images/index_r1_c1.jpg
 

 

 

 ஏகத்துவம் மாத இதழின் "ஜகாத் ஓர் ஆய்வு"

 குர்ஆன், ஹதீஸ் அடிப்படையிலானாதா?
அபூ அப்தில்லாஹ்

 

புரோகித தந்திரம்

ஏகத்துவம், செப்டம்பர் 2005 இதழை "ஜகாத் சிறப்பிதழ்" என்ற பெயரில் வெளியிட்டுள்ளனர். அதில் "ஜகாத் ஓர் ஆய்வு" என்ற தலைப்பில் அவர்கள் மனம் போன போக்கில் ஆய்வு செய்துள்ளனர். அவர்களின் ஆய்வின் லட்சணத்தை அலசுவதற்கு முன்னர் அவர்களின் புரோகிதத் தந்திரத்தைக் கவனத்தில் கொள்வது இந்த அலசுலுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும் என்பதால் அதையே முதலில் எடுத்துக் கொள்வோம்.

இந்த ஜகாத் பற்றிய ஆய்வில் 17, 18.08.05 ஆகிய இரு நாட்கள் சென்னையில் மதப் புரோகிதர்கள் இரு நாட்கள் சென்னையில் மதப் புரோகிதர்கள் ஏழு பேர் கலந்து கொண்டு பெரும் கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பிறகு அனைவரும் ஒத்த கருத்துக்கு வந்தனர் என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும் மேற்படி கருத்தரங்கில் பங்கு கொள்ளாத மற்ற அறிஞர்களுடனும் கலந்துரையாடல் நடத்தி சந்தேகத்திற்கு இடமில்லாத ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்று அந்த ஆய்வரங்கில் முடிவு செய்தார்களாம்.

அதன்படி 29.08.05 அன்று கடையநல்லூரில் 13 மவ்லவி மதப்புரோகிதர்கள் கலந்து கொண்டு ஆய்வு செய்து எடுத்த முடிவை ஏகத்துவத்தில் வெளியிட்டுள்ளார்களாம். இந்தப் பீடிகை ஏன்? பல மவ்லவிகள் அதிலும் அவர்களின் அமைப்பிலுள்ள அனைத்து மவ்லவி புரோகிதர்களும் கலந்து கொண்டு ஆய்வு செய்து, ஏகோபித்த ஒரு முடிவுக்கு வந்துள்ளதாக அவர்களின் ஆதரவாளர்களைக் குருட்டுத்தனமாக நம்ப வைப்பதற்குத்தான் இந்தப்பீடிகை.

இது அவர்களது வாடிக்கை

இந்தப் புரோகிதத் தந்திரம் இந்த ஆய்வில் மட்டுமல்ல; அவர்கள் மேற்கொண்ட அனைத்து ஆய்வுகளிலும் இந்தத் தந்திரத்தைக் கையாண்டுள்ளதைக் காண முடியும். உதாரணமாக 1997 நவம்பர் அல்ஜன்னத் இதழ் பக்கம் 3ல், சர்வதேச தலைப்பிறையை ஒப்புக் கொண்டு அதன்படி செயல்படலாம் என்று ஆய்வு செய்து ஏகோபித்த முடிவுக்கு வந்து அறிவிப்பதாக எழுதி இருந்தனர். அந்த ஆய்வில் கலந்து கொண்ட மதப்புரோகிதாகள் 11 பேர்களின் பெயர்களும், மற்றும் பலர் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

அதன்பின்னர் அல்முபீன்,நவ,டிச.1999 இதழில் அந்தர் பல்டி அடித்து சர்வதேச தலைப்பிறையிலிருந்து, தத்தம் பகுதி தனித்தனித் தலைப்பிறை என தலைகுப்புற கவிழ்ந்து ஆய்வு செய்து ஏகோபித்த முடிவுக்கு வந்ததாக எழுதியதிலும் மதப் புரோகிதர் 10 பேர்களின் பெயர்கள் மற்றும் பலர், 141 அரபி கிதாபுகள், 11 ஆங்கில நூல்கள் இவற்றை 15 நாட்கள் ஆய்வு செய்து ஏகோபித்த முடிவுக்கு வந்ததாக அறிவித்தனர். ஆதாவாளர்களை மயக்கினர்.

1997ல், அல் ஜன்னத்தில் எடுத்து எழுதிய ஏகோபித்த முடிவுக்கு மாறாக 1999ல் அந்தர் பல்டி அடிக்கக் காரணம், வாகனக் கூட்டத்தார் பற்றிய ஹதீஸில் முதலில் நபிதோழர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டதாகக் தவறாக விளங்கி இருந்ததாகவும், பின்னர் அந்தக் கட்டளை நபிதோழருக்கு அல்ல; வாகனப் கூட்டத்தாருக்கே என சரியாக விளங்கிக் கொண்டதாகவும், 'ஷஹித' என்ற பதத்திற்கு 'சாட்சி சொன்னார்கள்' என்பதை மறைத்து, கூறினார்கள் என்று எழுதி சரடு விட்டிருந்தார்கள். அந்தக் கட்டளை வாகனக் கூட்டதாருக்கென்றால் அதனால் ஏற்படும் இந்தப் பத்து சந்தேகங்களுக்கெல்லாம் அதனால் ஏற்படும் இந்தப் பத்து சந்தேகங்களுக்கெல்லாம் விளக்கம் தாருங்கள் என்று கேட்டிருந்தோம். அதனால் ஏற்படும் இந்தப் பத்து சந்தேகங்களுக்கெல்லாம் விளக்கம் தாருங்கள் என்று கேட்டிருந்தோம். ஆறு ஆண்டுகள் உருண்டோடியும் இன்றும் அந்த பத்து கேள்விகளுக்குரிய பதில்களை ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள். இதுவரை வெளியிட்டபாடில்லை. இதுதான் அவர்களின் ஆய்வின் லட்சணம்!

அரபி மொழி தந்திரம்

அதல்லாமல் பக்கத்துக்குப் பக்கம் அரபி மொழியில் ஹதீஸ்களையும், விமர்சனங்களையும் போட்டு தங்கள் பக்தர்களை அசத்தி இருக்கிறார்கள். அரபி மொழி தெரிந்தவர்கள்தான் மார்க்கத்தைச் சரியாக விளங்கிச் சொல்ல முடியும் என்ற குருட்டு நம்பிக்கையில் இருப்பவர்கள்தானே அவர்களது பக்தர்கள்.

மத்ஹபு மவ்லவிகளும் இந்த தந்திரத்தைத்தான் கையாண்டு தங்கள் பிடியிலுள்ளவர்களை தக்க வைத்துக் கொண்டிருக்கின்றனர். முன் சென்ற இமாம்கள், பெரியார்கள், நாதாக்களின் இஜ்மா, கியாஸ் என்ற பெயரில் அவர்கள் தங்களின் ஆதரவாளர்களை ஏமாற்றுகின்றனர். ஆனால் அவர்கள் குர்ஆன், ஹதீஸ் என்று கூறி மக்களை ஏமாற்றவில்லை. ஆனால் இந்த புரோகித -தவ்ஹீத் மவ்லவிகளோ குர்ஆன், ஹதீஸ் என்று கூறிக்கொண்டே தங்களின் இஜ்மா, கியாஸை நிலைநாட்டி தங்கள் ஆதரவாளர்களை ஏமாற்றுகின்றனர். ஆனால் இஜ்மா, கியாஸ் என்று அரபியில் கூறாமல் தமிழில் ஏகோபித்த முடிவு - இஜ்மா ஆய்வு (இஜ்திஹாத் மூலம் பெறும் கியாஸ்) என்று கூறி ஏமாற்றுகின்றனர். இந்த 'ஜகாத் ஓர் ஆய்வு' என்பதிலும் அதற்குரிய ஒரு குர்ஆன் வசனத்தையோ, ஹதீஸையோ அவர்கள் தங்களின் ஆதாரமாகத் தரவில்லை. அவர்களின் வாதத் திறமை, அனுமானம் , யூகம், வார்த்தை ஜாலம் இவற்றையே தங்களின் முடிவுக்கு ஆதாரமாகத் தந்துள்ளனர்.

தக்லீதே குறிக்கோள்!

மத்ஹபு மவ்லவி புரோகிதர்கள் முன்னோர்களின் இஜ்மா, கியாஸ் என்று கூறி ஏமாற்றுகின்றனர். தவ்ஹீத் மவ்லவிகள் தங்களின் ஏகோபித்த முடிவு (இஜ்மா) ஆய்வின் மூலம் பெறப்பட்ட முடிவு(கியாஸ்) என்று கூறி ஏமாற்றுகின்றனர். இதுதான் வித்தியாசம். ஆக மத்ஹபு மவ்லவிகளும், தவ்ஹீது மவ்லவிகளும் தங்களின் ஆதரவாளர்களை தங்களை 'தக்லீது' செய்ய வேண்டும் என்று விரும்புகின்றனரே அல்லாமல், தங்களின் ஆதரவாளர்களை அல்குர்ஆன் 7:3, 39:18 அடிப்படையில் மற்றவர்களது கருத்துக்களையும் கேட்டு, சுயமாகச் சிந்தித்து, சுதந்திரமாகச் செயல்பட்டு மறுமையில் வெற்றி பெற வேண்டும் என்று விரும்புவதே இல்லை. இதுதான் உண்மை.

அப்படி தக்லீது செய்வதாக இருந்தால் பின்னவர்களான தவ்ஹீது மவ்லவிககளை தக்லீது செய்வதை விட முன்னோர்களான இமாம்களை தக்லீது செய்வதே சிறந்தது என்றே சொல்ல முடியும்.

"மக்களில் சிறந்தவர்கள் என் தலைமுறையைச் சேர்ந்தவர்கள், பிறகு (சிறந்தவர்கள்) அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இம்ரான் பின் ஹுசைன்(ரழி), நூல் : புகாரி 2651

நபி(ஸல்) அவர்களின் இந்த விளக்கப் படிதான் இமாம் இப்னு தைமிய்யா(ரஹ்) அவர்கள், "நீ சுய சிந்தனையற்ற அறிவற்றவனாக இருந்து தக்லீது செய்யும் கட்டாய நிலையில் இருந்தால் முன்னோர்களாக ஸலஃபுகளை தக்லீது செய்" என எச்சரித்தார் போலும்.

அசட்டுத் துணிச்சல்!

இந்த 'ஜகாத்' சம்பந்தமாக முன்னோர்களான மத்ஹபு புரோகித முல்லாக்களைவிட, இந்த இயக்க, புரோகித - தவ்ஹீது முல்லாக்கள், சமுதாயத்தில் பெரும் குழப்பத்தை உண்டாக்கி இருக்கிறார்கள் என்பதே அப்பட்டமான உண்மையாகும். அன்றிலிருந்து இன்று வரை எந்த மத்ஹபு புரோகித முல்லாக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதுவரை யாரும் எந்தப் பிரிவாரும் சொல்லாத குர்ஆன், ஹதீஸில் இல்லாத ஒரு விஷக் கருத்தை 'ஜகாத்' விஷயமாக இந்த தவ்ஹீத் மவ்லவி புரோகிதர்கள் கூறி வந்தனர். இந்த தவ்ஹீத் மவ்லவி புரோகிதர்கள் கூறி வந்தனர். இப்போது எழுத்திலும் தங்கள் சொத்தை வாதத்தை எடுத்து வைத்துள்ளனர்.

'இஜ்மா' ஒட்டுமொத்த அறிஞர்களின் முடிவு அல்ல!

இந்தப் புரோகித மவ்லவிகள் கையாளும் இஜ்மா, கியாஸ் என்ற அரபி பதங்களும் மக்களை ஏமாற்றி வழி கெடுத்துத் தங்கள் தங்கள் பிடியில் மக்களைச் சிக்க வைக்கும் முயற்சியே இல்லாமல் வேறு இல்லை. அந்தந்தப் பிரிவுகளிலுள்ள புரோகித முல்லாக்கள் தாங்கள் கூடி எடுக்கும் முடிவையே இஜ்மா என்றும் எகோபித்த முடிவு என்றும் கூறுகிறார்களே அல்லாமல் முஸ்லிம் சமுதாயத்தின் ஒட்டு மொத்த அறிஞர்களின் ஏகோபித்த முடிவு என்று பொருள் கொள்வது மிகப்பெரிய தவறாகும். அப்படிப்பட்ட ஒரு மாயத் தோற்றத்தை உண்டாக்கி மக்களை ஏமாற்றி வழி கெடுக்க இந்தப் புரோகிதர்கள் பெரிதும் பாடுபடுகிறார்கள்.

அடிப்படையை மறந்த தவ்ஹீத் புரோகிதர்கள்!

இப்போது அவர்களின் 'ஜகாத் ஒர் ஆய்வை' எடுத்துக் கொள்வோம். இவர்களின் இந்த ஆய்வில், இவர்கள் தங்களை பெரும் மேதைகளாகக் காட்டிக் கொள்ள முற்பட்டிருக்கிறார்களே அல்லாமல், இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையான ஒரு முக்கிய விஷயத்தைக் கவனிக்கத் தவறி விட்டார்கள்.

மக்களிடையே மார்க்கமாக ஒன்று நடைமுறையில் இருக்கும்போது அதற்கு மாறான கருத்து அல்குர்ஆனிலோ, ஹதீஸிலோ நேரடியாக இல்லாத நிலையில், தங்களின் யூகம், அனுமானம், சுய சிந்தனை போன்றவற்றால் பெறப்படும் மாற்றுக்கருத்தை மக்களிடையே புகுத்துவது, குழப்பத்தை ஏற்படுத்துவது கொலை செய்வதைவிடக் கொடிய குற்றமாகும். (பார்க்க: அல்குர்ஆன் 2:191)

நபிக்கே இல்லாத துணிச்சல்!

இறைவனால் நபியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இறைத்தூதர்(ஸல்) அவர்களே ஒரு விஷயத்தில் இறைவனால் தெளிவாக 'வஹீ' மூலம் இப்படித்தான் என்று அறிவிக்கப்படாதவரை, மக்களிடையே நடைமுறையில் இருக்கும் அந்த விஷயத்தில் தமது யூகம், அனுமானம், சுயசிந்தனை இவற்றைப் புகுத்தி அதற்கு மாறாகக் கருத்துக்கூறி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் 'வஹீ' மூலம் அந்த விஷயத்தை இப்படித்தான் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு விட்டால், அதை நிலைநாட்டுவது கொண்டு மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு எதிர்த்தாலும், பெரும் குழப்பத்தை ஏற்படுத்தினாலும், இறைக்கட்டளையை நிலை நாட்டுவதில் பின் வாங்கியதே இல்லை. இங்கு 'அல்லாஹ்வுக்கே மார்க்கம் என்பது உறுதியாகும் வரை போராடியே தீர வேண்டும்' என்பது இறைக்கட்டளையாகும். (பார்க்க 2:193)

ஓர் உண்மை விசுவாசி ஏகன் இறைவனின் கட்டளைகளை நிலை நாட்டுவதில் உறுதியாக இருக்க வேண்டுமே அல்லாமல், தனது சுய கருத்துக்களை மக்களிடையே புகுத்தி குழப்பத்தை ஏற்படுத்துவது கொலையை விட கொடிய குற்றமாகும். உதாரணமாக:

1. முஸ்லிம்கள் காலம் காலமாக 'தாரவீஹ்' என்ற பெயரால் 20 + 3 ரகாஅத் தொழுது வந்தனர், வருகின்றனர். ஆனால் அதற்கு மாறாக நபி(ஸல்) அவர்கள் ரமழானிலும் -ரமழான் அல்லாத காலங்களிலும் 8 + 3 ரகாஅத்திற்கு மேல் தொழுவதே இல்லை என்று தெளிவாக நேரடியாக 14 நூல்களில் காணப்படுவதை ஆதாரமாகக் கொடுத்தே 20 + 3 சகாஅத்தை மறுத்துக் கூறி வருகிறோம்.

2. முஸ்லிம்கள் காலம் காலமாக ஜமாஅத் தொழுகைக்குப் பின்னால் கடை பிடிக்கும் சப்தமிட்டு திக்ர், சப்தமிட்டு கூட்டு துஆ இவை முறையே 7:205, 7:55 இறைக் கட்டளைகளுக்கு நேர்முரணாக இருப்பதாலேயே இந்த வசனங்களைக் காட்டி அவற்றை மறுத்துக்கூறி வருகிறோம்.

3. முஸ்லிம்கள் காலம் காலமாக இமாம்களை 'தக்லீது' செய்பவர்களாக - முகல்லிதுகளாக இருந்து வருகின்றனர். அல்குர்ஆனின் 7:3, 33:66,67,68 மற்றும் முன்னோர்கள் -மூதாதையர்களைப் பின்பற்றக்கூடாது என்று கூறும் 2:170, 5:104,7:28 போன்ற எண்ணற்ற அல்குர்ஆன் வசனங்களைக் காட்டியே தக்லீதை மறுத்துக் கூறி வருகிறோம்.

4. முஸ்லிம்கள் காலம் காலமாக மத்ஹபுகள், இயக்கங்கள்-பிரிவுகள் என பல அமைப்புகளில் பிரிந்து சிதறுண்டுக் கிடக்கின்றனர். அல்குர்ஆன் 3:203, 3:205, 6:159, 30:32, 42:13,14 போன்ற எண்ணற்ற வசனங்களைக் காட்டியே பிரிவுகளை மறுத்துக் கூறி வருகிறோம்.

ஒரே உம்மத் -பிரிவுகள் இல்லை!

'உம்மத்தன் வாஹிதா' - ஒரே உம்மத் (21:92, 23:52) அதில் பிரிவுகள் இல்லை என்றே வலியுறுத்தி வருகிறோம். இப்படி மக்களின் நடைமுறையில் காலம் காலமாக இருந்து வரும் நடைமுறைகளுக்கு முரணாக குர்ஆன் வசனமோ, நபி நடைமுறையோ இருந்தால் மட்டுமே அவற்றைக் காட்டி மக்களின் நடைமுறையை மறுத்துக்கூறும் அதிகாரம் பெறுகிறோம். அதனால் பெரும் குழப்பங்கள் ஏற்பட்டாலும் 2:193 படி அல்லாஹ்வுக்கே மார்க்கம் என்பது உறுதியாகும் வரை போராடுவதாக இருக்கும். அதற்கு மாறாக குர்ஆனிலோ, ஹதீஸிலோ நேரடியாகச் சொல்லப்படாத நிலையில் மக்களிடையே நடைமுறையில் இருப்பதற்கு முரணாக கருத்துக் சொல்கிறவர்கள் மக்களிடையே குழப்பத்தையே குறிக்கோளாகக் கொண்டுள்ளனர். 2:191ன் படி கொலையை விட கொடிய குற்றத்தைச் செய்ய முற்படுகின்றனர் என்பதே உண்மையாகும்.

1426 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது!

இப்போது இந்த 'ஜகாத்' விஷயத்தை எடுத்துக் கொள்வோம். இன்றைக்கு 1426 ஆண்டுகளாக நபி காலத்திலிருந்து, நபிதோழர்கள் காலத்திலிருந்து இன்று வரை முஸ்லிம்களிலுள்ள அனைத்துப் பிரிவினரும் எந்தவித அபிப்பிராய பேதமும் இல்லாமல் ஏகோபித்து 'ஜகாத்' வருடா வருடம், முன்பே ஜகாத் கொடுத்த பொருளுக்கும் கொடுத்தே வருகின்றனர். எத்தனையோ விஷயங்களில் எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும் இந்த ஜகாத் வருடா வருடம் ஏற்கனவே கொடுத்த பொருளுக்கும் மீண்டும் மீண்டும் கொடுக்க வேண்டும் என்பதில் வேறுபட்ட கருத்து எந்தப் பிரிவாரிடமும் இல்லை. தினசரி தொழுகை ஐவேளையா? மூன்று வேளையா? என்பதில் கூட கருத்து வேறுபாடு உண்டு. ஆனால் ஜகாத் வருடா வருடம் கொடுத்த பொருளுக்கும் மீண்டும் கொடுக்க வேண்டும் என்பதில் எப்பிரிவாரிடமும் எவ்வித கருத்து வேறுபாடுமில்லை.

நேரடி ஹதீஸ் ஆதாரம் வேண்டும்!

இப்படிப்பட்ட நிலையில் ஜகாத் ஒரு முறை கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் ஜகாத் கொடுக்க வேண்டியதில்லை என்பதற்கு இக்கருத்தைச் சொல்லும் இந்த தவ்ஹீத் மவ்லவி புரோகிதர்களே தெளிவான நேரடியான ஹதீஸ் ஆதாரத்தை எடுத்து வைக்கக் கடமைபட்டிருக்கிறார்கள். ஜகாத் வருடா வருடம் கொடுத்த பொருளுக்கும் மீண்டும் மீண்டும் கொடுக்க பொருளுக்கும் மீண்டும் கொடுக்க வேண்டும் என்ற கருத்தில் வந்துள்ள ஹதீஸ்களில் அவர்கள் எடுத்துக்காட்டி இருப்பது போல் சில குறைபாடுகள் காண்ப்பட்டாலும் மேலே எடுத்தெழுதியுள்ள மிகப்பெரிய ஆதார அடிப்படையில் அவை அனைத்தும் ஏற்கத்தக்க 'ஹஸன்' தரத்தில் அல்லாமல் அவற்றில் எதுவும் பலகீன நிலையை அடைய முடியாது.

இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸும் இல்லை!

அதற்கு மாறாக 'ஜகாத் கொடுத்த பொருளுக்கு மீண்டும் ஜகாத் கொடுக்க வேண்டியதில்லை' என்ற இந்த தவ்ஹீத் புரோகித மவ்லவிகளின் கருத்துக்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ் அல்ல, இட்டுக்கட்டப்பட்ட ஒரு ஹதீஸைக்கூட இவர்களால் காட்ட முடியாது. அதாவது இவர்களின் ஆபாக்களான புரோகித முன்னோர்கள் கூட கற்பனை செய்யத் துணியாத இக்கருத்தை புரோகிதர்கள் கற்பனை செய்துள்ளனர். வெளியிட்டு வருகின்றனர் என்பதுதான் மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும்.

பக்தர்களை ஏமாற்றும் தந்திரம்

"நாங்கள் ஆய்வு செய்த வகையில் எது சரியெனப்பட்டதோ அதை மக்கள் மன்றத்தில் வைத்துள்ளோம். இந்த ஆய்வு தவறானது என்பதை நிரூபிக்கும் வகையில் தக்க சான்றுகளை யார் எடுத்துக் காட்டினாலும் அதைப் பரிசீலித்து எங்கள் முடிவை மாற்றிக் கொள்வதற்குத் தயங்க மாட்டோம். அவ்வாறு சுட்டிக் காட்டுபவர்களுக்கு நன்றியும் தெரிவித்துக் கொள்வோம்" என்று எழுதியுள்ளனர். ஏகத்துவம், செப்டம்பர் 2005, பக்கம் 3

இது அவர்களின் ஆதரவாளர்களைத் தக்க வைத்துக் கொள்ளும் ஒரு தந்திரமே அல்லாமல் வேறில்லை. தத்தம் பகுதி தனித்தனித் தலைப்பிறை என்ற மூடத்தனமான கொள்கையை நிலைநாட்ட ஆய்வு செய்து வெளியிட்ட போதும் இவ்வாறே எழுதி இருந்தனர். அவர்களாலும் செயல்படுத்த முடியாத தத்தம் பகுதி தனித்தனித் தலைப்பிறைக் கொள்கையிலிருந்து விடுபட்டு எங்கள் முடிவை மாற்றிக் கொள்கிறோம் என்று அறிவித்தார்களா? இல்லையே!

ஜகாத் ஒரு முறை கொடுத்த பொருளுக்கு வருடா வருடம் கொடுக்கத் தேவை இல்லை என்பதற்கு ஆதாரமாக ஒரேயொரு ஹதீஸையும் தர யோக்கியதை இல்லாமல்

"ஒரு சொல்லுக்கு இதுதான் பொருள் என்பது திட்டவட்டமாகத் தெரியும் போது இதற்கு ஆதாரம் கேட்பது அறிவுடைமையாகுமா? இதை இவர்கள் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்" என்று தெனாவட்டமாக எழுதியுள்ளனர். ஏகத்துவம், செப்டம்பர் 2005, பக்கம் 7

ஆனால் கடந்த 1426 ஆண்டுகளாக முஸ்லிம்கள் அனைவரும் ஏகோபித்து ஒப்புக்கொண்டு செயல்படுத்தி வரும் ஜகாத் என்ற சொல்லுக்கு இதுதான் பொருள் என்பது திட்டமாகத் தெரியும் போது அதற்கு ஆதாரம் கேட்பது அறிவுடைமையாகுமா? இதை இந்த தவ்ஹீத் புரோகித முல்லாக்கள் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் என்று நாம் கேட்க வேண்டியதை அவர்கள் மாற்றிக் கேட்டுள்ளார்கள்.

1426 ஆண்டுகளாக அறிய முடியாத சட்டமா?

ஜகாத் கொடுத்து வருவது பற்றி அல்குர்ஆனிலும், ஹதீஸிலும் சொல்லி இருப்பது ஒருமுறை கொடுத்து விட்டால், மீண்டும் கொடுக்க வேண்டியதில்லை என்று இவர்களுக்குத் திட்டவட்டமாகத் தெரியவில்லை என்பது தானே அவர்கள் எழுதி இருப்பதன் பொருள். இது தெனாவட்டாக எழுதப்பட்டது என்பதில் சந்தேகம் உண்டா? அதுவும் தங்களின் சொந்த யூகங்களையும், கற்பனைகளையும், வார்த்தை ஜாலங்களையும் எழுத்தில் வடித்து விட்டு இப்படி எழுதினால் அதன் பொருள் என்ன?

இப்படி சொந்த விளக்கங்களைக் கொடுத்து விட்டு, புதையல் கிடைத்தால் அல்லது போர்க்களத்தில் எதிரிகளிடமிருந்து கைப்பற்றும் கொருளில் 20 சதவிகிதத்தை அதாவது ஐந்தில் ஒரு பங்கை கொடுக்க வேண்டும் என்று கூறும் ஹதீஸ்களை எழுதி இவை ஒரு முறைதானே கொடுக்கப்படுகிறது. வருடா வருடம் கொடுப்பதில்லையே என்று கூறி தங்கள் அபத்தக் கூற்றை நியாயப்படுத்தியுள்ளனர். இந்த இடங்களில் ஐந்தில் ஒரு பங்கு உடனடியாக கொடுத்து விட வேண்டும் என்று விளங்கிய 1426 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் முஸ்லிம்கள் தங்கள் செல்வங்களில் வருடா வருடம் நாற்பதில் ஒரு பங்கு மட்டுமே கொடுக்க வேண்டும் என்று எப்படி விளங்கினார்கள் என்பதையாவது இவர்கள் சிந்திக்க வேண்டாமா?

சிந்தனைக் குருடர்களா?

இந்த இடங்களில் அதிக பட்சமாக 20 சதவிகிதம் ஐந்தில் ஒரு பங்கு கொடுக்கும் நிலையில் மற்ற பொருள்களுக்கு வெறும் நாற்பதில் ஒரு பங்கு 2.5 சதவிகிதம் மட்டும் தானே கொடுக்கப்படுகிறது? இது ஏன் என்று சிந்தித்தார்களா?

சிரமப்பட்டு உழைத்துப் பயிரிட்டு அறுவடை செய்யும் உணவு தானியங்களில் விளைந்தவுடன் நீர் பாய்ச்சி விளைந்தால் 5 சதவிகிதமும், நீர் பாய்ச்சாமல் விளைந்தால் 10 சதவிகிதமும் உடனடியாகக் கொடுக்க வேண்டும். செலவுகள் போக எஞ்சியதில் அல்ல. விளைச்சலில் கொடுக்க வேண்டும். அதுவும் வருடத்தில் மூன்று போகங்கள் விளைந்தால் மூன்று போகமும் கொடுக்க வேண்டும் என்றிருக்கிறதே இதையாவது சிந்தித்தார்களா?

உணவு தானியங்கள் மக்களின் அத்தியாவசிய உணவுத் தேவையை நிறைவு செய்வதாகும். உணவு தானியங்களை நீண்ட காலம் சேமித்து வைக்கவும் முடியாது. அப்படிப்பட்ட நிலையில் விளைச்சலில் 5 சதவிகிதமும், 10 சதவிகிதம் என அதிகமாகக் கொடுக்க வேண்டும். செலவுகளைக் கழிக்க முடியாது. அறுவடையானவுடன் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு விளைச்சலுக்கும் உடனடியாக கொடுக்க வேண்டும் என்றிருக்கும் போது, மக்களின் அத்தியாவசிய தேவைக்காக அல்லாமல், பிறருக்கு எந்த வகையிலும் பலன் தராத, ஒரு மனிதன் தனது சொந்த லாபத்திற்காக, தனது சுயநலம் கருதி, தனது வாரிசுகளுக்காக பல தலைமுறைகளுக்குரிய சொத்து சுகங்களை சேர்த்து வைக்கும் போது, அதற்காக ஒரேயொரு முறை 2.5 சதவிகிதம் அதாவது நாற்பதில் ஒரு பங்கு கொடுத்து விட்டால் போதும்; அதன் பின்னர் கொடுக்கவே வேண்டியதில்லை என்று சட்டம் சொல்கிறார்களே. இது மனித நேயத்தை மதித்து மனிதாபிமானத்துடன் நடக்கும் செயலா? இவர்களா ஏழைகளின் துயர் போக்கும் உத்தமர்கள்?

ஏனிந்த அகம்பாவம்?

தங்களின் சொந்த சரக்குகளையும் வார்த்தை ஜாலங்களையும் அள்ளி இறைத்து விட்டு, ஒரேயொரு ஹதீஸ் ஆதாரத்தையும் கொடுக்காமல்,

"இதுதான் நாம் எடுத்து வைக்கும் முக்கியமான சான்றாகும்". "இதை வலுப்படுத்தும் வகையில் துணை ஆதாரங்களை சிலவற்றையும் நாம் எடுத்துக் காட்டுகிறோம்" என்று எழுதியுள்ளனர். ஏகத்துவம், செப்.2005, பக்கம் 9.

மார்க்கச் சட்டத்தை நிலைநாட்ட குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்கள் இவர்களிடம் இல்லை. இவர்களது கற்பனைகளையும், யூகங்களும், உதாரணங்களும், வார்த்தை ஜாலங்களும் தான் இவர்களின் ஆதாரங்கள். மத்ஹபு புரோகித மவ்லவிகளை இவர்கள் நல்லவர்களாக ஆக்கி விட்டார்கள். அவர்கள் தங்களின் சொந்தச் சரக்கை அள்ளி விடுவதில்லை; முன்னோர்களின் கற்பனைகளையே அள்ளி விடுவார்கள். இவர்களோ இவர்களின் சொந்தச் சரக்கையும், கற்பனைகளையுமே அள்ளி விடுகின்றனர்.

ஒரு முறை ஜகாத் கொடுத்த செல்வத்திற்கு மீண்டம் ஜகாத் கொடுக்க வேண்டியதில்லை என்று கூறும் இறைவாக்கோ, நபிமொழியோ இல்லாத நிலையில், 1426 ஆண்டு காலமாக முஸ்லிம்களில் எந்தப் பிரிவினரிடமும் எவ்விதக் கருத்து வேறுபாடும் இல்லாத நிலையில், தமது செல்வங்களுக்கு வருடா வருடம் ஜகாத் கொடுத்து வருவதே மிகப்பெரிய ஆதாரமாக இருக்கும் நிலையில், இதை வலுப்படுத்தும் வகையில் துணை ஆதாரங்களும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலேயே காணக்கிடைக்கின்றன. அவர்களைப் போல் சுய அனுமானங்களை முக்கியமான சான்றாகவோ துணை ஆதாரங்களையோ நாம் தரவில்லை என்பதை இங்கு கவனத்தில் கொள்ளவும். ஹதீஸ் ஆதாரங்களையோ தருகிறோம்.

வருடா வருடம் ஜகாத்! ஹதீஸ் ஆதாரம்!!

புகாரீ 1452 வது ஹதீஸ், அபூ ஸயீத் அல்குத்ரீ(ரழி) அவர்கள் அறிவிக்கும் ஜகாத் பற்றிய பகுதி:

"…..உம்மிடம் ஒட்டகங்கள் இருக்கின்றனவா? அவற்றிற்கு ஜகாத் கொடுக்கிறீரா? எனக் கேட்டார்கள். அவர் ஆம்! என்றதும் ………" நூல் : புகாரீ பாகம் 2, பக்கம் 215

இந்த ஹதீஸில் அரபியில் "துஅத்தீ' கொடுக்கிறீரா? என்றே நிகழ்கால வினையில் நபி(ஸல்) அவர்கள் கேட்கிறார்கள்.இவர்களின் வாதப்படி அந்த ஒட்டகங்களுக்கு ஜகாத் ஒரு முறையோடு முற்றுப் பெறுவதாக இருந்தால், நபி(ஸல்) அவர்கள் எப்படிக் கேட்டிருக்க வேண்டும்? அரபியில் - ஆஃதய்த் - கொடுத்து விட்டீரா? என்றே இறந்த கால வினையில் கேட்டிருக்க வேண்டும். அதற்கு மாறாக நிகழ்கால வினையில் கேட்டிருப்பதே அந்த குறிப்பிட்ட ஒட்டகங்களுக்கு ஜகாத் ஒரு முறையோடு முற்றுப் பெறுவதில்லை. தொடர்ந்து கொடுக்கும் நிலை இருக்கிறது என்பதை சுயநலமில்லாமல் பொது நலத்துடனும், நடுநிலையுடனும் சிந்திப்பவர்கள் நிச்சயமாக விளங்கிக் கொள்வார்கள்.

நபி(ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி வந்தார்; அவருடன் அவருடைய மகள் இருந்தாள். அவளுடைய கையில் இரண்டு தங்க வளையங்கள் இருந்தன. நபி(ஸல்) அவர்கள் அந்தப் பெண்மணியிடம் "நீ இதற்கு ஜகாத் தருகிறாயா? அரபியில் அதுஃத்தீன் என்று கேட்டார்கள். அதற்கு அவர், 'இல்லை' என்றார். "மறுமையில் அல்லாஹ் இதற்குப் பதிலாக நெருப்பினால் ஆன இரண்டு வளையங்கள் அணிவிப்பதை விரும்புகிறாயா? என்று கேட்டார்கள் (இதைக் கேட்டவுடன்) அவர் அவற்றைக் கழற்றி கொடுத்து விட்டார். இப்னு ஷுஐபு தன்னுடைய தந்தை மற்றும் பாட்டனார் வாயிலாக அறிவிக்கிறார்.

நூல்கள் : அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, ஹாக்கிம்.

இந்த ஹதீஸை ஏகத்துவ இதழில் அவர்களின் ஆய்வில் குறிப்பிடவும் இல்லை; இதிலும் கோளாறுகள் இருப்பதாக விமர்சிக்கவும் இல்லை. எனவே இதன் கருத்தை ஏற்றிருக்கிறார்கள். மேலும் இங்கு ஒருமுறை கொடுப்பதோடு ஜகாத் கடமை முடிவுறுமானால் அதில் நாற்பதில் ஒரு பங்கு தான் கொடுக்க வேண்டும் . மாறாக அந்தப் பெண்ணோ இரு வளையங்களையுமே கழற்றிக் கொடுத்து விட்டார். இதிலிருந்து நீண்ட காலமாக ஜகாத் வருடா வருடம் கொடுக்காத குற்றத்திற்குப் பயந்தே இரு வளையங்களையும் கழற்றிக் கொடுத்ததாக அறிய முடிகிறது.

இந்த ஹதீஸிலும் நிகழ்கால வினையாக அரபியில் - அதுஃத்தீன - தருகிறாயா? என்று கேட்டிருக்கிறார்களே அல்லாமல் அரபியில் ஆஃதய்த்த - தந்து விட்டாயா? என்று இறந்த கால வினையில் கேட்கவில்லை. ஜகாத் கொடுத்து முடிந்து போன ஒன்றுக்கு அதற்காக மீண்டும் ஜகாத் கொடுக்க வேண்டியதில்லை என்றிருக்குமானால், நபி(ஸல்) அவர்கள் கொடுத்து விட்டாயா? தந்து விட்டாயா? என இறந்த கால வினையில் கேட்டு முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம். அதற்கு மாறாக கொடுக்கிறாயா? தருகிறாயா? என்று கேட்டதிலிருந்து ஜகாத் கொடுப்பது ஒருமுறையோடு முடிவதில்லை. அப்பொருள் நம்கையில் இருக்கும் காலமெல்லாம் கொடுக்க வேண்டும் என்பது விளங்குகின்றது.

புகாரீ 1456, 1457 ஹதீஸ்கள்

அபூபக்கர்(ரழி) அவர்கள் கூறியதாவது : "அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபி(ஸல்) அவர்களிடத்தில் வழங்கி வந்த (ஜகாத்தில்) ஒரு ஒட்டகக் குட்டியை என்னிடம் தரமறுத்தாலும், அதற்காக அவர்களுடன் நான் போர் புரிவேன்" நூல் : புகாரீ வா2, பக். 220

இந்த ஹதீஸில் "நபி(ஸல்) அவர்களிடத்ளதில் வழங்கி வந்த ஒரு ஒட்டகக்குட்டி" என்று ஏன் குறிப்பிட வேண்டும்? நபி(ஸல்) அவர்களிடம் ஒரு முறை ஜகாத் கொடுத்ததுடன் அது முடிவு பெற்றிருந்தால், அந்த ஒட்டகக்குட்டியை குறிப்பிட்டுக் கூற வேண்டிய அவசியம் என்ன? நபி(ஸல்) அவர்களிடம் ஜகாத் கொடுத்த அதே வகைகளுக்கு மீண்டு ஜகாத் கொடுப்பதாக இருந்தால் மட்டுமே இப்படிக் கூறி இருக்க முடியும். கொடுத்தது முடிந்து போனதாகவும்; இப்போது கொடுப்பது புதியவற்றுக்காகவும் இருந்தால், அதில் சென்ற வருடத்தின் ஒட்டகக்குட்டியை குறிப்பிட்ட வேண்டிய அவசியம் என்ன? இதை முறையாக நடுநிலையோடு சிந்திப்பவர்கள் ஜகாத் மீண்டும் மீண்டும் கொடுக்க வேண்டும் என்பதை விளங்கிக் கொள்வார்கள்.

புகாரீ 1465வது ஹதீஸில் ஒரு பகுதி

ஒருநாள் நபி(ஸல்) அவர்கள் மிம்பரில் அமர்ந்து உபதேசம் செய்தார்கள்; அதில் ஓரு பகுதி வருமாறு:

"…… எனவே ஒரு முஸ்லிம் தன் செல்வத்திலிருந்து ஏழைகளுக்கும், அனாதைகளுக்கும், வழிபோக்கர்களுக்கும், கொடுத்துக் கொண்டிருக்கும் வரை அது அவனுக்குச் சிறந்த தோழனாகும். யார் முறையின்றி அதை எடுத்துக் கொள்கிறானோ அவன் உண்டும் வயிறு நிரம்பாதவனைப் போன்றவனாவன். மேலும் மறுமை நாளில் அந்தச் செல்வம் அவனுக்கு எதிராகச் சாட்சி சொல்லும்" எனக் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல்குத்ரீ(ரழி), நூல் : புகாரீ 1465 வா 2. பக்க 228

இந்த ஹதீஸின் பகுதியை இறையச்சத்துடன் நடுநிலையோடு சிந்தித்து விளங்குகிறவன், இங்கு நபி(ஸல்) அவர்கள் "தன் செல்வத்திலிருந்து" என்று குறிப்பிடுவது அவர் ஏற்கனவே ஜகாத் கொடுத்த செல்வம், இந்த வருடம் புதிதாக ஈட்டிய செல்வம் அனைத்தையும் உள்ளடக்கியது தான் என்பதையும், அந்த அனைத்து செல்வங்களுக்கும் தொடர்ந்து ஜகாத் கொடுத்து வர வேண்டும் என்பதை கொடுத்துக் கொண்டிருக்கும் வரை அது அவனுக்குச் சிறந்த தோழனாகும் என்ற பாகமும் தெள்ளத் தெளிவாக - குன்றிலிட்ட தீபமாக விளக்குகிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

தவ்ஹீது மவ்லவி புரோகிதர்களை நம்பினால்!

இந்த தவ்ஹீத் மவ்லவி புரோகிதர்களின் பேச்சை நம்பி ஜகாத் தொடர்ந்து கொடுக்காமல் இருப்பவர்கள், 'முறையின்றி அதை எடுத்துக் கொள்கிறவன்' என்றும் "அவன் உண்டும் வயிறு நிரம்பாதவனைப் போன்றவன்" என்றும் நபி(ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளவர்களின் பட்டியலில் சேர்ந்து விடுவார்கள் என்பதையும் விளங்கிக் கொள்ள முடிகிறது. பணம் படைத்த செல்வந்தர்களே இந்த தவ்ஹீத் மவ்லவி புரோகிதர்களின் ஜகாத் 'ஃபத்வா' உங்களுக்கு இப்போது இனிப்பாக இருக்கலாம்; செல்வத்தின் மீதுள்ள பேராசை உங்களை அந்த அபத்த 'ஃபத்வா'வை வரவேற்கச் சொல்லும். ஆனால் அல்குர்ஆன் அத்தவ்பா 9:34,35 வசனங்களை படித்து விளங்கி மறுமையையும், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்.

இனி அவர்களின் அபத்த விளக்கங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்:

ஏகத்துவம் கூறுகிறது:

ஜகாத் கடமையாவதற்கு ஒரு வருடம் முழுமையடையும் வரை தேவையில்லை. ஒருவருக்கு மாதம் ஒரு இலட்சம் ரூபாய் கிடைத்தால் அதில் அம்மாத செலவு போக மீதமுள்ளவற்றில் இரண்டரை சதவிகிதம் ஜகாத் கொடுக்க வேண்டும். ஏகத்துவம், செப்டம்பர் 2005, பக்கம் 4.

இதற்குரிய ஹதீஸ் ஆதாரம் எங்கே? 1426 வருடங்களாக முஸ்லிம்கள் கடை பிடித்துவரும் வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதற்கு ஹதீஸ் ஆதாரம் கேட்பவர்கள், தங்களின் இந்தக் கூற்றுக்கு ஹதீஸ் ஆதாரம் கொடுக்கக் கடமை பட்டிருக்கிறார்களா? இல்லையா? சேர்ந்த செல்வத்தை செலவழிக்காமல் வருட முழுவதும் தடுத்து வைத்துள்ளதற்கு செலவழித்தது போக எஞ்சியுள்ளதற்கு ஜகாத் கடமை என்பதில் பொருள் இருக்கிறது. ஆனால் ஒரு முறை கொடுத்தால் போதும், உடனடியாகக் கொடுக்க வேண்டும் என்கிறார்கள். இதற்கும் ஹதீஸ் ஆதாரம் தரக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

ஏகத்துவம் கூறுகிறது:

"தினசரி வருமானம் உள்ளவராக இருந்தால் அன்றைய செலவு போக மீதி உள்ளதற்கு ஜகாத் கொடுத்து விட வேண்டும்; மாத வருமானம் உள்ளவராக இருந்தால் அந்த மாதத்தின் செலவு போக மீதமுள்ளதற்கு ஜகாத் கொடுத்து விட வேண்டும். வருட வருமானம் உள்ளவராக இருந்தால் வருடத்தின் செலவு போக மீதமுள்ளதற்கு ஜகாத் கொடுக்க வேண்டும் என்பது நமது முடிவாகும்". ஏகத்துவம், செப்படம்பர் 2005, பக்கம்.5

இங்கு அவர்கள் தங்களின் சொந்த முடிவைச் சொல்கிறார்களே அல்லாமல் மார்க்கத்தைச் சொல்லவில்லை. கலீஃபாக்கள், நபித் தோழர்களின் முடிவுகளை மறுக்கிறவர்கள் தங்களின் முடிவை மார்க்கமாக்குவதுதான் வேடிக்கையாகும். மார்க்கமாக இருந்தால் இவற்றிற்கு ஹதீஸ் ஆதாரம் தர வேண்டும். இவர்களின் விளக்கங்கள், தத்துவங்கள் எதுவும் மார்க்கமாகாது. குர்ஆன், ஹதீஸில் இல்லாததை மார்க்கமாக்க இவர்களுக்கு 'வஹீ ' வருவதில்லை.

1426 ஆண்டுகளாக முஸ்லிம்களின் நடைமுறையில் இருக்கும் வருடா வருடம் ஜகாத் கொடுத்த செல்வத்திற்கும் கொடுக்க வேண்டும் என்பதற்கு ஹதீஸ் ஆதாரம் கேட்பவர்கள் எந்த முகத்தோடு எந்த ஹதீஸ் ஆதாரமும் இல்லாத நிலையில் தங்களின் சொந்தக் கருத்தை மார்க்கமாக்க முற்படுகிறார்கள்?

ஏகத்துவம் கூறுகிறது:

"உங்கள் செல்வத்தில் எஞ்சியதைத் தூய்மைப்படுத்துவதற்காகவே தவிர வேறு எதற்கும் அல்லாஹ் ஜகாத்தைக் கடமையாக்கவில்லை" என்ற ஹதீஸின்பகுதியைக் காட்டி,

எஞ்சிய பொருட்களைத் தூய்மைப்படுத்துவதற்காகவே தவிர அல்லாஹ் ஜகாத்தை கடமையாக்கவில்லை என்ற நபி(ஸல்) அவர்களின் இந்தக் கூற்று நமது முடிவை வலுப்படுத்தும் தெளிவான சான்றாக அமைந்துள்ளது என்று கூறி ஒரு பொருளுக்கு ஒரு முறை ஜகாத் தத்துவத்தை நிலைநாட்ட முற்பட்டுள்ளார்கள். ஏகத்துவம், செப்டம்பர் 2005, பக்கம் 10

"(நபியே!) அவர்களுடைய செல்வத்திலிருந்து தர்மத்திற்கானதை எடுத்துக் கொண்டு, அதனால் அதனால் அவர்களை உள்ளும் புறமும் தூய்மையாக்குவீராக…..? அல்குர்ஆன் 9 : 103

இது இறைவாக்கு; இந்த இறைவாக்குக்கு முரணில்லாத நிலையில் தான் மேற்படி ஹதீஸை விளங்க வேண்டும்.

ஒருவனது செல்வத்திலிருந்து தர்மத்திற்கான பங்கு நீக்கப்பட்டால் தான், எஞ்சியிருப்பதை அவன் நல்ல முறையில் அனுபவிக்க முடியும். இதை புகாரீ 1465ல் உள்ள ஜகாத்தை தொடர்ந்து கொடுத்துக் கொண்டிராதவன் "உண்டும் வயிறு நிரம்பாதவனைப் போன்றவன்" என்ற பகுதி உறுதிப்படுத்துகிறது.

ஒரு முறை குளித்தால், பின்னர் குளிக்க வேண்டியதில்லையா?

கருவாடு விற்ற காசு நாறுமா? என்பது போல் செல்வத்தில் எந்த அழுக்கும் இருப்பதில்லை. அந்தச் செல்வம், மனிதனின் கைப்படுவதால் அவனது செயல்பாடுகளின் மூலம் உண்டாகும் அழுக்கே அதில் படிகின்றது. அந்த அழுக்கை தர்மத்திற்கானதை தொடர்ந்து எடுத்துக் கொடுப்பதன் மூலமே நீக்க முடியும். அவர்களின் வாதப்படியே அந்தப் பொருளை ஒரு முறை சுத்தப்படுத்தினால் அது சுத்தமாகி விடும். பின்னர் அழுக்காகது என்பதை எந்த அடிப்படையில் கூறுகிறார்கள்? ஒரு முறை குளித்தால் உடல் சுத்தமாகிவிடும். பின்னர் அசுத்தமாகாது; உடையை ஒரு முறை துவைத்தால் சுத்தமாகிவிடும்; பின்னர் அசுத்தமாகாது. இப்படி மனிதனின் புழக்கத்தில் இருக்கும் எப்பொருளையும் ஒரு முறை சுத்தப்படுத்தினால் சுத்தமாகிவிடும்; பின்னர் ஒரு போதும் அசுத்தமாகாது எனக் கூறுகிறார்களா? இது வடிகட்டின மடமையான வாதமாக இருக்குமே அல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்?

மனிதனின் புழக்கத்தில் இருக்கும் எதுவாக இருந்தாலும் அது தொடர்ந்து அசுத்தமடைந்து கொண்டு தான் இருக்கும். அதன் மீண்டும் மீண்டு சுத்தப்படுத்திக் கொண்டு தான் இருக்க வேண்டும் என்பதே இயற்கை நியதி. இதை அடி முட்டாளும் விளங்குவான். தவ்ஹீத் மவ்லவி புரோகிதர்கள் விளங்க முடியாதது தான் ஆச்சரியம். இல்லை மனிதனின் புழக்கத்திலுள்ள ஒரு பொருள் ஒரு முறை சுத்தப்படுத்தப்பட்டால் அது பின்னர் அசுத்தம் ஆகவே ஆகாது என்பதற்கு குர்ஆனிலிருந்தோ, ஹதீஸிலிருந்தோ ஆதாரம் தரக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

மீண்டும் மீண்டும் அழுக்கடையும்!

எனவே செல்வந்தனின் புழக்கத்தில் இருக்கும் செல்வம் மீண்டும் மீண்டும் அசுத்தமடையத்தான் செய்யும். அதை மீண்டும் மீண்டும் சுத்தப்படுத்தித்தான் ஆக வேண்டும் . இதை மறுப்பவர்கள் விஷயதாரிகளாக இருக்க முடியாது. எனவே ஜகாத் கொடுத்த செல்வத்திற்கும் வருடா வருடம் மீண்டும் ஜகாத் கடமை என்பதே தெளிவான உண்மை.

செல்வத்தைத் தூய்மைப்படுத்துகிறது என்று கூறும் சந்தேகத்திற்குரிய ஹதீஸை தூக்கி நிறுத்த தனது வார்த்தை ஜாலங்களை அளந்து விட்டிருப்பதும் அல்லாமல், அந்த ஹதீஸுக்கு 9:103 குர்ஆன் கூறும் கருத்துக்கு முரணான கருத்தைக் கூறி தங்களின் சொத்தை வாதத்தை நிலைநாட்ட முற்பட்டிருப்பதோடு நாஸிருத்தீன் அல்பானி மீதும் பாய்ந்திருக்கிறார்கள். இதோ அவர்கள் கூறுகிறார்கள்.

ஏகத்துவம் கூறுகிறது:

"நாஸிரூத்தீன் அல்பானி அவர்கள் சரி என்று சொல்லி விட்டால், அதைக் கண்ணை மூடிக்கொண்டு ஏற்க வேண்டும் என்ற நம்பிக்கை பலரிடம் காணப்படுகிறது. ஆனால் அல்பானி அவர்கள் ஆதாரப்பூர்வமான ஹதீஸைப் பலவீனமானது என்றும், பலவீனமான ஹதீஸை ஆதாரப்பூர்வமானது என்றும் ஹதீஸில் இல்லாததை இருக்கிறது என்றும் கூறியதற்கு ஆதாரம் உள்ளது. அல்பானி அவர்கள் சிறந்த அறிஞர் என்றாலும் மனிதர் என்ற அடிப்படையில் அவரிடமும் தவறுகள் ஏற்படவே செய்யும். இது போன்ற குறைபாடுகளுக்கு அப்பாற்பட்ட எந்த ஹதீஸ் கலை அறிஞரும் கிடையாது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்". ஏகத்துவம் , செப்டம்பர் 2005, பக்கம் 12.

உண்மை தான்! இவை அனைத்தும் அப்படியே திருவாளர் P.J.க்கு பொருந்துமா? இல்லையா! பொருத்திப் பார்ப்போம்:

பி.ஜே. அவர்கள் சரி என்று சொல்லி விட்டால் அதைக் கண்ணை மூடிக் கொண்டு ஏற்க வேண்டும் என்ற நம்பிக்கை பலரிடம் காணப்படுகிறது. ஆனால் பி.ஜே. அவர்கள் ஆதாரப் பூர்வமான ஹதீஸைப் பலவீனமானது என்றும், பலவீனமான ஹதீஸை ஆதாரப் பூர்வமானது என்றும், ஹதீஸில் இல்லாததை இருக்கிறது என்றும் கூறியதற்கு ஆதாரம் உள்ளது. பி.ஜே. அவர்கள் சிறந்த அறிஞர் என்றாலும் மனிதர் என்ற அடிப்படையில் அவரிடமும் தவறுகள் ஏற்படவே செய்யும். இது போன்ற குறைபாடுகளுக்கு அப்பாற்பட்ட எந்த அறிஞரும் கிடையாது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்தக் கூற்றும் நூற்றுக்கு நூறு உண்மைதானே. உண்மைதான் என்பதற்கு அவரது 'தத்தம் பகுதி தனித்தனிப் தலைப்பிறை ஆய்வும்", 'இந்த ஜகாத் ஓர் ஆய்வும்் போதிய சான்றுகளாகும். மேலே கூறப்பட்டுள்ள அனைத்துக் குற்றச் சாட்டுக்களையும் இந்த இரண்டு ஆய்வுகளிலுமே பார்க்க முடியும்.

மூலகர்த்தா யார்?

இதில் முக்கியமான கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய விஷயம் உண்டு. தன்னைக் கண்மூடிப்பின்பற்றும் - தக்லீது செய்யும் ஒரு கூட்டத்தை அல்பானி உருவாக்கினாரா? என்பது சந்தேகமே. அல்பானி சுயமாகக் கடிகாரத் தொழில் செய்து ஹலாலான முறையில் உழைத்து வாழ்க்கை நடத்தினார். பிரச்சாரப் பணிக்கு கூலி வாங்கவே இல்லை என அல்லாஹ்மீது ஆணையிட்டே பொய்ச் சத்தியம் செய்து கொண்டு ஐந்தாயிரம், பத்தாயிரம் என அவர் கூலி வாங்கவில்லை. ரமழான் ஒரு மாத பிரச்சாரப் பணிக்கு ரூபாய் 50,000 கூலி அல்பானி வாங்கவே இல்லை. எனவே தன்னைக் கண்மூடிப் பின்பற்றும் ஒரு கூட்டத்தை அல்பானி உருவாக்கும் அவசியம் ஏற்படவில்லை. ஆனால் தன்னைக் கண்மூடிப் பின்பற்றும் -தக்லீது செய்யும் ஒரு கூட்டத்தை சாட்சாத் பி.ஜே. உருவாக்கியுள்ளார் என்பதற்கு எண்ணற்ற ஆதாரங்களைப் பார்க்கலாம்.

"எங்களுக்கென்று ஒரு தனி பேனர் உண்டு. அந்த பேனரில் மட்டுமே மேடை ஏறி பேசுவோம். வேறு யாருடைய மேடையிலும் நாங்கள் ஏறவும் மாட்டோம். வேறு யாரையும் எங்கள் மேடையில் ஏற்றவும் மாட்டோம். மாற்றுக் கருத்து உடையவர்களுடன் ஒரே மேடையில் பேசினால் மாறுபட்டக் கருத்தைக் கேட்டுக் எங்கள் ஆதரவாளர்கள் குழம்பி விடுவார்கள்" என்று அல்பானி கூறியதாக ஆதாரமில்லை.ஆனால் பி.ஜே. அப்படிச் சொல்லி வருகிறார். எழுதி வருகிறார். மாற்றுக் கருத்துடையவர்களின் பேச்சைக் கேட்பதிலிருந்தும், அவர்களின் இதழ்களைப் படிப்பதிலிருந்தும் தனது ஆதரவாளர்களைத் தடுப்பதில் குறியாக இருக்கிறார். இதை இந்த இதழிலேயே நீங்கள் பரீட்சித்துப் பார்த்து உண்மை நிலையை கண்டறிய முடியும்.

"ஏகத்துவம் இதழில் வெளிவந்த 'ஜகாத்' ஓர் ஆய்வு" ஆக்கத்திற்கு மறுப்பு அந்நஜாத்தில் வெளிவந்துள்ளது. இரண்டு மாறுபட்டக் கருத்துக்களையும் நடுநிலையோடு படித்துப் உண்மையைக் கண்டறியுங்கள்" என்று அவரது ஆதரவாளர்களிடம் கூறி அந்நஜாத்தை நீட்டிப்பாருங்கள். அதைத் தொடுவதற்கு கூட அஞ்சுவார்கள். அந்த அளவு மூளைச் சலவைக் செய்யப்பட்டுள்ளனர். பின்னர் எப்படி மூளைச் சலவைச் செய்யப்பட்டுள்ளனர். பின்னர் எப்படி முகல்லிது நிலையிலிருந்து சுய சிந்தனை நிலைக்கு மாறுவார்கள்? அதனால் தான் "தத்தம் பகுதித் தனித்தனித் தலைப்பிறை" என்ற மூடக்கொள்கையையும், ஒரு பொருளுக்கு ஒரு முறை ஜகாத் கொடுத்து விட்டால் பின்னர் கொடுக்க வேண்டியதில்லை, சுத்தப்படுத்தப்பட்டது மீண்டும் அழுக்காகாது, சுத்தமாகவே இருக்கும் என்ற மூடக்கொள்கையையும் கண்மூடி ஏற்கும் நிலையில் இருக்கிறார்கள். ஆனால் நாமோ அந்நஜாத் படிக்கும் வாசகர்கள் அனைவரையும் ஏகத்துவம் மாத இதழ், உணர்வு வார இதழ் அது அபகரிக்கப்பட்டிருந்தாலும் படிக்கத் தூண்டுகிறோம். அவர்களது பேச்சைக் கேட்கத் தூண்டுகிறோம். முஸ்லிம்கள் குறிப்பாக வாலிபர்கள் சுய சிந்தனையாளர்களாக மாற வேண்டும் என்பதே எமது விருப்பம்.

அனாதைகளின் சொத்து!

ஏகத்துவம் கூறுகிறது:

அனாதைகளின் சொத்துக்களுக்குப் பொறுப்பேற்றவர் அதை வியாபாரத்தில் முடக்க வேண்டும். இல்லாவிட்டால் ஜகாத் கொடுத்தே அந்தச் சொத்து கரைந்து விடும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக வரும் எந்தவொரு அறிவிப்பும் ஆதாரப்பூர்வமானது அல்ல. எனவே இதன் அடிப்படையில் எந்தச் சட்டத்தையும் வகுக்க முடியாது.

இது தவிர உமர்(ரழி) அவர்களின் சொந்தக் கூற்றாக மேற்கண்ட கருத்து தாரகுத்னீ 2|110, பைஹகீ 4\107 மற்றும் 6\25, முஸ்னத் ஷாஃபி 1\204, முஅத்தா 1\251, முஸன்னப் அப்துல்ரஸாக் 4\69 ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் குர்ஆனையும், நபி(ஸல்) அவர்கள் சொல், செயல், அங்கீகாரத்தையும் மட்டுமெ பின்பற்றவேண்டும். மற்ற எவருக்கும் வஹீ வராது என்பதால் அதை வைத்து எந்தச் சட்டத்தையும் வகுக்க முடியாது என்று எழுதியுள்ளனர். ஏகத்துவம் , செப்டம்பர் 2005, பக்கம் 24.

விவஸ்தைக் கெட்டவர்கள்!

இங்கு உமர்(ரழி) அவர்களது கூற்று ஆதாரப்பூர்வமானது என்பதை ஒப்புக்கொண்டு அதை ஏற்க மறுக்கிறார்கள். இவர்களது எழுத்து நபிதோழர்களுக்கு வஹீ வரவில்லை. ஆனால் எங்களுக்கு வஹீ வருகிறது என்று கூறுவது போல் இருக்கிறது. நபித்தோழர்களின் எப்படிப்பட்ட கருத்துக்களை ஏற்கலாம்? எப்படிப்பட்ட கருத்துக்களை ஏற்கக்கூடாது என்ற விபரம் தெரியாத விவஸ்தைக் கெட்டவர்களாக இருக்கிறார்கள் இந்த தவ்ஹீது மவ்லவி புரோகிதர்கள்.

எப்படி அணுக வேண்டும்?

"அனாதைகளின் சொத்துக்களுக்கு பொறுப்பேற்றவர்கள் ஜகாத்தால் அந்தச் சொத்து கரைந்துவிடும் என்று அஞ்சி வியாபாரத்தில் முடக்காதீர்கள். அதற்கு ஜகாத்தும் கொடுக்காதீர்கள்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளதாக ஓர் ஆதாரப்பூர்வமான ஹதீஸை எடுத்துக்காட்டி, உமர்(ரழி) அவர்களின் கூற்று அதற்கு முரணாக இருக்கிறது என்று கூறி அதை மறுத்தால் அதில் நியாயம் இருக்கிறது. உதாரணமாக நபி(ஸல்) அவர்கள் ஒரே நேரத்தில் கூறப்பட்ட மூன்று தலாக்குகள் ஒரே தலாக்தான். கணவன், மனைவி பிரிய வேண்டியதில்லை என்று கூறியிருப்பது ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் காணப்படுகிறது. அதற்கு மாறாக உமர்(ரழி) அவர்கள் ஒரே நேரத்தில் மூன்று தலாக் சொன்னாலும் அது செல்லுபடியாகும்; கணவன் மனைவி பிரிந்து விட வேண்டும் என்று செயல் படுத்தினார்கள்.

இங்கும் உமர்(ரழி) தவறு செய்து விட்டார்கள் என்று நாம் கூறக்கூடாது. அவர்கள் யாரையும் தக்லீது செய்யாமல் சொந்த ஆய்வில் அப்படி ஒரு முடிவுக்கு வந்தார்கள். அவர்களுக்கு இரண்டு நன்மைகளுக்குப் பதிலாக ஒரு நன்மை நிச்சயமாகக் கிடைத்திருக்கும். ஆட்சி அதிகாரத்தில் அவர்கள் இருந்ததால் அதனை அமுல்படுத்தவும் செய்தார்கள். அல்லாஹ் அவர்களை மன்னிக்கலாம். அவர்களின் சேவை, தியாகம் காரணமாக அதை நன்மையாக மாற்றியும் கொடுக்கலாம். இது அல்லாஹ்வின் புறத்தில் உள்ளது. ஆனால் அதில் நபி(ஸல்) அவர்களின் நடைமுறை தெள்ளத்தெளிவாக நமக்குக் கிடைத்திருப்பதால். நாம் நபி(ஸல்) அவர்களையே பின்பற்ற வேண்டும். இதுதான் நமக்கிடப்பட்ட கட்டளையாகும். இங்கு இதுதான் நேரான வழியாகும்.

முரணான ஹதீஸ் இல்லை!

ஆனால் இந்த ஜகாத் விஷயத்தில் உமர்(ரழி) அவர்களின் கருத்துக்கு நேர் முரணான கருத்துடைய ஒரு ஆதாரப்பூாவமான ஹதீஸும் இல்லாத நிலையில் நாம் என்ன முடிவுக்கு வர வேண்டும்? இந்த விஷயத்தில் நபி(ஸல்) அவர்களோடு நெருங்கிப் பல ஆண்டுகள் பழகி அவர்களின் நன்மதிப்பைப் பெற்ற உமர்(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களின் கருத்தையே பிரதிபலிக்கிறார்கள் என்றே நல்லெண்ணமே கொள்ள வேண்டும். அந்த கருத்து தவறு என்பதற்கு அதற்கு முரணான கருத்துடைய நபி(ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் இருந்தால் மட்டுமே, நாம் உமர்(ரழி) அவர்களின் கருத்தை விட்டு நபி(ஸல்) அவர்களின் கருத்தை எடுத்து நடக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

நபிக்குப் பிறகு வஹீ இல்லை!

தெளிவான ஆணித்தரமான ஆதாரமில்லாமல்,கலீஃபாக்களின் நடைமுறைகளையோ காலம் காலமாக நடைமுறையிலிருக்கும் செயல்பாடுகளையோ மறுத்துக் கூறும் உரிமை பின்னால் வந்த நமக்கு இல்லை. எப்படி நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு அன்று யாருக்கும் 'வஹீ' வரவில்லையோ, அதே போல் இன்றும் நம்மில் யாருக்கும் வஹீ வர முடியாது. எனவே எவரது சொந்தக் கருத்து யூகம், கற்பனை, வார்த்தை ஜாலம் , வாதத் திறமை ஒரு போதும் மார்க்கமாக முடியாது.

வருடா வருடம் ஜகாத் கடமை என்பது 1426 வருடங்களாக முஸ்லிம்களிடையே நடைமுறையில் இருப்பதால், அதற்கு மாறாக மாதாமாதம், வாரா வாரம், தினசரி, தினசரி ஐந்து வேளை என்றெல்லாம் இவர்கள் தங்களின் கற்பனையை வளர்த்திருப்பது இவர்களின் அறிவீனமும், ஆணவமுமேயன்றி அறிவார்ந்த வாதமல்ல.

அனாதைகளின் பாதுகாவலர்கள், அனாதைகளின் சொத்தை வியாபாரத்தில் ஈடுபடுத்தக் கூடாது, அநாதைகளுக்கு அநீதி இழைப்பதாகும் என்று அவர்கள் எழுதி இருப்பது சுத்த அபத்தமாகும். 17:34 அனாதைகளின் சொத்தை அவர்கள் பருவமடைவது வரை அழகிய முறையிலேயே தவிர நெருங்காதீர்கள்! என்ற எச்சரிக்கை அதை அபகரிக்கும் நோக்கில் செயல்படக் கூடாது என்று எச்சரிக்கிறதே அல்லாமல், அதை அபிவிருத்தி செய்வதும் கூடாது என்ற கருத்து அந்த ஆயத்தில் இல்லை. பருவ வயதை அடையாததால் அனாதையினது சம்மதம் பெறும் வாய்ப்பில்லை; அதனால் வியாபாரத்தில் ஈடுபடுத்தும் உரிமை இல்லை என்பதும் சுத்த பிதற்றலாகும். வியாபாரத்தில் ஈடுபடுத்த, அதை விற்று வேறு நல்ல சொத்து வாங்க இப்படி அனைத்து உரிமைகளும் பொறுப்பாளனுக்கு உண்டு என்பதுதான் நாட்டுச் சட்டமும், மார்க்கச் சட்டமுமாகும்.

கூலி வேலை செய்த நபர் தனது கூலியை வாங்காமல் விட்டுச் சென்றதை அவரது அனுமதி இல்லாமல், தொழிலில் ஈடுபடுத்தி அதை அபிவிருத்தி செய்து அதை அப்படியே பின்னர் வந்து கேட்ட போது ஒப்படைத்த, குகையில் அடைபட்ட தோழர்களில் ஒருவரின் சம்பவம் பற்றிய ஹதீஸ் இதற்குப் போதிய ஆதாரமாகும். அதனால்தான் அனாதைகளுக்கு நல்லது செய்யும் நோக்கில் நெருங்குங்கள்; கெட்டது செய்யும் அபகரிக்கும் நோக்கில் நெருங்காதீர்கள்; அது பெரும் குற்றம் என்று அல்லாஹ் எச்சரிக்கிறான்.

அனாதையின் சொத்தை வியாபாரத்தில் போடாமல் இருந்தால் இவர்களின் வாதப்படி ஜகாத் கொடுத்தே கரைவதற்குப் பல வருடங்கள் ஆகும். ஆனால் வியாபாரத்தில் போட்டு, நட்டம் ஏற்பட்டால் ஒரு வியாபாரத்தில் போட்டு, நட்டம் ஏற்பட்டால் ஒரு மாதத்திலேயே ஏன் ஒரு நாளில் கூட அனாதையின் சொத்து அழிந்து விடும் என்று எழுதி இருக்கிறார்கள். ஏகத்துவம், செப்டம்பர் 2005, பக்கம் 26.

தங்களின் அனுபவத்தைச் சொல்கிறார்கள்!

கேவலம்! தங்களின் சத்தில்லாத சொத்தை வாதத்தை நிலை நாட்ட எப்படிப்பட்ட ஈனத்தனமான வாதங்களை எல்லாம் எடுத்து வைக்கிறார்கள் பார்த்தீர்களா? புரோகிதத் தொழிலைச் செய்வதைவிட வேறு எந்த தகுதியும் இல்லாத இவர்கள் அனாதைகளின் சொத்தை ஒரு மாதத்திலே என்ன? ஒரு நாளில் கூட அழித்து விடலாம். இவர்கள் மளிகைக் கடை வைத்து போட்ட முதல் அனைத்தையும் இழந்து போண்டியான அனுபவத்தை வைத்து இப்படி எழுதியுள்ளார்களோ? என்னவோ? அமானித மோசடியில் பேர் போனவர்கள் அனாதைகளின் சொத்தை அபகரிக்க கேட்கவா வேண்டும்? உள்ளச்சத்தோடு , மறுமையில் கூலியை எதிர்பார்த்து அனாதைகளின் சொத்தை பராமரிப்பவர்கள் முறைதவறி அதில் சாப்பிடமாட்டார்கள். தங்கள் சொத்தைப் போல் அக்கறையாகப் பாடுபட்டு அதை அபிவிருத்தி செய்யவே முற்படுவார்கள்; ஈனர்களும், அமானித மோசடியாளர்களும் அனாதையின் சொத்தை வியாபாரத்தில் ஈடுபடுத்தித்தான் அழிக்க வேண்டும் என்பதில்லை. அவற்றைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டே அவற்றைச் சாப்பிட்டே அழித்து விடுவார்கள். இதுவே நிதர்சன உண்மை.

இரு பாகம் பாரீர்!

இந்த தவ்ஹீத் புரோகித மவ்லவிகளின் இரு முரண்பட்ட முகங்களைப் பாருங்கள். ஆரம்பத்தில் ஜகாத் வருடா வருடம் கொடுத்து வந்தால் அந்த சொத்து அழிந்து இல்லாமல் போய் விடும். அப்படி ஒரு சட்டத்தை அல்லாஹ் கொடுத்திருப்பானா? என்று தங்கள் ஆதரவாளர்களை உசுப்பேற்றினார்கள். அவர்களின் ஆதரவாளர்களுக்கும், பணம் படைத்த செல்வந்தர்களுக்கும் இது நியாயமான காரணமாகத் தெரிந்தது. அவர்கள் அனவைரின் வாயிலிருந்தும் வருடா வருடம் ஜகாத் கொடுத்தால் சொத்து அழிந்து விடுமே என்றே வந்து கொண்டிருந்தது. கோரஸாகப் பாடித்திரிந்தார்கள். இது அனாதைகள் பற்றிய பேச்சல்ல. பெரியவர்கள், தொழில் துறைகளில், வியாபாரங்களில் ஈடுபட்டிருப்பவர்கள்: வியாபாரம், தொழிலில் ஈடுபடுத்தி தங்கள் சொத்தை பல மடங்கு ஆக்கும் வாய்ப்பை நிறையவே பெற்றவர்கள். அப்படியே தொழிலில் ஈடுபடுத்தாமல் ஜகாத் கொடுத்து வந்தாலும் அது நிஸாபைத் தொட்டதும் ஜகாத் கடமை இல்லை. இந்த நிலையில் ஜகாத் வருடா வருடம் கொடுத்து சொத்து கரைந்து இல்லாமல் போய் விடும் என ஒப்பாரி வைத்து தங்கள் ஆதரவாளாகளை மயக்கியவர்கள், அதற்கு மாறாக இந்த ஹதீஸை மறுக்க என்ன எழுதுகிறார்கள் பாருங்கள்:

ஏகத்துவம் கூறுகிறது:

"ஆனால் இவர்கள் வாதப்படியே ஆண்டுக்கு ஒரு முறை ஜகாத் கொடுப்பதாக வைத்துக் கொண்டாலும் ஒரு காலத்திலும் முழுமையாகக் கரைவதற்கு வாய்ப்பே இல்லை. ஒரு வயதுடைய அல்லது அன்று பிறந்த குழந்தை அனாதையாகி விட்ட நிலையில் அதன் சொத்தை ஒருவன் பராமரிக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது என்று வைத்துக் கொள்வோம். அனாதை பருவ வயது அடையும் வரை தான் பராமரிக்க வேண்டும். அதாவது அதிகபட்சமாக 15 வருடங்கள் வரை ஒருவன் அனாதையின் சொத்தைப் பராமரிக்க வேண்டிய நிலை ஏற்படும். சொத்தில் இரண்டரை சதவிகிதம் ஜகாத் என்ற அடிப்படையில் இதைக் கணக்கிடுவோம். ஒரு இலட்ச ரூபாய் அனாதைச் சொத்தை ஒருவர் பராமரிக்கிறார். இவர்களின் வாதப்படி ஓர் ஆண்டுக்கு இரண்டரை சதவிகிதம் ஜகாத் கொடுக்க வேண்டும். அதாவது 2500 ரூபாய் கொடுக்க வேண்டும். அடுத்த வருடம் 2437 ரூபாய் ஐம்பது காசுகள் கொடுக்க வேண்டும். 15 வருடங்கள் இப்படியே கொடுத்தால் கூட அதிக பட்சமாக 31,598 ரூபாய் தான் ஜகாத் கொடுக்க வேண்டி வரும்; மீதி 68,402 ருபாய் கண்டிப்பாக மீதம் இருக்கும். அப்படிப் பார்க்கும் போது மேற்கண்ட பலகீனமான ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது போல் ஜகாத் கொடுத்தே சொத்து கரைந்து விடுவதற்கோ அல்லது சொத்தை ஜகாத் விழுங்கி விடுவதற்கோ வாய்ப்பில்லை. ஏகத்துவம் , செப்டம்பர் 2005, பக்கம் 26,27

 

தொழில், வியாபாரத்தில் ஈடுபடுத்தப்படாத அனாதைகளின் சொத்தே கரைந்து விடாது என்று இந்த அளவு புள்ளி விபரங்களுடன் விளக்கி உள்ளவர்கள். பின் எப்படி தொழில், வியாபாரங்களில் ஈடுபடுத்தி தங்களின் சொத்தைப் பன்மடங்காக்கும் வாய்ப்புள்ளவர்கள் வருடா வருடம் ஜகாத் கொடுத்தால் சொத்து கரைந்து விடும் என்று, எந்த முகத்தோடு வாதிட்டு தங்கள் ஆதரவாளர்களையும், செல்வந்தர்களையும் ஏமாற்றினார்கள். இரட்டை முகம், இரட்டை வேடம், நயவஞ்சகம் என்பதெல்லாம் இது தானோ?

ஒரு வருடம் பூர்த்தியாகாதவரை ஜகாத் இல்லை!

அபுதாவூத், பைஹகீ 4\95, 4\137 ஆகிய நாட்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. "ஒரு வருடம் முழுமையடையும் வரை ஜகாத் இல்லை" என்ற ஹதீஸை விமர்சித்து,

ஏகத்துவம் கூறுகிறது:

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் நம்பகமானவர்கள் இடம் பெறுவதால் இது ஆதாரப்பூர்வமானது என நாஸிருத்தீன் அல்பானி கூறுகின்றனர். இதன் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் என்பதைக் கவனித்த அல்பானீ இதிலுள்ள மற்றொரு குறைபாட்டைக் கவனிக்கத் தவறி விட்டார்.

எனவே இதுபற்றி விரிவாக நாம் விளக்கியாக வேண்டும். இதன் அறிவிப்பாளர் தொடர் பின்வருமாறு அமைந்துள்ளது.

1. அலீ

2. ஹாரிஸ் அல் அஃவர் - ஆஸிம் பின் ளமுரா

3. அபூ இஸ்ஹாக்

4. ஸுஹைர்

5. அப்துல்லாஹ் பின் முஹம்மது

(திரும்பவும் எழுதியுள்ளனர்) அதாவது அப்துல்லாஹ் பின் முஹம்மது என்பவர் தனக்கு ஸுஹைர் கூறியதாகத் தெரிவிக்கிறார். ஸுஹைர் என்பவர் தனக்கு அபூ இஸ்ஹாக் கூறியதாகக் குறிப்பிடுகிறார். அபூ இஸ்ஹாக் என்பவர் தனக்கு ஆஸிம், ஹாரிஸ், ஆகிய இருவர் கூறியதாகக் கூறுகிறார். ஆஸிம், ஹாரிஸ் ஆகிய இருவரும் தமக்கு அலீ(ரழி) கூறியதாக குறிப்பிடுகிறார்கள்.

இந்தத் தொடரில் அலீ(ரழி) அவர்களிடம் கேட்ட இருவரில் ஹாரிஸ் என்பவர் பெரும் பொய்யர் என்றாலும் அவர்களிடம் செவியுற்ற மற்றொரு அறிவிப்பாளர் ஆஸிம் பின் ளமுரா என்பவர் ஏற்கத் தக்கவராவார். எனவே இந்த அடிப்படையில் இரு சரியான அறிவிப்பாளர் தொடரைக் கொண்டதாக அமைந்து விடுகின்றது. எனவே இது சரியான அறிவிப்புத்தான் என்று அல்பானி கூறுகிறார்.

ஆனாலும் அலீ(ரழி) அவர்கள் தமது சொந்தக் கூற்றாக இதைக் கூறினார்களா? அல்லது நபி(ஸல்) அவர்கள் கூற்றைத் தெரிவிக்கிறார்களா? இது பற்றி மேற்கண்ட ஹதீஸில் திட்டமாகக் கூறப்படவில்லை.

அலீ(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களின் கூற்றை எடுத்துக் கூறுவதாகத்தான் நினைக்கிறேன். என்று ஸுஹைர் என்பவர் யூகத்தின் அடிப்படையில் முடிவு செய்ய முடியாது . நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றால் அதை அலீ(ரழி) அவர்கள் தெளிவாகக் கூறி இருக்க வேண்டும். ஆனால் ஸுஹைர் என்பவர் யூகமாகக் கூறுவதால் இது நபிமொழியாக ஆகாது.

எனவே இதன் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் என்றாலும் இக்கூற்று அலீ(ரழி) அவர்களின் சொந்தக்கூற்றே ஆகும். எனவே இதையும் ஆதாரமாகக் கொண்டு எந்த முடிவும் எடுக்க முடியாது.

ஏகத்துவம், செப்டம்பர் 2005, பக். 39,40

ஆணவத்திற்கும் அளவில்லையா?

இதைவிட தெனாவட்டான அகம்பாவமான, ஆணவமான ஒரு எழுத்து இருக்க முடியுமா? 1426 ஆண்டுகளாக முஸ்லிம்கள் கடைபிடித்து வரும் ஒரு வருடம் முழுமையடைந்த பின்னரே ஜகாத் கடமையாகும் என்ற உண்மையில் இவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு விட்டதாம். அதாவது இது நபி(ஸல்) அவர்களின் கூற்றாக இருக்க முடியாது. அலீ(ரழி) அவர்களின் கூற்று என அறுதியிட்டுக் கூறுகிறார்கள்.

அலீ(ரழி) அவர்கள் நபியவர்களின் கூற்றறை எடுத்துக் காட்டியதாக நினைக்கிறேன் என்று அலீ(ரழி) அவர்களைச் சந்தித்தாராத ஸுஹைர் என்பவர் யூகத்தின் அடிப்படையில் கூறுகின்றார் என்று நான்காவது தலைமுறையைச் சேர்ந்த ஸுஹைருடைய கருத்தை மறுப்பவர்கள் , 1426 வருடங்களுக்கு பின்னர் வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்கள் அலீ(ரழி) அவர்களை சந்திப்பதற்கு வாய்ப்பே இல்லாத இவர்கள். எப்படி இது அலீ(ரழி) அவர்களின் சொந்தக்கூற்று என அறுதியிட்டுக் கூறுகிறார்கள். இது ஆணவமும், அகம்பாவமும் இல்லாமல் வேறு என்னவாம்? இவர்களின் இந்தக்கூற்று இவர்களின் யூகத்தின் அடிப்படையிலானது என்பதை இவர்களால் மறுக்க முடியுமா? பல நூறு தலைமுறைக்கு மிக மிகப் பின்னால் வந்த இவர்களின் யூகத்தைவிட நாலாவது தலைமுறையில் உள்ள ஸுஹைனின் யூகம் எந்த வகையில் தரம் தாழ்ந்தது? கூறுவார்களா?

நவீன முஜ்தஹித்(?)

நபி(ஸல்) அவர்களின் மகளைத் திருமணம் செய்த மருமகன், நபி(ஸல்) அவர்களுடன் பல்லாண்டுகள் பழகியவர்கள், மார்க்கத்தை நபி(ஸல்) அவர்களிடமிருந்து நேரடியாகக் கற்றவர்கள், "ஒரு வருடம் முழுமையடையும் வரை ஜகாத் இல்லை என்று விளங்கியது தவறு என்றும் அது நபி வழியல்ல என்றும், அதற்க மாறாக இன்று 1426 ஆண்டுகளுக்குப் பிறது மக்களுடைய நடைமுறையில் இருப்பதற்கு முரணாக ஜகாத் ஒரு வருடம் பூர்த்தியாகாத நிலையில் உடனுக்குடன் ஒரு முறை மட்டுமே கொடுத்தால் போதும் என்று இந்த நவீன முஜ்தஹிதுகள்(?) கூறுவது தான் சரி என்றும் கூறுவது அப்பட்டமான தலைக்கணம் அல்லாமல் வேறு என்ன?

ஆதாரப்பூர்வமான ஹதீஸ் உண்டா?

"ஒரு வருடம் முழுமை அடைய வேண்டியதில்லை; ஒரு முறை ஜகாத் கொடுத்தால் போதும் என்ற கருத்தைச் சொல்லும் ஒரு ஆதாரப்பூர்வமான ஹதீஸை இவர்கள் எடுத்து மக்கள் மன்றத்தில் வைத்து விட்டு. அதன் பின்னர் இந்த வாதங்களை வைத்தாலாவது இவர்களின் இந்த அகம்பாவக் கூற்றை ஓரளவாவது ஏற்கலாம். அல்லது ஒரு வருடம் பூர்த்தியான பின்னரே ஜகாத் கடமையாகும் என இப்போது புதிதாக யாரும் சொல்லி அதை நடைமுறைப்படுத்த முன் வந்தாலாவது இவர்களின் கூற்றைப் பரிசீலிக்கலாம்.

இவர்களின் வாதப்படியே இது அலீ(ரழி) அவர்களின் கூற்றாக இருந்து, கடந்த 1426 ஆண்டுகளாக முஸ்லிம்களின் நடைமுறையில் கடை பிடித்து வரும் ஒன்றை மறுத்துக் கூறுவதற்கு, அதற்கு முரணான கருத்தைக் கூறும் நபி(ஸல்) அவர்களின் ஆதாரப்பூாவமான ஹதீஸ் இவர்களிடம் இருக்கிறதா? இல்லையே? அல்லது இவர்களுக்க வஹீ(?) வந்து அதன் மூலம் அறிவிக்கிறார்களா? அனாதைகளின் சொத்து விஷயத்தில் எந்தவித ஹதீஸ் ஆதாரமுமில்லாமல் உமர்(ரழி) அவர்களின் கருத்தை மறுத்தது போல், இங்கு எந்த வித ஆதாரப்பூர்வமான ஹதீஸும் இல்லாமல் அலீ(ரழி) அவர்களின் கருத்தை மறுத்தது போல், இங்கு எந்த வித ஆதாரப்பூர்வமான ஹதீஸும் இல்லாமல் அலீ(ரழி) அவர்களின் கருத்தாக இவர்களாக யூகம் செய்து கொண்டு 1426 வருடங்களாக முஸ்லிம்களிடையே எந்த பிரிவினரிடமும் எவ்வித கருத்து வேறுபாடும் இல்லாத ஒரு வருடம் முழுமை அடைந்தால் தான் ஜகாத் கடமையாகும் என்ற பேருண்மையை இந்த நவீன முஜ்தஹிதுகள்(?) மறுக்கிறார்கள். அவ்வளவுதான்.

வருடா வருடம் ஜகாத் பற்றிய ஹதீஸ்!

அடுத்து வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று கூறும் ஹதீஸை மறுக்கும் லட்சணம் பாரீர்:

ஏகத்துவம் கூறுகிறது:

மூன்று காரியங்களை யார் செய்கிறாரோ அவர் ஈமானின் ருசியை சுவைத்து விட்டார். 1. வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நம்பி அல்லாஹ்வை மட்டும் வணங்குதல் 2. ஒவ்வொரு வருடமும் தனது பொருளின் ஜகாத்தை மன விருப்பத்துடன் வழங்குதல் 3. கிழப் பருவம் அடைந்து, சொறி பிடித்தது, நோயுற்றது, அற்பமானது ஆகியவற்றைக் கொடுக்காமல் நடுத்தரமானதை வழங்குதல் ஆகிய மூன்று காரியங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று இந்த ஹதீஸை எடுத்து எழுதிவிட்டு அபூதாவுதின் அறிவிப்பை மறுத்துக் கூறும் லட்சணம் பாரீர்!

அபூதாவூதில் இடம் பெற்ற ஹதீஸில் இரண்டு குறைபாடுகள் உள்ளன. இதை அறிவிப்பாளர் இடையே தொடர்பு விடுபட்ட ஹதீஸ் என்று இமாம் முன்திரி அவர்கள் கூறுகின்றார்கள். அபுதாவூத் அவர்கள் தமக்கு அறிவித்தவரைக் கூறவில்லை. அம்ரு பின் ஹாரிஸ் குடும்பத்தாரிடம் அப்துல்லாஹ் பின் ஸாலிமுடைய ஏடு இருந்தது. அதில் வாசித்தேன் எனக்கூறி மேற்கண்ட ஹதீஸை பதிவு செய்கிறார்கள்.

அப்துல்லாஹ் பின் ஸாலிம் அவர்களின் ஏட்டை அப்துல்லாஹ் பின் ஸாலிமிடமிருந்து அபூதாவூத் வாசிக்கவில்லை. அம்ரு பின் ஹாரிஸ் என்பரின் குடும்பத்தாரிடம் வாசித்தேன் என்று கூறுகிறார். அம்ரு பின் ஹாரிஸ் குடும்பத்தார் என்றால் யார்? அவர்களின் நம்பகத்தன்மை எத்தகையது? அப்துல்லாஹ் பின்ன ஸாலிம் என்பவரின் ஏடு என்று கூறி வேறு எதையாவது காட்டக் கூடியவர்களா? என்ற விபரம் ஏதுமில்லை. ஒருவரின் குடும்பத்தார் என்பது அவரது தாய், தந்தை, அண்ணன், தம்பி, மனைவி, மக்கள் என பலரையும் குறிக்கக் கூடியது. அம்ரு பின் ஹாரிகளுடைய குடும்பத்தார் யார் என்பதும், அவர்களின் நம்பகத்தன்மை எத்தகையது என்பதும் நிரூபணமாகவில்லை என்பதால் இது பலவீனமானதாகும்.

மேலும் அம்ரு பின் ஹாரிஸ் என்பவரின் குடும்பத்தினர் என்று கூறப்படுவதில் அம்ருபின் ஹாரிசுடைய நம்பகத் தன்மையே நிரூபிக்கப்படவில்லை என்பதை முன்னரே கண்டுள்ளோம். நம்பகத்தன்மை நிரூபிக்கப்படாத ஒருவரின் குடும்பத்தார் வைத்திருந்த ஏட்டில் வாசித்தேன் என்று அபூதாவூது கூறுவதிலிருந்தே இதன் பலவீனம் தெளிவாகத் தெரிகிறது….. பலவீனமான ஒரு ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு மிக முக்கியமான கடமைகள் வணக்கத்தைத் தீர்மானிப்பது எந்த வகையிலும் நியாயமாகாது.

இது தவிர இதை நபி(ஸல்) அவர்களிடமிருந்து அறிவிப்பவராக இருந்த அப்துல்லாஹ் பின் முஆவியா அல்காளிரீ என்பவரின் பெயர் இடம் பெற்றுள்ளது. இவர் நபிதோழர் என்று சில நூற்களில் எழுதப்பட்டிருந்தாலும் நபிதோழர் என்பதை முடிவ செய்வதற்குரிய அளவுகோல் இவருக்குப் பொருந்தவில்லை. நபிதோழர் என்று பரவலாக அறியப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த ஒரு ஹதீஸில் இவர் பெயர் இடம் பெறுவதைத் தவிர வேறு விபரம் ஏதுமில்லை.

"நான் நபியிடம் கேட்டேன்" என்பது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி அவர் அறிவிக்க வேண்டும். இந்த ஹதீஸில் , "நான் நபியிடம் கேட்டேன்" என்பது போன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படவில்லை. மாறாக நபி சொன்னார்கள் என்ற வார்த்தை தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த அளவு கோலின் படியும் இவர் ஸஹாபி நிரூபணமாகவில்லை.

அல்லது ஒரு நபித்தோழரோ அல்லது ஒரு தாபியீனோ இவரைப் பற்றி நபித்தோழர் என்று சான்றளிக்க வேண்டும். அப்படி யாரும் சான்றளிக்கவில்லை. தக்ரீப் 2\672ல் நபிதோழரை தீர்மானிப்பதற்குரிய இந்த அளவு கோல் கூறப்பட்டுள்ளது. நபி தோழரைத் தீர்மானிப்பதற்குதிய இந்த அளவு கோலின் படி இவர் நபித்தோழர் என்பது நிரூபணமாகவில்லை. எனினும் சில நூற்களில் இவரை நபி தோழர் என்று கூறியிருப்பது ஏன் என்பது புரியவில்லை.

இப்படிப்பட்ட பல குறைபாடுகள் கொண்ட ஹதீஸை ஆதாரமாகக் கொண்டுதான் தங்கள் வாதத்தை நிறுவுகின்றனர். ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கே மீண்டும் மீண்டும் வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று கூறுவோர் அதை நிரூபிக்க எந்தச் சான்றையும் முன் வைக்கவில்லை. எல்லாம் ஒவ்வொன்றாக விழுந்து விட்ட நிலையில் சம்பந்தமில்லாத ஹதீஸ்களைக்கூறி சொந்த ஊகத்தை அதில் புகுத்தி சமாளிக்க முயல்கின்றனர்.

ஏகத்துவம், செப்டம்பர் 2005, பக்கம் 41,44,45,46

யூதர்களின் மீடியாபலம் போல்!

தாங்கள் செய்யும் தவறுகளை யூதர்களைப் போல் தங்கள் மீடியா பலத்தைக் கொண்டும், பக்தர்களின் பிரச்சார பலத்தைக் கொண்டும் மிக எளிதாக மற்றவர்கள் மீது சுமத்தி தாங்கள் தப்பித்து விடும் தந்திரத்தில் தவ்ஹீத் மவ்லவிகள் சாமர்த்தியசாலிகள், தினசரியோ, வாரா வாராமோ, மாதா மாதமோ பொருள் கிடைத்தவுடன் ஜகாத் ஒரு முறை கொடுத்தால் போதும், மீண்டும், மீண்டும் கொடுக்கத் தேவையில்லை என்று கூறும் ஆதாரப்பூர்வமான ஹதீஸை எடுத்து வைக்க வக்கில்லாதவர்கள், தங்களின் அனுமானங்கள் உளறல்கள் இவற்றைக் கொண்டு சொந்த ஊகத்தைப் புகுத்தி சமாளித்துக் கொண்டு மற்றவர்கள் அப்படி சமாளிக்கிறார்கள் என சாமார்த்தியமாக எழுதி இருக்கிறார்கள்.

சுய கற்பனைகளே!

மேலே அவர்கள் எடுத்து எழுதியுள்ளவைகளில் பெரும்பாலானவை அவர்களின் கற்பனைகளும் யூகங்களுமே அல்லாமல் அன்றைய ஹதீஸ் கலா வல்லுனர்கள் கிளப்பிய சந்தேகங்கள் இல்லை.

இது அறிவிப்பாளர்கள் இடையே தொடர்பு விடுபட்ட ஹதீஸாம். காரணம் அபூதாவூது அவர்கள் தமக்கு அறிவித்தவரை கூறவில்லையாம். அம்ரு பின் ஹாரிஸ் குடும்பத்தாரிடம் அப்துல்லாஹ் பின் ஸாலிமுடைய ஏடு இருந்தது, அதில் வாசித்தேன் எனக்கூறி மேற்கண்ட ஹதீஸை பதிவு செய்திருக்கிறாராம். தொடர்பு விடுபட்டதற்கு நேரடியாகக் கேட்காமல் அவரது ஏட்டிலிருந்து எடுத்து எழுதி விட்டது தான் காரணமாம்.

பி.ஜே. சொன்னதை ஏற்கமாட்டார்கள்?

பி.ஜே. எழுதிய ஒரு நூலிலிருந்து அல்லது அவரது குர்ஆன் மொழி பெயர்ப்பிலிருந்த ஒன்றை எடுத்து எழுதி இருந்தால், அதற்கும் பி.ஜே.க்கும் சம்பந்ததே இல்லை; பி.ஜே. சொன்னதாக ஏற்க முடியாது என்று கூறுவார்கள் போலும்.

மேலும் அம்ரு பின் ஹாரிஸ் குடும்பத்தாரிடமிருந்து அந்த ஏடு கிடைத்துள்ளது. அம்ரு பின் ஹாரிஸ் நம்பகமானவரல்ல. அவரது குடும்பத்தார் யார் என்பதும் அவர்களின் நம்பகத்தன்மை எத்தகையது என்பதும் நிரூபணமாகவில்லை என்பதால் இது பலவீனமானது என காதில் பூ சுற்றி இருக்கிறார்கள். பி.ஜே.யினுடைய ஒரு ஏடோ, குர்ஆன் தமிழரையோ ஒரு நம்பகமற்றவரின் குடும்பத்தாரிடம் இருந்தால், அவர்களது நம்பத்தன்மை தெரியாததால், பி.ஜே. ன் ஏடும், குர்அன் தமிழரையும் பலவீனமானது. எனவே குப்பைத் தொட்டியில் போட்டு விட வேண்டும் என்பார்களா?

அப்துல்லாஹ் பின் ஸாலிம் அவர்களின் ஏட்டை அப்துல்லாஹ் பின் ஸாலிமிடமிருந்து அபூதாவூது வாசிக்கவில்லை. அம்ரு பின் ஹாரிஸ் என்பாரின் குடும்பத்தாரிடம் வாசித்தேன் என்று கூறுகிறாராம். அதனால் அறிவிப்புத் தொடர் விடுபட்டுள்ளது. நம்பகத்தன்மையும் இல்லை என உளறி இருக்கிறீர்களே?

பி.ஜே. நூல்களையும், அவரது தமிழுரையையும் இனிமேல் யார் வாசிப்பதாக இருந்தாலும் பி.ஜே.யிடமிருந்து தான் வாசிக்க வேண்டும். வேறு யாரிடமிருந்து வாசித்தாலும் அது தொடர்பு துண்டித்ததாகவும், நம்பகத் தன்மை அற்றதாகவும் இருக்கும் என இவர்கள் கூறுவார்களா?

அல்லது இமாம் அபூதாவூது அவர்கள் அந்த ஏடு அப்துல்லாஹ் பின் ஸாலிம் அவர்களின் ஏடுதானா? என்பதை பரிசீலிக்காமல், ஆராயாமல், உண்மையை அறியாமல் இந்த தவ்ஹீத் மவிலவிகளின் குருட்டு பக்தர்களைப் போல் கண்ணை மூடிக்கொண்டு பதிவு செய்து விட்டார்களா? அந்த ஏடு அப்துல்லாஹ் பின் ஸாலிமுடைய ஏடு என்பதில் சந்தேகம் இருந்தால் அந்தப் பதிவிலேயே இமாம் அபுதாவூது அதைச் சுட்டிக் காட்டி இருப்பார்களே. 1200 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று இந்த தவ்ஹீது மவ்லவி புரோகிதர்கள் வஹீ(?) மூலம் கண்டறிந்து விமர்சிக்கும் வகையில் விட்டு வைத்திருப்பார்களா?

ஏகத்துவம் கூறுகிறது:

நம்பகத்தன்மை நீரூபிக்கப்டாத ஒருவரின் குடும்பத்தார் வைத்திருந்த ஏட்டில் வாசித்தேன் என்று அபூதாவூத் கூறுவதிலிருந்தே இதன் பலவீனம் தெளிவாகத் தெரிகிறது. ஏகத்துவம், செப்டம்பர் 2005, பக்கம் 45

'அம்ரு பின் ஹாரிஸ் குடும்பத்தாரிடம் இருந்து அப்துல்லாஹ் பின் ஸாலிமுடைய ஏட்டில் வாசித்தேன்' என்றே அபூதாவூது கூறுகிறார். 'நம்பகத்தன்மை நிரூபிக்கப்படாத ஒருவரின் குடும்பத்தார் வைத்திருந்த ஏட்டில் வாசித்தேன்' என்று அபூதாவூது கூறுவதாக எழுதியிருப்பது இவர்களின் கைச் சரக்கு, மோசடி, வாகனக்கூட்டத்தார் சாட்சியமளித்த பிறை ஹதீஸிலும் 'சாட்சி சொன்னார்கள்' என்றிருப்பதை சொன்னார்கள் என்று எழுதி ஹதீஸில் மோசடி செய்தது பலருக்குத் தெரியும்.

தங்கள் குறிக்கோள் நிறைவேற எதையும் செய்வார்கள்!

இந்த தவ்ஹீது மவ்லவிகளின் லட்சணம் என்னவென்றால் தங்களது குறிக்கோளை நிறைவேற்றிக் கொள்ள ஆதாரப்பூர்வமான ஹதீஸை பலமானது என்று வரிந்து கட்டிக் கொண்டு வாதிடுவதில் சாமர்த்தியசாலிகள். உதாரணமாக, தொழுகை இருப்பில் ஆள் காட்டி விரலை ஆட்டுவது குறித்து வந்துள்ள ஹதீஸ்கள் அனைத்திலும், அவை எந்தெந்த நூல்களில் பதிவ செய்யப்பட்டிருந்தாலும், அவை அனைத்தின் அறிவிப்பாளர்கள் வரிசையிலும் ஆஸிம் பின் குலைப் என்பார் இடம் பெறுகிறார். அறிவிப்பாளர் வரிசையில் இந்த ஆஸிம் பின் குலைப் இடம் பெறாத ஓரு ஹதீஸும் விரலாட்டவது பற்றி இல்லவே இல்லை.

மேலும் தொழுகையில் நான்கு இடங்களில் கைகளை உயர்த்துவதை (ரஃபயல் யதைன்) மறுத்துக் கூறும் ஹதீஸிலும் இந்த ஆஸிம் பின் குலைபே இடம் பெறுகிறார். மேலும் தொழுகையில் இடது புறங்கையில் வலது உள்ளங்கை வைத்து தொப்புளுக்குக் கீழ் கட்டுவதிலும் இதே ஆஸிம் பின் குலைபே இடம் பெறுகிறார். ஹனஃபிகள் இந்த இரண்டு சந்தேகத்ததிற்குரிய ஹதீஸ்களையும் நடைமுறைப்படுத்துகின்றனர். ஆனால் தவ்ஹீத் மவ்லவிகள் ஆஸிம் பின் குலைப் இடம் பெறும் இரண்டாவது மூன்றாவது ஹதீஸ்களை நிராகரிப்பவர்கள் விரலாட்டும் முதல் ஹதீஸை மட்டும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே இப்னுல் முதைனி எனும் ஹதீஸ் கலா வல்லுநர் தெளிவாக வேறு அறிவிப்பாளர் தொடர் இல்லாமல் இந்த ஆஸிம் பின் குலைப் மட்டும் இடம் பெறும் ஹதீஸ்கள மட்டும் வைத்து எக்காரியத்தையும் செய்யக்கூடாது என்று அறிவித்துள்ளனர். இமாம் இப்னுல் முதைனி அவர்கள் காரணம் கூறி மறுக்கவில்லை. காரணம் கூறி விமர்சிக்க வேண்டும் என்பது ஹதீஸ் கலா வல்லுநர்களின் ஏகோபித்த முடிவு (இஜ்மா) என்று வாதிடுகின்றனரே அல்லாமல், 'எதைப் பற்றி உமக்கு(த் தீர்க்க) ஞானமில்லையோ அதை(ச் செய்யத்) தொடர வேண்டாம்……' (அல்குர்ஆன் 17:36) என்ற இறைவனின் நேரடிக் கட்டளையோ, 'சந்தேகமானதை விட்டு விட்டு சந்தேகமற்றதின்பால் சென்று விடு' (புகாரீ) என்ற நபி(ஸல்) அவர்களின் நேரடிக் கட்டளையோ அவர்களின் உள்ளத்தில் உறைப்பதாக இல்லை.

இப்னுல் முதைனியும் ஒரு பிரபல ஹதீஸ் கலாவல்லுநர்தானே! காரணம் சொல்லி விமர்சிக்க வேண்டும் என்பது ஹதீஸ் கலாவல்லுநர்களின் ஏகோபித்த முடிவு(இஜ்மா) என்றால், அது கண்டிப்பாக இப்னுல் முதைனிக்கும் தெரிந்திருக்க வேண்டுமே! பின்னர் எப்படி காரணம் கூறாமல் விமர்சித்தார் என்ற சுய சிந்தனையும் இந்த தவ்ஹீத் புரோகித மவ்லவிகளுக்கு இல்லை.

ஆதாரப்பூர்வமான ஹதீஸ் இருக்க……!

இத்தனைக்கும் அது விஷயமாக நேரடியான ஆதாரப்பூாவமான ஹதீஸ் இல்லாத நிலையில் இப்படிச் செயல்பட்டாலும் பரவாயில்லை. ஹரக்கத் - ஆட்டுவதற்கு பதிலாக இஷாரா - சமிக்கை செய்வது பற்றி முஸ்லிமில் மூன்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் காணப்படுகிறது. அதற்கு மேல் விளக்கமாக கிப்லாவை நோக்கி இஷாரா செய்தல் - கிப்லாவை சுட்டிக் காட்டுதல் என்பதைத் தெளிவாகக் கூறும் ஹதீஸ் நஸயீயில் காணப்படுகிறது. இங்கு ஆதாரப்பூாவமான ஹதீஸ்களை நிராகரித்துவிட்டு , சந்தேகத்திற்குரிய ஹரக்கத் - ஆட்ட ஹதீஸைத் தூக்கிப் பிடித்து, தமிழ்நாட்டில் ஒரு ஆட்ட மத்ஹபை உண்டாக்கி இருக்கிறார்கள் இந்த தவ்ஹீத் மவ்லவி புரோகிதர்கள். காரணம் என்ன தெரியுமா? அப்படியானால் தான் முஸ்லிம்களிடையே பள்ளியிலேயே குழப்பமான நிலை உண்டாகும். வாய்த்தக்கம் , அடி, தடி, ரகளை என ஊர் இரண்டுபடும் . இதைக் காரணம் காட்டி ஒவ்வொரு ஊரிலும் , ஊரை இரண்டாக்கித்தனி போட்டிப் பள்ளி கட்ட முடியும். தனி அதிகாரம்,தனி நிர்வாகம், தனி வசதி வாய்ப்புகள், இப்படி எண்ணற்ற பலன்கள் கிடைக்கும் என்பதேயாகும். இமாமத் செய்வதற்கு, பிரசார பணி செய்வதற்கக் கூலி வாங்கக் கூடாது என்று பகிரங்கமாகக் கூறுகிறவர்கள். தங்களின் பள்ளிகளிலுள்ள இமாம்களுக்கும், பிரசார பணிபுரியும் தாயிகளுக்கும் கூலி கொடுக்க வில்லை என்று நெஞ்சு நிமிர்த்தி சொல்ல முடியுமா? துணிந்து அல்லாஹ் மீதே ஆணையிட்டே பொய்ச் சத்தியம் செய்தாலும் செய்வார்கள். அந்த அளவு நெஞ்சழுத்தம் உள்ளவர்கள் தான் தவ்ஹீத் மவ்லவி புரோகிதர்கள்.

இப்படி இந்த விரலாட்டும் சந்தேகத்திற்குரிய ஹதீஸை வரிந்து கட்டிக்கொண்டு ஆதாரப்பூர்வமான ஹதீஸாக தூக்கி நிறுத்தும் இவர்கள், வருடா வருடம் ஜகாத் கொடுக்கும் ஆதாரப்பூர்வமான ஹதீஸை பலவீனமாக்க என்ன என்ன தந்திரங்களைக் கையாண்டுள்ளார்கள் பார்த்தீர்களா? 1000 வருடங்களுக்கு முன்னரே பிரபபல ஹதீஸ் கலா வல்லநர் இப்னுல் முதைனி அவர்கள் விரலாட்டும் ஹதீஸில் கிளப்பிய சந்தேகத்தை நிராகரிக்கும் இவர்கள், இன்று 1426 வருடங்களுக்கும் விறகு இவர்களாகச் சில சந்தேகங்களைக் கிளப்பிக் கொண்டு வருடா வருடம் ஜகாத் கொடுக்கும் ஹதீஸை நிராகரிக்கிறார்களே? இவர்களை எந்தப் பட்டியலில் சேர்ப்பது? அதுவும் வருடா வருடம் ஜகாத் கொடுப்பது இன்று 1426 ஆண்டுகளாக முஸ்லிம்களிலுள்ள அனைத்துப் பிரிவார்களாலும் அங்கீகரிக்கப்பட்டு எவ்வித ஆட்சேபணையும் இல்லாமல் ஏகோபித்துக் கடைபிடிக்கப் பட்டு வரும் ஒரு ஹதீஸை இன்று இவர்களின் சொந்த கற்பனையின் அடிப்படையில் பலவீனமான ஹதீஸ் என்கிறார்களே! இவர்களுக்கு எந்த அளவு ஆணவமும் திமிரும், தான் என்ற அகந்தையும் இருக்கும் என்பதை தங்களின் அறிவை இந்தப் புரோகித முல்லாக்களிடம் அடகு வைக்கலாம் சுயமாகச் சிந்தித்து விளங்குகிறவர்கள் நிச்சயம் அறிவார்கள்.

நம்பகத்தன்மை நிரூபிக்கப்படாத ஒருவரின் குடும்பத்தார் வைத்திருந்த ஏட்டில் வாசித்தேன் என்று அபூதாவுத் ஏட்டில் வாசித்தேன் என்று அபூதாவூத் கூறுவதிலிருந்தே இதன் பலவீனம் தெளிவாகத் தெரிகின்றது"

என்று ஆணவத்துடன் பொய்யாக எழுதியுள்ளனரே, இவர்களின் ஏடுகள், குர்ஆன் மொழி பெயர்ப்பு ஒரு நம்பகத்தன்மை நிரூபிக்கப்படாத ஒருவரின் குடும்பத்தாரிடமிருந்து எடுத்து வாசிக்கப்பட்டால், அவை பலவீனமானவை என இவர்கள் ஒப்புக்கொள்ளத்தயாரா? எந்த அளவு அடிமுட்டாள்த் தனமாக வாதிட்டு தங்கள் முரட்டுப்பக்தர்களாக மயக்குகிறார்கள் பார்த்தீர்களா?

ஹதீஸின் தரம் இன்று முடிவு செய்யப்படுவதில்லை!

இன்றைக்கு ஒருவர் ஒரு ஹதீஸின் தரத்தை அதாவது அது ஆதாரப்புர்வமானதா? சந்தேகத்திற்கு உரியதா? பலவீனமானதா? இட்டுக்ட்டப்பட்தா? என ஆராயும் போதும் சுமார் 1000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த, அறிவிப்பாளர்கள் பற்றிய தகவல்களைச் சேகரிக்கும் வாய்ப்பைப் பெற்றவர்கள். அப்படி சேகரித்துக் கொடுத்துள்ள தகவல்கள் அடிப்படையிலேயே முடிவுக்கு வரமுடியம். அதல்லாமல் இன்றுள்ளவர்கள் தங்கள் மனம் போன போக்கில் ஆய்வு செய்வதாகக் கூறிக்கொண்டு வாய்க்கு வந்ததை எல்லாம் எழுதி சந்தேகத்தைக் கிளப்பி ஒரு ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது என்றோ, பலவீனமானது என்றோ கூற முடியாது.

அடிப்படை விதி காற்றில் பறக்கிறதே!

இன்று இந்த தவ்ஹீத புரோகித முல்லாக்களின் பெரும் பாலான ஆய்வில் இந்த அடிப்படை நியதி கடைபிடிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. ஏதோ அன்றுள்ள நபர்கள் பற்றிய செய்திகள் இன்று இவர்களுக்கு 'வஹீ' மூலம் அறிவிக்கப்படுவது போல் மனப்பால் குடித்துக் கொண்டு கதை அளந்துள்ளார்கள்.

அல்லது, ஹதீஸ்களின் தராதரங்களை அறியும் கலையையே தவறாகப் புரிந்து கொண்டு செயல்படுவதாக இருக்கும். இவர்களின் இந்த அறியாமையை விளக்க ஒரு நீதிக்கதைதான் ஞாபகத்திற்கு வருகிறது.

சொன்னபடி செய்யும் சுப்பன்!

ஒரு எஜமானனும் அடிமையும் நீண்டதொரு பிரயாணத்தை ஒரு குதிரையில் தொடர்ந்தார்கள். எஜமானன் முன் எச்சரிக்கையாக ஏதும் தவறி விழுந்தால் உடனே இறங்கி எடுத்துவா? விட்டு விடாதே என்று கட்டளையிட்டான். சிறிது தூரம் சென்றதும் எஜமானன் வெற்றிலை போடும் பழக்கமுடையவன், வெற்றிலை சக்கையை வாயிலிருந்து துப்பினான். அடிமை உடனே பாய்ந்து அதை எடுத்து வந்தான். எஜமானன் அவனைத்திட்டி அதைப்போட்டு விட்டு குதிரையில் ஏறும்படி சொன்னான். அடிமையும் ஏறிக் கொண்டான். இன்னும் சிறிது தூரம் சென்றதும் குதிலை லத்தி போட ஆரம்பித்தது. அடிமை பாய்ந்து இறங்கி லத்தியைத் தூக்கிக் கொண்டு வந்தான். எஜமானன் அவனை ஏசினான். எஜமானனே நீங்கள் தான் தவறி விழும் பொருட்களை எடுக்கச் சொன்னீர்கள். அதன்படி எடுத்து வருகிறேன். அது தவறு என்கிறீர்கள்; எனக்குப் புரியவில்லை. எனவே எது எது எல்லாம் விழுந்தால் எடுக்க வேண்டும் என்று எழுதி ஒரு பட்டியல் தந்து விடுங்கள். அதன்படி நானும் நடந்து கொள்கிறேன் என்றான். எஜமானனும் பொருட்களின் ஒரு நீண்ட பட்டியலை தயாரித்து அடிமையிடம் கொடுத்து விட்டான். இந்த நிலையில் சிறிது தூரம் சென்றதும் எஜமானனே குதிரையிலிருந்து கீழே தவறி விழுந்து விட்டான். எஜமானன் அடே தூக்குடா தூக்குடா எனக்கத்துகிறான். அடிமை எஜமானனை தூக்காமல் அந்தப் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்று பார்க்கிறேன் என்று கூறி பட்டியலைப் பார்த்தான். பட்டியலில் எஜமானனின் பெயர் இல்லை. எனவே எஜமானனின் பெயர் இல்லை. எனவே எஜமானனை தூக்கி விட மறுத்து விட்டான் என்று நீதிக்கதை சொல்வார்கள்.

ஹதீஸ் கலை என்றால் என்ன?

இந்த தவ்ஹீது புரோகித முல்லாக்களின் இந்த 'ஜகாத் ஓர் ஆய்வு" 64 பக்கங்களையும் படித்த முடித்ததும் நமக்கு இந்த நீதிக்கதைதான் ஞாபத்திற்கு வந்தது. இந்தப் புரோகித முல்லாக்கள் ஏறக்குறைய அந்த அடிமையின் ஸ்தானத்திலேயே இருக்கிறார்கள். ஹதீஸ் கலை, அறிவிப்பாளர்களின் தராதரம் இவை அனைத்தும் நபி(ஸல்) அவர்கள் சொன்னதாக, செய்ததாக, அங்கீகரித்ததாக கூறப்படுபவை நபி(ஸல்) அவர்கள் உண்மையிலேயே சொன்னவைதான்? செய்தவைதானா? அங்கீகரித்தவைதானா? என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளத்தான். அதுவும் இவர்களின் ஆபாக்களான புரோகித முன்னோர்கள் தங்கள் பிழைப்பிற்காக லட்சக்கணக்கான பொய்ச் செய்திகளை ஹதீஸ்களின் பெயரால் இட்டுக்கட்டியதால் இந்தத் தரம் பிரித்து அறியும் கட்டாயம் வந்தது.

இந்த அறிவிப்பாளர் வரிசையில் நபிதோழர்களுக்குப் பிறகு இடம் பெறும் அறிவிப்பாளர்களின் செயல்பாடுகள் கூர்ந்து கவனிக்கப்பட்டு ஆராயப்பட்டனவே அல்லாமல், நபிதோழர்கள், அனைவருமே உண்மையாளர்களாத் தான் ஏற்றுக் கொள்ளப்பட்டார்கள். அவர்களின் செயல்பாடுகளில் நேர்வழி நடப்பவர்கள் குறை கண்டதில்லை. மனிதன் என்ற அடிப்படையில் இயற்கையான குறைபாடுகள் உள்ளவர்கள்தான் நபிதோழர்களும் என்பதில் சந்தேகமில்லை. ஆயினும் அவர்களில் சிலரின் செயல்பாடுகள் நபி(ஸல்) அவர்களின் ஆதாரப்பூாவமான நிரூபிக்கப்பட்ட செயல்பாடுகளுக்கு முரணாக இருந்தால் மட்டுமே, அது பற்றி விமர்சிக்காமல், அதை அப்படியே விட்டு விட்டு, நாம் அது விஷயத்தில் நபி(ஸல்) அவர்களின் செயல்பாட்டை எடுத்து நடக்கக்கடமைப்பட்டுள்ளோம். அதற்கு மாறாக மார்க்கத்தில் அன்றிலிருந்து இன்று வரை எவ்வித ஆட்சேபணைக்கோ, மறுப்புக்கோ, இடமில்லாமல் முஸ்லிம்களால் கடை பிடிக்கப்பட்டு வரும் ஒரு மார்க்க அநுஷ்டானம், நபி(ஸல்) அவர்களின் நேரடியான தெளிவான ஹதீஸின் மூலம் மறுக்கப்பட்டிருந்தால் அன்றி அதை இன்றுள்ளவர்கள் நிராகரிக்க எந்த முகாந்திரமுமில்லை.

உதாரணமாக உமர்(ரழி) அவர்களின் சொந்தக் கூற்றாக இந்த தவ்ஹீத் மவ்லவி புரோகிதர்களால் சொல்லப்படும் 'அனாதைகளின் சொத்துக்கு ஜகாத்' என்பது பற்றிய செய்திக்கும், 'ஒரு வருடம் முழுமையடையும் வரை ஜகாத் இல்லை' என்பது அலீ(ரழி) அவர்களின் சொந்தக்கூற்று என்று இந்த தவ்ஹீத் மவ்லவிகள் சொல்லும் செய்திக்கும் முரணாக, 'அனாதைகளின் சொத்துக்கு வருடா வருடம் ஜகாத் கொடுக்கக்கூடாது', 'ஒரு பொருளுக்கு அது கிடைத்தவுடன் உடனடியாக ஒரு முறை ஜகாத் கொடுத்தால் போதும்' என்று நேரடியாகக் கூறம் ஆதாரப்பூாவமான ஹதீஸ் இருந்தால் மட்டுமே உமர்(ரழி) அலீ(ரழி) ஆகிய இருவரின் கூற்றையும் எவ்வித விமர்சனமும் செய்யாமல், ஒதுக்கி வைத்து விட்டு, நபி(ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வமான செய்தியின்படி செயல்படுவது, உண்மை விசுவாசிகளின் கடமையாக இருக்கிறது.

அதற்குமாறாக இது நபிதோழரின் கூற்றா அல்லது நபி(ஸல்) அவர்களின் கூற்றா என்பதில் சந்தேகம் இருக்கிறது என்று இவர்களாகக் கற்பனை செய்து கொண்டு, காலங்காலமாக 1426 வருடங்களாக முஸ்லிம்களிடையே எவ்வித கருத்து பேறுபாடும் இல்லாத நிலையில் நடைமுறையில் இருக்கும் விஷயங்களில், நபித் தோழர்களின் சொல்லை நிராகரித்து விட்டு தங்களின் சுய கற்பனைகளை யூகங்களாகப் புகுத்துவது பெருத்த வழிகேடாகும். சமுதாயத்தில் பெரும் குழப்பம் விளைவிப்பதாகும். அது கொலையை விடக்கொடியதாகும். (பார்க்க அல்குர்ஆன் 2:191)

அடிப்படை அறியாத தவ்ஹீத் மவ்லவிகள்!

கலீஃபாக்கள், நபித்தோழாகள் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு கணிசமான காலம் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றவர்கள், நபி(ஸல்) அவர்களின் நடைமுறைகளை, அதாவது சொல், செயல் அங்கீகாரத்தை அவர்களை விட அதிகமாகத் தெரிந்தவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. 1426 வருடங்களுக்குப் பின்னர் வாழும் நாம் அந்தப் பாக்கியத்தில் அணுவளவும் அடையப்பெறாதவர்கள், நபி(ஸல்) அவர்களின் செயல்பாடுகள் பற்றி உமர்(ரழி) அவர்களை விட, அலீ(ரழி) அவர்களை விட மற்றும் நபிதோழர்களை விட அதிகமாக சுயமாக நாம் அறிய முடியும் என்பதை விட பெருத்த வழிகேடு ஒன்று இருக்க முடியாது. எவ்விதத் தெளிவான ஆதாரமும் இல்லாமல் இது உமர்(ரழி) அவர்களின் சொந்தக்கூற்று, இது அலீ(ரழி) அவர்களின் சொந்தக்கூற்று என பிதற்றுவது அறியாமையின் உச்சக்கட்ட உளறலாக மட்டுமே இருக்க முடியும்.அவற்றிற்கு நேர் முரணாக நபி(ஸல்) அவர்களின் நடைமுறை ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் கிடைத்தால் மட்டுமே அவற்றை ஒதுக்கி வைக்க முடியும். இந்த அடிப்படை உண்மையை அறியாதவர்களாக தவ்ஹீத் மவ்லவி புரோகிதர்கள் இருக்கிறார்கள் என்பதே உண்மையாகும்.

நபித்தோழரில் சந்தேகம்!

ஏகத்துவம் கூறுகிறது:

இது தவிர இதை நபி(ஸல்) அவர்களிடமிருந்து அறிவிப்பாளராக இருந்த அப்துல்லாஹ் பின் முஆவியா அல் காளிரீ என்பவரின் பெயர் இடம் பெற்றுள்ளது.

இவர் நபிதோழர் என்று சில நூல்களில் எழுதப்பட்டிருந்தாலும் நபிதோழர் என்பதை முடிவு செய்வதற்குரிய அளவுகோல் இவருக்குப் பொருந்தவில்லை. நபிதோழர் என்று முடிவு செய்வதாக இருந்தால் அவர் நபிதோழர் என்று பரவலாக அறியப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த ஒரு ஹதீஸில் இவர் பெயர் இடம் பெறுபதைத் தவிர வேறு விபரம் ஏதுவும் இல்லை.

ஏகத்துவம் , செப்டம்பர் 2005, பக்கம் 45

அன்று 1000 வருடங்களுக்கு முன்னர் கிளப்பப்பட்டு ஆதாரப்பூர்வமான நூல்களில் எழுதப்பட்டுள்ள ஒரு சந்தேகத்தை இவர்கள் கிளப்பவில்லை. அப்படி இருந்தால் நூல் பாகம் எல்லாம் குறிப்பிட்டு எழுதி இருப்பார்கள். இன்று இவர்களாக சுயமாகக் கற்பனை செய்து ஒரு சந்தேகத்தைக் கிளப்பி இருக்கிறார்கள். அவ்வளவுதான். அன்றே சில நூல்களில் அப்துல்லாஹ் பின் முஆவியா அங்காளிரீ ஒரு நபிதோழர் என எழுதப்பட்டிருப்பதை ஒப்புக்கொண்டு விட்டு, அதன்பின்னர் தங்கள் சுய கற்பனைகளைக் கொண்டு சந்தேகம் கிளப்புகின்றனர்.

ஏகத்துவம் கூறுகிறது:

நாம் கூறும் துணை ஆதாரங்கள் தவறு என்று அவர்கள் நிரூபித்து விட்டதாக ஒரு வாதத்திற்குக் கூறினாலும் , நம்முடைய அடிப்படையான வாதத்திற்குப் பதில் தாரதவரை அவர்கள் தங்கள் கருத்தை நிலை நாட்ட முடியாது என்று திரும்ப திரும்ப எழுதியுள்ளனர்.

இவர்களின் அடிப்படை ஆதாரம் ஹதீஸ் அல்ல!

இவர்கள் அடிப்படை ஆதாரமாக ஒரு குர்ஆன் வசனத்தையோ, ஆதாரப்பூர்வமான ஹதீஸையோ தரவில்லை. அதற்கு மாறாக தங்களின் சொந்த யூகங்களையும், கற்பனைகளையும் இன்று புதிதாக எடுத்து வைத்துள்ளனர். ஆனால் அதற்குமாறாக கடந்த 1426 வருடங்களாக முஸ்லிம்களிடையே, எப்பிரிவாரிடையே, எந்த அறிஞரிடையே எவ்வித கருத்து வேறுபாடும் இல்லாத வருடா வருடம் ஜகாத் கொடுத்த பொருளுக்கும் மீண்டும் மீண்டும் கொடுக்க வேண்டும் என்பதையே பிரதான ஆதாரமாகக் நாம் தந்துள்ளோம். அவர்கள் அவர்களின் வாதத்தையே முதன்மையான ஆதாரமாகத் தந்துள்ளனர். அவர்களின் வாதம் ஒரு போதும் மார்க்க ஆதாரமாகாது. நாம் நமது வாதத்தை முதன்மையான ஆதாரமாகத் தரவில்லை.

மாறாக முஸ்லிம்களின் நடைமுறையில் இருப்பதையும், அந்த நடைமுறைக்கு முரணாக நபி(ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் எதுவும் இல்லை என்பதையே பெரிய ஆதாரமாகத் தந்துள்ளோம். எனவே எங்களின் துணை ஆதாரங்கள் தவறு என்று அவர்கள் நிரூபித்து விட்டதாக ஒரு வாதத்திற்கு கூறினாலும், நம்முடைய அடிப்படையான ஹதீஸை அவர்கள் தராதவரை அவர்கள் தங்கள் கருத்தை நிலை நாட்ட முடியாது என்று அவர்கள் கூறியிருப்பதையே நாமும் கூறுகிறோம்.

உச்சக்கட்ட உளறல்!

ஏகத்துவம் கூறுகிறது:

"நான் நபியிடம் கேட்டேன்" என்பது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி அவர் அறிவிக்க பேண்டும். இந்த ஹதீஸில் ,'நான் நபியிடம் கேட்டேன்' என்பது போன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படவில்லை. மாறாக நபி சொன்னார்கள் என்ற வார்த்தைதான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த அளவு கோளின் படியும் இவர் ஸஹாபி என்பது நிரூபணமாகவில்லை.

ஏகத்துவம், செப்படம்பர் 2005, பக்கம் 45

இதை விட உச்சக்கட்ட உளறலாக வேறு யாரின் உளறலும் இருக்க முடியுமா?

"நான் நபியிடம் கேட்டேன்" என்பதற்கும் 'நபி சொன்னார்கள்' என்தபற்குமுள்ள பெருத்த வேறுபாடு என்னவோ? இதனால் ஸஹாபி என்பது நிரூபணமாகவில்லை என்று கூறுவது அறியாமையின் உச்சகட்டமின்றி வேறு எதுவாக இருக்க முடியும்?

புகாரி மொழி பெயர்ப்புகளைப் புரட்டிப் பாருங்கள். எத்தனை இடங்களில் எத்தனை பெரும் பெரும் நபித்தோழர்கள் 'நான் நபியிடம் கேட்டேன்' என்று கூறாமல் 'நபி சொன்னார்கள்' என்று கூறியுள்ளதைப் பார்க்க முடியும். அவர்களின் அளவு கோலின் படி அந்தப் பிரபல நபிதோழர்கள் எல்லாம் ஸஹாபிகள் என நிரூபணமாகவில்லை என்பார்களா?

அபூபக்கர் (ரழி) அவர்களைவிட அறிவாளிகள்!

ஏகத்துவம் கூறுகிறது:

அபூபக்கர்(ரழி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் சிலர் ஜகாத் கொடுக்க மறுத்த போது, 'நபி(ஸல்) அவர்களிடம் கொடுத்த வந்த ஒரு ஆட்டுக்குட்டியை தர மறுப்பாளர்களானால் அவர்களுடன் நான் போரிடுவேன்' என்று குறிப்பிட்டார்கள்.

நூல் : புகாரீ 1400, 1457, 6924, 7285

இதையும் தங்கள் கூற்றுக்கு ஆதாரமாகக் காட்டுகின்றனர். இது ஆதாரப்பூர்வமான ஹதீஸ் என்றாலும் இந்த ஹதீஸ் இவர்களின் வாதத்தை நிலைநாட்ட ஒரு சான்றும் இல்லை.

'நபி(ஸல்) அவர்கள் காலத்தில் கொடுத்து வந்த' என்ற சொற்றொடர் தொடர்ச்சியாகக் கொடுத்து வந்தது என்ற கருத்தைத்தான் தரும். ஒரு தடவை கொடுத்திருந்தால் 'கொடுத்து வந்த' என்ற சொல்லை அபூபக்கர்(ரழி) பயன்படுத்தி இருப்பார்களா? என்பது இவர்களின் வாதம். இந்த வாதம் உச்சக்கட்ட அறியாமையின் வெளிப்பாடாக உள்ளது.

நபி(ஸல்) அவர்கள் காலத்தில் தொடர்ச்சியாகக் கொடுத்து வந்தனர் என்பது உண்மைதான். ஒரு மனிதனுக்கு ஒரு தடவை ஜகாத் என்று கூறினால்தான் தொடர்ச்சி என்பது இல்லாமல் போகும். ஒரு பொருளுக்கு ஒரு தடவை என்று கூறினால் நமது வாதத்தின் படியும் தொடர்ச்சியாக கொடுத்து வர முடியும்.

இன்று ஜகாத்தாக ஓர் ஆட்டைக் கொடுத்தவுடன் மேலும் ஆடுகள் பெருகலாம். பெருகிய ஆட்டுக்காக மீண்டும் கொடுக்கலாம். மீண்டும் பெருகலாம். அதற்காகவும் மீண்டும் மீண்டும் கொடுக்க வேண்டிய வரும். ஒரு பொருளாதாரம் பெருகுவதன் காரணமாக தொடர்ச்சியாக ஜகாத் கொடுக்கும் நிலை ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.

மேலும், இவர்களின் வாதத்தின் படி பார்த்தாலும் நமக்குத் தான் மறுப்புச் சொல்கிறார்களே தவிர தங்கள் வாதத்தை இந்த விளக்கத்தின் மூலம் அவர்களால் நிலை நாட்ட முடியாது. ஏனெனில் தொடர்ச்சியாக என்பது வருடந்தோறும் என்பதை மட்டும் குறிக்காது. மாதந்தோறும் என்று பொருள் கொள்ளலாம். வாரந்தோறும் என்றும் பொருள் கொள்ளலாம் ஏன்? தினந்தோறும் என்றும் பொருள் கொள்ளலாம் ஏன்? தினந்தோறும் என்பதை எதனடிப்படையில் இந்த ஹதீஸில் இவர்களாக நுழைத்தார்கள் என்பதற்கு விளக்கம் சொல்லக் கடமைப்பட்டுள்ளார்கள்.

ஏகத்துவம் , செப்டம்பர் 2005, பக்கம் 46, 47

உச்சகட்ட உளறல் யாருடையது?

'இந்த வாதம் உச்சக்கட்ட அறியாமையின் வெளிப்பாடாக உள்ளது' என்று அவர்கள் எழுதி இருப்பது தவ்ஹீத் புரோகித மவ்லவிகளாகிய அவர்களின் இந்த வாதத்திற்கே நூற்றுக்கு நூறு பொருந்தும். வருடா வருடம் புதிதாக பெருகும் கால்நடைகளுக்கு ஜகாத் கொடுப்பது பற்றி அபூபக்கர்(ரழி) அவர்கள் கூறியதாக இருந்தால் 'நபி(ஸல்) அவர்களிடம் கொடுத்த வந்த ஒரு ஒட்டகக்குட்டி என்றோ (குறிப்பிட்ட ஹதீஸில் ஒட்டகக்குட்டி என்றே வந்துள்ளது) ஒரு கயிறு என்றோ (புகாரீ ஹதீஸ் எண் 7285) குறிப்பிட்டு ஏன் கூறவேண்டும்?

சென்ற ஆண்டில் கொடுத்ததை விட்டு விட்டு இந்த ஆண்டில் புதிதாகக் பெருகியதைக் குறிப்பிட, சென்ற ஆண்டின் குட்டியையும் என்றோ கயிற்றையும் என்றோ ஏன் குறிப்பிட்ட வேண்டும்? சென்ற ஆண்டு கொடுத்த வகைக்காக இந்த ஆண்டும் கொடுப்பதாக இருந்தால்தானே அவ்வாறு குறிப்பிட முடியும். இதை அறிவில் குறைந்தவனும் எளிதாக விளங்க முடியுமே.

கடந்த 1426 ஆண்டுகளாக முஸ்லிம்களிடையே எவ்விதக் கருத்து வேறுபாடும் இல்லாத நிலையில் இருக்கும் வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும், கொடுத்த பொருளுக்கே மீண்டும் கொடுக்க வேண்டும் என்பதற்கு ஏற்ற நிலையில் அபூபக்கர்(ரழி) அவர்களின் ஹதீஸை விளங்குவது உச்சக்கட்ட அறியாமையின் வெளிப்பாடா? அல்லது 1426 வருடங்களாக நடை முறையிலிருப்பதற்கு முரணாக எந்த வித நேரடி ஹதீஸ் ஆதாரமும் இல்லாத நிலையில்சொந்த யூகத்தின் அடிப்படையில் மாதந்தோறும், வாரந்தோறும், தினந்தோறும் என்றும் பொருள் கொள்ளலாம் என உளறுவது உச்சக்கட்ட அறியாமையின் வெளிப்பாடா? அவர்களின் குருட்டுப் பக்தர்கள் அந்நஜாத்தை பார்க்கவும் மாட்டார்கள். சிந்திக்கவும் மாட்டார்கள். இந்தத் தைரியத்தில்தான் தவ்ஹீத் புரோகித மவ்லவிகள் இப்படி அசட்டுத்தனமாக உளறி இருக்கிறார்கள். நேர்வழி நடந்து இறைவனது பொருத்தம் பெற நினைக்கும் உள்ளத்தில் ஈமானுள்ள ஒவ்வொருவரும் படித்து சிந்தித்து விளங்க முடியும்.

ஏகத்துவம் கூறுகிறது:

தக்க ஆதாரம் இல்லாமல் ஒரு முடிவை எடுத்து விட்டு அதை நியாயப்படுத்துவதற்காக சம்பந்தமில்லாத ஹதீஸ்களையெல்லாம் தமக்குரிய ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

இந்த வகையில் அவர்களின் மற்றொரு ஆதாரம் கால் நடைகளுக்கான ஜகாத் பற்றிய ஹதீஸை தங்கள் இஷ்டத்திற்கு வளைப்பதாகும்.

ஒரு மனிதனிடம் நாற்பது முதல் 120 வரை ஆடுகள் இருந்தால் அதற்கான ஜகாத் ஒரு ஆடு ஆகும். 121 முதல் 200 வரை இரண்டு ஆடுகளாகும். 201 முதல் 300 வரை மூன்று ஆடுகளாகும். 300 க்கு மேல் ஒவ்வொரு நூறு ஆடுகளுக்கும் ஒரு ஆடு வீதம் ஜகாத் ஆகும்.

இந்தக் கருத்தில் அமைந்த ஹதீஸ்களையும் தங்கள் கருத்தை நிரூபிக்கும் ஆதாரமாகப் பயன்படுத்துகின்றனர். அவர்கள் தமது வாதத்தை எவ்வாறு எடுத்து வைக்கிறார்கள் என்பதை முதலில் அறிந்து கொள்வோம். மேற்கண்ட சட்டத்திலிருந்து இரண்டு எதிர் கேள்விகளை நம்மிடம் கேட்கின்றனர்.

1. ஒருவனிடம் 40 ஆடுகள் இருந்து அதற்குரிய ஜகாத்தை அவன் கொடுத்து விட்டான். சில நாட்களில் இன்னோர் 40 ஆடுகள் அவனுக்குக் கிடைக்கின்றன. இந்த 40 ஆட்டுக்கு ஒர் ஆடு ஜகாத் கொடுக்க வேண்டும் என்று நீங்கள் கூறுவீர்கள் என்றால் 80 க்கு 2 ஆட்டை கொடுத்தவர்களாவீர்கள். இது 120 க்கு 1 என்ற ஹதீஸுக்கு முரணாக இருக்கிறது.

2. இரண்டாவது வந்த 40க்கு கொடுக்கத் தேவையில்லை என்று நீங்கள் கூறினால் முதல் 40 மட்டும் தான் சுத்தமாகி இருக்கிறது. இரண்டாவதாக வந்த 40 எப்படி சுத்தமாகும்?என்று நம்மை நோக்கி கேள்வி எழுப்புகின்றனர். நாம் என்ன சொல்கிறோம் என்பது புரியாததால் எழுந்த கேள்வி இது.

நாற்பது ஆடு இருக்கும் போது ஒருவன் ஓர் ஆட்டைக் கொடுத்தான் என்றால் அது நாற்பது ஆட்டுக்குரிய ஜகாத் அல்ல. 40 முதல் 120 வரையுள்ள ஒரு ஸ்டேஜுக்கான ஜகாத் ஆகும். எனவே 120 வரை அவன் ஏதும் கொடுக்கத் தேவையில்லை. மொத்தத்தில் ஒரு ஆடு மட்டும் ஜகாத் கொடுக்கும் போது 120 க்கு ஒன்று என்ற இலக்கையும் மீறவில்லை. அதே சமயம் 120 வரையிலான ஸ்டேஜுக்கு கொடுத்து விட்டதால் இரண்டாவதாக வந்த 40 ஆடுக்கும் தூய்மையாகி விட்டன. இதுதான் நமது பதிலாகும்.

ஏகத்துவம், செப்டம்பர் 2005, பக்கம் 47,48

ஹதீஸ் ஆதாரமின்றி முடிவு செய்வது யார்?

தக்க ஆதாரம் இல்லாமல் ஒரு முடிவை எடுத்து விட்டு அதை நியாயப்படுத்துவதற்காக சம்பந்தமில்லாத ஹதீஸ்களையெல்லாம் தமக்குரிய ஆதாரமாகக் காட்டுகிறார்களாம்.

அதாவது தக்க ஆதாரமில்லாமல் ஜகாத் வருடா வருடம் கொடுக்க வேண்டும், கொடுத்த பொருளுக்கும் மீண்டும் கொடுக்க வேண்டும் என்ற முடிவை எடுத்து விட்டு அதை நியாயப்படுத்த சம்பந்தமில்லாத ஹதீஸ்களை ஆதாரமாகக் காட்டுகிறார்களாம். யார் காட்டுகிறார்கள்? கடந்த 1426 ஆண்டுகளாக வாழ்ந்து மடிந்த, வாழ்ந்து கொண்டிருக்கிற முஸ்லிம்கள், அறிஞர்கள் அனைவரும் எவ்வித கருத்து வேறுபாடும் இல்லாமல் ஏகோபித்து முடிவு எடுத்துச் செயல்படுத்தி விட்டு இப்போது சம்பந்தமில்லாத ஹதீஸ்களை ஆதாரமாகத் தருகிறார்களாம்.அப்படித்தானே? அதாவது கடந்த 1426 ஆண்டுகளாக கலீஃபாக்கள், நபித்தோழர்கள், தாபியீன்கள், தபவுதாபியீன்கள், இமாம்கள் மற்றும் முஸ்லிம்கள் அனைவரும் ஏகோபித்து ஒன்றுபட்டு முட்டாள்தனமாக நடந்து விட்டதாகவும் (நவூதுபில்ல்லாஹ்) இப்போது இந்த நவீன முஜ்தஹிது தான்(?) புத்திசாலித்தனமான விளக்கத்தை எடுத்து வைக்கிறாராம். பின்னால் தன்னை நபி என்றும் தனக்கு வஹீ வருகிறது என்றும் வாதிடுவதற்கு அஸ்திவாரம் இடுகிறாரோ என்னவோ? இந்த அவர்களது விளக்கத்தை - வாதத்தை அவர்களின் கண்மூடி - மோடு முட்டி பக்தர்கள் ஏற்கலாம். அறை குறை சுய சிந்தனையுடையவனும் இந்த மூடத்தனமான விளக்கத்தை - வாதத்தை ஏற்க மாட்டான்.

நிய்யத் - எண்ணம் பிரதானம்!

ஒருவனிடம் 40 ஆடுகள் ஒரு வருடம் இருந்து விட்டால் அவன் 1 ஆடு கொடுக்க வேண்டும். அதன் பின்னர் இன்னும் 40 ஆடுகள் வந்தால் உடனே ஜகாத் கொடுக்க வேண்டியதில்லை. ஒரு வருடம் பூர்த்தியான பின்னரே தன்னிடம் இருக்கும் ஆடுகளைக் கணக்கிட்டு அதற்குரிய ஜகாத்தை கொடுக்க வேண்டும்.

ஒரு வருடம் பூர்த்தியான பின்னரே ஜகாத் கடமையாகும் என்ற அசலான கடந்த 1426 ஆண்டுகளாகக் கடைபிடிக்கப்பட்டு வரும், எந்த குர்ஆன் வசனத்திற்கோ, ஆதாரப்பூவமான ஹதீஸுக்கோ முரணில்லாத மார்க்கச் சட்டத்தை, தனது சுய நல வாதத்தால் முடமாக்கி, பொருள் கிடைத்தவுடன் ஜகாத் ஒரு முறைதான் கொடுக்க வேண்டும் என்ற குருட்டுச் சட்டத்தை நிலைநாட்ட, இந்த அளவு தனது வாதத்திறமையை - சாதுரியத்தை வெளிப்படுத்துகிறார். ஒருவரிடம் 40 ஆடுகள் இருந்தால் என்ற நிய்யத் - எண்ணம் இருக்குமே அல்லாமல், தன்னிடம் உடனடியாக இன்னும் 40 ஆடுகள் வரும் அதற்கும் சேர்த்துக் கொடுப்போம் என்ற எண்ணம் வராது. எந்த அமலாக இருந்தாலும் நிய்யத்தே - எண்ணமே பிரதானம். இது ஆதாரப்புர்வமான ஹதீஸ்.

அப்பாஸ்(ரழி) அவர்களிடம் இரண்டு வருடங்களில் ஜகாத் முன்னதாக வசூலிக்கப்பட்டதாக கூறும் பலவீனமான ஹதீஸை விமர்சித்து எழுதிய எழுத்துக்கள் அனைத்தும், தன்னிடம் அப்போது இல்லாத ஆடுகளுக்கும் ஜகாத் கொடுப்பதாக எண்ணுவதற்கும் பொருந்தும் என்பது இந்த நவீன முஜ்தஹிதின்(?) மூளையில் படவில்லையா?

'மனிதர்களின் அழுக்காக இருந்த பொருள் ஒரு கையிலிருந்து மறு கைக்கு மாறியவுடன் எப்படி அழுக்கு என்ற நிலையிலிருந்து மாறி விட்டதோ அதுபோல் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பொருள் கிடைக்கும் போது அவர் தன் பங்குக்குத் தூய்மைப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் அழுக்காகவே வந்து சேரும்.

ஏகத்துவம், செப்டம்பர் 2005, பக்கம் 16

இந்த அவர்களின் தத்துவப்படி பின்னர் வந்த 40 ஆடுகளும் அழுக்காகத்தானே அவர் கையில் வந்து சேரும். அவர்கள் கைக்கு வந்து சேரு முன்னரே அவை தூய்மையாகி விட்டன என இங்கு எந்தச் சித்தாந்தப்படி அவர்களே முரணா? தங்களின் சொத்தை வாதத்தை நிலைநாட்ட எப்படி எல்லாம் அந்தர்பல்டி அடிக்கிறார்கள்? எப்படி எல்லாம் சம்பந்தமில்லாத ஹதீஸ்களைச் சம்பந்தமில்லாத இடங்களில் எடுத்து எழுதி திரித்து வளைத்து, சொந்த யூகங்களைச் சொல்லிவிட்டு, பின்னர் அந்தப் பழியை தங்களின் எதிராளிகள் மீது மிக எளிதாக எறிந்து விடுகிறார்கள் என்பது புரிகிறதா?

அமானித மோசடியாளர்களுக்கு கை வந்த கலை!

தாங்கள் செய்யும் அமானித மோசடிகள், அவதூறு பரப்புதல் மற்றும் பல பெரும் பாவங்களை எளிதாக மற்றவர்கள் மீது சுமத்துகிறவர்களுக்கு ஹதீஸ்களில் விளையாட சொல்லியாக் கொடுக்க வேண்டும். ஜமாய்க்கிறார்கள்.

ஸஹாபாக்களை பின்பற்றலாமா?

ஏகத்துவம் , செப்டம்பர் 2005, பக்கம் 51 முதல் 64 வரை 14 பக்கங்களில் "ஸஹாபாக்களைப் பின்பற்றலாமா?" என்ற தலைப்பில் சில முக்கிய குர்ஆன் வசனங்களையும், நபித்தோழர்களின் சிறப்புக்கள் பற்றிய சில ஹதீஸ்களையும், அதன் பின்னர் ஸஹாபாக்களில் சிலரிடம் ஏற்பட்ட சில தவறுகளைச் சொல்லும் ஹதீஸ்களையும் எடுத்து எழுதி இருக்கிறார்கள்.

ஊருக்குத்தான் உபதேசம்!

ஊருக்கு உபதேசம் செய்யும் அவர்கள், அவர்கள் எடுத்து எழுதியுள்ள அல்குர்ஆன் வசனங்களின் போதனைப்படி நடக்கிறார்களா? அந்த வசனங்கள் வருமாறு 7:3, 2:38, 6:106, 24:51,54, 3:31, 8:46, 6:153, 4:59, 33:36, 5:3 ஆகியன. இந்த வசனங்களின் படி இவர்கள் முதலில் நடக்கிறார்களா?

இவர்களின் வாதப்படியே எடுத்துக் கொள்வோம்! ஜகாத் வருடா வருடம் கொடுக்க வேண்டும் என்ற குர்ஆன், ஹதீஸில் நேரடியாகச் சொல்லப்படவில்லை என்பதை ஒரு வாதத்திற்கு ஒப்புக் கொள்வோம். ஆனால் அபூபக்கர், உமர், உதுமான், அலீ(ரழி) சொல்லி நடைமுறைப்படுத்தி இன்றைக்கு 1426 வருடங்களாக அனைத்து முஸ்லிம்களும் எவ்வித கருத்து வேறுபாடுமில்லாமல் ஏகோபித்து ஒப்புக்கொண்டு செயல்பட்டு வருகிறார்கள். இக்கருத்தை மறுத்துக் கூறும் குர்ஆன் வசனமோ, ஹதீஸோ இல்லை என்பதையும், அவர்கள் மறுக்க முடியாது. இந்த நிலையில் குர்ஆனிலோ, ஹதீஸிலோ ஆதாரம் இல்லை எனக்கூறி வருடா வருடம் ஜகாத் கொடுத்த பொருளுக்கு மீண்டும் கொடுப்பதை இந்த தவ்ஹீத் புரோகித முல்லாக்கள் மறுக்கிறார்கள்.

TNTJ -க்கு ஹதீஸ் ஆதாரம் உண்டா?

இப்படி மறுக்கிறவர்கள் TNTJ யை எந்த முகத்துடன் ஆதரிக்கிறார்களா? சரி காண்கிறார்கள்? மார்க்கம் என்கிறார்கள்? TNTJ யை உலக மக்கள் அல்ல, இந்திய மக்கள் அல்ல, தமிழ்நாட்டு முஸ்லிம்களிலும் கூட ஒரு சிறு பிரிவினர் மட்டுமே ஏற்றுள்ளார்கள். அதுவும் 1426 ஆண்டுகளாக அல்ல; ஜூன் 2004லிருந்து 1.25 ஆண்டுகள் மட்டுமே. இதுவரை அவர்கள் சரி கண்டு அவர்களே பெயரிட்டு இப்போது மறுக்கும் பெயர்களின் பட்டியல்கள் AQH, JAQH முஸ்லிம் முன்னணி, முஸ்லிம் பேரவை, த,மு.முக., அனைத்து தவ்ஹீது ஜமாஅத் கூட்டமைப்பு, இப்போது TNTJ இதற்குப் பின்னர், இன்னும் எத்தனையா? இவைகளுக்கு எங்கே குர்ஆன், ஹதீஸ் ஆதாரம்? இவற்றிற்கு குர்ஆன், ஹதீஸ் ஆதாரம் இல்லை என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். இந்தப் பிரிவுப் பெயர்களை மறுத்துக் கூறும் குர்ஆன் வசனங்கள் இதோ 3:103,105, 6:153,159, 30:32, 42:13,24 இத்தனை குர்ஆன் வசனங்களின் எச்சரிகைகளுக்கு மாறாக சமுதாயத்தை மேலும் மேலும் பிளவுபடுத்திக் கொண்டிருக்கிறார்களே, அப்படிப்பட்டவர்கள், மேலே அவர்கள் எழுதியுள்ள வசனங்களைக் காட்டி, வருடா வருடம் ஜகாத் கொடுத்த பொருளுக்கும் கொடுக்க வேண்டும் என்பவர்களை எச்சரித்துள்ளார்களே? அதற்கு இவர்களிடம் என்ன தகுதி இருக்கிறது? குர்ஆன், ஹதீஸ் போதனைக்கு முரணில்லாத நிலையிலுள்ள உமர்(ரழி) அலீ(ரழி) ஆகியோரின் விளக்கங்கள் அவர்களின் சுய கருத்துக்கள், அவற்றை ஏற்க முடியாது; மார்க்க முடியாது என்று கூறுகிறவர்கள், எந்த முகத்தோடு , குர்ஆன் ஹதீஸ் போதனைகளுக்கு முரண்பட்ட இவர்களின் சுய நல விளக்கங்களைத் தூக்கிப் பிடிக்கிறார்கள். TNTJ யை தூக்கி நிறுத்துகிறார்கள்? மார்க்கமாக்குகிறார்கள்? விளக்குவார்களா?

உமர்(ரழி) அவர்களை விட அலீ(ரழி) அவர்களை விட எங்களின் அந்தஸ்து உயர்வானது என்று சொல்லாமல் சொல்கிறார்களா? நபிதோழர்களின் சிறப்புகள் பற்றி எடுத்து எழுதிய குர்ஆன் வசனங்களும், ஹதீஸ்களும் ஊருக்கு உபதேசம் தானா? இவர்களுக்கு இல்லையா?

நபிதோழர்களுக்கு இல்லாத அதிகாரம் இவர்களுக்கு உண்டா?

எந்த ஒரு குர்ஆன் ஆயத்திற்கோ, ஹதீஸுக்கோ, முரணில்லாத நிலையில் மார்க்க விளக்கம் கொடுக்கும் அதிகாரம் உமர்(ரழி) அவர்களுக்கு, அலீ(ரழி) அவர்களுக்கு மற்றும் நபிதோழர்களுக்கு இல்லை என்பது இவர்களின் வாதம். அதற்க மாறாக குர்ஆன் வசனங்களுக்கு முரணாக, ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கு முரணாக சொந்த சுய விளக்கம் கொடுக்கும் அதிகாரம் தங்களுக்கு உண்டு எனச் செயல்படுகிறார்கள். அந்த அடிப்படையில் தான் TNTJ பிரிவுப் பெயரையும் மற்றும் பல குர்ஆன், ஹதீஸுக்கு முரணாக அவர்களின் செயல்பாடுகளையும் தங்களின் வாதத்திறமையாலும், பேச்சுவன்மையாலும் மார்க்கமாக்கி வருகிறார்கள். அப்பாவி இளைஞர்களை மூளைச்சலவை செய்து மயக்கி வழி கெடுத்து நரகில் கொண்டு தள்ளுகிறார்கள்.

உலகமகா மேதைகள்?

ஜகாத் கடமையாக்கப்பட்டது ஹிஜ்ரி 2ல், நபி(ஸல்) அவர்களின் மரணம் ஹிஜ்ரி 11. இந்தக் காலக்கட்டங்களில் நபி(ஸல்) அவர்கள் கூடவே இருந்து பழகி, நபி(ஸல்) அவர்கள் செல்வந்தர்களிடமிருந்து ஜகாத் வசூலித்து பாத்தியப்பட்டவர்களுக்கு கொடுத்துக் கொண்டிருந்ததை நேரடியாகக் கண்கூடாக அதுவும் 10 ஆண்டுகள் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஜகாத் வருடா வருடமா? அல்லது ஒரு முறையா? ஜகாத் கொடுத்த பொருளுக்கும் மீண்டும் தொடர்ந்து வருடா வருடம் ஜகாத் கொடுத்துக் கொண்டிருக்க வேண்டுமா? அல்லது ஒரு முறை கொடுப்பதோடு கடமை முடிந்து விட்டதா? போன்ற விபரங்கள் தெரியவில்லை. அந்த அளவு அவர்கள் அறிவிலிகளாக இருந்தார்கள். (நவூதுபில்லாஹ்) நாங்களோ உலக மகா மேதைகள். 1426 ஆண்டுகளுக்குப்பிறகு வாழும் எங்களுக்கு நபி(ஸல்) அவர்களின் ஜகாத் பற்றிய நடைமுறைகள் இன்று நேரில் பார்ப்பது போல் தெரிகிறது. அந்த அளவு ஞானக்கண் எங்களுக்கிருக்கிறது என்று சொல்லாமல் சொல்கிறார்களா? அதனால்தான் குர்ஆன், ஹதீஸ் ஆதாரம் இல்லாமல், பலவீனமான ஹதீஸ்கள் கூட இல்லாமல் செல்வம் கையில் கிடைத்தவுடன் ஜகாத் கொடுத்து விட வேண்டும்; அதன் பின்னர் அந்த செல்வத்திற்கு ஜகாத் கடமை இல்லை என உறுதியாக ஃபத்வா(?) கொடுக்கிறார்களா? அதுவும் சுய கற்பனைகளையும், யூகங்களையும் அள்ளி விட்டு ஃபத்வா கொடுக்கிறார்களா?

நபித் தோழர்கள் தவறுகளுக்கு அப்பாட்பட்டவர்களா?

நபிதோழர்கள் சிலரின் வாழ்க்கையில் இடம் பெற்ற சில குறைபாடுகளைச் சொல்லும் சில ஹதீஸ்களை எடுத்து எழுதி இருக்கிறார்களே அந்தத் தவறுகள் அனைத்தும் அந்தக் கருத்துக்களுக்கு மாற்றமான கருத்தைச் சொல்லும் குர்ஆன் வசனங்களைக் கொண்டோ அல்லது ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களைக் கொண்டோ அல்லாமல், யாருடைய சுய கற்பனை, யூகம், வாதத்திறமை இவற்றைக் கொண்டு மறுக்கப்பட்டிருக்கிறதா? இல்லையே! அந்த அனைத்து அஃதர்களிலும் அந்தத் தவறுகள் உரிய குர்ஆன் வசனம் அல்லது ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் கொண்டு மட்டுமே மறுக்கப்பட்டிருக்கின்றன.

அந்த ஹதீஸ்களை எடுத்து எழுதியவர்கள் அந்த ஹதீஸ்களின் போதனைப்படியா நடக்கிறார்கள்? அப்படியானால் இந்த தவ்ஹீத் மவ்லவி புரோகிதர்கள் 'செல்வம் கிடைத்தவுடன் ஜகாத் கொடுத்துவிட வேண்டும், வருடம் பூர்த்தியாக வேண்டியதில்லை; ஒரு பொருளுக்கு ஒரு முறை ஜகாத் கொடுத்து விட்டால், அந்தப் பொருளுக்கு ஜகாத் கடமை நிறைவேறி விட்டது. அதன் பின்னர் எத்தனை வருடங்கள் அந்தப் பொருள் ஜகாத் கொடுத்த நபரிடம் இருந்தாலும் ஜகாத் கொடுக்க வேண்டியதில்லை' என்று கூறும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை எடுத்து வைத்தல்லவா தங்களின் வாதத்தை நிலை நாட்ட வேண்டும்.

ஈமானுள்ளவர்கள் செய்ய முடியுமா?

இப்படிக் கூறும் ஒரு பலவீனமான ஹதீஸும் இல்லாத நிலையில், தங்களின் சொந்தக் கற்பனைகள், யூகங்கள். செல்வம் கரைந்து விடும் என்ற அச்சுறுத்தல்கள், வார்த்தை ஜாலங்கள் இவை கொண்டு மார்க்கத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான, தூண்களில் ஒன்றான ஜகாத் கடமை பற்றி வாய்க்கு வந்தவாறு தெனாவட்டாக எழுதி பக்கங்களை நிரப்புவது யாருடைய வேலை? உள்ளத்தில் கடுகளவு ஈமானுடைய உணர்வு உள்ளவனும் இந்த ஈனச் செயலைச் செய்ய முடியாதே.

அவர்களின் அசல் நோக்கம் என்ன தெரியுமா?

அந்தக் காலத்தில் இவர்களின் ஆபாக்களான புரோகித முன்னோர்கள் உலக வாழ்க்கையையே குறிக்கோளாகக் கொண்டிருந்ததால், யாரைத் திருப்திப்படுத்தினால் தங்களுக்கு உலக ஆதாயங்கள் கிடைக்கும் என்று எண்ணி அதற்கு ஏற்றவாறு கலீஃபாக்கள், மன்னர்கள், அதிகாரிகள், போன்றோரை திருப்திப்படுத்த சில மார்க்க முரணான சட்டங்களை மார்க்கத்தின் பேராலேயே இயற்றினார்கள். அவற்றில் சில வருமாறு:

1. இமாமோ, கலீஃபாவோ, அரசரோ, விபச்சாரம் செய்தால் அவருக்கு 'ஹத்' -தண்டனை கிடையாது.

நூல் : (உருது) துர்ருல் முக்தார் , பா.2.பக்கம் 4117, ஆலம்கீரி, பா.2.பக்கம் 675, ஹிதாயா, பா.2. பக்கம் 463, ஷரஹுல்விகாயா, பக்கம் 332, கன்சு பக்கம் 192.

2. அரசரோ அவரது பிரதிநிதியோதான் ஜும்ஆ நடத்த வேண்டும்.

ஹிதாயா பாகம் 1, பக்கம் 643, ஷரஹுல்விகாயா பக்கம் 147 (உருது)

3. ஒருவன் விபச்சாரம் செய்வதற்காகவே ஒரு பெண்ணை வாடகைக்கு ஏற்பாடு செய்து கொண்டு, விபச்சாரம் செய்தால் அவனுக்கு (கசையடி) தண்டனை இல்லை. இது இமாம் அபூ ஹனீபாவின் சொல் ஆகும். ஆதாரம் : ஹனஃபீ சட்ட நூல்களான காலிகான், கன்ஸுத்தகாயிக

இப்படி அறிவுக்கே பொருந்தாத புத்தியற்ற சட்டங்களை இவர்களின் ஆபாக்களான புரோகித முன்னோர்கள் (இமாம் அபூஹனீபா அல்ல) ஏன் இயற்றினார்கள் தெரியுதா? இப்படி சட்டம் இயற்றி கலீஃபாக்களையும், அரசர்களையும், செல்வந்தர்களையும் குஷிப்படுத்தி விட்டால், அவர்கள் அதற்காக நாய்க்கு எலும்புத் துண்டுகளை வீசுவதுபோல் சில சில்லரைகளை வீசுவார்கள். அதில் புளங்காகிதம் அடைவார்கள். இவர்களின் ஆபாக்களான புரோகித முன்னோர்கள்.

இன்று கலீஃபாக்களோ, அரசர்களோ இல்லை. இருப்பதோ வெறும் செல்வந்தர்கள் மட்டுமே. எனவே அந்த செல்வந்தர்களை ஜகாத் பற்றிய இப்படிப்பட்ட ஃபத்வாக்களைக் கொண்டு குஷிப்படுத்தி விட்டால் அவர்கள் சில சில்லறைகளை இவர்கள் நோக்கி வீசுவார்கள். அதற்கு ஆசைப்பட்டும், இவர்களிடம் இப்போது சேர்ந்திருக்கும் கோடிக்கணக்கான செல்வங்களுக்கு 'ஜகாத்' கொடுக்காமல் ஏய்ப்பதற்குமே இப்படிப்பட்ட புத்தியற்ற அறிவீனமான ஃபத்வாக்களை அளிப்பதாக எண்ண வேண்டியுள்ளது.

செல்வந்தர்களின் செல்வ நிலை!

இன்றைக்கு சில செல்வந்நதர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு வாடகை தரும் பல கட்டிடங்கள் இருக்கின்றன. ஒரு சில கட்டிடங்களில் ஒரேயொரு கட்டிடத்தில் மட்டும் ரூபாய் 6 லட்சம் மாத வாடகை வருகின்றது. அப்படிப்பட்ட செல்வந்தர்களின் மாத வருமானத்தை கணக்கிட்டுப் பாருங்கள். அவர்களின் சொத்துக்களை கணக்கிட்டுப் பாருங்கள். முறைப்படி ஜகாத் கொடுப்பதாக இருந்தால் வருடா வருடம் சில கோடிகள் ஜகாத்தாகவே கொடுக்க வேண்டி இருக்கும். இயற்கையாவே அந்தச் செல்வந்தர்களுக்கு செல்வத்தின் மீதிருக்கும் பேராசையால் அவர்கள் ஒழுங்காக ஜகாத் கொடுப்பதில்லை. முஸ்லிம் செல்வந்தர்கள் அனைவரும் முறையாகக் கணக்கிட்டு ஜகாத் கொடுக்க முன்வந்தால், முஸ்லிம்களிடையே ஏழைகளையே பார்க்க முடியாது. அந்த அளவு செல்வம் முஸ்லிம்களிடையே இருக்கவே செய்கிறது. ஆனால் கொடுப்பதில்லை. அவர்களின் மனோ இச்சைக்கு ஏற்றவாறு இவர்களின் ஃபத்வா இருக்கிறது. இவர்களின் ஃபத்வா மூலம் பல கோடிகளை அவர்களுக்கு மிச்சப்படுத்திக் கொடுக்கும் போது, இவர்களுக்கு சில இலட்சங்களை காணிக்கையாக(?) அள்ளிக் கொடுக்க முன் வருவார்களா? இல்லையா?

மார்க்கம் இவர்களுக்கு பிழைப்பாகி விட்டது!

அன்று, அன்றைய கலீஃபாக்களையும், அரசர்களையும் திருப்திப்படுத்த இவர்களின் ஆபாக்களான புரோகித முன்னோர்கள் சட்டம் இயற்றியது போல், இந்த தவ்ஹீத் மவ்லவி புரோகிதர்கள் இன்றைய செல்வந்தர்களை திருப்திப்படுத்த, இந்த நவீன் 'ஜகாத்' ஃபத்வாவை, ஒன்று கூடி ஏகோபித்து இயற்றி இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் மார்க்கத்தை வைத்துப் பிழைப்பு நடத்தும் ஒரே காரணத்தால் இப்படிப்பட்ட இழிவான ஃபத்வாவை கற்பனை செய்யும் கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

இவர்கள் ஏகோபித்து முடிவு செய்து வெளியிடுவதாக பட்டியலிட்டிருக்கும் எல்லா மவ்லவி புரோகிதர்களும் கூலிக்காக மார்க்க பணி புரிகிறவர்களே. இவர்கள் ஒவ்வொருவருக்கும் மாதா மாதம் சுமார் 10 ஆயிரத்திலிருந்து 15 ஆயிரம் வரை கூலி கிடைக்கும் . பணம் படைத்த எந்த அமைப்பாவது நாங்கள் மாதம் 20 ஆயிரம் கூலி தருகிறோம் என்று அழைத்தால், உடனே அந்த அமைப்புக்குத் தாவி இப்போதிருக்கும் அமைப்பை நோக்கி வசைமாரிகளை அள்ளி வீசத் தயங்க மாட்டார்கள். கொள்கைக்கும் இவர்களுக்கும் கடுகளவும் சம்பந்தமில்லை. இவர்களின் கடந்தகால செயல்பாடுகளே இக்கூற்றை உண்மைப்படுத்தும் . உதாரணத்திற்குப் பாருங்கள்.

உணர்வு உரிமை : 05 குரல் :6 அக்டோபர் 20-26, 2000 பக்கம் 12.

மறுமையை முன்னிறுத்தி சமுதாயச் சீர்திருத்ததுக்காக நானும் சேர்ந்து உருவாக்கிய தவ்ஹீது இயக்கத்தில் கூட, சுயநலனையும், பதவி மோகத்தையும், பணம் திரட்டும் குறிக்கோளையும் நான் காண்கிறேன். சம்பளம் இல்லாவிட்டால் அவர்கள் இப்பணியைச் செய்ய மாட்டார்கள் என்பதை உணர்கிறேன்.

ஆனால், உலகில் அடைய வேண்டிய உரிமைகளுக்காத் துவக்கப்பட்ட த.மு.மு.க.வின் தலைமை நிர்வாகிகளிடம் அல்லாஹ்வின் மீது ஆணையாக இந்த நிலையை நான் காணவில்லை. மறுமைக்கான பணியைக் கூட சில பேர் இவ்வுலக ஆதாயத்துக்காக ஆக்கிவிட்ட நிலையில், இவ்வுலகிற்காக மட்டுமே உரிய பணிகளை கூட இவர்கள் மறுமைக்காக ஆக்கிக் கொண்டதை நான் பார்க்கிறேன். நன்றி :உணர்வு.

ஆம்! அன்று எந்த தவ்ஹீத் இயக்கத்திலுள்ள புரோகிதர்களிடம் சுயநலன், மார்க்கப் பணியை சம்பளம் இல்லாமல் செய்யமாட்டார்கள் என்று அடுக்கடுக்கான குற்றம் சுமத்தி இருக்கிறாரோ அந்த புரோகித மவ்லவிகளைக் கொண்டு தான் ஏகோபித்து இந்த ஜகாத் ஃபத்வாவை கற்பனை செய்துள்ளார். அப்படியானால் அந்த ஃபத்வாவின் லட்சணம் புரிகிறதா? அவரே கூலிக்கு மாரடிக்கும் புரோகிதர்கள் என சர்ட்டிபிகேட் கொடுத்த பின்னர் நாம் வேறு ஆதாரம் தேடிப்போக வேண்டுமா?

குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு!

இதில் இன்னொரு உண்மையையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அன்று அல்லாஹ் மீது ஆணையிட்டுச் சொன்ன உறுதி மொழி இன்று என்ன ஆயிற்று? குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு என்பது போல் இந்த மவ்லவிகளின் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுச் சொல்லும் சத்தியங்களும் அவதூறுகளாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் உண்டா?

இன்னொரு மெகா உண்மையையும் இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த தவ்ஹீத் மவ்லவி புரோகிதரின் அறிமுகத்திற்கும், வளர்ச்சிக்கும், பண வசூலுக்கும் பெரிதும் பாடுபட்டவர்கள். உற்ற நண்பர்கள், இவரின் தவறுகளைச் சுட்டிக்காட்ட ஆரம்பித்தால், அவர்கள் ஜன்மப் பகைவர்களாக ஆகி விடுவார்கள். அவர்கள் மீது மெகா பழிகளையும், அவதூறுகளையும் வாரி இறைத்து, தனது மீடியா பலம் கொண்டும், குருட்டு பக்தர்கள் துணை கொண்டும் உலகம் முழுவதும் பரப்பி விடுவார். அவர் பரப்பி வரும் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க அழைத்தால், அவை உண்மையாக இருந்தால் அல்லவா நிரூபிக்க முடியும். அப்பட்டமான அவதூறுகளை எப்படி நிரூபிக்க முடியும்?

எனவே தனது குருட்டுப் பக்தர்களை ஏமாற்றி திசை திருப்ப, குற்றச் சாட்டுக்கள் பற்றி விவாதம் செய்யத் தயாரா என சவால் விடுவார். முபாஹலாவுக்கு அழைப்பார். 'விவாதத்திற்கு ஒப்பந்தம் போடவா' என்பார். விவாதம் இல்லை, குற்றத்தை நிரூபிக்க வாருங்கள் என்றால் வரமாட்டார். குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கத்தானே வேண்டும். குற்றச் சாட்டுக்கள் பற்றி விவாதிக்க என்ன இருக்கிறது? என்று இவரின் குருட்டு பக்தர்கள் சிந்திப்பதில்லை. சுய சிந்தனையை அவர்கள் வளர்த்துக் கொண்டிருந்தால் அல்லவா சிந்திக்கப் போகிறார்கள்.

சகோதரர் பழ்லுல் இலாஹி கூறி இருப்பது போல், "ஒருவனுடைய மனைவியை இன்னொருவனுடன் நான் பார்த்தேன்" என்று அவதூறு கூறுகிறவரனைப் பார்த்து, அப்பெண்ணின் கணவன், அந்த நபர் யார்? உரிய ஆதாரத்துடன் நிரூபி என்று கேட்டால் , செய்தி உண்மையான இருந்தால் அல்லவா நிரூபிக்க முடியும். அவதூறை எப்படி நிரூபிக்க முடியும்? எனவே "உனது மனைவியின் பத்தினித்தனம் பற்றி விவாதம் செய்யத் தயாரா? முபாஹலாவுக்குத் தயாரா? என்று அவதூறு பரப்பியவன் சவால் விட்டால் அவனை எந்தப் பட்டியலில் சேர்ப்பது?

எதுவாக இருந்தாலும் தனது வாதத்திறமை, வார்த்தை ஜாலம் இவை கொண்டு உண்மையைப் பொய்யாகவும், பொய்யை உண்மையாகவும் தனது குருட்டுப் பக்தர்களை நம்ப வைத்து விடலாம் என்ற அசட்டுத் துணிச்சலால்தானே இப்படி எல்லாம் சவால் விட்டு ஏமாற்றுகிறார். நாம் கூறுவது உண்மையா? இல்லையா? என்பதைக் கடந்த நான்குவார அபகரிக்கப்பட்ட உணர்வு வார இதழ்களைப் பார்த்தவர்கள், அதாவது சுய சிந்தனையுடன் படித்தவர்கள் அறிவார்கள்.

செல்வந்தர்களே இந்த தவ்ஹீது மவ்லவி புரோகிதர்களின் ஃபத்வா உங்களுக்கு இப்போது இனிப்பாக இருக்கலாம். ஜகாத்திற்குரிய பெருங் கொண்ட தொகையை இந்த ஃபத்வாவின் மூலம் மிச்சப்படுத்திக் கொடுத்து விட்டதாக மகிழ்ச்சியடையலாம். அதற்காக அவர்களுக்கு சில சில்லரைகளை விட்டெறிந்தும் இருக்கலாம். ஆனால் ஒன்றை மறந்து விடாதீர்கள்.

எப்படி இவர்களின் ஆபாக்களான புரோகித முன்னோர்களின் ஃபத்வாவை நம்பி விபச்சாரத்திலும், இன்னும் பல தீமைகளிலும் ஈடுபட்ட கலீஃபாக்கள், அரசர்கள், செல்வந்தர்கள் நாளை மறுமையில் அல்லாஹ்வின் தர்பாரில் வசமாக மாட்டப் போகிறார்களோ, மிகக் கடுமையான தண்டனைக்கு ஆளாகப் போகிறார்களோ, அதே போல் இந்தப் புரோகித தவ்ஹீத் மவ்லவிகளின் ஃபத்வாவை நம்பி நீங்கள் செலுத்த வேண்டிய ஜகாத்தை முறைப்படி வருடா வருடம் செலுத்தாவிட்டால் நாளை மறுமையில் அல்லாஹ்வின் தர்பாரில் வசமாக மாட்டப் போகிறீர்கள். நீங்கள் சேர்த்து வைத்து விட்டுச் செல்லும் செல்வங்களை நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி, அதைக் கொண்ட உங்களுடைய நெற்றிகளிலும், விலாப்புறங்களிலும் முதுகுகளிலும் சூடு போடப்படும். இதுதான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது - ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததைச் சுவைத்துப் பாருங்கள் (என்று கூறப்படும்) . (பார்க்க : அல்குர்ஆன் 9:34,35)

நரக வேதனையிலிருந்து தப்ப வழி!

இந்தக் கடும் வேதனையிலிருந்து நீங்கள் தப்ப வேண்டுமென்றால், உருண்டோடிக் கொண்டிருக்க வேண்டிய செல்வத்தை அப்படிச் செல்லவிடாமல், நீங்கள் தடுத்து வைத்துள்ளதற்காக அந்தச் செல்வங்களுக்கு வருடா வருடம் 2.5 சதவிகிதம் எடுத்து அதற்குரியவர்களிடம் ஒப்படைத்து விடுங்கள். அதுவே உங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றும்.

செல்வத்தை அனுபவிக்கிறீர்களா?

செல்வந்தர்களே! நீங்கள் சேமித்துக் வைத்துக் கொண்டு பெருமைப்பட்டுக் கொண்டிருக்கும் செல்வத்தைக் கொண்டு நீங்கள் உண்மையில் அனுபவிப்பது எவற்றை என்பதை நிதானமாகக் சிந்தியுங்கள்ள. எவ்வளவுதான் உங்களிடம் செல்வம் இருந்தாலும் உங்களால் ஒரு வயிற்றுக்குத்தானே சாப்பிட முடியும். இரண்டு வயிற்றுக்குச் சாப்பிட முடியுமா? இரண்டு உடைகளை அணிந்து கொள்ள முடியுமா? இரண்டு வாகனங்களில் பிரயாணம் செய்ய முடியுமா? இரண்டு பங்களாக்களில் குடியிருக்க முடியுமா? நீங்கள் அனுபவிப்பதற்கென்று அல்லாஹ் ஒதுக்கியதற்கு மேல் ஒரு ஊசிமுனை அளவுதானும் உங்களால் அனுபவிக்க முடியுமா? இன்னும் தெளிவாகச் சொன்னால் ஒரு ஏழை, நடுத்தர வர்க்கத்தினன் அனுபவிக்கும் உலக சுகங்களைக் கூட அனுபவிக்க விடாமல், உங்களது செல்வம் உங்களைத் தடுத்துக் கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை. 1963 லிருந்து 1984 வரை தப்லீக்கில் ஈடுபாடுள்ள பெரும் பெரும் செல்வந்தர்களுடன் பழகும் வாய்ப்பும் இருந்தது. 1984லிருந்து 2005 வரை குர்ஆன், ஹதீஸ் மட்டுமே மார்க்கத்தின் அடிப்படை, 'முஸ்லிம்' என்ற நிலையிலேயெ முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று பட வேண்டும் என்ற லட்சியத்திற்காகப் பாடுபட்டு வரும் இந்தக் காலக்கட்டத்திலும் பல செல்வந்தர்களுடன் பழகும் வாய்ப்பு இருக்கிறது. 'செல்வத்தைப் பெருக்கும் ஆசை உங்களைப் பராக்காக்கி விட்டது' (அல்குர்அன் 102:1) என்று அல்லாஹ் கூறுவது மறுமையை மறந்த நிலையைத்தான். ஆனால் செல்வந்தர்களில் பலர் இவ்வுலகில் அவர்கள் அனுபவிக்க வேண்டியவைகளையும் அனுபவிக்காமல் மறந்து செல்வங்களைச் சேர்ப்பதில் மூழ்கி இருப்பதையே பார்க்க முடிகிறது. ஆக பெரும்பாலான செல்வந்தர்கள் செல்வங்களைச் சேர்ப்பதில் மூழ்கி இருப்பதையே பார்க்க முடிகிறது. ஆக பெரும்பாலான செல்வந்தர்கள் செல்வங்களைச் சேர்த்து குவிப்பதில் குறியாக இருப்பது அனுபவிப்பதற்காக அல்ல. மக்களிடையே கிடைக்கும் பெரும் செல்வந்தன் என்ற பெயரையும், அந்த மக்கள் கொடுக்கும் போலி மரியாதையையும், கூழைக்கும்பிடுவையும், உலகில் கிடைக்கும் அற்பப் பதவிகளையும் எதிர் பார்த்தே. இவற்றால் தனக்கு இவ்வுலகிலும் உரிய பயனில்லை, மறுமையில் பயனில்லை . அதற்குமாறாக மிகப்பெரும் வேதனை - தண்டனை காத்திருக்கிறது என்பதை அறியாதிருக்கிறார்கள்.

ஆக எவ்வளவு பெரிய செல்வந்தனாக இருந்தாலும் அவன் உண்டு கழித்தது, உண்டு முன் கூட்டியே அனுப்பி வைத்தது மட்டும் தான் அவனுடையதானும். எஞ்சிய செல்வங்கள் அனைத்தும் அவனது வாரிசுகளுக்குரியதாகும். அந்த வாரிசுவளாவது அது கொண்டு அனுபவிக்கிறார்களா என்றால் அதுதூன் இல்லை. அந்தச் செல்வங்களைப் பங்கிட்டுக் கொள்வதில் கூடப்பிறந்த அண்ணன் தம்பிகளிடையே சண்டை சச்சரவு, அடிபிடி தகராறு, கோர்ட் கச்சேரி என்ற அவல நிலையையே பார்க்க முடிகிறது. செல்வந்தன் சேர்த்து வைத்தச் செல்வம் அவனது வாரிசுகளையும் நிம்மதி இழக்கச் செய்து, வழக்கு வம்பு என்று அச்செல்வம் கரைந்து போகும் நிலையே ஏற்படுகிறது.

நாம் அறிந்தவரை மிதமிஞ்சிய பெரும் சொத்து சுகங்களைச் சேர்த்து வைத்து விட்டுச் சென்றவர்களின் மக்கள், சொத்தைப் பிரித்துக் கொள்வதில் சண்டை, சச்சரவு, வழக்கு, வம்பு என செல்வத்தை கரைத்து வருவதையே பெரும்பாலும் பார்த்து வருகிறோம். அண்ணன் தம்பிகளுக்கிடையேயுள்ள தகராறினால் பல சொத்துக்கள் பாழடைந்து கிடப்பதையும் பார்த்து வருகிறோம். கடந்த நாற்பது ஆண்டுகளாக நான்கு கூடப்பிறந்த சகோதரர்களின் 3 கோடி பெறுமதியான 2 சொத்துக்கள் பிரிக்கப்படாமல் அவர்களிடையே நிலவி வந்த சண்டை சச்சரவு, வழக்கு வாய்தா, வீண் செலவு இவற்றை தீர்க்குமுகமாகத்தான் நாம் தீடீர் பயணமாக இலங்கை சென்றோம். அணணன் தம்பிகளிடையே இருந்து வந்த தகராறு , சம்பந்தமே இல்லாத சிங்களவர்கள் அதில் ஒரு சொத்தில் பாதியை அபகரிக்கும் நிலையே ஏற்பட்டிருந்தது. இறைவனது உதவியால் 40 வருட விவகாரம் ஒரு முடிவுக்கு வந்தது. வசூலில் பிரபலமான வசூல் ராஜாக்கள், நாமும் இலங்கைக்கு வசூலுக்குப் போனதாக அவதூறு பரப்பி வருகிறார்கள். வசூல் செய்ய நாம் புரோகிதத்தைத் தொழிலாகக் கொள்ளவில்லை. எமது 21 வயதிலிருந்து சொந்தக் கைகளால் உழைத்தே உண்டு வருகிறோம் என்பதை நினைவு படுத்துகிறோம்.

சொத்துத்தகராறில் தகப்பன், மகன் நீதிமன்றத்தில்

சொத்துத்தகராறில் தக்ப்பனும் மகனும் சண்டையிட்டுக் கொண்டு, வழக்கு நடத்தி பெருங்கொண்ட செல்வத்தைக் கரைத்துக் கொண்டிருப்பதையும் நாம் அறிவோம். இப்படி பெருங்கொண்ட சொத்து சேர்த்து வைத்த குடும்பங்கள் அவற்றை முறையாக அனுபவிப்பதற்கு மாறாக சீரழிந்து கொண்டு வருவதையே பார்க்கிறோம். 10 தலைமுறை 20 தலைமுறை என சொத்து சேர்த்து வைத்து விட்டுச் செல்கிறார்கள். அவர்களது வாரிசுகள் அவற்றை அழித்துவிடடு பிச்சை எடுக்கும் நிலைக்கும் தள்ளப்படுகிறார்கள்.

தமிழ்நாட்டின் தென் பகுதியில் ஒரு காலத்தில் பல கப்பல்களுக்குச் சொந்தக்காரர்; கோடி, கோடியாக சம்பாதித்தவர்; அன்றைய பிரிட்டிஷ் ராணிக்கு அன்றே ரூபாய் 2.5 லட்சம் பெறுமதிப்பான வைர நெக்லஸ் அன்பளிப்பு செய்தவர்; தனது வீட்டை பர்மா தேக்காலும், கதவுகளின் குமிழ்களை தங்கத்தாலும் அலங்கரித்துக் கட்டியவர். அப்படிப்பட்ட பெரும் கோடீஸ்வரரின் மகள் பிள்ளை பேரன் தனது மகளை - குமரை கரையேற்றுவதற்காக ஊர் ஊராக கையேந்தித் திரிந்ததை 1969ல் எம் கண்ணாலேயே பார்த்தோம்.

வாரிசுகளுக்கு நீங்கள் அளிக்கும் செல்வம்!

செல்வந்தர்களே! இதை எல்லாம் இங்கு ஏன் குறிப்பிடுகிறோம் தெரியுமா? பெரும் சொத்துக்களை சேர்த்து வைத்து விட்டுச் செல்கிறவர்கள் தங்களின் வாரிசுகளுக்குப் பெரும் துரோகத்தைச் செய்து விட்டுச் செல்கிறார்கள் என்பதை புரிய வைக்கத்தான். அவர்களின் இவ்வுலக வாழ்க்கையையும், மறு உலக வாழ்க்கையும் பாழாக்குகிறார்கள் என்பதே உண்மையாகும். சொத்து சேர்க்கும் பேராசையாகப்பட்டது உங்கள் வாரிசுகளை நல்லொழுக்கமுடையவர்களாக, மார்க்கத்தில் பேணுதல் உடையவர்களாக பயிற்றுவதை விட்டும் உங்களைத் தடுத்து விடுகிறது. அதற்கு மாறாக உங்களின் மிதமிஞ்சிய செல்வம் அவர்களைப் பல தவறான வழிகளில் இட்டுச் செல்ல வழிகாட்டுகிறது. பல தீய பழக்க வழக்கங்களுக்கு ஆளாகி விடுகிறார்கள். பல செல்வந்தக் குடும்பங்களில் இதை நிதர்சனமாகப் பார்க்க முடிகிறது.

சொந்த உழைப்பே உயர்வுக்கு வழி!

சொத்து சுகங்களைச் சேர்க்காவிட்டாலும், தங்கள் குழந்தைகளை நல்லொழுக்கம் உடையவர்களாக, மார்க்கம் பேணக் கூடியவர்களாக, ஐங்காலத் தொழுகைகளைப் பேணித் தொழுபவர்களாகப் பழகுவதோடு, தங்கள் கைகளால் உழைத்து ஹலாலான முறையில் தங்களின் வாழ்வாதாரங்களைத் தேடிக் கொள்ள அவர்களைப் பயிற்றுவிப்பதே சாலச் சிறந்ததாகும். உங்கள் சம்பாத்தியத்தில் சேர்த்து வைத்ததைக் கொண்டு அவர்கள் வாழ்வதைவிட அவர்களே வாழ்வாதரங்களைத் தேடிக் கொள்ள பயிற்றுவிப்பதே மிக மிக ஏற்றதாகும்.

அல்குர்ஆனை பொருள் விளங்கி நீங்கள் படிப்பீர்களானால் எண்ணற்ற இடங்களில் அல்லாஹ்வுடைய பாதையில் பந்துக்களுக்கும், அனாதைகளுக்குகம், மிஸ்கீன்களுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், கடனாளிகளுக்கும் செலவிடுவதை உற்சாகப்படுத்தி வலியுறுத்திச் சொல்லப்பட்டுள்ளதைப் பார்க்கலாம். அவற்றை நன்கு படித்து விளங்கினால் வருடா வருடம் ஜகாத் கொடுப்பது மட்டுமல்லாமல் தாராளமாக இந்த வகைகளுக்கு அதிகம் அதிகமாக செலவிடுவதை எந்த அளவு அல்லாஹ் வலியுறுத்துகிறான் என்பதை விளங்க முடியும். அந்த வசனங்கள் வருமாறு:

2:3,177,195,212,219,254,261,267,270-274, 3:92,117,134, 4:34,38,39,95 5:64, 8:3,36,60,72 9:20,34,44,53,54,88,91,98,99 13:22, 14:31, 16:75, 22:35, 24:33, 25:7, 26:88,89 28:15, 32:16, 34:39, 35:29, 36:47, 42:38, 51:19, 57:7,10, 59:8, 60:10,11, 63:7,10, 64:16, 65:7, 70:24

இந்த வசனங்களை அனைத்தையும் கவனமாக பொருள் அறிந்து படித்து பாருங்கள். அல்லாஹ் அளித்த செல்வத்தை எந்த அளவு இல்லாதவர்களுக்கும், தேவையுடையோருக்கும், பாவப்பட்டோருக்கும் கொடுத்து உதவ வேண்டும் என்பதை விளங்க முடியும். இந்த நிலையில் தங்கள் செல்வத்தின் வெறும் 2.5 சதவிகிதத்தை வருடா வருடம் ஜகாத்தாகக் கொடுப்பதைக்கூட தடுப்பவர்கள், அதனால் செல்வம் கரைந்து இல்லாமல் ஆகிவிடும் என செல்வந்தர்களுக்குப் பூச்சாண்டி காட்டுகிறவர்கள் எந்த அளவு கொடூரமனம் படைத்தவர்கள்; ஏழைகள், எளியவர்களின் கஷ்டத்தில் இன்பம் காண்பவர்கள் என்பது குன்றிலிட்ட தீபமாக விளங்கும்.

முடிவுரை

சுமார் 40 இடங்களில் தொழுகையைப் பற்றியும் ஜகாத்தைப் பற்றியும் அல்லாஹ் வலியுறுத்திக் கூறியுள்ளான். எனவே நபி(ஸல்) அவர்கள் தொழுகைக்கு முக்கியத்துவம் கொடுத்தது போல் ஜகாத்தையும் செல்வந்தர்களிடம் வசூலித்து உரியவர்களுக்குக் கொடுப்பதிலும் நிச்சயம் முக்கியத்துவம் கொடுத்திருந்தார்கள். இதை அவர்களுடன் நெருங்கிப் பழகிய அபூபக்கர், உமர், உதுமான், அலீ(ரழி) -ம் போன்ற பின்னால் அதைச் செயல்படுத்திய கலீஃபாக்களான நபித்தோழர்களும் மற்றும் நபித்தோழர்களும் நிச்சயம் கூர்ந்து கவனித்து வந்திருப்பார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் நேர்வழி நடப்பவர்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் நேர்வழி நடப்பவர்களுக்கு இருக்க முடியாது.

வருடம் பூர்த்தியாகிய பின் வருடா வருடம் கொடுப்பதா? கிடைத்தவுடன் கொடுப்பதா? அல்லது எந்தெந்தப் பொருளுக்கு உடனடியாகக் கொடுக்க வேண்டும்; எந்தெந்தப் பொருள்களுக்கு வருடம் பூர்த்தியானபின் கொடுப்பது என்பதையெல்லாம் நபிதோழர்களின் தங்களின் 10 வருட சொந்த அனுபவத்திலேயே கண்டறிந்திருப்பார்கள். இதில் நபி(ஸல்) அவர்கள் காட்டித் தந்த நடைமுறைக்கு முரணாக அவர்கள் அனைவருமே ஒன்று சேர்ந்து ஏகோபித்து நடந்திருக்க வாய்ப்பே இல்லை. எனவே அவர்கள் கடை பிடித்ததும் இன்று 1426 வருடங்களாக முஸ்லிம்களிலுள்ள அனைத்துப் பிரிவாரும் எவ்வித கருத்து வேறுபாடும் இல்லாமல் ஏகோபித்து கடைபிடித்து வருவதுமான செல்வம் கிடைத்து ஒரு வருடம் நிறைவான பின்னரே ஜகாத் கடமையாகும். கொடுத்து வர வேண்டும் என்ற கருத்தில் மாறுபடுகிறவர்களே அதற்குரிய தெளிவான நேரடியான குர்ஆன் வசனத்தை அல்லது ஆதாரப்பூர்வமான ஹதீஸை எடுத்துக் காட்டக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

அதற்கு மாறாக 1426 வருடங்களாக நடைமுறையிலிருப்பதற்கு ஆதாரம் கேட்பதோ, அது சம்பந்தமான ஹதீஸ்களில் காணப்படும் கோளாறுகளை பெரிய்ய்ய்ய்ய்ய ஆதாரமாகக் எடுத்துக் காட்டுவதோ அறியாமையின் உச்சகட்டமாகும். எனவே அவர்களது கூற்றுக்கு நேரடியான தெளிவான ஒரேயொரு ஆதாரப்பூர்வமான ஹதீஸையும், காட்டமுடியாமல் , தங்களின் சொந்தக் கற்பனைகளையும், யூகங்களையும், மனோ இச்சைகளையும், தங்களின் வாதத்திறமையைக் கொண்டும் மாயா ஜால எழுத்துக்களைக் கொண்டு நிலைநாட்ட முற்பட்டிருப்பது ஹிமாலயத் தவறாகும். அவர்களது பேச்சை மட்டும் கேட்பவர்களாகவும், அவர்களது சின்னத்திரை வசீகரப் பேச்சில், நடிப்பில் கட்டுண்டு அவர்களின் எழுத்துக்களை மட்டும் படிப்பவர்களாகவும் தங்களின் சுய சிந்தனைக்குச் சிறையிலிட்டுக் கொண்டவர்களிடம் இந்த மாயாஜால எழுத்துக்கள் எடுபடலாம்.

அதற்கு மாறாக எல்லாருடைய பேச்சுக்களையும் கேட்பவர்களாகவும், எல்லாருடைய எழுத்துக்களையும் பார்ப்பவர்களாகவும், பக்க சார்பு இல்லாமல் நடுநிலையோடு கவனமான சுய சிந்தனையோடு படித்து விளங்குகிறவர்களிடம் இந்த 64 பக்க 'ஜகாத் ஓர் ஆய்வு' கால் காசு பெறாது; தூக்கி குப்பையில் போடவண்டிய அபத்தக் கருத்துக்களாகும். இதற்கு அந்நஜாத் 1986 நவம்பர் பக்கம் 26ல் சாட்சாத் பி.ஜே. அவர்களே அன்றைய ரஹ்மத் ஆசிரியருக்கு எழுதிய பதிலையே ஆதாரமாகத் தருகிறோம்.

"பெண்கள் ஜனாஸா தொழலாம் என்று நாங்கள் எழுதியது தவறென்றால் , பெண்கள் ஜனாஸா தொழக்கூடாது என்பது பற்றிய ஹதீஸ்களை வெளியிட வேண்டியது தான் நீங்கள் செய்ய வேண்டியது.அதை விடுத்து உங்கள் இஷ்டத்துக்கு எழுதுவதை எல்லாம் ஏற்கும் காலம் இப்போது இல்லை என்பதை உணர்ந்து கொண்டு உண்மையை உலகுக்குச் சொல்லுங்கள்". என்று பி.ஜே. அன்று எழுதினார்.

இப்போது இதே அடிப்படையில் பி.ஜே. க்கு நாங்கள் சொல்கிறோம். "ஒரு வருடம் நிறைவு பெற்றபின் ஒரு பொருளுக்கு வருடா வருடம் மீண்டும் மீண்டும் ஜகாத் கொடுக்க வேண்டும்" என்று நாங்கள் சொல்வது தவறென்றால் 'பொருள் கைக்குக் கிடைத்தவுடன் உடனடியாக ஒரு முறை ஜகாத் கொடுத்தால் போதும்; அதன் பின்னர் அந்தப் பொருளுக்கு ஜகாத் கொடுக்க வேண்டியதில்லை' என்பது பற்றிய ஹதீஸ்களை வெளியிட வேண்டியதுதான் நீங்கள் செய்ய வேண்டியது. அதை விடுத்து உங்கள் இஷ்டத்திற்கு எழுதுவதை எல்லாத் ஏற்கும் காலம் இப்போது இல்லை என்பதை உணர்ந்து கொண்டு உண்மையை உலகுக்குச் சொல்லுங்கள் என்று இன்று நாங்கள் பி.ஜே. க்கு மீண்டும் சொல்கிறோம்.


உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

 
images/index_r1_c1.jpg