எஸ்.ஹலரத் அலி. திருச்சி-7. (+91 9965361068). வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும், உங்களுடைய மொழிகளும், நிறங்களும் வேறுபட்டிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும். இதில் அறிவுடையோருக்கு நிச்சயமாக பல அத்தாட்சிகளிருக்கின்றன. – அல்குர்ஆன்.30:22. மற்றொரு வசனத்தில், “ இவ்வாறே,மனிதர்கள், விலங்குகள், கால் நடைகள் ஆகியவற்றின் நிறங்களும் பலவிதமாய் உள்ளன. உண்மையில் அல்லாஹ்வின் அடிமைகளில் ஞானமுடையோர் மட்டுமே அவனுக்கு அஞ்சுகிறார்கள்….. – அல்குர்ஆன்.35:28. அல்லாஹ்வுடைய படைப்புகள் அனைத்தும் பல நிறங்களில் உள்ளன. இந்த நிற வேறுபாடு ஏன் எதற்கு என்பதற்கு அல்லாஹ் […]

{ 2 comments }

மறுமையில்!…..புதை குழி வெடித்து வெளியேறும் …..வெட்டுக்கிளி மனிதர்கள்.! – எஸ்.ஹலரத் அலி, திருச்சி-7 (+91-9965361068). அல்லாஹ்வின் படைப்பில் ஆரம்பமும் உண்டு அதன் இறுதி அழிவுமுண்டு. இது அவனது சுன்னா .இந்தமாபெரும் பிரபஞ்சத்தில் உள்ள சூரிய,சந்திர, நட்சத்திர, பூமி மற்றும் அதில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் ஒரு நாள் அழிக்கப்படும். மனிதனும் அழிக்கப்படுவான். ஆயினும் அவன் இப்பூமியில் செய்த நன்மை தீமைகளுக்கான பலனை அடைவதற்கான தீர்ப்புக் நாளுக்காக மீண்டும் இப்பூமியிருந்தே எழுப்பப்படுவான். இறந்து மண்ணோடு மண்ணாகிப் போன மனிதன் […]

{ 0 comments }

கொரோனோ வைரஸ்களும் கொடூர மரணங்களும்!……காரணம் என்ன? – எஸ்.ஹலரத் அலி- திருச்சி-7.(+91-9965361068). இந்த உலகில் வாழும் அனைவரும் ஆரோக்கியத்துடன் ஆனந்தமுடனும் வாழ்வதற்கு, மனிதர்களைப் படைத்த இறைவன் ஓர் அழகிய வாழ்க்கைத் திட்டத்தை அளித்துள்ளான். அதன் பெயர்தான் இஸ்லாம். இந்த வாழ்க்கை நெறியை கைக்கொள்பவர்களுக்கு இம்மையிலும் வெற்றி…மறுமையிலும் வெற்றி! இந்த உண்மையை நிராகரிப்பவர்களுக்கும் நடைமுறைப்படுத்த மறுப்பவர்களுக்கும், இரு உலகிலும் துன்பமே தொடர் கதையாகும் என்பதில் அறிவியல் ரீதியாக ஐயமே இல்லை. படைத்த இறைவனுக்குத்தான் தெரியும் தன் படைப்பினங்களுக்கு எந்தெந்த […]

{ 0 comments }

 விண்ணுக்குச் செல்லும் வீரர்களின் இதயம் சுருங்கும்! – குர்ஆன் கூறும் உண்மை!! (In Space, Astronaut Hearts Work Less, Shrink, And Become More Spherical) எஸ்.ஹலரத் அலி, திருச்சி-7. (Mob:9965361068). அல்லாஹ் எவர்களுக்கு நேர்வழிகாட்ட நாடுகிறானோ அவருடைய நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக விசாலமாக்குகின்றான்.யாரை வழிகெடுக்க நாடுகின்றானோ அவருடைய நெஞ்சை, வானத்தில் ஏறுபவனின் நெஞ்சைப்போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான். இவ்வாறே நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ் தண்டனை ஏற்படுத்துகிறான். – அல்குர்ஆன். 6:125. இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாத மனிதர்களின் […]

{ 0 comments }

நேரம் தவறாமை என்பது, எவரை நோக்கி நீங்கள் போகிறீர்களோ… அவருக்கு நீங்கள் கொடுக்கின்ற மரியாதை, அவர் மீது நீங்கள் வைத்திருக்கிற மதிப்பு. “அவன் கிடக்கான் குப்பை, பத்து நிமிஷம் லேட்டா போனா ஒண்ணும் குறைஞ்சு போயிட மாட்டான்” என்ற எண்ணம் உங்களுக்கு வருமேயானால் கிட்டத்தட்ட அதே எண்ணம் அவருக்கும் உங்கள் மீது இருக்கும். நேர தவறுதல் ஏன் ஏற்படுகிறது? அக்கறையின்மையால். எதன் மீது? எந்தக் காரியத்திற்காகப் போகிறோமோ அதன் மீது நமக்கு முழு ஈடுபாடு இல்லை. எட்டு […]

{ 0 comments }

மக்களை அழிவுப் பாதையில் இட்டுச் செல்வதில் கூத்தாடிகள் எந்த வகையிலும் சளைத்தவர்கள் அல்லர் ஊடகத்துறையினர். அவதூறுகளையும் பொய்ச் செய்திகளையும் பரப்பி பரபரப்பு ஏற்படுத்துவதில் மன்னர்கள்.அனைத்து வகை இதழ்களைத் திறந்தால் ஆபாசம், பெண்களின் அரை, முக்கால், முழு நிர்வாணம் காமத்தைத் தூண்டும் காட்சிகள். பெண்களை நிர்வாணமாகவும், ஆண்களை முழுமையாக உடல் மறைத்து ஆடை அணிபவர்களாகவும் காட்டும் மர்மம் என்ன? ஆண்கள் ஜட்டியோடு காட்சி அளித்தாலும் பரவாயில்லை. அதனால் ஆபாசம், காம உணர்வு ஏற்படப் போவதில்லை. அதற்கு மாறாக பெண்களின் […]

{ 5 comments }

உலகில் மனிதன் வாழ்வதற்கு பொருளாதாரம் மிகவும் அத்தியாவசியமானதாக இருக்கின்றது. அதனால் தான் பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்று கூறுகின்றனர். பொருளாதாரத்தின் அடிப்படையிலேயே மனிதர்களை உயர்வானவர், தாழ்வானவர் என்று மதிப்பீடு செய்யப்படுகிறது. ஒருவர் பொருளாதாரத்தை எவ்வாறு திரட்டினார், சரியான வழியிலா? தவறான வழியிலா? என்று பார்க்கப்படுவதில்லை. ஒருவரிடம் எவ்வளவு பொருளாதாரம் இருக்கிறது என்று மட்டுமே பார்க்கப்படுகிறது. பொருளாதாரத்தைப் பெற்று தனது குடும்பத்தைச் சேர்ந்த மனைவி, மக்கள் சுகபோகமாக வாழ பலர் பல வழிகளை நாடுகிறார்கள். நியாயமான முறையில் […]

{ 2 comments }

அரசு எவ்வழி, மக்கள் அவ்வழி! இது நமது முன்னோர்கள் கூறிய அமுதமொழி. ஆம்! ஆட்சியாளர்கள் நேர்மையாளர்களாகவும், நெறி தவறாமலும் நீதமான ஆட்சி நடத்தினால் நிச்சயமாக மக்களும் நேர்மையாளர்களாகவும், நெறி தவறாமலும் நீதமான வாழ்க்கை வாழும் நிலை ஏற்படும் என்பதில் சந்தேகம் உண்டா? அதற்கு மாறாக இன்றைய ஆட்சியாளர்கள் யார்? அவர்களின் உண்மையான நிலை என்ன? சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். ”அயோக்கியர்களின் கடைசிப் புகழிடம் இன்றைய அரசியல்” என்று ஓர் அறிஞன் கூறியது பல ஆண்டுகளுக்கு முன்னராகும். அப்படியானால் இன்றைய […]

{ 1 comment }

“அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் உங்களுக்காக(ப் படைத்து)த் தன் அதிகாரத்துக்குள் வைத்திருக்கிறான். (அவ்வாறே) விண்மீன்கள் யாவும் அவனுடைய சட்டளைக்குட்பட்டவையாகவே இருக்கின்றன. உறுதியாக இதிலும் உய்த்துணரும் மக்களுக்குப் பல நற்சான்றுகள் இருக்கின்றன” (16:12) “அவன் தான் நீங்கள் மீன்களை(ப் பிடித்துச் சமைத்து)ப் புசிக்கவும், நீங்கள் அணிகலனாக அணியக்கூடிய பொருள்களை எடுத்துக் கொள்ளவும், கடலை(உங்களுக்கு) வசதியாக்கித்தந்தான். (பல இடங்களுக்கும் சென்று வணிகத்தின் மூலம்) இறைவனின் அருளை நீங்கள் தேடிக் கொள்ளும் பொருட்டு, (கடலில் பயணம் மேற்க்கொள்ளும் போது) கப்பல் […]

{ 0 comments }

இஸ்லாம் ஹலாலான உழைப்பை வலியுறுத்துகின்றது. இறைவன் தனது அருள்மறையில், (ஜுமுஆ) தொழுகை முடிந்தவுடன் பூமியில் பரவிச் சென்று இறையருளைத் தேடுங்கள். (63:10) என்று கூறுகின்றான். தனது கையால் உழைத்துச் சாப்பிடுகின்றவனைவிட சிறந்த   உணவை வேறு யாரும் சாப்பிட முடியாது. இறைவனின் நபியாகிய தாவூத் (அலை) அவர்கள் தமது   கையால் உழைத்து அதிலிருந்து சாப்பிட்டார்கள் என நபியவர்கள் கூறினார்கள்.(புகாரீ) உழைத்து உண்ணும் உணவே நீங்கள் சாப்பிடுகின்ற உணவில்   மிகச் சிறந்ததாகும் என்றும் நபியவர்கள் கூறினார்கள். […]

{ 0 comments }