|
|
|
|
குர்ஆனின் போதனைகள்
இறை நம்பிக்கையும், நற்செயல்களும்
|
நம்பிக்கை கொண்டு
நற்கருமங்கள் செய்வோருக்கு நன்மாராயங்கள் கூறுவீராக! 2-25
நிச்சயமாக இந்த குர்ஆன்
முற்றிலும் நேராக இருக்கும் நல் வழியைக் காட்டுகிறது அன்றியும்
நற்கருமங்கள் செய்து வரும் முஃமின்களுக்கு, நிச்சயமாக மிகப்
பெரும் நற்கூலியுண்டு என்றும் நன்மாராயங் கூறுகிறது. 17-9
எவர் முஃமினாக, நல்ல அமல்களை
செய்கிறாரோ அவருடைய முயற்சி வீணாகி விடாது. நிச்சயமாக நாமே அதை
(அவருக்காக)ப் பதிவு செய்து வைக்கிறோம். 21-94
நிச்சயமாக எவர்கள் ஈமான்
கொண்டு (ஸாலிஹான-) நல்ல செயல்களைச் செய்கின்றார்களோ அவர்களுக்கு
அர்ரஹ்மான் (யாவரின்) நேசத்தை ஏற்படுத்துவான். 19-96
எவர்கள் ஈமான் கொண்டு (ஸாலிஹான)
நல்ல செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுக்கு மன்னிப்பும்,
கண்ணியமான உணவும் உண்டு. 22-50
எவர் அல்லாஹ்வின் மீது ஈமான்
கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல் செய்கின்றாரோ அவரை அல்லாஹ் சுவனச்
சோலைகளில் பிரவேசிக்கச் செய்கிறான். 65-11
ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல)
அமல்கள் செய்தவர்களுக்கே அவன் தன் அருளிலிருந்து (நற்)கூலி
கொடுக்கிறான். 30-45
எவன் தன்னுடைய இறைவனைச்
சந்திக்கலாமென ஆதரவு வைக்கின்றானோ அவன் (ஸாலிஹான) நல்ல
செயல்களைச் செய்து, தன் இறைவனை வணங்குவதில் வேறெவரையும்
இணையாக்காதும் இருப்பானாக. 18-110
எவர் தவ்பா செய்து ஸாலிஹான
(நற்) செய்கைகள் செய்கின்றாரோ, அவர் நிச்சயமாக அல்லாஹ்விடம்
பாவ மன்னிப்புத் தேடியாவராவார். 25-71
எவர் தவ்பா செய்து
நன்னம்பிக்கை கொண்டு, நல்ல அமல்கள் செய்கிறார்களோ அவர்கள்
வெற்றியடைந்தோரில் ஆவார்கள். 28-67
எவர் ஈமான் கொண்டு
நற்கருமங்களும் செய்கிறார்களோ, அவர்களுக்கு நற்கூலிகளை (அல்லாஹ்)
முழுமையாகக் கொடுப்பான். 3-57
நிச்சயமாக, எவர்கள்
ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ, அவர்கள்
தாம் படைப்புகளில் மிக மேலானவர்கள் ஆவார்கள். 98-7
உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

| | |
|