|
மரணத்திற்கு நிகராண
துன்பத்தின்போது

யா அல்லாஹ்!
வாழ்வது எனக்கு நல்லதாக இருந்தால் என்னை வாழச் செய்! மரணம் எனக்கு நல்லதாக இருந்தால்
மரணிக்கச் செய்! நூல்: புகாரி 5671,6351

மரணத்தை அறிந்த நோயாளிக்கு

யா அல்லாஹ்!
எனக்கு நீ பாவம் பொருத்தருள்வாயாக! எனக்கு அருளும் செய்வாயாக! மிக்க உயர்ந்தோனாகிய
நன்பனுடன் என்னை நீ சேர்த்தும் வைப்பாயாக! நூல்கள்: புகாரி 7/10, முஸ்லிம் 4/1891


வணங்கப்படுபவன்
அல்லாஹ்வையன்றி (வேறு) இல்லை; நிச்சயமாக மரணத்திற்கு பல சங்கடங்கள் உண்டு. நூல்:
பத்ஹுடன் புகாரி


வணங்கப்படுபவன்
அல்லாஹ்வையன்றி (வேறு) இல்லை; அல்லாஹ்வே மிகப்பெரியவன்; வணங்கப்படுபவன்
அல்லாஹ்வையன்றி (வேறு) இல்லை; அவன் தனித்தவன்; வணங்கப்படுபவன் அல்லாஹ்வையன்றி (வேறு)
இல்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணை இல்லை; வணங்கப்படுபவன் அல்லாஹ்வையன்றி (வேறு)
இல்லை; ஆட்சி அவனுக்கே உரியது; புகழும் அவனுக்கே; வணங்கப்படுபவன் அல்லாஹ்வையன்றி (வேறு)
இல்லை; (பாவத்திலிருந்து திரும்புதலோ நன்மையைச் செய்ய) சக்தியோ அல்லாஹ்வை
கொண்டல்லாது இல்லை. திர்மிதீ, இப்னுமாஜா
|