முன்மாதிரி முஸ்லிம்

 விழிப்புணர்வுள்ள இறைநம்பிக்கையாளர்     முஸ்லிமிடம் இஸ்லாம் விரும்பும் முதல் பண்பு அவர் அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்ப ஈமான் கொண்டு, அவனுடன் உறுதியான உறவைக் கொண்டிருத்தலாகும். அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைத்து, அவனை சதாவும் நினைவு கூர்ந்து காரணங்களைக் கையாள்வதுடன், அல்லாஹ்விடம் உதவியும் தேடவேண்டும். அவன் எவ்வளவுதான் உழைத்தாலும் தனது உள்ளத்தின் ஆழத்தில் அல்லாஹ்வின் உதவி, உபகாரத்தின்பால் அனைத்து நிலையிலும் தேவையாகிறோம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.     உண்மை முஸ்லிமின் இதயம் விழித்திருக்கும். அவரது அறிவுக்கண் திறந்திருக்கும். […]

{ 4 comments }

உண்மை முஸ்லிம் முகஸ்துதியிலிருந்து முற்றிலும் விலகியிருப்பார். ஏனெனில், அவை நற்கூலியை அழித்து நற்செயல்களை வீணாக்கிவிடும். மகத்தான இரட்சகனின் முன்னிலையில் நிற்கும் மறுமை நாளில் இழிவை தேடித்தரும். இத்தூய மார்க்கத்தின் அடிப்படைகளில் தலையாயது, மனிதனின் சொல்லும் செயலும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காக மனத் தூய்மையுடன் அமைந்திருக்க வேண்டும் என்பதாகும். ஜின்களையும் மனிதர்களையும் (எனக்கு வழிப்பட்டு) என்னை வணங்குவதற்கன்றி (வேறெதற்காகவும்) நான் படைக்கவில்லை. (அல்குர்ஆன் 52:56) எந்த வணக்கமும் அல்லாஹ்வின் திருப்தியை நாடி செய்யப்பட்டால் மட்டுமே அங்கீகரிக்கப்படும். (எனினும் அவர்களுக்கோ) இறைவனுடைய […]

{ 1 comment }

உண்மை முஸ்லிம் நயவஞ்சகம், ஏமாற்றுதல், வஞ்சப் புகழ்ச்சி போன்ற தன்மைகளை விட்டும் விலகியிருப்பார். அவரது மார்க்க போதனை இத்தகைய ஆபத்திலிருந்து அவரைப் பாதுகாக்கும். அதிகமான மக்கள் வஞ்சப் புகழ்ச்சியில் சிக்கிக் கொண்டு தங்களை அறியாமலேயே நயவஞ்சகம் என்ற அழிவில் வீழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நபி (ஸல்) அவர்களிடம் பனூ ஆமிர் என்ற கூட்டத்தினர் புகழ்ச்சியாகக் கூறினர்: ”நீங்கள் எங்களது தலைவர்.” உடனே நபி (ஸல்) அவர்கள் ”தலைவன் அல்லாஹ் மட்டுமே” என்று கூறினார்கள். அக்கூட்டத்தினர், ”நீங்கள் எங்களில் மிகவும் […]

{ 1 comment }

 கடமையான ஜகாத்தை நிறைவேற்றுவார்     முஸ்லிம் ஜகாத்தை நிறைவேற்றுவார். ஜகாத் அவர் மீது கடமையானால் அதைஇறையச்சத்துடனும் நேர்மையுடனும் கணக்கிட்டு, மார்க்க நெறியின்படி உரியவர்களுக்குக் கொடுத்து நிறைவேற்றுவார். தொகை ஆயிரக்கணக்கில்,இலட்சக்கணக்கில் அவர் மீது கடமையானாலும் அதன் ஒரு பகுதியைத் தடுத்து வைத்துக் கொள்வதற்கான எந்த முயற்சியிலும்இறங்காமல் பூரண திருப்தியுடன் அதை நிறைவேற்றுவார்.     ஜகாத் என்பது நிர்ணயிக்கப்பட்ட பொருளாதாரம் சம்பந்தபட்ட ஒரு வணக்கமாகும். உண்மை முஸ்லிம் மார்க்கம் தெளிவுபடுத்தியதைப் போன்று பூரணமாக ஜகாத்தை நிறைவேற்றுவதில் அலட்சியம் செய்யமாட்டார். பலவீனப்பட்ட […]

{ 0 comments }

இந்த அங்கீகரிப்பட்ட ஹஜ்ஜை நிறைவு செய்துவிட்டு தனது ஊர் மற்றும் குடும்பத்தினரிடம் திரும்புகிறவர் அவரின் தாய் அவரை பெற்றெடுத்த தினத்தில் இருந்ததுபோல் பாவங்கள் நீங்கியவராக திரும்புகிறார். பைத்துல்லாஹ்வை மையமாகக்கொண்டு உலகின் அனைத்து முஸ்லிம்களையும் ஒன்றிணைத்த மகத்தான மார்க்கத்தின் மாண்புகளைப் புரிந்து, தனது இதயத்தை ஈமானால் நிரப்புகிறார்.     எனெனில், ஹஜ் என்பது முஸ்லிம்களின் உலகளாவிய மாநாடாகும். ஹஜ்ஜைத் தவிர வேறு எங்கும் இம்மாதிரியான மாநாட்டை உலகம் கண்டிராது. ஹாஜிகள் பல்வேறு இனம், நிறம், மொழியுடையவர்களாக இருந்தும் எவ்வித […]

{ 0 comments }

இஸ்லாமிய மார்க்கத்தின் சட்டங்களை அறிந்து, அதன் மேலான போதனையை எற்றுச் செயல்படும் உண்மை முஸ்லிம் கருணையாளராக இருப்பார். அவரது இதயத்தில் கருணை பொங்கி வழியும். பூமியில் உள்ளவர்களிடம் கருணை காட்டுவது வானத்திலுள்ளவனின் கருணைக்குக் காரணமாக அமையும் என்பதையும் அறிவார்.     நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள், வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான்.” மேலும் கூறினார்கள்: “மனிதர்களுக்கு கருணை காட்டாதவர் மீது அல்லாஹ் கருணை காட்டமாட்டான்.” (முஃஜமுத் தப்ரானி) […]

{ 1 comment }

    உண்மை முஸ்லிம் நோயாளிகளை நலம் விசாரிக்கச் செல்ல வேண்டுமென இந்நேரிய மார்க்கம் மிகவும் வலியுறுத்துகிறது. எனவே நோய் விசாரிக்கச் செல்வது கடமையாகும். நோயாளியிடம் சென்று ஆறுதல் கூறும்போது நபி (ஸல்) அவர்களின் கட்டளையை நிறை வேற்றுகிறோம் என்று மனம் நிறைவடைய வேண்டும்.     நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”பசித்தவருக்கு உணவளியுங்கள்; நோயாளிகளை நலம் விசாரியுங்கள்; கைதிகளை விடுவியுங்கள்.” (ஸஹீஹுல் புகாரி)     பராஃ இப்னு ஆஸிப் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: நோயாளிகளை நலம் விசாரிக்குமாறும், […]

{ 2 comments }

பெருந்தன்மையாளர் தனது மார்க்கக் கட்டளைகளை ஏற்று நடக்கும் உண்மை முஸ்லிம், மனிதர்களுடன் பெருந்தன்மையுடன் நடந்துகொள்வார். எனெனில் இம்மை மறுமையின் நலன்களைக் கொண்டு வருவதில் பெருந்தன்மைக்கு நிகரான பண்பு வேறில்லை. பெருந்தன்மையான, மென்மையான நடத்தை மனிதமனங்களை மிக அழமாக உடுருவிச் செல்லும் என்பது நபி (ஸல்) அவர்களின் போதனையாகும். இப்பண்புகளின் மூலம் அல்லாஹ்வின் திருப்தியையும், மன்னிப்பையும் பெற்றுக் கொள்ளலாம்.     அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “விற்கும் போதும், வாங்கும்போதும், கடன் வசூலிக்கும்போதும் பெருந்தன்மையுடன் நடந்துகொள்ளும் மனிதருக்கு […]

{ 1 comment }

 காலத்தின் மீது சத்தியமாக. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து. சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்த மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை).(103:1-3) திருமறையில் உள்ள சூராக்களில் சிறியவைகளில் ஒன்று மேலே தரப்பட்டுள்ளது. இமாம் ஷாபி(ரஹ்) அவர்கள் ‘இந்த சூராவைத் தவிர வேறு ஒரு ஆதாரமும் அல்லாஹ்வினால் அவனது படைப்பினங்களுக்கு இறக்கப்பட வில்லையாயினும் இதுவே போதுமானதாக இருக்கும்’ என்று சொல்லும் […]

{ 1 comment }

   (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். அல்குர்ஆன் 16:125 முஸ்லிம் எல்லாக் காலங்களிலும் தனது அழைப்புப் பணியில் உற்சாகத்துடனும் உறுதியுடனும் செயல்படுவார். நன்மையைச் செய்ய ஏதேனும் தகுந்த சூழ்நிலை ஏற்படுமா என எதிர்பார்க்காமல் மனிதர்களை சத்தியத்தின்பால் அழைப்பதற்கு விரைந்து செல்வார். […]

{ 0 comments }