முஸ்லிம்களே ஒன்று படுவோம்!

Post image for முஸ்லிம்களே ஒன்று படுவோம்!

3 comments

in சமூகம்

1947-க்கு முன்னர் இந்தியா அகன்று விரிந்த ஒரே நாடாக இருந்தது. முஸ்லிம்களும் கணிசமாக இருந்தனர். முஸ்லிம்களுக்கு தனிநாடு கொடுத்து அவர்களை இந்தியாவிலிருந்து அகற்றிவிட்டால், தங்களின் ஆரிய பாஸிச ஆதிக்கத்தை எளிதாக நிலை நாட்டி விடலாம். அதற்கு முட்டுக்கட்டையாக இருப்பது முஸ்லிம்களே என்ற எண்ணத்தில் ஆரியர்கள் சதித்திட்டம் தீட்டினர். முஸ்லிம்களை அந்த நோக்கத்தோடு வம்புக்கு இழுத்தனர். முஸ்லிம்களும் இன உணர்வுக்கு ஆளாகி வீறுகொண்டு எழுந்தனர். அதன் விளைவு முஸ்லிம்களுக்காக பாக்கிஸ்தான் உதயமானது.

ஆனால் முஸ்லிம்களின் பிரச்சினைகளும் தீரவில்லை; ஆரியர்களின் நோக்கமும் முழுமையாக நிறைவேறவில்லை. ஆரியர்கள் எதிர்பார்த்தது போல், முஸ்லிம்கள் அனைவரும் இந்தியாவை விட்டு வெளியேறிடவில்லை. இந்தியா ஆரியர்களின் முழுக்கட்டுப்பாட்டில் வரவில்லை. அதற்கு இடையூறாக  இன்றைய இந்திய முஸ்லிம்கள் இருப்பதாக எண்ணுகின்றனர்.

அதனால், 800 ஆண்டுகள் ஸ்பெயினை ஆண்ட முஸ்லிம்கள் அந்த நாட்டிலிருந்து துடைத்தெறியப்பட்டது போல், 800 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட முஸ்லிம்களும் இந்திய நாட்டிலிருந்தும் துடைத்தெறியப்பட வேண்டும் என கனவு காண்கின்றனர். அதற்காகச் சதித்திட்டம் தீட்டி காய்களை நகர்த்துகின்றனர். எனவே முஸ்லிம்களைச் சீண்டுவதிலேயே குறியாக இருக்கின்றனர். முஸ்லிம்களுக்கு ஆத்திரத்தை மூட்டி, அவர்களை இன உணர்வு கொள்ளச் செய்து, அதனால் வன்முறைச் செயல்பாடுகளில் முஸ்லிம்களை ஈடுபட வைக்கின்றனர்.

அதைக் காரணம் காட்டி இஸ்லாமிய தீவிரவாதம், முஸ்லிம் தீவிரவாதிகள் என்றெல்லாம், ஆரியர்களின் ஆதிக்கத்திலுள்ள ஊடகங்கள் மூலம் செய்திகள் பரப்புகின்றனர். பெரும்பான்மை ஹிந்துக்கள் முஸ்லிம்கள் மீது அளவு கடந்து கோபம் கொள்ளச் செய்கின்றனர். பாஸிச சக்திகள் தலித் மக்களைத் தூண்டிவிட்டு முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தும்போது, முஸ்லிம்களும் இன உணர்வுக்கு அடிமையாகி பதில் தாக்குதல் நடத்தினால் முஸ்லிம்களுக்குக் கிடைக்கும் பரிசு இதுதான். பெருங்கொண்ட தலித் மக்களும் முஸ்லிம்களுக்குக் கடும் பகைவர்களாகி விடுகின்றனர்.

முஸ்லிம்கள் இன உணர்வைத் துறந்து இறை உணர்வு(தக்வா)க்குள் முழுமையாக நுழைந்துவிட்டால், அவர்களுக்கு அல்குர்ஆன் ஆலஇம்ரான் 3:186 கூறும் அறிவுரையை ஏற்று நடக்க அவர்கள் முன்வந்து விடுவார்கள்.

(நம்பிக்கையாளர்களே!) உங்கள் பொருள்களிலும் உங்கள் ஆத்மாக்களிலும் (நஷ்டம் இழைக்கப்படுவதன் மூலம்) நிச்சயமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு முன்னர் நெறிநூல்கள் கொடுக்கப்பட்டவர்களாலும், இணை வைப்பவர்களாலும், பல வசை மொழிகளை நிச்சயமாக நீங்கள் செவியுறுவீர்கள். (இத்தகைய கஷ்டங்களை) நீங்கள் பொறுமையுடன் சகித்துக்கொண்டு, முழுமையான இறை உணர்வுடன்(தக்வா) வாழ்ந்து வந்தால் (நீங்கள் வெற்றியடைவீர்கள்); நிச்சயமாக இதுதான் வீரமிக்கச் செயலாக இருக்கும்.    (3:186)

நன்மையும் தீமையும் சமமாக மாட்டா, நீங்கள் (தீமையை) நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வீராக! அப்பொழுது, யாருக்கும் உமக்கிடையே, பகைமை இருந்ததோ, அவர் உற்ற நண்பரே போல் ஆகிவிடுவார். (ஹாமீம் ஸஜ்தா 41:34)

இறை உணர்வு(தக்வா) முழுமையாக இருப்பவர்கள், நிச்சயமாக சுயவிளக்கம் எதுவும் கொடுக்காமல் அப்படியே இந்த இறைக் கட்டளைகளுக்கு “கேட்டோம் அடிபணிந்தோம்” (2:285, 5:7, 24:51) என்று கூறி கட்டுப்பட்டு விடுவார்கள். எவரிடம் இறை உணர்வை விட இன உணர்வு மிகைத்துக் காணப்படுகிறதோ அவர்கள் மட்டுமே சுய விளக்கம் கொடுத்து, யூதர்கள் கூறியதுபோல்; “நாம் கேட்டோம்; அதற்கு மாறாகவே செய்வோம்” (4:46) என்று இறைக் கட்டளைகளை நிராகரித்து ஷைத்தானின் பிடியில் சிக்குவார்கள்.

புரோகிதரர்களுக்கு பின்னால் செல்லும் காலம் எல்லாம், முஸ்லிம்களுக்கு இழிவுதான், கேவலம்தான், துன்பந்தான்; அற்பமான இவ்வுலக லாபங்களுக்காக ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்ற அடிப்படையில், பிரித்தாளும் சூழ்ச்சியைக் கைக்கொண்டு, முதலில் மாற்று மத சகோதரர்களுடன், மனித நேயத்திற்கு முரணாக அவர்களின் இன உணர்வைத் தூண்டும் விதத்தில் முஸ்லிம்களைச் செயல்பட வைப்பார்கள்.

இறைக் கட்டளைப்படி வழிகெட்ட பிரிவு ஜமாஅத்துகளை விட்டு தவ்பா செய்து, முழுமையான இறை உணர்வுடன் (தக்வா) “முஸ்லிம்கள்” என்று மட்டுமே, நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு, அல்குர்ஆனை ஒன்றுபட்டு ஒற்றுமையாகப் பற்றிப் பிடித்து, புரோகித மவ்லவிகளின் வழிகெட்ட சுய விளக்கங்களை ஏற்காமல், உள்ளது உள்ளபடி எடுத்து நடக்க முற்படுவோமாக. அதுவே வெற்றியைத் தரும். இறைக் கட்டளைகளை நிராகரித்து, மனிதக் கட்டளைகளை எடுத்து நடந்தால் அது நரகத்திற்கே இட்டுச் செல்லும்; எச்சரிக்கை! முஸ்லிம்கள் சுதாரித்து அல்குர்ஆனைப் பற்றிப் பிடித்து ஒன்றுபடவில்லை என்றால், ஸ்பெயினைப் போல் இந்தியாவிலும் முஸ்லிம்கள் துடைத்தெறியப்படும் காலம் வெகு தூரத்தில் இல்லை. முஸ்லிம்களே புரோகிதர்களின் துர்போதனைக்கு ஆளாகி இறை உணர்வை(தக்வா) இழந்து இன உணர்வில் மூழ்கி பிளவுகளில் சிக்கி உங்கள் வருங்கால சந்ததியினருக்குத் துரோகம் இழைக்காதீர்கள்.

நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்;     நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; (அல்குர்ஆன் (3:103)

தம் மார்க்க காரியத்தில் சிதறுண்டு, தமக்கிடையே பல பிரிவுகளாய் பிரிந்து, ஒவ்வொரு பிரிவினரும் தம்மிடம் இருப்பதைக் கொண்டே மகிழ்ச்சியடைபவர்களாய் இருக்கின்றனர்.  (அல்குர்ஆன் 23:53)

இப்றாஹீமுக்கும், மூஸாவுக்கும் , ஈஸாவுக்கும் நாம் உபதேசித்ததும் என்னவென்றால்: “நீங்கள் (அனைவரும்) சன்மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள், நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள்” என்பதே. (அல்குர்ஆன் 42:13)