இறந்தவருக்காக!

in படிப்பினை

ஜனாஸாத் தொழுகை யார் ஜனாஸாத் தொழுகையில் பங்கேற்கின்றாரோ அவருக்கு
ஒரு கீராத் நன்மையுண்டு. யார் அடக்கம் செய்யும் வரை கலந்துக் கொள்கின்றாரோ அவருக்கு
இரண்டு கீராத் நன்மையுண்டு, என்று நபி (ஸல்) கூறினார்கள். அப்போது கீராத் என்றால்
என்ன? என்று வினவப்பட்டது. அதற்கவர்கள், இரண்டு பெரிய மலைகளைப் போன்ற அளவு (நன்மை)
என்றார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) ஆதாரம்: புகாரி 1325

இவ்வளவு அதிக நன்மைகளைப் பெற்றுத் தரும் இந்த ஜனாஸாத் தொழுகை
விஷயத்தில் நம்மில் பலரும் அலட்சியமாக இருப்பதைக் காணமுடிகின்றது. ஜனாஸாவைத்
தூக்கிக் கொண்டு வரும்போது உடன் வருபவர்கள் ஜனாஸாத் தொழுகைக்காக தொழுமிடத்தில்
இறக்கி வைத்துவிட்டு, பலரும் ஓரமாக ஒதுங்கி நின்றுக் கொள்வதைப் பரவலாகப் பல
ஊர்களிலும் காண்கிறோம். இறந்து போய் இங்கு கொண்டு வரப்பட்டுள்ள மைய்யித் அவர்
தெரிந்தவர் தெரியாதவர் யாராக இருப்பினும் அவருக்காகப் பிரார்த்திப்பதும், ஜனாஸாத்
தொழுகை என்னும் பிரார்த்தனையில் பங்கு கொள்வதும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையல்லவா?

நபி(ஸல்) அவர்கள் ஜனாஸாவுக்கு தொழுவிக்கும் போது பின்வருமாறு ஓதுபவர்களாக இருந்தனர்.

Dua in Arabic 

அல்லாஹும்மக்ஃபிர் லிஹய்யினா வமய்யிதினா வஷாஹிதினா

வகாயிபினா வஸகிரின, வகபீரினா வதகரினா வவுன்ஸானா

அல்லாஹும்ம மன் அஹ்யைதஹஹு மின்னா ஃபஅஹிஹி

அலல் இஸ்லாம் வமன் தவஃப்ஃபைதவு

மின்னா ஃபதவஃபவு அலல் ஈமான் அல்லாஹும்ம

லாதஹரிம்னா அஜ்ரவு வலாதுளில்லினா பஅதஹு

பொருள்:

யா அல்லாஹ்! எங்களில் உயிரோடிருப்பவர்களையும் மரணத்து விட்டவர்களையும் இங்கே
வந்திருப்பவர்களையும், வராமலிப்பவர்களையும், எங்களில் சிறுவர்களையும்,பெரியவர்களையும்
எங்களில் ஆண்களையும், பெண்களையும் மன்னித்துவிடுவாயாக! இறைவா!
எங்களில் உயிரோடு இருப்பவர்களை இஸ்லாமிய அடிப்படையில் வாழச் செய்வாயாக! எங்களில்
மரணித்துவிடுபவர்களை ஈமானுடனே மரணிக்க செய்வாயாக! இறைவா! இந்த மய்யித்தின்
நற்செயல்களுக்குரிய கூலியை எங்களுக்கு தடுத்துவிடாதே! இவருக்கு பிறகு எங்களை
வழிதவறச் செய்து விடாதே! அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: அபூதாவூத், திர்மிதி

Dua in Arabic

அல்லாஹும்மபி(F)ர் லஹு வர்ஹம்ஹு வஆபி(F)ஹி வபு(F) அன்ஹு
வஅக்ரிம் நுஸுலஹு வவஸ்ஸிஃ முத்கலஹு வக்ஸில்ஹு பி(B)ல்மாயி வஸ்ஸல்ஜி வல்ப(B)ரதி
வநக்கிஹி மினல் கதாயா கமா நக்கைத்தஸ் ஸவ்ப(B)ல் அப்(B)யள மினத் தனஸி வ அப்(B)தில்ஹு
தாரன் கைரன் மின் தாரிஹி வஅஹ்லன் கைரன் மின் அஹ்ஹி வஸவ்ஜன் கைரன் மின் ஸவ்ஜிஹி வ
அத்ஹில்ஹுல் ஜன்ன(த்)த வஅயித்ஹு மின் அதாபி(B)ல் கப்(B)ரி

இதன் பொருள் :

இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள் புரிவாயாக! இவரது தவறுகளை
அலட்சியப்படுத்துவாயாக! இவர் தங்குமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக! இவர்
நுழையும் இடத்தை விசாலமாக்குவாயாக! இவரைத் தண்ணீராலும், பனிக் கட்டியாலும்,
ஆலங்கட்டியாலும் கழுவுவாயாக! வெண்மையான ஆடையை அழுக்கிருந்து சுத்தம் செய்வதைப்
போல் இவரை குற்றத்திருந்து சுத்தம் செய்வாயாக! இங்கிருக்கும் வீட்டை விடச் சிறந்த
வீட்டையும், இங்கிருக்கும் குடும்பத்தை விடச் சிறந்த குடும்பத்தையும், இங்கிருந்த
வாழ்க்கைத் துணையை விட சிறந்த துணையையும் இவருக்கு வழங்குவாயாக! இவரை கப்ரின்
வேதனையிருந்து காப்பாயாக!

மேற்கண்ட துவாக்கள் அல்லாமல் வேறுபல துவாக்களை ஜனாஸாத் தொழுகையில்
பிரார்த்திக்க நபி(ஸல்) அவர்கள் கற்றுதந்துள்ளார்கள்.

இனியும் ஒதுங்கி நிற்காமல் ஒரு முஸ்லிம் மரணித்தவுடன்
நூறுபேர் அளவுக்கு எட்டக் கூடிய முஸ்லிம்கள் தொழுகை நடத்தி அவருக்காகப் பரிந்துரை
செய்தால், அவர்களின் பரிந்துரை ஏற்கப்படாமல் இருப்பதில்லை. என்று நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள். அறிவப்பவர்: ஆயிஷா (ரலி) ஆதாரம்: திர்மிதி

இனியும் ஒதுங்கி நிற்காமல் இறந்தவருக்காக ஜனாஸா தொழுகையில்
கலந்துகொண்டு நாமும் ஒரு நாள் இப்படி ஜனாஸாவாக இங்கே கொண்டு வரப்படுவோம் என்பதை
உணர்ந்து கொள்வோமாக!

Comments on this entry are closed.

Previous post:

Next post: