பெண்கள் ஜியாரத் செய்யலாமா?

    அடக்கஸ்தலங்களை ஜியாரத் செய்வது உங்களூக்கு மரணத்தை நினைவூட்டும் என்ற நபிமொழிப்படி இந்த வாதம் ஏற்கத்தக்கதே! கபுரு ஜியாரத் பற்றி இந்த நபிமொழி மட்டுமிருந்தால் இக்கருத்து மறுக்க முடியாததாகும். ஆனால் நபி (ஸல்) அவர்கள் கபுரு ஜியாரத் செய்யும் எல்லாப் பெண்களையும் சபித்துள்ளார்கள் என்ற நபி மொழி மூலம் வன்மையாகக் கண்டித்துள்ளதைக் காணலாம்.

    கபுரு ஜியாரத் செய்வது உங்களது மரணத்தை நினவூட்டடும் என்றுக் கூறிய நபி (ஸல்) அவர்களே பெண்களை கபுரு ஜியாரத் செய்வதை தடுத்துள்ளதால் பெண்கள் அடக்கஸ்தலங்களை ஜியாரத் செய்வது கூடாது என்பது விளங்கும்.

    தர்காக்களுக்கு பெண்கள் செல்வதை நியாயப்படுத்தும் ஒரு சில ஆலிம்கள் இந்நபிமொழி நபி (ஸல்) அவர்களின் ஆரம்பக் காலத்தில் கூறப்பட்டது. கடைசியில் மாற்றப்பட்டுப் பெண்கள் கபுரு ஜியாரத் செய்வதை அனுமதித்துள்ளதாக கூறி வருகின்றனர். இது தவறான கூற்றாகும்.

    கப்ருகளை ஜியாரத் செய்யும் பெண்களை ரஸூல் (ஸல்) அவர்கள் சபித்தார்கள் .என அவர்களின் நெருங்கிய தோழர் அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் . (இப்னுமாஜா) ...

    அபூஹுரைரா (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்கு 5 வருடங்கள் முன் தான் இஸ்லாத்தில் சேர்ந்தவர்கள் என்பதும் சரித்திர சான்றாகும். இது மட்டுமின்றி பெண்கள் கபுரு ஜியாரத் செய்வதை நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி 7 / 8 க்குப் பின்னும் கண்டித்துள்ளதற்கு கீழ்கானும் நபி மொழி நல்ல சான்றாகும். ஹிஜ்ரி 7ல் உருவான ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப் பின் இஸ்லாத்தில் இணந்தவர்கள் காலீத் பின் வலீத், அப்ருபின் ஆஸ் (ரழி) போன்றவர்கள். ஹிஜ்ரி 10ல் நபி (ஸல்) அவர்கள் மரணித்தார்கள். எனவே ஹிஜ்ரி 7 க்குப்பின் இஸ்லாத்தில் இணந்த அம்ர் பின் ஆஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

    நபி (ஸல்) அவர்களோடு சென்று நாங்கள் ஒரு மையித்தை அடக்கம் செய்த பின் இறந்தவரின் வீட்டிற்கு நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் திரும்பி வந்து கொண்டு இருந்தோம். அப்போது எதிரில் ஒரு பெண்மணி வருவதை நபி (ஸல்) அவர்கள் கண்டனர். அது தம்முடைய மகள்"பாத்திமா" என்றும்  தெரிந்து கொண்டனர். தன் மகளை நோக்கி "உன்னுடைய வீட்டிலிருந்து எக்காரணத்திற்காக வெளி வந்தாய்" என்று கேட்டனர்.

    "இறந்தவரின் குடும்பத்தாரிடம் சென்று இறந்தவருக்காக இறைவனுடைய அருளைக் கோரிவிட்டு, அவரது குடும்பத்தாருக்கு ஆறுதலும் கூறிவிட்டு வருகிறேன்" என்று பாத்திமா (ரழி) கூறினர்.

    அதனைக் கேட்டவுடன் நபி (ஸல்) அவர்கள் நீ அவர்களுடன் அடக்க இடத்திற்கு சென்றாயா? என்று கேட்டனர். அதற்கு பாத்திமா (ரழி) அவர்கள் அல்லாஹ் என்னைக் காத்தருள்வானாக! நிச்சயமாக தாங்கள் இது பற்றி கூறி வந்துள்ளதை நான் அறிவேன் என்றனர். அதற்கு நபி (ஸல்) நீ அவர்களுடன் அடக்க ஸ்தலத்துக்கு சென்றிருந்தால் அதன் காரணமாக உனக்கு கடும் வேதனையுண்டு என்று அச்சுறுத்தினர். 
அறிவிப்பவர்: அம்ர் பின் ஆஸ் (ரழி) அவர்கள் நூல்:அபூதாவூத், நஸயீ, அஹ்மத்.

    அடக்கஸ்தலத்திற்கு சென்றிருந்தால் உனக்கு கடும் வேதனையுண்டு என நபி (ஸல்) தனது அருமை மகள் பாத்திமா (ரழி) அவர்களையே கண்டித்துள்ளார்கள்.நபி (ஸல்) அவர்கள் பெண்கள் கபுரு ஜியாரத் செய்வதைக் கண்டித்து தொடர்ந்து கூறி வந்துள்ளதை பாத்திமா(ரழி) அவர்களும் உணர்த்துகிறார்கள். இந்நிகழ்சியில் அம்ர் பின் ஆஸ் (ரழி) அவர்கள் நேரடியாகக் கலந்து கொண்டு தெரிவிக்கிறார்கள். இந்நபித்தோழர் இஸ்லாத்தில் இணைந்த பின் தான் நபி (ஸல்) அவர்களுடன் அடக்கஸ்தலத்திற்கு சென்றிருக்க வேண்டும். அதாவது ஹிஜ்ரி 8 க்குப்பின் நிகழ்ந்திருக்க வேண்டும்.

    எனவே இதனடிப்படையில் பெண்கள் கபுரு ஜியாரத் செய்வதை நபி (ஸல்) அவர்கள் கண்டித்துள்ளதும், சபித்துள்ளதும் கடைசி காலத்தில் கூறப்பட்டதாகும் என்பது தெளிவாகிறது. இதன் மூலம் கபுரு ஜியாரத் செய்வது வண்மையாக கண்டிக்கத்தக்கது. அருமை நபி (ஸல்) அவர்களால் சபிக்கப்பட்டது என்பதை விளங்கிச் செயல்பட அல்லாஹ் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக! ஆமீன்!

   

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த