1. ஜியாரத் நபி(ஸல்) அவர்களின் சுன்னத் என்கிறார்கள். தர்காக்களுக்கு 'ஜியாரத' செல்வது கூடாது என்கிறார்கள். இது முன்னுக்கு பின் முரணாக இருக்கிறதே?

2. மறைவான ஒரு மையித்திற்காக ஜனாஸா தொழுகை நடத்தலாமா, ஹதீஸ்களில் ஆதாரம் உண்டா?

3. பழிக்குப்பழி வாங்க மார்க்கத்தில் அனுமதியுண்டா?

4. எனது சகோதரர் வியாபாரம் செய்வதற்கு என்னிடம் ஒரு தொகயை பெற்றுக்கொண்டு இரண்டு வருடம் கழித்து தருவதாக கூறி, அதற்கு பகரமாக மாதா மாதம் கொஞம் லாபமாக தந்தால் அது ஹலாலாகுமா?

5. அல்லாஹ்வும், அவனது வானவர்களும் நபியின் மீது ஸலவாத்துச் சொல்கிறார்கள்.(33:56) அப்படி என்றால் அல்லாஹ் ஸலவாத் கூறுகிறான் என்பதின் பொருள் என்ன?

6. குர்ஆன் கூறுவது போன்று நடந்தால் போதும். அதை ஓதிக்கொண்டிருக்க வேண்டியதில்லை என்று ஒருவர் கூறுகிறார். நான் அதை ஓதிக்கொண்டும் அதன்படியும் நடந்து வருகிறேன். குர்ஆன் ஓதுவதால் நன்மையா?

7. பெண்கள் பள்ளிவாசலுக்கு சென்று தொழ நாடினால் எந்த வரிசையில் நிற்பது, நபி (ஸல்) அவர்கள் காலத்து நடைமுறை என்ன?

8. தராவீஹ் இருபது ரக்அத் என்று பல ஹதீஸ்கள் இருக்கும் போது ஏன் சிலர் எட்டு ரக்அத் மட்டும் தொழுகிறார்கள்? தராவீஹ் 20 ரக்அத்துதான் சரியானது என எங்கள் ஊர் மெளலவி கூறுகிறார்.

9. பாங்கு இகாமத்து எந்த ஆண்டில் அமுலுக்கு வந்தது?

10. குர்ஆனை ஒளுவில்லாமல் தொடுவது கூடுமா அல்லது கூடாதா?  

 

  1. ஜியாரத் நபி(ஸல்) அவர்களின் சுன்னத் என்கிறார்கள். தர்காக்களுக்கு 'ஜியாரத்' செல்வது கூடாது என்கிறார்கள். இது முன்னுக்கு பின் முரணாக இருக்கிறதே?

   இதனை மேலோட்டமாக பார்க்கும்போது முரணாகத் தெரியும். சிந்தித்து விளங்கிக் கொண்டால் முரண்பாடு தீர்ந்துவிடும். நபி(ஸல்) அவர்கள் கற்றுத்தந்த 'ஜியாரத்' நல்லவர்கள், கெட்டவர்கள் என்ற பாகுபாடின்றி இறந்தவர்களை அடக்கம் செய்யப்பட்டிருக்கும் பொது கபுரஸ்தான்களுக்கு சென்று அதன் மூலம் நாமும் மரணிப்பவர்களே என்ற எண்ணத்தையும், மறுமையின் சிந்தனையுயும் உண்டாக்கிக் கொள்வதாகும். நபி(ஸல்) அவர்கள் ஜியாரத்தில் ஓதக் கற்றுத் தந்த துஆவும் இதனையே உறுதி செய்கின்றது.

   ஆனால் தர்காக்களுக்கு 'ஜியாரத்' செல்பவர்கள் அந்த நோக்கத்தோடு செல்வதில்லை. அங்கு அடக்கமாகி இருக்கும் அவ்லியாவிடம், அல்லாஹ்விடம் கேட்கவேண்டியதை  அல்லாஹ்வின் அடியாரான அவ்லியாவிடம் தங்களின் தேவைகளை கேட்கிறார்கள். அவர்களிடம் முறையிடுகிறார்கள். அல்லாஹ்விடம் தங்களுக்காக பரிந்துரை செய்யும்படி சொல்லுவதற்காகவும் செல்கிறார்கள். (அவர்கள் செவியுற மாட்டர்கள் என்பது தனி விஷயம்)  இன்னும் அனேக மூட காரியங்களை ஜியாரத் என்ற பெயரில் அரங்கேற்றுகிறார்கள்.

   நபி(ஸல்) அவர்கள் கூறிச் சென்றது  பொது கபுரஸ்தான்களுக்குத்தான் 'ஜியாரத்' செய்யும்படி கூறினார்கள். நீங்கள் நினைப்பது போல் இரண்டும் ஒன்றல்ல. ஆகவே பொது கபுரஸ்தானுக்கு செல்வதை ஸுன்னத் என்றும், தர்காக்களுக்குச் செல்வதை ஆகாது என்றும் கூறுகிறோம். அல்லாஹ் மிக அறிந்தவன்.

  2. மறைவான ஒரு மையித்திற்காக ஜனாஸா தொழுகை நடத்தலாமா, ஹதீஸ்களில் ஆதாரம் உண்டா?

    மறைவான மையித்திற்கு ஜனாஸா தொழுகை நடத்து கூடும். இதற்கு பின் வரும் ஹதீஸ் சான்றாக உள்ளது.

   நபி(ஸல்) அவர்கள் நஜ்ஜாஜு அரசர் மரணமான தினத்தன்று மக்களுக்கு அவரது மரணச் செய்தியை அறிவித்து, மக்களுடன் ஓர் இடத்திற்குச் சென்று, அங்கு தமது ஸஹாபாக்களை அணி வகுக்கச் செய்து நான்கு தக்பீர்கள் கூறி அவருக்காக மறைவான மைய்யித்துத் தொழுகை நடத்தினார்கள். (அபூஹுரைரா(ரலி), நூல்: புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ) அல்லாஹ் மிக அறிந்தவன்.

 

  3. பழிக்குப்பழி வாங்க மார்க்கத்தில் அனுமதியுண்டா?

   உயிருக்கு உயிர், கண்ணுக்கு கன், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்கு பல் ஆகவும் காயங்களுக்கு (சமமான) காயங்களாகவும், நிச்சயமாக பழி வாங்கப்படும் என்று விதித்திருந்தோம். எனினும் ஒருவர் (பழி வாங்குவதை) தர்மமாக விட்டு விட்டால் அது அவருடைய பாவங்களுக்குப் பரிகாரம் ஆகும். (திருக்குர்ஆன் 5:45) 

   பழிக்குப்பழி வாங்க வேண்டுமென்ற சராசரி மனித உணர்வுகளுக்கு மதிப்பளித்த அல்லாஹ், பழிக்கு பழி வாங்குவதை மேலே கண்ட வசனத்தில் அனுமதிக்கிறான்.  இருப்பினும் சிறப்பானது மன்னித்து மறந்து விடுவதுதான் எனவும் எடுத்துரைக்கிறான் அல்லாஹ். அல்லாஹ் மிக அறிந்தவன்.

 

   4. எனது சகோதரர் வியாபாரம் செய்வதற்கு என்னிடம் ஒரு தொகயை பெற்றுக்கொண்டு இரண்டு வருடம் கழித்து தருவதாக கூறி, அதற்கு பகரமாக மாதா மாதம் கொஞம் லாபமாக தந்தால் அது ஹலாலாகுமா?

    உங்கள் வியாபார தோழருடன் நீங்கள் கடன் கொடுத்து அவ்வியாபாரத்தில் ஏற்படும் லாப, நஷ்டத்தில் பங்கேற்க தயார் என்றால் அது ஹலாலாகும். லாபத்தில் மட்டும் பணம் தர வேண்டும். அது மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகைத் தரவேண்டும் என்று கூறினால் அது வட்டியகும்.

   மாதா மாதம் அவர் தரும் பணத்தை வாங்கத் தயாராகும் நீங்கள் சில மாதங்கள் லாபம் கிடைக்காமையால் தராமலிருந்தாலும் ஏற்க தயாராக வேண்டும். வருடக் கடைசியில் நஷ்டம் ஏற்பட்டிருந்தால் நீங்கள் கொடுத்த பணத்திற்காக நஷ்டத்தையும் கழித்து ஏற்கத் தயாரக வேண்டும். இதற்கு நீங்கள் தயாரானால் அப்பணம் ஹலாலாகும். அல்லாஹ் மிக அறிந்தவன்.

  5. அல்லாஹ்வும், அவனது வானவர்களும் நபியின் மீது ஸலவாத்துச் சொல்கிறார்கள்.(33:56) அப்படி என்றால் அல்லாஹ் ஸலவாத் கூறுகிறான் என்பதின் பொருள் என்ன?

   நிச்சயமாக அல்லாஹ்வும், அவனது வானவர்களும் நபியின் மீது ஸலவாத்துச் சொல்கிறார்கள். (எனவே) விசுவாசிகளே! நீங்களும் அவர்மீது ஸலவாத்துச் சொல்லி ஸலாமும் பகருங்கள். (அல்குர்ஆன் 33:56)

    அல்லாஹ் நபியவர்களின் மீது ஸலவாத் கூறுகிறான் என்றால் அவர்கள் மீது அருள் புரிகிறான் என்பது பொருள். மலக்குகளும், மனிதர்களும் ஸலவாத்துக் கூறுகிறார்கள் என்றால் அவர்கள் நபி(ஸல்) அவர்கள் மீது அருள் புரியும்படி அல்லாஹ்விடம் துஆ செய்கிறார்கள் என்பது பொருளாகும். அல்லாஹ் மிக அறிந்தவன்.

  

   6. குர்ஆன் கூறுவது போன்று நடந்தால் போதும். அதை ஓதிக்கொண்டிருக்க வேண்டியதில்லை என்று ஒருவர் கூறுகிறார். நான் அதை ஓதிக்கொண்டும் அதன்படியும் நடந்து வருகிறேன். குர்ஆன் ஓதுவதால் நன்மையா? 

    "நீங்கள் குர்ஆனை ஓதுங்கள்! நிச்சயமாக அது கியாமத் நாளில் - மறுமை நாளில் அதை ஓதியவர்களுக்கு ஷஃபாஅத்து- அல்லாஹ்விடம் பரிந்துரை செய்யும்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூஉமாமா(ரலி) , முஸ்லிம்)

   ஒருவர் அல்லாஹ்வின் வேதமாகிய குர்ஆனிலிருந்து ஒரு ஹர்ஃபை எழுத்தை ஓதினால் அவருக்கு அதனால் ஒரு நன்மையுண்டு. ஒரு நன்மை என்பது அது போன்ற பத்தைக் கொண்டதாகும். (இப்னுமஸ்வூத்(ரலி), திர்மிதீ, தாரமீ)

   ஆகவே மேற்காணும் ஹதீஸ்களின் வாயிலாக குர்ஆனை நாம் ஓதுவதால் ஒரு எழுத்துக்கு பத்து நன்மை நமக்குத் கிடைப்பதோடு மறுமை  நாளில் அது அல்லாஹ்விடம் நமக்காக சிபாரிசு செய்யும் வாய்ப்பையும் அடைகிறோம். குர்ஆனை விளங்கி, அதன்படிச் செயல்படும் நோக்கத்துடன் ஓதுவதே அதிக பலனைத்தரும். அல்லாஹ் மிக அறிந்தவன்.  

 

   7. பெண்கள் பள்ளிவாசலுக்கு சென்று தொழ நாடினால் எந்த வரிசையில் நிற்பது, நபி (ஸல்) அவர்கள் காலத்து நடைமுறை என்ன? 

  

   நானும் எனது சகோதரர் யத்தீம் என்பவரும் எங்கள் வீட்டில் நபி(ஸல்) அவர்களின் பின்புறத்தில் நின்று தொழுதோம். (எங்கள் தாயார்) உம்முஸுலைம் அவர்கள் எங்களுக்குப் பின்புறமாக நின்று தொழுதார்கள். (அனஸ்(ரலி), முஸ்லிம்)

   நபி(ஸல்) அவர்கள் ஒருமுறை எனக்கும், எனது தாயருக்கோ அல்லது எனது சிறிய தாயாருக்கோ தொழ வைத்தார்கள். அப்போது என்னை தமது வலப்புறத்தில் நிற்கும்படி செய்து விட்டு, பெண்ணாக உள்ளவரை எங்கள் பின்புறமாக நிற்கும்படி செய்தார்கள். (அனஸ்(ரலி), முஸ்லிம்)

   மேற்காணும் ஹதீஸ்களின் படி ஆணும் பெண்ணும் ஒரே வரிசையில் நிற்காமல் பெண்ணை தனி வரிசையில் நிற்கும்படி நபி(ஸல்) அவர்கள் செய்துள்ளார்கள் என்பதால் இதன்படி பெண்கள் ஆண்களுக்குப் பின்னுள்ள வரிசையில் நின்று தொழ வேண்டுமென்பதை அறிகிறோம். அல்லாஹ் மிக அறிந்தவன்.

   8. தராவீஹ் இருபது ரக்அத் என்று பல ஹதீஸ்கள் இருக்கும் போது ஏன் சிலர் எட்டு ரக்அத் மட்டும் தொழுகிறார்கள்? தராவீஹ் 20 ரக்அத்துதான் சரியானது என எங்கள் ஊர் மெளலவி கூறுகிறார்.

    நாம் இன்று பயன்படுத்தி வரும் தராவீஹ் என்ற பதம் ஹதீஸ்களில் காணப்படவில்லை என்பதை  முதலில்  நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். இரவுத் தொழுகை, ரமழான் தொழுகை, தஹஜ்த், வித்ர் என்ற பெயர்களாலேயே இந்தக் குறிப்பிட்ட தொழுகை பல ஹதீஸ்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதாரப்பூர்வமான  ஹதீஸ்களில் நபி(ஸல்) அவர்கள், உமர்(ரழி)அவர்கள், மற்றும் சிறப்புக்குரிய நபித் தோழர்கள் (8+3=11) ரகஅத்துகளுக்கு மேல் இந்த ரமழான் தொழுகை தொழுததில்லை என்று தான் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

   அன்னை  ஆயிஷா(ரழி) அவர்களிடம்  அபூசல்மதுப்னு அப்துர் ரஹ்மான் (ரழி), நபி(ஸல்) அவர்களிடன் ரமழான் தொழுகை எவ்வாறு இருந்தது என்று கேட்டதற்கு, "ரமழானிலும்,  ரமழான் அல்லாத காலங்களிலும்  நபி(ஸல்) அவர்கள் 11ரகஅத்துகளுக்கு மேல் தொழுததே இல்லை" என்னும் ஹதீஸ் ஆதாரப்பூர்வமான அனேக ஹதீஸ் கிதாபுகளில் காணலாம்.


   நபி(ஸல்)அவர்கள் ரமழானில் 20 ரகஅத்துகள் தொழுததாக இப்னு அப்பாஸ்(ரழி)  அவர்களைக் கொண்டு அறிவிக்கப்பட்ட ஹதீஸ் சில கிதாபுகளில் காணப்படுகின்றது. இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் வருகின்றன: அபூசைபா இப்ராஹீம் இப்னு உஸ்மான், ஹகம் இப்னு  உதைபா  ஆகிய  இருவரும்  காஜிகளாக இருந்தார்கள். பொய்யர்கள் என்று அஸ்மாவுர்ரிஜால் (ஹதீஸ் அறிவிப்பாளர்களின் தகுதிகளை எடைபோடும்) கலையில் வல்லுனர்கள் பலர் பதிவு செய்துள்ளனர்.

   இமாம்களான ஸுஹ்பா, அஹமது, இப்னு முயீன், புகாரி, நஸயீ (ரஹ்-அலை) போன்றோர் இந்த இருவரையும் நல்லவர்களாக, நேர்மையாளர்களாகக் கணிக்கவில்லை. ஹதீஸ் கலை வல்லுனர்கள் அனைவரும் எகோபித்து இந்த ஹதீஸ்,அன்னை ஆயிஷ(ரழி) அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ள உண்மையான ஹதீஸூக்கு எதிராக இருக்கிறது என்று  அறிவித்து  நிராகரித்திருக்கிறர்கள்.

   இதைபோல் உமர்(ரழி) 20 ரகஅத்துகள் தொழுதார்கள். தொழ வைக்கும்படி சொன்னார்கள்.  உமர்(ரழி) காலத்தில் 20 ரகஅத்துகள் மக்களால் தொழப்பட்டது போன்ற ஹதீஸ்களும்  இட்டுக் கட்டப்பட்ட  பலஹீனமான ஹதீஸ்களாக ஹதீஸ்கலை வல்லுனர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளன. பைஹகீயில் காணப்படும் உமர்(ரழி) காலத்தில் மக்கள் 20 ரகஅத்துகள்  தொழுதார்கள் என்ற ஹதீஸ் பலஹீனமானது, காரணம் இதை ரிவாயத்துச் செய்யும் யஸீதுப்னு ரூமான் உமர்(ரழி)காலத்தில் பிறக்கவே இல்லை என்று பைஹகீ இமாமே பைஹைகியில் குறிப்பட்டுள்ளார்கள். மேற்கொண்டு தெளிவு பெற
 ரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்) என்ற தலைப்பை பார்வையிடவும்

 

   9. பாங்கு இகாமத்து எந்த ஆண்டில் அமுலுக்கு வந்தது?

      பாங்கு ஹிஜ்ரி முதல் ஆண்டில் அமுலுக்கு வந்தது.

   அப்துல்லாஹ்பின்(ரழி) அறிவித்துள்ளார்கள்:

   முஸ்லிம்கள் மதீனாவுக்கு வந்தபோது தொழுகைக்காக ஒரு நேரத்தைக் குறித்து வைத்துக்கொண்டு அதில் அனைவரும் கூடுவர். அதற்காக அழைப்புக் கொடுப்பதற்குரிய ஏற்பாடு எதுவுமில்லாதிருந்தது.

   ஒரு நாள் அது பற்றி தம்மிடையே பேசத்துவங்கினர்: அவர்களில் ஒருவர் "கிறிஸ்தவர்களின் மணியைப் போன்று ஒரு மணியைத் தயாரித்துக்கொள்ளுங்கள்" என்றார். மற்றொருவர் "யூதர்கள் கொம்பு ஊதுவது போன்று, ஒரு கொம்பைத் தயாரித்துக் கொள்ளுங்கள்" என்றார். அப்போது உமர் (ரழி) அவர்கள் "தொழுகைக்கு அழைக்கும் ஒரு அழைப்பாளரை அனுப்பி வையுங்கள்" என்றார்கள்.

    உடனே நபி(ஸல்) அவர்கள் [உமர் அவர்களின் அபிப்பிராயத்தை சரி கண்டு] "பிலாலே நீர் எழுந்து (மக்கள்) தொழு வருவதற்கு அழைப்புக் கொடுப்பீராக என்றார்கள். (அறிவிப்பவர் இப்னு உமர் (ரழி) புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ)