Holy Quran surah 75 سُورَة الْقِيَامَه

75) Sūrat Al-Qiyāmah

بسم الله الرحمن الرحيم

75) سُورَة الْقِيَامَه

75-1 கியாம நாளின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.

لاَ أُقْسِمُ بِيَوْمِ الْقِيَامَةِ

75-2 நிந்தித்துக் கொண்டிருக்கும் ஆன்மாவின் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன்.

وَلاَ أُقْسِمُ بِالنَّفْسِ اللَّوَّامَةِ

75-3 (மரித்து உக்கிப்போன) மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா?

أَيَحْسَبُ الإِنسَانُ أَلَّنْ نَجْمَعَ عِظَامَهُ

75-4 அன்று, அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம்.

بَلَى قَادِرِينَ عَلَى أَنْ نُسَوِّيَ بَنَانَهُ

75-5 எனினும் மனிதன் தன் எதிரே வர விருப்பதை (கியாம நாள்) பொய்ப்பிக்கவே நாடுகிறான்.

بَلْ يُرِيدُ الإِنسَانُ لِيَفْجُرَ أَمَامَهُ

75-6 "கியாம நாள் எப்போழுது வரும்?" என்று (ஏளனமாகக்) கேட்கிறான்.

يَسْأَلُ أَيَّانَ يَوْمُ الْقِيَامَةِ

75-7 ஆகவே, பார்வையும் மழுங்கி-

فَإِذَا بَرِقَ الْبَصَرُ

75-8 சந்திரன் ஒளியும் மங்கி-

وَخَسَفَ الْقَمَرُ

75-9 சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்பட்டுவிடும் .

وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُ

75-10 அந்நாளில் "(தப்பித்துக் கௌ;ள) எங்கு விரண்டோடுவது?" என்று மனிதன் கேட்பான்.

يَقُولُ الإِنسَانُ يَوْمَئِذٍ أَيْنَ الْمَفَرُّ

75-11 "இல்லை, இல்லை! தப்ப இடமேயில்லை!" (என்று கூறப்படும்).

كَلاَّ لاَ وَزَرَ

75-12 அந்நாளில் உம் இறைவனிடம் தான் தங்குமிடம் உண்டு.

إِلَى رَبِّكَ يَوْمَئِذ ٍ الْمُسْتَقَرُّ

75-13 அந்நாளில், மனிதன் முற்படுத்தி (அனுப்பி)யதையும், (உலகில்) பின் விட்டு வைத்ததையும் பற்றி அறிவிக்கப்படுவான்.

يُنَبَّأُ الإِنسَانُ يَوْمَئِذ ٍ بِمَا قَدَّمَ وَأَخَّرَ

75-14 எனினும் மனிதன் தனக்கு எதிராகவே சாட்சி கூறுபவனாக இருக்கிறான்.

بَلِ الإِنسَانُ عَلَى نَفْسِه ِِ بَصِيرَة ٌ

75-15 அவன் தன்(பிழைகளை மறைக்க) புகல்களை எடுத்துப் போட்ட போதிலும்!

وَلَوْ أَلْقَى مَعَاذِيرَهُ

75-16 (நபியே!) அவசரப்பட்டு அதற்காக (குர்ஆனை ஓதவதற்காக) உம் நாவை அசைக்காதீர்கள்.

لاَ تُحَرِّكْ بِه ِِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ

75-17 நிச்சயமாக அதனை (குர்ஆனை) ஒன்று சேர்ப்பதும், (நீர்) அதை ஓதும்படிச் செய்வதும் நம் மீதே உள்ளன.

إِنَّ عَلَيْنَا جَمْعَه ُُ وَقُرْآنَهُ

75-18 எனவே (ஜிப்ரயீலின் வாயிலாக), அதனை நாம் ஓதி விட்டோமாயின், அப்பால், அதன் ஓதுதலை பின் தொடர்ந்து (ஓதிக்) கொள்ளுங்கள்.

فَإِذَا قَرَأْنَاه ُُ فَاتَّبِعْ قُرْآنَهُ

75-19 பின்னர், அதனை விளக்குவது நிச்சயமாக நம்மீதே உள்ளது.

ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُ

75-20 எனினும் (மனிதர்களே!) நிச்சயமாக நீங்கள் அவசரப்படுவதையே பிரியப்படுகிறீர்கள்.

كَلاَّ بَلْ تُحِبُّونَ الْعَاجِلَةَ

75-21 ஆகவேதான் (இம்மையைப் பற்றிக் கொண்டு) மறுமையை விட்டு விடுகிறீர்கள்.

وَتَذَرُونَ الآخِرَةَ

75-22 அந்நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியால்) செழுமையாக இருக்கும்.

وُجُوه ٌ ٌ يَوْمَئِذ ٍ نَاضِرَة ٌ

75-23 தம்முடைய இறைவனளவில் நோக்கிய வையாக இருக்கும்.

إِلَى رَبِّهَا نَاظِرَة ٌ

75-24 ஆனால், அந்நாளில் வேறு சில முகங்களோ (துக்கத்தால்) சுண்டியிருக்கும்.

وَوُجُوه ٌ ٌ يَوْمَئِذ ٍ بَاسِرَة ٌ

75-25 இடுப்பை ஒடிக்கும் ஒரு பேராபத்து தம்மீது ஏற்படப் போவதாக அவை உறுதி கொண்டிருக்கும்.

تَظُنُّ أَنْ يُفْعَلَ بِهَا فَاقِرَة ٌ

75-26 அவ்வாறல்ல! (மரண வேளையில் அவன் உயிர்) தொண்டைக்குழியை அடைந்து விட்டால்,

كَلاَّ إِذَا بَلَغَتِ التَّرَاقِي

75-27 "மந்திரிப்பவன் யார்?" எனக் கேட்கப்படுகிறது.

وَقِيلَ مَنْ رَاق ٍ

75-28 ஆனால், அவனோ நிச்சயமாக அதுதான் தன் பிரிவு (காலம்) என்பதை உறுதி கொள்கிறான்.

وَظَنَّ أَنَّهُ الْفِرَاقُ

75-29 இன்னும் கெண்டைக்கால் கெண்டைக்காலுடன் பின்னிக் கொள்ளும்.

وَالْتَفَّتِ السَّاقُ بِالسَّاقِ

75-30 உம் இறைவன் பால் அந்நாளில் தான் இழுத்துச் செல்லப்படுதல் இருக்கிறது.

إِلَى رَبِّكَ يَوْمَئِذ ٍ الْمَسَاقُ

75-31 ஆனால் (அம்மனிதனோ சன்மார்க்கத்தின் மீது) உறுதிகொள்ளவுமில்லை, அவன் தொழவுமில்லை.

فَلاَ صَدَّقَ وَلاَ صَلَّى

75-32 ஆகவே, அவன் பொய்ப்பித்து முகம் திருப்பியுங் கொண்டான்.

وَلَكِنْ كَذَّبَ وَتَوَلَّى

75-33 பின்னர், அவன் தன் குடும்பத்தாரிடம் - மமதையோடு சென்று விட்டான்.

ثُمَّ ذَهَبَ إِلَى أَهْلِه ِِ يَتَمَطَّى

75-34 கேடு உனக்கே! (மனிதனே! உனக்குக்) கேடுதான்!

أَوْلَى لَكَ فَأَوْلَى

75-35 பின்னரும், உனக்கே கேடு! அப்பாலும் கேடுதான்.

ثُمَّ أَوْلَى لَكَ فَأَوْلَى

75-36 வெறுமனே விட்டுவிடப் படுவான் என்று மனிதன் எண்ணிக் கொள்கிறானா?

أَيَحْسَبُ الإِنسَانُ أَنْ يُتْرَكَ سُدى ً

75-37 (கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டுச் சொட்டாய் ஊற்றப்படும் இந்திரியத்துளியாக அவன் இருக்கவில்லையா?

أَلَمْ يَكُ نُطْفَة ً مِنْ مَنِيّ ٍ يُمْنَى

75-38 பின்னர் அவன் 'அலக்' என்ற நிலையில் இருந்தான், அப்பால் (இறைவன் அவனைப்) படைத்து செவ்வையாக்கினான்.

ثُمَّ كَانَ عَلَقَة ً فَخَلَقَ فَسَوَّى

75-39 பின்னர் அதிலிருந்து ஆண், பெண் என்ற இரு ஜோடியை அவன் உண்டாக்கினான்.

فَجَعَلَ مِنْهُ الزَّوْجَيْنِ الذَّكَرَ وَالأُنثَى

75-40 (இவ்வாறு படைக்கும்) அவன் மரித்தோரை உயிர்ப்பிக்கும் ஆற்றல் உடையவன் அல்லவா?

أَلَيْسَ ذَلِكَ بِقَادِرٍ عَلَى أَنْ يُحْيِيَ الْمَوْتَى