|
|
|
|
குர்ஆனின் போதனைகள்
அநியாயக்காரன் யார்?
|
அல்லாஹ்விடமிருந்து தன்பால்
வந்திருக்கும் சாட்சியங்களை மறைப்பவனைவிட அநியாயக்காரன் யார்?
2:140
எவர்கள் அல்லாஹ் இறக்கி
வைத்த (வேதக் கட்டளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோ நிச்சயமாக
அவர்கள் அநியாயக்காரர்களே! 5:45
அல்லாஹ் மீது பொய்யைக்
கற்பனை செய்கிறவனை விட, அல்லது அவனுடைய வசனங்களைப்
பொய்யாக்குகிறவனை விட அநியாயக்காரன் யார்? நிச்சயமாக
அநியாயக்காரர்கள் வெற்றி பெறவே மாட்டார்கள். 6:21
இந்த அநியாயக்காரர்கள்
அல்லாஹ்வின் வசனங்களையல்லவா மறுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
6:33
(நபியே!) நம் வசனங்களைப்
பற்றி வீண் விவாதம் செய்து கொண்டிருப்போரை நீர் கண்டால்,
அவர்கள் அதைவிட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும் வரையில்
நீர் அவர்களைப் புறக்கணித்து விடும்; (இக்கட்டளையைவிட்டு)
ஷைத்தான் உம்மை மறக்கும்படிச் செய்துவிட்டால், நினைவு வந்ததும்,
அந்த அநியாயக்கார கூட்டத்தினருடன் நீர் அமர்ந்திருக்க வேண்டாம்.
6:68
அல்லாஹ்வின் மீது பொய்க்
கற்பனை செய்பவன், அல்லது வஹீயின் மூலம் தனக்கு ஒன்றுமே
அறிவிக்கப்படாமலிருக்க, "எனக்கு வஹீ வந்தது" என்று கூறுபவன்;
அல்லது "அல்லாஹ் இறக்கிவைத்த இ(வ்வேதத்)தைப் போல் நானும்
இறக்கிவைப்பேன்" என்று கூறுபவன், ஆகிய இவர்களை விடப் பெரிய
அநியாயக்காரன் யார் இருக்க முடியும்? 6:93
இவ்வுலகத்தின் இறுதி முடிவு
யாருக்கு நலமாக இருக்கும் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்
- நிச்சயமாக அநியாயக்காரர்கள் வெற்றிபெற மாட்டார்கள்." 6:135
மக்களை வழி கெடுப்பதற்காக
அறிவில்லாமல் அல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனை செய்பவனைவிட அதிக
அநியாயக்காரன் யார்? நிச்சயமாக அல்லாஹ் இத்தகைய அநியாயக்காரக்
கூட்டத்தினருக்கு நேர்வழி காட்டமாட்டான். 6:144
அல்லாஹ்வின் அருட்கொடைகளை
நீங்கள் கணிப்பீர்களாயின் அவற்றை நீங்கள் எண்ணி முடியாது!
நிச்சயமாக மனிதன் மிக்க அநியாயக்காரனாகவும், மிக்க நன்றி
கெட்டவனாகவும் இருக்கின்றான். 14:34
இவர்கள் அல்லாஹ் அல்லாததை
வணங்குகின்றனர்; இதற்கு அவன் எந்த விதமான அத்தாட்சியையும்
இறக்கவில்லை இதைப்பற்றி இ(வ்வாறு வணங்குப)வர்களுக்கு எவ்விதக்
கல்வியாதாரமும் இல்லை எனவே, இத்தகைய அநியாயக்காரர்களுக்கு உதவி
செய்வோர் இல்லை. 22:71
அந்நாளில் அநியாயக்காரன்
தன்னிரு கைகளையும் கடித்துக்கொண்டு; "அத்தூதருடன் நானும் - (நேரான)
வழியை எடுத்துக் கொண்டிருக்க வேண்டாமா?" எனக் கூறுவான். 25:27
எவர் கல்வி ஞானம்
கொடுக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களின் உள்ளங்களில், தெளிவான
வசனங்களாக இது இருக்கிறது - அநியாயக்காரர்கள் தவிர (வேறு)
எவரும் நம் வசனங்களை நிராகரிக்க மாட்டார்கள். 29:49
அநியாயக்காரர்கள் கல்வி
ஞானமில்லாமல் தம் மனோ இச்சைகளையே பின்பற்றுகிறார்கள்; ஆகவே
எவர்களை அல்லாஹ் வழிகெடச் செய்தானோ, அவர்களை நேர் வழியில்
கொண்டு வருபவர் யார்? மேலும் அவர்களுக்கு உதவி செய்வோர்
எவருமிலர். 30:29
எவன் தன்னுடைய இறைவனின்
வசனங்களைக் கொண்டு நினைவு படுத்தப்பட்ட பின்னரும் அவற்றைப்
புறக்கணித்து விடுகிறானோ, அவனைவிட அநியாயக்காரன் எவன் (இருக்கிறான்)?
32:22
(அந்நாளில்)
அநியாயக்காரர்கள் தாங்கள் சம்பாதித்த (தீய)தைப் பற்றி பயந்து
கொண்டிருப்பதை நீர் பார்ப்பீர்; ஆனால் அது அவர்கள் மீது நிகழவே
செய்யும்; 42:22
உங்களில் ஒருவருக்கொருவர்
பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர் (தீய)
பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்; ஈமான் கொண்டபின் (அவ்வாறு
தீய) பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்; எவர்கள் (இவற்றிலிருந்து)
மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள். 49:11
எச்சமூகத்தார் அல்லாஹ்வின்
வசனங்களைப் பொய்ப்பிக்கிறார்களோ அவர்களின் உதாரணம் மிகக்
கெட்டதாகும் - அல்லாஹ் அநியாயக்கார சமூகத்தாரை நேர்வழியில்
செலுத்தமாட்டான். 62:5
உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

| | |
|