|
|
|
|
முஸ்லிம் தனது அண்டை வீட்டாருடன்
அண்டை வீட்டாருடன் மிக அழகிய முறையில் நடந்து கொள்வார்
மார்க்க நெறிகளைப் பேணி வரும் உண்மை முஸ்லிம், தனது அண்டை வீட்டாருடன் அழகிய முறையில் உறவைப் பேணி அதிகமான உபகாரங்களையும் செய்து வருவார். உபகாரம் செய்வதில் இஸ்லாமிய வழிமுறையைப் பேணுவார் முஸ்லிம் அண்டை வீட்டாருடன் சிறப்பான உறவைக் கொண்டிருக்க வேண்டுமென இஸ்லாம் வலியுறுத்துகிறது. இஸ்லாமுக்கு முந்திய எந்தவொரு மதமும் இஸ்லாமிய வருகைக்குப் பின் உருவான எந்தவொரு அமைப்பும், சித்தாந்தமும் அறிந்திராத உன்னதமான வழியில் மனித உறவுகளைச் சீரமைப்பதில் இஸ்லாம் மட்டுமே தனித்து நிற்கிறது. அண்டை வீட்டாருடன் நடந்து கொள்ளும் முறையைப் பற்றி அருள்மறை பின்வருமாறு கூறுகிறது:அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனுக்கு யாதொன்றையும் இணையாக்காதீர்கள். தாய், தந்தைக்கு நன்றி செய்யுங்கள். (அவ்வாறே) உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அந்நிய அண்டை வீட்டாருக்கும், (எப்பொழுதும்) உங்களுடன் இருக்கக் கூடிய சிநேகிதர்களுக்கும், பிரயாணிகளுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் (அன்புடன்) நன்றி செய்யுங்கள். எவன் கர்வம் கொண்டு பெருமையாக நடக்கின்றானோ அவனை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை. (அல்குர்அன் 4:36)
விளக்கம்:
"அண்டை வீட்டிலுள்ள உறவினர்' என்பது முஸ்லிமான அண்டை வீட்டார் அல்லது உறவினரான அண்டை வீட்டாரைக் குறிக்கும். "அந்நிய அண்டை வீட்டார்' என்பது முஸ்லிமல்லாத அல்லது உறவினரல்லாத அண்டை வீட்டுக்காரரைக் குறிக்கும். "உங்களுடன் இருக்கும் சிநேகிதர்களுக்கு' என்பது நன்மையான விஷயங்களில் ஒன்றிணைந்திருக்கும் நண்பர்களைக் குறிக்கும்.
தனது இல்லத்திற்கு அருகில் இருப்பவருக்கு அண்டை வீட்டார் என்ற உரிமை உண்டு. அவர் உறவினராகவோ, முஸ்லிமாகவோ இல்லையென்றாலும் சரியே. அண்டை வீட்டாருக்கான இந்த கெªரவம் மனித நேயமிக்க இஸ்லாமின் அடிப்படையாகும்.நபி (ஸல்) அவர்கள் இரத்த பந்தம் உள்ளதா, எந்த மார்க்கத்தைச் சேர்ந்தவர் என்றெல்லாம் பிரித்துப் பார்க்காமல் பொதுப்படையாக அண்டை வீட்டாரைப் பற்றி உபதேசித்துள்ளார்கள்.நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வாரிசுரிமையைக் கடமையாக்கி விடுவாரோ என்று நான் எண்ணுமளவு அண்டை வீட்டாரைப் பற்றி ஜிப்ரீல் (அலை) அவர்கள் எனக்கு உபதேசித்துக்கொண்டே இருந்தார்கள்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
இவ்வாறு உயர்ந்த அந்தஸ்தை வழங்கி ஜிப்ரீல் (அலை) அவர்களின் நாவின் வழியாக அண்டை வீட்டாரை இஸ்லாம் கண்ணியப் படுத்தியுள்ளது. ஜிப்ரீல் (அலை) அவர்கள் இந்த விஷயத்தைத் தொடர்ந்து நபி (ஸல்) அவர்களுக்கு வலியுறுத்தி வந்ததால் நபி (ஸல்) அவர்கள், ஜிப்ரீல் (அலை) அவர்கள் அண்டை வீட்டாரை "சொத்தில் வாரிசாவார்' என நிர்ணயித்து விடுவாரோ என்று எண்ணினார்கள்.
முஸ்லிம்களுக்கு மிக அவசியமான விஷயங்கள் குறித்து உரையாற்றிய இறுதி ஹஜ்ஜுப் பேருரையின்போதும் அண்டை வீட்டாரின் உரிமைகளைப் பற்றி எடுத்துரைத்தார்கள். அபூ உமாமா (ரழி) கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜத்துல் விதாவில் தங்களது ஒட்டகையின் மீது அமர்ந்திருந்து கூறியதை நான் கேட்டேன். அப்போது "அண்டை வீட்டாரைப் பற்றி உங்களுக்கு நான் உபதேசிக்கிறேன்'' எனப் பலமுறை கூறினார்கள். அப்போது நான் அண்டை வீட்டாரை "வாரிசாக ஆக்கிவிடுவார்களோ' என எண்ணினேன். அண்டை வீட்டாருக்கு உபகாரம் செய்வதும் அவர்களுக்கு இடையூறு செய்யாமலிருப்பதும் அல்லாஹவையும் மறுமை நாளையும் ஈமான் கொண்டதற்கான அடையாளமாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "எவர் அல்லாஹவையும் மறுமை நாளையும் ஈமான் கொண்டாரோ அவர் அண்டை வீட்டாருடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ளட்டும். எவர் அல்லாஹவையும் மறுமை நாளையும் ஈமான் கொண்டாரோ அவர் விருந்தினரை கண்ணியப்படுத்தட்டும். எவர் அல்லாஹவையும் மறுமை நாளையும் ஈமான் கொண்டாரோ அவர் பேசினால் நல்லது பேசட்டும் அல்லது மெªனம் காக்கட்டும்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
புகாரி (ரஹ) அவர்களின் மற்றோர் அறிவிப்பில் வருவதாவது, நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "எவர் அல்லாஹவையும் அவனது தூதரையும் ஈமான் கொண்டாரோ அவர் அண்டை வீட்டாருக்கு நோவினையளிக்க வேண்டாம்.''
அண்டை வீட்டாருடன் பெருந்தன்மையாக நடப்பார்
இம்மகத்தான மார்க்கத்தின் பிரகாசத்தை தனது இயத்தில் எந்திக் கொண்டிருக்கும் உண்மை முஸ்லிம், தனது அண்டை வீட்டாருடன் பெருந்தன்மையுடனும் நல்லுறவுடனும் நடந்து கொள்ள வேண்டும், அவருக்கு எதேனும் தேவைப்பட்டால் அதைக் கொடுக்க வேண்டும் என்பது நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலாகும்.நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ""ஒருவர் தனது அண்டை வீட்டார் தனது வீட்டின் சுவரில் கட்டை ஒன்றை ஊன்றுவதைத் தடை செய்யவேண்டாம்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
தனக்கு விரும்புவதையே அண்டை வீட்டாருக்கும் விரும்புவார்
உண்மை முஸ்லிம் தனது அறிவுக் கண்ணை நன்கு திறந்து வைத்திருப்பார். மேலான மார்க்கத்தின் நேர்வழியைப் பெற்றவராகவும், மென்மையான உள்ளமும், மலர்ந்த சிந்தனையும் உடையவராகத் திகழ்வார். தனது அண்டை வீட்டாரின் உணர்வுகளைப் புரிந்து அவரது மகிழ்ச்சியில் தானும் மகிழ்ந்து அவரது துன்பம் கண்டு வேதனையும் அடைவார்.நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "தனக்கு விரும்புவதையே தனது சகோதரருக்கும் விரும்பாதவரை உங்களில் எவரும் ஈமான் கொண்டவராக மாட்டார்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
இமாம் முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில், நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "என் ஆன்மாவை தன் கைவசம் வைத்திருப்பவனின் மீது ஆணையாக! எந்தவொரு அடியானும் தனக்கு விரும்புவதையே தனது அண்டை வீட்டாருக்கு விரும்பாதவரை ஈமான் கொண்டவராக மாட்டார்.'' (அல்லது நபி (ஸல்) அவர்கள் "சகோதரருக்கு' என்று கூறினார்கள்).
உண்மை முஸ்லிம் தனது வீட்டின் சமையலறையிலிருந்து உணவின் மணம் வெளியேறும்போதெல்லாம் சிரமத்திலும் வறுமையிலும் வாடிக்கொண்டிருக்கும் தனது அண்டை வீட்டாரை நினைவில் கொள்வார். அந்த வாசனை தமது அண்டை வீட்டாரை வேதனைப்படுத்தி அவர்களுக்கு அந்த உணவைச் சாப்பிட ஆவலைத் தூண்டும். ஆனால் சமைக்க வசதியற்றவர்களாக இருப்பார்கள். அவர்களில் சிறுவர்களும், அநாதைகளும், வறியவர்களும், முதியவர்களும் இருப்பார்கள் என்பதையும் முஸ்லிம் கவனத்தில் கொள்வார். இது பற்றி முஸ்லிம்களின் இதயத்தில் நபி (ஸல்) அவர்கள் விதைத்த சமூக உணர்வு கொண்ட நற்பண்பு இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் வெளிப்படும்.
நபி (ஸல்) அவர்கள் அபூதர் (ரழி) அவர்களிடம் கூறினார்கள்: "அபூதர்ரே! நீர் ஆணம் சமைத்தால் அதில் கொஞ்சம் தண்ணீரை அதிகப்படுத்திக் கொள்ளும். உமது அண்டை வீட்டாரையும் விசாரித்துக் கொள்ளும்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)மற்றோர் அறிவிப்பில், "நீர் ஆணம் சமைத்தால் அதில் தண்ணீரை அதிகப்படுத்திக் கொண்டு பிறகு உமது அண்டை வீட்டாரை கவனித்து நல்லவிதமாக அவர்களுக்கும் சிறிது கொடுங்கள்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)
தனது அண்டை வீட்டார் வறுமையிலும் சிரமத்திலும் இருக்கும் நிலையில் தான் மட்டும் வளமையும், வசதியுமாக ஆடம்பரத்துடன் இருப்பதை உண்மை முஸ்லிமின் மனசாட்சி ஒப்புக் கொள்ளாது. எப்படி ஒப்புக் கொள்ளும்? அவரது அடிமனதில் அண்டை வீட்டாருடன் இனிய நேசத்தையல்லவா இஸ்லாம் எற்படுத்தியுள்ளது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "தனது அண்டை வீட்டார் பசித்திருக்க தான் மட்டும் வயிறு நிரம்ப உண்பவர் முஃமினாக (இறை விசுவாசியாக) மாட்டார்.'' (முஸ்னத் அபூ யஃலா)
மேலும் கூறினார்கள்: "தனது அண்டை வீட்டார் பசித்திருப்பது தெரிந்தும் தான் மட்டும் வயிறு நிரம்ப உண்டு இரவு கழிப்பவர் என்னை விசுவாசித்தவராக மாட்டார்.'' (முஸ்னத் அல் பஸ்ஸப்ர்)
நற்பண்புள்ள முஸ்லிம் மறைந்ததால் மனித நேயத்திற்கு எற்பட்ட பாதிப்பு
இக்காலத்தில் மனித சமூகத்தில் அவலங்களும் அலங்கோலங்களும் சூழ்ந்து நிற்கின்றன. இதற்கெல்லாம் வாழ்வின் சவால்களைச் சமாளிக்கும் ஆற்றல் பெற்ற உண்மை முஸ்லிம்கள் அந்தந்த இடங்களில் இல்லை என்பதுதான் காரணமாகும். பிற்போக்குத்தனமான சிந்தனைகளின் அணிவகுப்புக்குப் பின்னே நீதமான, மனித நேயமிக்க இஸ்லாமின் அடிப்படைக் கோட்பாடுகள் மறைக்கப்படுகின்றன. அந்தப் பிற்போக்குச் சிந்தனைகளால் மனித குலத்துக்குப் பசி, பஞ்சம், பட்டினி, வறுமைதான் பரிசாகக் கிடைக்கிறது. அதுவும் விண்வெளியில் ராக்கெட்டுகளும் செயற்கைக் கோள்களும் பறந்துகொண்டிருக்கும் இக்காலத்தில் இவ்வாறு நடைபெறுகின்றன.மனிதன், சந்திரனைத் தொட்டுவிட்ட இந்த யுகத்தில் 1975ம் அண்டு ஐக்கிய நாடுகள் சபையின் உலக விவசாயம் மற்றும் உணவுக் கழகம் வெளியிட்ட அறிக்கை; ஆசியா, ஆப்ரிக்கா கண்டத்தில் 2 கோடியிலிருந்து 10 கோடி மக்கள் வரை வரவிருக்கும் சில அண்டுகளில் பஞ்சத்தால் மரணமடையும் வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவிக்கிறது. இதே நிலை நீடித்தால் ஒவ்வொரு வாரமும் 30 லட்சம் பட்டினிச் சாவுகள் நிகழும் என்றும், அந்நாடுகளில் 46 கோடியிலிருந்து 100 கோடி மக்கள் வரை சத்துணவின்றி தவித்து வருவதாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
செய்தி நிறுவனங்கள் அதே ஆண்டு நடந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டன. உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட ஒரு ஆப்பிரிக்கப் பகுதிக்கு நர்ஸாக பணிபுரிய ஒர் ஐரோப்பிய இளம்பெண் சென்றாள். இறுதியாக அவள் மனநோயாளியாகி விட்டாள். அதற்குக் காரணம் அவள் அங்கு ஒர் இரத்தக் களரியைக் கண்டதுதான்.
அதன் விவரம்: பசியினால் பாதிக்கப்பட்ட சில ஆப்பிரிக்க சிறுவர்கள் தங்களது பசியைப் போக்கிக் கொள்வதற்காக ஒரு துண்டு மாம்பழத்தைப் பெற்று விட வேண்டுமென்ற வேட்கையில் கொடூரமான ஒர் இரத்தக் களரியை நடத்தினார்கள். அதன் விளைவாக அவர்களில் ஒரு சிறுவனின் கண் குருடாக்கப்பட்டது. அதன் பிறகுதான் சண்டை நின்றது. இதில் வருந்தத்தக்கது என்னவெனில் அந்தச் சிறுவர்களில் மிகப் பெரியவன் எட்டு வயதைத் தண்டாதவன் என்பதுதான். இந்தக் கொடூரப் பசியால் அச்சிறுவர்கள் உடல் பலவீனப்பட்டு உருக்குலைந்து போய்விடுகிறார்கள். நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து, மரணத்தின் பற்களிடையே சிக்கிக் கொள்கிறார்கள்.
ஆசியா மற்றும் ஆப்ரிக்க நாடுகள் பசியின் கோரத் தாக்குதலுக்கு இலக்காகி வரும் நிலையில், இற்கு மாறாக உலகின் மற்றொரு பகுதியும் உண்டு. அதுதான் மேற்கத்திய நாடுகள். உலகின் 20 சதவீத மக்கள் மட்டுமே வாழும் அந்நாடுகள் உலகின் மொத்த வளங்களில் 80 சதவீத வளங்களை அனுபவிக்கின்றன.1975ம் ஆண்டில் காபி (Coffee) விலை சர்வதேசச் சந்தையில் குறைந்துவிடக் கூடாது என்பதற்காக பிரேஸில் நாடு ஆயிரக்கணக்கான டன் காப்பிக் கொட்டைகளை எரித்து அழித்தது. ஐரோப்பிய வர்த்தக ஒன்றிய நாடுகள் தங்களது சந்தைகளில் உணவு தானிய விலை குறைந்து விடாமலிருப்பதற்காக தங்களது சந்தைத் தேவைகளுக்கு அதிகமான உணவுத் தானியங்களை அழிப்பதற்காக 5 கோடி டாலர்களைச் செலவழித்தன.
உணவு தானிய விலைகள் குறைந்துவிடாமலிருக்கும் நோக்கில் உணவு உற்பத்தியைக் குறைப்பதற்காக அமெரிக்கா வருடம் தோறும் 300 கோடி டாலர்களை செலவிட்டு வருகிறது. அமெரிக்க விவசாயிகள் சந்தையில் இறைச்சி விலை குறைந்துவிடக் கூடாது என்பதற்காக பல்லாயிரம் மாடுகளை, கன்றுகளைக் கொன்று பூமியில் புதைக்கின்றனர். அதே நேரத்தில் தென் அமெரிக்கா, ஆசியா, ஆப்ரிக்க நாடுகளில் இலட்சக்கணக்கான பட்டினிச்சாவுகள் நடந்து கொண்டிருக்கின்றன.
தனது வீட்டின் சமையலறையிலிருந்து வெளியேறும் வாசனையால் வசதியற்ற தனது அண்டை வீட்டாருக்கு இடையூறு எற்பட்டு விடக்கூடாது என்ற சிந்தனையைக் கொண்ட மனித நேயமிக்க இஸ்லாமியக் கலாச்சாரத்துக்கும், பல கோடி மக்களை பட்டினிச்சாவை நோக்கித் தள்ளிவிடும் பொருளியலுக்கு அடிமையான மேற்கத்திய கலாச்சாரத்திற்குமிடையேதான் எவ்வளவு பெரிய இடைவெளி!
கிழக்கத்திய நாடுகளானாலும் சரி, மேற்கத்திய நாடுகளானாலும் சரி, பொருளாதார அடிமைச் சிந்தனைகள் கொண்ட நாடுகளில் மனித நேயம் எவ்வளவு தூரம் இழிவாக்கப்படுகிறது. அறியாமை எவ்வளவு தூரம் கொடிகட்டிப் பறக்கிறது.
இஸ்லாமியப் பிரகாசத்தைச் சுமந்து நிற்கும் முஸ்லிம்களின் கடமையுணர்வு அபாரமானதாகும். அந்தப் பிரகாசத்தைக் கொண்டு மட்டுமே மடமை இருளை விரட்டியடிக்க முடியும், இதயங்களையும் சிந்தனைகளையும் பிரகாசிக்கச் செய்யமுடியும். மனிதகுலத்தை நேர்மையும், நிம்மதியும், இன்பமும் நிறைந்த மகிழ்ச்சிப் பாதையின்பால் அழைத்துச் செல்ல முடியும்.
இயன்றளவு அண்டை வீட்டாருக்கு உதவுவார்
நேரிய மார்க்கத்தால் வழிகாட்டப் பெற்ற முஸ்லிம் தன்னால் இயன்ற அளவு அண்டை வீட்டாருக்கு உதவியும் உபகாரமும் செய்வார். சிறிய அன்பளிப்பாக இருந்தாலும் அதை அற்பமாகக் கருதாமல் தனது அண்டை வீட்டாருக்குக் கொடுத்து உதவுவார். எனெனில் அதை அற்பமாகக் கருதி அண்டை வீட்டாருக்குக் கொடுத்து உதவவில்லையென்றால் தானும் நன்மையை இழந்து அண்டை வீட்டாரையும் இழக்க வைத்துவிடுகிறார். இதை நபி (ஸல்) அவர்கள் பெண்களுக்கும் உபதேசித்தார்கள். பெரும்பாலான பெண்கள் சிறியதாகக் கருதும் பொருட்களை அண்டை வீட்டாருக்குக் கொடுப்பதற்கு மிகவும் தயங்குகிறார்கள்.நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "முஸ்லிம் பெண்களே! அண்டை வீட்டாருக்குக் கொடுப்பதை அற்பமாகக் கருத வேண்டாம். அது ஆட்டின் குளம்பாக இருப்பினும் சரியே.'' (ஸஹீஹுல் புகாரி)
ஆட்டின் குளம்பு என்பது சிறிய, மதிப்பற்ற பொருள் என்பதைக் குறிக்கும். அதாவது "தன்னிடமிருப்பது மிகக் குறைவான மதிப்புடையதாயிற்றே, இதை எப்படி அண்டை வீட்டாருக்குக் கொடுப்பது?' என்று தயங்கி நிற்பதைத் தவிர்க்க வேண்டுமெனவும் அவ்வாறே "தனது அண்டை வீட்டார் கொடுத்தது அற்பமானது' என்று கருதாமல் மனமகிழ்வுடன் அதை ஏற்றுக் கொள்வது அவசியம் என்பதையும் நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தினார்கள். எனெனில் உயர்ந்த பொருளை மட்டுமே கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எதையும் கொடுக்காமல் இருப்பதைவிட சிறிதளவேனும் கொடுப்பது சிறந்ததல்லவா?
எவர் ஒர் அணுவளவு நன்மை செய்திருந்தாரோ அவர் (அங்கு) அதனையும் கண்டு கொள்வார். (அல்குர்அன் 99:7)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "பேரீத்தங்கனியின் ஒரு துண்டைக் கொண்டேனும் நரக நெருப்பிலிருந்து உங்களை காத்துக் கொள்ளுங்கள்.'' (ஸஹீஹுல் புகாரி)
இந்த நபிமொழி விரிவான பொருளைக் கொண்டுள்ளது. அதாவது தனக்கு அண்டை வீட்டிலிருந்து வரும் பொருளை அற்பமாகக் கருதக் கூடாது. அது ஆட்டின் குளம்பைப் போன்றதாக இருப்பினும் சரியே. மாறாக அந்தப் பொருளுக்காக அண்டை வீட்டாருக்கு நன்றி சொல்ல வேண்டும். அப்போதுதான் இரு குடும்பத்தாரிடையே நேசம் வளரும். ஒருவருக்கொருவர் கருணையை வெளிப்படுத்தி பாசத்தை பரிமாறிக் கொள்ள முடியும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "மனிதருக்கு நன்றி செலுத்தாதவர் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தியவராக மாட்டார்.'' (அல் அதபுல் முஃப்ரத்)