நபித்தோழர்கள் நபி அவர்களை எந்த அளவிற்குப் பின்பற்றினார்கள் என்றால், நபி அவர்கள் எந்த ஒரு செயலைச் செய்தாலும் அவர்களும் அப்படியே செய்வார்கள். பல சந்தர்ப்பங்களில் இதை ஏன் எதற்காக செய்கிறார்கள் என்ற கேள்வியை அவர்கள் எழுப்புவதே இல்லை. நபி அவர்கள் ஒரு தங்க மோதிரம் அணிந்திருந்தார்கள். இதைக்கண்ட நபித்தோழர்களில் சிலரும் தங்க மோதிரத்தை அணியலானார்கள். பின்னர் ஒருநாள் நபி அவர்கள் தாம் அணிந்திருந்த மோதிரத்தை கழட்டி எறிந்துவிட்டு, இனிமேல் “இதை நான் ஒருபோதும் அணிவதில்லை” என்று சொன்னார்கள். [...]
சகோதரர்களே! உங்களை நீங்கள் முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்கிறீர்கள். முஸ்லிமுக்கு இறையருள் கிடைக்கிறது என்பது உங்கள் நம்பிக்கை. ஆனால் கொஞ்சம் கண்ணை திறந்து பாருங்கள்! இறையருள் உங்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கிறதா? மறுமையில் கிடைக்கக்கூடியதை நீங்கள் பிறகு பார்த்துக்கொள்ளலாம். ஆனால் இம்மையில் இன்று உங்கள் நிலையைப்பற்றி யோசனை செய்யுங்கள். இவ்வுலகில் நீங்கள் கோடிக்கணக்கில் இருக்கிறீர்கள். இவ்வளவு மக்கள் தொகைகொண்ட நீங்கள் போக்கற்றவர்களாகவும் மதிப்பற்றவர்களாகவும் இருக்க மாட்டீர்கள்; இறைவனைத் தவிர வேறு யாருக்கும் குனியாத உங்கள் தலை வெறும் மனிதர்களுக்கு [...]
முஸ்லிம்களில் மார்க்கம் என்ற பெயரில் யாராவது எதையாவது சொன்னால் கண்மூடிப் பின்பற்றுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். இஸ்லாமிய மர்க்கத்தை என்னதான் குர்ஆன், ஹதீஸ் கொண்டு விளக்கினாலும், எடுத்துக் கொடுத்தாலும் விரல் விட்டு என்ணும் அளவிற்கு ஒரு சிலரைத் தவிர எஞ்சியவர்கள் யாரையாவது ஒருவரை சார்ந்து நிற்பதையே வழமையாக்கிக் கொள்கிறார்கள். தெளிவாகச் சொன்னால் ஆளை மாற்றுகிறார்களே தவிர “தக்லீதை விடுவதாக இல்லை. நாம் விரும்புவதாக இருந்தாலும், மறறவர்கள் விரும்புவதாக இருந்தாலும், அதற்கேற்றவாறு ஒருவர் குர்ஆன், ஹதீஸுக்கு சுய விளக்கம் கொடுத்தால் [...]
‘இறைத்தூதர் அவர்களே! இஸ்லாத்தில் சிறந்தது எது?’ என்று நபித்தோழர்கள் கேட்டதற்கு ‘எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறாரோ அவரின் செயலே சிறந்தது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ மூஸா(ரலி) அறிவித்தார். (புஹாரி) ’ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ‘இஸ்லாத்தில் சிறந்தது எது’ எனக் கேட்டதற்கு, ‘(பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும் நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதுமாகும்’ என்றார்கள்” என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். (புஹாரி) ’ஒருவர் [...]
ஈமான் கொண்டோரே! ஒரு குறித்த தவனையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டால், அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்;. எழுதுபவன் உங்களிடையே நீதியுடன் எழுதட்டும்;. எழுதுபவன் எழுதுவதற்கு மறுக்கக்கூடாது. (நீதமாக எழுதுமாறு) அல்லாஹ் அவனுக்குக் கற்றுக் கொடுத்தபடி அவன் எழுதட்டும். இன்னும் யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொருப்பு இருக்கிறதோ அவனே (பத்திரத்தின்) வாசகத்தைச் சொல்லட்டும்;. அவன் தன் ரப்பான (அல்லாஹ்வை) அஞ்சிக் கொள்ளட்டும். அல்குர்ஆன் 2:282 இந்த வசனத்தின்படி கடன் [...]
உலகில் அல்லாஹ் மனிதனைப் படைத்ததின் நோக்கம் தனக்கு மட்டும் இருந்து தனக்கே முற்றிலுமாக அடிபணிய வேண்டும் என்பதற்காவே. அந்த அடிமைத்தன்மை மனிதனிடம் வெளிப்படுவதற்காக சில அமல்களை அவன் அவசியமாக்கியுள்ளான். அந்த அமல்களில் முக்கியமானது தொழுகையாகும். அந்த தொழுகையை முறைப்படி. முழுமையாக நிறைவேற்றும்போது அல்லாஹ்வால் அது அங்கிகரிக்கப்பட்டு நன்மைகளை பெற்றுத் தரும் நற்காரியமாக அமைந்து விடுகிறது. அதற்கு மாற்றமாக முறை தவறி முறைகேடாக செயல்படுத்தப்படுமானால் அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்படாததாக ஆகி விடுகின்றது. எனவே அல்லாஹ்விடத்தில் வெறும் தொழுகை எனும் [...]
சிலர் தன்னைப் பிறர் புகழும்போது சுறுசறுப்போடும் உற்சாகத்தோடும் செயல்படுவார்கள். விமர்சனங்கள் ஏச்சுப் பேச்சுக்கள் வரும்போது பின்வாங்கி விடுவார்கள். மனிதர்கள் புகழ்ந்தாலும் சரி, இகழ்ந்தாலும் சரி தன்னுடைய செயல்களை அல்லாஹ்வின் பொருத்தத்திற்க்காக எண்ணிச் செயல்படுபவர்களே உண்மையான உளத்தூய்மையாளர்கள். சிலர் கூட்டத்தில் இருக்கும்போது அமல்களில் செயல்களில் ஆர்வம் காட்டுவார்கள். பாவங்களிலிருந்தும் விலகியிருப்பார்கள். ஆனால் தனிமையில் அமல்களில் சோம்பல் கொள்வார்கள். பாவங்களிலும் அதிகம் ஈடுபடுவார்கள். யார் தனிமையிலும் கூட்டத்திலும் சோம்பலை விட்டும் பாவத்தைவிட்டும் விலகியிருக்கிறார்களோ அவர்களே உண்மையான உளத்தூய்மையாளர்கள். சிலர் வெளியே [...]
நம்பிக்கையாளர்களே! நீங்கள் (தயங்கிக் கொண்டிருக்க வேண்டாம்) இஸ்லாமில் முற்றிலும் நுழைந்து விடுங்கள். (இதனைத் தடை செய்யும்) ஷைத்தானின் அடிச்சுவடு களைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரியாவான். (2:208) இவ்வாறு (அவர்களைப் பயமுறுத்திச்) செய்தது ஒரு ஷைத்தான்தான். ஆவன் தன் நண்பர்களைப் பற்றி (அவர்களுக்குப்) பயமுறுத்தினான். ஆகவே, நீங்கள் உண்மை நம்பிக்கையாளர்களாக இருந்தால் அவர்களுக்குப் பயப்பட வேண்டாம்ளூ எனக்கே பயப்படுங்கள். (3:175) அல்லாஹ்வையன்றி அவர்கள் (தெய்வங் களாக) அழைப்பவைகள் பெண் (பெயருடை யவை)களேயன்றி வேறில்லை. துஷ்ட [...]
தொன்று தொட்டு இன்றுவரை மதத்தின் பெயரால் தான் மனித இரத்தம் அதிகமாய் சிந்தப்பட்டுள்ளது. மதம் பிடித்த மனிதன்தான் மனிதனை கொல்கின்றான். இன்று உலகில் காணப்படும் அமைதியின்மைக்கு மதங்கள்தான் காரணம் மதங்கள் அழிந்தால்தான் மதங்களை ஒழித்தால்தான் மனித இனம் அமைதி பெறும் என்றெல்லாம் நாத்திகர்கள் ஓயாமல் பிரச்சாரம் செய்து வருகின்றார்கள். இன்று உலகில் நடைபெறும் சம்பவங்ளை பார்க்கும்பொழுது இதில் உண்மையிருக்குமோ என்று மக்களுக்கும் சந்தேகம் ஏற்படுகின்றது. மதத்தின் பெயரால் இன்று மக்கள் மத்தியில் வெறுப்பு ஏற்படுவதற்கு இந்த சந்தேகங்களும் [...]
நபி வழி என்றால் என்ன? நபிவழி எப்போது தொகுக்கப்பட்டது? எப்படித் தொகுக்கப்பட்டது? என்ற வரலாற்று உண்மைகளைத் தெரிந்து கொள்வதற்கு முன்னால், நபிவழி என்றால் என்ன? நபி வழியைப் பின்பற்ற வேண்டியதன் அவசியம் என்ன? நபி வழியைப் பின்பற்றாதவருக்குரிய தண்டனை என்ன? என்பதை முதலில் பார்ப்போம். நபி வழிக்கு அரபியில் ”சுன்னத்” என்று சொல்லப்படும். இந்தச் சொல்லிற்கு அகராதியில் பொதுவாக ”வழி” என்று பொருள் இருந்தாலும், இஸ்லாமிய பழக்கத்தில் அது நபி வழிக்குத்தான் பயன் படுத்தப்படுகிறது. அதாவது நபி [...]
இஸ்லாம் முஸ்லிம்களை மட்டுமின்றி மற்ற மனிதர்களையும் ஒன்றினைக்கும் வாழ்க்கை நெறி! இறுதி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வாக்காலும், வாழ்வாலும் நடைமுறைச் சாத்தியமாக்கிக் காட்டிச் சென்றுள்ளார்கள். அல்ஹம்துலில்லாஹ்! இந்த செயற்கரிய சாதனை கடந்த 1000 ஆயிடம் வருடங்களாக மறக்கப்பட்டும், மறைக்கப்பட்டும் உலக முஸ்லிம்கள் பிரிவிலும் பிளவிலும் சிக்கித்தவிக்கிறார்கள். முஸ்லிம் நாடுகளிலுள்ள முஸ்லிம்கள் ஒன்றிணையும் சாத்தியக்கூறுகள் மிகுந்திருந்தும் அங்கும் அவர்கள் பிரிந்தே கிடக்கிறார்கள். மார்க்க ரீதியில் மத்ஹபுகள், தரீக்காக்கள் என்றும், இயக்கங்கள், அமைப்புகள் என்றும் அகில உலக அளவில் [...]
அல்லாஹ்வின் மார்க்கத்தை பிறரிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்கிற ஆவல் அல்ஹம்துலில்லாஹ் இன்று எல்லோரிடமும் பரவலாக காணப்படுகிறது. தனி நபர்களாகவும் பல குழுக்களாகவும் நாம் இந்த இஸ்லாமிய அழைப்புப்பணியை செய்து வருகிறோம். ஆனால் அன்று சஹாபாக்கள் காலத்தில் இஸ்லாம் பரவியது போல இன்று பரவுவதில்லை. அன்று மக்களை இஸ்லாம் ஈர்த்தது போல் இன்று ஈர்க்கவில்லை. இஸ்லாம் ஏனைய மார்க்கங்களைப் போல இடைச் செருகல்களுக்கும் மாற்றத்திற்கும் ஆட்பட்டுவிட்டதா என்றால் அதுவும் இல்லை. பிறகு இதற்கு காரணம் என்ன? இஸ்லாம் [...]
முழங்கியது போதும் வழங்குகள் உரிமைமையை! நாம் மேடையில் நின்று கொண்டு, ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாத்தில் பெண்களுக்கு இன்னின்ன உரிமைகள் வழங்கப்பட்டிருந்தன என்று முழங்கினால் மட்டும் போதாது. மாறாக, இஸ்லாம் அளித்துள்ள பெண்ணுரிமைகளை நடைமுறையில் செயல்படுத்திக் காட்டவேண்டும். பெண்களின் பிரச்னைகளும் அவற்றின் தீர்வுகளும் என்று பேசுவதற்கு முன்பு முதலில் பெண்களின் இருப்பு பற்றி புரிந்து கொள்ளவேண்டும். பெண்ணுரிமை என்ற பெயரில் எவ்வளவோ போராட்டங்கள் நடைபெற்றன. கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவழிக்கப்பட்டன. ஏராளமான முழக்கங்கள் முன்வைக்கப்பட்டன. அப்படியெல்லாம் இருந்தும் கூட [...]
அல்லாஹ்விற்கு ஆற்ற வேண்டிய கடமைகள் இந்தக்கடமையே கடமையே மகத்தானதும் கட்டாயமானதுமாகும். ஏனெனில் அது மகத்தான படைப்பாளனான, அனைத்து விஷயங்களையும் நிர்வகிக்கும் அரசனாகிய அல்லாஹ்வுக்கு நிறைவேற்ற வேண்டிய கடமைகளாகும். அவனே இப்பிரபஞ்சம் அனைத்தையும் படைத்து தனது எல்லையில்லா ஞானத்தின் மூலம் நிர்ணயம் செய்து வருபவன். இன்னபொருள் என்று கூறுவதற்கு இயலாத நிலையிலிருந்து இல்லாமையிலிருந்து படைத்தவன் அவனே. தாயின் வயிற்றில் மூன்று இருள் உரைகளுக்குள்ளே இருந்தபோது அல்லாஹ்வே தனது அருளினால் வளர்த்துப் பரிபாலித்தான். அந்த நிலையில் அவனைத்தவிர எந்த சக்தியும் [...]
சமீபகாலமாக ஃபத்வா ஒன்று காது குத்துவது ஹராம் என்று சிலர் கூறுகின்றனர். காது குத்துவது சமுதாயத்தில் உள்ள பெண்களின் பழக்கமாக நபி(ஸல்) அவர்களின் காலத்திற்கு முன்பே இருந்தது. இந்த பழக்கம் முஸ்லிம் பெண்களால் இன்றளவும் தொடரப்பட்டுள்ளது. மேலும் காது குத்தக்கூடாது என்பவர்கள் கீழ் வரும் வசனத்தையும் ஹதீதையும் ஆதாரமாக கூறுகின்றனர். “இன்னும் நிச்சயமாக நான் அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களிடம் வீணான எண்ணங்களையும் உண்டாக்குவேன்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளின் காதுகளை அறுத்து விடும்படியும் அவர்களை [...]
பொய் பேசுவது மார்க்கத்திற்கு புறம்பானது. அல்லாஹ் (ஸுப்) தடை செய்தது. நாம் உண்மைக்கு மாற்றமான விஷயங்களைக் கூறி அதாவது பொய் பேசி அதனால் இந்த உலக ஆதாயங்களை அடைய ஆசைப்படுகின்றோம். சில விஷயங்களில் உண்மையைப் பேசினால் அதனால் நமக்கு தொந்தரவுகள் மற்றும் கஷ்டங்கள் வரும் என நினைத்து பொய் பேசி அதிலிருந்து தப்பிக்க முயல்கின்றோம். வேறு சில சமயங்களில் உண்மையைப் பேசினால் நமது கௌரவம் பாதிக்கப்படும் நம்மைத் தாழ்வாக நினைப்பார்கள் என்றெல்லாம் நினைத்துக்கொண்டு சரளமாக எந்த ஒரு [...]
1- அல்லாஹ் இவ்வுலகத்தை நிரந்தரமாக இருப்பதற்காக படைக்கவில்லை. மாறாக அதற்கென முடிவு நாள் வரும். அந்நாளே இறுதி நாளாகும். அதுவே ஐயத்திற்கிடமில்லாத உண்மையுமாகும். அல்லாஹ் சொல்கிறான்: நிச்சயமாக இறுதிநாள் வந்தே தீரும் அதில் சந்தேகமில்லை.(40:59) நிராகரிப்பாளர்கள் இறுதி நாள் எங்களிடம் வருமா? எனக் கேட்கிறார் கள்(நபியே) நீர் கூறும்: ஆம்! எம் இறைவனின் மீது சத்தியமாக நிச்சயமாக அது உங்களிடம் வரும்.(34:3) (விசாரணைக்குரிய) காலம் நிச்சயமாக வந்தே தீரும்; அதில் சந்தேகமே இல்லை – எனினும் மனிதர்களில் [...]
எவர் தம்மிடம் இருக்கும் ஒரு நாளைக்குப் போதுமான சாதத்தைக் கொண்டு தம் மனத்துக்கு நிம்மதியையும் தம் உடலுக்குத் தெம்பையும் கொடுத்துக் கொள்கிறாரோ அவர் உலகிலுள்ள அனைத்தும் அளிக்கப்பட்டவர் போலாவார் என்று அண்ணல் நபி அவர்கள் கூறினர். அறிவிப்பவர்: உபைதுல்லாஹ் இப்னு மிஹ்ஸனில் கதமீ (ரலி) நூல்: திர்மிதி எவர் இஸ்லாமிய நேர்வழியை அடைந்து அவரால் இயன்றதைக் கொண்டு வாழ்க்கை நடத்தி போதுமாக்கிக் கொள்கிறாரோ அவருக்கு நல்வாழ்வு உண்டாகட்டும் என்று நபி அவர்கள் கூறினர். அறிவிப்பவர்: புலாளதுப்னு உபைது [...]
தங்களை பகுத்தறிவாளர்கள் என்று கூறிக்கொள்கிறவர்கள் மனிதக் கற்பனையில் குறிப்பாக புரோகிதர்களின் கற்பனையில் படைக்கப்பட்ட எண்ணற்ற கோடிக்கணக்கான பொய்க கடவுள்களை மறுப்பதற்குப் பதிலாக அகில உலகங்களையும், அவற்றிலுள்ள அனைத்தையும், மனிதளையம் படைத்து ஆட்சி செய்யும் அந்த ஒரேயொரு இறைவனையும் மறுத்து வருகிறார்கள். மனிதனும் மற்ற ஐயறிவு பிராணிகளைப் போன்ற ஒரு பிராணியே! அவற்றைப் போல் பிறந்து வளர்ந்து இணைந்து அனுபவித்து மடிந்து மண்ணோடு மண்ணாகப் போகிறவனே! ஓரிறைவன், மறு உலக வாழ்க்கை என்பதெல்லாம் சுத்த ஹம்பக்; மக்களை ஏமாற்றிப் [...]
என் தோழர்களை ஏசாதீர்கள்! ஏனெனில், நிச்சயமாக யார் கைவசம் என் உயிர் இருக்கின்றதோ அவன்மீது ஆணையாக” உஹத் மலையளவு தங்கத்தை எவர் தர்மம் செய்தபோதும் என் தோழர்களின் நிலையை அடைய முடியாது, ஏன் அதில் பாதியளவு கூட அடையமுடியாது” என்று நபிகள் (ஸல்) அவர்கள் நவின்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) நூல்: முஸ்லிம்) சோதனை அண்ணல் நபி(ஸல்) அவர்கள் சத்திய இஸ்லாத்தை அரபுத் தீபகற்பத்தில் முழங்கியபோது, அவர்களுக்கு ஏற்ப்பட்ட இன்னல்களும், அவர்கள் மீது வீசப்பட்ட இழிசொற்களும் வசைமாரிகளும் [...]
இறந்துவிட்ட இறைநேசர்களால் நமது தேவைகளை நிறைவேற்றவோ, சிரமங்களை நீக்கவோ முடியும் என்று நம்புவது, அவர்களிடம் உதவி கோரி பிரார்த்திப்பது, பாதுகாப்புத் தேடுவது, அவர்களைப் பரிந்துரைக்கச் சொல்வது, அவர்களின் பொருட்டால் அல்லாஹ்விடம் கேட்பது … போன்ற செயல்கள் அனைத்தும் “ஷிர்க் ஆகும். ஏனென்றால், இவ்வகையான செயல்கள் அனைத்தும் மார்க்கத்தில் வணக்க வழிபாடுகளாகக் கருதப்படுகின்றன. வணக்க வழிபாடுகளை அல்லாஹ் தனக்கு மட்டுமே செய்ய வேண்டுமென அல்குர்ஆனின் பல வசனங்களில் தெளிவாகக் கட்டளையிடுகின்றான். அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், [...]
விருந்தளிப்பதையும், விருந்துக்கு அழைக்கப்படும்போது ஏற்றுக்கொள்வதையும் வலியுறுத்தி ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் சமுதாயத்தில் வழக்கத்தில் உள்ள விருந்துகளில் பெரும்பாலானவை விருந்துகள் அல்ல. திருமண விருந்து, அகீகா, புதுமனை புகுதல் போன்ற அனுமதிக்கப்பட்ட விருந்தாக இருந்தாலும் அந்த விருந்துகளில் இஸ்லாம் கூறும் முறைகள் பின்பற்றப்படுவதில்லை. “செல்வந்தர்கள் மட்டும் அழைக்கப்பட்டு ஏழைகள் புறக்கணிக்கப்படும் விருந்து தான் விருந்துகளில் மிகவும் கெட்டதாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹ{ரைரா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத் எந்த விருந்துகளில் [...]
உலகில் மனிதன் வாழ்வதற்கு பொருளாதாரம் மிகவும் அத்தியாவசியமானதாக இருக்கின்றது. அதனால் தான் பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்று கூறுகின்றனர். பொருளாதாரத்தின் அடிப்படையிலேயே மனிதர்களை உயர்வானவர், தாழ்வானவர் என்று மதிப்பீடு செய்யப்படுகிறது. ஒருவர் பொருளாதாரத்தை எவ்வாறு திரட்டினார், சரியான வழியிலா? தவறான வழியிலா? என்று பார்க்கப்படுவதில்லை. ஒருவரிடம் எவ்வளவு பொருளாதாரம் இருக்கிறது என்று மட்டுமே பார்க்கப்படுகிறது. பொருளாதாரத்தைப் பெற்று தனது குடும்பத்தைச் சேர்ந்த மனைவி, மக்கள் சுகபோகமாக வாழ பலர் பல வழிகளை நாடுகிறார்கள். நியாயமான முறையில் [...]
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் அருமை ஸஹாபாக்கள் ‘உங்களுக்கு நாங்கள் எப்படி ஸலவாத் கூறுவது’ என்று கேட்டபோது, நபி அவர்கள் ‘ஸலவாத்’ கூறும் முறைகளை நமக்குத் தெளிவாக கற்றுத் தந்துள்ளனர். அவர்கள் எவற்றை ‘ஸலவாத்’ என்று கற்றுத் தந்தார்களோ அதை விடுத்து நாமாகப் புதிய ‘ஸலவாத்’ களை உருவாக்கிக் கொண்டால் அது ஸலவாத் ஆக முடியாது. மாறாக ‘பித்அத்’ஆக அவை கருதப்படும். இதற்கு உதாரணமாக ‘இப்னு அபீ ஜைது’ என்ற அறிஞர் ‘வர்ஹம் முஹம்மதன் வஆல [...]
அல் குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி ஆதாராபூர்வமான ஹதீஸ்களை நிராகரிக்கும் ஆபத்தான போக்கு தமிழ் வட்டத்தில் அதிகரித்து வருகின்றது. ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படாது! அவை முரண்படுவது போல் தோன்றினாலும் அவதானமாக நோக்கினால் முரண்பாடு இருக்காது. இத்தகைய ஹதீஸ்களைக் கண்டால் ஹதீஸின் வெளிப்படையான கருத்தைக் கவனத்திற் கொண்டு குர்ஆனின் கருத்தை மறுத்து விடவும் கூடாது. குர்ஆனை ஏற்பதாகக் கூறி ஹதீஸ்களை மறுத்துவிடவும் கூடாது. இரண்டையும் இணைத்து பொருள் கொண்டு இரண்டையுமே அங்கீகரிக்க வேண்டும் இருப்பினும் இந்த சரியான கருத்திலிருந்து [...]
1. காலத்தின் மீது சத்தியமாக. 2. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். 3. ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை). (103:1-3) நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்க ளும் ஒருவருக்கொருவர் உற்ற நண்பர்களாக இருக்கின்றனர். அவர்கள் நல்லவற்றை ஏவுகிறார்கள், தீயவற்றை விலக்குகிறார்கள், தொழுகையைக் கடைபிடிக்கிறார்கள். ஜகாத்தை கொடுத்து வருகிறார்கள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் [...]
இஸ்லாம் வலியுறுத்தும் சமூக உறவுடன் சம்பந்தப்பட்ட இபாதத்துக்களில் குடும்ப உறவைப் பேணுவது மிக முக்கியமானதாகும். சமூக உருவாக்கம் எனும் இஸ்லாமிய இலட்சியத்தை அடைய குடும்ப உறவு சீர்படுதல் இன்றியமையாததாகும். இவ் வகையில் நல்ல சமூக மாற்றத்தை ஏற்படுத்த நல்ல குடும்ப உறவுகளை ஏற்படுத்த வேண்டும். துரதிஷ்டவசமாக மார்க்க ஈடுபாடு உள்ள பலரிடம் கூட இன்றைய சமூக சூழல் இரத்த உறவை விட நட்பையும் இடையில் ஒட்டிக்கொண்ட உறவையும் முக்கியத்துப் படுத்தும் நிலை இன்று தோன்றியுள்ளது. நட்புக்காகவும், இன்னும் [...]
காதலில் கள்ளக் காதல் என்ன? நல்ல காதல் என்ன? எல்லாக் கண்றாவியும் ஒன்றுதான். காதல் மயக்கத்தில் விழுந்த ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும், அந்தப் போதை தெளியும்வரை நிஜத்தை நிமிர்ந்து பார்ப்பதே இல்லை. தன்னை மறந்து, தன்னைப் பெற்றவர்களை மறந்து, உற்றாரையும் உறவினரையும் மறந்து, சமுதாயத்தை மறந்து, சமயத்தை மறந்து… இப்படி எதார்த்தங்கள் அனைத்தையும் மறந்துவிட்டு, அந்தச்… சுகம் ஒன்றே இலட்சியம் என்று கிறுக்குப் பிடித்து அலையும் காதல் மோகம் தேவைதானா? அல்லது கையிலிருக்கும் காசையும் கழுத்திலிருக்கும் [...]
18 ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தின் கீழ் பல நாடுகள் அடிமைப்பட்டன. முஸ்லிம்களின் கிலாபத்தான துருக்கியோ மிகவும் பலஹீனமான நிலையில் இருந்தது. ஏகத்துவம் மலர்ந்த அரேபியாவிலோ, அனாச்சாரமும், ஜாஹிலியாவும் இஸ்லாம் பெயரில் அனுசரிக்கப்பட்டது. ஷிர்க் ஏகத்துவமாகவும், பித்அத் சுன்னத்தாகவும் நடைமுறைப்படுத்தப்பட்டது. புனித மரங்கள், நல்லோர் கபுருகள், புனித கற்கள் எல்லாம் வணக்க வழிபாடு செய்யும் தலங்களாக மாறின. நஜ்து அரேபியர்கள் தங்களுக்குள் செய்யவேண்டிய எல்லா காரியங்களையும் குறிகாரர்கள், ஜோதிடர்களை கேட்டே செய்தனர். புகழ்பெற்ற பேரிச்சை மரமான “அல் [...]