|
காற்று வீசுகின்றபோது

யா அல்லாஹ்! நிச்சயமாக அ(க்
காற்றான)தன் நன்மையை உன்னிடம் நான் கேட்கிறேன்; அதன் தீமையிலிருந்தும் உன்னைக்கொண்டு
நான் காவல் தேடுகிறேன். நூல்கள்: அபூதாவூத் 4/326 இப்னுமாஜா 2/1228

இடி இடிக்கின்றபோது

அவன் தூயவன்
எத்தகையவென்றால் அவனின் புகழைக்கொண்டு இடி துதிக்கிறது. மற்றும் வானவர்கள் அவனின்
பயத்தால் துதிக்கின்றனர். நூல்: முஅத்தா 2/992

மழை வேண்டி கேட்பது

யா அல்லாஹ்! உதவியாக
இருக்கக்கூடிய செழிப்படையச் செய்யக்கூடிய, பச்சை பசுமையை ஏற்படுத்தக்கூடிய இடறு
செய்யாத பலன் தரக்கூடிய மழையாக தாமதமின்றி துரிதமாக எங்களுக்கு மழை பெய்யச்
செய்வாயாக!

யா அல்லாஹ்! எங்களுக்கு மழை
பொழியச் செய்வாயாக! யா அல்லாஹ்! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! யா அல்லாஹ்!
எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! நூல்கள்: புகாரி 1/224 முஸ்லிம் 2/613

யா அல்லாஹ்! உன்னுடைய அடியார்கள்
மற்றும் உன்னுடைய கால்நடைகளுக்கு தண்ணீர் புகட்டுவாயாக! உன்னுடைய அருளை பெருகச்
செய்வாயாக! அழிந்துவிட்ட உன்னுடைய ஊரை உயிர்பிக்கவும் செய்வாயாக! நூல்: அபூதாவூத்
1/305
|