கள் ஆராய்ந்து நம்பிக்கொண்டிருக்கின்றோம்.

// தாய் தந்தையும் பொருட்களாக்கியுள்ளது //

பொருட்கள் நிலையை அவர்கள் அடையவில்லைஎன்றாலும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்ற தகுதிக்கு வரமுடியாது நண்பரே!

// கடவுள் என்பது இவ்வளவுதானா நண்பரே…? நீங்களும் நானும் விருப்பப்பட்டால், சந்திப்பது என்பது சாத்தியபடக் கூடியது என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அனைத்திற்க்கும் ஆதாரமாக நீங்கள் காட்டும் கடவுளை……. சாத்தியப்படுத்த முடியுமா நண்பரே..!//

கடவுளுக்கு வரையறையே கிடையாது. நீங்கள் என்னை இன்னும் பார்க்காமலே நம்பி தான் பதில் கொடுத்துள்ளீர்கள். காரணம் உங்கள் கருத்துக்கு பதில் நான் கொடுப்பதனால். உங்களின் நிலை போலதான் உலக முஸ்லிம்கள் அனைவரும் தடயங்களை வைத்து இறைவனின் அத்தாட்சிகளை அறிந்து கவுளை வணங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நீங்கள் சாத்தியப் படுத்த சொல்லி உங்களிடம் வந்து கடவுளை கை கொடுத்துவிட்டு போக சொன்னால் தான் நம்புவேன் என்று அடம்பிடித்து அதற்க்கு பகுத்தறிவு என்று மகுடம் சூட்டிக் கொள்ளபார்க்கிரீர்கள்.

உதாரணம்: இந்திய வரலாறு ராஜ ராஜசோழன், சேரன், பாண்டியன் ஹுமாயுன் என்றெல்லாம் படித்திருப்பீர்கள் அதை நம்பினீர்களா? இல்லை பரீட்சை மார்க்குக்காக படித்தீர்களா? உலகத்தில் உள்ள எவ்வளவு பெரிய வரலாறாக இருந்தாலும் நம்ப முடியுமா ? உங்கள் எதிர்பார்ப்புப் படி அத்தனை அரசனையும் நேரில் வரவழைத்து பார்த்து ஊர்ஜிதம் செய்து கொண்டீர்களா?

அன்றியும் ஆயிரக்மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னாள் டைனோசரஸ், மற்றும் ரிநோசராஸ் போன்ற மிருகங்கள் வாழ்ந்தது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்களே அதை நம்புநீர்களா? இல்லை அதை ஒரு தடவை நேரில் பார்க்கணும் என்பீர்களா?

செவ்வாய் கோல், ஜுபிட்டர், மார்ஸ் என்றெல்லாம் விஞ்ஞானம் சொல்கிறது. அதெல்லாம் கட்டு கதையா? நேரில் கொண்டு வர முடியுமா?

விஷயம் என்ன வென்றால் ஒரு சில பொருள்களை நேரில் பார்த்து ஊர்ஜிதம் செய்துகொள்வது போல் அணைத்து பொருள்களும் அதே நிபந்தனைக்கு உட்படுத்தமுடியாது. மனிதர்கள். உயிர் வாழ்வன போன்றவை ஊர்ஜிதம் செய்துகொள்ளலாம்.வரலாறு நிகழ்வுகள். விண்கோள்கள். காற்று, உணர்வுகள், இன்னும் கடவுள் போன்றவை நேரில் பார்த்து ஊர்ஜிதம் செய்து கொள்ள நினைப்பது அறிவீனம்.

நீங்கள் சொல்வீர்கள் காற்றை கொண்டு மனிதர்கள் சுவாசிக்கிறார்கள் என்பீர்கள். நான் உங்களிடம் கேட்பேன் அதை நான் நேரில் பார்க்கணும் அதன் நிறம் எப்படி இருக்கும் அதன் உருவம் யாவை என்பேன் விளக்குவீர்களா? தொடரும்
மா சலாம்.
அப்துல் அஜீஸ்

abdul azeez June 9, 2012 at 11:19 pm

நண்பர் ராமராசு அவர்களுக்கு சலாம் என்ற சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்.

// திரு அப்துல் அஜீஸ் அவர்களே வணக்கம்.//

வணங்கப் படுவது கடவுள் தகுதியுடையவராவதால் எனக்கு வணக்கம் சொல்வதை மறுக்கிறேன் மேலும் ஆரம்பத்தில் அதை கவனிக்க தவறிவிட்டேன்.

// மகத்தான உறவாண, தாயை நம்பாமல், //தாய் தந்தையும் பொருட்களாக்கியுள்ளது //

போன்ற வாசகங்கள் உங்களிடமிருந்து வர காரணம் என் சந்தேக வரி கொண்ட எழுத்து. அதல்லாம் நாலு வரியோட ஐந்தாவதாக இருக்கட்டும் என்றுபொத்தாம் பொதுவாக நீங்கலாக பதியலை உங்களின் உள்ளுணர்வு கொண்டு ஆதங்கப் பட்டு தான் எழுதினீர்கள்.

உதாரணம்: என் மனம் உங்களின் எழுத்து மூலம் ஆதங்கப் படுகிறது என்று நீங்கள் சொன்னால். அந்த உள்ளுணர்வு பாதிப்பான ஆதங்கத்தை காட்டு என்று நான் சொல்லும்போது நீங்கள் வாயால் திரும்ப திரும்ப ஆதங்கத்தை சொல்லிக் கொண்டு தான் இருப்பீர்கள் தவிர என் கண் முன்னாள் காட்டி நிரூபிக்கமுடியாது.

இறுதியில் நீங்கள் சொல்வதை நான் நம்பும் நிலை மட்டும் தான் அமையும்.

ஆனால் பகுத்தறிவு கொண்டு உங்களின் உணர்வை எப்படி நம்பினேன் என்றால்

// மகத்தான உறவாண, தாயை நம்பாமல், //தாய் தந்தையும் பொருட்களாக்கியுள்ளது // உங்களுக்கு உங்களது கடவுள் மீதான பற்று என்பதை விட வெறி உள்ளதையே காட்டுகிறது.//

உங்களின் மேற்கண்ட ரியாக்சன் எழுத்து மூலம் தான் நம்பினேன் இது தான் பகுத்தறிவு இது போல தான் அனைத்து விதமான உணர்வுகளான சோகம், இன்பம், நேசம், கோபம், ஆதங்கம், பொறாமை, நிறைய சொல்லலாம் அனைத்துக்கும் வார்த்தை, எழுத்து வகைகளில் வரும் பிரதிபலன் கொண்டு அறிய முடியும். தவிர பார்வை சந்திப்பு கொண்டு நிரூபணம் என்பது கானல் நீர்.

// “கடவுள்” என்று, ஒவ்வொரு நாட்டவரும், ஒருவரை காட்டுவதும், அதை வைத்து மனிதர்களுக்குள் பல இனப் பிரிவுகளை வைத்து வேற்றுமை பாராட்டுவதும், அதை வணங்குவதையே வேலையாக வைத்து இருப்பதும்//

இஸ்லாம் சொல்லும் கடவுள் ஒரே அல்லாஹ் அவரை யாரும் பெறவில்லை. அவர் எவராலும் பெறப்படவும் இல்லை. அவருக்கு நிகராக யாரும் இல்லை இஸ்லாம் சொல்லிக் கொண்டு வாழும் முஸ்லிம்கள் எந்த மூளை முடுக்கில் இருந்தாலும் கேட்டுப் பாருங்கள் இதை தான் சொல்லுவார்.

மற்ற வேதங்களை நீங்கள் ஆராய்ந்து பாருங்கள் இன்னும் குர்ஆனையும் ஆராய்ந்து பாருங்கள். வித்தியாசம் தெரியும் குர் ஆனில் எந்த முரண்பாடும் இல்லை என்பதை அறிவீர்கள்.

// இயற்க்கை ஒரு சுயம்பு. ஆதி அந்தம் இல்லாதது. அதை கொஞ்சம் யோசித்தாலே விளங்கும்.//

எப்படி யோசித்தால் விளங்கவில்லை. ஆனால் ஆதி அந்தம் உள்ளது என்று விஞ்ஞானம் சொல்கிறது. ” பிக் பாங் தியோரி ” ஒன்று உண்டு என்றால் அங்கே ஆதி தான் இருக்கிறது. சூரியன் அரக்கனை போல் சிவந்து விடும் என்று டிஸ்கவரி சானலில் உலகம் முடியும் என்று டிக்ளார் செய்து ஒரு ப்ரோக்ராம் வந்துள்ளது.

// இயற்க்கை ஒரு சுயம்பு. //

இயற்கையும் இல்லை சுயம்புவும் இல்லை படைப்பு இறைவனால் படைக்கப் பட்டது பிறகு அதற்க்கு முடிவும் உள்ளது.

// இந்த பிரபஞ்சத்தை உள்ளங்கையில் சுருக்க நினைப்பதை என்ன சொல்லி பாராட்ட…!//

பாராட்ட வேண்டும் உள்ளங்கையில் இல்லை விரல் நுனிக்குள் வந்துவிட்டது அந்த அளவுக்கு மனிதன் விஞ்ஞானத்தை கொண்டு முன்னேறிவிட்டான் அது தான் இன்டெர் நெட்

மா சலாம்.
அப்துல் அஜீஸ்

raamarasu June 19, 2012 at 9:54 am

நண்பரே இறைவன் இருக்கிறார் என்பது நம்பிக்கை மட்டுமே. இறை நம்பிக்கையே இல்லை என்கிறபோது நீங்கள் சொல்லும் வசனம் வெறும் வாக்கியங்கள் மட்டுமே. அதில் துருவித் துருவி ஆராய்ந்து பார்பதற்க்கு ஒன்றுமேயில்லை. அந்தந்த காலகட்டத்தில் அந்தந்த பகுதியில் எழுதப்படுகின்ற புத்தகங்கள்தான் பைபிள், கீதை போன்று நீங்கள் சொல்லும் / நம்பும் குர் ஆன் கூட.

//கடவுளுக்கு வரையறையே கிடையாது//

என்பதற்க்கு எந்த அடிப்படையும் கிடையாது, உங்களது நம்பிக்கையைத் தவிர.

//நீங்கள் சொல்வீர்கள் காற்றை கொண்டு மனிதர்கள் சுவாசிக்கிறார்கள் என்பீர்கள். நான் உங்களிடம் கேட்பேன் அதை நான் நேரில் பார்க்கணும் அதன் நிறம் எப்படி இருக்கும் அதன் உருவம் யாவை என்பேன் விளக்குவீர்களா?//

விளங்காத ஒன்றா காற்று நண்பரே..! வரையறையே இல்லாத கடவுளை காற்றோடு ஒப்பீடு செய்து… என்ன சொல்ல…? காற்றை கடவுள் இருக்கிறார் என்று நம்பாத நானும், நம்பும் நீங்களும் உடலால் உணர்ந்துகொண்டு இருக்கிறோம். ஆனால்… நீங்கள் நம்புவது உணர்தலால் அல்ல நம்பிக்கையால்… நம்பிக்கையால் மட்டுமே. ஒருவேளை நீங்கள் உணர்ந்து இருப்பீர்களேயானால், அப்படி நானும் உணர்ந்தால் கடவுள் இருக்கிறார் என்பதை ஒப்புக்கொள்வதில் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை நண்பரே.

**வணங்கப் படுவது கடவுள் தகுதியுடையவராவதால் எனக்கு வணக்கம் சொல்வதை மறுக்கிறேன் மேலும் ஆரம்பத்தில் அதை கவனிக்க தவறிவிட்டேன்**

வணக்கம் என்பது தமிழர் பண்பாடு, மரியாதைக்குரிய, அழகான வார்த்தை. வழிபாடு என்பதுதான் நீங்கள் நம்பும் இறைவனுக்கு செய்வது. அதைக் கூட மறுப்பது என்பது…

கடைசியாக, உங்களது நம்பிக்கையை குறை சொல்வதல்ல எனது நோக்கம். கடவுளைப் பற்றி தெரிந்துகொள்ள இணயத்தில் தேடியபோது இந்த தளம் கிடைத்தது. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை புரியாதவர்கள், விளங்காதவர்கள் என்பதாக கேலி செய்யப்பட்டு இருந்ததால் எனது கருத்துகளை பதிவு செய்ய முயற்ச்சித்தேன். அவ்வளவே. நன்றி நண்பரே.

அல்லாஹ் வின் அடிமை May 15, 2012 at 11:41 am

அன்புள்ள ராமராசு அவர்களே, உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.

ஐம்புலன்கலை வைத்து தான் எதையும் நம்ப வேண்டும் என்று சொன்னால் அதை ஒரு மிருகம் கூட செய்து விடும். உதரணத்திற்கு ஒரு நாய் தன எஜமானியை கண்ணால் பார்த்து நம்பி வாலை ஆட்டும். ஆனால் பகுத்தறிவு என்பது ஒன்றை வைத்து இன்னொன்றை நம்புவதாகும். உதரணத்திற்கு ஒரு இடத்தில புகை வந்தால் அந்த இடத்தில் நெருப்பு இருக்கிறது என்று நம்புவது. பகுத்தறிவு இல்லாத இந்த பிரபஞ்சம் ஒன்றுமே இல்லாத ஒன்றிலிருந்து வந்து இவ்வளவு துல்லியமாக அதன் வேலையே செய்து கொண்டிருகிறது என்று சொன்னால் அதை படைத்தவன் இயக்குகிறான் என்று சொல்வது தான் பகுத்தறிவாளர் களுக்கு அழகு இல்லையா? எதையும் சிந்தித்து முடிவெடுங்கள்.உங்களை போல் பல வருடமாக கடவுளுக்கு எதிராக பிரச்சாரம் செய்த பெரியார் தாசன் இன்று அப்துல்லாஹ் (அல்லாஹ்வின் தாசன்) என்று மாறியது அவர் Quran ஐ சிந்தித்து பார்ததுனால்தான். சிந்தியுங்கள். அல்லாஹ் உங்களுக்கு நேர் வழி காட்டுவனாக. ஆமீன்.

மனிதனின் உடலில் தோள்களில் தான் வலியை உணரும் நரம்புகள் உள்ளது என்கிற உண்மை, தேனீக்கள் வயிற்றிலிருந்துதான் தேன் உருவாகிறது என்ற உண்மை, Big bang theory பற்றி.. இன்னும் பார்க்க..
http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/munnurai/sanrukal/

இவை அனைத்தையும் 1400 வருடங்களுக்கு முன்னால் ஒரு எழுத படிக்க தெரியாத முஹம்மது நபி (peace be upo him) க்கு எப்படி தெரிந்திருக்க முடியும் என்று பகுத்தறிவாளன் சிந்திக்க வேண்டாமா? முஹம்மது நபி (peace be upon him) இவை அனைத்தும் தனது சொந்த கருது இல்லை என்றும், இறைவன் புறத்திலிருந்து வந்தது என்றும் கூறியுள்ளார். இதை வைத்துதான் நாங்கள் இறைவனை நம்புகிறோம். இன்ஷா அல்லா இறைவன் நாடினாலன்றி உங்களை எவரும் கடவுள் உண்டு, அவன்தான் இந்த உலகத்தை படைதான், பரிபாலித்து ஆட்சி செய்து கொண்டிருக்கிறான் என்று நம்ப வைக்க முடியாது.

mani July 14, 2012 at 10:58 pm

keep on thinking about God the Almighty, the omnipotent one day we would get the answer in the form of nature, because god is nature ..you call it eesan, yesu or isha whatever he is the same, when we open our mind and accept things the truth our heart shall open and leave space for light to come in and settle forever then the fountain of love would pour upon the whole earth the divine earth would get the feeling that humans are now changed or have become humane. If you think deeply then the stone that was sent to the earth from the sun was responsible for ancient people to believe that indeed sun is the creator if you go to mecca you would see the same stone that has in it the secret that the earth is rotating and there is one point on which it revolves and holds the whole burden. Truth is truth forever! When we do not agree …conversations then discussions then debates continue still the piramai, the illusion is smiling but with heat “INSHA” he is the “arasan” the king still dancing with bright hairy waves. The king has given us all “uma” the water to quench our thirst “ummisa” is still operating all. We are all humans only the faith differs. Whatever, pancha poothangal the 5 elements are before us they are visible. Dont you agree?

abdul azeez June 20, 2012 at 2:34 am

அன்பு நண்பர் ராமராசு அவர்களுக்கு சலாம்.நீங்கள் சொன்ன ஒன்றை மறந்துவிட்டீர்கள்.

// கடவுள் என்பதை மட்டும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது என்று சொல்லாமல் சொல்லி உள்ளீர்கள். //

மேற்கொண்ட உங்களின் வரிக்கு தான் நாங்கள் இறை நம்பிக்கையாளர்களாக இருந்தாலும் நாங்கள் கண் மூடி நம்ப மாட்டோம், இன்னும் யாரையும் அப்படி நம்ப சொல்லி வர்ப்புருத்தமாட்டோம் என்று உங்களுக்கு எழுதினேன். அதற்க்கு ஆதாரமாக வசனத்தை பதிந்தேன். அது நம்பிய எங்களுக்கும் உபதேசிக்கிறது. அதை நம்பப் போகிறவர்களுக்கும் போதிக்கிறது. இதற்க்கு மாறாக நான் யாரையும் கண்மூடி கடவுளை ஏற்றுக் கொள் என்று பிரகடப் படுத்தினால் இஸ்லாத்தின் கோட்பாடு படி கடவுளுக்கு முன் நான் குற்ற்றவாளி. மற்ற மதங்களுக்கு அப்படி இருக்கா? என்பது வேறு விஷயம்

// நீங்கள் சொல்லும் வசனம் வெறும் வாக்கியங்கள் மட்டுமே. அதில் துருவித் துருவி ஆராய்ந்து பார்பதற்க்கு ஒன்றுமேயில்லை. அந்தந்த காலகட்டத்தில் அந்தந்த பகுதியில் எழுதப்படுகின்ற புத்தகங்கள்//

ஒரு வேதத்தை படிக்காமலேயே அதை முழுவதும் ஆராயாமலேயே அதில் ஒன்றுமே இல்லை என்று தீர்மானிப்பது. எந்த வகை ஞாயம். ஒருவன் இந்தியாவுக்கு வரலாறே கிடையாது என்றால் ஏற்றுக் கொள்வீர்களா? சுதந்திரம் பெற்றோம் மகாத்மா காந்தி, குமரன், நேதாஜி இன்னும் ஏராளமான பெரியோர்கள் எல்லாம் பாடுபட்டார்கள் என்பதை நான் மறுக்கிறேன் உங்களால் நிரூபிக்க முடியமா?

திராவிட கழகத்தை உறவாக்கிய பெரியார் அவர் கடவுள் மறுப்பு கொள்கையில் இருந்தார் என்று சொல்கிறார்கள். அதை எப்படி நம்புவது உண்மையில் அப்படி ஒருவர் வாழ்ந்தாரா? அவரை நேரில் கொண்டு என்னிடம் வருவீர்களா?

// காற்றை கடவுள் இருக்கிறார் என்று நம்பாத நானும், நம்பும் நீங்களும் உடலால் உணர்ந்துகொண்டு இருக்கிறோம்.//

பெரியாரை உடலால் உணர்ந்து தான் நம்பிக் கொண்டிருக்கிறீர்களா? எனக்கு மட்டும் ஏன்? அவரை உடலால் உணரமுடியவில்லை.

// வணக்கம் என்பது தமிழர் பண்பாடு, மரியாதைக்குரிய, அழகான வார்த்தை.//

வரலாறே நம்பிக்கை விஷயத்தில் தத்தளிக்கிறது. இதில் தமிழர் பண்பாடு என்பது எப்படி நம்புவது.

// வழிபாடு என்பதுதான் நீங்கள் நம்பும் இறைவனுக்கு செய்வது. //

வழிபாடு என்பது ஹிந்துக்கள் தங்களின் சிலைகளுக்கு செய்வது மற்றும் திராவிட கழக இயக்கத்தவர்கள் தங்களின் பெரியார் சிலைக்கு செய்வது ஆனால் நாங்கள் செய்கிறது வணங்குவது.

// அதைக் கூட மறுப்பது என்பது…// ==சரியே

மா சலாம்.
அப்துல் அஜீஸ்

YASAR ARAFATH June 20, 2012 at 5:41 pm

RAAMARAASU AVARHALEY…
அந்தந்த காலகட்டத்தில் அந்தந்த பகுதியில் எழுதப்படுகின்ற புத்தகங்கள்தான் பைபிள், கீதை போன்று நீங்கள் சொல்லும் / நம்பும் குர் ஆன் கூட.
THIRUKURAANAI YAARUM SUYAMAAHA EZHUDHA VILLAI… 1400 VARUDATHIRKU MUN MOHAMED NABI(S.A.W) AVARHALUKKU IRAIVANAAL ARIVIKKAPATTA IRAIVASANANGAL AAHUM….
NEENGAL INDHA ULAHIL YENDHA NAATTIRKU PONAALUM SARI, MUSLIM YENDRAAL ALLAH ORUVANAI MATTUM THAAN VANANGUVAARHAL, THIRUKURAANAI THAAN PADIPPAARHAL…
NEENGAL THIRUKURAANAI PATRI THAVARAAHA VILANGI IRUKKIREERHAL…

ORU CHINNA SAMBAVAM PATTRI KOORA AASAI PADUHIREN….
UNGALAI POL ORU IRAIMARUPPAALARAANA AANGILEYAR THIRUQURAANAI MUZHUMAYAAHA PADITHTHAAR… PADITHU MUDITHAVUDAN, SILA MUSLIM ARIGNARHALAI SANDHITHTHU SILA KELVIHALAI MUN VAITHTHAAR… KELVI:
MOHAMED NABI(S.A.W) AVARHAL KADAL PRAYAANAM SEIDHADHU UNDAA? YENDRU ANDHA AANGILEYAR KETTAAR..
ADHARKU ANDHA ARIGNARHAL NABI(S.A.W) AVARHAL KADAL PRAYAANAM SEIDHADHAAHA VARALAARU ILLAI YENDRUM, KADAL PRAYAANAM SEIDHADHU ILLAI YENDRUM KOORINARHAL….
ADHARKU ANDHA AANGILEYAR, NAAN UDANEY MUSLIMAAHA MAARA VENDUM, YENAKKU KALIMA SOLLIKODUNGAL YENDRAAR…..
ANDHA MUSLIM ARIGNARHAL ANDHA AANGILEYARIDAM, NEENGAL YEDHARKAAHA MUSLIMAAHA AVADHARKU AASAI PADUHIREERHAL YENDRU KETTAARHAL..
ADHARKU ANDHA AANGILEYAR SONNAAR… NEENGAL ORU PORULAI PAARKAAMALEYE ANDHA PORULIN UNMAYAANA NILAYAI PATRI VARNIKKA MUDIYUMAA? YENDRU KETTAAR…
ADHARKU MUSLIM ARIGNARHALUM MUDIYAADHU YENDRU SONNAARHAL.. ADHU THAAN UNMAYUM KOODA…
ADHARKU ANDHA AANGILEYAR SONNAAR : MOHAMED NABI(S.A.W) AVARHAL KADAL PAYANAM SEIDHADHU KIDAYAADHU, AANAAL THIRUKURAANIL KADALIN VARNANAIHAL ADHIHAMAAHA IRUKKIRADHU.. KADALUKKU POIVITTU VANDHAVAR KOODA INDHA MAADHIRI VARNIKKA MUDIYAADHU… ADHUVUM 1400 VARUDATHIRKU MUNBU INDRU POL VINGNAANAMUM KIDAYADHU, TV,VIDEO,PHOTO, EDHUVUM KIDAYAADHU, ANDHA KAALATHIL VAAZHNDHA MANIDHAR ADHUVUM KADALUKKU PONADHUM KIDYAADHU… INDHA THIRU QURAAN VASANANGAL IRAIVANAAL ARIVIKKAPATTAVAITHAAN.. MOHAMED NABI UNMAYAANAVAR, ALLAH VUM UNMAYAANAVAN, ALLAHVAL ARIVIKKAPATTA THIRUQURAN VASANANGALUM UNMAITHAAN.. INIYUM THAAMADHA PADUTHAAMAL NAAN MUSLIM AAVADHARKU VAZHIYAI SOLLUNGAL YENDRAAR…..

RAAMARAASU AVARHALEY.., KONJAM SINDHANAI SEIDHU PAARUNGAL…
THIRU QURAANAI PADITHUVITTU SINDHANAI SEIDHU PAARUNGAL…

” IRAIVAN KODUKKA NINAITHADHAI YAARAALUM THADUKKA MUDIYAADHU,
IRAIVAN THADUKKA NINAITHADHAI YAARAALUM KODUKKA MUDIYAADHU”

RAAMARAASU AVARHALEY, NEENGAL IRAIVANAI NAMBA VENDUM YENDRU IRAIVAN NAADINAAL THAAN NEENGAL IRAIVANAI NAMBUVEERHAL.. ILLAYENDRAAL YETHTHANAI PER VANDHU SONNAALUM NEENGAL NAMBAVEY MAATEERHAL…

NEENGAL MARANIKKUM VARAI “ALLAH ORUVANAI NAMBA KOODADHU YENDRUM, KADAVULEY KIDAYAADHU YENDRA NILAYIL THAAN VAAZHA VENDUM YENDRUM, IRAIVAN NAADI IRUNDHAAL..” ADHAI MAATRA KOODIYAVARHAL YAARUM ILLAI….

raamarasu June 23, 2012 at 9:22 pm

நண்பர் யாசர் அரஃபாத் அவர்களே உங்களின் ஆங்கிலத் தமிழ் எழுத்துரு கருத்துக்கு இணையான அழகுத் தமிழ் எழுத்துரு…..

////
திருகுரானை யாரும் சுயமாக எழுதவில்லை… 1400 வருடத்திற்கு முன் மொகமத் நபி (S.A.W) அவர்களுக்கு இறைவனால் அறிவிக்கப்பட்ட இறைவாசகங்கள் ஆகும்.
நீங்கள் இந்த உலகில் நாட்டிற்குப் போனாலும் சரி, முஸ்லிம் என்றால் அல்லா ஒருவரை மட்டும் தான் வணங்குவார்கள், திருகுரானைத்தான் படிப்பார்கள்…
நீங்கள் திருகுரானைப்பற்றி தவறாக விளங்கியிருக்கிறீர்கள்.

ஒரு சின்ன சம்பவம் பற்றி கூற ஆசைப் படுகிறேன்…
உங்களை போல் ஒரு இறைமறுப்பாளரான ஆங்கிலேயர் திருகுரானை முழுமையாக படித்தார்… படித்து முடிதவுடன், சில முஸ்லிம் அறிஞ்ஞர்களை சந்தித்து சில கேள்விகளை முன் வைத்தார்… கேள்வி: மொகமத் நபி (S.A.W) அவர்கள் கடல் பிரயாணம் செய்ததுண்டா? என்று அந்த ஆங்கிலேயர் கேட்டார்.
அதற்கு அந்த அறிஞ்ஞர்கள் மொகமத் நபி (S.A.W) அவர்கள் கடல் பிரயாணம் செய்ததாக வரலாறு இல்லை என்றும், கடல் பிரயாணம் செய்தது இல்லை என்றும் கூறினார்கள்…
அதற்கு அந்த ஆங்கிலேயர், நான் உடனே முஸ்லிமாக மாற வேண்டும், எனக்கு கலிமா சொல்லித்தாருங்கள் என்றார்…
அந்த முஸ்லிம் அறிஞ்ஞர்கள் அந்த ஆங்கிலேயரிடம், நீங்கள் எதற்காக முஸ்லிமாக ஆவதற்கு ஆசைபடுகிறீர்கள் என்று கேட்டார்கள்…
அதற்கு அந்த ஆங்கிலேயர் சொன்னார்.. நீங்கள் ஒரு பொருளை பார்க்காமலேயே அந்த பொருளின் உண்மையான நிலையைப்பற்றி முடியுமா? என்று கேட்டார்… அந்த முஸ்லிம் அறிஞ்ஞர்களும் முடியாது என்று சொன்னார்கள்..அதுதான் உண்மைகூட…
அதற்கு அந்த ஆங்கிலேயர் சொன்னார்.. மொகமத் நபி (S.A.W) அவர்கள் கடல் பிரயாணம் செய்தது கிடையாது ஆனால் திருகுரானில் கடலின் வர்ணனைகள் அதிகமாக இருக்கிறது…கடலுக்கு போய்விட்டு வந்தவர் கூட இந்த மாதிரி வர்ணிக்க முடியாது…. அதுவும் 1400 வருடங்களுக்கு முன்பு இன்று போல் விஞ்ஞானமும் கிடையாது, டி.வி, வீடியோ, போட்டோ, எதுவும் கிடையாது, அந்த காலத்தில் வாழ்ந்த மனிதர் அதுவும் கடலுக்கு போனதும் கிடையாது..இந்த திரு குரான் வசனங்கள் இறைவனால் அறிவிக்கப்பட்டவைதான்.. மொகமட் நபி உண்மையானவர், அல்லாவும் நிமையானவன், இனியும் தாமதப்படுத்தாமல் நான் முஸ்லிம் ஆவதற்கு வழியை சொல்லுங்கள் என்றார்…
ராமரசு அவர்களே.. கொஞ்சம் சிந்தனை செய்து பாருங்கள்… திரு குரானை படித்துவிட்டு சிந்தனை செய்து பாருங்கள்..
“இறைவன் கொடுக்க நினைப்பதை யாராலும் தடுக்க முடியாது, இறைவன் தடுக்க நினைப்பதை யாராலும் கொடுக்க முடியாது”
ராமரசு அவர்களே, நீங்கள் இறைவனை நம்ப வேண்டும் என்று இறைவனை நாடினால்தான் நீங்கள் இறைவனை நம்புவீர்கள்…இல்லையென்றால் எத்தனை பேர் வந்து சொன்னாலும் நம்பவே மாட்டீர்கள்..
நீங்கள் மரணிக்கும் வரை “அல்லாஹ் ஒருவனை நம்ப கூடாது என்றும், கடவுளே கிடையாது என்ற நிலயில் தான் வாழ வேண்டும் என்றும், இறைவன் நாடி இருந்தால்..” அதை மாற்ற கூடியவர்கள் யாரும் இல்லை…. //////
———————————————————————
தமிழில் எளிதாக எழுத கீழே உள்ள தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்…
http://office.microsoft.com/en-us/downloads/office-language-interface-pack-lip-downloads-HA001113350.aspx

k.m. seyed ibrahim August 18, 2012 at 4:43 pm

Assalamu Alaikum
Nabiye! Ivargalidam Neer Koorum:
Intha Alaippu Panikkaga Ungalidam
Yenthak Kooliyaium Naan Ketkkavillai.
Melum Naan Polik Kunam Udaiyavargalil
Ullavanallan. Ithu Ulaga Makkal Anaivarukkum
Nalluraiyaagum.
Melum Sirithu Kaalam Kalivathakullaga
Ithan Nilamai Nitchayamaga Ungalukku
Therinthu Vidum. Al-Qur’an 38:86-88

Raamarasu August 30, 2012 at 3:51 pm

நண்பரே.. உங்களது ஆங்கிலத்தமிழுக்குச் சரியான தமிழ் வரிகள்…….

38:86. (நபியே!) நீர் கூறும்: (“இக் குர்ஆனுக்காக) நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை; அன்றியும், (இதை இட்டுக் கட்டி) சிரமம் எடுத்துக் கொண்டவனும் அல்லன்.

38:87. “இது அகிலங்களுக்கெல்லாம் நல்லுபதேசமேயன்றி வேறில்லை.”

38:88. “நிச்சயமாக (சிறிது) காலத்திற்குப் பின்னர், நீங்கள் இதன் உண்மையைத் திட்டமாக அறிந்து கொள்வீர்கள்.”

S.RAVI September 5, 2012 at 8:16 pm

Anbu Nanbarukku vanakkam. Thangalin Thirukuran vilakkangal migaum arumai. En manathil ezhum sila
ninaivukalukku thangalidam irunthu ariya aval kondullen.

Entha oru muslim nattavarum thirukuranai patri ariyathavar illai. Appadi irukka, oru sarar ( pakisthan, afkanisthan
etc) mathiram authangal, kolai very cheyal, matrum theevaravanthangal seivathu ethanal ?

Thirukuranil ithai pondru seithu thangalukku vendaiyathu petrukkollalam entru Thiru Nabigal kuriyullara ?
Amaithi vazhilum, matravarkali sakithuk kondum vazaha mudiyatha? Thankalin vilakkam thevai. Nandri.

Ravi.

PUNNIYAMOORTHY.V September 30, 2012 at 4:49 pm

kadavul irukkirar avaravar ullathil.

abdul azeez October 28, 2012 at 8:04 pm

அன்பு நண்பர் ரவி அவர்களுக்கு சலாம்.

// Entha oru muslim nattavarum thirukuranai patri ariyathavar illai.//

என்பது சரியானது கிடையாது பேர் பாதி முஸ்லிம்களும் ஒன்றும் படிக்காமல் விளங்காமல் இருப்பவர்கள் தான்.

கொலை வெறி செயல்கள் இறைவனால் தடுக்கப்பட்டவை மீறி செய்தால் இறைச் சட்டத்தை நிறுவி இருக்கும் அந்த

அரசாங்கம் அவனுக்கு மரணதண்டனை கொடுக்கவேண்டும் என்பதும் இறைவனின் வாக்கு இஸ்லாம் தீவிரவாதம்

ஊக்குவிப்பதில்லை. நீங்கள் மேற்கோள் காட்டும் நாடுகள் போலவே முஸ்லிம்கள் இல்லாத நாடுகளிலும் தீவிரவாதம்

நடந்தேரிக்கொண்டிருக்கிறது. நேபாளில் பார்த்தால் மாவைஸ்ட், அஸ்ஸாமில், பார்த்தால் (உல்பா) ஆந்திராவில் நக்சலைட்

இலங்கையில் தமிழ் டைகர்ஸ் இதுவெல்லாம் முஸ்லிம்கள் அல்லாத மதத்தவரால் கையாளப்படுகின்றன .

அதனால் தீவிரவாதம் என்று எடுத்துக் கொண்டால் அது வேற சப்ஜெட் அதுக்கொரு காரணம் இருக்கும்.

அதை இஸ்லாத்தோடும் திருக் குர்ஆனோடும் சம்பந்தப் படுத்த முடியாது.

// Thirukuranil ithai pondru seithu thangalukku vendaiyathu petrukkollalam entru Thiru Nabigal kuriyullara ?
Amaithi vazhilum, matravarkali sakithuk kondum vazaha mudiyatha? Thankalin vilakkam thevai. Nandri. //

இப்படி எந்த வசனத்திளையும் அல்லது நபி( ஸல்) அவர்களின் ஹதீத் கிரந்தங்களிலும் கூறியது கிடையாது

{{காலத்தின் மீது சத்தியமாக நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான்.

ஆயினும், எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்ச்செயல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை).}}

இப்படி சகித்து பொறுமையை மேற்கொண்டு நல்ல செயல்கள் செய்தால் ஒழிய நஷ்டம் இல்லை என்பதை டபுள் பிராக்கெட் போட்ட வசனம் உங்களுக்கு போதுமானது மேலும் ஏராளமான வசனங்கள் உண்டு அமைதியையும் பொறுமையாளர்கள், பற்றியெல்லாம் போதிக்கின்றது.

மா சலாம்.

அப்துல் அஜீஸ்

YUVARAJ January 25, 2013 at 9:43 pm

Nice Debate. Many Peoples tend to show their spirituality in the name of god. But Actual spirituality have to be shown through love and prosperity. Kudos.. to the article. Nice to Read…

amalraj (@jarlama0007) March 8, 2013 at 4:45 pm

kadavulai vimarsippavargalum,kadavulai puriyavaipavargalum kadavulai thedugirergal,kadavulai unaramattume mudium avarar ennangalukerpa kadavulin rubam irukkum, nam kadavulai unara adi manidhanin kalathirku mundhaya kalathirku nam ninaivuglai seluthi angirundhu endraya ulagai parkavendum. anaithu mdhathinudaya kadavul kanduppidikkapatadhu ore nerathil illai enbadhai etrukkolavendum.adhe samayam nam[namadhu unarvugal]irandha piragu ennavagirom enbadhai munkuttiye oru mudivukku varavendum.irnadhavargal silar iruppavargalin kadvul avadhai kindal seiyamal sindhikkavedum,oru nal nammudaneye irunhavan[val] indru indha bumiele eho oru angamagivittan adhavadu indha pirabanchathil kalandu vittan .evan ninaivugalai silaral valum varai marakkamudivadhillai ,silarukku evan kadavulum agindran idil enna thavaru erukka mudiyum.

Iqbal April 9, 2013 at 11:03 pm

சகோதரர் மணி
நீங்கள் எதைக் கூறினாலும் நேரடியாக தெளிவாக குறிப்பிடுங்கள். அப்பொழுதுதான் மற்றவர்கள் புரிவதற்கு இலகுவாக இருக்கும். அறியாத மக்களுக்கு புரியாத உங்கள் தத்துவம்.

San April 10, 2013 at 8:51 pm

சரி, எல்லோரும் கடவுள் இருக்கா இல்லையா என்று தேவை இல்லாமல் பிரச்சனை பண்ணிக்கொண்டே போகிறீர்கள். சரி இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டுமே! அதற்கு ஏனப்பா விழுந்து விழுந்து கும்பிட வேண்டும்? கும்பிட்டால் மனம் இரங்கிக் கவனிப்பார், இல்லாவிட்டால் கருணை காட்டவே மாட்டார் என்றால் யாரவர் கடவுளா அல்லது சாதாரண மனுஷனா? நீங்கள் உங்கள் குறையக் கூறாவிடின் அவருக்கு ஒன்றுமே தெரிய வராதா? கடைசியில் என்னதான் சொல்லுகிறீர்கள் கடவுளைப் பற்றி?

Peer Mohamed August 24, 2013 at 12:11 am

Nathigar …Please tell how this world created..is it well defined by Science?,….are still research going on?…..

you are thinking science is 100% trueth…no the reasearcher every time telling new new things…who will know 100%?

GOVINTHARAJ November 6, 2013 at 8:18 pm

naan eluthum kathei KADAVUL

MARUDHU PRAVIN T (maruthu103@gmail.com) December 25, 2015 at 8:31 pm

naam thannambikkaiyai elanthu vaalvil erukkum poluthu namakku oruvar uthavi seithal avarthaan kadavul , pirar kastam thaangamal naame munvanthu uthavi seiyumpoluthu avarukku naam kadavul eppadi nammai sutri eraivan erukkum poluthu naam en eraivan ellai entru solla vendum , pirar seiyum thavaril erunthu naam paadam katru kola vendum, athai viduthu ella thavaraiyum naan seithu paarthalthan nampuven entru sollalaama , naam ennilayil ernthalum thannilai marathal koodathu , nammudaya thannambikkai oru pothum thortu pogave koodathu athu thaan vaalkaiyai eduthu sellum miga periya pokkisam ( naam vaalvil seiyum miga periya saathanai pirarai vethanai seiyamal eruthale NABIKAL NAYAGAM) naan eluthi eruppathu sariya thavara entru kooda theriyavillai eni unkal kaiyil

sivakumar February 22, 2020 at 4:40 pm

வணக்கம் ஐயா!
நான், கடவுளை காண்பதற்காக சத்யலோகம் சென்ற என் பயண அனுபவத்தை, ஒரு கட்டுரை
வடிவில் எழுதியிருக்கிறேன். இதை நீங்கள் ஒரு முறையேனும் படிக்க வேண்டுகிறேன்!
நன்றி ஐயா!
http://www.eppoluthu.blogspot.in

Comments on this entry are closed.

Previous post:

Next post: