ரமழான் மாதத்தில் மகத்துவமிக்க ஓர் இரவு உள்ளது. அந்த ஒரு இரவு ஆயிரம் மாதங்களைவிட சிறப்பானதாக அமைந்துள்ளது.
இந்தத் திருக்குர்ஆனை மகத்துவ மிக்க ஓர் இரவில் நாம் அருளியுள்ளோம். மகத்துவமிக்க இரவைப்பற்றி உமக்குத் தெரியுமா அந்த மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களைவிட சிறந்ததாகும். (அல்குர்ஆன் 97:1-3)
இந்த மகத்துவமிக்க இரவு இதுதான் என்று வரையறுத்து குர்ஆனிலோ ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலோ கூறப்படவில்லை. ஆனாலும் ரமழான் மாதத்தின் கடைசிப் பத்து நாட்களில் ஒற்றைப்படை இரவுகளில் அந்த இரவு அமைந்திருக்கலாம் என்பது தான் ஹதீஸ்களிலிருந்து பெறப்படும் உண்மையாகும்.
லைலத்துல் கத்ர் இரவை ரமழானின் கடைசி பத்து நாட்களில் ஒற்றை இரவுகளில் நீங்கள் தேடுங்கள் எபது நபி (ஸல்)மொழி. அறிவிப்பவர் ஆயிஷா
(ரலி) நூல்: புகாரிநபி (ஸல்)
அவர்கள் மக்களிடம் வந்தார்கள். அப்போது அவர்கள் மக்களிடம் வந்தார்கள். அப்போது இரண்டு மனிதர்கள் வழக்காடிக் கொண்டிருந்தனர். அவ்விருவருடன் ஷைத்தான் இருந்தான். எனவே அதை நான் மறந்துவிட்டேன். எனவே அதை கடைசி பத்து நாட்களில் தேடுங்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி) முஸ்லிம், அஹ்மத்குறிப்பிட்ட இரவு லைலத்துல் கத்ர் இரவு என்று சில ஹதீஸ்கள் வந்திருந்தாலும் கடைசிப் பத்து நாட்களில் ஏதேனும் ஒரு இரவாக இருக்கும் சாத்தியம் உள்ளது என்று இந்த ஹதீஸ்கள் கூறுவதால் இந்தப் பத்து நாட்களும் முயற்சிப்பதே சிறப்பானதாகும்.
லைலத்துல் கத்ரின் அமல்கள்
லைலத்துல் கத்ர் இரவுக்கென்று விசேஷமான தொழுகையோ பிரத்தியேகமான வணக்கமோ ஹதீஸ்களில் காணப்படவில்லை. ஆயினும் கடைசி பத்து நாட்களும் பள்ளிவாசலிலேயே தங்கியிருக்கும் இஃதிகாப் எனும் வணக்கத்தை நபி (ஸல்)யவர்கள் செய்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் ரமழானின் கடைசிப் பத்து நாட்களில் அவர்கள் மரணிக்கும் வரை இஃதிகாப் இருந்தார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்
நபி (ஸல்) அவர்கள் இஃதிகாப் இருக்க நாடினால் சுப்ஹு தொழுதுவிட்டு தமது இஃதிகாப் இருக்குமிடம் சென்றுவிடுவார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ, திர்மிதி, இப்னுமாஜ்ஜா
ரமழானில் கடைசி பத்து நாட்களில் இஃதிகாப் இருக்க அவர்கள் நாடியபோது அதற்கென கூடாரம் அமைக்க உத்தரவிட்டார்கள். அவ்வாறே அமைக்கப்பட்டது. இது முந்தைய ஹதீஸின் தொடராகும்.
பள்ளிவாசலில் இஃதிகாப் இருப்பதற்காக ஒரு கூடாரம் அமைத்துக்கொள்ளலாம் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது. ஆயினும் இது பொதுவான் அனுமதியல்ல. அல்லாஹ்வின் தூதருக்கு மட்டுமே உரியதாகத்தான் எடுத்துக்கொள்ளவேண்டும். இதை இந்த ஹதீஸின் அடுத்த பகுதி விளக்குகின்றது.
உடனே ஸைனப்
(ரலி) அவர்கள் ஒரு கூடாரம் அமைக்க உத்தரவிட்டார்கள். அது அமைக்கப்படது. நபி (ஸல்) அவர்களின் மனைவியரில் மற்றும் சிலரும் அவ்வாறு உத்தரவிட்டனர். அவ்வாறே அமைக்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் பஜ்ரு தொழுதுவிட்டு பார்த்தபோது பல கூடாரங்கள் போடப்பட்டிருப்பதைக் கண்டார்கள். அப்போது அவர்கள், "இவர்கள் நன்மையைத்தான் நாடுகிறார்களா" என்று கேட்டுவிட்டு தமது கூடாரத்தை பிரிக்குமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே பிரிக்கப்பட்டது. ரமழான் மாதம் இஃதிகாப் இருப்பதை விட்டுவிட்டு ஷவ்வாலின் கடசிப் பத்து நாட்களில் இஃதிகாப் இருந்தார்கள். இதுவும் இந்த ஹதீஸின் தொடராகும்.இவர்கள் நன்மையைத்தான் நாடுகிறார்களா என்ற கேள்வியும் நபி (ஸல்)
அவர்கள் தமது கூடாரத்தையே பிரித்து இஃதிகாபை விட்டதும் இவ்வாறு கூடாரங்கள் அமைப்பதில் அவர்களுக்கு இருந்த அதிருப்தியைக் காட்டுகிறது.நபி (ஸல்) அவர்கள் இஃதிகாப் இருக்கும்போது மனிதனின் அவசியத் தேவைக்காக (மலஜலம் கழித்தல்) தவிர வீட்டிற்குச் செல்லமாட்டார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்
நபி (ஸல்) அவர்கள் பள்ளியில் இஃதிகாப் இருக்கும்போது நான் வீட்டில் மாதவிடாயாக இருந்துக்கொண்டே அவர்களது தலையை வாரிவிடுவேன். அவர்கள் தமது தலையை (மட்டும்) வீட்டுக்குள் நீட்டுவார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)நூற்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்
நபி (ஸல்) அவர்கள் இஃதிகாப் இருந்தார்கள். இரவில் அவர்களைச் சந்திக்க நான் சென்றேன். அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். பின்னர் நான் புறப்படுவதற்காக எழுந்தேன். என்னை வீட்டில் விடுவதற்காக அவர்களும் எழுந்தார்கள். அறிவிப்பவர்: சபிய்யா (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்
மனைவி பள்ளிக்கு வந்து இஃதிகாப் இருக்கும் கணவருடன் பேசலாம் என்பதை இதிலிருந்து அறியலாம். அவர்களின் பள்ளிவாசலுக்குள் புகுந்து செல்லும் விதமாக பள்ளியை ஒட்டி அமைந்திருந்தது. பள்ளியை விட்டு வெளியே சென்று வீட்டில் விட்டு வந்தார்கள் என்று அர்த்தம் செய்துகொள்ளக்கூடாது.
இஃதிகாப் இருப்பவர் நோயாளியை விசாரிக்காமலிருப்பதும், ஜனாசாவில் பங்கெடுக்காமலிருப்பதும், மனைவியைத் தீண்டாமலும், அணைக்காமலிருப்பதும், அவசியத்தேவையை முன்னிட்டே தவிர வெளியே செல்லாமலிருப்பதும் நபி (ஸல்)வழியாகும். அறிவிப்பவர்: ஆயிஷா
(ரலி) நூல் அபூதாவூத்இவற்றையெல்லாம் பேணி இஃதிகாப் இருக்கவேண்டும்.