மூடநம்பிக்கை

“மவ்லிது” மறுக்கப்படுவது கவிதை என்பதற்காக அல்ல” என்பதை இதுவரை நாம் கண்டோம். வேறு பல காரணங்களுக்காகவே மவ்லிது மறுக்கப்படுகின்றது. முதல் காரணம் இன்று தமிழக முஸ்லிம்கள் ஓதி வருகின்ற ‘மவ்லிது’ களில் இஸ்லாத்தின் அடிப்படைக்கு முரண்பட்ட பல கருத்துக்கள் அடங்கியுள்ளன. பொய்யான கதைகள் பல அவற்றில் மலிந்துள்ளன. இது மவ்லிது மறுக்கப்படுவதற்கான முதற்காரணம். இதை ஐயத்திற்கு இடமின்றி தெளிவாக நாம் அறிய வேண்டுமானால் இன்றைய மவ்லிதுகளில் உள்ள வரிகளுக்கு நேரடியான அர்த்தத்தை நாம் தெளிவுபடுத்த வேண்டும். பிறகு, […]

{ 4 comments }

கவிதைக்கு அனுமதியும், கவிஞர்களுக்கு அங்கீகாரமும் அல்லாஹ் தன் திருமறையில் கவிஞர்களைக் கண்டித்து விட்டு அதிலிருந்து சிலருக்கு விலக்கமளிக்கிறான். அந்தச் சிலர் கண்டனத்திற்கு உரியவர்கள் அல்லர் என்பதையும் தெளிவுபடுத்துகிறான். நாம் ஏற்கனவே எடுத்துக் காட்டிய வசனத்திற்கு அடுத்த வசனங்களில் பின்வருமாறு கூறுகிறான். “எவர் விசுவாசம் கொண்டு, நற்கருமங்களைச் செய்து, அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூர்ந்து, (பிறர் நிந்தனையால்) பாதிக்கப்பட்ட பின்னர் (தம் கவிதையால்) பழி வாங்கினார்களோ அவர்களைத் தவிர (மற்றவர்கள் மேற்கூறிய கண்டனத்திற்குரியவர்கள்) (அல்குர்ஆன் 26 :227) இந்தத் […]

{ 1 comment }

நமது முன்னோர்கள் “பெரிய, பெரிய மேதைகள் எல்லாம் செய்திருக்கிறார்களே” என்ற பதில் சரியானதன்று என்பதை நாம் தெரிந்து கொண்டோம். குறிப்பாக நம் தமிழகத்தைப் பொறுத்தவரை, முன்னர் வாழ்ந்த அறிஞர்கள் எனப்படுவோரில் பெரும்பாலோர் அறிஞர்களாக, குர்ஆன் ஹதீஸை அறிந்தவர்களாக இருந்திருக்கவில்லை. மாறாக அரபுத்தமிழ் படித்துவிட்டுத் தங்களை அறிஞர்கள் என்று காட்டிக் கொண்டனர். தெளிவான சிந்தனை அவர்களுக்கு இருந்திருக்கவில்லை. அதனால்தான் “ஆங்கிலம் படிப்பது ஹராம்” என்று ‘பத்வா’ வழங்கினார்கள். முழுக்கால்சட்டை (பேண்ட்) அணிவது கூடாது என்று கூறினர். நபி(ஸல்) அவர்கள் […]

{ 0 comments }

இன்றைக்கு மவ்லிது பற்றிய வாதப்பிரதிவாதங்கள் தமிழகத்தில் விறுவிறுப்படைந்தள்ளன. பல்லாண்டுகாலமாக தமிழகம், கேரளம், இலங்கையில் இரண்டாவது கருத்துக்கு இடமினிறி புனிதமான ஒரு வணக்கமாகக் கருதப்பட்டு வந்த “மவ்லிது” இன்று படாத பாடு படுகின்றது. மார்க்க அறிஞர்களில் ஒரு பிரிவினர், “மவ்லிது ஓதலாம்! ஓத வேண்டும்!” என்று ஒரு புறம் கூப்பாடு போடுகின்றனர். மார்க்க அறிஞர்களில் மற்றொரு பிரிவினர், “மவ்லிது ஓதக்கூடாது!” என்று எதிர் முழக்கம் செய்கின்றனர். இருதரப்பினமே தங்களின் கருத்துக்கு ஆதாரங்களை எடுத்துவைத்து, அதனை நியாயப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். […]

{ 2 comments }

மதகுருமார்கள் பற்றிய மூடநம்பிக்கை! உலகில் முஸ்லிம் மதம் உட்பட எத்தனை மதங்கள் காணப்படுகின்றனவோ, அத்தனை மதங்களின் மக்களும் கடவுளுக்கு அடுத்த நிலையில் இந்த மதகுருமார்களை மதித்து மரியாதைச் செலுத்துகிறார்கள். அவர்களின் தயவையும், ஆசியையும் கொண்டே அல்லாமல் கடவுளின் திருப்தியையும், அதன் மூலம் மோட்சத்தையும் அடையவே முடியாது என்ற உறுதியான மூட நம்பிக்கையில் மக்களில் மிகப் பெரும்பாலோர் இருக்கின்றனர். அனைவரும் ஒப்புக்கொள்ளும் ஒரே இறைவன்! இது கடைந்தெடுத்த மூட நம்பிக்கைதான் என்று சுய சிந்தனையாளர்கள் சொல்லி விடுவார்கள். கடவுள் […]

{ 1 comment }

அல்குர்ஆனும், ஸஹீஹான ஹதீஸ் தொகுப்புகளும் 1400ஆண்டுகளுக்கு மேலாக இறையருளால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஆயினும் அல்குர்ஆனின் மொழியாக்கமும், ஸஹீஹான ஹதீஸ்கள் தொகுப்பும் நமது முன்னோர்களுக்கு முழுமையாக கிடைத்தனவா என்றால் இல்லை. மாறாக இஸ்லாமிய நூல்கள் என்ற பெயரில் பல கட்டுக்கதைகள் நிரம்பிய நூல்களே உலா வந்து கொண்டிருக்கின்றன. அன்றிலிருந்து இன்று வரை அவற்றில் சில:     1.ஜெய்தூன் கிஸ்ஸா, 2.ஷம்ஊன் கிஸ்ஸா 3.விரகு வெட்டியார் கிஸ்ஸா 4.நான்கு பக்கீர்ஷா கிஸ்ஸா 5.தமிமுல் அன்ஸாரி கிஸ்ஸா 6.பெண் புத்தி மாலை […]

{ 2 comments }

பொய்யான ஆன்மீகத்தின் பெயரால் போலி ஷெய்குதார்கள் சிலர், ஏதுமறியா பாமர மக்களை வஞ்சித்து ஏமாற்றி வழிகெடுத்து வருகின்றனர். ஒவ்வொரு ஷெய்கும் தமக்கென்று ஒரு கூட்டத்தை உருவாக்கித் தனித்தனிப் பாதையை வகுத்துக் கொண்டு, பாமர மக்களை மூளைச் சலவை செய்து முட்டாள்களாக்கி வைத்திருக்கின்றனர். ‘ஆன்மீகப் பாட்டை’ என்பார்கள், ‘ஆத்மீகப் பக்குவம்’ என்பார்கள், ‘அந்தரங்கக் கல்வி’ என்பார்கள், ‘ரகசிய ஞானம்’ என்று ரீல் விடுவார்கள். இறுதியில் இதெல்லாம் உங்களுக்குப் புரியாது என்பார்கள். எவ்வளவு தான் தொழுதாலும், இறை வணக்கங்கள் புரிந்தாலும், […]

{ 1 comment }

இறைவனால் நேசிக்கப்படும் நேசர்களே இறை நேசர்களாவர்! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரன்புக்கு உகந்தவர்கள் யார் என்பது இறுதித் தீர்ப்பு நாளில் அன்றோ தெரியும்! இவர், இவர் தாம் இறைநேசச் செல்வர்கள் என்னும் பட்டியலை இறுதி தீர்ப்பு நாளன்று தானே அல்லாஹ் வெளியிடுவான். இந்தப் பாமரர்கள், குறிப்பிட்ட கப்ருவாசிகளை இறைநேசர்கள் என்று எவ்வாறு உய்த்துணர்ந்தார்கள்? தர்காஹ்களுக்குள் அறைப்பட்டுக் கிடப்பவர்தான் இறைநேசர்’ என்றால் உலகில் வாழ்ந்த வாழ்கின்ற வாழப் போகின்ற முஸ்லிம்கள் – மூமின்கள் அனைவரும் ஷைத்தானுடைய நேசர்களா? தங்களை […]

{ 3 comments }

மற்ற சமயங்களைப் போல் மதங்களைப்போல் “இஸ்லாம்” ஒருசமய(மத)மாகவே மாற்றார்களால் கணிக்கப் பட்டுள்ளது. இது வி„யத்தில் அவர்களைக் குறைகூறி விமர்சிக்கும் இடம்பாடு மிகக்குறைவாகத் தான் இருக்கும் என்றாலும், இன்றைய முஸ்லிம்களின் புரோகித மோகம், உண்மை மார்க்கத்தை சமயமாய் மாற்றிக் காட்டிக் கொண்டிருக்கிறது. மற்ற சமயங்களில் நியதியாக்கப்பட்டுள்ள மூடச்சடங்கு சம்பிரதாயங்களில் பெரும்பாலானவைகள் அப்படியே  அல்லது சிற்சில மாற்றங்களுடன் இன்றைய முஸ்லிம்களின் நடைமுறையை அனுசரித்து நன்மை, புண்ணியம் என்ற போர்வையில் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மார்க்க அறிஞர்களின் அங்கீகாரத்துடன், இவைகள் அவர்களாலேயே நடத்தி வைக்கப்படுகின்றன. அதனால், இதுவும்  […]

{ 0 comments }

இஸ்லாத்தில் ஜோதிடம் இல்லை; அதே நேரத்தில் இஸ்லாமியர்களிடம் இந்த ஜோதிடம் எந்த அளவுக்கு இடம் பெற்றுள்ளது என்பதை நாம் அலசக் கடமைப்பட்டுள்ளோம்.      இந்திய முஸ்லிம்களிடம் ஜோதிடம் சாதரணமாகப் புழக்கத்தில் உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். அதிலும் 50 சதவிகிதம் பேர் இஸ்லாமிய ஜோதிடர்களிடம் மட்டுமே  செல்லக்கூடிய அளவுக்கு ஈமானிய பலம்(!)  உள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்கள், ஜோதிடத்திற்கு எதிரான குர்ஆன் ஆயத்துகளும், ஹதீதுகளும் மாற்று மதத்தாரிடம் ஜோதிடம் கேட்பதைத்தான் தடுக்கின்றன; நம்ம மார்க்க மேதைகளான ஆலிம்களிடம் […]

{ 0 comments }