பெண்மணிக்கு

பெற்றோர்கள் தமது பிள்ளைகளை கண்காணித்து கணினியில் எதைப்படிக்கிறார்கள் எழுதுகிறார்கள் என்பதையும் எதனைப் பார்க்கிறார்கள் என்பதையெல்லாம் கவனமாக கவனித்துக்கொண்டே வரவேண்டும். அவர்கள் எதில் ஆர்வம் காட்டுகிறார்கள் எப்படிப்பட்ட செயல்களில் ஈடுபாடு காட்டுகிறார்கள் என்பதையும் கவனிப்பதுடன் பிள்ளைகளுடன் சேர்ந்து உட்கார்து உறையாடி அவர்களின் நன்பர்களைப் பற்றியும் பள்ளி முடிந்ததும் வேறு எங்கும் செல்கிறார்களா என்பதையும் கண்கானிக்க வேண்டும். அவர்கள் படிக்கும்  நிலையில் அவர்களுக்கு படிப்பின் மீது ஆர்வம் இல்லாமலிருந்தால் அதற்கான காரணத்தை கண்டறிவதுடன் அவர்கள் தீய நண்பர்களுடன் தொடர்பு கொண்டிருக்கின்றனரா […]

{ 0 comments }

மார்க்கமின்மைதான் நம்முடைய முதல் பிரச்னை. குர்ஆன், ஹதீஸ் ஆகியவற்றின் போதனையிலிருந்து நாம் விலகிச் சென்று கொண்டிருக்கிறோம். அன்று அரபிகள் பெண் குழந்தைகளை உயிரோடு புதைத்தார்கள். அறிவியல் தொழில் நுட்பம் இன்று பெரிதும் வளர்ந்துள்ளது. இந்த வானளாவிய வளர்ச்சி மனிதனுக்கு ஒரு பக்கம் அருட்கொடையாய் இருக்கிறது. இன்னொரு பக்கம் சாபமாகவும் இருக்கிறது. இதில் நன்மையும் உண்டு, தீமையும் உண்டு. அறிவியலைப் பயன்படுத்தி தாயின் கருவறையில் இருக்கும்போதே சிசு கொல்லப்படுகிறது. இதன் விளைவை இன்று பார்க்கிறோம். இந்தியாவின் பல மாநிலங்களில் […]

{ 0 comments }

அன்பு மகளே… “ஒரு மௌன அழைப்பில்’ உன் ஆதங்கம் கண்டேன் என் சொர்க்கத்துக் கனியே! என்னை மன்னித்து விடு. உன்னை எனது வயிற்றிலேயே கொலை செய்த பாவிதான் நான் ஏன் இந்த முடிவு? உனது அண்ணனை வயிற்றில் சுமந்த நாள் முதல் வேதனை அறியா வயதில் பிரசவ வலியின் வேதனை வேறு அதனால் ஏற்பட்ட கோழைத்தனத்தால் எடுத்த முடிவு அது. “”என்னால் தாங்க முடியாத பாரத்தை என் இறைவன் என் மீது சுமத்தமாட்டான்” என்ற மார்க்க ஞானம் […]

{ 11 comments }

முழங்கியது போதும் வழங்குகள் உரிமைமையை! நாம் மேடையில் நின்று கொண்டு, ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாத்தில் பெண்களுக்கு இன்னின்ன உரிமைகள் வழங்கப்பட்டிருந்தன என்று முழங்கினால் மட்டும் போதாது. மாறாக, இஸ்லாம் அளித்துள்ள பெண்ணுரிமைகளை நடைமுறையில் செயல்படுத்திக் காட்டவேண்டும். பெண்களின் பிரச்னைகளும் அவற்றின் தீர்வுகளும் என்று பேசுவதற்கு முன்பு முதலில் பெண்களின் இருப்பு பற்றி புரிந்து கொள்ளவேண்டும். பெண்ணுரிமை என்ற பெயரில் எவ்வளவோ போராட்டங்கள் நடைபெற்றன. கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவழிக்கப்பட்டன. ஏராளமான முழக்கங்கள் முன்வைக்கப்பட்டன. அப்படியெல்லாம் இருந்தும் கூட […]

{ 4 comments }

சமீபகாலமாக ஃபத்வா ஒன்று காது குத்துவது ஹராம் என்று சிலர் கூறுகின்றனர். காது குத்துவது சமுதாயத்தில் உள்ள பெண்களின் பழக்கமாக நபி(ஸல்) அவர்களின் காலத்திற்கு முன்பே இருந்தது. இந்த பழக்கம் முஸ்லிம் பெண்களால் இன்றளவும் தொடரப்பட்டுள்ளது. மேலும் காது குத்தக்கூடாது என்பவர்கள் கீழ் வரும் வசனத்தையும் ஹதீதையும் ஆதாரமாக கூறுகின்றனர். “இன்னும் நிச்சயமாக நான் அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களிடம் வீணான எண்ணங்களையும் உண்டாக்குவேன்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளின் காதுகளை அறுத்து விடும்படியும் அவர்களை […]

{ 4 comments }

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் رَضِيَ اللَّهُ عَنْهُ “இளைஞர்களே! உங்களில் திருமணத்தின் பொறுப்பைச் சுமக்கும் சக்தி படைத்தவர் மணம் புரிந்து கொள்ளட்டும். ஏனெனில் திருமணம் பார்வையைத் தாழ்த்துகின்றது. வெட்கத்தலத்தைப் பாதுகாக்கின்றது. (பார்வை இங்கும் அங்கும் அலைபாய்வதை விட்டும் காம இச்சையினால் சுகந்திரமாகத் திரிவதை விட்டும் பாதுகாக்கிறது) திருமணத்தின் பொறுப்பை சுமக்கச் சக்தியற்றவர் இச்சையின் வேகத்தைத் தணித்திட அவ்வப்போது நோன்பு வைத்துக் கொள்ளட்டும்.” (புகாரி, முஸ்லிம்) அறிவிப்பாளர் : அபூஹ¤ரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நபிகள் […]

{ 10 comments }

இஸ்லாத்தில் பெண்களுக்கிருக்கிற உரிமைகள் பற்றிப் பேசுவதற்கு முன் பெண்களை மற்ற சமூகத்தினர் எப்படி நடத்திக் கொண்டிருந்தார்கள் என்பதைத் தெளிவுபடுத்துவது அவசியமாகும்.  கிரேக்கர்கள் பெண்களை வியாபாரப் பொருட்களாகவே கருதினர். அவர்களுக்கென எந்த உரிமையும் கிடையாது. உரிமைகள் அனைத்தும் ஆண்களுக்கே என்றனர். இன்னும் அப்பெண்களுக்குச் சொத்துரிமை, கொடுக்கல், வாங்கல் போன்ற உரிமைகள் தடுக்கப் பட்டிருந்தன. அவர்களில் பிரபல்யமான தத்துவஞானியான சாக்ரடீஸ் என்பவன் பெண்கள் இருப்பது உலகின் வீழ்ச்சிக்கு மிகப்பெரும் மூல காரணமாகும். மேலும் பெண்கள் விஷ மரத்திற்கு ஒப்பானவர்கள். அம்மரத்தின் […]

{ 7 comments }

இஸ்லாமியத் திருமணம் தொடர்… மணமக்களுக்காக நமது பிரார்த்தனை (துஆ):- நபி (ஸல்) அவர்கள் மணமக்களுக்காக திருமணத்தில் வாழ்த்தும்போது … பாரகல்லாஹ_லக வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீ கைர்… பொருள்: அல்லாஹ் உங்கள் இருவருக்கும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவருக்காக மற்ற பொருள்களிலும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவரையும் நல்லவற்றில் ஒன்றிணைப்பானாக! என்று கூறுவார்களென அபூஹ_ரைரா (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜா, ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது. முஹம்மது நபி (ஸல்) […]

{ 0 comments }

கணவன் திருமணத்திற்குப் பிறகு தம் மனைவியுடன் பழகுவதிலும் அவளை நடத்துவதிலும் இஸ்லாம் கற்பிக்கும் நெறி முறைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகள், அவளுடன் அழகிய முறையில் பழகுவது, அவளைக் கண்ணியமாக நடத்துவது ஆகியவை குறித்து இஸ்லாம் போதிக்கும் நல்லுரைகளை நாம் ஆராய்ந்தால் அவை நம்மை வியப்பில் ஆழ்த்திவிடுகின்றன. இஸ்லாம், பெண்ணின் உரிமைகளைப் பற்றி மிக ஆழமாக உபதேசித்துள்ளது. அவளுக்கு உலகின் எந்த மார்க்கமும் அளித்திராத உயரிய அந்தஸ்தை வழங்கியுள்ளது. இதோ, அல்லாஹ்வின் தூதர்  […]

{ 0 comments }

{ 0 comments }