|
|
வஹ்ஹாபி பூச்சாண்டியின் சரித்திர பின்னணியை பிரிதொரு சந்தர்ப்பத்தில் ஆராய்வோம். இன்ஷாஅல்லாஹ்."வஹ்ஹாபி" என்ற சொல்லைக் கேட்டவுடன் அப்பாவி முஸ்லிம்கள் அதிர்ச்சிக்குள்ளாகிறார்கள். வெறுப்புடன் நோக்குகிறார்கள். கேட்கக்கூடாததைக் கேட்டுவிட்டதாக நினைக்கிறார்கள். அல்லாஹ்வின் 99 திருநாமங்களில் ஒன்றான இந்த "வஹ்ஹாப்" என்னும் திருநாமம் முஸ்லிம்களுக்கு வெறுப்பை உண்டாக்குவதன் மர்மம் என்ன? அப்படிப்பட்ட அர்த்தமற்ற வெறுப்பை உண்டாக்கியவர்கள் யார்? ஏன் உண்டாக்கினார்கள்? என்ற கேள்விகளின் விவரங்களை அப்பாவி முஸ்லிம்களுக்குத் தெளிவாக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
வஹ்ஹாப் என்றால் அளவில்லாத கொடையாளன் என்று பொருளைத்தரும். அல்லாஹ்வின் அழகிய திருப்பெயர்களில் ஒன்று. அப்படியானால் "வஹ்ஹாபி" என்றால் அல்லாஹ்வைச் சார்ந்தவன் என்ற பொருளையே தரும். புனிதமான அல்லாஹ்வின் பெயரைக்காட்டி அப்பவி முஸ்லிம்களை ஏமாற்றக்கூடிய கூட்டம் எப்படிப்பட்ட கூட்டமாக இருக்கும் என்பதை சாதாரண அறிவு படைத்தவனும் அறிந்துகொள்ள முடியும். பாமர முஸ்லிம்களை ஏமாற்றுவதற்காக பயமுறுத்தி பயன் அடைவதற்காக வேண்டி இவர்களால் "வஹ்ஹாபி" என்ற பூச்சாண்டி காட்டப்படுகிறது. குழந்தைகளை ஏமாற்றி அதோ பூச்சாண்டி வருகிறான் என்று பயமுறுத்துவதுபோல் இதற்கு ஆதாரமாக தேவ்பந்தி ஆலிம் ஒருவர் சொன்ன பிரபல்யமான கதை ஒன்றையே இங்கு விளக்க விரும்புகிறோம்.
ஓர் ஊரில் ஒரு வியாபாரி மளிகைக்கடை வைத்து நடத்தி வந்தான். நல்ல வியாபாரம். ஊர் மக்கள் எல்லோரும் அந்தக் கடையிலேயே சாமான்கள் வாங்கி வந்தார்கள். அந்த ஊர் பள்ளிவாசல் இமாமும் வரவு செலவு வைத்திருந்தார். ஆனால் ஒழுங்காகப் பணம் கொடுப்பதில்லை. மளிகைக்கடை வியாபாரி எத்தனையோ முறை கேட்டுப்பார்த்தான். கண்டித்துப் பார்த்தான். இமாம் சரிபட்டு வருவதாக தெரியவில்லை. ஆத்திரத்தில் வியாபாரி இமாமுக்கு கடன் கொடுப்பதை நிறுத்திக் கொண்டான்.
வந்ததே கோபம் இமாமுக்கு. உடனே பள்ளிவாசலில் மக்களுக்கு பிரசங்கம் செய்யும்போது "அந்த மளிகைக்கடைக்காரன் "வஹ்ஹாபி" ஆகிவிட்டான். யாரும் அவனிடம் சாமான்கள் வாங்காதீர்கள் என்று ஒரு போடு போட்டார்! அவ்வளவுதான். பாவம் அப்பாவி முஸ்லிம்கள் "வஹ்ஹாபி" என்றால் ஏதோ ஒரு ஆபத்தான சமாச்சாரம் என்று கருதிக்கொண்டு அந்தக்கடைப் பக்கமே ஊர் மக்கள் போகவில்லை. வியாபாரமே முடங்கிவிட்டது. வியாபாரிக்கு மிகவும் கவலையாகப் போய்விட்டது. விசாரித்து பார்த்ததில் இமாம் தன்னை "வஹ்ஹாபி" என்று சொல்லியுள்ளது தெரிய வந்தது.
விஷயத்தை விளங்கிக்கொண்டான் வியாபாரி. இமாமைக் கூப்பிட்டு "நீங்கள் பணம் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. நீங்களும் சாமான்கள் வாங்கிக் கொள்ளுங்கள். மக்களையும் என் கடைக்கு வந்து சாமான்கள் வாங்கச் சொல்லுங்கள்" என்று பணிவிடன் கேட்டுக்கொண்டான். இமாமுக்கு படுகுஷி. பஸ் டிரைவருக்கும், கண்டக்கடருக்கும் ஓசியில் ஹோட்டலில் சாப்பாடு கிடைப்பதுபோல், இவருக்கும் ஓசியில் மளிகைச் சாமான்கள் கிடைக்கப்போகிறதே என்ற சந்தோசத்தில், அடுத்த பிரசங்கத்திலேயே "அந்த வியாபாரி வஹ்ஹாபியை விட்டும் தெளபா செய்துவிட்டான். ஆகவே நீங்கள் எல்லாம் தாராளமாகச் சாமான்கள் வாங்கிக் கொள்ளலாம். அவனிடமே சாமான்கள் வாங்குங்கள். அதிலேதான் 'பரகத்' இருக்கிறது" என்று பிரகடனமே செய்து விட்டார்.
இதுதான் சில பள்ளிவாசல் இமாம்களின் "வஹ்ஹாபி" பூச்சாணிடியின் அந்தரங்க ரகசியம். மக்களை ஏமாற்றி பிழைப்பதற்கன்றே இவர்களால் கற்பனையாகக் கட்டி விடப்பட்டதே, இந்த "வஹ்ஹாபி" பூச்சாண்டி என்பதைச் சகோதர சகோதரிகள் விளங்கிக் கொள்வார்கள் என்று நம்புகிறோம்.
உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த
![]()