ஒட்டகங்களை இவர்கள் பார்க்கவில்லையா, அவை எவ்வாறு படைக்கப்பட்டுள்ளன என்று! -அல் குர்ஆன். 88:17.
( Desert Camels Inspire a new cooling Technology)
– எஸ்.ஹலரத் அலி, திருச்சி,7.(Mob: +91 9965361068)
அல்லாஹ்வின் வல்லமையையும் ஆற்றல்களையும், அவனது படைப்பினங்களை ஆய்வு செய்வதன் மூலம் அறிந்து கொள்ளச் சொல்கிறான். உதாரணமாக,
வானத்தைப் பார்க்கவில்லையா, அது எவ்வாறு படைக்கப்பட்டுள்ளன என்று! மேலும் மலைகளைப் பார்க்கவில்லையா, அது எவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது என்று! (அல் குர்ஆன்.88:18,19) படைப்பினங்களை ஆராய்வதன் மூலம் படைத்த ஓரிறைவனை அறிந்து கொள்ளலாம். மேற்சொன்ன வசனத்தின் ஆரம்பமாகவே, பாலைவனப் பிராணியான ஒட்டகத்தை அல்லாஹ் ஆராயச் சொல்கிறான். கடும் வெப்பத்திற்கும், கடும் குளிருக்கும்,கொடும் பாலைவனப் புயற் காற்றிற்கும் தக்கவாறு அதன் உடல் அமைப்பை அமைத்திருப்பதை பார்க்கச் சொல்கிறான்.
இன்றைய நவீன அறிவியல் ஆய்வாளர்கள் ஒட்டகத்தை ஆய்வு செய்து, அதன் தொழிற்நுட்பத்தின் மூலம் மனிதகுல மேம்பாட்டிற்கான எளிய குளிர்சாதன அமைப்பை கண்டுபிடித்துள்ளார்கள். அமெரிக்காவின் மாஸாஸூட் இன்ஸ்டிட்யூட் டெக்னோலஜி (MIT) ஆய்வுக்கழக அறிஞர்கள், ஒட்டகம் எவ்வாறு கடும் வெப்பத்தை தாங்கிக் கொண்டு தன் உடல் வெப்பநிலையை சீராக வைத்துக் கொள்கிறது என்பதை ஆய்வு செய்தார்கள்.
ஒட்டகத்தின் மேற்புறத் தோலும் அதிலுள்ள உரோமமும், வெளி வெப்பத்தை தோலுக்கு அடியில் கடத்தாமல் பாதுகாக்கிறது. அதேசமயம் குழாய் வடிவ உரோமத்திலுள்ள மிகச்சிறிய துளைகளின் மூலம் சிறிதளவு வியர்வையை வெளியேற்றி, உடல் வெப்பத்தை ஒரே சீராக, குளுமையாக வைத்திருக்கிறது.. வியர்வையை அதிகம் வெளியேற்றாமல் இருப்பதன் மூலம் உடல் நீர்ச்சத்து சேமிக்கப்படுகிறது. ஒட்டக உரோமம் வெப்பத் தடுப்பு கவசமாகவும், (Insulations and Evoporation) அதேசமயம் உடல் வியர்வையை சிறிது ஆவியாக்கி ஒரு குளிர்சாதனப் கருவி போன்று வேலை செய்கிறது. இது குறித்து ஆய்வுக் கட்டுரை கடந்த மாதம் வெளியானது (November 11, 2020, the Journal JOULE)
சஹாரா பாலைவனத்தில் வசிக்கும் நாடோடிகள் ஒட்டக உரோமத்தால் ஆனா கம்பளிச் சட்டையை அணிந்திருப்பார், அதன் காரணம்….ஒட்டக உரோமமானது குழாய் வடிவ அமைப்பில் சிறு சிறு காற்று அறைகளுடன் (Hollow air filled matrices) அமைக்கப்பட்டுள்ளது. உடலிலிருந்து வெளியேறும் வியர்வை ஈரத்தை உறுஞ்சி, சிறிது சிறிதாக வெளியேற்றும். உரோமத்திளிலுள்ள காற்றுப்பைகள் தனித்தனி அறைகளாக இருப்பதால் வியர்வை ஈரமானது உடனடியாக ஆவியாகாமல் மெதுவாக ஆவியாகி உடல் வெப்பத்தை குளுமையாக்குகிறது.
ஒட்டக மேற்தோலிலுள்ள வியர்வை சுரப்பிகளின் செயல்பாட்டையும், ஒட்டக உரோமத்தின் மெதுவாக ஆவியாகும் தொழிற்நுட்பத்தையும் இணைத்து ஒரு புதிய குளிர்சாதனத்தை கண்டுபிடித்துள்ளார்கள். இதன் சிறப்பு என்னவென்றால் இந்த குளிர்சாதனம் இயங்க மின்சாரம் தேவையில்லை. ஹைட்ரோஜெலுடன் ஏரோஜெல் (Hydrojel and Aerojel) என்னும் இரு ரசாயனப் பொருளை இணைத்து குளிர்சாதனக் கருவியை தயாரித்துள்ளார்கள்.
https://www.sciencefocus.com/news/desert-camels-inspire-a-new-cooling-technology/
MIT ஆய்வுக்குழுவின் குளிர்ப்பதன தொழிற்நுட்பமானது, அரை அங்குல தடிமனான இரண்டு அடுக்கு கொண்டது. ஒட்டகத்தின் வியர்வைச் சுரப்பிகள் பங்கு வகிக்கும் கீழ் அடுக்கு செய்யும் பணியை ஒரு ஹைட்ரோஜெல் செய்கிறது. இதில் 97% நீர் இருக்கும். இதன் மேற்புற அடுக்கில் நுண்துகள் சிலிக்கா சார்ந்த ஏரோஜெல் உள்ளது. ஹைட்ரோஜெல் வெப்பமடையும் போது, அதிலுள்ள நீர் ஆவியாகி,பொருளின் வெப்பநிலையை குறைக்கிறது. அதே நேரத்தில் மேலேயுள்ள ஏரோஜெல்லானது நீராவி கடந்து செல்ல அனுமதிக்கிறது. ஆனால் சுற்றுப்புறத்திலிருந்து வரும் வெளிப்புற வெப்பத்தை தடுத்து விடுகிறது.
குளிரூட்டி (Air conditioner and Refrigerator) மற்றும் குளிர்சாதனப் பெட்டிகளின் அடிப்படையிலான குளிரூட்டும் அமைப்புகள் போலல்லாமல், ஹைட்ரோஜெல்- ஏரோஜெல் தொழில்நுட்பம் எந்த மின்சாரத்தையும் பயன்படுத்துவதில்லை, இது மின்சாரம் கிடைக்காத கோடிக்கணக்கான மக்களுக்கு ஒட்டகத்தின் மாடலில் உருவான குளிர் சாதனக் கருவிகள் பெரிதும் பயன் தருவதாகும். உணவுப்பொருள்கள், உயிர் காக்கும் மருந்துப் பொருட்களை மின்சாரமின்றி நாட்கணக்கில் குளிர்பதனம் செய்வதற்கு மிகவும் ஏற்றது.
Camel-Fur-Inspired Technology Harnesses Evaporation to Keep Products Cool Without Power
ஒட்டகங்களை உங்களுக்காக அல்லாஹ்வின் புனிதச் சின்னங்களுள் ஒன்றாக நாம் ஆக்கியுள்ளோம். அவற்றுள் உங்களுக்கு பெரும் நன்மை இருக்கின்றது, – அல் குர்ஆன்.22;36.