நாம் தடுமாறினால்....

 

   நாம் முஸ்லிம்கள், நடுநிலைச் சமுதாயம், நீதையையும், நியாயத்தையும், தர்மத்தையும் தரணியில் நிலை நாட்ட தோற்றுவிக்கப்பட்ட உன்னத சமுதாயம். நாம் தடுமாறினால் தரணியே தடுமாறிவிடும்.

   இக்கட்டான
க்கால கட்டத்தில் முஸ்லிம்களாகிய நாம் நிதானத்தையும், பொறுமையையும் கடைபிடிப்பது கண்டிப்பான கடமையாகும். அல்லாஹ்வின் கயிறான அல்குர்ஆனை நாம் பற்றிப்பிடிக்க வேண்டும். ஒற்றுமை காக்க வேண்டும். குர்ஆனையும், ஹதீஸையும் பற்றிப ிபிடித்து அதன்படி நடப்பது மட்டுமே ஒற்றுமை காக்கும் வழியாகும். குர்ஆனையும், ஹதீஸையும் தங்கள் கருத்துப்படி வளைத்து மறைத்துச் செயல்படுவதே ஒற்றுமை காக்கும் வழி என்ற ஷைத்தானின் போதனையை தூர விலக்கவேண்டும்.

   மாற்று மதத்தாரை, அரசியல்வாதிகளைத் தூற்றுவதால், பழிப்பதால், கரித்துக் கொட்டுவதால் லாபம் நமக்கில்லை என்பதை முஸ்லிம்கள் உணர வேண்டும். அதன் மூலம் முஸ்லிம் சமுதாயம்தான் துன்பத்திற்குள்ளாக நேரிடும். எனவே, மாற்று மதத்தினர், மற்றும் அரசியல் வாதிகளின் குறைகளை, நயவஞ்சகச் செயல்களை, அவர்களின் அநியாய அக்கிரமங்களைப் பக்கம் பக்கமாக எழுதுவதை விட்டும், பேசித்ிதிரிவதை விட்டும், முஸ்லிம்கள் பத்திரிகைகளும், முஸ்லிம்களும் விடுபடவேண்டும்.

   அதற்குமாறாக அல்லாஹ்வை தனது எஜமானனாகவும், நபி(ஸல்) அவர்களை அல்லாஹ்வின் தூதராகவும், தங்கள் வாழ்வில் வரும் சோதனைகளை நபி (ஸல்) அவர்கள் காட்டிய வழியில் தீர்க்க முயலவேண்டும். அவர்கள் வாழ்ந்து காட்டியுள்ள நடைமுறைகளையும் ஹதீஸ்களையும் பற்றிப்பிடிக்க வேண்டும். அந்தக் குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் முரணாக முன்னோர்களின் பெயரால் தங்களிடையே காணப்படும் மூட நம்பிக்கைகள், மூடச்சடங்குகள், சம்பிர தாயங்கள், பிளவுகள், பிரிவுகள் அனைத்தையும் அகற்றி ஒற்றுமையுடன் உன்னத வாழ்க்கையை, மிக நிதானத்துடன் கடைபிடிக்க முஸ்லிம்கள் கடமைப் பட்டுள்ளார்கள்.

   குர்ஆனையும், ஹதீஸையும் ஒப்புக்கொண்டுள்ள முஸ்லிம்கள் அந்த குர்ஆனும், ஹதீஸும் போதிக்கும் நீதியை, நியாயத்தை, நேர்மையை, சத்தியத்தை, தர்மத்தை,  நேர்வழியைக் கடைபிடித்து ஓரணயில் ஒன்று பட முன்வராத நிலையில், குர்ஆனையும், ஹதீஸையும் ஒப்புக்கொள்ளாத மாற்று மதத்தாரிடமும் அரசியல் வாதிகளிடமும் நீதியை, நியாயத்தை, நேர்மையை, சத்தியத்தை, தர்மத்தை, நேர்மையை எதிர்பார்ப்பது முறையா? என்று முஸ்லிம்களிடம் கேட்டு முடிக்கிறோம்.

 

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த