|
பிரயாணத்தின்போது


அல்லாஹ் மிகப்பெரியவன். இதை
வசப்படுத்தி தந்தவன் தூயவன். நாங்கள் இதன்மேல் சக்தி பெற்றவர்களாக இருக்கவில்லை.
மேலும் நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்பவர்கள். யா அல்லாஹ்! எங்களின்
பயணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும், நீ பொருந்திக் கொள்கின்ற நல்லறத்தையும்
உன்னிடம் வேண்டுகிறோம். யா அல்லாஹ்! எங்களின் இந்தப் பயணத்தை எங்களுக்கு எளிதாக்கு.
இதன் தொலைவை எங்களுக்கு குறைத்துவிடு. யா அல்லாஹ்! நீயே பயணத்தில் தோழனாக
இருக்கிறாய். எங்கள் குடும்பத்தை நீயே காக்கிறாய். யா அல்லாஹ்! இப்பயணத்தின்
சிரமத்திலிருந்தும் மோசமான தோற்றத்திலிருந்தும் செல்வத்திலும் குடும்பத்திலும் தீய
விளைவுகள் ஏற்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன். நூல்: முஸ்லிம்
2392

பிரயாணத்திலிருந்து
திரும்பும்போது

அல்லாஹ்! இதில்
நன்மையையும், எந்த நன்மைக்காக இது அனுப்பப்பட்டதோ அந்த நன்மையையும் உன்னிடம்
வேண்டுகிறேன். இதன் தீங்கை விட்டும், எந்தத் தீங்கைக் கொண்டு வருவதற்காக இது
அனுப்பப்பட்டதோ அந்தத் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நூல்:
முஸ்லிம் 1496

வெளியூரில் தங்கும்போது

முழுமையான
அல்லாஹ்வின் வார்த்தைகளைக் கொண்டு அவன் படைத்த அனைத்து தீங்கின் விட்டும் அவனிடமே
பாதுகாப்பு தேடுகிறேன். நூல்: முஸ்லிம்4881, 4882

மேட்டில் ஏறும்போது

அல்லாஹ்
மிகப்பெரியவன்

மேட்டிலிருந்து
இறங்கும்போது

அல்லாஹ்
பரிசுத்தமானவன்
|