உணவு உண்டபின்

الْحَمدُ للَّهِ الَّذِي اطْعَمَنِي هَذَا ، وَرَزَقَنِيهِ ، مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلا قُوَّةٍ

என்னிலிருந்து என் முயற்சியின்றி என் பலமின்றி எனக்கு உண்ணக்கொடுத்து அதை வழங்கவும் செய்தவனாகிய அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும் உரித்தாகுக. நூல்கள்: திர்மிதி, அபூதாவூத், இப்னுமாஜ்ஜா

Praise be to Allah who has given me this food, and sustained me with it, though I was unable to do it and powerless

உணவளித்தவருக்காக

اللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِيمَا رَزَقْتَهُمْ ، وَاغْفِرْ لَهُمْ وَارْحَمْهُم

யா அல்லாஹ்! அவர்களுக்கு நீ வழங்கியவற்றில் அவர்களுக்கு நீ பரகத் செய்வாயாக! அவர்களுக்கு நீ பாவங்களை மன்னிப்பாயாக! அவர்களுக்கு அருளும் செய்வாயாக! நூல்: முஸ்லிம் 3/1615

O Allah! Bless them in what You have provided for them, and forgive them and have Mercy on them

اللَّهُمَّ اطْعِمَّ مَنْ اطْعَمَنِي وَاسْقِِِ ِ مَنْ سَقَانِي

அல்லாஹ்! எனக்கு உணவளித்தவருக்கு நீ உணவளிப்பாயாக! எனக்கு பருகக் கொடுத்தவருக்கும் நீ பருகக் கொடுப்பாயாக! நூல்: முஸ்லிம் 3/126

O Allah! Feed him who fed me and give him drink who gave me to drink