“எரியும் நரகம்”- ஓர் அறிவியல் பார்வை

Post image for “எரியும் நரகம்”- ஓர் அறிவியல் பார்வை

in அறிவியல்

எஸ். ஹலரத் அலி. திருச்சி-7.

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

எல்லாம் வல்ல அல்லாஹ் இம்மாபெரும் பிரபஞ்ச உலகைப்படைத்து, பகுத்தறிவுள்ள மனிதனையும் படைத்தான். தான் படைத்த மனிதனுக்கு இவ்வுலகை ஆளும் வல்லமையையும் ஆற்றலையும் கொடுத்தான். இவ்வுலகில் அந்த ஒரு இறைவனை மட்டுமே வணங்கி, அவனுடைய தூதர் காட்டிய நேர் வழியில் நடந்து சென்றவர்களுக்கு சுவனத்தையும், படைத்தவனை மறந்து படைபினங்களை கடவுளாக வணங்கி, அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்து வாழ்ந்தவர்களுக்கு கொடும் நரகத்தையும் தயார் செய்து வைத்துள்ளான்.

நல்லடியார்களுக்கு பரிசளிக்கப்படும் சுவனத்தின் அந்தஸ்தை எவருமே கற்பனை செய்ய முடியாதளவிற்கு மிகப் பிரமாண்டமாக இருக்கும் என்று அல்லாஹ் கூறுகின்றான்.

அவர்கள் செய்த நற்செயல்களுக்குக் கூலியாக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண் குளிர்ச்சியை (மறுமையின் பேரின்பத்தை) எந்த ஒரு ஆன்மாவும் அறிந்து கொள்ள முடியாது.  அல் குர்ஆன். 32;17.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நான் என் நல்லடியார்களுக்காக எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் தோன்றிராத இன்பங்களை (சொர்க்கத்தில்) தயார் படுத்தி வைத்துள்ளேன்” என்று கூறினான்.

(சொர்க்கத்தின் இன்பங்கள் குறித்து) உங்களுக்கு அல்லாஹ் அறிவித்திருப்பது சொற்பமே! என்று கூறி நபி(ஸல்) அவர்கள் 32:17 குர்ஆன் வசனத்தை ஓதினார்கள்.  அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி). நூல்: முஸ்லிம். 5438, 5439. 5440.

சொர்க்கமானது மனிதக்கற்பனைக்கும் அப்பாற்பட்ட மேலான இடம் என்று கூறும் இஸ்லாம்
நரகத்தைப் பற்றிய செய்திகளை மிகத் தெள்ளத் தெளிவாக விவரிக்கிறது. நரகத்தில் கொடுக்கப்படும் தண்டனை வகைகள் பற்றி மிக விளக்கமாக குர்ஆன், ஹதீஸ்களில் கூறப்படுகிறது. அதற்குக் காரணம் நரகம் என்ற ஒன்று உள்ளது என்பதை, மனிதன் உணர்ந்து, அதன் வேதனைக்குப் பயந்து தவறு செய்யாமல் இருப்பதற்காகவே.

நரகத்தின் தண்டனைகளும் நமது அறிவுக்குப் பொருத்தமாகவே விளக்கப்படுகிறது. குறிப்பாக நரக நெருப்பை அல்லாஹ் உலக நெருப்போடு ஒப்பிட்டுக் கூறுகிறான். ஆனால் நரக நெருப்பானது உலக நெருப்பைவிட எழுபது மடங்கு அதிக வெப்பமுடையது.

நபி (ஸல்) அவர்கள், “உங்கள் (உலக) நெருப்பு, நரக நெருப்பின் எழுபது பாகங்களிலிருந்து ஒரு பாகமேயாகும்” என்று கூறினார்கள். உடனே, “ இறைத்தூதர் அவர்களே! இந்த உலக நெருப்பு (பாவம் செய்தவர்களை எரித்து) வேதனைப் படுத்த போதுமானதாயிற்றே!” என்று கேட்கப்பட்டது. அதற்க்கு நபி (ஸல்) அவர்கள், “(அப்படியல்ல) உலக நெருப்பை விட நரக நெருப்பு அறுபத்தொன்பது பாகங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் ஒவ்வொரு பாகமும் உலக நெருப்பின் வெப்பத்திற்கு சமமானதாகும்” என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்; புஹாரி. 3265.

அல்லாஹ்வின் தூதர் அவர்களிடம் நபித்தோழர்கள் கேட்டபடி, இவ்வுலகில் உள்ள நெருப்பே மனிதனை சுட்டுப்பொசுக்க போதுமானதாகும், இப்படி இருக்க அறுபத்தொன்பது மடங்கு அதிகமுள்ள கொடும் நெருப்பின் தேவை என்ன? உலகில் வாழும் மனிதர்களின் சராசரி உயரம் 5 அடி, எடை 80 கிலோ இருக்கிறார்கள். இந்தளவுள்ள மனிதர்களை நெருப்பில் இட்டு வேதனை செய்ய உலக நெருப்பு போதும். ஆனால் மறுமையில் எழுப்பப்பட்டு இறுதித் தீர்ப்புக்குப் பின் நரகம் செல்லும் நரகவாசிகளின் உடம்பு, பூமியில் இருந்தது போல் சராசரி ஐந்தடி உயரம் எண்பது கிலோ எடையில் இருக்காது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(நரகத்தில்)இறை மறுப்பாளனின் “கடவாய்ப்பல்’ அல்லது “கோரைப்பல்’ உஹுத் மலையைப்
போன்றிருக்கும். அவனது தோலின் பருமன் மூன்று நாள் நடைப் பயணத் தொலைவுடையதாக இருக்கும்.     இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்: முஸ்லிம். 5479.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நரகத்தில் இறை மறுப்பாளனின் இரு தோள்களுக்கிடையே உள்ள தூரம், துரிதமாக வாகனத்தில் பயணிப்பவர் மூன்று நாட்கள் கடக்கும் தூரமாகும்.

இதை அபூஹுரைரரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்: முஸ்லிம். 5480.

நரகவாசிகளின் உடல், கொடும் வெப்ப வேதனையை நன்கு ருசிப்பதற்க்காக அல்லாஹ்வால் பிரமாண்ட மாமிச மலையாக மாற்றப்பட்டே நரகில் தள்ளப்படுவார்கள். நரகில் உள்ள மாமிசமலை மனிதர்களுக்கு பூமியில் உள்ள வெப்பம் போதுமானதாக இருக்க முடியாது. காரணம் இவர்களின் தோலின் கனமே மூன்று நாள் பயண தொலைவு இருப்பதால் பூமியில் இருக்கும் நெருப்பை விட எழுபது மடங்கு கடும் சூடு கொண்ட நெருப்பு தேவையாக உள்ளது.

மேலும் சொர்க்க, நரகவாசிகளுக்கு மீண்டும் ஒரு மரணம் இல்லை. ஆகவே நரகவாசிகள் கொடும் நெருப்பால் சுடப்பட்டு பஸ்பமாக ஆகிவிடக் கூடாது என்பதற்காகவே மிக கனமான தோல் போர்த்தப்பட்டு, இறப்பில்லா நீடித்த வேதனை அனுபவித்துக்கொண்டே இருப்பார்கள். அவர்களின் தோல்கள் கருகி வலியுணர்ச்சி குறையும்போது மீண்டும் புதுத் தோல் மாற்றப்பட்டு வலி வேதனையை தொடர்ந்து உணர்ந்து கதறுவார்கள். மனிதன் தோலில்தான் வலி உணர்வு நரம்புகள் அமைந்துள்ளது. தோலில் உள்ள இந்த நரம்புகள் எரிந்து விட்டாலோ அல்லது அழுகி விட்டாலோ நம்மால் வலியை உணர முடியாது

இந்த உணர் நரம்புகளே வலியை மூளைக்கு எடுத்துச் சென்று நமக்கு வேதனையை உணர்த்துகிறது. உதாரணமாக, தொழு நோயாளிகள் கையில் உள்ள உணர் நரம்புகள் அழுகி சேதம் அடைந்துவிடுவதால் அவர்களால் சூட்டை உணரமுடியாது. ஆனாலும் சூடு பட்ட இடம் கொப்புளமாகிவிடும். இதுபோன்றே நரகவாசிகள் தோல் பொசுங்கி உணர்வு நரம்பு சேதமடையும்போது அல்லாஹ் புது தோலை அங்கு உண்டாக்கி. வேதனையை மீண்டும் தொடரச் செய்கின்றான். இதை அல்லாஹ் குர் ஆனில் கூறுகின்றான்.

எவர்கள் நம் சான்றுகளை மறுக்கின்றார்களோ அவர்களை நிச்சயம் நாம் நரகில் வீசி எறிவோம்! அவர்களுடைய உடலின் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் வேறு தோல்களை அவர்களுக்கு மாற்றிக்கொண்டே இருப்போம்; வேதனையை அவர்கள் நன்கு சுவைத்துக்கொண்டேயிருப்பதற்காக! திண்ணமாக அல்லாஹ் மிகையான ஆற்றல் உள்ளவனாகவும் நன்கு அறிந்தவனுமாகவும் இருக்கின்றான். –அல் குர்ஆன். 4:56.

தோலில் உள்ள உணர் நரம்புகள் முற்றிலுமாக நெருப்பில் வெந்துவிட்டால் இதை மூன்றாம் நிலை தீக்காயம் என்று மருத்துவ உலகம் கூறுகிறது. இந்நிலையில் வலி உணர்ச்சி முற்றிலும் இருக்காது.

Third-degree burns (full thickness burns) go through the dermis and affect deeper tissues. They result in white or blackened, charred skin that may be numb. The degree of pain is not related to the severity of the burn, as the most serious burns can be painless.
http://www.webmd.com/pain-management/guide/pain-caused-by-burns

நரக நெருப்பின் உக்கிரம் எந்தளவு இருக்கும் என்பதை அல்லாஹ் இவ்வசனத்தில் கூறுகிறான்.

நரக நெருப்புஅவர்களுடைய முகங்களைக் கரிக்கும்; இன்னும் அதில் அவர்கள் உதடு சுருண்டு (முகம் விகாரமானவர்களாக) இருப்பார்கள். – அல் குர்ஆன். 23:104.

இவ்வுலக நெருப்பால் பாதிக்கப்பட்டவருடைய உதடு சுருண்டு முகம் இவ்வளவு விகாரமாக இருக்குமென்றால் மறுமை நெருப்பின் கொடுரம்!. . . . அல்லாஹ் நம்மை காப்பாற்றவேண்டும்!

மற்றொரு வசனத்தில் நரகவாசிகளை எழுபது முழ சங்கிலியால் கட்டப்படுவார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். ஆறடி மனிதனுக்கு எழுபது முழச் சங்கிலி தேவைப்படாது. பிரமாண்ட மலை உருவில் மாற்றப்படும் நரகவாசிகளுக்கே அந்த எழுபது முழம் தேவைபடுகிறது.

பின் அவனை நரகத்தில் தள்ளுங்கள். பின்னர், எழுபது முழ நீளமுள்ள சங்கிலியால் அவனைக் கட்டுங்கள். (என்று உத்தரவு இடப்படும்). நிச்சயமாக அவன் மகத்துவமிக்க அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்ளாதிருந்தான். –அல் குர்ஆன். 69:31-33.

நாம் உலகில் பலவித எரிபொருள்களை நம் தேவைக்கு தகுந்தார்ப்போல் பயன்படுத்துகிறோம். அடுப்பெரிக்க விறகு, மண்ணெண்ணெய், மற்றும் வாகனங்களுக்கு டீசல், பெட்ரோல் பயன்படுத்துகிறோம். ஆனால் மறுமையில் நரகத்தை எரியச் செய்வதற்கு இரண்டு விதமான எரிபொருளை, பயன்படுத்துவதாக அல்லாஹ் கூறுகிறான். அவை மனிதர்கள் மற்றும் கற்கள்.

மனிதர்களையும் கற்களையும் எரிபொருளாகக் கொண்ட நரக நெருப்பை அஞ்சிக்கொள்ளுங்கள். நிராகரிப்பவர்களுக்காகவே அது சித்தப்படுத்தப்பட்டுள்ளது.  -அல் குர்ஆன். 2:24.

கல்லும் மனிதர்களும் எரிபொருளாக முடியுமா? அறிவியல் ரீதியாக முடியும், அனைத்து பொருள்களும் பல்வேறு தனிமங்களால் ஆனவை. மனித உடலில் உள்ள கார்பன், பொட்டாசியம், கால்சியம், மாங்கனிஸ், சிலிக்கா, சோடியம் போன்ற எல்லா தனிமங்களும் (Minerals) கற்களிலும் உள்ளன. அவைகள் இருக்கும் சதவீதம் மட்டுமே மாறுபட்டு இருக்கும். எல்லாமே எரியக்கூடியவைதான்.

ஒவ்வொரு பொருளுக்கும் அது தானாக எரிவதற்கான வரம்பு வெப்ப நிலை உண்டு. (Autoignition Temperature) அந்த வெப்ப நிலை வந்துவிட்டால் தன்னில் உள்ள கார்பன் எனும் கரிமத்தை வெளியிட்டு காற்றில் உள்ள ஆக்ஜிஜனுடன் சேர்ந்து தானாகவே எரிய ஆரம்பித்து விடும். இப்பொருள் எரிவதற்கு நெருப்பு பற்றவைக்க வேண்டியதில்லை. சாதாரண பேப்பர் 218-246 C செல்சியஸ் வெப்பநிலையில் தானாக எரிய ஆரம்பிக்கும். சுடுகாட்டில் வரட்டி, விறகு வைத்து எரிக்கப்படும் பிணம் 800 C செல்சியஸ் வெப்பநிலை வந்தவுடன் தானாக எரிய ஆரம்பிக்கும்.

இன்று உலகில் உள்ள பாறைக்கற்களில் சுமார் 95% கற்கள் பூமியின் அடி ஆழத்தில் உருகி நெருப்புக் குழம்பாய் எரிமலையாய் வெடித்து வெளிவந்தவைதான். கற்கள் எரிவதும் உருகுவதும் ஆச்சரியமல்ல. இன்று நிலக்கரி என்று எரிக்கிறோமே இதுவும் பாறை இனத்தை (Sedimentary Rock) சேர்ந்த ஒன்றுதான். மனிதனின் உடலும் ஒரு சிறந்த எரிபொருளாக உள்ளது. ஒரு ஆச்சரியம் என்ன தெரியுமா?

இன்று நம்மிடையே உள்ள எரிபொருள்களில் நிலக்கரி, மண்ணெண்ணெய், டீசல், பெட்ரோல் போன்றவைகளை விட 11% கூடுதல் வெப்பத்திறனை (BTU)கொடுக்கக்கூடியது நமது உடலில் உள்ள கொழுப்பு. (“In energy terms, the average BTU of a gallon of human body fat is actually 11% higher than the BTU of a gallon of diesel gasoline) சராசரியாக ஒவ்வொரு மனிதரிடமும் உள்ள கொழுப்பில் சுமார் 7 1/2 லிட்டர் உயர்ரக எரிபொருள் உள்ளது. (BTU, of fat is 127,000 per gallon, and gasoline lags behind at only 115,500 BTU per gallon.)

நமது உடலில் உள்ள ஒரு பவுண்டு எடையுள்ள தசைகள், எரியும்போது சுமார் 1000 BTU (British Thermal Unit) வெப்ப சக்தியை கொடுக்கும். அதேசமயம் நமது உடலில் உள்ள கொழுப்புகள் உருகி எரியும்போது சுமார் 20,000 BTU. வெப்ப சக்தியை கொடுக்கின்றன. மனித உடலில் 85 % தண்ணீர் இருப்பதால் ஒரு பிணத்தின் தசைகள் முழுவதும் எரிவதற்கு 1400 F தேவைப்படுகிறது. நெருப்பு முதலில் தோல், அடுத்து தசைகளை பொசுக்கி, உடல் நீரை ஆவியாக்கி, பின்பு முற்றாக எரித்துவிடுகிறது. இதுபோல் கற்களும் எறிவதற்கு இதே அளவு வெப்பமே ( 1300 F-2400 F) எடுத்துக்கொள்கிறது.

Is It Okay if Kids Believe God Sends Nonbelievers to Hell? | Psychology Today

மறுமையில் நரகவாசிகள் உயிருடன் நெருப்பில் பொசுக்கப்பட்டு வேதனை செய்யப்படுவார்கள். அது மரணமில்லா பெரு வேதனை தொடராகும். அங்கு மாமிச மலை போன்ற மனிதனின் தோல், தசை, கொழுப்புகள் எரிபொருளாக மாறிவிடும். இவ்வுலகில் ஒரு பருத்த பிணத்தை எரித்தால் அதில் 17,000 Btu வெப்ப ஆற்றல் வெளியாகும். மாமிச மலை நரகவாசிகள் கொழுப்பு உருகி பலமடங்கு வெப்பம் உயர்ந்து, நரக எரிபொருளாக மாறுவார்கள்.

நரகத்தின் ஆழம் பற்றி நபி(ஸல்) அவர்கள் சொன்ன செய்தியைப் பார்ப்போம்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்களுடன் இருந்தோம். அப்போது, ஏதோ விழுந்த சப்தத்தை அவர்கள் கேட்டார்கள். (நாங்களும் கேட்டோம்) அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இது என்ன சப்தம் என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். நாங்கள், “அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிந்தவர்கள்” என்று சொன்னோம்.

நபி (ஸல்) அவர்கள், “ இது எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் நரகத்தில் தூக்கியெறியப்பட்ட ஒரு கல்லாகும், அது இந்த நேரம் வரை சென்றுகொண்டேயிருந்து இப்போதுதான் அதன் ஆழத்தை எட்டியது. ” என்று சொன்னார்கள். — நூல். முஸ்லிம். 5466.

இன்றும் நமது பிரபஞ்ச விண்வெளியில் கோடிக்கணக்கான பெரும் மலை போன்ற குறுங்கோள் மற்றும் விண்கற்கள் (Asteroids & Meteors) பெரும் வேகத்தில் தனது பாதையில் சுழண்டோடுகின்றன. இவைகளின் எடைக்குத் தகுந்தாற்போல் சராசரி வேகம் வினாடிக்கு 17-30 கி. மீ ஆக உள்ளது. இப்படி அசுர வேகத்தில் பறக்கும் மலைப்பாறைகள் எங்கு எப்போது தோன்றியது என்பதற்கு இன்னும் தெளிவான விடை இல்லை. இவ்விண்கற்கள் பூமியின் வளி மண்டலத்தில் நுழையும்போது இதன் வேகம் 11 km/sec (25,000 mph), to 72 km/sec (160,000 mph!) இவை தரையில் மோதும்போது பயங்கர வெடி சப்தம் (Sonic boom) ஏற்படும்.

கடந்த 15-2-2013 ல் ரஷ்யாவில் செல்யாபின்ஸ்க் நகரில் வீழ்ந்த 20 மீட்டர் விட்டமுடைய விண்கல் மணிக்கு சுமார் 69000 கி. மீ. வேகத்தில் பெறும் சப்தத்துடன் வானில் வெடித்து சிதறியது அனைவரும் அறிந்ததே. விண்ணிலிருந்து வரும் கற்களின் வேகம் மணிக்கு சுமார் 25,000-160,000 மைல்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இந்த விண் கற்கள் எப்போது புறப்பட்டன என்று எவருக்கும் தெரியாது.

நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்தியில், நரகத்தின் பிரமாண்ட ஆழத்தைப் அறிவியல் ரீதியாக அறிய முடிகிறது. ரஷ்யாவில் நம் கண்முன்னே வீழ்ந்த விண்கற்களின் வேகம் சுமார் மணிக்கு 69000 கி. மீ. . உதாரணமாக, ஒரு கல் இந்த வேகத்தில் தொடர்ந்து 70 வருடம் பெரும் பள்ளத்தை நோக்கி பயணித்தால் அது சென்றடையும் ஆழம் 42,310,800,000. கி. மீ. நாம் கணக்குப்போட்டுப் பார்க்கும் இவ்வுதாரணத்திலேயே நரகத்தின் அதல பாதாளம் கற்பனைக்கும் அப்பால் அச்சமூட்டுவதாக உள்ளது. நரகத்தின் உண்மையான ஆழம் அல்லாஹ் மட்டுமே அறிந்தவன்.

உயிர் வாழ்பவர்களுக்கு உணவு வேண்டுமல்லவா? ஆம்! நரக நெருப்பில் உழலும் பாவிகளுக்கும் அல்லாஹ் உணவளிக்கிறான். ஆனால் அந்த உணவு அவர்களுக்கு பலனளிக்காமல் வேதனையை அதிகப்படுத்தவே செய்யும்.

நரகத்திலிருக்கும் ஜக்கூம் என்னும் கள்ளி மரம். . . நிச்சயமாக, அவர்கள் அதிலிருந்தே புசிப்பார்கள்; அதிலிருந்தே தங்கள் வயிற்றை நிரப்பிக் கொள்வார்கள். –அல் குர்ஆன். 37:62-66.
நிச்சயமாக, ஜக்கூம் (கள்ளி) மரம் அதுவே பாவிகளுக்குரிய உணவு. -அல் குர்ஆன். 44;43, 44.
ஜக்கூம் (என்னும் கள்ளி) மரத்திலிருந்தே நீங்கள் புசிப்பவர்கள். -அல் குர்ஆன். 56:52.

இவ்வுலகில் கடும் வெப்பமுள்ள பாலை நிலங்களில் வளரும் கள்ளி மரமே, கொடும் நெருப்புள்ள நரகிலும் வளர்வதாக அல்லாஹ் கூறுகிறான். இந்த விஷக்கள்ளியையே நரகவாசிகள் உணவாக புசிப்பார்களாம். ஆனாலும் இந்த உணவு அவர்கள் உடலை கொழுக்க வைக்காதாம். அல்லாஹ் கூறுகின்றான்.

அவர்களுக்கு விஷச் செடிகளைத் தவிர, வேறு உணவில்லை. அது அவர்களைக் கொழ(த்துச் செழி)க்கவும் வைக்காது அன்றியும் பசியையும் தணிக்காது. –அல் குர்ஆன்-88:6, 7.

நரகவாசிகள் புசிக்கும் விஷமுள்ள கள்ளிச்செடி அவர்கள் உடலை கொழுக்க வைக்காது என்று அல்லாஹ் கூறுகிறான். இதுபோல் இங்கு உலகில் உள்ள கள்ளி செடிகளுக்கு உடலை கொழுக்க வைக்காமல் உடலை மெலிய வைக்கும் ஆற்றல் உள்ளதா? இன்றைய அறிவியல் கூறுவதைப் பார்ப்போம். கள்ளிச் செடிகளில் ஒரு வகையான முள்ளுள்ள சப்பாத்தி கள்ளியில் (Prickly pear cactus), பெக்டின் (Pectin-Soluble fiber) என்னும் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இது உடலிலுள்ள கொலஸ்டரோல் கொழுப்பை கரைக்கும் தன்மை உடையது.

. ” While pectin is present in many other plant foods, certain characteristics of prickly pear pectin make it particularly potent in reducing cholesterol levels and up to three times as effective as citrus pectin. Though the precise mechanism is not known, one possible explanation for prickly pear’s cholesterol-lowering effects is its ability to bind to bile acids, which are made of cholesterol, and remove them from the body. Prickly pear is also thought to prevent cholesterol absorption. Yet another possibility is that the cactus promotes production of short-chain fatty acids, which are beneficial in that they are absorbed directly into the liver instead of spending time circulating in your bloodstream. http://www.livestrong.com/article/518899-cactus-and-cholesterol/

Caralluma fimbriata என்னும் மற்றொரு வகை கள்ளிச் செடியில் உள்ள Pregnane glycosides என்னும் இரசாயனம், கொழுப்பை உற்பத்தி செய்யும் Citrate lyase மற்றும் Malonyl Coenzyme A, என்ஸைம் நொதிகளை தடுத்து நிறுத்தி விடுகிறது. ஆகவே தற்போது உடல் எடையை (Fat loss & Obesity )குறைப்பதற்கு கள்ளிச் செடியில் இருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகள் விற்பனையில் உள்ளன.

On the fat front, Caralluma fimbriata contains pregnane glycosides, a phytochemical that blocks the enzyme citrate lyase. When this enzyme’s activity is stopped, your body cannot produce fat.

Caralluma fimbriata also blocks Malonyl Coenzyme A, another enzyme involved in fat production. By impeding the activity of both of these enzymes, Caralluma fimbriata forces your body to start burning its own fat reserves, thereby promoting fat loss.
http://www.naturalhealthsherpa.com/caralluma-fimbriata-side-effects-extract-plant-weight-loss/5289#sthash.l92FbDkx.dpuf

நரகவாசிகள் புசிக்கும் விஷச் செடி உணவு அவர்களை கொழுக்க வைக்காததின் காரணத்தை இன்றைய அறிவியல் ஆய்வுகள் தெளிவாக்கி விட்டன. பேரறிவாளனும் அனைத்து ஞானமுள்ளவனானுமாகிய அல்லாஹ் விஷக்கள்ளி உணவை நரகவாசிகளுக்கு கொடுப்பதன் காரணம் அறிந்து ஆச்சரியமடைகின்றோம். அல்ஹம்துலில்லாஹ்!

{ 1 comment… read it below or add one }

Yaseen October 1, 2015 at 4:07 pm

கொடிய நரக நெருப்பிலிருந்து தப்பிக்க அல்லாஹ்வை மட்டுமே வணங்கி, அல்லாஹ்வை மட்டுமே அஞ்சி, அல்லாஹ்வின் நெருக்கத்தை பெற்று, அவன் நம்மை பொருந்திக்கொள்ளும் அடியானாக நாம் இருக்க, வல்லோன் அல்லாஹ் அருள் புரிவானாக!

Reply

Leave a Comment

Previous post:

Next post: