அறிவியல்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹிம் மழையையும் இறக்கினோம்-(78:14,6:99) இரும்பையும் இறக்கினோம்.-(57:25) Iron rain fell on early Earth, new Z machine data supports. எஸ்.ஹலரத் அலி,திருச்சி-7. மாபெரும் அறிவியல் உண்மைகளை உள்ளடைக்கிய அறிவுக் கருவூலமாக அல் குர்ஆன் விளங்குகிறது. அந்தந்த கால மக்கள் அறிவு வளர்ச்சிக்கு தகுந்தாற்போல் அதன் கருத்துக்களை புரிந்து கொள்ளக்கூடியவாறு அதன் வசனங்களை அல்லாஹ் கட்டமைத்துள்ளான். அந்த வகையில் வரும் ஒரு வசனமே, “ நிச்சயமாக நாம், நம்முடைய தூதர்களை (அத்தாட்சிகளில்) தெளிவானவற்றுடன் அனுப்பி வைத்தோம். […]

{ 0 comments }

எஸ்.ஹலரத் அலி –திருச்சி-7. ஆதி மனிதர் ஆதம்(அலை) முதல் இறுதிவரை உள்ள மனிதர்கள் வரை அனைவருக்கும் நல் வழி காட்டி நேர்வழிப்படுத்த எழுந்த மார்க்கமே இஸ்லாம். உலகில் எத்தனையோ மதங்கள் இருந்தாலும், படைத்த இறைவனால் கொடுக்கப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட, ஏற்றுக்கொள்ளப்பட்ட  இயற்கை மார்க்கமே இஸ்லாம் என்பதற்கு ஏராளமான சான்றுகளை நாம் பார்க்க முடியும். அல்லாஹ் கூறுகிறான். எ(ந்த மார்க்கத்)தில் அல்லாஹ் மனிதனைப் படைத்தானோ அதுவே அவனுடைய (நிலையான) இயற்கை மார்க்கமாகும்; அல்லாஹ் படைத்ததில் மாற்றமில்லை; அதுவே நிலையான மார்க்கமாகும்; […]

{ 3 comments }

 பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்   S.ஹலரத் அலி-திருச்சி- 7 மனித சமூதாயத்திற்கு அல்லாஹ் அல்குர்ஆனை இறக்கியதன் காரணம், இறை வசனங்களை படித்தறிந்து  சிந்தித்து செயல்பட்டு நேர்வழி பெறவேண்டும் என்பதுவே. அல்குர்ஆனின் வசனங்களை எளிதாக விளக்குவதற்காக ஏராளமான உதாரணங்களையும் அல்லாஹ்  கூறுகின்றான். அப்படி கூறப்படும் உதாரணங்கள் நாம் அறிந்த ஒன்றாகவே  இருக்கும். மனித அறிவுக்குப் புலனாகாத உதாரணங்களை அல்லாஹ் கூறுவதில்லை. குறிப்பாக, கூறும் உதாரணத்தில் கூட உண்மையல்லாததை அல்லாஹ் கூறுவதில்லை.  குர் ஆன், இறக்கப்பட்ட அன்றிலிருந்து இறுதி முடிவு நாள்வரை, வழி […]

{ 3 comments }

எஸ்.ஹலரத் அலி Artist’s concept showing the time sequence of water ice, starting in the sun’s parent molecular cloud, traveling through the stages of star formation, and eventually being incorporated into the planetary system itself.  சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களில் நமது பூமி மட்டுமே ஆழிசூழ் உலகாக அழகுடன் விளங்குகிறது. மூன்று பங்கு நீரும் ஒரு பங்கு நிலமும் உள்ளது. நிலத்தில் வாழும் கோடானுகோடி […]

{ 1 comment }

அளவற்ற அருளாளன், அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்… வானம் ஒரு பாதுகாப்பான விதானம் Earth’s “plasmaspheric hiss” protects against a harmful radiation belt எஸ்.ஹலரத்அலி. திருச்சி-7 மனித சமூதாயத்திற்கு நேர்வழி காட்ட இறக்கியருளப்பட்ட அல்குர்ஆன்,ஏராளமான வசனங்கள் மூலம் நமக்கு நேர்வழி காட்டுகிறது.அது இறக்கப்பட்ட நாளிலிருந்து இறுதி நாள் வரை பிறக்கும் மனிதர்களின்அறிவு வளர்ச்சிக்குத் தகுந்தவாறு சிந்தித்து செயல்படச் சொல்கிறது. அவ்வகையில் இருபத்தொன்றாம் நூற்றாண்டு மனிதனை சிந்திக்கச் சொல்லும் ஒரு வசனம்,  “  இன்னும் வானத்தை நாம் […]

{ 0 comments }

 பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிரஹீம்  உலக மக்கள் உண்மையை உணர்ந்து நேர் வழி பெறவேண்டும் என்பதற்காக, ஏராளமான உதாரணங்களை அல்லாஹ் அல் குர்ஆனில் கூறி மனிதனை சிந்திக்க தூண்டுகிறான். நாம் அற்பமாக கருதும் கொசு, ஈக்கள், சிலந்தி போன்ற சிறு உயிர்களை உதாரணமாக கூறி தன் வல்லமையை அறிவுறுத்துகிறான். அவ்வகையில் வரும் ஒரு வசனம்தான், “ மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவி தாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக, அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் […]

{ 7 comments }

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் . அல்குர் ஆன் வழியில் அறிவியல்…………… . (INTERNAL WAVES IN THE ATMOSPHERE AND OCEAN) அல்லாஹ் இறக்கிய அருள் மறையாம் திருமறை குர்ஆன், ஏராளமான நவீன அறிவியல் உண்மைகளை தன்னகத்தே பொதிந்துள்ளது. மனித இனம் சிந்திக்க சிந்திக்க அவனது ஆய்வறிவுக்கு பாதையமைத்து நேர்வழி காட்டக்கூடிய வசனங்கள் அனேகம் உள்ளது. சிந்திக்கும் மக்களுக்கு நல் வழி காட்டும் ஒரு வசனமே இக்கட்டுரையின் சாரம்.அல்லாஹ் கூறுகிறான், ஆழ் கடலிலுள்ள இருள்களைப்போன்றதாகும்; அதனை ஒரு அலை மூடிக்கொள்கிறது; […]

{ 1 comment }

“இன்னும் பூமியை நாம் அதனை விரித்தோம்”-அல் குர்ஆன்.51:48 அல்லாஹ் பல இடங்களில் அல்குர்ஆனில் இப்பூமியை விரித்ததாக குறிப்பிடுகிறான். ஆதியில் இப்பூமி படைக்கப்பட்டபோது இன்றிருப்பதுபோல் தனித் தனி கண்டங்களாக இல்லை.பெரும் ஒற்றை பாறைக் கோளமாகவே இருந்தது. இதனை “பாங்கியா’(Super Continent Pangaea) என்று அழைக்கின்றனர். பூமியின் நிலத்தட்டை அல்லாஹ் ஏன் விரிக்க  வேண்டும்? உயிர் ஜீவன்கள் வாழ்வதற்கு இவை அவசியம் என்று இன்றைய அறிவியல் அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் கூறுவதைப் பார்ப்போம். Pangaea (sometimes spelled Pangea), the most recent […]

{ 2 comments }

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் அல்லாஹ் உலகைப் படைத்தான்; பின் பல்வேறு ஜீவராசிகளைப் படைத்து ஒவ்வொன்றின் தேவைகளையும் பாதுகாப்பையும் நிறைவு செய்வதற்காக பல்வேறு இயற்கை அமைப்புகளை ஏற்பபடுத்தியுள்ளான். மனிதன் மற்றும் விலங்கினங்கள், பறவைகள், தாவர வர்க்கங்கள் அனைத்தும் நலமுடன் வாழ்வதற்காக சூரிய வெப்பம், மழைநீர், கடல், ஆறு, மலைகள் போன்றவைகளை குறிப்பிட்ட வரையறுத்த அளவில் அமைத்துள்ளான்.  ஆனால் ஆறறிவு கொடுக்கப்பட்ட மனிதனோ அல்லாஹ் அமைத்த இயற்கை அமைப்பை மாற்றுவதற்காக பெரிதும் பாடுபட்டு இறுதியில் அதன் தீமைகளை அவனே சுகிக்கின்றான்.  அல்லாஹ் அமைத்த இயற்கை […]

{ 0 comments }

அல்குர் ஆன் வழியில் அறிவியல்………..  ஆதி காலத்திலிருந்து இன்றைய அறிவியல் காலம் வரை மனிதர்கள்  பயப்படுவது ஒன்றே ஒன்றுக்குத்தான் அதுதான் பேய், பிசாசு. உண்மையில் பேய்,பிசாசு உலகில் உள்ளனவா? என்று கேட்டால், “உளன் எனில் உளன், அலன்  எனில் அலன்”, “உண்டு என்றால் அது உண்டு…இல்லை என்றால் அது இல்லை….” என்று கடவுள் நிலைதான் பேய்க்கும் என்றே கூறுவார்கள்.  இஸ்லாத்தை பொறுத்தவரையில் பேய், பிசாசு என்று ஒன்று இல்லை. இறந்தவர்கள் ஆவி பேயாக உலவும் என்ற கருத்து […]

{ 43 comments }

CHAD எனும் நாட்டில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட படிம மண்டை ஓடு பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை மறுக்கிறது. டார்வின் கொள்கைகளை பின்பற்றும் விஞ்ஞானிகள் பரிணாம வளர்ச்சியின் அடிப்படையை இது ஆட்டங்கான வைத்துள்ளது என்று கூறுகின்றனர். ‘குரங்கிலிருந்து மனிதன் வந்தான்’ எனும் கட்டுக்கதை மீண்டும் ஒருமுறை வீழ்ச்சியடைந்துள்ளது. மத்திய ஆபிரிக்க நாடான  (CHAD) டில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய படிம மண்டை ஓடு மனிதனின் பரிணாம வளர்ச்சி சம்பந்தமான கோட்பாட்டிற்கு பெரும் சேதத்தை விளைவித்துள்ளது. உலக புகழ் பெற்ற விஞ்ஞான பத்திரிக்கைகள் […]

{ 4 comments }

அல் குர்ஆன் வழியில் அறிவியல்……….. அல்லாஹ் படைத்த இப்பூவுலகில் பெரும்பாகம் கடல் சூழ்ந்த உலகமாக சுமார் 70% நீர் நிரம்பிய கோளமாகவே உள்ளது.மனிதன் விண்ணில் ஏறி நிலவை பிடித்துவிட்டான். ஆனால் அவன் காலடியில் கிடக்கும் கடலின் ஆழத்திற்கு சென்று அதன் அற்புதங்களை அறிய முடியாத நிலையிலே அவன் அறிவு இன்றும் இருக்கின்றது. ஆழ் கடல் மர்மங்கள் தொடர்ந்து நீடிக்கின்றன. ஆறாம் நூற்றாண்டில் இறக்கி அருளப்பட்ட அல்குர்ஆனில் ஒரு வசனத்தில் அல்லாஹ் நிராகரிப்பவர்களுக்கு உதாரணமாக ஆழ் கடலின்  இருளுக்கு […]

{ 11 comments }

அல் குர்ஆன் வழியில் அறிவியல்.. அல்லாஹ் இம்மாபெரும் பிரபஞ்சத்தை படைத்தது வெறும் வீண் விளையாட்டு வேடிக்கைக்காக அல்ல.தக்க காரணத்துக்காகவே அன்றி வேறில்லை,என்று பல வசனங்களில் குறிப்பிடுகிறான். வானம், பூமி,சூரியன்,சந்திரன் கோள்கள், நட்சத்திரங்கள் அனைத்தும் காரண காரியங்களுடன் படைப்பினங்களுக்காகவே சிருஷ்டிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, “இன்னும் அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்துள்ளான்; அவ்வாறே நட்சத்திரங்களும் அவன் கட்டளைப்படியே வசப்படுத்தப்பட்டுள்ளன. நிச்சயமாக இதிலும் ஆய்தறியக் கூடிய மக்கள் கூட்டத்தாருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.” -அல்குர்ஆன்.16:12. நட்சத்திரங்களைப் பற்றி அல்லாஹ் […]

{ 6 comments }

அல் குர்ஆன் வழியில் அறிவியல்.. அல்லாஹ் தன் அருள்மறை குர் ஆனில், மனிதர்கள் நேர்வழி பெறுவதற்காக ஏராளமான வசனங்களை இறக்கி அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றான். ஆனால் பெரும்பான்மையான மனிதர்கள் அவ்வசனங்களை வெறும் கதை, கற்பனை என்று  அலட்சியப்படுத்தி மனோ இச்சையை பின்பற்றி வாழ்கிறார்கள். முன் சென்ற சமுதாயங்கள் இறைக்கட்டளையை புறக்கணித்ததன் காரணமாக பல்வேறு வழிகளில் அவர்கள் அழித்தொழிக்கப்பட்டர்கள். கடும் புயல். பூகம்பம், பெருவெள்ளம், கொடும் சுழல்காற்று, கல் மாரி என அல்லாஹ்வின் வேதனை அவர்களை பிடித்தது. இன்றைய […]

{ 7 comments }

அல்குர்ஆன்குர்ஆன் வழியில் அறிவியல்………. அல்லாஹ் படைத்த இம்மாபெரும் பிரபஞ்சத்தில், சூரிய குடும்பத்திலுள்ள நமது பூமிக்கு உள்ள தனிச் சிறப்பே பல்லுயிர்கள் வாழும் உயிர்க் கோளாமாக இருப்பதுதான். இவ்வுயிரினங்களுக்கு ஆதாரமாய் நீர் நிறைந்து நீலப்பந்தாக பூமி காட்சிதருகிறது. ஒவ்வொரு உயிர்களும் நீரிலிருந்தே படைக்கப்பட்டதாக அல்குர்ஆன் கூறுவதை நவீன அறிவியலும் உறுதிப்படுத்துகிறது. உயிர்களுக்கு ஆதாரமான நீர் பூமிக்கு மட்டும் சொந்தமல்ல. ஏனெனில் வானம் பூமி படைப்பதற்கு முன்பே அல்லாஹ் நீரைப் படைத்து விட்டான். எனவேதான் நீரானது பிரபஞ்சம் முழுவதும் வியாபித்துள்ளதை […]

{ 3 comments }

அல்குர்ஆன் வழியில் அறிவியல் வானம், பூமி, சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்களை உள்ளடக்கிய இம்மாபெரும் பிரபஞ்சம் (Universe) எப்படி தோன்றியது என்பதைத் தொடர்ந்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். ஆனாலும் உறுதியான முடிவிற்கு அவர்களால் வர முடியவில்லை. இருப்பினும் ‘ஹப்பிள் விதி’ (Hubble’s Laws) என்ற கோட்பாட்டின் படி ஏறத்தாள 1300 கோடி வருடங்களுக்கு முன் இப் பிரபஞ்சம் தோன்றியதாக கருதப்படுகிறது. ஒரு பொருளை உருவாக்கியவனுக்கே அப்பொருள் உருவான காலம் துல்லியமாகத் தெரியும். இறைவனால் படைக்கப்பட்ட மனிதர்கள் […]

{ 6 comments }

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் அல்குர்ஆனின் வழியில் அறிவியல்………. “பேரீச்சை, திராட்சைப் பழங்களிலிருந்து மதுவையும், நல்ல உணவுகளையும் நீங்கள் செய்கின்றீர்கள். நிச்சயமாக இதிலும் அறிவுடைய மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.” அல் குர்ஆன். 16:67 பொதுவாக எல்லாப் பழங்களும் மனிதனுக்கு பலத்தையும் ஆரோக்கியத்தையும் சத்தாக கொடுக்கின்றன. மனிதன் உண்ணும் மாமிச உணவுகளில் கூட சிலவற்றை அல்லாஹ் ஹராமாக தடுத்துள்ளான். அதேசமயம் தாவர வகைகளில் எதையும் தடை செய்யவில்லை. தானியப்பயிர்,காய்கறி,பழங்கள் அனைத்தும் ஹலாலாக்கி நன்மை செய்துள்ளான். மேல் குறிப்பிட்ட வசனத்தில் பேரீச்சை, திராட்சை […]

{ 4 comments }

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் அல் குர்ஆன் வழியில் அறிவியல்………. அல்லாஹ் இப்பூவுலகில் மனிதனையும், இன்னும் ஏராளமான ஜீவராசிகளையும் படைத்து பரவ விட்டுள்ளான். இவ்வுயிரினங்கள் தங்கள் முழு ஆற்றலை பயன்படுத்தி பயனடைவதற்காக ஐம்புலன்களையும் கொடுத்துள்ளான். தன் படைப்பினங்களில் சிறந்ததாக மனிதனை படைத்து அவனுக்கு ஆறாவது புலன் என்னும் பகுத்தறிவு பண்பையும் கொடுத்துள்ளான். பார்த்தல்,கேட்டல்,சுவைத்தல்,முகர்தல்,தொடுதல் என்ற ஐந்து புலன்களிலும் எது மனிதனுக்கு மிக அவசியமானது என்ற கேள்வியை எவரிடம் கேட்டாலும், குறிப்பாக குருடராக இருப்பதா? அல்லது செவிடராக இருப்பதா? என்று இரண்டில் ஒன்றை […]

{ 3 comments }

உலகத்தில் வாழக்கூடிய மக்களுக்கு வழி காட்டும் நெறிமறையாக அல்குர்ஆன் அமைந்துள்ளது. 1431 ஆண்டுகளுக்கு முன் அல்லாஹ் வின் தூதர் நபி(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட இந்த புனித குர்ஆன், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களையும், நிகழ்ந்த சம்பவங்களையும் வரலாறாக தந்ததுடன் வாழுகின்ற மக்களுக்கு இது சட்ட நூலாகவும், விண்ணியல், மண்ணியல், தாவரவியல், கருவியல், சமுத்திரவியல், விலங்கியல் என்று பல தரப்பட்ட விஞ்ஞானங்களை எடுத்துக்காட்டிக் கொண்டிருக்கிறது. அன்றைய காலகட்டத்தில் நவீன விஞ்ஞான வளர்ச்சிகளே இல்லாத காலத்தில் இறக்கி அருளப்பட்ட […]

{ 5 comments }

கடவுள் பற்றிய மதங்களின் அடிப்படை மற்றும் நடுநிலை கொண்ட மனிதர்களின் நியாயமான புரிதல்கள்: இயற்பியல் விதிப்படி (Thermodynamics First Law) இந்த உலகில் யாரும் எந்த ஒரு சக்தியையும் ஆக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது அப்படியெனில் இவ்வளவு பெரிய ஆற்றலை ஆக்கியது ஒரு ஆற்றல் மிகுந்த சக்தி என்பதை யாராலும் மறுக்க முடியாது. இயற்கை என்ற பெயர் வைத்தாலும் சரி, கடவுள் என்ற பெயர் வைத்தாலும் சரி இப்பிரபஞ்சத்தை உருவாக்கி இயக்கி வருவது ஒரு மாபெரும் சக்தி […]

{ 0 comments }

அல்குர் ஆனின் வழியில் அறிவியல்…………. அல்லாஹ் மனிதர்களைப்படைத்து, அவர்களுக்கு வேண்டிய எல்லா வாழ்வாதாரங்களையும் ஏற்படுத்தியது மட்டுமல்லாது உலகில் உள்ள அனைத்தும் மனிதர்களுக்கு பயன் தருபவைகளாக அமைத்துள்ளான்.இந்த வகையில் கால்நடைகளைப்பற்றி அல்லாஹ் கூறுகின்றான்.  ‘ (மனிதர்களே!) ஆடு,மாடு, ஒட்டகம் போன்ற கால்நடைகளையும் அவனே உங்களுக்காக படைத்திருக்கின்றான். அவற்றில் உங்களுக்காக (குளிரை தடுத்துக்கொள்ளக்கூடிய) கதகதப்புண்டு. இன்னும் (அநேக) பயன்களுமுண்டு. மேலும் நீங்கள் அவற்றிலிருந்து புசிக்கிறீர்கள். “ அல்குர் ஆன் -16:5 மேலும்  வேறொரு வசனத்தில்,  “(ஆடை போன்ற) பற்பல பொருள்களையும் தயாரிப்பதற்கு, […]

{ 3 comments }

 அல்குர்ஆனின் வழியில் அறிவியல்…… இஸ்லாம் தடை செய்யும் தனி மனித, சமூகத்தீமைகளில் முதன்மையானது மது. குடி குடியைக் கெடுக்கும் என்று கூறுவதன் பொருள் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.ஆகவேதான் மதுவை தீமைகளின் தாய் என்று கூறுகிறார்கள். மதுவால் பெற்றேடுக்கப்படும் பிள்ளைகள், நோய்,வறுமை, ஒழுக்கக்கேடு, குற்றச்செயல், வன்முறை, கொலை கொள்ளை,குடும்பசீரழிவு என்று சொல்லிக்கொண்டே போகலாம்.அல்லாஹ் கூறுகின்றான், “சாராயத்தைப்பற்றியும், சூதாட்டத்தைப்பற்றியும், அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள், நீர் கூறும், இவ்விரண்டிலும் பெரும் பாபம் இருக்கின்றது.மனிதர்களுக்கு சில பயன்களுமிருக்கின்றன. ஆனால் அவ்விரண்டிலுள்ள பாபம், அவ்விரண்டிலுள்ள […]

{ 4 comments }

அல் குர்ஆனின் வழியில் அறிவியல்… இவர்கள் பூமியில் சுற்றித்திரிந்து, இவர்களுக்கு முன்னிருந்தவர்களின் முடிவு எப்படி இருந்தது என்பதை பார்க்க வேண்டாமா? (முன் இருந்த) அவர்கள், இவர்களைவிட மிகுந்த பலசாலிகளா இருந்தனர். இவர்கள் எவ்வளவு பூமியை பண்படுத்தி விவசாயம் செய்து அபிவிருத்தி செய்தார்களோ அதை விட அதிகமாக (பூமியை) பண்படுத்தி அபிவிருத்தி செய்தவர்களாகவும் அவர்கள் இருந்தார்கள்.  அல்குர்ஆன். 30:9 இவ்வசனமானது  1400 ஆண்டுகளுக்கு முன்பு அரபு மக்களை நோக்கி இறங்கியது என்றாலும் இன்றுள்ள நமக்கும் சொல்லப்பட்ட செய்திதான். குறிப்பாக […]

{ 4 comments }

அல்குர்ஆனின் வழியில் அறிவியல்… அறிவார்ந்த நெறிநூலான அல்குர்ஆனில் ஏராளமான அறிவியல் உண்மைகளை உலக மக்களுக்குக் கூறி நேர்வழிக்கு அல்லாஹ் அழைக்கின்றான். போலி பொய்த் தெய்வங்களைப் புறந்தள்ளி, உங்களையும், உலகத்தையும், மாபெரும் பிரபஞ்சத்திலுள்ள சூரிய சந்திர, நட்சத்திரங்கள், கலாக்ஸிகளைப் படைத்தவனை மட்டும் வணங்குங்கள் என்று அறிவியல் உண்மைகளைக் கொண்டு உரைக்கின்றான். மனித சமுதாயம் நேர்வழி பெற வேண்டும் என்பதற்காக அல்குர்ஆனில் தனது வழிகாட்டும் வசனங்களை விவரித்துக் கூறுகிறான். தான் கூறும் உண்மைகளை மேலும் உறுதிப்படுத்து வதற்கும் கூடுதல் முக்கியத்துவம் […]

{ 10 comments }

  அல்குர்ஆன் வழியில் அறிவியல் S.ஹழரத் அலி, ஜித்தா     மனித சமுதாயம் படிப்பனை பெறுவதற்காக ஏராளமான வரலாறு சம்பவங்களை அல்குர்ஆனில் அல்லாஹ் எடுத்துக் காட்டுகிறான். கடந்த காலச் சம்பவங்களையும், இனி வரப்போகும் காலங்களில் நடபெற வேண்டிய செய்திகளையும் முன்னறிவிப்பாக சொல்கிறான்.     அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் சொல்லிய செய்திகள் அனைத்தும் சத்தியமானவை. கதையோ கற்பனையோ அல்ல. சில செய்திகள் நம் சிற்றறிவிற்கு புலப்படாமல் போனாலும், படைத்த ரப்பிடமிருந்து வந்த உண்மை என்று விசுவாசிகள் அனைவரும் விசுவாசம் கொள்கிறோம். […]

{ 6 comments }

உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் அமைதி நிலவட்டுமாக…. நாம் இந்த பதிவில் எடுத்திருக்கும் தலைப்பு மழை, வெய்யிலில் தெரியும் நிழலின் அருமை அது போன்று வானம் பார்த்த பூமியை கேட்டால் தெரியும் மழையின் அருமை. சரி முதலில் மழை (Rain) எவ்வாறு உருவாகிறது என்று நாம் பாப்போம். வெப்பத்தின் காரணமாக கடல்கள், ஏரிகள், ஆறுகள் போன்றவற்றிலிருந்து எடுக்கப்படும் நீர் திரவ நிலையிலிருந்து நீராவி நிலைக்கு மாறி காற்றில் கலந்து மேல் சென்று பின்பு மேகங்களை உருவாக்குகின்றன. […]

{ 1 comment }

அணு உலைகளின் உள்வடிவமைப்பு மற்றும் இயக்கம்; ஒரு சிறுகுறிப்பு! யுரேனியம் மற்றும் ப்ளூட்டோனியம் போன்ற அணுசக்தி வேதியற்பொருட்களிலிருந்து மின் உற்பத்திசெய்ய, அவற்றை அணு உலைகளில் அடைத்துவைத்து பயன்படுத்துவார்கள். அணு உலைகளில் பல வகைகள் உண்டு. சமீபத்திய, பெரும்பாலான  நாடுகளில் மின்னுற்பத்திக்காக பயன்படுத்தப்படுவது கொதிக்கும் தண்ணீர் அணுஉலை அல்லது Boiling water reactor, BWR என்னும் ஒருவகை அணுஉலையே! ஜப்பானில் ஃபுகுஷிமாவிலும் இதுதான் பயன்படுத்தப்படுகிறது! இது 1950களில் அமெரிக்காவின் GE/ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. கொதிக்கும் தண்ணீர் அணு […]

{ 6 comments }

Wi – Fi கதிர்களினால் தாவரங்களின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாகவும், மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நெதர்லாந்தின் வெனிங்கன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வின்போது விஞ்ஞானிகள் வெவ்வேறு வகையான கதிர்களை 20 மரங்களுக்கு சுமார் 3 மாதங்கள் வரை வழங்கி ஆராய்ச்சி செய்துள்ளனர். அப்போது (Wi – Fi) கதிர்களுக்கு அண்மையில் காணப்பட்ட மரங்களின் இலைகள் வேகமாக உதிர்ந்ததுடன், மரங்களில் கசிவுகளும் ஏற்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இதன் மூலம் வெளிப்படும் மின்காந்த அலைகள் சோளப்பயிர்களின் வளர்ச்சியினையும் […]

{ Comments on this entry are closed }

அல்குர்ஆனின் வழியில் அறிவியல்….. இஸ்லாம் அறிவியல் உண்மைகளை அரவணைத்துச் செல்லும் மார்க்கம். இயற்கையோடு இணைந்து செல்லும் இணையற்ற மார்க்கம். இயற்கை மார்க்கத்தின் இறுதி நெறிநூல் அல்குர்ஆனோ, அறிவியல் கருத்துக்களை உள்ள டக்கிய ஆய்வுப் பெட்டகமாக விளங்குகிறது. இன்றைய நவீன அறிவியல் கருத்துக்கள் அடங்கிய வசனங்கள் குர்ஆனில் ஏராளமாக உள்ளன. அவ்வசனங்களில் ஒன்றுதான், “அன்றியும், மலைகளைப் போல் உயரமாகச் செல்லும் கப்பல்கள் அவனுக்கே உரியன” அல்குர்ஆன் 55:24 “இன்னும் மலைகளைப் போல் கடலில் செல்பவையும் (கப்பல் மற்றும் பனிப் […]

{ 0 comments }

 அழியும் சூரியன்   சூரியனின் ஒளி அதன் மேற்பரப்பில் நிகழும் ஒருவித இரசாயன் செயல் முறையினால்தான் (Chemical Process) ஏற்படுகின்றது. இந்த இரசாயன செயல்முறை கடந்த 500 கோடி வருடங்களாக தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. எதிர்காலத்தில் இந்த இரசாயன செயல் முறை முடிவுக்கு வந்துவிடும். அப்பொழுது சூரியன் தன் ஒளியை முழுமையாக இழந்து அணைந்து விடும். இதனால் புவியில் உயிரினங்கள் யாவும் அழிவை சந்திக்கும். சூரியன் வாழ்வு நிரந்தரமானது அல்ல என்பதை பின் வரும் வசனம் கூறுகிறது. […]

{ 0 comments }