அறிமுகம்
அன்பிற்குரிய சகோதரர்களே!
இஸ்லாமிய மார்க்கமாக
இருந்தாலும் அல்லது ஏனைய மதங்கள், கட்சிகள், சங்கங்கள்,
இயக்கங்கள் எதுவாக இருந்தாலும் அவற்றின் கொள்கைகளை, அவற்றைச் சார்ந்த மக்களின் நடவடிக்கைகளை வைத்தே அவற்றைச்
சாராதோர் புரிந்து கொள்ள முனைகின்றனர்.
முஸ்லிம் அல்லாத சகோதரர்கள் திருகுர்ஆனைப் படித்து
இஸ்லாத்தை அறிந்து கொள்வதற்குரிய
வாய்ப்பு, வசதிகள்
இல்லாமையினால் நடவடிக்கைகள், அவர்களது பண்பாடுகள், பழக்க வழக்கங்கள் போன்றவற்றைக் கவனித்து,
இதுதான் இஸ்லாம் எனப் புரிந்துக்கொள்கின்றனர். நம் மத்தியில் காணப்படும் இஸ்லாம் இம்முறையில் தவறாகப் புரிந்து
கொள்ளப்பட்டுள்ளது
இஸ்லாம் என்பது முஸ்லிம்கள் தங்களது வேதநூல் என நம்பக்கூடிய புனித அல்குர்ஆனில் கூறப்பட்ட வைகளும்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த குர்ஆனுக்கு என்ன விளக்கமளித்து, எப்படி வாழ்ந்து காட்டி, எவ்வாறு வாழ வேண்டுமென
எங்களுக்குக் கட்டளை
இட்டார்களோ அவைகளுமாகும். இன்றைய உலகில் முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள்
திருக்குர்ஆனுடைய கட்டளைகளை மீறி, நடப்பதோடு, நபிகள் (ஸல்)அவர்களது போதனைகளுக்கு முரணாகத் தங்களது
வாழ்வை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட முஸ்லிம்களைப் பார்த்து
இஸ்லாத்தை புரிந்து கொள்கின்ற மாற்றுமத சகோதரர்களுக்கு,
புனித அல்குர்ஆன் இஸ்லாத்தைப் பற்றிச் சொல்லும் கருத்துக்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தந்த விளக்கங்களையும்
எடுத்துச் சொல்லி அவற்றைத் தெளிவுபடுத்துவதற்காக இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இப்போது நான் கூறப்போவது
இஸ்லாத்தைப் பற்றிய ஒரு சுருக்கமான அறிமுக உரையே! அதன் பின்னர்
உங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்கின்றபோது சற்று விளக்கமாகவும் தெளிவாகவும் அதை விவரிப்போம்.
இதன் தொடர்ச்சி....
இந்த முழு உலகத்திற்கும் ஒரே ஒரு
இறைவன்
(கடவுள்) மட்டும்தான் இருக்கிறான் என நம்பிக்கைக் கொள்வது