|
|
|
அனாச்சாரம் செய்வதில் கெட்டிக்காரர்கள் A.கமால்,திருச்சி |
ஜந்து கடமைகளுள் ஒன்றான ஜவேளைத் தொழுகையை முறையாய் பேண வேண்டிய முஸ்லிம்கள் தன்னை முஸ்லிம் என்று ஜும்ஆ தினத்தில் மட்டுமே காட்டிக் கொள்கிறார்கள். அன்று கூட தொழ வராத எத்தனையோ மகான்களும் உண்டு.
வரதட்சணை வாங்காமல், மஹர் கொடுத்து மட்டும் திருமணம் செய்யச் சொன்னால் மாற்றாரை விடவும் அதிகமாகவே வாங்கி ஏக தடபுடலாக திருமணம் செய்வதில் கெட்டிக்காரர்கள் நம்மவர்கள்.
வட்டி வாங்குவதை இறைவனின் கடுமையான எச்சரிக்கைகளுக்குப் பின்னும் வட்டியைத் தொழிலாகப் பண்ணுகிற பேர்வழி என்று மாற்றாரை விடவும் அதிகமாகவே வட்டிக் காசு திண்பதில் கெட்டிக்காரர்கள். ஆண்களுக்குத் தடுக்கப்பட்ட தங்கத்தை, அணியக்கூடாது என்று சொன்னால், மிடுக்காக போட்டுக் கொள்பவர்களில் கெட்டிகாரர்கள்.
படைத்தவனுக்கும், படைப்பினமான மனிதனுக்கு இடைவெளி ஏற்படுத்தி முட்டுக்கட்டைப் போட்டு மாற்று மத புரோகிதரர்கள் போல் மார்க்கக் கல்வியை அறிந்தவன், அறியாதவன், படித்தவன், படிக்காதவன் என்று பேதமையை உருவாக்கி அதன் மூலம் வயிறு வளர்ப்பதிலும் கெட்டிக்காரர்கள்.
தீன் பணி என்ற பெயரில் தீனிப் பணியும், இறைப்பணி என்ற பெயரில் இரைப்பைப் பணியுமாக தர்கா, தரீக்கா, பால் கிதாபு, மெªலூது, பாத்திஹா என்று மக்களைக் குழப்பி வருவதிலும் கெட்டிக்காரர்கள்.
தர்கா, தரீக்கா, தட்டு, தாயத்து என்று ஏமாந்து செலவுசெய்து அப்போதைய பிரச்சினைகள் ஏதாவது வகையில் எப்படியாவது தீர்ந்தால் போதும் என்று நிம்மதி தேடிக்குழம்பி வாழ்வதிலுமாக ஏமாறும் கெட்டிக்காரர்களின் பட்டியல் தொடர்கிறது.